Jump to content

மாவீரர் காலத்தில் நடத்தப்படும் இளையராஜாவின் நிகழ்ச்சியை புறக்கணிப்போம்-செந்தமிழன் சீமான்

Recommended Posts

எத்தனையோ விமர்சனகளை .எந்த எந்த கொம்பன்களை எல்லாம் நேருக்கு நேர் சந்தித்தும் தன் கொள்கையில் உறுதி தளராமல் வீறுநடை போடும் மதிப்புக்குரிய சீமான் அவர்கள் ............இந்த விமர்சனக்களால் ..ஒன்றும் போர்த்துப்படுப்பவர் அல்ல................அவர் இப்போ இல்லை விடுதலைப்புலிகளின் காலத்திலும் அப்படியே இருக்கிறார் .............அப்போதும் எம் விடிவிற்காய் ,எம் உரிமைக்காய் குரல் கொடுத்த செந்தமிழன் ...................இப்போதும் குரல் கொடுப்பதும் அன்றி பிரயோசனமான முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் ...........சரி நான் கேட்கிறேன் ...இளைய ராஜாவின் இந்த நிகழ்ச்சி பற்றி தனது கருத்தை கூறவும் அவருக்கு தகுதியில்லையா ..................

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply
:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

சீமான் அறிந்தோ அறியாமலோ இந்திய ஆதிக்க சக்திகளின் நலன்களுக்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருகிறார்.

வைகோ, கொளத்தூர் மணி போன்ற தமிழ் உணர்வாளர்களுடன் போட்டி அரசியல் செய்கிறார். தமிழ் தேசியத்தில் நம்பிக்கை மிக்க பழ.நெடுமாறனும், திராவிடக் கொள்கையில் நம்பிக்கை மிக்க வைகோ, கொளத்தூர் மணி போன்றவர்களும், பொதுவுடமை பேசக் கூடிய பல தோழர்களும் ஒன்றாய் இணைந்து ஈழத் தமிழர்களுக்காய் போராடுகின்ற போது, இவர் தனிப் பாதை அமைக்கிறார். பிரிவினைகளை வளர்க்கிறார்.

இன்றைக்கு இளையராஜா நிகழ்ச்சிக்கு சம்பந்தமே இல்லாமல் நடைமுறையில் இல்லாத மாவீரர் மாதம் போன்ற பொருத்தமற்ற கருத்துக்களை தெரிவித்து ஈழத் தமிழர்கள் மத்தியிலும் பிரிவினைகளை செய்கிறார்.

இவருடைய அமைப்புக்குள் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல்கள் கடுமையாக இருப்பதாக நான் திடமாக நம்புகிறேன். குறுகிய காலத்தில் நிறைய தடுமாற்றங்களை நான் இவரிடம் பார்க்கிறறேன்.

Link to comment
Share on other sites

சபேசன்.. நீங்கள் எழுதும்போதே சிரித்துவிடுவீர்களா? :D

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:

என்ன இவ்வளவு சிரிப்பு. வாங்கின டிக்கெட்டை வித்தாச்சா? :lol:

Link to comment
Share on other sites

என்னைய்யா இளையராஜா வின் இசை நிகழ்ச்சியை எதிர்த்தார் என்பதுக்காக சீமானும் துரோகி ஆகா போகிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அறிந்தோ அறியாமலோ இந்திய ஆதிக்க சக்திகளின் நலன்களுக்கு ஏற்ற வகையில் செயற்பட்டு வருகிறார்.

வைகோ, கொளத்தூர் மணி போன்ற தமிழ் உணர்வாளர்களுடன் போட்டி அரசியல் செய்கிறார். தமிழ் தேசியத்தில் நம்பிக்கை மிக்க பழ.நெடுமாறனும், திராவிடக் கொள்கையில் நம்பிக்கை மிக்க வைகோ, கொளத்தூர் மணி போன்றவர்களும், பொதுவுடமை பேசக் கூடிய பல தோழர்களும் ஒன்றாய் இணைந்து ஈழத் தமிழர்களுக்காய் போராடுகின்ற போது, இவர் தனிப் பாதை அமைக்கிறார். பிரிவினைகளை வளர்க்கிறார்.

