Jump to content

மியாவ் மியாவ் வாத்தி


Recommended Posts

மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ்

சல சலப்புடன் இருந்த வகுப்பு அறை அமைதியாகின்றது. ஆனாலும் நம்மிடையே அடக்க முடியாத சிரிப்பு. அந்த மாணவனோ ஏதும் அறியாத மாதிரி எழும்பி நின்று "குட் மோர்னிங் சேர்" என்று கூற வாயை பொத்தியபடி நாமும் எழுந்து நின்றோம். பதில் வணக்கத்துடன் வந்தவர் இருங்கள் என்று சொல்லாமல் தான் மட்டும் கதிரையில் இருந்தார். எல்லோரையும் வடிவாக பார்த்தார். அவரின் பூனைக்கண்ணை பார்க்க நமக்கு பயம் என்றபடியால் தலையைக் குனிந்து கொண்டு இருந்தோம். கடைசியாக எல்லோரையும் இருத்திவிட்டு "நீ மட்டும் நில்லு" என்று என்னை சுட்டிக்காட்டிச் சொன்னார். என் மனதுக்குள் போராட்டம் என்ன இந்த வாத்தி என்னை மட்டும் எழுப்பி விட்டிருக்கு, நான் ஒன்றுமே செய்யலையே என்று யோசித்தபடி குழம்பிக்கொண்டிருந்தேன். உடனே "நான் ஏன் உன்னை எழும்பிவிட்டிருக்கிறன் என்று தெரியுமா?"என்றார். இல்லை என்றேன். போன சனிக்கிழமை என்ன நடந்தது என்றார். அட சனிக்கிழமை பாடசாலை லீவாச்சே என்று தடுமாறி கொண்டு இருக்க, "வடிவாக நினைத்துப்பார்" என்றார். சிலவிநாடிகளுக்கு பின்னர் "சனிக்கிழமை றோட்டில் என்னைக் கண்டாயா?" என்று கேட்டார். அட 8 மணிக்கு போன ரீயுசன் 12 மணிக்கு முடிய பசியோடு வீட்டிற்கு போய் கொண்டிருக்கும்போது இந்த வாத்தி தன்னுடைய 'பிரண்டுடன்' சைக்கிளில் போய் கொண்டிருந்தார். நான் பார்த்து விட்டு ஒன்றுமே சொல்லவில்லை. வாத்தி தான் முதலில் 'குட் ஆப்ரனுன்' சொன்னார். அதற்கு பதில் கூறி விட்டு நான் போய் விட்டேன்.

வாத்தி தன்னை எங்கு கண்டாலும் 'குட் மோர்னிங்' 'குட் ஆப்ரனுன்' சொல்லவேணும் என்று கட்டாயம்... பசிக்களைப்பில் எனக்கு 'குட்மோனிங்'கும் தெரியல 'குட் ஆப்ரனு'னும் தெரியல. ஒரு அடி கையில் விழுந்த பின் தான் நினைவுக்கு வந்தேன்.பாடசாலை முடிய வகுப்பில் இருந்த பூக்கண்டுகளுக்கு தண்ணீ ஊத்தி போட்டு போ என்று சொல்லியாச்சு. அட பூனை வாத்தியே என்று பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன். இந்த ஆசிரியருக்கு பெயர் சுப்பிரமணியம். ஆனால் பூனை வாத்தி என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு நீல நிறக்கண்கள். ஆசைக்கு காற்சங்கிலி போடக்கூடாது. ஆசைக்கு பெரிய தோடு போடக்கூடாது. ஆசைக்கு தலைமயிரை அழகாக வெட்டக்கூடாது. கண்டிப்போ கண்டிப்பு. அவரைக்கண்டால் ஆண்களை விட பெண்களுக்கு தான் நடுக்கம். தலைக்கு ரீபனை தவிர வேறு ஏதும் போட்டால் அது குப்பை வாளிக்குள் தான்.

இன்னொரு மேடம்.

பாடசாலைக்கு அருகில் தான் வீடு. கணக்கு பாடம் படிப்பித்தவர். எமக்கு கணக்கு செய்ய தந்து விட்டு கத்தரிக்காய் கறியை அடுப்பில் வைத்து விட்டு ஓடி வந்தாகக் கூறிவிட்டு மீண்டும் வீடு நோக்கி ஓடுவார்.அவரின் பாடம் என்றால் நமக்கு சந்தோசமோ சந்தோசம் தான். கணக்கை தந்து விட்டு 5 நிமிடத்தில் பதிலை தானே 'பிளக்போர்ட்டில்' எழுதிவிடுவார். ஏன் வீட்டுகணக்கு செய்யலை என்று கேட்டால், வீட்டில் கொஞ்ச வேலை கூட என்று சொன்னால் சரி. உடனே கொஞ்சம் யோசித்தபடியே 'ஓக்கேய்' அடுத்த முறை செய்து கொண்டு வா என்று கூறிவிட்டு போய்விடுவார். அவரின் இளகிய மனதை பார்த்து மற்றவர்கள் 'லூசு ரீச்சர்' என்று பட்டம் கட்டியதை கேட்டு நாமும் சிரித்ததை நினைக்கும்போது இப்போது நெஞ்சு கனக்கின்றது.

