Jump to content

திண்டுக்கல் அகதிகள் முகாமில் காவல்துறையினர் கொலைவெறித்தாக்கு


Recommended Posts

திண்டுக்கல் அகதிகள் முகாமில் காவல்துறையினர் கொலைவெறித்தாக்குதல்

தமிழ்னாட்டின் மத்திய மாவட்டமான திண்டுக்கல்லில் இருந்து 5 கிலோ மிற்றர் தொலைவில் உள்ளது தோட்டனூத்து இலங்கை(!) அகதிகள் முகாம். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஓFFஏற் என்கிற இந்திய கைக்கூலிகளின் காங்காணி நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஒருவர் ( இவரின் வேலையே ஒவ்வொருவரை பற்றியும் உளவுப்பிரிவு போலிசாரிடம் போட்டுக்குடுப்பதுதானாம்) முகாமில் தனியே இருந்த பெண்ணின் வீட்டில் நுழைந்து தகாத முறையில் நடவ முயற்சித்துள்ளார். அப்பெண்ணின் குரல் கேட்டு முகாமிலிருந்த இளைஞர்கள் அவருக்கு ' நல்ல விருந்து' குடுத்து விரட்டி அடித்துள்ளனர்.இந்நிலையில் தங்களின் இம்பார்மென்ட் ஒருவர் தாக்கபட்டது குறித்து கடும்கோபத்திலிருந்த உளவுப்பிரிவு பொலிசார், அவரிடம் வலிய ஒரு புகார் மனு பெற்று 12 இளைஞர்களை பிடித்து சென்று கொடுரமாக தாக்கியுள்ளனர். தாக்கபட்டவர்களில் இருவர் நேற்றிரவு உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் தலைமை அரசுமருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டனர். இருவரும் உயிர் நிலைகளில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது, அதில் ஒருவருக்கு சிறுனீர் பாதையில் நீடித்த ரத்தபோக்கு இன்னும் தொடர்வதாகவும் அறிய முடிகிறது. இதனை தொடர்ந்து முகாமில் நேற்றிரவு முதல் காவல்துறையினரின் நெருக்கடி அதிகமாகியுள்ளது.அருகில் உள்ள திண்டுக்கலுக்கு கூலி வேலைக்கு செல்லும் முகாம் மக்கள் அனைவரும் முகாமைவிட்டு வெளியேறக்கூடாது என்று உத்திரவிட்டு உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக முகாமுக்கு பகலில் மின்சாரத்தை ஜெயலலிதா அரசு நிறுத்திவைத்திருந்தது கலைஞர் ஆட்சி வந்தவுடன் அது மீண்டும் வழங்கப்பட்டது. அதுபோல் பல்வேறு விதமான நெருக்கடிகளும் தளர்த்தப்பட்டன, இப்படியான நிலையில் காவல்துறையினரின் இப்போக்கு வருத்தமளிகிறதாக அம்முகாமின் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

அகதிகள் முகாம் குறித்து சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலைஞர் பணித்திருக்கிறார்.... அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடனாவது கொடுமைகளுக்கு ஏதாவது விமோசனம் கிடைக்கிறதா என்று பார்ப்போம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவா, லக்கி, நன்றி .ஈழத்தமிழர்க்காக குரல் கொடுத்ததுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்டி அறிக்கை சமர்ப்பிச்சே காலத்தை தள்ளீடுங்கய்யா :-)

Link to comment
Share on other sites

இப்டி அறிக்கை சமர்ப்பிச்சே காலத்தை தள்ளீடுங்கய்யா :-)

வேற என்னய்யா பண்ண முடியும்? முகாமுக்கு போய் தூக்கு போட்டுக்கிட்டு சாகவா முடியும்?

புலிகள் அமைப்போ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களோ அகதிகள் முகாமுக்கு ஏதாவது செய்யலாம் இல்லையா?

Link to comment
Share on other sites

வேற என்னய்யா பண்ண முடியும்? முகாமுக்கு போய் தூக்கு போட்டுக்கிட்டு சாகவா முடியும்?

