Jump to content

சிறகுகள் வேண்டும் எனக்கு


Recommended Posts

சிறகுகள் வேண்டும் எனக்கு

sadangel7vv.jpg

என் மேசையில் இருந்த கடிகாரம் மணி 7 என காட்டியது. வேலைக்கு காலை 6 மணிக்கு வந்தேன். வேலையும் இன்று அதிகம் தான். இப்பொழுது வேலை அனைத்தும் முடிந்தும் வீடு செல்ல மனம் வரவில்லை.

போனால் என்ன புதிதாக நடக்கும்? வழமையான புராணம். அதே கேள்விகள். அதே சந்தேகங்கள்.

இந்த 2 வருடத்தில் நடந்த விடயங்கள் "இப்படி ஒரு வாழ்க்கையா?" என சலித்துக்கொள்ள வைத்துவிட்டது.

பெரியம்மா, மாமா, மாமி , சித்தப்பா, சித்தி என்று குடும்பத்தில் அனைவருமே என்னை தான் குறை சொல்கின்றார்கள். அம்மா அப்பா சொல் கேட்பது இல்லையாம்!

இவர்கள் கேட்டார்களா என அப்பப்பாவிடம் கேட்க வேண்டும்.

நான் என்ன சின்ன பிள்ளையா? எனக்கு யோசிக்கும் சக்தி கூட இல்லையா? இத்தனை வருடங்களில் நான் இவர்களிடம் எனக்கென ஏதாவது கேட்டு இருக்கின்றனா? அல்லது இங்கிருக்கும் பலரை போல் வெளியே செல்கிறேன், இரவில் வெளியே போகின்றேன் என கேட்டதுண்டா? அல்ல பணம் தான் கேட்டதுண்டா?

நான் படிக்கவில்லையா? நல்ல வேலையில்லையா? அல்லது எனக்கென்று இங்கு பொறுப்பு தான் உண்டா?

நினைக்க நினைக்க எரிச்சல் தான். வீட்டில் இதனால் தான் எத்தனை பிரச்சனைகள்? எத்தனை வாக்குவாதங்கள்?

"மற்ற பிள்ளைகளை பார். இப்படியா செய்கிறார்கள்? தாங்கள் உண்டு தங்கள் படிப்பு உண்டு என இல்லையா? எங்களுக்கு இருப்பது நீ ஒருத்தி. இது எல்லாம் தேவையில்லாத வேலை" இது அம்மா.

இது மட்டுமா கூடவே சில கண்ணீர் துளிகளும் வரும். இதை பார்த்த உடனே "பெத்த தாயை அழ வைக்கிறது நல்லதிற்கு இல்லை" இது அப்பா.

மொத்தத்தில் நான் தான் எல்லாருக்கும் பிரச்சனை. என் எண்ணங்களும், கொள்கைகளும்... இவர்களையும் அதை பின்பற்ற சொல்லவில்லையே! அதே சமயம் என்னுடைய எண்ணங்களுக்கும் மதிப்பு குடுக்க வேண்டாமா?

கேட்டால்? உடனே என்ன பதில் வரும். "இதுக்காகவா அங்க எல்லாத்தையும் விட்டுவிட்டு இங்க வந்தோம்? அங்கே பெற்று வளர்த்திருக்க வேண்டும்.."

ஒரு நாள் இதற்கு பதிலும் சொன்னேனே "அங்கிருந்து இருந்தால் உங்களுக்கும் நான் நினைப்பது சரி என தோன்றி இருக்கும்"

உடனே கிடைத்ததே நல்ல பட்டம் "வாய், எதிர்த்து கதைக்கிறது".

மணிக்கூடு சத்தம் போட்டு மணி எட்டாகிவிட்டது என நினைவுபடுத்தியது.

என்னை நோவதா? விதியை நோவதா? என்னவென்று நான் சொல்ல?

கைப்பையை எடுக்கும் போது மேசையில் இருந்த தமிழீழ தேசிய கொடியில் இருக்கும் புலி என்னையே பார்ப்பது போல் ஓர் உணர்வு.

கொஞ்ச நாட்கள் தன்னும் வன்னிக்கு சென்று எம்ம் உறவுகளுக்காக ஏதாவது செய்ய வேன்டும் என்ற என் ஆசை, வெறி..... இரண்டு வருடமாக எங்கள் குடும்பத்தில் பிரச்சனையை வளர்த்தது தான் மிச்சம்.

தமிழ் தொலைக்காட்சியில் செய்தி பார்ப்பதும், பத்திரிகைகள் படிப்பதும் மட்டுமா தமிழர்கள் நாம் இப்பொழுது செய்ய வேண்டியது?

