Jump to content

ராகுலுடன் தமிழக காங்கிரஸார் சந்தித்து ஆலோசனை


Recommended Posts

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை தமிழக காங்கிரஸார் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மக்களவை எம்.பிக்கள் 8 பேர், மாநிலங்களை எம்.பி.க்கள் 4 பேர், அமைச்சர்கள் ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டம் சுமார் 30 நிமிடங்களுக்கு நீண்டது.

 

தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து அவர்களிடம் ராகுல் கேட்டறிந்ததாகவும், அது தொடர்பாக விவாதம் நடைபெற்றதாகவும் தெரிகிறது.

 

மேலும், இலங்கை விவகாரம், இலங்கை விவகாரத்தில் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலை ஆகியவை குறித்து கேட்டறிந்தாராம். மேலும், இலங்கை விவகாரத்தில் திமுக நிலை குறித்து ராகுல் விசாரித்ததாகத் தெரிகிறது.


காங்கிரஸ் துணைத்தலைவராக ராகுல் பொறுப்பேற்றதற்குப் பிறகு முதல் முறையாக அவர் தமிழக காங்கிரஸாரைச் சந்தித்தார். இதுதொடர்பாக தொடர் கூட்டங்களை அவர் நடத்த எண்ணியுள்ளார். அதில் முதல் குழுவாக தமிழக காங்கிரஸாரிடம் அவர் ஆலோசனைக்காக அழைத்துள்ளார். இதன்பின்னர் தில்லி காங்கிரஸார், அமைச்சர்கள், எம்.பி,க்கள் உள்பட பலர் ராகுலுடன் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றனர்.

 

http://dinamani.com/latest_news/article1487938.ece

Link to comment
Share on other sites


தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை: இலங்கைக்கு எதிரான தீர்மானம்




First Published : 05 March 2013 03:02 AM IST

 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும்

தீர்மானம், அது தொடர்பாக தமிழகத்தில் "டெசோ' அமைப்பு நடத்தி வரும்
போராட்டங்கள் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி
திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.


தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலக அறையில் ராகுல்
காந்தியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான
பி.எஸ். ஞானதேசிகன் தலைமையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்தித்தனர். 
மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன், மக்களவை
உறுப்பினர்கள் என்.எஸ்.வி. சித்தன், எம். கிருஷ்ணசாமி, கே.எஸ். அழகிரி,
ஜே.எம். ஆரூண், எஸ்.எஸ். ராமசுப்பு, பி. விஸ்வநாதன், மாணிக்கம் தாகூர்,
மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் இந்தக் குழுவில்
இடம்பெற்றிருந்தனர்.


தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் இந்த சந்திப்பின்போது உடனிருந்தார்.


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு
தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களையும் மத்திய அமைச்சர்களையும்
ராகுல் காந்தி சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.


முக்கியமான பேச்சு: இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜெனீவாவில் உள்ள
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா
கொண்டு வரும் தீர்மானம் குறித்து இந்தியாவின் நிலையை காங்கிரஸ்
உறுப்பினர்கள் வினவியதாகத் தெரிகிறது.


அப்போது பேசிய உறுப்பினர்கள், ""மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான
கூட்டணி அரசில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை அங்கம்
வகிக்கின்றன. இந்தக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் (டெசோ)
என்ற அமைப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.


அந்த அமைப்பு சார்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க
வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தில்லியில் வரும்
7-ம் தேதி "டெசோ' சார்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ்
பங்கேற்கலாமா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்'' என்று அவர்கள்
ராகுலிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.


சிதம்பரம் விளக்கம்: இதையடுத்து, இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக
மத்திய அரசின் நிலை என்ன என்று மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் ராகுல்
காந்தி கேட்டதாகவும் அதற்கு அவர் சில விளக்கங்களை அளித்ததாகவும் தெரிகிறது.


 ""கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு
வந்தபோது இலங்கை அரசு நியமித்த படிப்பினை நல்லிணக்க ஆணையக் குழு
(எல்எல்ஆர்சி) அளித்த  பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று
வலியுறுத்தும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரித்தது.


அதன் பிறகு கடந்த ஓராண்டில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால்,
தற்போதைய ஜெனீவா கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்யும் தீர்மானத்தின்
முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும்''
என்று
சிதம்பரம் கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


ராகுல் பதில்: இதையடுத்து பேசிய ராகுல் காந்தி, ""இலங்கைத் தமிழரின்
நலன்களில் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஈடுபாடும் அக்கறையும் உள்ளது.


அதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை எடுக்கும்படி மத்திய அரசை காங்கிரஸ்
வலியுறுத்தும். மற்றபடி "டெசோ' கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர்கள்
பங்கேற்பது குறித்து கட்சி மேலிடத்திடம் கேட்டறிந்து குலாம் நபி ஆசாத்
தெரிவிப்பார்'' என்று கூறியதாகத் தெரிகிறது.


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள 47 உறுப்பு நாடுகளில் சுமார் 30
நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிப்பதாகக் கூறியுள்ளன. இந்த
நிலையில், இந்த விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை இதுவரை
தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.


http://dinamani.com/tamilnadu/article1488520.ece
 

 

Link to comment
Share on other sites

இராகுல் எடுக்கும் முடிவு தமிழகம் உட்பட்ட உலகத்தமிழர்கள் அவரைப்பற்றிய சரித்திரத்தை எழுத காரணமாக அமையும்.

Link to comment
Share on other sites

TN MPs meet Rahul on Lanka issue, pitch for tough stand

 

 

Congress MPs from Tamil Nadu on Monday told Rahul Gandhi that India should take a tough stand against Sri Lanka at the upcoming UN meet on Tamils issue as it was crucial for the party's future in the state.

 

Party sources said that the MPs including Union Ministers P Chidamabaram, G K Vasan and Jayanthi Natarajan and PCC Chief B S Gnanadesikan wanted India to support the resolution at the UN Human Rights Commission on the Sri Lankan Tamil's issue and found the party Vice-President "very sympathetic" to the cause of Tamils.

 

Though the meeting was customary affair following the start of the budget session of Parliament, MPs utilised the opportunity to impress upon the leadership that the Sri Lankan Tamils issue needed to be tackled strongly. They also raised the issue of fishermen from Tamil Nadu getting killed by Sri Lankan Navy as also the general political situation in the state. The MPs said that Gandhi was told of the problems faced by Sri Lankan Tamils and the need for a political reconciliation and implementation of the 13th Amendment. The meeting came in the wake of Dravidian parties, DMK and AIADMK, making the Tamil problem a major issue in state politics and putting pressure on the Centre to take a tough stand in the UN Human Rights Commission. India has already said that there should be accountability for such issues but has remained evasive on the position it will take at the UN on a resolution against that country.

 

The DMK, a key UPA constituent, had said in the Rajya Sabha last week that it has lost faith in the government on the issue and its members had staged a walkout along with those from AIADMK and Left, dissatisfied with External Affairs Minister Salman Khurshid's reply to the debate on the plight of Tamils in Sri Lanka.

 

The Congress has 12 MPs in the state.

 

Read more at: http://news.oneindia.in/2013/03/04/tnmps-meet-rahul-on-lanka-issue-pitch-for-toughstand-1163869.html

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.