புலிகள் அமைப்போ அல்லது புலம்பெயர்ந்த தமிழர்களோ அகதிகள் முகாமுக்கு ஏதாவது செய்யலாம் இல்லையா?

அட்டகாசமாய் செய்யலாமே, :idea: "தமிழர் புணர்வாழ்வுக் களகம்" செயற்பட அனுமதி தருவார்களா??? உங்காளுங்களை. ஒருதடைவை கேட்டு சொல்லுங்கப்பா.?? அனுமதி தந்தால் வந்து செயற்பட அவர்கள் பின்னிற்கமாட்டார்கள்.

இந்தியாவின் இறைமை எண்று பிறகு கதை அளக்க கூடாது.

Link to comment
Share on other sites

அட்டகாசமாய் செய்யலாமே, :idea: "தமிழர் புணர்வாழ்வுக் களகம்" செயற்பட அனுமதி தருவார்களா??? உங்காளுங்க. ஒருதடைவை கேட்டு சொல்லுங்கப்பா.?? அனுமதி தந்தால் வந்து செயற்பட அவர்கள் பின்னிற்கமாட்டார்கள்.

தமிழ்நாட்டில் அகதிகள் நலம் பொதுப்பணித்துறை அமைச்சரின் கீழ் வருகிறது.... அவரது செயலரின் மின்னஞ்சல் முகவரி கொடுக்கிறேன்.... உங்கள் பிரச்சினைகளை மின்னஞ்சல் செய்யுங்கள்.... உங்கள் பேச்சுக்கு செவிசாய்க்கக் கூடிய அரசு தான் இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறது.....

பொதுப்பணித்துறை அமைச்சகத்தின் செயலர் திரு. எஸ். ராஜரத்தினம், ஐ.ஏ.எஸ். அவர்களது மின்னஞ்சல் முகவரி : pwdsec@tn.gov.in

மேலும் இதன் ஒரு பிரதியை முதல்வரின் தனி Cellக்கும் CC போட்டு அனுப்ப வேண்டும்.... முதல்வர் அலுவலகம் மின்னஞ்சல் முகவரி : cmcell@tn.gov.in

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் அகதிகள் நலம் பொதுப்பணித்துறை அமைச்சரின் கீழ் வருகிறது.... அவரது செயலரின் மின்னஞ்சல் முகவரி கொடுக்கிறேன்.... உங்கள் பிரச்சினைகளை மின்னஞ்சல் செய்யுங்கள்.... உங்கள் பேச்சுக்கு செவிசாய்க்கக் கூடிய அரசு தான் இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறது.....

பொதுப்பணித்துறை அமைச்சகத்தின் செயலர் திரு. எஸ். ராஜரத்தினம், ஐ.ஏ.எஸ். அவர்களது மின்னஞ்சல் முகவரி : pwdsec@tn.gov.in

மேலும் இதன் ஒரு பிரதியை முதல்வரின் தனி Cellக்கும் CC போட்டு அனுப்ப வேண்டும்.... முதல்வர் அலுவலகம் மின்னஞ்சல் முகவரி : cmcell@tn.gov.in

கட்டாயமாக அனுப்புகிறேன். ஆங்கிலத்தில்லும் தமிழிலுமாக அனுப்பும் பதிலை உங்களிற்க்கும் அனுப்பிவைக்கிறேன்.

புலிகளின் புலனாய்வு அமைப்பினர்தான் தமிழர் புணர்வாழ்வுக்களகம் எண்டு உங்க ஆளுங்க சொல்லாமல் இருந்தால் சந்தோசம்...

குறிப்பு:- தமிழர் புணர்வாழ்வுக்களகம் ஈழத்தவர் வாழும் எல்லா நாடுகளின் அதன் பேரிலும் அல்லது வேறு பேர்களிலும் இருக்கிறது. அவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைக்கிறேன்.!