இன்றைக்கு இளையராஜா நிகழ்ச்சிக்கு சம்பந்தமே இல்லாமல் நடைமுறையில் இல்லாத மாவீரர் மாதம் போன்ற பொருத்தமற்ற கருத்துக்களை தெரிவித்து ஈழத் தமிழர்கள் மத்தியிலும் பிரிவினைகளை செய்கிறார்.

இவருடைய அமைப்புக்குள் இந்தியப் புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல்கள் கடுமையாக இருப்பதாக நான் திடமாக நம்புகிறேன். குறுகிய காலத்தில் நிறைய தடுமாற்றங்களை நான் இவரிடம் பார்க்கிறறேன்.

எனக்கென்னமோ தடுமாற்றம் அவருக்கு இருக்குதோ இல்லையோ உங்களுக்கு இருக்கின்றது என்பதினை என்னால் உணரமுடிகின்றது

Link to comment
Share on other sites

சபேசன்.. நீங்கள் எழுதும்போதே சிரித்துவிடுவீர்களா? :D

இல்லை இசை சபேசன் சிரித்துக்கொண்டுதான் எழுதுவார் :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தனிப்பட்ட விருப்பம் (இப்போது) இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிப்பது. ஆனால் கடைசி நேரத்தில் இந்தப் புறக்கணிப்பு கோரிக்கைகளை வைப்பதால் ஒட்டுமொத்தமாக வாங்கிய நுழைவுச் சீட்டுக்களை எங்கே கொண்டுபோய் போடுவது? வேண்டாம் என்று தூக்கி எறிந்தாலும், அவர்களுக்கு காசு கட்டியது கட்டியதுதானே? என்னைமாதிரித்தான் பலருடைய நிலமையும். இவர்கள் ஆரம்பிக்க முன்னரே பெருவாரியான நுழைவுச் சீட்டுகள் விற்றுவிட்டன.

இப்போது தவறு யாரில் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. தனிப்பட்டமுறையில் மாவீரர் வாரம் என்பதே என்னுடையை எண்ணமாக இதுவரையில் இருந்தது. மாவீரர் மாதமல்ல. அவ்வாறு நான் நினைத்திருந்தால் சீட்டுக்களை வாங்கியிருக்கவே மாட்டேன். என்னுடைய எண்ணத்தில் தவறு இருந்தால் போராட்டக்காரர் அன்றே என் போன்றவர்களுக்கு இதை தெளிய வைத்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஆக, இன்று புறக்கணிக்கச் சொல்பவர்களுக்கு இன்னும் தலைமைத்துவப் பண்புகள் காணாது என்பதே அர்த்தம். இதை சீமானை நோக்கிச் சொல்லவில்லை. அவருக்கு இங்கே உள்ள நடைமுறைகள் தெரிந்திருக்குமென‌ நான் எண்ணவில்லை.

வாங்கிய நுழைவுச் சீட்டுகளுடன், யோசனையில்..

‍இ.க.

யோசனைக்கு எதுவுமில்லை. எது சரியாகப் படுகின்றதோ அதைத்தான் செய்யவேண்டும். November (கார்த்திகை அல்ல) மாதத்தையும், மே மாத்தையும் துக்கம் அனுட்டிக்கும் மாதங்கள் என்று கொண்டால், ஜூலைப் படுகொலைகள் நடந்த மாதத்தையும் விழாக்கள், களியாட்டங்கள் இன்றி துக்கம் கொண்டாடலாமே.

என்னைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டத்தில் சில நாட்கள்தான் மிகவும் முக்கியமானவை. முழு மாதமும் அல்ல. இப்படி மக்களை November முழுவதும் களியாட்டங்களை, விழாக்களைப் புறக்கணிக்கக் கோருபவர்கள், மாவீரர் தினத்தன்று கொத்துரொட்டிக் கடைகளை அமைத்து வியாபாரம் செய்வது விந்தையான செயலே!

