Jump to content

கூவத்தில் குதித்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை-நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20-nithyashree-mahadevan-300.jpg

 

சென்னை: பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

 

பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். கர்நாடக இசைப் பாடகியான இவர் பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர் பாலத்தில் காரில் வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்..

 

இன்று காலை மகாதேவன் ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் வந்ததாகவும். அங்கு பாலத்தில் வண்டியைநிறுத்தி விட்டு கூவம் ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சாலையில் சென்றோர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர்.

 

நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலே சிக்கியது. அவரது உடலை சோதனை செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்று தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை

 

நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி

 

இதனிடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன் நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த

 

சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://tamil.oneindia.in/movies/news/2012/12/tamilnadu-nithyasri-mahadevan-s-husband-commits-suicide-166599.html

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் நித்யஸ்ரீ . தற்கொலைதான் தீர்வு இல்லை , நீங்கள் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கு இசையுலகில் .

Link to comment
Share on other sites

கணவரின் செய்திக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். எனது அபிமான பாடகர்களில் ஒருவர்.

 

http://www.youtube.com/watch?v=RQ__IaKxXR4

Link to comment
Share on other sites

Nithyashree-Mahadevan1_eu20122012.jpg

 

மகாதேவன் ஒரு கடம் வாத்தியக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது . ஆரம்பகாலத்தில் நித்தியஸ்ரீயின் இசைக்கச்சேரிக்கும் பக்கவாத்தியக்கலைஞராக இருந்தார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் அஞ்சலியோ

மனச்சங்கடமோ எனக்கு வருகுதில்ல.

படிப்பு பணம் பதவி வசதி புகழ் இருந்தும்............

கொழுப்பு இது......................

நன்றி  வணக்கம் மட்டுமே.

Link to comment
Share on other sites

மிகவும் அதிர்ச்சியானதும் வேதனையானதுமான செய்தி. 

 

 
நித்யஸ்ரீ அவர்களின் பாடல்கள் கேட்டுத் தான் எனக்கும் கர்நாடக சங்கீதத்தில் முதன் முறையாக ஆர்வம் பிறந்தது. செவிக்கினிய, மனதுக்கு அமைதி தரும் அவரது பாடல்களை நான் கேட்காத நாட்கள் மிக அரிது. 
 
மிக விரைவில் நித்யஸ்ரீ அவர்கள் குணமடைய ஆண்டவனை வேண்டுவதைத்தவிர வேறென்ன என்னால் செய்ய முடியும்?
 
அவரது கணவரின் ஆன்மா சாந்தியடையட்டும். 
Link to comment
Share on other sites

இதுக்கெல்லாம் அஞ்சலியோ

மனச்சங்கடமோ எனக்கு வருகுதில்ல.

படிப்பு பணம் பதவி வசதி புகழ் இருந்தும்............

கொழுப்பு இது......................

நன்றி  வணக்கம் மட்டுமே.

 

 

கலோ விசுகர் இது செத்தவீடு . இதே சம்பவம் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நடந்தால் <_< <_< <_< ???????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

நித்தியசிறி மகாதேவன் விரைந்து குணம் பெற எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடக பாடகி நித்யஸ்ரீ கணவர் மகாதேவன் தற்கொலை; நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி
Posted Date : 13:59 (20/12/2012)Last updated : 16:18 (20/12/2012)
 

 

சென்னை: பிரபல கர்நாடக பாடகி நித்யஸ்ரீ யின்  கணவர் மகாதேவன் சென்னை கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டுள்ள்னர்.பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்று பகல் 12.45 மணி அளவில் தனது காரில் வந்த மகாதேவன், கோட்டூர்புரம் அருகே உள்ள அடையாற்றின் பாலத்தில் வந்தபோதுடிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறியுள்லார்.

 

இதனையடுத்து காரைவிட்டு இறங்கிய அவர், திடீரென  ஆற்றில் குதித்துள்ளார்.

அந்த வழியாக சென்றவர்கலும், டிரைவரும் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஆற்றில் குதித்து சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை மீட்டனர்.

