Jump to content

நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! – ஒரு பெண் போராளியின் உண்மைக் கதை


Recommended Posts

முதலாவது உயிருடன் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்ற விடுதலைபுலிகளின் கொள்கையில் இருந்து இவர் மாறியதே இன்றைய நிலைக்கு காரணம்.

ஐயா ! அவரின் இரண்டு குழந்தைகளுடன் உயிர் விட்டிருக்கவேண்டுமா இல்லை அவர்களையும் சேர்த்து உயிர்விட்டிருக்கவேண்டுமா என்பதை சற்று விளக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply

  • நாம் பகிரங்கமாகச் சவால் விடுகின்றோம். அவ்வளவு பகிரங்கமாக அரசியல் கருத்துக்களை முன்வைக்கும், பெண் போராளி விபச்சாரத்துக்குப் போவதாகச் சொல்கிறீர்களே விபரத்தைத் தாருங்கள். உதவுகின்றோம். அவ்வாறில்லாமல் இது பொய்யாகப் புனையப்பட்டதென்றால், அனைத்து பெண் போராளிகளிடமும் விகடன் மன்னிப்பு கோர வேண்டும்.

எம்.நியூட்டன் - ஊடகவியலாளர், வீரகேசரி

  • நாங்கள் தொப்புள் கொடி உறவென அடிக்கடி கூறிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒட்டு மொத்தப் பெண் போராளிகளையும் கேவலப்படுத்தும் வகையினில் எழுதிக் கிழிக்கிறார்கள். விகடன் இதுவரை அர்ப்பணிப்புடன் செய்த சிலது கூட இக்கட்டுரையால் நாறடிக்கப்பட்டுவிட்டது.

ஆ.சபேஸ்வரன் - ஊடகத்துறை விரிவுரையாளர்

உதவி ஆசிரியர், யாழ் தினக்குரல்

  • எங்களுக்காகக் கதைப்பதாகக் கூறிக் கொண்டே நாறடிக்கும் முயற்சி. தமிழக செயற்பாட்டாளர்களையெல்லாம் வம்புக்கு இழுத்து, சோர்ந்து போகச் செய்யும் நன்கு திட்டமிடப்பட்ட சதி முயற்சி. பின்னால்; இருப்பவர்கள் யார் என்று புரிகின்றது.

ந.பொன்ராசா - ஊடகவியலாளர் செயலாளர், வட இலங்கை பத்திரிகையாளர் சங்கம்

  • திட்டமிட்ட வகையினில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புலம்பெயர் தேசத்து உறவுகளையும், ஆதரவு செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து அவர்களது உளவரணை சிதைக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சியே அது.இத்தகைய பாரம்பரியத்தினில் இப்போது ஆனந்த விகடனும் தனது பங்கிற்கு கதையொன்றை அரங்கேற்றியுள்ளது. தமிழ் இணையங்கள் சிலவற்றில் யாழ் புகையிரத கட்டடப் பகுதியினில் விபச்சாரம் நடப்பதாக வெளிவந்த கதைகளை நம்பியும் ஈழ ஆதரவாளர்கள் மற்றும் கூட்டமைப்பினரையும் இலக்கு வைத்து திட்டமிட்ட வகையினில் தானே கேள்வி பதிலெனும் கட்டுக் கதையை அரங்கேற்றியிருக்கின்றார் அருளினியன் எனும் நபர். ஒரு மூத்த பெண் போராளி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனை பேர் சொல்லி அழைக்கமாட்டாரென்பது அனைவருக்கும் தெரியும். பலவேளைகளில் அண்ணையாகவோ, அப்பாவாகவோ தான் அவர் இருந்து வந்துள்ளார்.எவ்வளவோ துன்பங்களைச் சந்தித்து, உடைந்தழுகின்ற போதும் மீண்டும் மீண்டும் எழுந்து நடக்கவே அவர்கள் பாடுபடுகின்றார்கள். அவர்களை உங்கள் எழுத்துக்களால் விபச்சாரிகளாக்காதீர்களென கெஞ்சிக் கேட்கின்றோம். தடுப்பு முகாம்களிலும், முள்ளிவாய்க்காலிலும் நடந்து முடிந்தவற்றை மறந்து புது வாழ்வொன்றை வாழ அவர்கள் முற்பட்டுள்ளார்கள். அதேவேளை காணாமல் போன தமது கணவரை. பிள்ளைகளை தேடியலையும் அவலமும் அவர்கள் வசமிருக்கின்றது..

ந.பரமேஸ்வரன் - சிரேஷ்ட ஊடகவியலாளர்

Link to comment
Share on other sites

முதலாவது உயிருடன் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்ற விடுதலைபுலிகளின் கொள்கையில் இருந்து இவர் மாறியதே இன்றைய நிலைக்கு காரணம்.

இரண்டாவது உள்ளூரில் உள்ள அரசியல்வாதிகளிடம் உதவியை கோரியவர் ஏன் வெளிநாடுகளில் இருக்கும் நேசக்கரம் போன்ற அமைப்புகளிடம் உதவி கோரவில்லை ?

இவர் எடுத்த முடிவு ஏனையோருக்கு முன்னுதாரணமாக அமையக்கூடாது என்பதே எனது கருத்து.

[size=5]ம்ம்............ இனிக் கேட்பீர்கள் தானே இந்தக் கேள்வியை! [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா ! அவரின் இரண்டு குழந்தைகளுடன் உயிர் விட்டிருக்கவேண்டுமா இல்லை அவர்களையும் சேர்த்து உயிர்விட்டிருக்கவேண்டுமா என்பதை சற்று விளக்கமுடியுமா?

இயக்கத்தில் சேரும்போதே போராட்டத்தில் உயிர் பிரியலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை இவர் ஒரு போராளி இந்த நிலையை எதிர்பார்த்திருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ம்ம்............ இனிக் கேட்பீர்கள் தானே இந்தக் கேள்வியை! [/size]

ஐயோ ...... நான் கேட்கவில்லை அவர் தான் பட்ட துயரங்களைப் பற்றி எழுதியதினாலையே நானும் இதனை எழுதினேன் ஏனென்றால் எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதற்காக பல நூறுபேர் தங்களை மாய்த்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கத்தில் சேரும்போதே போராட்டத்தில் உயிர் பிரியலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை இவர் ஒரு போராளி இந்த நிலையை எதிர்பார்த்திருக்கவேண்டும்.

நீங்களும் ஒரு நாளாவது இருந்து போட்டு இதைச் சொல்லியிருந்தால் பரவாயில்லை

குசாலா வந்து அசலம் அடிச்சுப் போட்டு ஒரு உயிரைப் பற்றிக் கதைக்க என்ன அருகதை உங்களைப் போன்றோருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் ஒரு நாளாவது இருந்து போட்டு இதைச் சொல்லியிருந்தால் பரவாயில்லை

குசாலா வந்து அசலம் அடிச்சுப் போட்டு ஒரு உயிரைப் பற்றிக் கதைக்க என்ன அருகதை உங்களைப் போன்றோருக்கு

நீங்கள் தப்பாக புரிந்து உள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

முதலாவது உயிருடன் எதிரியிடம் பிடிபடக்கூடாது என்ற விடுதலைபுலிகளின் கொள்கையில் இருந்து இவர் மாறியதே இன்றைய நிலைக்கு காரணம்.

இரண்டாவது உள்ளூரில் உள்ள அரசியல்வாதிகளிடம் உதவியை கோரியவர் ஏன் வெளிநாடுகளில் இருக்கும் நேசக்கரம் போன்ற அமைப்புகளிடம் உதவி கோரவில்லை ?

இவர் எடுத்த முடிவு ஏனையோருக்கு முன்னுதாரணமாக அமையக்கூடாது என்பதே எனது கருத்து.

[size=4]உண்மையில் "சரணடைந்தால் அவர்களை சர்வதேச போர் விதிமுறைகளின் படி கண்காணிப்போம்" என்று கூறியவர்கள் - சர்வதேசம், ஐ.நா. [/size]

[size=1]

[size=4]ஒரு மில்லியன் அளவில் புலம்பெயர்ந்து உள்ள தமிழ் சமூகத்தின் ஒருவனான நான் அதே சர்வதேச சமூகத்திடம் முறையிடவோ இல்லை நியாயம் அவர்களுக்காகவோ கேட்க திராணியற்றவன் என்பதும் இந்த தொடர் அவல நிலைக்கு காரணம். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு பங்களிப்பை செய்து அவர்களை வாழவைக்க முயற்சி செய்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒருசில கருத்துக்களை பார்க்கும்போது தங்கள் கௌரவத்திற்காக எதையுமே விட்டுக்கொடுக்கிறார்களில்லை. ஆனால் அங்கே முன்னைய போராளிகளை யாருமே மதிப்பதில்லை.அவர்களை மதித்து நடந்தாலும் பயம். அவர்களுக்கு உதவி செய்தாலும் வில்லங்கம்.சகலதும் அச்சொட்டான கண்காணிப்புகள்.

Link to comment
Share on other sites

அருளினியன் யாழ் இந்து மாணவன் எனது முகபுத்தக நண்பரும் கூட ,இப்போ விகடன் பத்திரிகையாளராகவும் இருக்கின்றார் .

இப்படியான விடயங்கள் நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது ,அதை மறுப்பதற்கில்லை ஆனால் இந்த பேட்டியும் அதை எழுதியவிதமும் பாவித்த வார்த்தை பிரயோகங்களும் தமிழ் நாட்டு தமிழர்களை குறி வைத்ததாகவே படுகின்றது .

அவர்களுக்கு இலங்கை தமிழர்களின் பிரச்சனையை எப்படி சொன்னாலும் காதில் ஏற்றிக்கொள்ளமாட்டார்கள் ,ஆனால் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு ,தகாதமுறை உறவு என்று ஏதும் சொன்னால் பொங்கி எழுந்துவிடுவார்கள்.

முன்னரும் ஒருமுறை எழுதியிருந்தேன் அங்கு எத்தனை கூட்டம் போட்டு எமது பிரச்சனைகளை சொன்னோம் எழும்பி போய்விடுவார்கள் (எங்கள் பேச்சாளர்களும் அடக்கு முறை ,பிராந்தியநலன் ,மனித உரிமை என்ற சொற்களை பாவிக்க அவர்கள் வேறுத்துவிடுவார்கள்) .நேரடியாக பாலியல் வல்லுறவு என்று தொடங்கி அதை வேறு அக்குவேறு ஆணிவேறாக மேய்ந்தால் சிங்கள அரசை திட்டாத திட்டு திட்டிவிட்டு எங்களுக்கும் அவனை கொல்லுங்கள் என்று காசை அள்ளி வீசுவார்கள் .இது நான் நேரடியாக அனுபவித்தது ,இதைதைதான் இப்போ மீண்டும் தொடங்கியிருக்கின்றார்கள் .அவர்களுக்கு விளங்கும் பாசையில் .

Link to comment
Share on other sites

[size=4]இன்றுள்ள தாயக நிலைமையில் இன்று பிறக்கும் தமிழ் பெண் குழந்தைக்கும் கூட ஒரு இருள்மயமான எதிர்காலமே உள்ளது. அவள் மீது கூட ஒரு இருட்டான வெறுமையான வாழ்வே சூழும் என்ற நிலை உள்ளது. [/size]

[size=1][size=4]இதை மாற்றி அமைக்கப்போகின்றோமா? [/size][/size]

[size=1][size=4]இல்லை தொடர்ந்தும் முட்டைகள் மீது உள்ள மயிர்களை பற்றி விவாதிக்கப்போகின்றோமா? [/size][/size]

Link to comment
Share on other sites

அருளினியன் யாழ் இந்து மாணவன் எனது முகபுத்தக நண்பரும் கூட ,இப்போ விகடன் பத்திரிகையாளராகவும் இருக்கின்றார் .