நாம் படிக்கும் காலத்தில் ரெயினிங் ரீச்சர்ஸ் என்று வருவினம். 3 அல்லது 4 கிழமைகள் வந்து படிப்பிப்பார்கள். அவர்களை மார்க் பண்ண அவர்களின் மேடம் வருவார். இவர்களுக்கு நல்ல புத்தி. அப்படி வரும்நாட்களில் முன்னால் இருக்கும் படிக்கும் மாணவர்களை எல்லாம் எல்லா மேசைகளிலும் கலந்து விடுவார். அப்போ கேள்விகளை பின்னால் இருக்கும் படிக்கும் மாணவர்களை பார்த்து கேட்பார். அவர்களும் அழகாக பதில் சொல்லுவார்கள். உடனே இந்த ரீச்சரை மேற்பார்வை செய்ய வந்தவர் இந்த ரீச்சர் படிப்பித்த விதத்தில் தான் அழகாக புரிந்து கொண்டு பிள்ளை பதில் சொல்லுது என்று நினைத்து நல்ல மார்க் அள்ளிப்போட்டு போடுவா. ஆனால் அவா படிப்பித்த படத்தை முதலே ரீயுசனில் படித்த நினைகளில் தான் பதில் சொன்னோம் என்பது அவர்களுக்கு புரிந்திருக்குமா?

இப்படியே பல பல ஆசிரியார்களுடன் பல பல அனுபவங்கள்.. எங்கே உங்களின் அனுபவங்களையும் அள்ளிக் கொட்டுங்கள் பார்ப்போம்.

அனுபவங்கள் தொடரும்....... :arrow:

Link to comment
Share on other sites

அட ராமா சே ரமா ஒண்டு விழங்கிது நீங்கள் பாடசாலை போயிருக்கிறிங்கள் எண்டது அது இருக்கட்டும் ஊரிலை வாத்திமார் சிலர் இப்பிடித்தான் றோட்டிலை வீட்டிலை நடக்கிற விடயங்களையும் கொண்டு வந்து பள்ளிகூடத்திலை வைச்சு பழி தீக்கிறவை தங்கடை வீட்டிலை ஏதாவது தனிப்பட்ட பிரச்சனையெண்டாலும் அது படிக்கிற பிள்ளையளின்ரை முதுகிலைதான் தீர்க்கிறவை அது சரி ரமா நீங்கள் அடிவாங்கினது முட்டு காலிலை நிண்டது ஒண்டும் எழுதேல்லை எழுதுங்கோ படிக்க மிக மிக ஆவலாய் இருக்கிறம்

Link to comment
Share on other sites

ஆகா ரமா உங்கள் அனுபவங்கள் நல்லா இருக்கு. ம்ம் எனக்கும் உங்கள் மியாவ் மியாவ் வாத்தி மாதிரி ஒரு வாத்தி இருந்தவர். அவரை ரோட்டில கண்டால் சைக்கிளால் இறங்கி குட் மோர்னிங்/ஆவ்டனூன்/ ஈவினிங் சொல்லிட்டுப் போகணும். அப்படி சொல்லாட்டி துலஞ்சம். :cry: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நீங்க வேற ஊரில ஒரு பள்ளிக்கூடம். அதுக்கு பக்கத்தில எங்கள் நண்பர் ஒருவரின் வீடு நண்பரின் வீட்டு வேலியோரம் பெரிய மரம் அந்த நிழல் நண்பர் வீட்டு பக்கத்துக்கும் பள்ளி இருந்த காணிக்கும் படும். அந்த நிழழலில் ஆசிரியர்கள், வந்து இருப்பினம். அட இருப்பினமென்றால் சும்மா இல்ல. ஊர் துலவாரம். நம்மட கிணத்தடி, குளத்தடி கேசுகள் மாதிரி இது பள்ளிக்கூடத்து கேஸ். என்ன "குமுதா நீர் இன்டைக்கு புதுச்சாரி கட்டியிருக்கிறீர் " இது ஒரு ரீச்சர். இல்ல சாராதா நேற்று அவருக்கு புறமோசன் கிடைச்சது ஓம், அவரை ஏ.யி.ஏ ஆக்கீட்டினம் அதான் அவர் புதுசா எடுத்து தந்தவர். ம்ம் நீங்க குடுத்து வைச்சனிங்கள் குமுதா, என்ர மனுசன் இப்பவும் உந்த ஓட்டைச் சைக்கிள்ள தான், (பெருமூச்சு) இடைக்கிடை வெத்திலை போடுற பழக்கமும், சிலருக்கு. பாவம் பெடியள். இப்பிடி வீட்டு நாட்டு, அதை விடுங்க, கொஞ்சம் நல்லா கதைக்கிற பிள்ளையலோடை அரட்டை. இப்பிடி எங்கட ரீச்சர்ஸ் கனடிய ரீச்சர்ஸ்ச வென்றவை.

