Jump to content

புலிகள் அமைப்பு உலகத் தமிழருக்கு பொதுவானதா?


Recommended Posts

கொஞ்ச நாட்களாய் அதாவது கலைஞரின் பிறந்த நாளுக்குப் பிறகு வலையுலகில் சில ஈழத்தமிழர்கள் ஒரு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.... அதாவது கலைஞர் உலகத் தமிழர்களின் தலைவரா என்பதே அந்தக் கேள்வி... அவர் உலகத் தமிழர்களின் தலைவராய் ஒப்புக்கொள்ளப்பட்டவரா என்ற ஆராய்ச்சியில் எல்லாம் ஈழத்தமிழர்கள் இறங்க வேண்டிய அவசியமேயில்லை.... தமிழகத் தமிழர்கள் அவரை தமிழினத் தலைவர் என்று தான் அழைக்கிறார்களே தவிர, உலகத் தமிழர்களின் தலைவர் என்றெல்லாம் சொல்வது கிடையாது.... அது சரி... இவ்வளவு பேச்சு பேசுகிறார்களே? இவர்களின் அபிமான புலிகள் அமைப்பு உலகத் தமிழருக்கு பொதுவானதா என்று சிந்தித்ததின் விளைவே இந்தப் பதிவு....

ஈழத்திலே வசிப்பவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனே தமிழகத்தில் இருந்து எவனும் குரல் கொடுக்கவில்லை.... தொப்புள் கொடி உறவு என்பதெல்லாம் மாயையா என்று கொதித்தெழும் ஈழத்தமிழர்களே.... இதுவரை உலகில் எங்காவது தமிழனுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம் உங்கள் அமைப்பு ஏதாவது குரல் கொடுத்திருக்கிறதா?

சிங்கையிலும், வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தமிழன் எவனுக்காவது பிரச்சினை என்றதும் அதற்காக புலிகள் அமைப்பு குரல் கொடுத்ததுண்டா?

தமிழகத்தில் கும்பகோணம் தீவிபத்தில் மறைந்த 60க்கும் மேற்பட்ட மலர்களுக்காக போப் ஆண்டவர் கூட இரங்கல் தெரிவித்திருந்தார்... ஆனால் புலிகள் அமைப்பு சார்பில் ஒரு இரங்கல் செய்தி கூட வந்ததில்லை....

சென்ற ஆண்டு வெள்ள நிவாரணத்தின் போது 50 பேர் பலியான சம்பவத்தைக் கேட்டு தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ்... ஏன் பிஜி தீவில் வாழும் வம்சாவளி தமிழர்கள் கூட பதறிப் போனார்கள்.... புலிகள் அமைப்பு வழக்கம் போல தூங்கிக் கிடந்தது.... அனுதாபம் தெரிவித்து ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாமே?

இவையெல்லாம் சிறு உதாரணங்கள் தான்.... இந்த வகையில் பார்க்கப் போனால் ஈழத்தமிழனை தவிர எந்த தமிழனுக்கு பிரச்சினை என்றாலும் அதைப் பற்றி தனக்கு அக்கறையில்லை எனும் விதமாகத் தான் புலிகள் அமைப்பு செயல்பட்டு வருகிறது....

இந்த லட்சணத்தில் தங்களுக்காக தமிழகத் தமிழர்கள் குரல் கொடுப்பதில்லை... ஈழத்தமிழன் மீது தமிழகத் தமிழனுக்கு அக்கறை கிடையாது என்றெல்லாம் இவர்கள் புலம்புவது எந்த விதத்திலும் ஏற்புடையது கிடையாது....

புலிகள் அமைப்பு ஈழத்தில் இருக்கும் தமிழனுக்காக மட்டுமே (அங்கேயும் சில பாகுபாடுகள் இருப்பதாக அறிகிறோம்.... ஈழத்தின் வடக்கில் இருக்கும் தமிழனை ஒரு மாதிரியாகவும் தெற்கில் இருக்கும் தமிழனை ஒரு மாதிரியாகவும் ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக் கொண்டு புலிகள் அமைப்பு பாவிப்பதாக) பாடுபடும் ஒரு பிராந்திய அமைப்பாகவே கொள்ள முடியும்....

posted by luckylook at 9:58 AM

http://madippakkam.blogspot.com/2006/06/bl...og-post_07.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியத்தொலைக்காட்சியும், பி.பி.ஸி தமிழோசையும் சொல்வது போல "ஈழத்தின் வடக்கில் இருக்கும் தமிழனை ஒரு மாதிரியாகவும் தெற்கில் இருக்கும் தமிழனை ஒரு மாதிரியாகவும் ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக் கொண்டு புலிகள் அமைப்பு பாவிப்பதாக" லக்கி சொல்லியிருக்கிறார். லக்கி அடிக்கடி எட்டப்பர்களின் இணையத்தளங்களுக்கு சென்று வருபவர் அல்லது அவர்களில் ஒருவர் என்று இதில் இருந்து புலனாகிறது.