இப்படியான விடயங்கள் நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது ,அதை மறுப்பதற்கில்லை ஆனால் இந்த பேட்டியும் அதை எழுதியவிதமும் பாவித்த வார்த்தை பிரயோகங்களும் தமிழ் நாட்டு தமிழர்களை குறி வைத்ததாகவே படுகின்றது .

அவர்களுக்கு இலங்கை தமிழர்களின் பிரச்சனையை எப்படி சொன்னாலும் காதில் ஏற்றிக்கொள்ளமாட்டார்கள் ,ஆனால் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு ,தகாதமுறை உறவு என்று ஏதும் சொன்னால் பொங்கி எழுந்துவிடுவார்கள்.

முன்னரும் ஒருமுறை எழுதியிருந்தேன் அங்கு எத்தனை கூட்டம் போட்டு எமது பிரச்சனைகளை சொன்னோம் எழும்பி போய்விடுவார்கள் (எங்கள் பேச்சாளர்களும் அடக்கு முறை ,பிராந்தியநலன் ,மனித உரிமை என்ற சொற்களை பாவிக்க அவர்கள் வேறுத்துவிடுவார்கள்) .நேரடியாக பாலியல் வல்லுறவு என்று தொடங்கி அதை வேறு அக்குவேறு ஆணிவேறாக மேய்ந்தால் சிங்கள அரசை திட்டாத திட்டு திட்டிவிட்டு எங்களுக்கும் அவனை கொல்லுங்கள் என்று காசை அள்ளி வீசுவார்கள் .இது நான் நேரடியாக அனுபவித்தது ,இதைதைதான் இப்போ மீண்டும் தொடங்கியிருக்கின்றார்கள் .அவர்களுக்கு விளங்கும் பாசையில் .

அரிசுன் தனது வார்த்தையில் இது கட்டுக்கதை என்கிறார். அல்லது அவரின் நண்பரிடமிருந்து இந்த போராளியின் விலாசத்தை எடுத்து தந்தால், அதை சீறீதரனுக்கு அனுப்பி வைக்க முடியும். அவ சிறீதரனை தேடி போக வேண்டியதிலை. தன்னைதான் அடையளப்படுத்த தேவை இல்லை. கூட்டமைப்பின் தன் மானமிக்க தமிழன் உதவுவார்.

Link to comment
Share on other sites

[size=3]நான் எனது உடலைத் தான் விற்கிறேன்.ஆன்மாவை அல்ல.// பெண்போராளி தம்மிடம் சொன்னதாக விகடன்[/size]

[size=3]நான் எனது உடலைத் தான் விற்கிறேன்.ஆன்மாவை அல்ல.//[/size]

[size=3]இதே வார்த்தையை அவர் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதிய தனது பதிவில் எழுதியுள்ளார் பேட்டி கண்ட அருளினியன் #[/size]

[size=2]ஈழத் தமிழர்கள் நாங்கள் தோற்றுவிட்டோம் என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக் கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.//[/size]

[size=2]இந்த வார்த்தை போராளியின் வார்த்தையாக வெளிவந்திருக்கிறது.ஆனால் [/size]

[size=2]இந்த வார்த்தைகள் அருளினியன் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் என்னத்தச்சொல்ல என்னும் தலைப்பில் எழுதிய பதிவில் இருக்கிறது.// விகடனுக்கு ஏன் இந்த பாலியல் தொழில்.. கஸடம் என்றால் இதழின் விலையை ஏத்த வேண்டியதுதானே? ---Parani[/size]

[size=2]தனது வக்கிரமான கற்பனைக்கு காலமாமைப்பதற்கு போராளிகளின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வளவே.-- Antony[/size]

(முகநூல்)

Link to comment
Share on other sites

21264_3858762753893_1579555552_n.jpg

Link to comment
Share on other sites

[size=4]தாய்த்தமிழகத்தில் இருந்து வெளிவரும் விகடனுக்கு அன்புகலந்த வணக்கம்![/size]

[size=4]நொந்து போய் மீளமுடியாத அவலத்துள் வாழும் ஈழத்தமிழ் மக்களின் மனங்களுடன் உங்களை வணங்குகிறோம். இனவிடுதலைப் போர் தொடர்பிலான நியாயங்களை தமிழக மக்களுக்கு எடுத்துச் சென்ற தமிழக ஊடகங்களில் பிரதான பங்கைப் பெறத்தக்க வகையில் செயற்பட்ட உங்களது சஞ்சிகையில் அண்மையில் வெளிவந்த ஆக்கம் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சடைய வைத்திருக்கிறது.[/size]

[size=4]உங்கள் தனித்துவத்துடன், புதிய, புதுமையான விடயங்களை சுவாரஸ்யமாக வெளியிட்டு வரும் நீங்கள் தமிழகத்தின் ஏனைய சஞ்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிவருகிறீர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.[/size]

[size=4]தேசியவிடுதலைப் போருக்காக நாற்பதாயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அது போன்ற இரண்டு மடங்கிற்கும் அதிகமான போராளிகள் தங்கள் அங்கங்களை பறிகொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் மேலாக பல இலட்சம் மக்கள் தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக எமது இன விடுதலைப் போராட்டம் கடக்க முடியாத நெருப்பாறுகளைக் கடந்தே பயணித்தது. இத்தனை ஆயிரம் இழப்புக்களும் தமிழீழம் என்ற நோக்கம் ஒன்றை இலக்காகக் கொண்டே அமைந்திருந்தன. சில வார்த்தைகளுக்குள் சில பக்கங்களுக்குள் எழுதி முடித்துவிடும் அளவிற்கு சின்னத்தனமானதல்ல எமது விடுதலைப் போராட்டம் என்பதை எமது மாவீரர்களும் கரும்புலிகளும் நிகழ்த்திச் சென்ற வரலாற்றுப்பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் புரியும்.[/size]

[size=4]இத்தனை ஆயிரம் இழப்புக்களின் பின்னாலும் எமது போராட்டம் நசுக்கி அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் தாய்த்தமிழகத்திலும் புலத்திலும் இன்னமும் சுடர்விடும் எமக்கான ஆதரவுத்தளம் எம் மக்களை ஆறுதலடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் தேசிய விடுதலைப்போரில் பங்கெடுத்த முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரியாக தொழில்புரிவதாகத் தெரிவித்து அருளினியன் என்பவர் எழுதியிருக்கின்ற ஆக்கம் முழுமையான உள்நோக்கம் கொண்டது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.[/size]

[size=4]முழுக்க முழுக்க விடுதலைப்புலிகளையும் விடுதலைப்போராட்டத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதாக குறித்த பேட்டி கற்பனை மூலம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றது. தங்கள் சஞ்சிகையின் மாணவ நிருபராகப் பணி புரிகின்ற குறித்த நபர் யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்தவர் என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவரது தந்தையார் தற்போது வரையில் தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக விளங்குகின்ற டக்ளஸ் தேவானந்தாவின் மிக நெருக்கத்துக்குரியவர் என்பது தங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்து கலாசார, பண்பாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தபோது உங்கள் மாணவப் பத்திரிகையாளரின் தந்தையார் சிவமகாராஜா அமைச்சரின் மிகுந்த விசுவாசத்துக்குரிய ஒரு நபராக பணிக்கமர்த்தப்பட்டிருந்தார். இலகுவில் எவராலும் நெருங்க முடியாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அருகமர்ந்து பணி செய்யும் பாக்கியம் பெற்ற சிவமகாராஜாவின் அன்புக்குரிய புத்திரனே முன்னாள் பெண் போராளியையும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் புனைதலை மேற்கொண்டிருக்கின்றார்.[/size]

[size=4]இதனைவிடவும் அருளினியன் பதிவுகள் என்கிற அவரது தனிப்பட்ட இணையப்பதிப்பினைப் பார்வையிட்டால் அவரது தேசிய விடுதலையைக் கொச்சைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டிருக்கின்ற பதிவுகளைப் பார்வையிட முடியும். அவரது தந்தையாரின் விசுவாத்துக்குரிய அமைச்சருக்கு விசுவாசம் காட்டுவதற்காகவே அருளினியன் தனது புனைதலை முன்னாள் போராளி என்ற விடயத்தின் மூலம் முன்வைத்திக்கின்றார். இந்த விடயம் மட்டுமே குறித்த பேட்டியின் உண்மைத் தன்மை தொடர்பில் தோலுரித்துக் காட்டியிருக்கும் என்று நம்புகிறோம். ஆனாலும் குறித்த பதிவு தொடர்பிலான சில தெளிவுறுத்தல்களை மேற்கொள்வதற்கு நாங்கள் முற்படுகிறோம்.[/size]

[size=4]முற்றிலும் புனையப்பட்ட படைப்பு என்பதற்கான பெருமளவான ஆதாரப்படுத்தல்களை முன்வைக்க முடியும். அவற்றில் சிலவற்றை தங்கள் பார்வைக்காக முன்வைக்கின்றோம்.. விகடனின் தனித்துவங்களில் ஒன்று செவ்வி வழங்குபவர்கள் சொல்லும் வார்த்தைகளை அட்சரம் பிசகாமல் அவ்வாறே ஒப்புவிப்பது. ஆனால் முன்னாள் பெண் போராளி என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ள செவ்வியில் அதற்கு முற்றுமுழுதாக மாறுதலையே காண முடிகின்றது.[/size]

[size=4]விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களோ அல்லது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த மக்களோ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை சாதாரண உரையாடல்களின் போது கூட “பிரபாகரன்” என்று குறிப்பிடமாட்டார்கள் என்பது முக்கியமான விடயமாகும். அண்ணை அல்லது தலைவர் என்பதுதான் அவர்களின் அடைமொழியாக இருக்கும். குறிப்பாக போராளிகள் அனைவரும் “அண்ணை” என்றே தலைவர் அவர்களை அழைப்பார்கள். ஆனால் பேட்டியில் பிரபாகரன் என்று அழுத்தம் திருத்தமாக பல இடங்களில் அவரது பெயர் விழிக்கப்பட்டிருக்கின்றது.[/size]

[size=4]விடுதலைப்புலிகளின் கட்டமைப்பில் பொறுப்புக்கள் நியமிக்கப்படுகின்ற போது கடந்தகாலங்களில் போராளிகள் செயற்பட்ட விதம், அவர்களின் திறைமை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டே பதவி நிலைகள் வழங்கப்பட்டுவந்திருக்கின்றன. இந் நிலையில சாதாரண பொறுப்புக்களில் உள்ளவர்களுக்கே பல்வேறு பயிற்சிகள், தலைமைப் பண்புகளை அதிகரிப்பதற்கான வகுப்புக்கள் இன்னும் பெருமளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இவ்வாறான நிலையில் குறித்த பெண் ஒரு முன்னணித் தளபதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றார். அவர் ஒரு முன்னணித் தளபதியாக இருந்திருந்தால் அவர் மிகத்திறமை வாய்ந்த ஒருவராகவே இருந்திருப்பார். பேட்டியில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று அவர் பிச்சை எடுக்கும் நிலைக்குச் சென்றிருப்பதற்கான வாய்ப்பே இல்லை.[/size]

