Jump to content

ஈழம் பார்க்க வருவீக


Recommended Posts

ஈழம் பாக்க வருவீக

ஈழம் பாக்க வருவீக

வந்து ஊரைப் பாப்பீங்க

உடனேதான் பாய் பாய் சொல்லிப் போவீங்க

ஒண்ணாத்தானே இருந்தோங்க

பாயில தானே படுத்தோங்க

சொக்ஸ் எல்லாம் களட்ட மறுக்கு றீக.

திரும்ப திரும்ப வருவீக

ஐஞ்சை பத்தை தருவீக

விடுமுறையை களிச்சுட்டு போயிடு வீக

வெஸ்டேன் என்று சொல் றீக

விந்தி விந்து நடக் கீக

உங்களோடை தொல்லை தாங்கலைங்க

உங்களை நீங்கள் முட்டாளாக்க வேணாம்

முட்டாளாகி நீங்க இருபது வருசம் ஆச்சு

மீனும் சோறுமோ, கூழும் கஞ்சியோ

ஏதாச்சும் இங்க இருக்குங்க

Toilet பேப்பர் கொண்டு ஊரைச் சுத்தும் நீங்க

ஊசி போட்டு வன்னி பார்க்கும் நீங்க

எப்ப வந்து எப்ப வந்து செட்டில் ஆவீக

ஆசான் காலில் விழுந்து கல்வி கற்ற நீங்க

லாம்பில் படித்து பட்டம் பெற்ற நீங்க

காதில் தோடும் காளான் வெட்டும் வெட்டி கெடுக்காதீக

இந்த ஸ்ரைலுக்காகவும் பணத்துக்காகவும் பறக்காதீக

கசூர்னா பீச்சில நீச்சல் உடையுடன் குளிக்காதீக

அக்கா தண்ணீ போடாதீக

அதுவும் இங்க போடாதீக

தமிழனின் பண்பைத்தானே கேவலப்படுத்தாதீக

பட்டு வேட்டி பட்டு சேலை உடுத்துட்டு

கையு நிறைய கழுத்து நிறைய மாட்டிட்டு

முருகனுக்கு விசா காட்டை நீங்க நீட்டாதீக

தமிழனெண்டு தமிழனெண்டு பேசிட்டு

முருகண்டியில் இளநீர் வாங்கி குடிச்சுட்டு

Can I have some more என்று கேக்காதீக

நம்ம நாட்டை பற்றியும் ஊரைப் பற்றியும் யோசியுங்க

அட! Foreign போயிதான் ஜாலியாகத்தான் திரியாதீக

அக்கா அண்ணாவைத்தான் கொஞ்சம் யோசிச்சு பாருங்க

வெள்ளைக்காரன் போலத்தானே கேவலப் படுத்தாதீக..!

- ஆக்கம் ஜீவிதன்

Link to comment
Share on other sites

ஆகா யாரோ நல்லா அனுபவத்தில் எழுதியிருக்கின்றார் போல இருக்கு.

ஊசி போட்டு கொண்டு ஊருக்கு போவதில் தப்பு இருப்பதாக எனக்கு படலை? இதனால் வரும் பாதிப்புக்கள் அளப்பரியது. அனுபவத்தில் கண்டது. நானும் போகும்போது அசட்டையாக தான் போனேன். ஆனால் போய் மருத்துக்கு காசு செலவழித்தது தான் மிச்சம்.

நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் உண்மையைகளை அப்படியே கோபத்துடன் கேட்பது போல இருக்கு.. இந்த கவிதை தாயகத்திற்கு வெளிநாட்டு நாகரிகத்தை காட்ட போவோர்களுக்கு நன்றாக பொருந்தும்.

இணைப்பிற்கு நன்றி ரசிகை.

Link to comment
Share on other sites

ஆகா யாரோ நல்லா அனுபவத்தில் எழுதியிருக்கின்றார் போல இருக்கு.

ஊசி போட்டு கொண்டு ஊருக்கு போவதில் தப்பு இருப்பதாக எனக்கு படலை? இதனால் வரும் பாதிப்புக்கள் அளப்பரியது. அனுபவத்தில் கண்டது. நானும் போகும்போது அசட்டையாக தான் போனேன். ஆனால் போய் மருத்துக்கு காசு செலவழித்தது தான் மிச்சம்.

நகைச்சுவையாக எழுதியிருந்தாலும் உண்மையைகளை அப்படியே கோபத்துடன் கேட்பது போல இருக்கு.. இந்த கவிதை தாயகத்திற்கு வெளிநாட்டு நாகரிகத்தை காட்ட போவோர்களுக்கு நன்றாக பொருந்தும்.

இணைப்பிற்கு நன்றி ரசிகை.

ம்ம் எழுதின ஆள் ரொம்ப பீல் பண்ணித்தான் எழுதி இருக்கிறார். :P

Link to comment
Share on other sites

உண்மைதான் ரசி அக்கா

நான் கூட ஊர் சென்ற சமயம் ஒரு ஈழத்து சிதம்பரம் மார்கழி திருவிழாவுக்கு சென்றிருந்தேன் நிறைய புலம் பெயர் தமிழர்கள் வந்திருச்சினம் கோவிலில் அவர்கள் வீடியோ எடுப்பதேன்ன சாத்துப்படி நகைகள் அடுக்கிறது என்று ஆண்களும் பெண்களுக்கு போட்டியாக கழுத்து நிறைய நகைகளுடன்

இதில ஒண்டு தெளிவா தெரிஞ்சுது அவர்கள் யாரும் கடவுளை பார்க்க வரயில்லை பந்தா காட்டத்தான் வந்திச்சினம் எண்டு