இளையராஜாவின் இசையை விரும்புகின்றவர்கள் கச்சேரிக்கு எந்த சஞ்சலமுமின்றிப் போகவேண்டும். அதே போல மாவீரர் தினத்திற்கும் அவர்களின் தியாகத்தின் மேல் மதிப்பு வைத்து அஞ்சலி செய்யப் போகவேண்டும்.. விரும்பினால் ஒரு தமிழ்த்தாய் நாட்காட்டி வாங்கி ஒவ்வொரு நாளும் திகதியைக் கிழிக்கும்போது விடுதலை கிடைக்க தம்முயிரை ஈந்தவர்களை ஒரு கணம் நினைத்து நாளை ஆரம்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

ஆம், இசைக்கலைஞன்

சீமானைப் பற்றி எழுத ஆரம்பித்தாலே சிரிப்பு வந்து தொலைக்கிறது.

என்னிடம் எந்தத் தடுமாற்றமும் இல்லை. போராட்டப் பாதைகள் காலத்தின் தேவைக்கு ஏற்றபடி மாறினால்தான் இலக்கை அடைய முடியும் என்பதில் நான் தடுமாற்றம் இல்லாது தெளிவாகவே இருக்கிறேன்.

சீமானை துரோகி என்று நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் எதிரிகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அதற்கு எம்மவர்களுக்கும் துணை போகின்றார்கள். காரணம் சீமானுக்கும் இத்தகைய எம்மவர்களுக்கு உணர்ச்சி இருக்கின்ற அளவிற்கு அறிவும் யதார்த்தம் பற்றிய தெளிவும் இல்லை.

Link to comment
Share on other sites

இசைஞானி விழா சம்பந்தப்பட்ட சர்ச்சையை பெரும் பிரச்சனையாக மாற்ற முடியும். அதன் மூலம் புலம்பெயர் தமிழர்களுக்குள் பெரும் பிளவுகளை ஏற்படுத்த முடியும். மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய பெரும் சர்ச்சைகளை கிளப்ப முடியும். இசைஞானியின் விழாவின் பின்னால் சிங்கள, இந்தியத் தரப்புகள் இருந்திருந்தால், அது நடந்திருக்கும்.

மாறாக இசஞானி மற்றும் விழாக் குழுவினரிடம் இருந்து அறிவுசார்ந்த அமைதி நிலவுகின்றது.

ஆனால் மீண்டும் மீண்டும் இந்திய மேலாதிக்க சார்பு படங்களை எடுக்கின்ற செல்வமணியாலும், இந்திய மேலாண்மையை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்கின்ற சீமான் தரப்பாலுமே இந்தப் பிரச்சனை கிளறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

வாங்கிய நுழைவுச் சீட்டுகளுடன், யோசனையில்..

‍இ.க.

கனக்க யோசனைசெய்து கிழித்து எறியும் நிலமைவரைபோவதுஎன்றால் நுழைவுச்சீட்டை எனக்குத்தாருங்கள். என்னதான்கூத்து அன்று அங்கு நடைபெறுகின்றது என்றுபோய்ப்பார்க்க தற்போது எனக்கு ஆவலாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை நீங்கள் இப்படி கோழையாய் இருக்க கூடாது :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் சீமானை நினைத்துச் சிரிக்கிறார்களாம். ஆனால் இவர்களைப் பார்த்து ஊரே சிரிப்பது அவர்களுக்குத் தெரியவில்லை..!

தங்களில் ஏற்படும் மாற்றம் என்பது போராட்டத்திற்காம். சீமானில் மாற்றம் என்பது எதிரிக்கு துணை போவதாம்..! என்ன கொடுமை..! தாலியே வேண்டாம் என்று ஊருக்கு உபதேசித்தவன் தன் பொண்டாட்டிக்கு தாலி கட்டினானாம்.. என்ற புதுமொழிக்கு ஏற்ப.. இருக்குது கதை...!