[size=4]சாதாரண கச்சான் விற்பனையில் இருந்து வீதித் திருத்த வேலைகளில் கூட யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஈடுபட்டுவருகின்றார்கள். வட்டுக்கோட்டையில் இருந்து பல கிலோமீற்றர் தூரம் பயணித்து யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் சோர்ந்து படுக்கவேண்டிய தேவை அந்தப் போராளிக்கு ஏற்பட்டிருக்க சந்தர்ப்பமே இல்லை. அதனைவிடவும் முன்னாள் போராளி என்பதால் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற சாரப்படவும் கருத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளுக்கு தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், விற்பனை நிலையங்கள் உட்பட்ட பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. முன்னாள் போராளிகளை மக்கள் எவரும் தீண்டத் தகாத பொருட்களாகப் பார்க்கவில்லை. பிச்சை போடுவதற்கு கூட யாழ்ப்பாண மக்கள் பயந்ததாக அவரின் பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் அவ்வாறான ஒரு இழி நிலைக்கு இன்னும் போகவில்லை. பல போராளிகள் பிறந்த அந்த மண்ணில், அம்மக்களின் விடுதலைக்காக போராடிய போராளிக்கு பிச்சை போடுவதற்கு தயங்கும் நிலையும் அங்கில்லை.[/size]

[size=4]இதேவேளை குறித்த பேட்டியின் ஊடாக அரசியல் பழிவாங்கலுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. குறித்த பேட்டியில் , தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளையும் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளையும் இலக்குவைத்து அவர்களை சாடி எழுதப்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும், முதலாவதாக தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கூறிக்கொள்பவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் கூட குறித்த பதிவு எழுதப்பட்டிருக்கவில்லை. தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகள் செயற்பட்டுவருகின்றன. அவை இரண்டும் முடிந்த வரையில் உதவி தேடிச் செல்லும் ஏதிலிகளுக்கு உதவி வருவதாகவே நாம் அறிகிறோம். தம்மிடம் இல்லாவிடினும் புலத்தில் உள்ளவர்களின் துணையுடன் முடிந்தவரையில் உதவிகள் வழங்கப்பட்டே வந்திருக்கின்றன. அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டினை முன்வைக்கும் அவர் யாரிடம் உதவிக்குப் போய் மனம் உடைந்தார் என்பதற்கான ஆதாரம் விகடனிடம் இருக்கிறதா?[/size]

[size=4]அதேவேளை, “அதனால் தான் இன்றும் இனி ஒரு ஈழப்போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்” என்றெல்லாம் சும்மா எழுதிக்கொழுத்திப் போடுகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்ற அதேபேட்டியில் எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து “எப்போது உங்கள் அடுத்த போராட்டம்” என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அடுத்தவேளை உணவுக்காக பாலியல் தொழில் செய்யும் ஒரு நபர் தமிழகத்தில் என்ன எழுதுகிறார்கள்? எவ்வாறு எழுதுகிறார்கள் என்று ஆய்வு செய்து அறிந்து கொள்ளுமளவிற்கு நிலைமை இருக்கிறதா? அல்லது அவரிடம் செல்பவர்கள் விளக்கம் சொல்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு செவ்வி கண்ட நபர் பதில் தருவாரா?[/size]

[size=4]இன்னொரு முக்கியமான விடயத்தினை நோக்க முடியும்.. வவுனியாவில் வைத்து தானும் தனது குழந்தைகளும் பிரிக்கப்பட்டதாக குறிப்பிடும் அவர், அந்தக் குழந்தைகள் எங்கிருந்தன. அவர்களை யார் பராமரித்தது? எப்போது மீண்டும் தன்னுடன் சேர்ந்தார்கள் என்ற விடயத்தினை எந்த இடத்திலும் சுட்டிக்காட்டவில்லை. குழந்தைகள் மீது அதீத பாசத்தின் விளைவாகவே அவர் பாலியல் தொழிலுக்குச் சென்றதாக சொல்லப்பட்டிருக்கின்றது. தாய் தனது பிள்ளைகளை பிரிந்த நாட்களை மறந்திருப்பாரா? அந்த விடயத்தினைக் கூறாமல் மறந்து போகும் நிலையில் ஒரு தாயுள்ளம் இருக்குமா?[/size]

[size=4]இதனை விடவும் சிறிது காலத்தின் பின்னர் இராணுவத்தினர் அவர்களாகவே விடுவித்ததாகவும் முல்லைத்தீவில் ஒரு காட்டுப் பகுதியில் விடப்பட்டதாகவும் சொல்லியிருக்கின்றார். இராணுவத்திடம் சரணடைந்த தளபதி நிலையில் இருந்த விடுதலைப்புலிப் புலிகள் எவரும் இன்றுவரையில் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில் சோதியா படையணியின் முன்னணித் தலைவி எவ்வாறு விடுதலையானார்? அதனைவிடவும் முன்னாள் போராளிகளை இராணுவம் கொண்டு சென்று காடுகளில் மீள்குடியேற்றம் செய்வதில்லை. அவர்களை குடும்பத்தவர்கள் பொறுப்பேற்றால் மாத்திரமே, இராணுவத்தினரால் கையளிக்கப்படுவர். விடுதலை செய்யப்பட்ட அனைத்துப் போராளிகளுக்கும் ஐ.ஓ.எம் நிறுவனம் தலா ஒரு இலட்சத்தினை அண்மித்த தொகை நிதி உதவி வழங்கி வருகின்றது. அதுவும் சுயதொழில் முயற்சிக்காக மட்டுமே அந்த உதவி வழங்கப்படுகின்றது. அதன் மூலம் வீதியோர வியாபாரம் கூட அந்தப் போராளியினால் செய்திருக்க முடியும்.[/size]

[size=4]முல்லைத்தீவில் காட்டில் விட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஒரு தளபதிக்கு வன்னியில் எந்த இடத்தில் விடப்பட்டோம் என்பதைக் கூட அவரால் அறிந்து கொள்ளமுடியவில்லையா? அல்லது முன்னாள் போராளியை வைத்துக் கதை எழுதிய நபருக்கு முல்லைத்தீவில் இருக்கும் இடங்கள் தெரியாதா? என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.[/size]

[size=4]குறித்த செவ்வியில் மிக மோசமாக இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுவதுடன், குறித்த விடயம் சொல்லப்படும் பாங்கு எழுதியவரின் எண்ண ஓட்டத்தினை பிரதிபலிக்கின்றதோ என எண்ணத் தோன்றுகிறது. காரணம் இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்கள் மிக மோசமான எதிர்விளைவை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை ஆனந்தவிகடன் பேட்டி காணும் அளவிற்கு இலங்கை இராணுவம் அதி முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக எண்ணுகிறீர்களா? அல்லது இராணுவப் புலனாய்வு மிகவும் நலிவடைந்து காணப்படுவதாக நினைக்கிறீர்களா?[/size]

[size=4]அனைத்தையும் கடந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த குறித்த எழுத்தாளர், ஒரு பெண் குறிப்பாக அவரது பார்வையில் மிகச் சிறந்த வீராங்கனையாகக் கருதப்படுகின்றவர் இவ்வாறான நிலையில் இருப்பதை பார்த்து எழுதி விளம்பரம் தேட முற்படுவாரா? அல்லது அவரின் அடுத்த கட்ட வாழ்வியலுக்காக என்ன செய்ய முற்பட்டார்? என்பதைத் தெரியப்படுத்த முடியுமா? தமிழர் தாயகத்தில் பிறந்த உணர்வுள்ள ஒருவன் இவ்வாறான நிலையில் இருக்கின்ற ஒரு பெண்ணை தொடர்ந்தும் இவ்வாறான இழிவான தொழில் செய்வதற்கு அனுமதிக்கமாட்டான். யாழ்ப்பாணத்தில் இன்னமும் பெருமளவு சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இருக்கின்றன. எங்காவது ஒரு இடத்தில் அந்தக் குழந்தைகளை சேர்ப்பித்திருக்க முடியும். குறித்த பெண் போராளியின் பரிதாப நிலையினை யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஏதாவது ஒரு கத்தோலிக்க மத நிர்வாகத்தினர்களிடம் தெரிவித்திருந்தால் அவர்கள் கட்டாயம் அவருக்கான மாற்றீட்டு ஏற்பாடு ஏதாவது செய்திருப்பார்கள். இதனை வேண்டுமானால் நாங்கள் பகிரங்க சவாலாக விகடனிடம் முன்வைக்கின்றோம் முடிந்தால் குறித்த பெண் தொடர்பிலான சரியான தகவல்களை, அனுப்பிவக்க முடியுமா?[/size]

[size=4]ஆக, இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குறித்த பேட்டியினுள்ளே புதைந்திருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் முன்னுக்குப்பின் முரணாக பேட்டி முழுமையிலும் முரண்பாடுகளைக் கொண்டே புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை தான் இந்த முன்னாள் போராளி தொடர்பிலான பேட்டி என்பதை விகடன் நிர்வாகிகளுக்குச் சுட்டிக்காட்டவிரும்புகிறோம்.[/size]

[size=4]மதிப்புக்குரிய விகடன் நிர்வாகத்தினரே![/size]

[size=4]எங்களுக்காக எழுதும் உங்கள் பணிகளுக்காக எங்கள் தலைகளைச் சாய்த்துக் கொள்கிறோம். அரசியல் பழிவாங்கல்களுக்காக மிகப் பெரிய ஊடக நிறுவனம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது. ஆனாலும் விகடன் நிர்வாகம் மீதான விமர்சனமே அதிகளவில் வெளிவந்திருக்கின்றது. உண்மையில் குறித்த கட்டுரையின் பின்னணி என்ன? என்பதை வெளிப்படுத்துவதும் எதிர்காலத்திலாவது உரிய பதிவுகளை ஆதாரங்களுடன் விகடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதுமே எங்களின் எதிர்பார்ப்பாகும். எனவே எமது இனத்தின் வலி உணர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைகொள்கின்றோம்..

நன்றி.

தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்.[/size]

[size=4]http://www.tamillead...6-05-49-34.html[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்த விகடன் நடுநிலைமையில் நின்று இந்தக் கட்டுரையையும் பிரசுரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]இராமர்கள் தேடும் சீதைகள் - யோ. கர்ணன்[/size]

ST07101.jpg

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த பெண் போராளியொருவருடையதென நேர்காணலொன்றை அண்மையில் ஆனந்த விகடன் சஞ்சிகை வெளியிட்டிருந்தது. அதனைப் படித்த பொழுது, யுத்தத்தின் பின்னரான சூழலில் அவர்களின் பிரச்சனை வெளிவந்ததான திருப்தியோ, அவர்களைக் கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்ற கோபமோ உண்டாகவில்லை. மாறாக மிகுந்த அயர்ச்சியே உண்டாகியது.

நமது சமூகம் ஒன்றிணைந்து நூதனமாகக் கையாள வேண்டிய பிரச்சனையொன்று, பெண்ணுடலை அலசும் நமது இரகசிய ஆசைகளினால், நடுச் சந்தியில் அவர்களை நிர்வாணமாக்கி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம் என்பதால் உண்டான அயர்ச்சியது.

இந்த நேர்காணலைத் தொடர்ந்து வழமை போலவே இணைய உலகம் இரண்டுபட்டது. வழமையான இணையப் போராளிகளெல்லோரும் அம்பறாத்துணிகளுடன் ‘தேசியக்காவல்’ போருக்குப் புறப்பட்டார்கள். இப்படியாக நடந்த விவாதங்களையெல்லாம் படிக்க வேண்டுமென எனக்கும் விதிக்கப்பட்டிருந்தது. விதிப்பயனாய், படித்த பொழுது, விடுதலைப்புலிகள் பற்றிய தென்னிந்திய திரைப்படமொன்றை பார்க்கும் உணர்வே உண்டானது.

3.jpg

இவர்களில் யாருக்குமே அந்தப்பெண் பாலியல் தொழிலாளியாகயிருக்கிறார் என்பது பிரச்சனைக்குரியதாகியிராது என்றே நினைக்கிறேன். ஏனெனில் பாலியல் தொழிலாளிகளாகயிருக்கும் வன்னிப் பொதுமக்கள், போராளிகள் பற்றிய தகவல்கள் முன்னரும் சில தடவைகள் வெளிவந்துதானிருக்கிறது. அப்பொழுதெல்லாம் நமது தேசியவீரர்கள் கடைவிழியில் வழிந்த நீரை சுண்டியெறிந்துவிட்டு, மரணித்துவிட்ட பெண் புலிகள் பற்றிய பிம்பத்தின் சடலத்தை ஊரெல்லாம் கொண்டு திரிந்து அஞ்சலிக்கூட்டம் நடத்திக் கொண்டுதானிருந்தார்கள்.