Link to comment
Share on other sites

அட ராமா சே ரமா ஒண்டு விழங்கிது நீங்கள் பாடசாலை போயிருக்கிறிங்கள் எண்டது அது இருக்கட்டும் ஊரிலை வாத்திமார் சிலர் இப்பிடித்தான் றோட்டிலை வீட்டிலை நடக்கிற விடயங்களையும் கொண்டு வந்து பள்ளிகூடத்திலை வைச்சு பழி தீக்கிறவை தங்கடை வீட்டிலை ஏதாவது தனிப்பட்ட பிரச்சனையெண்டாலும் அது படிக்கிற பிள்ளையளின்ரை முதுகிலைதான் தீர்க்கிறவை அது சரி ரமா நீங்கள் அடிவாங்கினது முட்டு காலிலை நிண்டது ஒண்டும் எழுதேல்லை எழுதுங்கோ படிக்க மிக மிக ஆவலாய் இருக்கிறம்

சாத்திரி அடி வாங்கியிருக்கின்றேன். ஆனால் ஒரு நாளும் முட்டுக்காலில் நின்றதில்லை. அந்த அனுபவம் உங்களுக்கு இருக்கு என்பது நல்லாய் தெரியுது. அதைப்பற்றி நீங்கள் சொல்லுங்களேன்.

.

Link to comment
Share on other sites

ஆகா ரமா உங்கள் அனுபவங்கள் நல்லா இருக்கு. ம்ம் எனக்கும் உங்கள் மியாவ் மியாவ் வாத்தி மாதிரி ஒரு வாத்தி இருந்தவர். அவரை ரோட்டில கண்டால் சைக்கிளால் இறங்கி குட் மோர்னிங்/ஆவ்டனூன்/ ஈவினிங் சொல்லிட்டுப் போகணும். அப்படி சொல்லாட்டி துலஞ்சம். :cry: :evil:

ஆகா ஆசிரியார்கள் என்றாவுடன் தப்பாய் தான் எழுதுவிங்களா? கொஞ்சம் நல்லதாக அதாவது உங்களின் முன்னேற்றத்துக்கு உதவிய ஆசிரியார்களை பற்றியும் கொஞ்சம் எழுதாலமே :!:

Link to comment
Share on other sites

அட நீங்க வேற ஊரில ஒரு பள்ளிக்கூடம். அதுக்கு பக்கத்தில எங்கள் நண்பர் ஒருவரின் வீடு நண்பரின் வீட்டு வேலியோரம் பெரிய மரம் அந்த நிழல் நண்பர் வீட்டு பக்கத்துக்கும் பள்ளி இருந்த காணிக்கும் படும். அந்த நிழழலில் ஆசிரியர்கள், வந்து இருப்பினம். அட இருப்பினமென்றால் சும்மா இல்ல. ஊர் துலவாரம். நம்மட கிணத்தடி, குளத்தடி கேசுகள் மாதிரி இது பள்ளிக்கூடத்து கேஸ். என்ன "குமுதா நீர் இன்டைக்கு புதுச்சாரி கட்டியிருக்கிறீர் " இது ஒரு ரீச்சர். இல்ல சாராதா நேற்று அவருக்கு புறமோசன் கிடைச்சது ஓம், அவரை ஏ.யி.ஏ ஆக்கீட்டினம் அதான் அவர் புதுசா எடுத்து தந்தவர். ம்ம் நீங்க குடுத்து வைச்சனிங்கள் குமுதா, என்ர மனுசன் இப்பவும் உந்த ஓட்டைச் சைக்கிள்ள தான், (பெருமூச்சு) இடைக்கிடை வெத்திலை போடுற பழக்கமும், சிலருக்கு. பாவம் பெடியள். இப்பிடி வீட்டு நாட்டு, அதை விடுங்க, கொஞ்சம் நல்லா கதைக்கிற பிள்ளையலோடை அரட்டை. இப்பிடி எங்கட ரீச்சர்ஸ் கனடிய ரீச்சர்ஸ்ச வென்றவை.