சீமான்.. தேசிய தலைவரை வழிகாட்டியாக தலைவராக ஏற்றுக் கொண்டு பெரியாரை தூக்கி ஒரு ஓரமாய் வைத்ததில் இருந்து சிலர் அவர் மேல கடுப்பாவே இருக்கினம்..! உள்ளூரப் புகைஞ்ச படி..! ஆனால் சீமான் தெளிவாக இருக்கிறார்.. பெரியார் தமிழர்களுக்கு தலைவராக முடியாது. அவர் ஒரு வழிகாட்டி.. மட்டுமே என்று.

அந்த வகையில் சீமானின் மாற்றமும் தெளிவும் தமிழும் தமிழரும் இந்தப் பூமிப்பந்தில் வாழ அவசியம்.. உதவும்..! நிச்சயம் சீமான் தன் தனித்துவப் பாதையில் துணிந்து நின்று தன் தோழர்கள் சகிதம் அதைச் செய்து காட்டுவார்.

தேசிய தலைவருக்கு தூர இருந்து கொண்டு.. மதியுரை வழங்கினவை.. இப்போ சீமானைப் பற்றி ஆரூடம் சொல்ல வெளிக்கிட்டினம். எல்லாம் அவையின்ர எழுத்துக்களுக்கு பெறுமதி தொலைந்து போன விரக்தியில் தானே அன்றி.. இன அக்கறையில் அல்ல..!

பெரும் களியாட்ட நிகழ்வுகளையும் குடும்ப நிகழ்வுகளையும் வேறு பிரித்துணரா முடியாது கருத்தெழுதுபவர்கள் எல்லாம் சீமானுக்கு ஆலோசனை வழங்குவதுதான் வேடிக்கை..!

உன்னை திருத்திக் கொள் சமூகம் தானே திருந்தும் என்று ஒரு பெரியவர் சொன்னது தான் இங்கு சாலப் பொருந்துகிறது..! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை விடுதலைப் போராட்டத்தில் சில நாட்கள்தான் மிகவும் முக்கியமானவை. முழு மாதமும் அல்ல. இப்படி மக்களை November முழுவதும் களியாட்டங்களை, விழாக்களைப் புறக்கணிக்கக் கோருபவர்கள், மாவீரர் தினத்தன்று கொத்துரொட்டிக் கடைகளை அமைத்து வியாபாரம் செய்வது விந்தையான செயலே!

இளையராஜாவின் இசையை விரும்புகின்றவர்கள் கச்சேரிக்கு எந்த சஞ்சலமுமின்றிப் போகவேண்டும். அதே போல மாவீரர் தினத்திற்கும் அவர்களின் தியாகத்தின் மேல் மதிப்பு வைத்து அஞ்சலி செய்யப் போகவேண்டும்.. விரும்பினால் ஒரு தமிழ்த்தாய் நாட்காட்டி வாங்கி ஒவ்வொரு நாளும் திகதியைக் கிழிக்கும்போது விடுதலை கிடைக்க தம்முயிரை ஈந்தவர்களை ஒரு கணம் நினைத்து நாளை ஆரம்பிக்கலாம்.

சில குடும்பங்கள் குடும்ப உறுப்பினர்களில் பலரை போராட்டத்திற்கு ஆகுதி ஆக்கியுள்ளன. பல குடும்பங்கள்.. போராட்ட வாசமே உணராமல் வெளிநாட்டு வாசத்திற்கான சுகத்தை அனுபவிக்கின்றன.