இந்த நேர்காணலையும் ஊருராக கொண்டு திரிந்து செத்தவீடு கொண்டாடுவதற்கான பிரகாசமான வாய்ப்புகளிருந்த போதும், ஒரேயொரு பிசகான வசனமிருந்து நூழிழையில் எல்லாவற்றையும் குழப்பிவிட்டது. அந்த வசனம் மட்டுமில்லையென்றால், தமிழ்த்தேசியத்தைக் காக்க வந்த இன்னொரு பெருந்தூண் என நேர்காணலைச் செய்தவர் கொண்டாடப்பட்டிருப்பார். போராட்டத்தில் இன்னொரு போராளி பலவந்தமாக இணைக்கப்பட்டிருப்பார். துரதிஸ்டவமாக அப்படியெதுவும் நடக்கவில்லை. ‘இன்னொருமுறை போராடமாட்டோம்’ என்ற சாரப்பட அவர் சொன்னதாகக் குறிப்பிட்டிருந்தது உலக அளவில் இணையப் போராளிகளை பதட்டமடைய வைத்திருந்தது.

நேர்காணல் வந்ததும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூட உடனடியான மறுப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

இணையப் போராளிகளினதும், சிறீதரனினதும் அறிக்கையில் தூக்கலாகத் தெரிந்த கருத்து, போராளிகள் பாலியல்தொழிலில் ஈடுபட மாட்டார்கள். அப்படியொரு நிலை வர நாம் இடமளியோம் என்பதே.

இந்த இடத்தில் நமது அரசியல்வாதிகளிடமும், செயற்பாட்டாளர்களிடமும், இணையப் போராளிகளிடமும், வாய்ச்சவடால்காரர்களிடமும் வைக்கும் தாழ்மையான விண்ணப்பமென்னவென்றால், தயவுசெய்து உங்கள் மனச்சாட்சிகளை ஒருமுறை நீங்களே கேள்வி கேட்டுப்பாருங்கள். நீங்கள் சொன்னது உண்மையா? அவர்களிற்கு உதவ உங்களிடம் என்ன செயற்றிட்டம் இருக்கிறது? இந்தப் பணிகளை முன்னெடுக்க ஏதாவது பொறிமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறீர்களா? இல்லையெனில் உங்கள் உதவித்திட்டம் குறித்த நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தாதா? உதவிகள் பலரை சென்றடைய முடியாதல்லவா? ஏனெனில் நானறிந்த வரையில், உதவி செய்வதாகக் கூறிக் கொள்பவர்களின் எண்ணிக்கையை விடவும், உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவானது.

அறச்சீற்றம் கொண்ட நண்பர்களெல்லோரிடமும் ஒரு கோரிக்கை. அவர்களையும் நமது சக மனுசியாக பாருங்கள் என்பதே. அவர்கள் போராளிகள், தற்செயலாக தோற்றுவிட்டாலும் இப்பொழுதும் காலையில் சத்தியப்பிராமாணம் எடுத்து, அணிநடையில் திரிகிறார்கள் என்பது போன்ற பாவனைகளை உருவாக்கி உங்கள் பொறுப்புகளிலிருந்து தப்பிக்க முயலாதீர்கள்.

வாழ்வின் எந்தத் தருணங்களையும் இழக்காமல் கொண்டாடியபடி, படித்து, பட்டம்பெற்று, தொழில் பெற்று, கல்யாணமாகி பிள்ளை பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், தங்களைப் போன்ற உணர்வுள்ள ஒரு மனிதப்பிறவியாகவே அவர்களையும் அணுக வேண்டும். அவர்களும் வாழ்வின் மீது எல்லாவிதமான தாகமுமுடையவர்கள். எல்லா தருணங்களையும் வாழ்ந்துவிட வேண்டுமென்ற துடிப்புள்ளவர்கள். ஆகவே இந்த வாழ்க்கையை – அதனை வாழ்ந்து முடிக்க சாதாரண மனிதர்களிற்கு எப்படியான சவால்களிருக்கிறதோ, அதே சவால்களை எதிர்கொண்டபடி- வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிற்கு இந்த உலகம் எந்தவிதமான சாத்தியங்களை வழங்கியுள்ளதோ, அவற்றினூடாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேளை தவறாமல் பசியைக் கிளறும் வயிறு அவர்களிற்குமுள்ளது. ஆகவே, சமூகத்தின் எல்லா அடுக்குகளிலுமிருப்பதைப் போல, பெண் போராளிகளிலும் சிறுவீதத்தினர் பாலியல் தொழிலாளிகளாகயிருக்கிறார்கள் என்பதே உண்மை.

4.jpg

நாங்கள் அவர்களிற்கு எப்படியான வாய்ப்புக்களை வழங்கியுள்ளோம்? ‘விடுதலைப்புலி தங்கச்சி உன் வீர எழுச்சி தமிழீழப் புரட்சி’ என்று பாடியபடி, என்ன நடந்தாலும்- காற்றைக் குடித்தபடியாவது- அவர்கள் புலிகளில் இருந்தது போலவே இருப்பார்கள் என இப்பொழுதும் யாராவது கண்களை மூடிக் கொண்டிருப்பார்களெனில், நாம் தமிழர் கட்சியில் இருப்பதற்க மட்டுமே அவர்கள் லாயக்கு.

போராளிகள், பொதுமக்கள் என்ற பேதமின்றி வறுமை நிமித்தம் திசைமாறி செல்பவர்கள் பற்றிய தகவல்கள் இதற்கு முதல் வந்ததில்லையா? கடந்த இரண்டு வருடங்களிற்கு மேலாகவே வவுனியா நகர விடுதிகளில் கிளிநொச்சி முல்லைத்தீவு ஏழைப்பெண்கள் பாலியல் தொழிலாளிகளாகயிருப்பது பற்றிய தகவல்கள் வந்து கொண்டுதானேயுள்ளன. இதனையெல்லாம் சிறீதரன் அறிந்திருக்கமாட்டார் என நம்ப முடியாது.

இந்த இடத்தில் அரசியலரங்கில் உள்ள தமிழ்க்கட்சிகள் எல்லாவற்றுக்கும் இந்த விடயத்திலுள்ள கூட்டுப் பொறுப்பை நினைவுபடுத்த விரும்புகிறேன். நானறிந்தவரையில் தமிழ்த்தேசிய அரசியலாளர்களிற்கு மாற்றானவர்கள் எவரும் இந்த விடயத்தில் சம்மந்தப்படுவதில்லை. ‘நாங்கள் அப்பவே அப்பிடி’ என விடுதலைப்புலிகளிற்கு எதிரான அதே மனநிலையுடையவர்களாகவே இருக்கிறார்களோ தெரியவில்லை. விடுதலைப்புலிகளையோ, அவர்களது அரசியலையோ எதிர்ப்பதும், ‘திரும்பி வந்து கொண்டிருப்பவர்கள்’ இயல்பு வாழ்விற்கு திரும்ப உதவுவதும் வேறுவேறானவையென்ற புரிதலுமில்லையென்றால், அவர்களிற்காக இரக்கப்பட மட்டுமே முடியும். பன்மைத்துவம், சகிப்புத்தன்மை, ஜனநாயகம், இணக்கமான அரசியல் என்ற அவர்கள் பேச்சிற்கும் செயலிற்குமிடையிலான இடைவெளிகள் புலப்படும் புள்ளியொன்றிது.

ஆயினும், இந்த விடயத்தில் பொறுப்புணர்வோடு செயற்படுவதற்கான தார்மீகப் பொறுப்பு தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கே அதிகமாகவுள்ளது. இதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கான பிரகாசமான வாய்ப்புகளுமுள்ளன. எனவே, இந்த விடயத்தில் ‘சத்தமின்றி’ உதவி செய்வதாக அவர்கள் குறிப்பிடுவதை தவிர்த்து, ‘சத்தமிட்டு’ – அதாவது ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பொன்றை நிறுவி, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், போரளிகள், காணாமல் போனவர்கள் பற்றிய விடயங்களைக் கையாள வேண்டும். அரசு அதனைச் செய்யப் போவதில்லை. அந்தக் கடமையை செய்யாமல், இந்த விதமான அறிக்கைள் மூலம் விடயங்களைக் கடந்து செல்லும் அரசியலை நமது அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்.

யுத்தத்தின் பின்னர் வன்னிப் பகுதியில் பாலியல்த் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளமை பலரும் சுட்டிக்காட்டிய ஒன்றுதான். அதனை வாழ்வியல்ப் பிரச்சனையென்றளவில் அணுக வேண்டுமே தவிர, இப்பொழுதும் இலட்சியம் சார்ந்து முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்க முடியாது. பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதற்குத்தான் இது உதவும். தவிரவும் பலொழுக்கம் சார்ந்த விடயங்களை எந்த சிந்தாந்த, கோட்பாட்டு எல்லைகளிற்குள்ளும் கட்டுப்படுத்த முடியாதென்ற உண்மையையும் ஒத்துக்கொள்ள வேண்டும். வன்னியில் எல்லோராலும் கைவிடப்பட்ட பெண்களில் சிறு வீதத்தினரின் தெரிவு பாலியல் தொழிலாகயிருக்கின்றதென்பதே சரியாகயிருக்கும். சி.ஐ.டி வேலை பார்த்து, அவர்களின் யாரெல்லாம் போராளிகளாகயிருந்தார்கள் எனக் கண்டுபிடித்து, இழுத்து வந்து சந்தியில் நிறுத்துவது முறையல்ல. நமது அத்தியாவசியப் பணியும் அதுவல்ல. அவர்களின் வாழ்விற்கான வழிகளைத் திறந்துவிடுவதே பொருத்தமானது.

இந்த விடயத்தில் நமது சமூகம் காட்டிக் கொள்ளும் பதட்டத்தைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. வறுமை காரணமாக பெண்கள் -குறிப்பாக முன்னாள் போராளிகள்- பாலியல் தொழிலாளிகளாவது இப்பொழுதுதான் ஏற்பட்டதென்றுமில்லை. விடுதலைப்புலிகளின் காலத்திலேயே இருந்ததுதான். விடுதலைப்புலிகளின் மகளிர் படையணியொன்றிலிருந்து விலகிய ஒருவர் கிளிநொச்சி நகரமையத்தில் பிரபல்யமான பாலியல்த் தொழிலாளியாகயிருந்தார். அவரும் காலொன்றை இழந்தவர்தான். சக்தி எப்.எம் என்றால்த்தான் அவரை எல்லோருக்கும் தெரியும். (சூரியன் எப்.எம் என்றும் ஒருவர் இருந்தார்)

இதனால்த்தான் இதனை வாழ்வியல் பிரச்சனையாகத்தான் நோக்க வேண்டுமென்றேன். ‘அடப்பாராடா, விடுதலைப்புலிகளின் காலத்திலும் பாலியல் தொழிலாளிகளிருந்திருக்கிறார்கள். தெரிந்திருந்தால் தோரணம் கட்டி தொங்கவிட்டிருக்கலாம்’ என்றோ, ‘மாதம் மும்மாரி பொழிந்த இராச்சியத்தில் பாலியல் தொழிலாளியா. எழுதியவன் கையை வெட்டு’ என்றோ, இந்த மனிதாபிமானப் பிரச்சனையிலும் அரசியல்ச் சேற்றையள்ள யாராது முயன்றால், அவர்களை அவர்கள் வீட்டுப் பெண்கள் செருப்பால் அடிக்கட்டும்.

