Jump to content

நெஞ்சத்தைக் கிள்ளாதே...

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மயூரன் தம்பி, ஏனப்பு , உன்ர நினைவெல்லாம் இப்பிடிப் போகுது?

உனக்குத் தலையிடி எண்ட உடனே, சாப்பாட்டைத் தீத்திவிட நினைச்ச அம்மாவை நினைச்சுப்பாத்தியா?

நாளைக்கு நீ போனப்பிறகு, அந்தப் பெத்தமனம் எவ்வளவு துடிச்சுப் போகும் எண்டு ஒருக்கா நினைச்சு பாத்தியா?

கதை நல்லாயிருக்கு, ஜீவா! :lol:

ஆனாலும் மயூரன் ஒரு 'கோழை'. :o

ஆனால், தேர்த்திருவிழா அந்த மாதிரி! :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி எப்ப நெஞ்சத்தை கிள்ள போறியள் தம்பி ??  இப்பிடி இழுக்கிறியளே கெதியிலை . அடுத்ததை போடுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்துநாள் நீண்ட விடுமுறை காணும் ஜீவா. கதையை எழுதுங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடரும்..

Link to comment
Share on other sites

இக்கதையில் வாற பல கதாபாத்திரங்களை நான் நன்கு அறிவேன் என்றபடியால்,  இந்தக் கதை இன்னும் சுவாரஷ்யமாக இருக்கு எனக்கு. :)

தொடர்ந்து எழுதுங்கோ ஜீவா....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே ...... பகுதி - 5

Hegedus_Bertalan-Kozmikus_Szerelem_Cosmi

சப்பிப் போட்ட எச்சிற் பருக்கைகளாய் இந்த இரவு அவனைக் குதறித் தின்று விட்டிருந்தது, எண்ணங்களின் அலை மோதல்கள் கிழிஞ்சல்களாய் அவன் மனதில் கோலங்களைப் போட்டிருந்தது. தாய் தன் சேயைப் பத்து மாதங்கள் தான் சுமக்கிறாள் ஆனால் மயூரனோ ஐந்து வருடங்களாய்ச் சுமந்த காதல் கருக்கொள்ளாமலே கலைந்து போனது விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு போய் விட்டிருந்தது.

ஆழ்ந்து தூங்கியவனை அம்மாவின் குரல் தான் எழுப்பியது.

"அப்பு .. எழும்பு ஐயா .. நேரம் போட்டுது கெதியா வெளிக்கிடு, சைக்கிள் ஒட்ட விடவேணும் எண்டனி, பஸ் ஸ்ரான்டுக்கு நடந்தெல்லே போக வேணும்."

அரக்கப் பரக்க எழுந்தவன் குளிச்சிட்டு அம்மா செய்து வச்ச நூடில்ஸ்சை சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்ரான்டை நோக்கி நடக்கிறான். எப்போதும் அவள் வீட்டைத் தாண்டும் போது அவள் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்குபவனுக்கு இன்று அவள் வீட்டைக் கடக்கும் போது அவள் பொமேரியன் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தாள், ஆனால் அவளைத் தேடிய கண்கள் இன்று தானாகவே தரை தேடியது. அவளை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் இனி ஒரு போதும் வாய்த்திடக் கூடாது என்று வேண்டிக் கொண்டான்.

 வகுப்பில் இருந்தவனுக்கு அன்று பாடங்களும் ஏறவில்லை, எதையோ பறிகொடுத்த ஏக்கம் நெஞ்சை முட்ட , கடைசிப் பாடம் பொறின்சிக் மெடிசின் என்பதால் மிஸ்ஸிடம் தலையிடிக்குது, நான் அடுத்த கிளாஸுக்கு வாறேன் என்று சொல்லி விட்டு வந்திட்டான்.

பின்னேரம் பொடியளோடை கிறிக்கற் விளையாடினவன், ஏழுமணிக்கு ஊரடங்குச் சட்டம் என்பதால் அப்படியே பிள்ளையார் கோவிலிலேயே கை,கால்,முகம் கழுவி கும்பிட்டிட்டு வீட்டை வரும் போது  சுமதி அக்கா கூப்பிட்டா.

"மயூரன் இஞ்சை வாங்கோ, உங்களட்டை ஒன்று சொல்ல வேண்டும்."