ஓஒ இந்த பறவைகளும் பள்ளிக்கூடம் போயிருக்குதா? ஆதனால் தான் இந்த பறவைக்கு கொஞ்சம் லொள்ளு அதிகம் போல. ரீச்சர்ஸ் பாவம் தானே. உங்களுடை கத்தி களைத்து இருப்பினம். அது தான் கொஞ்சம் அரட்டை அடித்திருப்பினம். இதை எல்லாம் கணக்கில் வைப்பதா? :twisted:

Link to comment
Share on other sites

ஆகா ஆசிரியார்கள் என்றாவுடன் தப்பாய் தான் எழுதுவிங்களா? கொஞ்சம் நல்லதாக அதாவது உங்களின் முன்னேற்றத்துக்கு உதவிய ஆசிரியார்களை பற்றியும் கொஞ்சம் எழுதாலமே :!:

சீ அப்படி இல்லை. ரமா எனக்கு நிறைய விருப்பமான ஆசிரியர்களும் இருக்கிறார்கள். ம்ம் எனக்கு தமிழ் படிப்பித்த ஒரு ரீச்சர் அவ என்றால் எனக்கு நல்ல விருப்பம். அவ படிப்பிக்கும் போது ஒருத்தரும் குழப்ப மாட்டினம் எல்லாரும் அமைதியா இருந்து கேட்டுக் கொண்டு இருப்பினம் ஏன் என்றால் நல்ல அழகா ஆசையா இருக்கும் கேட்டுக்கொண்டிருக்க. அந்த ரீச்சருக்கு நான் என்றால் பிடிக்கும். என்னை அவவின் வீட்டை எல்லாம் கூட்டிட்டு போறவா. எனக்கும் அவட வீட்டை போக விருப்பம் ஏன் எண்டால் அவடை வீட்டை ஒரு ரூம்ல நிறைய புத்தகம் இருக்கு, அதுக்கை கொண்டே என்னை விட்டு விடுவா. அப்புறம் எனக்கு நேரம் போறதே தெரியாது. எனக்கு வீட்டை கொண்டேயும் வாசிக்கத் தருவா. பட் கவனம் கவனம் எண்டு 10 தரம் சொல்லுவா. அதால நான் பெருசா வீட்டை எடுத்துக் கொண்டு போறது இல்லை. அங்கை இருந்து வாசிச்சு விட்டு போறது,... இன்னும் பல பேர் இருக்கினம். நான் ஆறுதலா சொல்லுறன் அவையை பற்றி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடனே இந்த ரீச்சரை மேற்பார்வை செய்ய வந்தவர் இந்த ரீச்சர் படிப்பித்த விதத்தில் தான் அழகாக புரிந்து கொண்டு பிள்ளை பதில் சொல்லுது என்று நினைத்து நல்ல மார்க் அள்ளிப்போட்டு போடுவா. ஆனால் அவா படிப்பித்த படத்தை முதலே ரீயுசனில் படித்த நினைகளில் தான் பதில் சொன்னோம் என்பது அவர்களுக்கு புரிந்திருக்குமா?

இப்படி சொல்லுறதின் மூலம் ரெயினிங் டீச்சர்ஸை கொஞ்சம் கிண்டல் பண்ணுற மாதிரி இருக்கு எனக்கு. அது நல்லா இல்லை பாருங்கோ. ரெயினிங் டீச்சர்ஸ் வார நேரங்கள்ல தான் வகுப்பு கொஞ்சம் சந்தோசமா கடுப்பில்லாமல் போறது என்கிறது எண்ட அபிப்பிராயாம். அதனால தான் என்னவோ நீங்க அப்படி சொன்னது எனக்கு பிடிக்கல.

உங்கள் அனுபவங்கள் நல்லாத்தான் இருக்கு. எங்க பாடசாலையிலும் ஒரு வாத்தி திருநீறு போட்டுக்கொண்டு வரணும் என்று கட்டுப்பாடு. இல்லை என்றால் அடிதான் விழும். அவருக்கு பிடிச்சிருந்தால் அவர் மட்டும் செய்யலாம் தானே. ஏன் மற்றவங்க கழுத்தை அறுப்பான். எங்களுக்கு அவர் பாடம் இல்லை. இருந்தாலும் 2..3 தரம் பிடிச்சு கேட்டார் எங்கே திருநீறு என்று. நாம கர்த்தருக்கு சொந்தக்காரங்க தானே. அதை சொன்னால் உடனே பேசாமல் போய் விடுவார். திரும்பவும் மறந்து போய் வந்து கேட்பார். நானும் குஜால இதை சொல்லிடுவேன். இதால சில நேரம் என்மேல அவருக்கு கடுப்போ என்னவோ.

அதோட எப்ப பாரு தடியோட அலைவார். இனிக்கு 3..4 பெடியளை பிடிச்சு அடிக்கமா வீட்டை போக கூடாது என்ற எண்ணத்தில. நிறையப்பேர் வாங்கி இருக்காங்க. பட் நான் வாங்கல.