அந்த வகையில் பலருக்கு ஓரிரு நாள் போதும். ஆனால் சிலருக்கு ஆயுள் நீண்டாலும் உறவுகளை இழந்த சோகம் தீராது. அந்த உறவுகளோடு எம்மை இணைத்துக் கொள்ள மாதம் போதாது. உணர்வுகளோடு ஒருமிக்க ஒரு மாதம் கேட்கிறார்களே தவிர.. உங்க கடமைகளை விட்டிவிட்டு வந்து மாவீரரை நினைந்துருகச் சொல்லவில்லை.

நல்லைக் கந்தனுக்கு 25 நாள் விழா எடுக்க விரதம் பிடிக்கினம். காணாத கெளரிக்கு காப்பு என்று வாரங்களைக் கழிக்கினம். விரதம் என்று.. ஆண்டின் முக்கால் பகுதியை செலவழிக்கினம். இன்னும் ஏன் சமர் வந்ததும் கோவில் என்று 10.. 15 நாளை ஓசிச் சோறு எடுக்க செலவழிக்கினம்...! அதுகளையும் ஓரிரு நாளைக்கு என்று மட்டுப்படுத்தலாம் தானே..?????????! ஆக.. மாவீரர் பற்றிய நினைவேந்தல் செய்யத்தான் கால எல்லையும்.. வரையறையும் வகுக்கப்படனுமா..??!

கண்கண்ட தியாகிகளாக உள்ளவங்களை நினைந்து ஓரிரு மாதத்தில் பெரும் களியாட்டங்களை தவிர்க்க சொன்னா.. எத்தனை வியாக்கியானம் செய்கிறோம். புலம்பெயர் தேசங்களில் எத்தனையோ அநாவசியங்களுக்கு எத்தனை காலத்தை வீணடிக்கிறோம்.. அதைப் பற்றி ஏன் எவரும் கதைப்பதில்லை..???! ஏன்னா.. அந்த அநாவசியங்கள்.. பலருக்கு அவசியங்களாக உள்ளன..!

என்னைப் பொறுத்த வரை.. கோவில் திருவிழாக்களைக் குறைத்துவிட்டு... மாவீரர்களை நினைந்து வணங்கும் நிகழ்வுகளை வாரா வாரம் கொண்டு வந்தால் நல்லது என்று சொல்வேன்.

மாவீரர் நாளில் பட்டும்.. நகையும் போட்டு பசன் சோ காட்டுவதை நாங்களும் ஆரம்பம் தொட்டு வெறுக்கிறோம். அதைப்பற்றி கருத்தாடல்கள் இங்கு களத்திலும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கொத்துரொட்டி உட்பட வியாபார நாளாக மாவீரர் நாள் ஆக்கப்படுவதையும் வெறுக்கிறோம். இவற்றில் மாற்றங்கள் வரனும். அத்தோடு மாவீரரை வீழ்ந்த மக்களை நினைந்துருகும் முக்கிய மாதங்களில் பெரும் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதை மக்கள் தாமாக முன் வந்து கைவிடுதல் நன்று..!

அதனை வலியுறுத்த இந்த பிரச்சனைக் களம் பாவிக்கப்படுவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

இந்த விடயத்தை திருப்பி திருப்பி கதைத்து ஒரு பிரயோசனமும் இல்ல. மாற்றத்தை விரும்புறவன் சொல்லாமல் செய்வான். சிலர் சொல்லச் செய்வான். விரும்பாதவன் காலம் தாமதித்து விரும்பலாம் இல்ல விடலாம். அது அவைட பிரச்சனை..! :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்.. என்னதான் நிறைய விளக்கம் சொன்னாலும் மக்கள் மீது எதையும் திணிக்கமுடியாது என்பதை முதலில் உணரவேண்டும்.

முன்னரெல்லாம் தியாக தீபம் திலீபனுக்கு அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாளில் இருந்து மரணத்தைத் தழுவிய நாள்வரை நினைவு கூர்ந்து பல செயற்பாடுகள் நடந்தன. அன்னை பூபதிக்கும் அவ்வாறே.. அதுபோலத்தான் மாவீரர் வாரமும் இருந்தது. ஆனால் இதையெல்லாம் தாயகத்தில் அனுட்டிக்கமுடியாத நிலையில் குறைந்தது ஒரு நாளாவது ஒதுக்குவது புலம்பெயர் நாடுகளுக்குப் பொருத்தம். இல்லை ஒரு மாதம் அல்லது ஒரு வாரம் அனுட்டிக்க வேண்டும் என்று வெறும் வேண்டுகோளை வைத்தால் அது பிசுபிசுத்துவிடும்.