பிரபாகரனின் ஆட்சியென்றாலும், ராஜபக்சவின் ஆட்சியென்றாலும் ஒரே மாதிரித்தான் பசிக்கிறது. முன்னர் வன்னியிலிருந்த சனங்களின் அடிப்படைதேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறிமுறையொன்று புலிகளிடமிருந்தது. இப்பொழுது அதில்லை. அந்த சனங்களும், அவர்களின் படையணிகளும் சிதைந்துவிட்டன. அரசிடம் இந்த அக்கறைகளில்லையென்பதுடன், வன்னியில் அதிகளவில் நிலை கொண்டுள்ள படையினரும் இந்த மோசமான சீரழிவிற்கான காரணங்களிலொன்று.

வடபுலத்திலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்ட பின்னர், அந்தச் சமூகமும் இப்படியான அவலத்தை எதிர் கொண்டார்கள். பிற விடுதலையியக்கங்கள் செயலற்றுப் போன சமயங்களில் அதிலிருந்த பெண்களும் இப்படியான நிலைமைக்காளானார்கள். யுத்தம் நடந்த தேசங்களிலெல்லாம் இதுதான் நடந்தது. யுத்தத்தின் அவலட்சணமான குழந்தையிது. ஆகவே இந்தப்பிரச்சனை இங்கேதான் நடக்கிறதென்றோ, அல்லது இந்த பிரச்சனை நடக்கவில்லையென்றோ சொல்ல முடியாது. இந்த யுத்தம் இதற்கான உதாரணங்களை ஏற்கனவே உண்டாக்கிக் காட்டிவிட்டது. இதற்காக தலையிலடித்து அழுது கொண்டிருப்பதோ அல்லது எதனையும் பாராமல் கண்களை மூடி, செபம் சொல்வது மாதிரி வீரபிரதாபங்களை உச்சரித்துக் கொண்டிருப்பதோ பலனற்றது.

நான் கூட ‘திரும்பி வந்தவன்’ என்றொரு கதையெழுதியிருந்தேன். வன்னியில் உருவாகும் பாலியல் தொழிலாளிகள் பற்றிய விடயங்கள் அதில் பேசப்பட்டுள்ளது. ஆனால், ஒரு தகவல் அல்லது சம்பவத்தினடிப்படையிலான படைப்பாளியின் புனைவெழுத்திற்கும் ஊடகவியலாளனின் தகவலெழுத்திற்குமிடையில் நிறைய வேறுபாடுகளுண்டு. புனைவும் உண்மையை ஆதாரமாக் கொண்டிருந்த போதும், அதில் அதிக சுதந்திரமான பிரதேசங்களுண்டு. முற்றிலும் உண்மையான சம்பவங்களினால் புனைவொன்று ஆக்கப்பட்டாலும், அனைத்து உண்மைகளும் ஒரே சம்பவத்தின் தொடர்ச்சிகளாகயிருக்க வேண்டியதில்லை. அது, அந்தக் காலத்தின் சம்பவங்களாகயிருக்கின்றனவா என்பதே முக்கியமானது. ஆனால் தகவலெழுத்தில் அந்த சுதந்திரமிருப்பதில்லை. அந்த உண்மை, சம்பவத்தின் தொடர்ச்சியாகயிருக்கின்றதா என்பதே பிரச்சனை.

இந்த நேர்காணல் இரண்டாவது வகைக்குள்- அதாவது தகவலெழுத்தாகயில்லை என்பதே இந்த பிரச்சனைகளின் அடிப்படையாகயிருக்கிறது. இந்தப்பெண் பாலியல் தொழிலாளியாகயிருக்கிறார் என்ற உண்மையின் மீது புனையப்பட்டவையாகவே, பெண்போராளிகள் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது, அமைச்சர் அதில் கலந்து கொண்டது முதலானவையிருக்கின்றன. இலங்கை யுத்தத்தின் இறுதியில் தமிழ்ப்பெண்கள் பாலியல் கொடுமைக்காளானார்கள், கொல்லப்பட்டார்கள், தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் சரணடைந்த பின்னர் யுத்தகளத்திற்கு வெளியில் கொண்டவரப்பட்ட பின்னர் இப்படியான கூட்டான கொடுமைகள் நடைபெற்றிருக்கவில்லை. அந்த இடத்தில் இப்படிப் பலர் கொல்லப்பட்டிருக்கவில்லை. இதனால்த்தான் இந்த நேர்காணல் புனைவெழுத்தை ஒத்ததென்கிறேன்.

பெண்பொராளிகள் எல்லோரும் பாலியல்க் கொடுமைக்கு ஆளானார்கள் அல்லது பாலியல்த் தொழிலாளிகளாகயிருக்கிறார்கள் என்ற பொதுவான பார்வை உருவாகிவருகிறது. இந்தவிதமான கருத்திற்கு எதிராக தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன். இதனர்த்தம் அவர்களில் யாருமே அப்படியான கொடுமையை அனுபவிக்கவில்லையென்பதல்ல. அதனைப் பொதுமைப்படுத்த முடியாதென்பதே யதார்த்தம்.

சரணடைந்தவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதை ஒவ்வொருவருமே தத்தம் கற்பனைக்கெட்டிய எல்லைகளிற்குச் சென்று ஊகிக்கிறார்கள். எல்லோரது எல்லைக்கோடுகளுமே அடிமனதில் உறைந்துள்ள பாலியல் வக்கிரத்தைக் கடந்து நகரமுடியாமலிருப்பதைப் பார்க்கையில் மிகுந்த அயர்ச்சியாகயிருக்கிறது. ஆண்மனங்களில் படிந்துள்ள பெண்ணுடல் பற்றிய வக்கிரத்தின் எல்லைகள் சற்று முன்னப்பின்ன இருப்பதால், பிரச்சனை யாரிடம் மாட்டுப்படுகிறது என்பதிலுமிருக்கிறது.

இப்படித்தான் இறுதியுத்த காலப்பகுதியில் ஒரு கதையடிபட்டது. களத்தில் கைது செய்யப்படும், சரணடையும் பெண்போராளிகளை தமது வைத்தியாலையொன்றில் பராமரிப்பாளர்களாக இராணுவத்தினர் வைத்துள்ளார்கள் என்று. அடுத்தவாரம் கதை ‘ஆடைகளைந்து’ உலாவியது. அதாவது அந்தப் பெண்கள் இறுக்கமானதும் மிகச்சிறியதுமான காற்சட்டையும், மேல் உள்ளாடையும் மட்டுமே அணிந்து பணியாற்றுகிறார்கள் என.

சற்றே கற்பனைத்திறன் வாய்த்தவர்களின் கைகளிற்குள் இந்த விடயங்கள் சென்றால் கேட்கவும் வேண்டுமா? கிட்டத்தட்ட ‘சரோஜாதேவி’ வகை சஞ்சிகையில் இடம்பெறவல்ல ‘ஆக்கங்களை’ உற்பத்தி செய்கிறார்கள். ஆனந்த விகடனில் வெளியான நெர்காணலைப் பார்த்த பொழுது இந்த விதமான எண்ணமே உண்டானது. வீட்டில் சிவனேயென உட்கார்ந்திருக்கும் பெண்களையே ஊர் ஒதுக்குப்புறச் சுவர்களிலும், மலசலகூடங்களிலும் காண முடிகையில் இதெல்லாம் எதிர்பார்க்கக்கூடியதுதானென்ற போதும், விடுதலைக்கான செயற்பாடுகளில் தம் வாழ்நாட்களைத் தொலைத்தவர்களிற்கான குறைந்தபட்ச மரியதையையாவது கொடுப்பதற்காக இது போன்ற எதிர்வினைகளை எழுத வேண்டியேற்படுகிறது.

நான் சந்தித்த பெரும்பாலானவர்களிடம் பெண்போராளிகள் தொடர்பாக இவ்விதமான ‘சரோஜாதேவி’ பார்வையே இருக்கிறது. ‘சனல் நான்கில் அப்படியான காட்சிகள் வந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது, இவர்களையெல்லாம் சும்மா விட்டிருப்பார்களா’ என்றார் அண்மையில் ஒருவர். எவ்வளவு மோசமான தர்க்கங்களையெல்லாம் வைத்துள்ளோம்? நூற்றுக்கணக்கான ஆண் போராளிகளை சுட்டுக் கொன்ற இதே இராணுவம்தான் பல்லாயிரம் ஆண் போராளிகளையும் விடுதலை செய்தது என்ற தர்க்கம்தான் இதற்கு ஆகச்சிறந்த பதிலாகயிருக்குமென்ற போதும், தர்க்கங்களிற்கப்பாலான உலகத்தையே நாம் சிருஸ்டித்துள்ளோம். நமது பூமியில் அப்பிள்ப் பழங்கள் கீழ் நோக்கித்தான் விழ வேண்டுமென்ற அவசியமெல்லாம் கிடையாது. வசதியைப் பொறுத்து மேல்நோக்கியும் விழலாம்.

போராளிகள், பொதுமக்களென்ற பேதமின்றி ஒரு தொகுதிப் பெண்கள் இராணுவத்தின் அத்துமீறல்களிற்கு உட்பட்டார்கள் என்பது உண்மையே. துயரமென்னnனில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். யுத்த வலயத்திலிருந்து சிறுசிறு குழுக்களாக தப்பிச் சென்றவர்களிலிருந்த இளம்பெண்கள், களங்களில் சிறுசிறு எண்ணிக்கையில் கைது செய்யப்பட்ட, சரணடைந்த போராளிப் பெண்களில் அனேகர் இந்த விதமான கொடுமைகளின் பின்னர் கொல்லப்பட்டனர். இந்தவிதமான பெண்களையும், சிறிய எண்ணிக்கையில் பாதுகாப்பு வலயத்தைவிட்டு வெளியேறிய சனங்களையும் இராணுவம் பல்வேறு இராணுவத்தேவைகளிற்காக களத்தில் உபயோகித்து கொன்றது. ஆபத்தான பிரதேசங்களில் தமது முன்னரண்களை பலப்படுத்துவது, முன்னேறும் பொழுது மனித கேடயமாக பயன்படுத்துவது முதலான பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இதற்காக சரணடைந்த எல்லோருமே இந்த விதமான கொடுமைக்காளானார்கள் என்று அர்த்தமாகாது. வெற்றி பெற்றவர்களின் அப்போதைய மனநிலை மற்றும் தீர்மானங்களை விட களங்களும், அரசியல்ச் சூழலும் செல்வாக்குச் செலுத்தும் விடயமிது. யுத்தத்தின் இறுதிநாட்களிற்கு முற்பட்ட களங்களில் சரணடைந்தவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் மிக மோசமாக பாலியல்க் கொடுமைகள் இழைக்கப்பட்டு கொல்லப்பட்ட போதும், இறுதிநாட்களில் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களிற்கு வந்தவர்கள் இந்தவிதமான கொடுமைகளிற்குட்படும் பொதுவானசூழல் இருக்கவில்லை. புனர்வாழ்வு முகாம்கள் தவிர்ந்த விசாரணையிடங்களிற்கு கொண்டு செல்லப்பட்ட மிகச்சிறிய எண்ணிக்கையினரும் இந்தச் சூழலை எதிர் கொள்ள வேண்டியிருந்தது

ஆண்களிடம் சரணடைந்தவர்கள், ஆண்களின் காவலில் புனர்வாழ்வு பெற்றவர்கள் எப்படி ‘சிந்தாமல் சிதறாமல்’ வெளிவரலாமென பலர் நினைக்கிறார்கள்.