Link to comment
Share on other sites

சென்ற ஆண்டு வெள்ள நிவாரணத்தின் போது 50 பேர் பலியான சம்பவத்தைக் கேட்டு தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ்... ஏன் பிஜி தீவில் வாழும் வம்சாவளி தமிழர்கள் கூட பதறிப் போனார்கள்.... புலிகள் அமைப்பு வழக்கம் போல தூங்கிக் கிடந்தது.... அனுதாபம் தெரிவித்து ஒரு அறிக்கையாவது விட்டிருக்கலாமே?

posted by luckylook at 9:58 AM

http://madippakkam.blogspot.com/2006/06/blog-post_07.html

இவர் சொல்லுற மாதிரி எதுவும் மக்கள் பதறின மாதிரியாய் தெரிய வில்லையே.... அதே காலப்பகுதியில நான் மலேசியாவில்த்தான் இருந்தேன்....

தமிழக எதிர்கட்ச்சியே ஒண்றும் செய்யாமல் கைகட்டி வேடிக்கைதான் பார்த்தது...! ஜே அரசு ஏதாவது பிளைவிடும் அரசியல் ஆக்கலாம் என்னும் நோக்கோடு....! :wink: :idea:

வெள்ள நிவாரணத்தை பொறுபோடு செய்த "ஜே" அரசுக்கு மட்டும்தான் பாராட்டுகள் சொல்லவேண்டும்....! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி லுக் எழுதின மாதிரி பதறி போனதோட சரி தானே :-)

அவையள் ஏன் ஒரு அனுதாப அறிக்கையும் விடேலை?

Link to comment
Share on other sites

மிதக்கும் வெளி said...

புலிகள் அமைப்பு என்பதே சாராம்சத்தில் பாசிச அமைப்பாகப் போய்விட்டது.அது ஈழத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு குரல் கொடுப்பதில்லை.தலித்துகளையும

Link to comment
Share on other sites

காத்து said...

பா.ஜ.க இந்துத்துவ வாதிகளுக்கு இருக்கும் பற்றுக்கூட இனப்பற்று கொண்டவராய் சொல்லிக்கொள்லப்படும் கருணாநிதிக்கு இல்லாதது ஆச்சரியமாக ஈழத்தமிழருக்கு இருப்பதில் என்னய்யா ஆச்சரியம்...

வேறு நாடுகளில் தமிழருக்கு பிரச்சினை இருக்கிறதா என்ன...??? (இந்தியாவில்) கருணாநிதியின் கட்ச்சிக்காறனுகளுகே வெளிச்சம்...

மத்தியில் வைகோவால் தயாநிதி எனும் கருணாநிதிய்யின் வாரிசுக்கு அச்சுறுத்தல் எண்று குற்றம் சாட்டும் (பள்ளிக்கூடத்தில் ரீச்சரிட்டம் சொல்வது போல்) மறிமுகமாய் புலிகளை குற்றவாளியாக்கிய கட்ச்சி தலவரை நல்லவர் எண்று சொல்கிறீர்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் லக்கிலுக்கிற்கு வணக்கங்கள்!

நீர் கேட்பது போன்று புலிகள் தமிழ்நாட்டுப் பிரச்சனை பற்றிக் கதைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டு விடயங்களில் தலையிடுகின்றார்கள்! தமிழ்நாட்டைப் பிரிக்கப் போகின்றார்கள் என்று கூச்சலிடுவீர்கள்!! அப்படி ஒரு நிலை நடக்காத போதே அப்படிக் குரல் எழுப்பும் நீங்கள் தற்செயலாக புலிகள் தமிழ்நாட்டைப் பற்றிக் கதைத்தால் போதும் உடனே விட்டு வைப்பீர்களா என்ன?

எனவே உமது இக்கருத்தோடு எமக்கு உடன்பாடில்லை! அவ்வாறான சூழ்நிலையை இந்தியப் பாப்பாணிகளும், அதிகாரவார்க்கமும் கதைக்கமாட்டார்கள் என்று உம்மால் உத்தவாதப்படுத்த முடியுமா?