என்ன அக்கா? ஏதும் விஷேசமோ??

"நீ அபியை லவ் பண்ணுறியோ?"

என்ன அக்கா திடீரென்று குண்டைப் போடுறியள்? உங்களுக்கு என்ன விசரோ? நான் ஒருத்தரையும் லவ் பண்ணலை அக்கா. உங்களுக்கு தான் தெரியுமே கிளாஸ், முடிய உங்கண்டை பெரியப்பா கூடத் தானே டிஸ்பென்சரியிலை நிக்கிறன், முடிய இதிலை பொடியளோடை இந்தப் பாலத்திலை தானே அக்கா நிக்கிறேன்.

"பொய் சொல்லாதையடா, எனக்கு ஜோதி தான் சொன்னவள், அபி நீ குடுத்த கடிதத்தை அவளோடை அம்மாட்டை காட்டினவளாம், ஜோதியின்ரை தாய்  உன்ரை அப்பாட்டை சொல்லச் சொன்னவாவாம், ஆனால் அபியின்ரை அம்மா   தான் வேண்டாம் என்று சொன்னவாவாம்.

சொன்னால் பேந்து உன்ரை அப்பா உன்னை அடிச்சே சாக்காட்டிப் போடுவர், பாவம் படிக்கிற பொடியன் சொல்ல வேண்டாம், இனி அவன் வரமாட்டான் என்று. அதை விட அபி சொன்னவளாம் ஏ.எல் ரிசல்ட் வருது பாஸ் பண்ணினாலும் அவன் படிக்கிறது தான் படிக்க மாட்டேன் என்று."

நீ முதலே எனக்குச் சொல்லி இருந்தால் நான் உனக்காகக் கேட்டுப் பார்த்திருப்பேன், ஆனால் இனி உனக்கு அவள் வேண்டாம் மயூரன். முதல் நீ நல்லாப் படி. பெரியப்பாக்கும் வயசு போட்டுது நீ இஞ்சை ஒரு டிஸ்பென்சரியாவது போட வேணும் பிறகு எல்லாம் நல்லது நடக்குமடா."

"இப்ப ஏன் மயூரன் சிரிக்கிறாய்? நான் உனக்கு கவலையான விசயத்தைச் சொல்லுறேன், நீ என்னடா என்றால் சிரிக்கிறாய்?"

ஒன்டும் இல்லை அக்கா.

"உண்மைய நினைச்சேன் சிரிப்பு தானாக வந்துவிட்டது அக்கா."

 நீங்கள் அவளட்டை இல்லாட்டி ஆரட்டையும் சொல்லுங்கோ இனி நான் அவளைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று.

000000000000000000000000000000000000000000000000000000000

காலங்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன..

எந்த "அபி" என்ற பெயரை மறக்க வேண்டும் என்று நினைத்தானோ அதே "அபி" என்ற பெயரில் இன்னொருத்தி அவன் வாழ்வில் புயலாக வீசப் போகின்றாள் என்பதை அன்று அவன் அறியவில்லை.

தொடரும்...
 
(தலைப்பு போடப்படாததால் பகுதி-5 என திருத்தம் செய்துள்ளேன்.)
Link to comment
Share on other sites

கதைகளுடன் வாழ்பவர்கள் கதைசொல்லும்பொழுது அதில் உயிர்ப்புகள் சிறிது தூக்கலாகவே இருக்கும் . வாழ்த்துக்கள் . தொடருங்கோ :) :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதைகளுடன் வாழ்பவர்கள் கதைசொல்லும்பொழுது அதில் உயிர்ப்புகள் சிறிது தூக்கலாகவே இருக்கும் . வாழ்த்துக்கள் . தொடருங்கோ :) :) :) .

நன்றி கோமகன் அண்ணா, வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும்.

நாளை மிகுதி தொடரும்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைக்கப்பட்ட படம் அருமை, ஜீவா!

சின்னனிலை, செய்யாத சேட்டையள், கொஞ்ச நஞ்சம் இல்லைப்போல கிடக்கு! :D

தொடருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைக்கப்பட்ட படம் அருமை, ஜீவா!

சின்னனிலை, செய்யாத சேட்டையள், கொஞ்ச நஞ்சம் இல்லைப்போல கிடக்கு! :D

தொடருங்கள்!