அடுத்து கொஞ்சப்பேர் ஏதோ தாங்கள் வெயிலையே பார்க்காதவை மாதிரி எப்பவும் இந்த வெக்கையில எப்படி இருக்கிறது எண்டு தனியாபிலிம் காட்டுவினம் இவையெல்லாம் இலங்கைல இருந்து புலலம் பெயர்ந்தவை தானே அப்ப இல்லாத வெயிலையா இப்ப பார்க்கினம்

எப்பதான் திருந்துவினமோ

Link to comment
Share on other sites

உண்மைதான் ரசி அக்கா

நான் கூட ஊர் சென்ற சமயம் ஒரு ஈழத்து சிதம்பரம் மார்கழி திருவிழாவுக்கு சென்றிருந்தேன் நிறைய புலம் பெயர் தமிழர்கள் வந்திருச்சினம் கோவிலில் அவர்கள் வீடியோ எடுப்பதேன்ன சாத்துப்படி நகைகள் அடுக்கிறது என்று ஆண்களும் பெண்களுக்கு போட்டியாக கழுத்து நிறைய நகைகளுடன்

இதில ஒண்டு தெளிவா தெரிஞ்சுது அவர்கள் யாரும் கடவுளை பார்க்க வரயில்லை பந்தா காட்டத்தான் வந்திச்சினம் எண்டு

அடுத்து கொஞ்சப்பேர் ஏதோ தாங்கள் வெயிலையே பார்க்காதவை மாதிரி எப்பவும் இந்த வெக்கையில எப்படி இருக்கிறது எண்டு தனியாபிலிம் காட்டுவினம் இவையெல்லாம் இலங்கைல இருந்து புலலம் பெயர்ந்தவை தானே அப்ப இல்லாத வெயிலையா இப்ப பார்க்கினம்

எப்பதான் திருந்துவினமோ

நித்திலா நான் போனபோது மிகவும் சாதராணமாக எல்லோருடனும் பழக வேண்டும் ஆதங்கத்தில் கண்டவர்கள் எல்லோருடனும் கதைப்பேன். அதைப்பார்த்து விட்டு சொன்னார்கள் உங்களைப்பார்க்க வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மாதிரி தெரியலை என்று. நான் கேட்டேன் ஏன் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் நாலு காலாலோ நடப்பார்கள் என்று?

ஆனால் தாயகத்தில் இருக்கும் வெயிலை விட இங்கு சமர் நேரத்தில் வரும் வெயிலின் கோரத்தை தான் தாங்க முடியமால் இருக்கும். அங்கு என்றாலும் ஒதுங்குவதற்கு மரங்கள் என்றாலும் இருக்கும். இங்கு மரங்கள் கூட சிலநேரம் அசைவற்று இருப்பதை பார்க்க வெறுப்பாக தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

உண்மைதான் ரசி அக்கா

நான் கூட ஊர் சென்ற சமயம் ஒரு ஈழத்து சிதம்பரம் மார்கழி திருவிழாவுக்கு சென்றிருந்தேன் நிறைய புலம் பெயர் தமிழர்கள் வந்திருச்சினம் கோவிலில் அவர்கள் வீடியோ எடுப்பதேன்ன சாத்துப்படி நகைகள் அடுக்கிறது என்று ஆண்களும் பெண்களுக்கு போட்டியாக கழுத்து நிறைய நகைகளுடன்

இதில ஒண்டு தெளிவா தெரிஞ்சுது அவர்கள் யாரும் கடவுளை பார்க்க வரயில்லை பந்தா காட்டத்தான் வந்திச்சினம் எண்டு

அடுத்து கொஞ்சப்பேர் ஏதோ தாங்கள் வெயிலையே பார்க்காதவை மாதிரி எப்பவும் இந்த வெக்கையில எப்படி இருக்கிறது எண்டு தனியாபிலிம் காட்டுவினம் இவையெல்லாம் இலங்கைல இருந்து புலலம் பெயர்ந்தவை தானே அப்ப இல்லாத வெயிலையா இப்ப பார்க்கினம்

எப்பதான் திருந்துவினமோ

ம்ம் உண்மைதான் நித்திலா எப்படித்தான் சாமிக்கு சாத்தினமாதிரி சாத்திட்டு போறாங்களோ. ஏதோ வெளிநாட்டுல இருந்து வந்தால் வானத்துல இருந்து குதிச்ச மாதிரித்தான் நடப்பார்கள். ஆனால் எல்லாரும் இல்லை 3/4 பங்கு மக்கள். :roll:

மற்றது இங்க சமரில் உள்ள வெக்கையே விட அங்க தாங்கலாம். இங்க தான் அப்பப்பா தாங்க முடியாது பத்தி எரியுற மாதிரி இருக்கும். :cry:

Link to comment
Share on other sites

ம்ம் உண்மைதான் நித்திலா எப்படித்தான் சாமிக்கு சாத்தினமாதிரி சாத்திட்டு போறாங்களோ. ஏதோ வெளிநாட்டுல இருந்து வந்தால் வானத்துல இருந்து குதிச்ச மாதிரித்தான் நடப்பார்கள். ஆனால் எல்லாரும் இல்லை 3/4 பங்கு மக்கள். :roll:

மற்றது இங்க சமரில் உள்ள வெக்கையே விட அங்க தாங்கலாம். இங்க தான் அப்பப்பா தாங்க முடியாது பத்தி எரியுற மாதிரி இருக்கும். :cry:

இந்த ஊர்ப் பிள்ளைகள் இப்படிக் கதைக்கிறதைப் பாக்க சந்தோசமாக் கிடக்குது. :lol::lol::lol:

Link to comment
Share on other sites

இந்த ஊர்ப் பிள்ளைகள் இப்படிக் கதைக்கிறதைப் பாக்க சந்தோசமாக் கிடக்குது. :):lol::lol:

:P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.