இளையராஜாவின் கச்சேரியைப் புறக்கணிக்க மாவீரரைத் துணைக்கழைத்தவர்கள் இதயசுத்தியுடன் அந்தக் கோரிக்கையை வைக்கவில்லை. தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனம் பிழைக்கவேண்டும் என்பதற்காக சிலவேளைகளில் ரிக்கற்றுகளை வாங்கிச் சில உசார் மடையர்களை அனுப்பி கச்சேரியைக் குழப்ப முற்படலாம். அதையும் மீறிக் கச்சேரி சிறப்பாக நடக்கும் என்றே நினைக்கின்றேன்!

நிச்சயமாக மக்கள் மீது எவரும் எதனையும் திணிக்க முடியாது. ஆனால் மக்களை நோக்கி மக்களால் செய்திகளை விழிப்புணர்வூட்டலை பரப்ப முடியும்.!

இது கூட மக்களை நோக்கி மக்களால் சொல்லப்படும் செய்தியே அன்றி..வேறல்ல. இதனைச் சொல்பவர்களும் மக்கள் தான் என்பதனையும் மக்களின் இன்னொரு பகுதியினரும் உணர்ந்து கொள்ளனும்..!

அந்த அடிப்படை உணர்தல் இன்றி சொல்பவன் யாரோ வேற்றுக்கிரகவாசி என்பது போலவும் கேட்பவர்கள் தான் மக்கள் என்பது போலவும் நடந்து கொள்வதே அந்நியத்தனமாக உள்ளது..!

இங்கு உள்ள பிரச்சனை என்னவென்றால்.... ஒரே இன மக்களில் ஒரு பகுதியினர் சொல்லும் காரணங்களில் உள்ள நியாயத்தை நோக்காமல் அதனைப் புறக்கணித்துக் கொண்டு அல்லது புறக்கணிக்க காரணங்களைத் தேடிக் கொண்டு அதே மக்களின் இன்னொரு சாரார் இயங்க முற்படுவதுதான்..!

இதற்குப் பெயர் திணித்தல் அல்ல. திணிப்பு என்பது தாயகத்தில் எதிரியால் நிகழ்த்தப்படுகிறது. துரோகிகளால் நிகழ்த்தப்படுகிறது. புலம்பெயர் மண்ணில் ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வெள்ளைக்காரனட்ட கெஞ்சிக் கூத்தாடி அனுமதி எடுக்கும் போது வராத ரோசம்.. சொந்த மக்களில் ஒரு பகுதியினர் இனங்காட்டும் அம்சத்தை விளங்கிக் கொண்டு தவிர்ப்பதில் ஏன் வருகுது. அதையே ஏன் திணிப்பாக நினைக்கிறீர்கள்..???!

ஒரு கோவிலை நடத்த விடாமல் இழுத்துப் பூட்டி வைக்கிறான் வெள்ளைக்காரன். அவன்ர நாட்டுக்கு ஏற்ப. அதை எல்லாம் திணிப்பா பார்ப்பீங்காளோ... சட்டமா பார்ப்பீங்களோ..??! ஏன் இதனை மட்டும் ஒரு வேண்டுகோளாக புரிந்துணர்வுக்கான கோரிக்கையாகப் பார்க்காம திணிப்பா சித்தரிக்கிறீங்க...??????! :icon_idea:

3 ஆண்டுக்குள்ளாகவே.. மாவீரரும் மாண்ட மக்களும் கசக்கும் விடயங்களாகி விட்டனவோ..???! :icon_idea::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரரும் மாண்ட மக்களும் கசக்கும் விடயங்களாகி விட்டனவோ..???! :icon_idea::(

தாயகத்தில் வாழும் தமிழர்களின் எதிர்காலத்தில் உண்மையான அக்கறை உள்ளவர்களுக்கு மாவீரரும் மாண்ட மக்களும் கசக்கும் விடயங்களாகிவிடாது..