ஒவ்வொரு தமிழனும் இறக்கும்போது நாம் நிச்சயமாகக் கலங்குகின்றோம்! ஆனால் அதை வெளிப்படுத்தினால் அதை வைத்து தமிழ்மக்களைக் கூறு போட பல விசம சக்திகள் காத்துக் கொண்டு இருக்கின்றன என்பதை நீர் அறிவீரா?

எனவே இவ்வாறான பிரச்சனைகளைக் கிளப்புவதற்கு முன் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி லுக் சொன்னது: அது ஒரு வெள்ளாள அமைப்பே யாகும்??

சரி அப்படியே வைத்துக்கொள்வோம் (அப்படி இல்லாத போதும்). அந்த அமைப்பில் அனைத்து யாதியினரும் இருக்கிறார்கள். எல்லா பதவிகளிலும் எல்லா யாதியினரும் இருக்கிறார்கள்.

எங்கட நாட்டில (ஈழத்தில) ஒவ்வொரு யாதிக்கு ஒரு கட்சி இல்லை லக்கி சார் :-)

Link to comment
Share on other sites

நண்பர் லக்கிலுக் பெங்களூர் தமிழர்களிடம் கேட்டுப் பாக்கட்டும் தமிழ் இனத்தின் தலைவர் யார் என்று?

உது இப்ப எங்களுக்கு பிரச்சினை இல்லை ஏனென்றால் ,தமிழனுக்கென ஒரு நாடு ,தமிழ் ஈழம் தான்.

ஐ நாவிலும் உலக அரங்கிலும் தமிழருக்காகக் குரல் கொடுக்கப் போகிற நாடு தமிழ் ஈழம் தான்.

தற்போது எமது இலக்கு தமிழ் ஈழமே, ஆகையால் வேறு எவர் பிரச்சினைகளிலும் தலைபோடாமல் எமது இலக்கை அடைவதே சிறந்தது.திமுகாவின் சரித்திரம் சில ஆண்டுகளில் முடிந்து விடும்.இப்பவே கூட்டில் தான் வென்றிருக்கிறீர்கள்.

தமிழ் ஈழ நாடு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழப் போகிறது.தமிழும்,உலகத் தமிழரும் அதனால் பயன் பெறுவர்.

Link to comment
Share on other sites

மிதக்கும் வெளி said...

புலிகள் அமைப்பு என்பதே சாராம்சத்தில் பாசிச அமைப்பாகப் போய்விட்டது.அது ஈழத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு குரல் கொடுப்பதில்லை.தலித்துகளையும

Link to comment
Share on other sites

மிதக்கும் வெளி said...

புலிகள் அமைப்பு என்பதே சாராம்சத்தில் பாசிச அமைப்பாகப் போய்விட்டது.அது ஈழத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு குரல் கொடுப்பதில்லை.தலித்துகளையும

Link to comment
Share on other sites

கொங்சக்காலமாக.... கனக்க... கொஞ்சம்... கொஞ்சமாகவாவது ஏதையோ திணிக்க படாத பாடுபடுகிறார்கள் சிலர் அதில் luckylook முயற்சிக்கிறார் முயற்சிக்கட்டும்..... :lol: ஆனால்... நய்னா Birundan தாங்கள் எப்படி... :? :lol: :roll:

Link to comment
Share on other sites

கொங்சக்காலமாக.... கனக்க... கொஞ்சம்... கொஞ்சமாகவாவது ஏதையோ திணிக்க படாத பாடுபடுகிறார்கள் சிலர் அதில் luckylook முயற்சிக்கிறார் முயற்சிக்கட்டும்..... :lol: ஆனால்... நய்னா Birundan தாங்கள் எப்படி... :? :lol: :roll:

நய்னா நட்டு பிரண்டு அட சா...நெற்றுபிரண்டு எனக்கு உம்மையும் தெரியும் உம்நோக்கமும் தெரியும், அதைவிடும்

லக்கி இங்கு பேசுவதற்கும் வெளியில் பேசுவதற்கும் வேறுபாடு உண்டு, இதை தற்ஸ்தமிழில் அவர் எழுதியபோதே நாம் சுட்டிக்காட்டினோம், அதனால் அவருக்கு தடையும் வந்து பின்னர் கருத்துச்சுதந்திரம் காரணமாக, தொடர அனுமதியும் வந்தது, இக்கட்டுரை அவரது இன்னொரு முகம். அதை கள உறவுகளுக்கு காட்டவே இக்கட்டுரையை இங்கு இனைத்தோம், தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் உம்மையும் எமக்குதெரியும்.