பட உபயம் எல்லாம் கூகிள் ஆண்டவரின் புண்ணியம் தான் அண்ணா. :rolleyes:

நான் அச்சாப்பிள்ளை என்று சொன்னாலும் நம்பவா போறிங்கள்??? :icon_mrgreen:

ஆனால் நட்புக்கள், வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பங்களை கற்பனையோடு சேர்த்து எழுதுகிறேன் அண்ணா.

நன்றி அண்ணா, வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும்.

இனி முடியும் வரைக்கும் தினமும் தொடரும். தொடர்ந்திருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கு ஜீவா...எனக்கென்னவோ உங்கள் சொந்தக் கதை போல தான் படுது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளி கூட விடாதிங்கோ ஜீவா. கிழமைக்கு ஒருக்கா எழுதலாம் தானே.

Link to comment
Share on other sites

கதை நல்லாயிருக்கு ஜீவா.. அது இருக்கட்டும்.. இணையவன் என்னத்தை எடிட் பண்ணினார்?? :unsure: எதையாவது மிஸ் பண்ணிட்டனா?? :o

Link to comment
Share on other sites

ஜுவா உங்கள் இந்த கதையை நான் உண்மையில் இன்னமும் படிக்கவேயில்லை படித்த பின்னர் கருத்தை  வைக்கிறேன். ஆனால் இந்த கதையை முடக்கியதற்காக  யாழ் கள நிருவாகத்துடன்  கடுமையாக நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டிருந்தது  அதற்காக  அவர்கள் மனசங்கட பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.   அதே நேரம்  ஜுவா என்றில்லை  எவருடைய சுய  ஆக்கங்களையும்  தடை செய்வதென்பது  படைப்பாளிகளின்  மனதை உடைக்கும் செயல் திருத்தங்கள் செய்யசொல்லி படைப்பாளிக்கு அறிவுத்தல் விடலாம். அதை செய்யாது  முடக்குவதென்பது  மேசமானது  அதனை  ஏற்றுக் கொள்ள முடியாது ஒரு படைப்பிற்கு  மறு கருத்தை வைக்கலாம் அல்லது எதிர்க்கலாம். ஆனால் படைப்பையே  முடக்குவது பொது கருத்துகளத்திற்க  ஆரோக்கியமானதல்ல.

அதனை யாழ் நிருவாகம் இனி செய்யாது என நம்பலாம்.

Link to comment
Share on other sites

கதை நல்லாயிருக்கு ஜீவா.. அது இருக்கட்டும்.. இணையவன் என்னத்தை எடிட் பண்ணினார்?? :unsure: எதையாவது மிஸ் பண்ணிட்டனா?? :o

இசை,

நிர்வாகத்தில் இருந்து எவரும் எவரது படைப்புகளையும் திருத்தி அமைப்பதில்லை. ஏதாவது ஒரு பகுதியை நீக்க வேண்டும் என்றால் அல்லது திருத்த வேண்டும் என்றால் அந்த படைப்பை முற்றாக மறைத்து விட்டு  அதனை எழுதியரிடம் தான் திருத்தும் விடயத்தை ஒப்படைப்பது வழக்கம். அல்லது அவரையே திரியில் வந்து Edit பண்ணச் சொல்லி கேட்பது வழக்கம். இங்கும் இதுதான் நடந்தது.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

நிர்வாகத்தில் இருந்து எவரும் எவரது படைப்புகளையும் திருத்தி அமைப்பதில்லை. ஏதாவது ஒரு பகுதியை நீக்க வேண்டும் என்றால் அல்லது திருத்த வேண்டும் என்றால் அந்த படைப்பை முற்றாக மறைத்து விட்டு  அதனை எழுதியரிடம் தான் திருத்தும் விடயத்தை ஒப்படைப்பது வழக்கம். அல்லது அவரையே திரியில் வந்து Edit பண்ணச் சொல்லி கேட்பது வழக்கம். இங்கும் இதுதான் நடந்தது.