நமது சமூகத்தில் பெண் தொடர்பாக நிலவுகின்ற மதிப்பீடுகள் அணுகுமுறைகள் மற்றும் இதுவரையான போரில் பெண்கள் நடத்தப்பட்ட விதம், அதிலும் குறிப்பாக போரில் ஈடுபட்ட தமிழ்ப்பெண்கள் இராணுவங்களினால் நடத்தப்பட்ட விதம் குறித்த முன்னனுபவத்தினால் இப்படியான மனேநிலை நம்மர்களிடம் இருக்கின்றது. போர் நமது மதிப்பீடுகளிற்கு அப்பாலானது. இறுதிப்போர் தொடர்பான நமது எந்த மதிப்பீடுகளும் சரியானவையாகயிருக்கவில்லை. ஆகவே இந்த விடயத்தில் நமது மதிப்பீடுகளை மாற்றியாகவே வேண்டும். புனர்வாழ்வு முகாம்களில் (நன்றாக கவனிக்கவும் புனர்வாழ்வு முகாம்களில்) இராணுவத்தினால் பாலியல் அத்துமீறல்கள் நடத்த வாய்ப்பிருக்கவில்லையென்ற உண்மையைச் சொல்வது, அரசை ஆதரிப்பதாகுமென யாராவது ‘போராளிகள்’ நாளையே கட்டுரை எழுதலாம். சுமக்கின்ற சிலுவைகளுடனொன்றாக, நமது சகோதரிகளிற்காக இன்னொரு சிலுவையையும் சுமந்துவிடலாம்.

விடயங்களை ஆதாரங்களினடிப்படையில்த்தான் நம்ப வேண்டும் என்ற போதிலும், சில விடயங்களை நம்பிக்கை சார்ந்தும் நம்ப வேண்டியதாகத்தான் நம் வாழ்க்கை அமைந்துள்ளது. அப்படியான நம்பிக்கைகளில்த்தான் மனித வாழ்வின் ஆதாரமுமிருக்கிறது. நம்மில் யாருமே திருமணத்தின் முன் பெண்ணினதோ ஆணினதோ கன்னித்தன்மை குறித்த ஆதாரங்களைக் கேட்பதில்லை. திருமணத்தின் பின்னரும், துணை தவிர்ந்த பிறருடன் உறவுண்டா என்பதற்கான சோதனைகளை வருடாவருடம் செய்வதில்லை. எல்லாமே நம்பிக்கை சார்ந்தது. இப்படியாகத்தான் மனித வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த நியதிகளிற்கு உட்படாதவர்கள், இயல்பான வாழ்வு வாழ முடிவதில்லை. நிராகரிக்கப்பட்டவர்களாக தனிமையில் வாழ வேண்டியதுதான்.

பெண்போராளிகள் விடயத்திலும் இந்த அணுகுமுறையே சரியானது.

அரசாங்கத்திற்கு நாலு அடி கொடுப்பதென யாராவது தீர்மானித்தால், தயவு செய்து உறைக்கும் விதமாக குறைந்த பட்சம் கற்களாலாவது தாக்குங்கள். நெருக்கடியிலிருக்கும் அந்தப்பெண்கள் உடுத்தியிருக்கும் கந்தல் ஆடைகளையும் களைந்து கறுப்புக் கொடி காட்ட எத்தனிப்பவர்கள், உண்மையான அர்த்தத்தில் அந்தப்பெண்களின் எதிரிகள்தான்.

ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்படும் இந்த வழமையற்றவற்றின் வகைமாதிரிகளை வழமையெனக் கொள்ள முடியாது. இந்த வகைமாதிரிகளை வழமையெனப் பிரச்சாரம் செய்வது எண்ணற்ற நம்மவர்களின் மீது நாங்களே நிகழ்த்தும் அத்துமீறிய கொடுமைதான். இணையங்களில் போராடுபவர்கள் தமிழீழத்தை அடைவதற்க கண்டபிடித்துள்ள ஆகச்சிறந்த வழியாக, இந்தப்பெண்களின் அவலங்களையும் உடலங்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர்கள் யாருமே, போராளிப் பெண்களை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. இணையத்தில் நடத்தும் ஊடறுப்புத் தாக்குதல்களில் தமது சகோதரிகளின் ஆடைகளையெல்லாம் பலவந்தமாக கழற்றி வீசிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவிற்கெவ்வளவு அவர்களை நிர்வாணமாக்குகிறோமோ அவ்வளவிற்கவ்வளவு வெற்றியடைவதாக புளகாங்கிக்கிறார்கள். யாரோ சாதாரணர்கள்தான் திருமணம் முடிக்கப் போகிறார்கள். அப்படியானவர்களின் மனங்களில் எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்காமலிருப்பதும் நம் கடமைதான். அப்படியானால் அந்தவிடயம் பற்றி பேசவே கூடாதா என்று யாரும் கேட்கலாம். அவற்றையும் பேசுவோம். சரியான தகவல்களுடன். அவை வழமையற்றவற்றின் வகைமாதிரிதான் என்ற புரிதலுடன்.

இந்த நேர்காணலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை யாராவது கோத்தபாயவின் காதில் போட்டால், அவரே கதிகலங்கிப் போய்விடக் கூடும். விசாரணையிடத்தில் ஐம்பது பேர்வரையில் பாலியல் கொடுமைகள் சகிக்காமல் தற்கொலை செய்தார்கள், அமைச்சர்கள் அந்தக் கொடுமைகளைச் செய்தார்கள் என்பதையெல்லாம் படிக்க, தென்னிந்திய திரைப்படமொன்றின் திரைக்கதையை படிக்கும் உணர்வே தவிர்க்கவியலாமல் ஏற்பட்டது.

இந்த நேர்காணல் வழமையற்ற வகைமாதிரிகளின் மீதான புனைவாகயிருக்கின்றதெனக் குறிப்பிட்டேன். அதனை கால, இட, தகவல் பிழைகளுடன் சுட்டிக்காட்டலாமென்றாலும், யுத்தத்தில் ஈடுபட்ட தரப்புக்களின் இயல்பொன்றிறை மட்டுமே சுட்டிக்காட்டுகிறேன்.

ஆனந்த விகடனில் பேசியதாகக் குறிப்பிடப்படும் போராளியின் கூற்றுப்படி பார்த்தால், கைது செய்யப்பட்டவர்கள் கூட்டங்கூட்டமாக பலியல் கொடுமைக்காளாக்கப்பட்டுள்ளார்கள். அப்படியான தகவலெதுவுமே இல்லை. விசாரணையிடங்களில் தனிமையிலடைக்கப்பட்டவர்கள்தான் இப்படியான நிலைக்காளானதாக தகவல்களுள்ளன. கூட்டங்கூட்டமாக கொடுமை நடைபெற்றது, யுத்தம் நடந்த பிரதேசத்தில். அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர். யுத்தத்தில் ஈடுபடும் தரப்புக்கள் ஒரு குற்றத்தை செய்வதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் அதனை இரகசியமாகவே செய்கிறார்கள். குற்றத்தை நிகழ்த்திவிட்டு, சாட்சிகளை தப்பவிடுவதில்லை.

யுத்தத்தின் பின் சரணடைந்தவர்கள் தொகையாக தற்கொலை செய்து கெண்டார்கள் என்று வைத்துக் கொண்டால், அதனைக் கண்டவரின் ஆவியினால்த்தான் இப்பொழுது பேச முடியும். ஏதாவதொரு தரப்பினால் ஒருவர் கொல்லப்பட்டால் அவருடன் கூடச் சென்றவரும் (அதாவது சாட்சி) கொல்லப்பட்டு விடுவார். அவர் எவ்வளவுதான் நல்லவர், அப்பாவியென்ற போதிலும். இதுவரை நடந்த எல்லா சம்பவங்களிலும் இதற்கு உதாரணங்களுள்ளன. சரணடைவின் பின்னர் இப்படி நடந்து, சாட்சியொன்று தப்பித்தால், அது தம்மை அதிக நெருக்கடிக்குள்ளாக்குமென்பதை இராணுவம் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறது. இதனால்த்தான் போராளிகள் சரணடைந்ததற்கு சாட்சியாக இருந்த கிறிஸ்தவ பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் காணாமல்ப் போனார். சரணடைந்த முக்கியஸ்தர்களுடன் கூடயிருந்த சாதாரணமானவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

ஒருவேளை இந்த நேர்காணலைச் செய்தவர், தன்னளவில் சரியாகவும் செயற்பட்டு, பிழையான தகவல் மூலமொன்றில் சிக்கியிருப்பதற்கான வாய்ப்புகளுமுள்ளன. அல்லது அதிக கவர்ச்சி வேண்டி அந்தப்பெண் அப்படி கதைத்திருக்கலாம். எது எப்படியோ அவற்றின் உண்மைத்தன்மைக்குப் பொறுப்புக் கூற வேண்டியது அதனைத் தயாரித்தவரே. ஈழத்தவரான அவரிற்கு அதனைப் புரிந்து கொள்ள முடியாமல்ப் போனது வியப்பளிக்கிறது.

அதேபோல இந்த நேர்காணலிற்கான எதிர்வினைகளில் சொல்லப்படுவதைப் போல, இதெல்லாம் அரசநிகழ்ச்சிநிரலாகயிருப்பதற்கும் வாய்ப்புகளில்லை. தீவிர தமிழ்தேசியம் பேசுபவரின் மகளைப் பார்த்து யாரும் கண்ணடித்தாலே, அரச நிகழ்ச்சி நிரலில் நடந்த காரியமிதுவென்றே நம்பும் நம்மவர்கள் மத்தியில் வாழ நேர்ந்துள்ளதால், இந்தவிதமான குற்றச்சாட்டுகளை பல்லைக்கடித்தபடி பொறுத்துக் கொள்வதைத்தவிர நம்மிடம் வேறு எந்த வழிதான் உள்ளது? இதற்கு வந்த பெரும்பாலான எதிர்வினைகள், பேட்டி கண்டவர் மீதான அவதூறுகளாகத்தான் வந்திருந்தன. இந்தப் பேட்டியை மட்டுமல்ல, அதனை எதிர் கொண்டவர்களின் செயல்களும் கண்டிக்கத்தக்கனவே. எதிர்வினைகளென்ற பெயரில் வெளியானவையெதுவுமே அதனை கருத்தியல் ரீதியாகவோ, ஆதாரமான உண்மைகளினடிப்படையிலோ எதிர் கொண்டிருக்கவில்லையென்பதைப் பார்க்கையில் நமது ஊடக, இணையப்பரப்பு குறித்த சலிப்பணர்வே எஞ்சியது.

பெண்கள் பற்றிய இவ்வாறான அபிப்பிராயத்தை அரசுகள் உருவாக்குவதற்கான தேவைகள் என்ன என்பது குறித்தம் நாம் புத்திபூர்வமாக சிந்திக்க வேண்டும். ராஜபக்ச மினைக்கெட்டு விகடன் செய்தியாளரொருவரை விலைக்கு வாங்கி, இவ்வாறான கட்டுரையெழுதுவித்தார் என்பதெல்லாம் விஜயகாந்த் படங்களில் மட்டுமே நடக்கக்கூடியது. இந்த வகையான எழுத்துக்களின் தோற்றுவாய் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல சமூகஉளவியல் சார்ந்தது. கூடவே, விகடன் வகையறா பரபரப்பு பத்திரிகைத்தனமும் இணைந்தால் கேட்கவும் வேண்டுமா?

2.jpg

இந்த யுத்தம் என்ன மாதிரியான அவலங்களையெல்லாம் நம்மிடையே விதைத்திருக்கிறது! தாங்கள் சீரழிக்கப்படவில்லையென்பதை எங்களிடம் நிரூபிக்க கோரி நாங்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு சிதை மூட்டி எங்களிற்குள்ளாகவே அவர்களிற்கு அக்கினிப்பரீட்சை நடாத்திக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு கொடூரமானது.

