Jump to content

நோர்வேயின் கடமை

Recommended Posts

ஒஸ்லோப் பேச்சுககளும் ஒருங்கிணைப்பாளர் பணியும்

--------------------------------------------------------------------------------------------------

- இளந்திரையன்

இலங்கைத் தீவில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் இராஜதந்திர நகர்வின் திசையைப் பெரிதும் தீர்மானிக்கும் சக்தியாக இன்று பல நெருக்கடிகளிற்கும் இழப்பிற்கும் தியாகங்களுக்கும் பின்னர் தமிழர் தலமை பெற்றிருக்கின்றது.

போரியல் சம பலம் என்ற இராணுவ வலுவின் மீது அடையப் பெற்ற இனப்பிரச்சினக்கான தீர்வை நோக்கிய பேச்சுகளுக்கு வழி சமைக்கும் சமாதான ஒப்பந்தத்துக்கு அமைய பேச்சுகளில் தமிழர் தரப்பு முழுமையான ஈடு பாட்டைக் காட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில் தமிழர் தரப்பின் பலத்தினைக் குறைக்கும் முயற்சியில் சில வேண்டத்தகாத சக்திகள் ஈடுபாடு காட்டுகின்றன.

இலங்கைத் தீவின் சமாதான சகவாழ்வில் அக்கறை கொண்டவர்கள் என்ற போர்வையில் இன்று அமெரிக்காவின் தலைமையில் அணிதிரண்டிருக்கும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒரு புறமும் பிராந்திய வல்லரசுக் கனவுகளுடன் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒரு புறமும் காத்திரமான தாக்கத்தைச் செலுத்துகின்றன.

நடுவே நோர்வே தலைமையிலான ஸ்காண்டி நேவிய நாடுகள் ஒருங்கிணைப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் என்ற கோதாவில் களம் இறங்கியுள்ளனர்.

உலக வர்த்தக மயமாக்கல் என்ற நவீன காலணியாதிக்க உளவியலினூடு ஒரு இனத்தின் தன்னாதிக்க ஆட்சியதிகாரம் என்ற சுதந்திர வேட்கையின் மீது இத்தனை சக்திகளும் பலமுனைத் தாக்கத்தைச் செலுத்துகின்றன. இத்தகைய நவீன காலனித்துவச் சிந்தனைகளால் ஒரு சுதந்திர சிறப்பியல்பான கலை கலாச்சாரத்தைக் கொண்ட மக்கட் கூட்டம் எத்தகைய பின்னடைவுகளை எட்ட கூடுமென்பதற்கு தமிழ்த் தேசியப் போராட்டம் சிறந்தவொரு எடுத்துக் காட்டாகும்.

நவீன உலகப் பொருளாதார முரண்பாடுகளுக்கிடையே தமிழ்த் தேசியமும் தன் அபிலாஷைகளை வென்றெடுக்க தன்னாலான சாதுர்யமிக்க இராஜ தந்திர நகர்வுகளை முன்னெடுத்து அரசியல் இராணுவப் பலங்களில் தன்னை நிலைப்படுத்தியுள்ளது.

போரியல் சமபலத்தில் கட்டமைந்த சமாதான ஒப்பந்தக் காலத்தில் தம் நலன்களை மட்டுமே முன்னிறுத்தும் சில சக்திகள் தமிழ்த் தேசியத்தைப் பலவீனப் படுத்தும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.அவற்றின் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாக வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தமிழர் தேசியத்தை இன்று தலைமை ஏற்று வழி நடாத்தும் விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ளன. இத் தடை முயற்சிகள் மூலம் இவர்கள் உருவாக்க முற்படும் தீர்வு எவ்வகையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு சமாதானம் நோக்கிய நகர்விற்கு ஏற்படுத்தப் படும் குந்தகங்களைத் தடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் அவ்வாறான தடைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளை இனங் கண்டு அவற்றைப் பகிரங்கப் படுத்த வேண்டியதற்குமான தார்மீகப் பொறுப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு இருக்கவே செய்கின்றது. தனிப்பட்ட முறையில் நோர்வேயின் நேர்மையிலும் இதய சுத்தியிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை என்றபோதும் அதன் பின்னால் இருந்து அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய ஒரு சக்தியின் சதிவலையில் நோர்வே தன்னை இழந்து விட்டதா என்ற சந்தேகம் மெள்ள மெள்ள முளை விடுகின்றது.