Link to comment
Share on other sites

புலிகளின் புலனாய்வு அமைப்பினர்தான் தமிழர் புணர்வாழ்வுக்களகம் எண்டு உங்க ஆளுங்க சொல்லாமல் இருந்தால் சந்தோசம்...

நல்லதே நடக்கும் என நம்புங்கள்.... எதையுமே குதர்க்கமாக அணுகவேண்டாம்....

புலம்பெயர்ந்த சில ஈழத்தமிழர்கள் சத்தமில்லாமல் தமிழகத் தமிழர்களுக்கு சில நல்ல காரியங்கள் செய்து வருகிறார்கள்.... அவர்களை எல்லாம் அரசு என்ன குற்றம் சுமத்துகிறதா?

இப்போது தமிழகத்தில் கோயில் புனரமைப்புக்கு தான் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பெருமளவு நன்கொடை செலுத்துகிறார்கள்.... அவர்கள் தங்கள் தாய் நாட்டு மக்கள் அகதிகளாகத் துன்புறுவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.....

Link to comment
Share on other sites

இலங்கைப் பிரச்சனைக்கு தமிழகம் குறுக்கு வழி தேடாது தமிழக முதல்வர்

இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இருந்து தமிழர்கள் ஒடிவருவதை கண்டு மனமொடிந்து மாநில அரசு, மத்திய அரசு அளவிலே அவர்ககளுக்குத் தேவையான வசதிகளை செய்திடவும், அங்கே தொடங்கிய அமைதிப்பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான பலனை கொடுத்திட வேண்டுமென்ற விழைவினை வெளிப்படுத்தியும், இலங்கையிலும் சரி, இங்கே தாய் தமிழகத்திலும் சரி எந்த வகையிலும் வன்முறை தலை தூக்காமல் இருப்பதற்கான வழி காண வேண்டுமென்ற தவிப்புடன் விளங்குகின்ற தி.மு.க மத்திய அரசுடன் தொடர்பு கொண்டும். ஒத்த கருத்துடைய தோழமை கட்சிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமூகமாக செயல்படுமேயல்லாமல், குறுக்கு வழி, கோணல் வழி எதுவும் தேடாது என்பதை திட்டவட்டமாக தெளிவு படுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

[

இப்போது தமிழகத்தில் கோயில் புனரமைப்புக்கு தான் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பெருமளவு நன்கொடை செலுத்துகிறார்கள்....

ஆ குறுக்காலை போவார் உங்கையும் கோயில் கோயில் எண்டு கொட்டதொடங்கீட்டினமா? திருந்தமாட்டம் எண்டு அடம்பிடிக்குதுகள் கழுதைகள். :twisted: :evil: :x

தூசணம் தான் வருகுது எழுதினா வெட்டிப்போடுவினம் :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட பொதுப்பணி துறைக்கு மின்னஞ்சல் போடுறது பிரச்சனை இல்லை. அதை அவர் பாப்பாரா?? எங்கட பிரச்சனையில இந்திய அரசே தலையிடாத போது இவங்கள் என்னைய்யா செய்யப்போகினம். கடமைக்கு மின்னஞ்சல் போடலாம். அவங்கட நாட்டில பட்டினில வாடுறவங்களையே கவனிக்க காணேலை இதில எங்கட பிரச்சனைய தீர்கப்போகினமாம்.அகிலன் பதில் (வந்தால்) அறியத்தரவும்!

Link to comment
Share on other sites

அவங்கடை நாட்டு பட்டினியிலை அக்கறை வேண்டாம் அவங்கள் பாப்பங்கள். நீங்கள் அதைவிட மோசமாக இருக்கிற உங்கடை நாட்டி பாட்டினியை பாருங்கோ.

ஓம் ஓம் நாங்கள் கோயில் மாறி கோயில் கட்டுவம் மிச்ச நேரத்திற்கும் பணத்திற்கும் நடிகை நடிகர்மாரை வரவளைச்சு விழா எடுப்பம். போதாக்குறைக்கு மேடையிலை வைச்சு ரொக்கப்பணம் பரிசா குடுப்பம் (கனடா Ideal Carpet காரர் ஜேதிகாவிற்கு 10000 CAD$ குடுத்தவராம்).

