Jump to content

ஊடகங்களின் தவறான வழிநடத்தல்!


Recommended Posts

ஊடகங்களின் தவறான வழிநடத்தல்!

http://www.webeelam.com/seithikal.html

....

........

மேற்குலகம் தமிழினத்தின் அபிலாசைகளுக்கு எதிராக ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்து வைத்திருக்கிறது. விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்திவிட்டுஇ அந்த திட்டத்தை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு திட்டம் போட்டிருக்கிறது. இந்த தீர்வுத் திட்டத்திற்கு சிறிலங்கா அரசை சம்மதிக்க வைக்கும் முயற்சியாக சில ராஜதந்திர அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவது உண்மைதான். ஆனால் இந்த அழுத்தங்களை தமிழர் தரப்பிற்கு சாதகமானவையாக அர்த்தம் கற்பிப்பது தவறு. மேற்குலகின் தற்போதைய நிலை தமிழ் மக்களிற்கு முற்றிலும் எதிரானதே. இந்த விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்வதும்இ சரியான முறையில் வெளிக் கொணர்வதும் மிக அவசியம்.

"தடை!" - செய்யக் கூடியதும் கூடாததும்!

....

......

அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற மனித உரிமைகள் மையத்தின் அறிக்கையின்படி விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்திற்கான நிதியை சேர்த்துவிட்டார்கள். ஆகவே நிதி சம்பந்தமான குற்றத்தை செய்ய வேண்டிய தேவை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இனி ஏற்படப் போவதில்லை. வன்முறைகளை தூண்டுவது போன்று தமிழர்கள் பொதுவாகவே நடந்து கொள்வதில்லை என்பதால், அது குறித்தும் கவலை கொள்ளத் தேவை இல்லை.

ஆகவே தேசிய விரோதிகளின் பிரச்சாரங்களாலும், மித மிஞ்சிய அச்சத்தாலும் தடுமாறாது எமது மக்கள் இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் போட்ட தடையோடு, எமக்கு நாமே மேலும் அர்த்தமற்ற தடைகளை போட்டுவிடக் கூடாது. நாம் வாழும் நாடுகளின் சட்டங்களை மதித்து நடப்பதோடு, எமது நாட்டின் விடுதலைக்கான பணிகளை தொடர்ந்து செய்வோம்.

Link to comment
Share on other sites

இருதரப்பிற்கும் இடையிலான இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு பற்றிய பேச்சில் ஆரம்பித்து, யுத்தநிறுத்த அமுலாக்கல் பற்றிய பேச்சாக நலிவடைந்து இப்பொழுது நடுநிலையாளர்களுடனா பேச்சுக்கள் என்று நிலமை மேசமாகிவிட்டது.

ஆனால் (மேற்குலக) ஊடகங்கள் அனாவசியமான முறையில் எதிர்பார்ப்புகளை அதிகரித்து தற்போதைய நடுநிலையாளர்களுடனான சந்திப்பை (பிணக்கிலுள்ள 2 தரப்பும் சந்தித்து பேசவில்லை) சித்தரித்து தலையங்கள் தீட்டுகின்றன.

இந்த சந்திப்பால் கொழும்பு பங்குசந்தை ஏற்றம் கண்டிருக்காம்.

இது போன்ற நகச்சுவைகளிற்கு எப்பதான் முடிவு வந்து மக்களுக்கு உண்மையை சொல்லும் தர்மீக கடமையை செய்யப் போகிறார்களோ?

இலங்கை அரசாங்கத்தின் மீது புலம் பெயர்ந்த மக்கள் ஒரு பொருளாதார தடையை அமுலுக்கு கொண்டுவரவேண்டும். முதலில் கனடாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது போல் தமிழர் வியாபார நிறுவனங்கள் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தற்போதைய இருப்பு முடிந்தவுடன் புறக்கணித்து மாற்று வழிகளை நாட வேண்டும்.

இலங்கை விமான சேவையை புறக்கணியுங்கள்.

இலங்கைக்கு உல்லாச பயணிகளை அனுப்பும் மேற்கத்தேய நிறுவனங்களை அணுகி நிலமையை விளக்கி 3மாதகால அவகாசம் கொடுங்கள். இலங்கையில் இருந்து தைத்த உடுப்புகளை விற்கும் நிறுவனங்களிற்கும் கால அவகாசம் குடுங்கள். அவர்களுடைய வியாபாரம் பாதிக்காத வகையில் ஒத்துளைத்து மாற்றங்களை கொண்டு வந்தால் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

எந்த ஒரு நிறுவனமும் தமது பெயர் "blood money" "funding the military machine of a genocidal country" போன்றவற்றேடு சேர்க்கப்படுவதை விரும்பாது. எமது வேண்டுகோளையும் அவர்களோடு ஒத்துளைத்து வழங்கிய காலக்கெடுவை தட்டிக்கழித்த நிறுவனங்களை பிரச்சாரத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் வெளியிடவேண்டிய துர்பாக்கிய நிலமை உண்டாகும் என்பதை மிகவும் பண்பாக இராஜதந்திரமாக எடுத்துக் கூறவேண்டம்.

இந்த நிறுவனங்களுடனான தொடர்பாடல்கள் மிகவும் பண்பானதாகவும் விபரங்களோடு கூடியதாகவும் இருக்க வேண்டும். அவர்களிற்கு எமது போராட்டத்தின் வரலாறுகள் அர்பணிப்புகள் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. அவர்களிற்கு தெரிந்தது எல்லாம் தமது வியாபாரம் சம்பந்தமானது. எந்தவித மிரட்டல் பாணியும் பாவிக்கக்கூடாது. அவர்களோடு ஒத்துளைத்து மாற்றங்களை கொண்டுவர தயாராக இருப்பதை தெளிவாக்க வேண்டும். அனோமதையமான தொடர்பாடல்கள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் அமைப்புகள் ஊடாக இந்த முயற்சிகள் உத்தியோகபூர்வரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.