ஆனால் கடைசி வரை தப்ப முடியல. முந்தி இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில ஒரு விளம்பரம். " அன்ன நடை, சின்ன இடை, கையில் என்ன குடை, சிங்கம் மார்க் குடை. என்று. ஒரு ஆளை கிண்டல் பண்ணி இந்தப்பாட்டை பாடினன். அந்த ஆள் போய் இந்த வாத்திட்ட சொல்ல. ஆள் வந்து எனக்கு 2 போடு போட்டு விட்டாரு. நான் நினைக்கிறன் திருநீறு கடுப்பையும் சேர்த்து தான் போட்டிருப்பார் என்று :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஒ இந்த பறவைகளும் பள்ளிக்கூடம் போயிருக்குதா? ஆதனால் தான் இந்த பறவைக்கு கொஞ்சம் லொள்ளு அதிகம் போல. ரீச்சர்ஸ் பாவம் தானே. உங்களுடை கத்தி களைத்து இருப்பினம். அது தான் கொஞ்சம் அரட்டை அடித்திருப்பினம். இதை எல்லாம் கணக்கில் வைப்பதா? :twisted:

கத்தி கத்தி களைச்சா போய் ஓய்வெடுக்கவேண்டியதுதானே பிறகெதுக்கு அங்கயும் போய் நிண்டு அரட்டையடிச்சு களைச்சுப் போகணும். அடுத்த பாடத்தில போய் ஓய்வெடுப்பினமோ என்னவோ :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா ஆசிரியார்கள் என்றாவுடன் தப்பாய் தான் எழுதுவிங்களா? கொஞ்சம் நல்லதாக அதாவது உங்களின் முன்னேற்றத்துக்கு உதவிய ஆசிரியார்களை பற்றியும் கொஞ்சம் எழுதாலமே :!:

சரி நீங்க இப்பிடி கேட்டதால நமக்கு படிப்பித்த ஒரு வாத்தியார் பற்றி சொல்லுறம். இவர் ஒரு கணக்கு வாத்தியார். நமக்கு ரொம்ப பிடிச்சவர். கணக்கில ஏதாவது சந்தேகம் வந்திது எண்டா இவர எந்த இடத்திலயும் போய் சந்தேகம் கேட்கலாம். கணக்கில அவருக்கு அப்பிடி ஒரு விருப்பம். நமக்கும் பிடிப்பு இருந்ததால இந்த வாத்தியாரயும் நமக்கு பிடிச்சிருந்தது. எங்களின் பாடத்திட்டத்தில இல்லாத மேல்வகுப்பு கணக்கெல்லாம் சொல்லித்தருவார். ம் அவர் அடிக்கக்கூட மாட்டார் என்பது இதில நமக்கு ஓர் இரட்டிப்பு சந்தோசம். அதைவிட அவர் தான் நம்ம வகுப்புக்கும் ஆசிரியர் ( பாட ஆசிரியர் வேற வகுப்பாசிரியர் வேற தானே). நாம் எந்தக் குழப்படி செய்து பக்கத்து வகுப்பில இருந்து முறைப்பாடு செய்தாலும் இவர் ஒண்டும் சொல்ல மாட்டார். அவர்கள் முறைப்பாடு செய்யும் போது கேட்டுவிட்டு எங்களிற்கு வந்த சொல்லி சிரிப்பார். இப்பிடி அவரப்பற்றி நிறையச் சொல்லலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓஒ இந்த பறவைகளும் பள்ளிக்கூடம் போயிருக்குதா? ஆதனால் தான் இந்த பறவைக்கு கொஞ்சம் லொள்ளு அதிகம் போல. ரீச்சர்ஸ் பாவம் தானே. உங்களுடை கத்தி களைத்து இருப்பினம். அது தான் கொஞ்சம் அரட்டை அடித்திருப்பினம். இதை எல்லாம் கணக்கில் வைப்பதா?

பறவைகள் பள்ளிக்கூடம் சென்றதாக கூறவில்லை. பறவைகள் தமது நண்பர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மரத்தின் கீழ் ( பறவைகளின் நண்பர் கட்டாயம் பறவையாக தானே இருப்பார்) நாங்கள் மரத்தின் மற்ற பக்கத்து கிளைகளில் இருந்து இவற்றை அவதானித்தோம். பள்ளிக்கெல்லாம் பறவைகள் போயிருந்தால் இங்கு ஏன் குப்பை கொட்டுறம் ஒரு சிஎன்என், ஒரு அல்யசீரா, ஒரு பிபிசி என்று போய் குப்ப கொட்ட மாட்டமா :twisted:

Link to comment
Share on other sites

ஓஒ இந்த பறவைகளும் பள்ளிக்கூடம் போயிருக்குதா? ஆதனால் தான் இந்த பறவைக்கு கொஞ்சம் லொள்ளு அதிகம் போல. ரீச்சர்ஸ் பாவம் தானே. உங்களுடை கத்தி களைத்து இருப்பினம். அது தான் கொஞ்சம் அரட்டை அடித்திருப்பினம். இதை எல்லாம் கணக்கில் வைப்பதா?