பலகாலம் அங்கு வாழ்ந்த உங்களுக்கு இல்லாத இணைப்பு, சில நாட்கள் மட்டும் அங்கு தவழ்ந்த எங்களுக்கு இருக்கின்றதே! சில தடவைகள் மட்டும் ஈழம் போன எங்களுக்கு இருக்கின்றதே!

பெற்ற தாயின் கண்ணீர்.. அப்போ ஈழ தாய் விடும் கண்ணீர்? அவள் கதற பார்த்துகொண்டிருக்கவா?

போதனை எல்லாம் வீட்டிற்கு வெளியே தானா? உங்களுக்கு?

பறந்து செல்ல சிறகுகள் அளியுங்கள்..விலங்குகளை தகர்த்தெறியுங்கள்.

எதிரி எனில் நாங்களே தகர்த்தெறிவோம்..அன்பால் எங்களை கட்டுப்படுத்தாதீர்கள்.

சுதந்திரம் தாருங்கள் எமக்கு. பின்னர் நாம் எம்மின சுதந்திரம் பெற்றிடுவோம்.

ம்ம்ம் பெருமூச்சு தான் வருகின்றது. இப்படி தனிய அலுவலகத்தில் நின்று கத்த வேண்டியது தான். வீடு போய் சேரும் வேலையை பார்ப்போம்...

தூயா

Link to comment
Share on other sites

வீட்டுக்கு வீடு வாசல் படி...அங்கேயும் அதுதானா...? எவன் போனால் உனக்கென்ன? இங்க எம்மோடு இரு என்கிறார்கள்

ம்...வீட்டில சுதந்திரம் கிடைக்கணும் முதலில்!

கதை தங்கள் உணர்வின் வெளிக்கொணர்வு பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

. "இதுக்காகவா அங்க எல்லாத்தையும் விட்டுவிட்டு இங்க வந்தோம்? அங்கே பெற்று வளர்த்திருக்க வேண்டும்.."

உடனே கிடைத்ததே நல்ல பட்டம் "வாய், எதிர்த்து கதைக்கிறது".

:evil: சில வசனங்கள் எப்பவுமே ரெடியாக இருக்கும் :evil:

Link to comment
Share on other sites

ம்ம் உங்கள் உணர்வுகளைக் கதை மூலம் கூறி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

வீட்டுக்கு வீடு வாசல் படி...அங்கேயும் அதுதானா...? எவன் போனால் உனக்கென்ன? இங்க எம்மோடு இரு என்கிறார்கள்

ம்...வீட்டில சுதந்திரம் கிடைக்கணும் முதலில்!

கதை தங்கள் உணர்வின் வெளிக்கொணர்வு பாராட்டுக்கள்!

அதேதான் :twisted:

Link to comment
Share on other sites

:evil: சில வசனங்கள் எப்பவுமே ரெடியாக இருக்கும்

ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம் போடமா கதையுங்கோ, பிறகு இதற்கும் ஒரு ரெடிமேட் பட்டம் கிடைக்க போகிது :twisted:

Link to comment
Share on other sites

ம்ம் உங்கள் உணர்வுகளைக் கதை மூலம் கூறி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

பாராட்டுக்கு மிக்க நன்றி ரசிகை :D

Link to comment
Share on other sites

தூயா வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் எவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் நம் இனத்துக்காக எதாவது ஒன்று செய்யவேண்டும் என்று துடிப்பது ஏனோ மற்றவர்களுக்கு புரிவதில்லை.

அநேகமான தாயக உணர்வுள்ள இளம் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் நடக்கும் பிரச்சனையை அழகாக கூறியிருக்கின்றீர்கள்.

பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

தூயா வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் எவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் நம் இனத்துக்காக எதாவது ஒன்று செய்யவேண்டும் என்று துடிப்பது ஏனோ மற்றவர்களுக்கு புரிவதில்லை.

அநேகமான தாயக உணர்வுள்ள இளம் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் நடக்கும் பிரச்சனையை அழகாக கூறியிருக்கின்றீர்கள்.

பாராட்டுக்கள்.

புரியாவிடினிலும் பரவாயில்லை..

ஏளனம் செய்பவர்கள் தான் அதிகம் :D

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ரமாக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் தலை முறையினருக்கு இருக்கும் தாயக உணர்வை உற்சாக படுத்த வேன்டியவர்கள் கொச்சை படுத்தாமாலாவது இருக்கலாம்.

பாரட்டுக்கள்

Link to comment
Share on other sites

ம்ம்ம் புரிந்து கொள்ள வேண்டுமே...

நன்றி சஜீவன் :D

Link to comment
Share on other sites

பறந்து செல்ல சிறகுகள் அளியுங்கள்..விலங்குகளை தகர்த்தெறியுங்கள்.