கனவுகளாலும், இலட்சியங்களாலும் நிறைந்த உலகத்திலிருந்து பிடுங்கப்பட்டு, ஒரேநாளில் பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த உலகத்தில் இந்தப் பெண்கள் விடப்பட்டுள்ளனர். இந்த உலகத்தில் வாழ்வதற்கான நெருக்கடிகளைத்தான் சிங்களவர்கள் கொடுத்தார்கள். அதனிலும் மோசமானவர்கள் நாங்கள். அவர்கள் ஒவ்வொருவருமே பாலியல் கொடுமைகளிற்குட்படாத தூயவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய ஒரு காலத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம்.

என்ன மாதிரியானதொரு காலத்தில் வாழ்கிறோம்!

http://yokarnan.com/?p=376

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]ஆம் இந்தக்கட்டுரையை எழுதியவர் ஒரு சமுதாய விழிப்புணர்வை கொண்டுவர முயற்சித்துள்ளார். நல்லவிடயம். ஆனால் இரண்டு இலட்சம் 'சிங்கள இராமர்கள்' எமது மக்களை சூழ்ந்துள்ள நிலையில் நீரும் ஒரு பதினைந்து வயது சிறுமி மீது பாலத்காரம் செய்ய முனைந்த செய்தி படித்தோம். [/size][/size]

[size=1]

[size=4]

இவர்களில் யாருக்குமே அந்தப்பெண் பாலியல் தொழிலாளியாகயிருக்கிறார் என்பது பிரச்சனைக்குரியதாகியிராது என்றே நினைக்கிறேன்.
[/size][/size]

[size=1]

[size=4]ஆனால், இந்தக்களத்திலேயே பலரும் இதை ஏற்றே எழுதியிருந்தனர். அப்படி உள்ளவர்களுக்கு தாம் உதவி வருவதாக ஒரு அமைப்பு கூட கூறி இருந்தது. [/size][/size]

[size=1]

[size=4]எனவே இந்த கட்டுரை ஒருபக்கம் மிகைப்படுத்தி 'இணைய வீரர்கள்' 'தேசியவாதிகள்' ..என இணையத்திலேயே [/size][size=4]எழுதி எமக்குள் உள்ள பிரிவினையை வளர்ப்பதையே நோக்காக கொண்டதா? என எண்ணவைத்துள்ளது. [/size][/size]

Link to comment
Share on other sites

[size=1][size=4]ஆம் இந்தக்கட்டுரையை எழுதியவர் ஒரு சமுதாய விழிப்புணர்வை கொண்டுவர முயற்சித்துள்ளார். நல்லவிடயம். ஆனால் இரண்டு இலட்சம் 'சிங்கள இராமர்கள்' எமது மக்களை சூழ்ந்துள்ள நிலையில் நீரும் ஒரு பதினைந்து வயது சிறுமி மீது பாலத்காரம் செய்ய முனைந்த செய்தி படித்தோம். [/size][/size]

[size=1][size=4]ஆனால், இந்தக்களத்திலேயே பலரும் இதை ஏற்றே எழுதியிருந்தனர். அப்படி உள்ளவர்களுக்கு தாம் உதவி வருவதாக ஒரு அமைப்பு கூட கூறி இருந்தது. [/size][/size]

எனவே இந்த கட்டுரை ஒருபக்கம் மிகைப்படுத்தி 'இணைய வீரர்கள்' 'தேசியவாதிகள்' ..என இணையத்திலேயே எழுதி எமக்குள் உள்ள பிரிவினையை வளர்ப்பதையே நோக்காக கொண்டதா? என எண்ணவைத்துள்ளது.

இந்த உலகத்தில் வாழ்வதற்கான நெருக்கடிகளைத்தான் சிங்களவர்கள் கொடுத்தார்கள். அதனிலும் மோசமானவர்கள் நாங்கள். அவர்கள் ஒவ்வொருவருமே பாலியல் கொடுமைகளிற்குட்படாத தூயவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய ஒரு காலத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறோம்.

என்ன மாதிரியானதொரு காலத்தில் வாழ்கிறோம்!

இதனைத்தான் இணையவாதிகள் அல்லது இணையப்போராளிகள் செய்கின்றனர் என நினைக்கின்றேன் . ஒரு பெண்போராளியின் பின்புலங்களை அறியாது அவள் குப்பி கடித்தால் என்ன ???? ஏன் பாலியல் தொழிலாளியானாள் ???????? என்ற கருத்துப்பட வந்த கருத்துக்களையும் இந்தக்கருத்களத்தில் சந்தித்திருக்கின்றேன் மைலோர்ட் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தவிகடனும் ஈழப் போராட்ட வியாபாரமும் : கோசலன்

நோம் சொம்ஸ்கியின்(Noam Chomsky) நூலான Manufactured Consent இல் ஊடகம் என்பது பல்தேசிய நிறுவனங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கங்களின் நலன்களே ஊடகங்களில் கருத்துக்களாகவும் செய்திகளாகவும் வெளிவருகின்றன என்று கூறுகிறார். உலகத்தின் எந்த பிரபல ஊடகதை எடுத்துக்கொண்டாலும் ஏகபோக ஆளும் வர்க்கங்களின் மேலிருந்த கட்டுபாட்டின் உள்ளேயே இயங்கும் நிலை காணபடுகின்றது.

இணையச் செய்திகள், தொலைக்காட்சி செய்திகள், விளம்பரங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் என்ற அனைத்தும் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வியாபித்திருக்கின்றது. நுகர்வுக் கலாச்சாரத்தை முதலில் திட்டமிடும் நுளைவாசலாக ஊடகங்களாகவே அமைகின்றன. குழந்தைகளை வைத்து வியாபாரம் நடத்தும் விஜை டிவி ஆகட்டும், ரிபெக் விளம்பரம் செய்யும் எக்ஸ் பக்டர் ஆகட்டும் உலகத்தை கேவலமான நுகர்வுக் கலாச்சாரத்தின் இருளுக்குள் அழைத்துச் செல்கிறது.

உப்பின் விலை அதிகரிக்கும் போது மக்கள் வாழ்க்கைச் செலவு குறித்துச் சிந்திக்கிறார்கள் . கோபமடைகிறார்கள் அரசுக்கு எதிராகச் சிந்திக்கிறார்கள். ஆக, உப்பிலும் அரசியலும் போராட்டமும் உள்ளடங்கியிருக்கிறது. அதன் மதிப்பு, உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள், இலாபமடையும் பல்தேசிய முதலாளிகள் என்று இன்னும் ஆயிரம் கோட்பாட்டு விடயங்கள் உப்பின் உள்ளே கூடப் பொதிந்திருக்கின்றது.

இன்று ஊடகங்களில் மக்கள் அரசியல் என்பது வெறுமனே பிரேகிங் நியூஸ் கலாச்சாரமாக மாறிப் போய்விட்டது.

முகநூல் என்று தமிழ் விற்பன்னர்கள் பெருமையாக மொழிபெயர்த்துள்ள பேஸ்புக் இந்த பிரேக்கிங் நியூசின் புதிய வடிவம். மக்களின் சிந்தனையை எப்படி மாற்றியமைப்பது என்ற அரசியலை ஊடகங்கள் தெரிந்து வைத்திருக்கின்றன. ஐம்பது ஆண்டுகளின் முன்னர் சர்வதேசியம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் மறைந்திருந்தது உழைக்கும் மக்களின் சர்வதேசியம். இது உலகத் தொழிலாளர் குறித்து கார்ல் மார்க்சின் சிந்தனையிலிருந்து உருவாகி சர்வதேசியம் என்று வளர்ந்து உலக மக்களின் சிந்தனையில் வேரூன்றியிருந்தது. இன்று சர்வதேச சமூகம் என்றால் மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் அரசுகளின் கூட்டு என்று எந்தத் தயகமும் இல்லாமல் ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கு ஊடகங்கள் மாற்றியமைத்துவிட்டன.

”ஜனநாயகம்’ என்றால் மேற்கு நாடுகள் சொல்லித் தருகின்ற ஒருவீதமானவர்கள் சுந்ததிரமாக வாழ்வதற்கான அரசியல் முறைமை. ஜனநாயகம் என்ற சொல்லை ஊடகங்கள் கடத்தி வைத்து அது உலகமக்களுக்கான அரசியல் ஆட்சி என்ற சிந்தனையை உருவாக்கிவிட்டது.

சமூக வன்முறை, பாலியல் வக்கிரத்தனம், சமூகங்களிடையேயான வெறுப்புணர்வு போன்றவற்றுடன் பொழுதுபோக்கு வியாபாரத்தையும் இணைத்துக்கொண்டால் இன்றைய பல்தேசிய வியாபார ஊடகத்தத்தை வரையறுக்கலாம். இந்த ஊடகங்களின் சிந்தனையை அடுத்த மட்டத்தில் விரிவாக்குவதையே பெருபாலான இணைய ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் செய்து முடிக்கின்றன.

இஸ்லாமிய மதம் குறித்து ஐரோப்பிய ஊடகங்கள் இன்று மறுபடி சுந்ததிரமான விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன. எல்லா விவாதங்களும் எப்படி அந்த மதத்தை நவீனமயப்படுத்துவது என்பதிலிருந்தே ஆரம்பித்தன. சில காலங்களின் பின்னர் ஐரோப்பிய இஸ்லாம் ‘புத்திசீவிகளும்’ தாம் இப்போதெல்லாம் நவீனமயமாகிக்கொண்டிருப்பதாகச் சாட்சிகூறினார்கள். இனிமேல் தங்களைத் தவறாகப் பார்க்கக் கூடாது என்றார்கள். இதன் பின்னர் இன்னும் ‘நவீனமயமாகாத’ மத்திய கிழக்கு நாடுகள் மீது கொலைவெறித் தாக்குதல்களை அமரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகள் கட்டவிழ்த்துவிட்டன.

பயங்கரவாத்திற்கு எதிராகப் போராடுவதாக மார்தட்டிக்கொள்ளும் அமரிக்காவின் சுந்திர வியாபார(Free market) ஜனநாயகத்தை உமிழும் ஊடகங்கள், லத்தீன் அமரிக்க அழகி தன்னுடைய காதலனுடன் உறவுகொண்ட காட்சியை காணொளியாக வெளியிட்டு அதுகுறித்த விவாதங்களை முடுக்கிவிட்டன.. அருவருப்பான அந்தப் பாலியல் வக்கிரம் சாதாரண குடும்பங்களில் நாளந்த விவாதமாகியது . அது சமூகத்தின் பொதுப் புத்தியானது. எக்ஸ் பக்டரில் முக்கால் நிர்வாணமாகப் பாடிய பதினைந்து வயதுப் பெண்ணைப் பார்த்து இன்னும் உடைக்குறைப்புச் செய்யவேண்டும் என்று நடுவர் கூறியபோது பத்துவயதுக் குழந்தைகளோடு குடும்பம் குடும்பமாக பார்வையாளர் கூட்டம் கைதட்டியது. திட்டமிட்டு விதைக்கப்படும் இந்த வன்முறைகளுக்குள்ளும், வக்கிரங்களுக்குள்ளும் சமூகம் புதைந்து போயிருக்கிறது.

இதையே இந்தியா போன்ற நாடுகளில் இந்துவாவின் துணையோடு மிகக்கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள். . நித்தியானந்தா என்ற பாலியல் சாமியாரின் பாலுறவுக் காட்சிகளை நக்கீரன் இதழ் தனி இறுவெட்டுக்களாக விற்பனை செய்தது.