இன்று காலை ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே மகாதேவன், கோபத்துடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

நித்யஸ்ரீயும் தற்கொலை முயற்சி

இதனிடையே கணவர் இறந்தது குறித்து தகவலறிந்த பாடகி நித்யஸ்ரீயும்,  தற்கொலைக்கு முயன்றதாகவும், இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல் நிலை குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை.

 

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிற நிலையில், இச்சம்பவம் கர்நாடக இசைக்கலைஞர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

குடும்பத்தினர் மறுப்பு

இதனிடையே மகாதேவன் தற்கொலைக்கு குடும்ப தகராறு காரணமல்ல என்றும், அவரது தாயார் கடந்த ஏப்ரல் மாதத்தில் மரணமடைந்ததிலிருந்து, அந்த துயரம் காரணமாக அவர் மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாகவும் நித்யஸ்ரீ குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நித்யஸ்ரீ தற்கொலை முயற்சிக்கவில்லை என்றும், கணவர் இறந்த அதிர்ச்சியில் மட்டுமே அவர் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டம்மாள் பேத்தி

பாடகி நித்யஸ்ரீ, மறைந்த பிரபல கர்நாடக பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி ஆவார்.

 

விகடன் செய்திகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இதுக்கெல்லாம் அஞ்சலியோ

மனச்சங்கடமோ எனக்கு வருகுதில்ல.

படிப்பு பணம் பதவி வசதி புகழ் இருந்தும்............

கொழுப்பு இது......................

நன்றி  வணக்கம் மட்டுமே.

 

 

ஆம்,
 
கோபம் தான் வருகின்றது.  தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள், அனுதாபத்துக்கு உரியவை அல்ல.
 
பிரபலங்கள், இவ்வாறு செய்தால், சாதாரண மனிதர்கள் , அதனை சரியானது என தொடரக் கூடும்.
 
டெல்லியில், ஆறு மனித மிருகங்களால், பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, உயிருக்கு போராடும் பெண், ஆறாவதுமுறை சத்திர சிகிச்சை க்கு போகும் முன், ஒரு பேப்பரில், 'நான் பிழைத்து எழுந்து வாழ வேண்டும்', அம்மா' என தனது தாய்க்கு எழுதி கொடுத்து தான் போனார்.
 
அது முழு அனுதாபத்துக்கு உரியது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைகள் எதற்கும் தீர்வாக அமையமுடியாது.

 

கர்நாடக சங்கீதப் பாடகி நித்தியஸ்ரீ குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.  பாடகி நித்தியஸ்ரீ விரைவில் குணமடைந்து மனவுறுதியுடன் வாழ்வைத் தொடர்வார் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

என்னத்தை எழுதிறது.. அந்தக் கணவரை நினைத்தால் பாவமாக இருக்கு.. :(

 

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

மிகவும் துயரமான செய்தி.

 

என் வீட்டில் காலை வேளைகளில் கணீர் என்று ஒலித்து மகிழ்விக்கும் நித்யசிறீ அவர்களின் வாழ்வில் வந்துள்ள இந்த துயரம் வெகு விரைவில் நீங்கட்டும்.

 

மற்றவர்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் பொதுவாகவே எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக, மனத்தளவில் கொஞ்சம் குழந்தைத்தனாம  இருப்பது வழக்கம். அதனால் தான் உலகளவில் பல கலைஞர்கள் தற்கொலை செய்து தம்மை உலகில் இருந்து பிரித்துக் கொள்கின்றனர்.

 

செத்த வீட்டிலும் தத்துவம் பேசி அவமானப்படுத்துவது எம்மவர்களின் பழக்கம்.

 

 

Link to comment
Share on other sites

ஆம்,
 
கோபம் தான் வருகின்றது.  தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள், அனுதாபத்துக்கு உரியவை அல்ல.
 
பிரபலங்கள், இவ்வாறு செய்தால், சாதாரண மனிதர்கள் , அதனை சரியானது என தொடரக் கூடும்.
 
டெல்லியில், ஆறு மனித மிருகங்களால், பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, உயிருக்கு போராடும் பெண், ஆறாவதுமுறை சத்திர சிகிச்சை க்கு போகும் முன், ஒரு பேப்பரில், 'நான் பிழைத்து எழுந்து வாழ வேண்டும்', அம்மா' என தனது தாய்க்கு எழுதி கொடுத்து தான் போனார்.
 