நன்றி

அப்படி என்டால் எடிட் பண்ணியது ஜீவா என்று தானே வர வேண்டும் ஆனால் இங்கு இணையவன் என்டல்லவா வருகிறது...அதைப் பார்த்து விட்டுத் தானே இசை கேட்டார்

Hegedus_Bertalan-Kozmikus_Szerelem_Cosmi

சப்பிப் போட்ட எச்சிற் பருக்கைகளாய் இந்த இரவு அவனைக் குதறித் தின்று விட்டிருந்தது, எண்ணங்களின் அலை மோதல்கள் கிழிஞ்சல்களாய் அவன் மனதில் கோலங்களைப் போட்டிருந்தது. தாய் தன் சேயைப் பத்து மாதங்கள் தான் சுமக்கிறாள் ஆனால் மயூரனோ ஐந்து வருடங்களாய்ச் சுமந்த காதல் கருக்கொள்ளாமலே கலைந்து போனது விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு போய் விட்டிருந்தது.

ஆழ்ந்து தூங்கியவனை அம்மாவின் குரல் தான் எழுப்பியது.

"அப்பு .. எழும்பு ஐயா .. நேரம் போட்டுது கெதியா வெளிக்கிடு, சைக்கிள் ஒட்ட விடவேணும் எண்டனி, பஸ் ஸ்ரான்டுக்கு நடந்தெல்லே போக வேணும்."

அரக்கப் பரக்க எழுந்தவன் குளிச்சிட்டு அம்மா செய்து வச்ச நூடில்ஸ்சை சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்ரான்டை நோக்கி நடக்கிறான். எப்போதும் அவள் வீட்டைத் தாண்டும் போது அவள் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்குபவனுக்கு இன்று அவள் வீட்டைக் கடக்கும் போது அவள் பொமேரியன் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தாள், ஆனால் அவளைத் தேடிய கண்கள் இன்று தானாகவே தரை தேடியது. அவளை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் இனி ஒரு போதும் வாய்த்திடக் கூடாது என்று வேண்டிக் கொண்டான்.

 வகுப்பில் இருந்தவனுக்கு அன்று பாடங்களும் ஏறவில்லை, எதையோ பறிகொடுத்த ஏக்கம் நெஞ்சை முட்ட , கடைசிப் பாடம் பொறின்சிக் மெடிசின் என்பதால் மிஸ்ஸிடம் தலையிடிக்குது, நான் அடுத்த கிளாஸுக்கு வாறேன் என்று சொல்லி விட்டு வந்திட்டான்.

பின்னேரம் பொடியளோடை கிறிக்கற் விளையாடினவன், ஏழுமணிக்கு ஊரடங்குச் சட்டம் என்பதால் அப்படியே பிள்ளையார் கோவிலிலேயே கை,கால்,முகம் கழுவி கும்பிட்டிட்டு வீட்டை வரும் போது  சுமதி அக்கா கூப்பிட்டா.

"மயூரன் இஞ்சை வாங்கோ, உங்களட்டை ஒன்று சொல்ல வேண்டும்."

என்ன அக்கா? ஏதும் விஷேசமோ??

"நீ அபியை லவ் பண்ணுறியோ?"

என்ன அக்கா திடீரென்று குண்டைப் போடுறியள்? உங்களுக்கு என்ன விசரோ? நான் ஒருத்தரையும் லவ் பண்ணலை அக்கா. உங்களுக்கு தான் தெரியுமே கிளாஸ், முடிய உங்கண்டை பெரியப்பா கூடத் தானே டிஸ்பென்சரியிலை நிக்கிறன், முடிய இதிலை பொடியளோடை இந்தப் பாலத்திலை தானே அக்கா நிக்கிறேன்.

"பொய் சொல்லாதையடா, எனக்கு ஜோதி தான் சொன்னவள், அபி நீ குடுத்த கடிதத்தை அவளோடை அம்மாட்டை காட்டினவளாம், ஜோதியின்ரை தாய்  உன்ரை அப்பாட்டை சொல்லச் சொன்னவாவாம், ஆனால் அபியின்ரை அம்மா   தான் வேண்டாம் என்று சொன்னவாவாம்.

சொன்னால் பேந்து உன்ரை அப்பா உன்னை அடிச்சே சாக்காட்டிப் போடுவர், பாவம் படிக்கிற பொடியன் சொல்ல வேண்டாம், இனி அவன் வரமாட்டான் என்று. அதை விட அபி சொன்னவளாம் ஏ.எல் ரிசல்ட் வருது பாஸ் பண்ணினாலும் அவன் படிக்கிறது தான் படிக்க மாட்டேன் என்று."