இவ்வாறான ஒரு அரசியல் கலாச்சாரம் மேற்கில் மட்டும் முற்றுகையிட்டு நிலைகொண்டதல்ல;, வெறும் காட்சி ஊடகங்களோடு மட்டுப்படுத்தப்பட்டதல்ல. வறுமையில் மனித சமூகம் மடிந்துகொண்டிருக்கும் ஆசிய ஆபிரிக்க நாடுகளையும் இது மின்னல் வேகத்தில் பற்றிக்கொண்டது. பல்தேசிய நிறுவனங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் செய்தி முகவர் நிறுவனங்கள் வறிய நாடுகளின் உள்ளூர் செய்திகளின் பண்பையும் தீர்மானித்தன. ஏகாதிபத்திய ஊடகப் பொறிமுறையைப் பற்றிக்கொண்டன.

இந்தக் கலாச்சாரம் உருவாக்கப்பட்ட பின்னர் மக்கள் ரசனையை இணையங்கள் உள்வாங்க வேண்டிய தேவை உருவானது . பார்வையாளர்களின் எண்ணிக்கை விளம்பரங்களை ஈர்க்கும் நிலையில் வன்முறைக்கும், பாலியல் வக்கிரங்களுக்கும் பழகிப்போன வாசகர்களுக்கு ஏற்ப இணையங்களும் தம்மைத் தயார்படுத்தின.

இதையே உலகில் புரட்சிகரமான போராட்ட சூழலில் வாழும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்ட ஊடகங்களும் உள்வாங்கிக்கொண்டன கிசுகிசுக்கள், சமூக வன்முறை, பாலிய வக்கிரம் ஆகியவற்றின் கலவையாக ஊடகங்கள் மாற்றமடைந்தன.

சமூகத்தின் பொதுவான பிற்போக்குத்தனத்திற்கு தீனி போடுகின்ற-அதனை எதிர்த்துக் குரல்கொடுக்காத சமூக வன்முறை என்பது அவர்களின் விளம்பர வியாபார நலனுக்குத் தேவையானதாகியது. மறுபுறத்தில் பல்தேசிய நிறுவனங்கள் உருவாக்கிய ஊடகக் கலாச்சாரம் இதனோடு இணைந்து கொண்டது. இதுவே ஊடகங்களின் மாதிரி வடிவமானது.

இவற்றை நிராகரித்து புதிய புரட்சிகர ஊடகக் கலாச்சரத்தை நிறுவப் போராடுகின்ற , சமூகத்தின் பொதுப்புத்தியை அதிகாரவர்க்கத்திற்கு எதிராக மாற்ற எண்ணுகின்ற ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. ஏனைய ஊடகங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அதிகாரவர்க்கம் சார்ந்தவர்களுக்கு எதிரான போராட்டத்தை பல்வேறு தளத்திலும் நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிலும் புரட்சிகர அரசியல் தலைமையற்ற சூழலில் அது சாத்தியமானதா என்ற கேள்விகளும் கூடவே எழுந்தன.

இன்று

1. விளம்பரங்களை நம்பி வியாபாரிகளினதும் பல்தேசிய நிறுவனங்களதும் நலன்களின் அடிப்படையில் இயங்கும் ஊடகங்கள்.

2. தன்னார்வ நிறுவவங்களின் பணமுதலீட்டில் இயங்கும் ஊடகங்கள்.

3. பணம்படைத்த மாபியா அரசியல் வலைப்பின்னலுக்குள் இயங்கும் ஊடகங்கள்.

என்பவையே சமூகத்தின்ன் பொதுப் புத்தியைத் தீர்மானிப்பதில் பிரதான பாத்திரம் வகிக்கின்றன.

எது எவ்வாறாயினும், செய்திகளையும் அவலங்களையும் முன்வைத்து வியாபாரம் செய்கின்ற ஊடகங்கள் ஈழப் போராட்டத்திலும் புகுந்துகொண்டன. நீண்டகாலமாக புலம் பெயர் இணையங்கள் பின்பற்றிய இந்த மாதிரி ஆனந்தவிகடனுக்கு ஒன்ன்றும் புதியதல்ல. அதன் ஒரு வெளிப்பாடாகவே ஆனந்தவிகடன் என்ற இந்துத்துவ பத்திரிகை முன்னைநாள் புலிகள் இயக்கப் போராளி ஒருவர் குறித்து எழுதிய புனைவு.

சோதிடத்தில் ஆரம்பித்து மரணச் சடங்கு வரைக்கும் அகோரமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் புலம் பெயர் ‘புரட்சிகர’ ஊடகங்கள் பாலியல் கலவையாக இன்று வரை கொடுத்த மாதிரியை ஆனந்தவிகடன் ஒருபடி மேலே நகர்த்தியுள்ளது.

சமூகத்தால் நிராகரிக்கப்படும் முன்னைநாள் போராளிகளின் அவலங்களுக்கும் மரணங்களுக்கும் மத்தியில் சாதித்துவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் புலம்பெயர் கனவான்களே அவலங்களில் பணம் தேடும் ஆனந்தவிகடன்களையும் வளர்த்து அழகுபார்த்தவர்கள். அதன் சிந்தனை வழிமுறையை உள்வாங்கிக் கொண்டவர்கள்.

போராளிகளை முன்வைத்து பாலியல் வக்கிர வியாபாரத்தை நடத்தும் ஆனந்தவிகடன் போன்ற அப்பட்டமான வியாபார ஊடகங்கள் மாற்று அரசியல் ஊடகங்களால் பிரதியிடப்பட வேண்டும். எண்பதுகளில் ஆயுதம் ஏந்திய போராட்ட இயக்கங்களும், மக்களும் கண்டது பேரினவாத அரசின் இராணுவ ஒடுக்குமுறையை மட்டும்தான். இன்று இனச்சுத்திகரிப்பாக அது பலமடங்கு வளர்ச்சியடைந்து நாளந்தம் மக்களைச் சூறையாடுகின்றது. ராஜபக்சவிற்குப் பதிலாக இன்னொரு அமரிக்க கைப்பொமை ஆட்சிக்கு வந்தாலும் இது தொடரத்தான் போகின்றது.

இதற்கு எதிராக மக்கள் தவிர்க்கமுடியாமல் போராட உந்தப்படுகிறார்கள். மக்களின் போராட்டம் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தமாக முன்னேறுவது தவிர்க்கமுடியாத நிகழ்வாக இலங்கை அரச பாசிசம் மாற்றிக்கொண்டிருக்கிறது. போராட முன்னேறும் மக்களை ‘நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் அமைதியாக இருங்கள்’ என்று கூறும் புலம்பெயர் தலைமைகள் போராட்டத்தை அழித்தவர்களோடு கூட்டம்போட்டுக் கூத்தாடுகிறது. மக்களுக்குப் போலி நம்பிக்கைகளை வழங்குகிறது.

ஆந்தவிகடன் போன்ற வியாபாரி ஊடகங்களுக்கு எதிரான மாற்றை இவர்களால் எப்படி முன்வைக்க முடியும்?

http://inioru.com/?p=31368

Link to comment
Share on other sites

[size=1][size=4] நீரும் ஒரு பதினைந்து வயது சிறுமி மீது பாலத்காரம் செய்ய முனைந்த செய்தி படித்தோம். [/size][/size]

அகூதா, இக்கட்டுரையாளரை நோக்கித்தானே இக்கேள்வியைக் கேட்டிருக்கிறீங்கள் ? :mellow:

Link to comment
Share on other sites

[size=4]

அகூதா, இக்கட்டுரையாளரை நோக்கித்தானே இக்கேள்வியைக் கேட்டிருக்கிறீங்கள் ? :mellow:

[/size]

[size=4]ஆம். [/size]

[size=1]

[size=4]

ஆம் இந்தக்கட்டுரையை எழுதியவர் ஒரு சமுதாய விழிப்புணர்வை கொண்டுவர முயற்சித்துள்ளார். நல்லவிடயம். ஆனால் இரண்டு இலட்சம் 'சிங்கள இராமர்கள்' எமது மக்களை சூழ்ந்துள்ள நிலையில் நீரும் ஒரு பதினைந்து வயது சிறுமி மீது பாலத்காரம் செய்ய முனைந்த செய்தி படித்தோம்.
[/size][/size]

[size=1]

[size=4]அதாவது சுற்றியுள்ள இராணுவம், பாதுகாப்பு அற்ற சூழ்நிலை, பொருளாதார நசுக்கல் - இவற்றுக்கு மத்தியில் எமது பெண்கள் சுதந்திரமாக வாழமுடியாது என்பதை நாளாந்தம் வரும் செய்திகள் மூலம் அறிந்து வருகின்றோம். அதேவேளை ஆண் போராளிகளும் காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றனர். [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]ஆம். [/size]

[size=1][size=4]அதாவது சுற்றியுள்ள இராணுவம், பாதுகாப்பு அற்ற சூழ்நிலை, பொருளாதார நசுக்கல் - இவற்றுக்கு மத்தியில் எமது பெண்கள் சுதந்திரமாக வாழமுடியாது என்பதை நாளாந்தம் வரும் செய்திகள் மூலம் அறிந்து வருகின்றோம். அதேவேளை ஆண் போராளிகளும் காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றனர். [/size][/size]

ஆம் இந்தக்கட்டுரையை எழுதியவர் ஒரு சமுதாய விழிப்புணர்வை கொண்டுவர முயற்சித்துள்ளார். நல்லவிடயம். ஆனால் இரண்டு இலட்சம் 'சிங்கள இராமர்கள்' எமது மக்களை சூழ்ந்துள்ள நிலையில் நீரும் ஒரு பதினைந்து வயது சிறுமி மீது பாலத்காரம் செய்ய முனைந்த செய்தி படித்தோம்.

இக்கட்டுரையாளரை நோக்கிய உங்கள் கேள்வி யுத்த முடிவின் பின்னர் 14வயது பிள்ளையை பாலியல் பலாத்காரத்திற்கு முனைந்தார் என்றா அல்லது இந்த நபர் இயக்கத்தை விட்டு விலகுவதற்கு முதல் அதாவது போராளியாய் இருந்த போது நடந்ததா ? (மன்னிக்கவும் எக்காலம் என்பதனை அறிந்தால் நீங்கள் குறித்த செய்திபற்றிய சம்பவம் பற்றி சில விடயங்களை எழுதவே கேட்கிறேன்)

Link to comment
Share on other sites

[size=1][size=4]ஆம் இந்தக்கட்டுரையை எழுதியவர் ஒரு சமுதாய விழிப்புணர்வை கொண்டுவர முயற்சித்துள்ளார். நல்லவிடயம். ஆனால் இரண்டு இலட்சம் 'சிங்கள இராமர்கள்' எமது மக்களை சூழ்ந்துள்ள நிலையில் நீரும் ஒரு பதினைந்து வயது சிறுமி மீது பாலத்காரம் செய்ய முனைந்த செய்தி படித்தோம். [/size][/size]

ஆனால், இந்தக்களத்திலேயே பலரும் இதை ஏற்றே எழுதியிருந்தனர். அப்படி உள்ளவர்களுக்கு தாம் உதவி வருவதாக ஒரு அமைப்பு கூட கூறி இருந்தது.

[size=1][size=4]எனவே இந்த கட்டுரை ஒருபக்கம் மிகைப்படுத்தி 'இணைய வீரர்கள்' 'தேசியவாதிகள்' ..என இணையத்திலேயே [/size][size=4]எழுதி எமக்குள் உள்ள பிரிவினையை வளர்ப்பதையே நோக்காக கொண்டதா? என எண்ணவைத்துள்ளது. [/size][/size]

[size=4]'நேற்றும்' என்பது 'நீரும்' என தவறாக என்னால் பதியப்பட்டு அர்த்தத்தையே மாற்றி விட்டது. [/size][size=1]

[size=4]குழப்பத்திற்கும் தவறுக்கும் மன்னிப்பு கேட்கிறேன்![/size][/size]

[size=1]

[size=4]கீழே உள்ள செய்திகளையே நேற்றைய செய்திகள் என குறிப்பிட்டு இருந்தேன்.[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110895[/size][size=1]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110832[/size][size=1]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110793[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.