பிறகு மற்றவர்கள் ஏன் கவனிக்கவில்லை எண்டு ஒப்பாரி வைப்பம். பங்களாதேஸ் மாதிரி பிடிச்சு தந்தா என்ன எண்டு அறிக்கைவிட தயாரா இருக்கிற கூட்டம் வேறை இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகர் மணிவண்ணன், சத்தியராய் போன்றவர்கள் ஈழம் கிடைத்தால் மகிழ்வோம் செந்தழிப்போம் அது இது என்டு சொல்லிச்சினம். அதுக்காக அனைத்து இந்தியர்களின் கருத்தும் அது என்று நாம் கணித்துவிடமுடியாது. அதே மாதிரி தான் கனடா Ideal Carpet காரர் பணம் கொடுத்ததும். ஒரு சிலரை வைத்து அனைவரையும் எடை போட்டு விட முடியாது.

Link to comment
Share on other sites

இலங்கைப் பிரச்சனைக்கு தமிழகம் குறுக்கு வழி தேடாது தமிழக முதல்வர்

இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் இருந்து தமிழர்கள் ஒடிவருவதை கண்டு மனமொடிந்து மாநில அரசு, மத்திய அரசு அளவிலே அவர்ககளுக்குத் தேவையான வசதிகளை செய்திடவும், அங்கே தொடங்கிய அமைதிப்பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான பலனை கொடுத்திட வேண்டுமென்ற விழைவினை வெளிப்படுத்தியும், இலங்கையிலும் சரி, இங்கே தாய் தமிழகத்திலும் சரி எந்த வகையிலும் வன்முறை தலை தூக்காமல் இருப்பதற்கான வழி காண வேண்டுமென்ற தவிப்புடன் விளங்குகின்ற தி.மு.க மத்திய அரசுடன் தொடர்பு கொண்டும். ஒத்த கருத்துடைய தோழமை கட்சிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமூகமாக செயல்படுமேயல்லாமல், குறுக்கு வழி, கோணல் வழி எதுவும் தேடாது என்பதை திட்டவட்டமாக தெளிவு படுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி தற்ஸ்தமிழ்

இம்சைசசசசசசசசசச

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அங்குள்ள ஈழத்தமிழ் மக்கள் தொகைக்கு அவர்கள் இதுவரை செய்ததே (தடைக்கு முதல்) கவலைக்குரிய நிலையில். ஆனால் அங்குள்ளவர்களின் பொருளாதாரம், அறிவு, என்பன நல்லநிலையில் இருக்கு பல ஜரோப்பிய நாடுகளில் உள்ளவர்களோடு ஒப்பிடும் போது. அதாவது அங்குள்ள ஈழத்தமிழ்ச் சமூகம் என்பது ஒரு வளமான நிலையில் எண்ணிக்கையில் மாத்திரமல்ல தரத்திலும் இருக்கிறது.

பெரும்பான்மை வேண்டாம் மூன்றில் ஒரு பங்கு உணர்வுபூர்வமாக ஒற்றுமையாக தொழிற்பட்டாலே அது பிரித்தானியாவில் உள்ள மொத்த ஈழத்தமிழரின் தொகைக்கு சமன்.

தடைக்கு முதலே நிலமை இந்தக் கேவலம் என்றால் இனி தடைக்கு பிறகு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒற்றுமையாக இருந்தாலும் உம்மை போன்றவர்கள் அதை கெடுக்க அலைகிறார்களே?? அதற்கு என்ன பண்ணலாம் என்று ஒரு சிந்தனை சொல்லுங்களேன்?? இப்ப உதாரணமா பாத்தீங்கள் என்டால் இந்த இணையத்தழத்திலையே நீங்கள் எங்களோட ஒற்றுமையா இருக்க மாட்டேன் என்டுறியள். பிறகு எப்படி சார்....???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.