நீ முதலே எனக்குச் சொல்லி இருந்தால் நான் உனக்காகக் கேட்டுப் பார்த்திருப்பேன், ஆனால் இனி உனக்கு அவள் வேண்டாம் மயூரன். முதல் நீ நல்லாப் படி. பெரியப்பாக்கும் வயசு போட்டுது நீ இஞ்சை ஒரு டிஸ்பென்சரியாவது போட வேணும் பிறகு எல்லாம் நல்லது நடக்குமடா."

"இப்ப ஏன் மயூரன் சிரிக்கிறாய்? நான் உனக்கு கவலையான விசயத்தைச் சொல்லுறேன், நீ என்னடா என்றால் சிரிக்கிறாய்?"

ஒன்டும் இல்லை அக்கா.

"உண்மைய நினைச்சேன் சிரிப்பு தானாக வந்துவிட்டது அக்கா."

 நீங்கள் அவளட்டை இல்லாட்டி ஆரட்டையும் சொல்லுங்கோ இனி நான் அவளைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று.

000000000000000000000000000000000000000000000000000000000

காலங்கள் எவ்வளவு வேகமாக ஓடுகின்றன..

எந்த "அபி" என்ற பெயரை மறக்க வேண்டும் என்று நினைத்தானோ அதே "அபி" என்ற பெயரில் இன்னொருத்தி அவன் வாழ்வில் புயலாக வீசப் போகின்றாள் என்பதை அன்று அவன் அறியவில்லை.

தொடரும்...

Link to comment
Share on other sites

அப்படி என்டால் எடிட் பண்ணியது ஜீவா என்று தானே வர வேண்டும் ஆனால் இங்கு இணையவன் என்டல்லவா வருகிறது...அதைப் பார்த்து விட்டுத் தானே இசை கேட்டார்

தலைப்பு மறைக்கப்பட்டிருந்தபடியால் ஜீவா தனிமடலில் அனுப்பியதுதான் குறிப்பிட்ட பகுதியில் இடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தலைப்புடனான கருத்துக்களை மட்டும் தெரிவியுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு மறைக்கப்பட்டிருந்தபடியால் ஜீவா தனிமடலில் அனுப்பியதுதான் குறிப்பிட்ட பகுதியில் இடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தலைப்புடனான கருத்துக்களை மட்டும் தெரிவியுங்கள். நன்றி.

:o அப்படியா இணையவன் மிக்க நன்றி விளக்கத்திற்கு...இனி மேல் தலைப்போடு ஒட்டி கருத்தெழுதுவோம்
 
ஆனாலும் இவ்வளவு கோபம் ஆகாது உங்களுக்கு
Link to comment
Share on other sites

இன்று தான் வாசித்தேன். ஜீவா அண்ணாக்கு சிறந்த எழுத்தாற்றல் உள்ளது என்பதை மீளவும் நிரூபிக்கும் எழுத்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே ..... பகுதி - 6

32-typography-love-art.jpg

ஹலோ..!

ஹலோ..!!

நான் அபி2 பேசுறேன்.

ஹாய் அபி2 சொல்லுங்கோ, எப்படி இருக்கிறிங்கள்? சாப்பிட்டாச்சா? என்ன நடக்குது???

"இப்பத்தானேப்பா" பின்னேரம் ஏழு மணி அதுக்குள்ளையா??

சா..சா.. அது தெரியும் அபி2 நான் மத்தியானம் என்ன சாப்பிட்டிங்கள் என்று கேட்டேன்? ஆமா, அதென்ன இண்டைக்கு "வாய்ஸ்" சூப்பரா இருக்கு? ஒரு மாதிரியாப் பேசுறிங்கள், ஏதோ ஒன்று தூக்கலா இருக்கு??

"அக்கறை உள்ளவங்க கிட்ட அப்படித்தான் பேச வரும்".

 என்ன????

இல்லை உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்?

 புட்டு,நூடில்ஸ்,அப்பம் .... அது சரி ஏன் திடீரென்று இதைக் கேட்கிறிங்கள்?

இல்லை எனக்கும் நூடில்ஸ் பிடிக்கும் அதான் கேட்டேன்.

