Jump to content

பற்றீஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பற்றீஸ்

samoosa1tf.png

தேவயான பொருட்கள்

உருளைக்கிழங்கு : 1 கி. கிராம்

ரின் மீன் : 1 சிறியது 155 கிராம்

சிறிதாக வெட்டிய வெண்காயம் : 5 மே. கரண்டி(நிரப்பி)

சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் : 3 மே. கரண்டி(நிரப்பி)

சிறிதாக வெட்டிய உள்ளி : 1 தே.கரண்டி(நிரப்பி)

சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை: 1 மே. கரண்டி(நிரப்பி)

கடுகு : சிறிதளவு

பெரும்சீரகம்: சிறிதளவு

கறிமிளகாய்த்தூள்: 1 மே. கரண்டி(நிரப்பி)

மிளகு தூள் : 1 மே. கரண்டி(நிரப்பி)

உப்புத்தூள் : அளவிற்கு

தேங்காய்ப்பால்(தடித்த) : 1/2 தம்ளர்

தேசிப்புளி: 1 தே.கரண்டி

மாப்பசை தாயாரிப்பு

கோதுமைமாவு: 1/2 கி.கிராம்

தண்ணீர் : அளவிற்கு

மாஜரின் : 2 மே.கரண்டி(நிரப்பி)

உப்புநீர் : அளவிற்கு

எண்ணெய் : 2 மே.கரண்டி(நிரப்பி)

செய்முறை

- உருளைக்கிழங்கைத் துப்பரவாக்கித் தோல்சீவிச் சிறு துண்டுகளாக வெட்டி அவித்து வடித்து எடுத்துக்கொள்க.

- பின்பு தாச்சியில் 3 மே. கரண்டி எண்ணெய் விட்டுக் கொதித்தபின்பு கடுகையிட்டு வெடிக்கவைத்து வெட்டிய வெண்காயம், பச்சைமிளகாய், உள்ளி, பெரும்சீரகம், கறிவேப்பிலை என்பவற்றையிட்டு வதங்கவிட்டு சிறிது நேரத்தால் அவித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, கறிமிளகாய்த்தூள் என்பவற்றைச் சேர்த்து மூடி வதங்கவிட்டு வதங்கியபின்பு 1/2 தம்ளர்

தேங்காய்ப்பால் விட்டுச் சேர்த்து நன்றாகக் கறிதிரண்டு வரும்வரை இடைவிடாதுகிளறி நீர்தன்னை சென்று திரண்டு வரும்போது ரின்மீன், மிளகுதூள், உப்புத்தூள் என்பன கலந்து நன்கு சேர்த்து இறக்கி தேசிப்புளி விட்டுக்கலந்து வைத்துக் கொள்க.

- பின்பு பாத்திரத்தில் மாவை அரித்துப்போட்டு, மாஜரின், அளவிற்கு உப்பு நீர் என்பனவிட்டு நன்றாக கலந்த பின்பு தண்ணீரை அளவிற்கு விட்டுக் கையிலொட்டாத மெதுமையான பதத்திற்கு அடித்துக் குழைத்துக் கொள்க.

- பின்பு மாப்பசைக்கலவையை மறக்கறி வெட்டும் தட்டில் மாவைப்பூசி மிக மெல்லியாதாக உருட்டி எடுத்து. கறியை உருட்டிய மா மேல் வைத்து மூடி ரின்பால் ரின்னால் 1/2 சந்திரன் போல வெட்டியெடுக்கலாம்/ பெரிதாக வேண்டுமாயின் பெரிய கிளாசால வெட்டி எடுக்கலாம் / பற்றிஸ் கட்டரினாலும் ஆக்க்கிக் கொள்ளலாம். விளிம்போரத்திற்கு தண்ணீர் பூசி மூடிக் கொள்ளவும்.

-பின்பு கொதிக்கும் எண்ணெய்யில் இட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறலாம்.

இதை இப்படி மடித்து விட்டால் சமோசா

samoosa1tf.png

Link to comment
Share on other sites

மிக்கநன்றி உங்கள் பற்றீஸ் செய்முறைக்கு துளசி..

Link to comment
Share on other sites

மாக்கலவையை சில மணித்தியாலங்களுக்கு வைக்கமாட்டார்களா?

Link to comment
Share on other sites

படத்துடன் கூடிய செய்முறைக்கு நன்றிகள் துளசி அக்கா.

Link to comment
Share on other sites

மாக்கலவையை சில மணித்தியாலங்களுக்கு வைக்கமாட்டார்களா?

அது உங்கள் வசதியைப் பொறுத்தது. விருப்பம் என்றால் பிசைந்து சில மணித்தியாலங்கள் வைக்கலாம்.

செய்முறைக்கு நன்றி துளசி. :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உங்கள் செய் முறைக்கு. மா புளிக்க தேவையிலையா

Link to comment
Share on other sites

அதையே தான் நானும் கேட்டேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உங்கள் செய் முறைக்கு. மா புளிக்க தேவையிலையா

தேவையில்லை. :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.