அது முழு அனுதாபத்துக்கு உரியது.

 

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும். 191

 

இதை யாருமே மறுக்கவில்லை . அதேவேளையில் ஓர் இளம்பாடகியின் கணவரின் மரணநிகழ்வு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் , செத்தவீட்டில் என்ன எழுதுகின்றோம் என்று தெரியாத ஒருசிலருக்கு குவாட்பண்ணிய உங்கள் கருத்தாடல் முரண்நகை  <_<  <_< . மேலும் , உங்களது ஆலோசனைகளை கொட்டுவதற்குரிய இடம் இதுவல்ல . அதற்கு ஒரு தனித் திரி திறந்து எழுதுங்கள் . இது இரங்கலுக்குரிய இடம் என்பதனையும் சுட்டி காட்டுகின்றேன் .

Link to comment
Share on other sites

இறைவனுள் அமைதிகொள்ளட்டும் ...............துன்பங்கள்,துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி திரும்பட்டும் ............ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

மனித மனங்கள் மாண்பும்,இறைவனின் சாயலும் கொண்டவையாகவே பூவுலகில் வருகின்றன .............ஆனால் சாத்தான் உள்புகுந்து ஆட்டுவான் ,ஆட்டுவிப்பான் ........அவனை முழுமையாக அரவணைத்து அவன் பாதையில் நாம் சென்றால் .....கொலைகள் ,தற்கொலைகள் ........இவற்றிற்கு முகம் கொடுததே ஆகவேண்டும் .............இவர்களை தற்கொலைக்கு தூண்டிய அனைத்துக்காரணிகளையும் ,மனிதப்பண்போடு நோக்கி, அவற்றை மற்றவர்கள் வாழ்வில் வராமால் நாம் வாழப்பழகுவோம், அப்படி வாழும்போது ஒவ்வொருவரும் இந்த உலகில் நிம்மதியாய் வாழுவான் ...........அதுவே இறைவனின் சித்தமுமாகும் ............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
செத்த வீட்டிலும் தத்துவம் பேசி அவமானப்படுத்துவது எம்மவர்களின் பழக்கம்.

 

நியாயமான ஆதங்கம்.

 

ஆனால் இதே யாழ் பரிதி அண்ணாவின் மரணத்தின் போது.. எவ்வாறு நடந்து கொள்ள சிலருக்கு இடமளித்தது.. அந்த வகையில் யாழும் கூட அந்தப் பழக்கம் தொடர தூண்டுதலாக உள்ளதோ என்ற எண்ணத்தையும் என் மனதில் எழ வைக்கிறது. துயர் மிகு இவ்வேளையிலும் அத்தகைய வெட்கப்படக் கூடிய நடத்தைகளை சுட்டிக்காட்டவே வேண்டி உள்ளது. எதிர்காலத்திலாவது மனிதர்களாக மாறி.. திருந்துவார்கள் என்ற ஒரு சிறிய நம்பிக்கையோடு.

Link to comment
Share on other sites

நியாயமான ஆதங்கம்.

 

ஆனால் இதே யாழ் பரிதி அண்ணாவின் மரணத்தின் போது.. எவ்வாறு நடந்து கொள்ள சிலருக்கு இடமளித்தது.. அந்த வகையில் யாழும் கூட அந்தப் பழக்கம் தொடர தூண்டுதலாக உள்ளதோ என்ற எண்ணத்தையும் என் மனதில் எழ வைக்கிறது. துயர் மிகு இவ்வேளையிலும் அத்தகைய வெட்கப்படக் கூடிய நடத்தைகளை சுட்டிக்காட்டவே வேண்டி உள்ளது. எதிர்காலத்திலாவது மனிதர்களாக மாறி.. திருந்துவார்கள் என்ற ஒரு சிறிய நம்பிக்கையோடு.

 

பரிதி அண்ணையின் இரங்கல் திரியில் யாரும் இப்பிடி எழுத இஅடமளிக்கப் படவில்லை என்று நினைக்கிரன்.பரிதி அண்ணாவின் விவாதங்கள் வேறுதிரியில்தான் நிகழ்ந்ததாக நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவிக்கும் எனக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருக்கு, ஏன் இப்படி?