"ஆமா உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? எந்த சுவாமி பிடிக்கும்? நீங்கள் என்ன நம்பர்?? எந்த சினிமா நடிகர் பிடிக்கும்? எந்த சிங்கர் பிடிக்கும் ? எந்த மியூசிக் டைரக்டர் பிடிக்கும்?? எந்த? எந்த??எந்த..................................... எந்த????? "

முடிஞ்சுதா? இல்லை இன்னும் ஏதும் இருக்கா???????

என்ன நேர்முகத் தேர்வுக்கா இத்தனை கேள்வியள் எல்லாம் கேட்கிறியள்?

"நக்கலடிக்காதையுங்கோ .. சொல்லுங்கோ ப்ளீஸ்?"

கறுப்பு, கிருஷ்ணர், ஐந்து, இளையராஜா,SPB, ...............

"எனக்கும் கறுப்பும்,மரூனும் தான் பிடிக்கும், இளையராஜாவும்,ரகுமானும் பிடிக்கும், உன்னிக்கிருஷ்ணன் பாட்டு பிடிக்கும், முருகனும்,கிருஷ்ணரும் பிடிக்கும். நான் ஏழாம் நம்பர் "லக்கி செவிண்" ........

என்ன ஒற்றுமை பாருங்கோ நமக்குள்ளை."!!

"ஆமா என்னைப் பற்றி என்ன நினைக்கிறிங்கள் மயூரன்."?

யாரோ ஒரு லூசு போல என்று மனசுக்குள்  நினைத்தாலும், "உங்களுக்கு என்ன? நல்ல வடிவா இருக்கிறிங்கள், உங்க குரலுக்கு நான் அடிமை அபி".

....எதிர்முனையில் சிரிப்பு.....

ஓ...... அப்ப இப்ப என்ன நினைக்கிறிங்கள்?

"உங்களை லவ் பண்ணலாமோ என்று நினைக்கிறன்."

என்ன விளையாடுறிங்களா?

"விளையாடுறதுக்குத் தான் கேட்டேன்".. என்று குரலை தாழ்த்திச் சொன்னான் மயூரன்.

என்னது?????? அவள் குரலில் ஒரு கடுந்தொனி.

"விளையாடுற விசயமா இது? ஐ லவ் யூ அபி2"

நல்லா யோசிச்சுத் தான் சொல்லுறிங்களோ??

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... இதிலை யோசிக்க என்ன இருக்கு"?

நான ஃபோனை வைக்கிறேன்.. பை.

"எந்தப் பதிலும் சொல்லாமல் போறாளே, ஏதும் பிரச்சனை வருமோ? உனக்கு தேவை இல்லாத வேலையடா மயூரா ..!  விடுடா போனால் போகட்டும், சும்மா தானே சொன்னாய் இதெல்லாம் சர்வதேசப் பிரச்சனையா..!! என்று தனக்குத் தானே  ஆறுதல் சொல்லிக்கொண்டான் மயூரன், இருந்தும் குட் நைட் என்று எஸ் எம் எஸ் அனுப்பி விட்டு அதுக்காவது பதில் வருமா என்று காத்துக் கொண்டு இருந்தான்."

....... எந்தப் பதிலுமே இல்லை......

பொங்கு சனியோ, மங்கு சனியோ ஒரு சனி துலைஞ்சுது என்று நித்திரைக்குப் போனவன். அலாரம் அடித்து எழும்புவதற்காய் ஃபோனைப் பார்க்கும் போது தான் ஆறு எஸ் எம் எஸ் வந்திருந்தது அபி2 யிடம் இருந்து.

"டியர் மயூரன்,

நீங்கள் சிம்பிளாகச் சொல்லிவிட்டீர்கள் நான் தான் தரையில் விழுந்த மீனாகத் தவிக்கிறேன் இங்கு. உங்களுக்குத் தெரியும் எனக்கு ஆண் சகோதரர்கள் யாரும் இல்லை,அக்காவும் தான் விரும்பயவரையே அப்பா வேண்டாம் என்று சொல்லியும் எங்களை எதிர்த்து அவள் விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டாள், எனக்கு கீழே இரண்டு தங்கச்சி வேறை அவர்களைப் பார்க்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் இப்ப என்ரை தலையிலை தான் வந்து விழுந்திருக்குது. எனக்கு என்ரை குடும்பம் தான் முக்கியம். நான் இரண்டாம் தரம் சோதினை எடுத்திருக்கலாம் இல்லாட்டி வேறை ஏதாவது படித்திருக்கலாம் ஆனால் ஆன்டி பிரான்ஸ்சுக்கு வரச் சொல்லி நிக்கிறா அங்கை போய் படிச்சுக் கொண்டு வேலை செய்தால் தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.