பறவைகள் பள்ளிக்கூடம் சென்றதாக கூறவில்லை. பறவைகள் தமது நண்பர்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மரத்தின்

அட குப்பை கொட்ட இவ்ளோ இடம் இருக்கா என்ன..சொல்லவே இல்லை :roll: :):lol:

Link to comment
Share on other sites

என்ன சுட்டி சிரிப்பு?

Link to comment
Share on other sites

என்ன சுட்டி சிரிப்பு?

எல்லோரது பாடசாலை அனுபவங்களையும் வாசிக்கிறப்போ சிரிப்பு வந்திச்சு. அதுதான் சிரித்தேன் :P

Link to comment
Share on other sites

எல்லோரது பாடசாலை அனுபவங்களையும் வாசிக்கிறப்போ சிரிப்பு வந்திச்சு. அதுதான் சிரித்தேன் :P

ஏன் சுட்டி இப்படியான அனுபவங்கள் ஏதும் உங்களுக்கு ஏற்படவில்லையா?

Link to comment
Share on other sites

இப்படி சொல்லுறதின் மூலம் ரெயினிங் டீச்சர்ஸை கொஞ்சம் கிண்டல் பண்ணுற மாதிரி இருக்கு எனக்கு. அது நல்லா இல்லை பாருங்கோ. ரெயினிங் டீச்சர்ஸ் வார நேரங்கள்ல தான் வகுப்பு கொஞ்சம் சந்தோசமா கடுப்பில்லாமல் போறது என்கிறது எண்ட அபிப்பிராயாம். அதனால தான் என்னவோ நீங்க அப்படி சொன்னது எனக்கு பிடிக்கல.

:roll: :roll:

கிண்டல் அடிக்கவில்லை விஷ்ணு. அப்போது அதைப்பற்றி சிந்திக்க வில்லை. இப்போது நினைத்து பார்க்கும் போது நகைச்சுவையாக இருக்கின்றது. அது தான் அப்படி எழுதினேன்.

Link to comment
Share on other sites

அட குப்பை கொட்ட இவ்ளோ இடம் இருக்கா என்ன..சொல்லவே இல்லை :roll: :lol::lol:

ஏன் சகி குப்பை கொட்ட இடம் தேடுகின்றீர்களோ? :roll:

Link to comment
Share on other sites

இன்னொரு ஆசிரியார்.

செல்லம் அன்ரி என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர். 4 வயதில் நேசரியில் அவரிடம் படிக்க போனால் 6ம் வகுப்பு போகுமட்டும் அவாவிடம் தான் ரீயுசன். அடிக்க வெளிக்கிட்டால் கை கால் எல்லாம் வீங்கிய பிறகு தான் விடுவார். அடியிலும் பார்க்க குட்டு தான் கூட. ஆனால் அவாவிடம் படிக்கும் அனைவருமே 5ம் ஆண்டில் நடக்கும் புலமைப்பரீட்சையில் சித்தி பெறமால் இருக்க மாட்டார்கள். ஆதனால் எவ்வளவு அடித்தாலும் பெற்றோர்கள் பிள்ளைகளை அங்கு தான் அனுப்பி வைப்பார்கள். நமக்கு இன்னும் கஸ்ட காலம் அவர்களின் கிணற்றடியில் நின்று பார்த்தால் நான் எனது வீட்டில் நின்று விளையாடுவது நல்லாய் தெரியுமாம். (தெரியாட்டியும் தெரிந்த மாதிரி கதை விடுவா) தற்சமயம் வீட்டு வேலைகளில் ஒரு கணக்கு செய்யவிட்டாலும் நேற்று மாமரத்துக்கு கீழை நின்று விளையாடி வேளை இதை செய்து முடித்திருக்கலமே என்று விளையாடியதற்கும் சேர்த்து குட்டு விழும். வீட்டிலும் அவாவின் பெயரை வைத்து தான் வெருட்டுவினம்.

எவ்வளவு தான் அடி வேண்டி படித்தாலும் பாடசாலையில் நல்ல புள்ளிகளை பெறுவதற்கு அவாவின் அடிகள் தான் உதவி செய்தன. அண்மையில் தாயகம் போயிருந்தபோது அவருடன் நேருக்கு நேர் நின்று கதைக்க கை கால் சிறிது பதறத்தான் செய்தது. அடிக்க மாட்டா என்று நிச்சயமாக தெரிந்தும் கைகால் பதறியது அவாவின் அடியின் வலியை நினைத்தோ இல்லாவிடின் மரியாதைக்கோ என்று இன்னும் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

ஏன் சுட்டி இப்படியான அனுபவங்கள் ஏதும் உங்களுக்கு ஏற்படவில்லையா?