பல சகாப்தங்களாகக் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் பலஸ்தீனப் பிரச்சனையில் நோர்வேயின் சமாதான முன்னெடுப்புகள் பல காத்திரமான இணக்கப்பாடுகளை பலஸ்தீனமும் இஸ்ரவேலும் அடைவதற்குப் பெரிதும் துணை செய்ததெனினும் பின்னர் அமெரிக்கா நோர்வேயின் இடத்தை எடுத்துக் கொள்ள முற்பட்டபோது நோர்வே தன் பணிகளிலிருந்து எவ்வித எதிர்ப்பும் காட்டாது விலகிக்கொண்டது. இன்று சுவாலை விட்டு எரிந்து கொண்டிருக்கும் பலஸ்தீனப் பிரச்சினையின் உக்கிரத்துக்கு நோர்வே இச்சமாதான நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொண்டதும் ஒரு காரணமென்று சர்வதேச அரசியல் விமசகர்கள் கூறுகின்றனர்.

இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாகவும் அப்படியான ஒரு நெருக்கடி நிலைக்கு நோர்வே முகங்கொடுக்கின்றதா என்ற சந்தேகத்தை நோர்வேயின் சமீபத்திய நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிராக அண்மையில் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கொண்டு வந்த தடைக்கு எதிராக தனது தார்மீக எதிர்ப்பைக் கூட நோர்வே மேற்கொள்ளவில்லை என்பதிலிருந்து நோர்வேயின் நிலை பற்றி கேள்வி எழுகின்றது.

சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் இரு தரப்பும் திறந்த சுதந்திரமான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நடாத்துவது காத்திரமான முடிவுகளை எடுப்பதற்கு உதவி செய்யும். இத்தகைய சுதந்திரமானதும் சமாந்திரமானதுமான அக புற சூழ் நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பது ஒருங்கிணைப்பாளர்களின் கடமையாகும்.

விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையினை இந்நாடுகள் கொண்டு வருகையில் வாளாவிருந்த நோர்வேயும் அதன் நட்பு நாடுகளும் தம் கடமையில் இருந்து வழிவியதுடன் சமாதானத் தீர்வுக்கான நகர்வும் மேற்கொண்டு செல்ல முடியாத இக்கட்டினை அடைந்து விட்டதற்குமான தார்மீகப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளுவதுடன் மட்டும் நின்று விடாது சமாதானத்துக்கான செயற்பாடுகளில் இது வரை விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்வதுடன் தொடர்ந்தும் இதய சுத்தியுடன் மேற்கொள்ளும் உண்மையான ஈடுபாட்டையும் நிரூபிக்க வேண்டிய கடப்பாட்டுடனும் இருக்கின்றன.

தடங்கலில்லாத சமாதானப் பேச்சுகளும் அது தொடர்பான கண்காணிப்புப் பணியும் இடையூறில்லாது முன்னெடுக்கப் படுவதை உறுதி செய்ய விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப் பட்ட தடைகளை நிபந்தனையற்ற விதத்தில் வாபஸ் வாங்கிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை நிர்ப்பந்திக்க வேண்டும். அதே நேரம் தமிழர் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தையும் அது தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தையும் சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவந்து அவர்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்ள முயல்வதன் மூலமுமே இலங்கைத் தீவில் இனங்களுக்கிடையிலான இனப் பிரச்சனையில் ஒரு நியாயமான தீர்வினை எட்ட முடியும்.

இவ்வாறான காத்திரமான பணிகளை நோர்வேயும் அதன் நட்பு நாடுகளும் மேற்கொள்ளுவதன் மூலமே ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிப்பாளர்கள் என்ற இடத்தினைத் தக்க வைத்துக் கொள்ள இயலும்.

அவ்வாறில்லாது மேற்கொள்ளப் படும் எந்த நடவடிக்கைகளும் எதுவித நன்மைகளையும் தர மாட்டாது என்பதையும் இலங்கையில் மீண்டும் இரத்தக் களரியை நிரந்தரமாக்கி விடும் என்பதையும் அனைத்துத் தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி : ஒரு பேப்பர்

Link to comment
Share on other sites

ஒஸ்லோப் பேச்சுககளும் ஒருங்கிணைப்பாளர் பணியும்

--------------------------------------------------------------------------------------------------

- இளந்திரையன்

இலங்கைத் தீவில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சனையின் அரசியல் இராஜதந்திர நகர்வின் திசையைப் பெரிதும் தீர்மானிக்கும் சக்தியாக இன்று பல நெருக்கடிகளிற்கும் இழப்பிற்கும் தியாகங்களுக்கும் பின்னர் தமிழர் தலமை பெற்றிருக்கின்றது.