 

ஆழ்ந்த இரங்கல்கள்

 

 

Link to comment
Share on other sites

என்னத்தை எழுதிறது.. அந்தக் கணவரை நினைத்தால் பாவமாக இருக்கு.. :(

 

ஆழ்ந்த இரங்கல்கள்..!

 

இசைக்கலைஞன் ஏன் அந்தக் கணவரை நினைத்து பாவப்படுவான். அவரை யாரும் தள்ளி விடவில்லைதானே. அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்தான் பாவம் அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். தெரிவிக்கலாம்.

நித்யாசிறீ அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

இசைக்கலைஞன் ஏன் அந்தக் கணவரை நினைத்து பாவப்படுவான். அவரை யாரும் தள்ளி விடவில்லைதானே. அவரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்தான் பாவம் அவர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். தெரிவிக்கலாம்.

நித்யாசிறீ அவர்களுக்கும் அவர் தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

மயூரன்.. உங்கள் கருத்தில் மிகுந்த நியாயம் உள்ளது. பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டார். :(

 

ஆனால் இந்த மனிதனை தற்கொலை வரை நகர்த்திய காரணிகள் குடும்பச் சூழலில் இருந்து வந்திருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது. கடம் வாசித்த கலைஞர் பாடகியைத் திருமணம் செய்வது அங்குள்ள சூழலில் சிக்கலுக்கு உரியதாக இருந்திருக்கலாம். இது எனது எண்ணம் மட்டுமே. இதன் அடிப்படையில்தான் எனது கருத்தும் அமைந்தது. :unsure:

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும். 191

 

இதை யாருமே மறுக்கவில்லை . அதேவேளையில் ஓர் இளம்பாடகியின் கணவரின் மரணநிகழ்வு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய நிலையில் , செத்தவீட்டில் என்ன எழுதுகின்றோம் என்று தெரியாத ஒருசிலருக்கு குவாட்பண்ணிய உங்கள் கருத்தாடல் முரண்நகை  <_<  <_< . மேலும் , உங்களது ஆலோசனைகளை கொட்டுவதற்குரிய இடம் இதுவல்ல . அதற்கு ஒரு தனித் திரி திறந்து எழுதுங்கள் . இது இரங்கலுக்குரிய இடம் என்பதனையும் சுட்டி காட்டுகின்றேன் .

 

 

இல்லை ஐயா, இல்லை. உங்கள் ஆதங்கம் புரியாமல் இல்லை.
 
அந்த அற்புதமான, மிகச் சிறந்த வகையில் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்ட ஒரு கலைஞருக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து மிகுந்த அனுதாபம் நிறைய இருப்பதனால் தான் விரக்தி, வேதனை, கோபம் வருகின்றது.
 
இருவருமே அற்புதமான கலைஞர்கள். இன்னும் சாதிக்க வேண்டியது நிறையவே உள்ளது.
 
சிறு பிரச்சனைக்காக, தமது உயிரை மாய்த்து கொள்வது ஏற்புடையது அல்ல.
 
எனது கவலை எல்லாம், இது போன்ற நிகழ்வுகள், தன் நம்பிக்கையினை இழக்கச் செய்து, மீண்டும் கலைச்சேவை செய்வதை தாமதமாக்குமே என்பதே.
 
பாடகி சித்திரா, குழந்தையை இழந்த போதும் விரைவாக மீண்டு வந்தார். அந்த வகையில் இவர் மீள முடியுமா என்பதே எனது ஆதங்கம். 
 
சில  அற்புதமான கலைஞர்களுக்கு, பொருந்தாத  துணை கிடைத்து அவர்களது கலைத்துறை பாதிக்கின்றதே என்பதே எனது கவலை. அந்த கோபம் பகிர்தல்  இந்த நேரத்தில் பிழையாக இருக்கலாம்.
 
தன் நம்பிக்கை இழந்து, தற்கொலை முயற்சி செய்பவரை,  சொந்தமோ, ரசிகர்களோ, எவ்வளவு நாள் தான் பாதுகாக்க முடியும். அது தான் எனது விரக்திக்கு காரணம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

நித்தியசிறி மகாதேவன் விரைந்து குணம் பெற எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

தற்கொலைகள் எதற்கும் தீர்வாக அமையமுடியாது.

 

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.