அதைவிடப் பெரிய பிரச்சனை என்னவென்றால் நான் கமலைக் காதலித்தது உங்களுக்கும் தெரியும், அவனோடு கதைச்சதெல்லாம் என் வாழ்வின் கொடுமையான தருணங்கள், எத்தனை நாள் தான் மனக்காயங்களைத் தாங்குவேன்? "காயம் பட்டு வாற வலியை விடக் காதலினால் இதயத்துக்கு வாற வலி தான் அதிகம்", அதனால் தான் அவனை வேண்டாம் என்று சொன்னேன்.சந்தேகப்பிராணியோடு வாழ்நாள் முழுக்க வடுக்களைத் தாங்க நான் என்ன சுமை தாங்கியா? அது என்னாலை முடியாது, ஆனால் எனக்கு வருபவன் எப்படியோ யாருக்குத் தெரியும்? "தெரியாத பேயை நம்புவதை விட தெரிஞ்ச குட்டிச்சாத்தானை நம்புவதே மேல்". அதைவிட பழகிய வரைக்கும் உங்களைப் பிடிக்கும், அதனால் தான் உங்களுடன் கதைப்பதே. நீங்கள் என்னைக் கைவிட்டிட மாட்டீர்கள், ஏமாற்ற மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சரி சொல்கிறேன்."

"வெண்மேகக் கூட்டங்களைக் கிழித்து விண்மீன்கள் புடைசூழ வெண்ணிலவிலவள் தாழ் சேர்ந்து தாலாட்டுப் பாட சொப்பனம் வராததில் ஆச்சரியப்பட  ஏதுமில்லை, சனி தோஷம்  கூட சிலகாலம் தான், அதுவும் பரிகாரம் செய்தால் போய்விடும் என்பது ஐதீகம் ஆனால் இது?!

இனி அவன் வாழ்நாள் முழுக்கச் சிப்பிலி ஆட்டம் தான் போல நினைத்துக் கொண்டான்."

காலதேவன் தன் கடமைகளைக் கனகச்சிதமாகவே செய்து கொண்டிருந்தான்

யாழின் அன்றைய அசாதாரண சூழ்நிலைகளால் அவள் கொழும்பிலும், அவன் யாழிலும் இருந்ததால் முகம்பாராமலே தொடர்ந்தன அவர்கள் காதல். பார்த்து விடத் துடிக்கும் மனதிருந்தும் பாதை மூடியதால் பார்க்காமலே தொலைந்து விடப்போகிறார்கள் என்பதை யார் தான் அறிவர்..????

தொடரும்..

பி.கு: ஆள்மாறாட்டம், பெயர்க்குளப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக அபி2என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஜீவா உங்கள் எழுத்துக்கள் ஆன்மாவில் இருந்து வருகின்றன.எழுதி வைத்து பதிவதில்லை உணரும்போதே எழுதுகிறீர்கள்.எழுதுவதற்கு என்றே பிறந்திருக்கிறீர்கள். 

எத்தனையோ கதைகள் உயர்மட்ட வாசகர்களுக்காகவே எழுதபடுகின்றன. அவர்களாலேயே வாசித்தும் உணரபடுகினறன. அப்படி எழுதுபவர்களையிலே எழுத்தாளர்கள் என்று புகழ்கின்றனர். ஆனால் உங்கள் எழுத்துக்கள் அவற்றை எல்லாம் தாண்டி எல்லாராலும் வாசித்து உணர கூடிய படைப்பை தருவதால் , நீங்கள் ஒரு உன்னதமான எழுத்தாளர் என்று சொல்வதில் நான் பின்னிற்பதில்லை.

Link to comment
Share on other sites

அபி இப்ப ஃபிரான்சுக்கு போய்ட்டாவா? செய்திகளை இணைக்கிறாவா? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.