இருக்கு. ஒன்று சொல்லுறேனே :P :cry: :cry: :cry:

நான் 5ம் 6ம் ஆண்டு படிக்கிறப்போ கலவன் பாடசாலை அது. அப்போ ஆங்கில ஆசிரியைக்கு ஏதாவது நாற்றம் வீசினால் வகுப்பில் இருந்து போய் விடுவா. அதற்காகவே பெடியங்கள் அவா வகுப்புக்கு வாற நேரம் பார்த்து கருவாட்டை ரீச்சர் இருக்கிற கதிரையில் வைச்சிடுவாங்க. ரீச்சர் வந்து மூக்கை பொத்திக்கொண்டு போய் விடுவா. ஆங்கிலம்ம் படிக்கிறதுக்கு அவ்வளவு களவு. அதுதான் இப்ப ஆங்கிலமே தெரியாமல் வாழ்க்கை போகுது :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

ரமாக்கா இன்றுதான் வாசிச்சன் எல்லாரும் நல்லா எழுதுறீங்க

சுட்டி சொன்னதுக்கு எதிர்மாறாகத்தான் எனது அனுபவம்

சிறுவயதில 3ம் வகுப்புக்கு பிறகு நாட்டு பிரச்சனை என்று அம்மம்மாவோட இந்தியால படிக்க அனுப்பினாங்க 4 வருடத்துக்கு பிறகு கொழும்பு திரும்பிய போது எனக்கு தமிழ் 3ம் வகுப்பில படிச்சது தான் ஞாபகம் இருந்தது

கொழும்பில ஒரு மாதிரி என்ட்ரன்ஸ் ரெஸ்ட் கணக்கு மட்டும் எழுதி பாஸ் ஆனால் வகுப்பில தமிழில எழுத தெரியாமல் பட்ட பாடு இருக்கே பெரிய கஸ்டம் :lol:

ஆனால் எனது தமிழ் ஆசிரியை மிகவும் நல்லமாதிரி வகுப்பு நேரத்தின் பின்பு கூட எனக்கு மட்டும் தனியாக வகுப்பு எடுத்து தமிழ் சொல்லி தந்தவா அன்று அவர் அப்படி சொல்லித் தந்தது தான் இன்று நான் தமிழ் எழுத உதவியாக உள்ளது

Link to comment
Share on other sites

ஆகா நித்திலா தழிழ் ஆசிரியார்கள் எப்பவும் நல்ல மாதிரி தான். எதிரிகள் ஆங்கில ஆசிரியார்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா நித்திலா தழிழ் ஆசிரியார்கள் எப்பவும் நல்ல மாதிரி தான். எதிரிகள் ஆங்கில ஆசிரியார்கள் தான்.

_________________

நிழல்களின் ஒப்பந்தங்களை விட

நிஐங்களின் போராட்டமே சிறந்தது

நன்றி ரமா. :lol::lol::lol:

Link to comment
Share on other sites

நான் 1ம்,2ம் வகுப்பில் படித்தபோது படிப்பித்த ஆசிரியை அடிபோட்டுப் படிப்பித்தாலும், அவர் பிறகு 11 வருடங்களின் பின்பு ஒய்வு பெறும் போது, அப்பொழுது மாணவ தலைவனாக நான் இருந்தமையினால் அவ்வாசிரியருக்கு நடைபெற்ற பிரியாவிடையின் போது அவரது சேவை பற்றிப் பேச எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவ் ஆசிரியர் நன்றியுடன் என்னைப்பார்த்தது இன்னும் யாபகத்தில் இருக்கிறது

எனது அம்மப்பா(அம்மாவின் அப்பா) 40 வருடங்களாக தலமை ஆசிரியராக இருந்ததினால் அவரிடம் படித்த மாணவி எனக்கு ஆசிரியராக 3ம் வகுப்பில் படிப்பித்தார். எனது அம்மப்பா அன்பாக படிப்பித்தவர், நல்ல ஆசிரியர் என்ற பெயர் எடுத்தமையினால், அவரது பேரனான எனக்கு இந்த ஆசிரியர் நல்ல மரியாதை. போண்டா,வடை எல்லாம் சாப்பிடத்தருவார். குளப்படி விட்டால் அடிபோடத்தவற மாட்டார்.

3,4,5ல் ஆங்கிலப் படிப்பித்த ஆசிரியை எப்பொழுதும் கேள்விகேட்டு காதை முறுக்குவார். ஆதனால் எல்லோருக்கும் பயம். அண்மையில் சிட்னியில் அவரைப்பார்த்தபோது என்னைப்பார்த்து தன்னிடம் கல்விகற்ற மாணவர்கள் கண்டால் மரியாதை செய்யமாட்டார்கள். நான் கதைத்தது மிகவும் சந்தோசமாக இருந்தது என்று சொன்னார்.