எதிரி எனில் நாங்களே தகர்த்தெறிவோம்..அன்பால் எங்களை கட்டுப்படுத்தாதீர்கள்.

சுதந்திரம் தாருங்கள் எமக்கு. பின்னர் நாம் எம்மின சுதந்திரம் பெற்றிடுவோம்.

நல்லாக எழுதி இருக்கிறீங்க பபா. வாங்கோவன் போவம் வன்னிக்கு பயிற்சி எடுத்திட்டு போராடலாம். :arrow:

Link to comment
Share on other sites

நீங்கள் ஆயத்தமா?? உங்கட வீட்டில சரியா? ;)

Link to comment
Share on other sites

வணக்கம் தூயா,

அருமையான கருவைக் கதையாக்கியிருக்கிறீர்கள். நிங்கள் சொல்வது உண்மைதான். பல பெரியவர்கள் இப்படித்தானிருக்கிறார்கள்.

அதேவேளை இன்னும் பல இடங்களில் தாயக எண்ணமே இல்லாமல் தாங்கள் வெளிநாட்டில் வழி வழி வந்தவர்கள் போல வாழுகின்ற பிள்ளைகளைப் பார்த்து வேதனைப்படும் பெரியவர்களும் இல்லாமலில்லை.

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

இரண்டு விதமான பிரச்சனை.... நீங்க்ள் சொல்வது நிஜம் தான்...

Link to comment
Share on other sites

நீங்கள் ஆயத்தமா?? உங்கட வீட்டில சரியா? ;)

ம்ம்ம் எங்கள் வீட்டில் எப்போதும் சரிதான். ஆனால் போறதுக்கு துணை இல்லை. இப்பதான் நீங்கள் வாறீங்களே. :P :arrow:

Link to comment
Share on other sites

இதுக்கு ஏன் துணை?

Link to comment
Share on other sites

தூயாவின் கதை ........

கதை என்ற பேரில் ஒரு நிஜம் ....

சுனாமிக்கு பிறகு ..........

உதவ மனம்கொண்டு போனவர்கள் .......

வரவேயில்ல - அது சுவிஸ் - கனடா- டென்மார்க் .... என்று

நாமறிந்தவரை........

அறியாமல் ......?

தொடர்ந்து எழுதுங்களேன் - இதே போல ..இன்னும் வித்தியாசமா - பாராட்டுக்கள்! 8)

Link to comment
Share on other sites

வன்னி போகுமளவுக்கும் துணை வேணும் பபா.

இந்த பதிலுக்குள் - நிறைய விசயம் இருக்கு !

லெப்.கேணல்.கெளசல்யன் - இழப்பு ... ஞாபகம் வருது! 8)

Link to comment
Share on other sites

தூயாவின் கதை ........

கதை என்ற பேரில் ஒரு நிஜம் ....

சுனாமிக்கு பிறகு ..........

உதவ மனம்கொண்டு போனவர்கள் .......

வரவேயில்ல - அது சுவிஸ் - கனடா- டென்மார்க் .... என்று

நாமறிந்தவரை........

அறியாமல் ......?

தொடர்ந்து எழுதுங்களேன் - இதே போல ..இன்னும் வித்தியாசமா - பாராட்டுக்கள்! 8)

அவுஸ்திரேலியாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...

நன்றி வர்ணன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்துக்கு சென்று பங்களிக்கவேண்டும் என நினைக்கும் இளம் தலைமுறையினருக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இடையில் ஏற்படும் போராட்டத்தினை அழகாகச் சொல்லியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

¿ýÚ à¡..

þýÛõ ±ØÐí¸û..

¨À ¾ ¨À ¯í¸ÙìÌ Ãº¢¸÷ Àð¼¡ÇõÜÊ §Ä¡¸ø ¸¨¼ì§¸ §À¡§¸Ä¡Á ¸Š¼ôÀ¼ô§À¡È¢Âû.

º¡ì¸¢Ã¨¾.. ;-)

Link to comment
Share on other sites

பதிலுக்கு நன்றி கந்தப்பு :(

யூகே பெடியன் - ரசிகர் பட்டாளம் வருதோ இல்லையோ? ஏற்கனவே என்னை யார் என கண்டுபிடிக்க ஒரு கூட்டம் இருக்கு..நீங்கள் வேறு லோக்கல் கடை என அவர்களுக்கு புத்தி சொல்லிகுடுக்கின்றீர்களே ..இது தகுமா?? ;)

Link to comment
Share on other sites

ஹிஹி ... உண்மைதான்..... 8)

ம்ம் நல்லா எழுதிருக்குறீங்க..... தொடர்ந்து எழுதுங்க தூய்ஸ் .... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.