எது எப்படி இருப்பினும் எம்கடன் பணி செய்து கிடப்பதே. 8) 8) 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தமிழினத்தின் ஒரே தனித்தலைவன் எங்கள் தலைவர் என்பதில் லக்கிக்கு சந்தேகம்

நல்ல கதை பாருங்க, லக்கிக்கு நீண்ட நாளுக்கு பிறகு தான் இந்த சந்தேகம் வந்தீருக்கு. ஒரு அரசியல் கட்சி தலைவரையும், ஒரு விடுதலையமைப்பின் தலைவரையும் ஒப்பிட்டு பார்க்கிறார். மக்களுக்காக தன்னையழிக்க தயாராய் இருக்கும் தலைவரையும், தனக்காக மக்களையும் கொல்ல தயங்காத அரசியல் தவைரையும் ஒப்பீடு செய்கின்றார். தமிழ் நாட்டு மக்களுக்காக தமிழீழ தேசிய தலைமை குரல் கொடுக்க வில்லை என்று முழங்கும் இந்த லக்கி லுக் ஈழுத்தமிழர்கள், தமிழ் நாட்டு அரசை தமக்காக குரல் கொடுக்க வில்லை என்று சலித்து கொள்வதாக சொல்ல வில்லை. நாம் கேட்பது தமிழ் நாட்டு மக்களை, மக்களை எமக்கு ஆதரவுக்குரல் தருமாறு கேட்கின்றோம். கும்பகோணத்தில், குழுந்தைகள் இறந்த போது ஈழத்தமிழர்கள் அனுதாபம் தெரிவிக்கவில்லையா? ஐ.பி.சி தமிழ் வானொலியில் கூட ஒரு பாடல் ஒலிபரப்பானதே? அந்த பிஞ்சுகளுக்காய் இரங்கி? அந்த பாடலை ஒலிபரப்பியது ஈழத்து ஊடகம். அனைத்துலக தமிழரின் குரலாய் ஒலிக்கும் ஒரு வானொலி. அது ஈழத்தமிழரின் குரலாக தெரியவில்லையா? என்றாவது உங்கள் வானொலிகள் தொலைக்காட்சிகள் எங்கள் மக்கள் சாவுகளை பற்றி பேசியுள்ளதா? ஏன் அவற்றை உண்மையாக வெளியிட்டுள்ளனவா? சண் தொலைக்காட்சியில் கருணாநிதியின் புராணமும், ஜெயா ரீவியில் ஜெயலலிதா புராணமும். உங்கள் பத்திரிகையில், இந்துத்துவ வாதத்தையும் தவிர என்ன செய்தார்கள்? எங்கள் உணர்வுகளை நீங்கள் மதிக்கப்பழகுகங்கள், அல்லது எங்கள் பாதையிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். லக்கி லுக் யாராகவும் இருக்கலாம். எங்கள் தேசத்தில் பிரிவினையில்லை, எங்கள் தேசத்தில் யாதி இன மத பேச வேற்றுமை இல்லை. உங்கள் குப்பைகளை வைத்து எங்கள் தேசத்தை கணக்கிடும் உங்கள் திறன் நன்று. இலவச இணையப்பக்கங்கள் கிடக்கிறது என்பதற்காக, எதையும் எழுதலாம் என்று நினைக்கும்

Link to comment
Share on other sites

அப்படி எண்டுறீங்கள்... அப்ப சரி Birundan...... & யாழ் நன்றி :roll:

Link to comment
Share on other sites

வெள்ளாள அமைப்பேயாகும்.

:lol::lol::o :roll: :o:o:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தூயா சிரிக்கிறீங்கள் முழிக்கிறீங்கள் ,என்ன நீங்க்ளும் சுன்டலை மாதிரி மாறிப்போட்டிங்கள்.

தமிழன் புலி என்றாங்கள், இப்ப வெள்ளாளன் எண்று சொல்லுறாங்க்ள்., ஈழம்கிடைத்தவுடன் தமிழன் எல்லாம் பிராமனன் உயர் சாதி என்பார்கள்..... இவங்கட சர்டிவிக்கட் இப்ப ரொம்ப முக்கியம்...............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.