6,7ல் கணிதம் படிப்பித்த ஆசிரியர் போது கண்டாலும் படிப்பைப்பற்றிக் கேப்பார். பாவம் கெலிக்கொப்டரில் இருந்து இராணுத்தினாரால் சுடப்பட்ட சன்னத்தினால் இறந்துவிட்டார். நான் பிற்காலத்தில் நல்ல நிலைக்கு இருப்பதற்கு இவ் ஆசிரியரும் ஒரு காரணம்.

டியூசனில் படிக்கும் போது 10ம் வகுப்பில் விஞ்சான ஆசிரியர் வீட்டுக்குப் போய் காலமை 6மணிக்குப் போய் அவரை ஒழுப்பவேண்டும். பிறகு துவிச்சக்கரவண்டியில் 10 நிமிடங்களில் டியூசனுக்குப் போய்,திரும்பிப்பார்த்தால் அவர் அங்கு நிற்பார். குளிக்காமல், உடுப்பை போட்டு வகுப்புக்கு வந்துவிடுவார். நல்ல ஆசிரியர். கிட்டச் சென்றால் வேர்வை நாற்றம் அடிக்கும்.

லண்டனில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது படிப்பித்த பங்காளதேசத்து விரிவுரையாளரயும் மறக்க முடியாது. பல்வேறு விதத்தில் உதவி செய்தவர்

7ம் வகுப்பு படிக்கும் போது ஆங்கில பெண் ஆசிரியர் ஒருவர் கவனிக்காத பொழுது எப்பொழுதும் யார் கதைத்தாலும் முதல் வரிசையில் இருக்கும் ஆண்களுக்குத்தான் அடிப்பார். முதல்வரிசையில் இருப்பதினால் எனக்கும் அடி விழும். இதனால் அவரது வகுப்பின் போது 2வது வரிசையில் போய் இருப்பேன். 2ம் வரிசையில் இருந்து ஆசிரியர் பார்க்காத போது நாங்கள் கதைப்போம். முதல் வரிசையில் உள்ளவர்களுக்கு அடிவிழும்.

ஆங்கிலப்பாடப்புத்தகம் அழுக்கு ஏற்படாமல் புதிதாக இருந்தால் சிலருக்கு புத்தகத்தினைப் படிப்பதில்லை என்று அடிவிழும். அடி வாங்கிய மாணவன் ஒருவர் அடுத்தனால் இம்முறை அடிவாங்கமல் இருக்க புத்தகத்தினை வேணுமென்று அழுக்காக்கிக் கொன்டு வந்தார். புத்தகத்தினை கூடுதலாக அழுக்காக்கினதற்கு அடுத்தனால் அந்த மாணவருக்கு அடி விழுந்தது.

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=180026#180026

இலங்கைப்பிரச்சனை காரணமாக நான் இந்தியாவுக்குச் சென்று தமிழகத்தில் உள்ள பாடசாலையில் ராஜீவ் காந்தியின் இறப்பின் பிறகு 1 மாதத்தின் பிறகு சேர்ந்தேன். இரசாயனவியல் ஆசிரியர் வகுப்பில் முன்பு எங்கே படித்ததாகக் கேட்க நான் இலங்கையில் என்றேன். பிறகு செய்முறை வகுப்பறையில் என்னிடம் வந்து அனியாயமாய் நீங்கள் ராஜீவைக் கொண்டுவிட்டீர்களே. இதனால் இந்தியா வல்லராசாக, முன்னுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இந்தியா ஒரு ஜனனாயக நாடு. இல்லாவிட்டால் ராஜிவின் மறைவுக்கு உங்கள் நாட்டில் இந்தியா குண்டு போட்டிருக்கும். ஈராக் மாதிரி இருந்தால் குவைத்தின் மீது படை எடுத்தது போல இலங்கைக்கு படையுடன் சென்றிருக்கும் என்று கூறி பிறகு மாணவர்களுக்கு செய்முறை ஒன்றினை விளங்கப்படுத்தினார். அப்பொழுது வகுப்பில் யாரோ ஒரு மாணவர் கதைக்க, நான் கதைத்ததாக நினைத்து, எனக்கு கையினாலும் காலினாலும் அடித்து, உதைத்தார். உண்மையில் நான் கதைக்கவில்லை என்று அவருக்குத் தெரிந்திருந்தும் நான் தான் கொலை செய்தது போல அடித்தார். அடுத்தனாள் தான் செய்தது பிழை என்று நினைத்து விட்டாரோ என்னிடம் வந்து அன்பாகப் பழகத்தொடங்கினார்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=197408#197408

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.