போரியல் சம பலம் என்ற இராணுவ வலுவின் மீது அடையப் பெற்ற இனப்பிரச்சினக்கான தீர்வை நோக்கிய பேச்சுகளுக்கு வழி சமைக்கும் சமாதான ஒப்பந்தத்துக்கு அமைய பேச்சுகளில் தமிழர் தரப்பு முழுமையான ஈடு பாட்டைக் காட்டிக் கொண்டிருக்கும் அதே வேளையில் தமிழர் தரப்பின் பலத்தினைக் குறைக்கும் முயற்சியில் சில வேண்டத்தகாத சக்திகள் ஈடுபாடு காட்டுகின்றன.

இலங்கைத் தீவின் சமாதான சகவாழ்வில் அக்கறை கொண்டவர்கள் என்ற போர்வையில் இன்று அமெரிக்காவின் தலைமையில் அணிதிரண்டிருக்கும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஒரு புறமும் பிராந்திய வல்லரசுக் கனவுகளுடன் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒரு புறமும் காத்திரமான தாக்கத்தைச் செலுத்துகின்றன.

நடுவே நோர்வே தலைமையிலான ஸ்காண்டி நேவிய நாடுகள் ஒருங்கிணைப்பாளர்கள், கண்காணிப்பாளர்கள் என்ற கோதாவில் களம் இறங்கியுள்ளனர்.

உலக வர்த்தக மயமாக்கல் என்ற நவீன காலணியாதிக்க உளவியலினூடு ஒரு இனத்தின் தன்னாதிக்க ஆட்சியதிகாரம் என்ற சுதந்திர வேட்கையின் மீது இத்தனை சக்திகளும் பலமுனைத் தாக்கத்தைச் செலுத்துகின்றன. இத்தகைய நவீன காலனித்துவச் சிந்தனைகளால் ஒரு சுதந்திர சிறப்பியல்பான கலை கலாச்சாரத்தைக் கொண்ட மக்கட் கூட்டம் எத்தகைய பின்னடைவுகளை எட்ட கூடுமென்பதற்கு தமிழ்த் தேசியப் போராட்டம் சிறந்தவொரு எடுத்துக் காட்டாகும்.

நவீன உலகப் பொருளாதார முரண்பாடுகளுக்கிடையே தமிழ்த் தேசியமும் தன் அபிலாஷைகளை வென்றெடுக்க தன்னாலான சாதுர்யமிக்க இராஜ தந்திர நகர்வுகளை முன்னெடுத்து அரசியல் இராணுவப் பலங்களில் தன்னை நிலைப்படுத்தியுள்ளது.

போரியல் சமபலத்தில் கட்டமைந்த சமாதான ஒப்பந்தக் காலத்தில் தம் நலன்களை மட்டுமே முன்னிறுத்தும் சில சக்திகள் தமிழ்த் தேசியத்தைப் பலவீனப் படுத்தும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.அவற்றின் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாக வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் தமிழர் தேசியத்தை இன்று தலைமை ஏற்று வழி நடாத்தும் விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ளன. இத் தடை முயற்சிகள் மூலம் இவர்கள் உருவாக்க முற்படும் தீர்வு எவ்வகையில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு சமாதானம் நோக்கிய நகர்விற்கு ஏற்படுத்தப் படும் குந்தகங்களைத் தடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் அவ்வாறான தடைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளை இனங் கண்டு அவற்றைப் பகிரங்கப் படுத்த வேண்டியதற்குமான தார்மீகப் பொறுப்பு ஒருங்கிணைப்பாளர்களுக்கு இருக்கவே செய்கின்றது. தனிப்பட்ட முறையில் நோர்வேயின் நேர்மையிலும் இதய சுத்தியிலும் யாருக்கும் சந்தேகம் இல்லை என்றபோதும் அதன் பின்னால் இருந்து அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய ஒரு சக்தியின் சதிவலையில் நோர்வே தன்னை இழந்து விட்டதா என்ற சந்தேகம் மெள்ள மெள்ள முளை விடுகின்றது.

பல சகாப்தங்களாகக் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் பலஸ்தீனப் பிரச்சனையில் நோர்வேயின் சமாதான முன்னெடுப்புகள் பல காத்திரமான இணக்கப்பாடுகளை பலஸ்தீனமும் இஸ்ரவேலும் அடைவதற்குப் பெரிதும் துணை செய்ததெனினும் பின்னர் அமெரிக்கா நோர்வேயின் இடத்தை எடுத்துக் கொள்ள முற்பட்டபோது நோர்வே தன் பணிகளிலிருந்து எவ்வித எதிர்ப்பும் காட்டாது விலகிக்கொண்டது. இன்று சுவாலை விட்டு எரிந்து கொண்டிருக்கும் பலஸ்தீனப் பிரச்சினையின் உக்கிரத்துக்கு நோர்வே இச்சமாதான நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொண்டதும் ஒரு காரணமென்று சர்வதேச அரசியல் விமசகர்கள் கூறுகின்றனர்.

இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாகவும் அப்படியான ஒரு நெருக்கடி நிலைக்கு நோர்வே முகங்கொடுக்கின்றதா என்ற சந்தேகத்தை நோர்வேயின் சமீபத்திய நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிராக அண்மையில் கனடாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கொண்டு வந்த தடைக்கு எதிராக தனது தார்மீக எதிர்ப்பைக் கூட நோர்வே மேற்கொள்ளவில்லை என்பதிலிருந்து நோர்வேயின் நிலை பற்றி கேள்வி எழுகின்றது.

சமாதானப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும் இரு தரப்பும் திறந்த சுதந்திரமான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நடாத்துவது காத்திரமான முடிவுகளை எடுப்பதற்கு உதவி செய்யும். இத்தகைய சுதந்திரமானதும் சமாந்திரமானதுமான அக புற சூழ் நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பது ஒருங்கிணைப்பாளர்களின் கடமையாகும்.

விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையினை இந்நாடுகள் கொண்டு வருகையில் வாளாவிருந்த நோர்வேயும் அதன் நட்பு நாடுகளும் தம் கடமையில் இருந்து வழிவியதுடன் சமாதானத் தீர்வுக்கான நகர்வும் மேற்கொண்டு செல்ல முடியாத இக்கட்டினை அடைந்து விட்டதற்குமான தார்மீகப் பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக் கொள்ளுவதுடன் மட்டும் நின்று விடாது சமாதானத்துக்கான செயற்பாடுகளில் இது வரை விட்ட தவறுகளைத் திருத்திக் கொள்வதுடன் தொடர்ந்தும் இதய சுத்தியுடன் மேற்கொள்ளும் உண்மையான ஈடுபாட்டையும் நிரூபிக்க வேண்டிய கடப்பாட்டுடனும் இருக்கின்றன.

தடங்கலில்லாத சமாதானப் பேச்சுகளும் அது தொடர்பான கண்காணிப்புப் பணியும் இடையூறில்லாது முன்னெடுக்கப் படுவதை உறுதி செய்ய விடுதலைப் புலிகள் மீது மேற்கொள்ளப் பட்ட தடைகளை நிபந்தனையற்ற விதத்தில் வாபஸ் வாங்கிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நாடுகளை நிர்ப்பந்திக்க வேண்டும்

இவ்வாறான காத்திரமான பணிகளை நோர்வேயும் அதன் நட்பு நாடுகளும் மேற்கொள்ளுவதன் மூலமே ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிப்பாளர்கள் என்ற இடத்தினைத் தக்க வைத்துக் கொள்ள இயலும்.

அவ்வாறில்லாது மேற்கொள்ளப் படும் எந்த நடவடிக்கைகளும் எதுவித நன்மைகளையும் தர மாட்டாது என்பதையும் இலங்கையில் மீண்டும் இரத்தக் களரியை நிரந்தரமாக்கி விடும் என்பதையும் அனைத்துத் தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி : ஒரு பேப்பர்

Link to comment
Share on other sites

ஒஸ்லோப் பேச்சுககளும் ஒருங்கிணைப்பாளர் பணியும்

--------------------------------------------------------------------------------------------------

- இளந்திரையன்

...

......

அவ்வாறில்லாது மேற்கொள்ளப் படும் எந்த நடவடிக்கைகளும் எதுவித நன்மைகளையும் தர மாட்டாது என்பதையும் இலங்கையில் மீண்டும் இரத்தக் களரியை நிரந்தரமாக்கி விடும் என்பதையும் அனைத்துத் தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி : ஒரு பேப்பர்

எனக்கு "நிரந்தரமாக்கி விடும்" என்றதற்கான அர்த்தம் புரியவில்லை :? :roll:

Link to comment
Share on other sites

எனக்கு "நிரந்தரமாக்கி விடும்" என்றதற்கான அர்த்தம் புரியவில்லை :? :roll:

"சமாதானம் என்பது எட்டாக் கனியாகப் போய்விடும் " என்று கட்டுரையாசிரியர் எண்ணுகின்றார் போலும் பலஸ்தீனப் பிரச்சினையைப் போல....(நிரந்தரம்+ஆக்குதல்)

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.