ஆனால் மாவீரர்களையும் மக்களின் அவலங்களையும் வைத்து வியாபாரம் செய்பவர்களும், போலியாகத் தேசியம் பேசுபவர்களும், வெறும் உணர்ச்சி அரசியல் செய்பவர்களும் கசக்கத்தான் செய்வார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் வாழும் தமிழர்களின் எதிர்காலத்தில் உண்மையான அக்கறை உள்ளவர்களுக்கு மாவீரரும் மாண்ட மக்களும் கசக்கும் விடயங்களாகிவிடாது..

ஆனால் மாவீரர்களையும் மக்களின் அவலங்களையும் வைத்து வியாபாரம் செய்பவர்களும், போலியாகத் தேசியம் பேசுபவர்களும், வெறும் உணர்ச்சி அரசியல் செய்பவர்களும் கசக்கத்தான் செய்வார்கள்..

இதில் முதல் கருத்தை வரவேற்கிறேன். :)

இரண்டாம் கருத்தில் பெரும் முரண்பாடுகள் உள.

எது போலித் தேசியம். அதனை எப்படி அளவீடு செய்வது.. யார் செய்வது உண்மைத் தேசியம்...??????!

உணர்ச்சி அற்ற அரசியல் என்றால் என்ன.. உணர்ச்சியுள்ள அரசியல் என்றால் என்ன..??! அரசியல் என்பதே ஒரு உந்துதல் உணர்ச்சி அறிவு தானே...???!

கொஞ்சம் என்றாலும் அறிவுபூர்வமாக எழுதும் நீங்களும் இப்படி.. சராசரி எழுத்தாளர்கள் போல விளக்கமின்றி எழுத வெளிக்கிடுவது ஏனுன்னு புரியல்ல..! உணர்ச்சி வசப்படுதலோ..???! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது போலித் தேசியம். அதனை எப்படி அளவீடு செய்வது.. யார் செய்வது உண்மைத் தேசியம்...??????!

உணர்ச்சி அற்ற அரசியல் என்றால் என்ன.. உணர்ச்சியுள்ள அரசியல் என்றால் என்ன..??! அரசியல் என்பதே ஒரு உந்துதல் உணர்ச்சி அறிவு தானே...???!

கொஞ்சம் என்றாலும் அறிவுபூர்வமாக எழுதும் நீங்களும் இப்படி.. சராசரி எழுத்தாளர்கள் போல விளக்கமின்றி எழுத வெளிக்கிடுவது ஏனுன்னு புரியல்ல..! உணர்ச்சி வசப்படுதலோ..???! :icon_idea::)

அறிவுபூர்வமாக எனக்கு எழுத வராது என்பது உண்மைதான். நான் உபயோகித்த சொற்களுக்கு விளக்கம் நிறைய யாழ் களத்திலேயே இருக்கின்றது. கட்டாயம் பார்த்திருப்பீர்கள்..

என்னளவில் நான் புரிந்துகொண்டது..

போலித் தேசியம்: சகல கட்டுப்பெட்டித்தனங்களையும் பேணிக்கொண்டு தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொள்வது..

உணர்ச்சி அரசியல்: சீமான் செய்யும் அரசியல்.. வெறும் சத்தம் மட்டும்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலித் தேசியம்: சகல கட்டுப்பெட்டித்தனங்களையும் பேணிக்கொண்டு தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொள்வது..

உணர்ச்சி அரசியல்: சீமான் செய்யும் அரசியல்.. வெறும் சத்தம் மட்டும்தான்

எனக்கு இவற்றில் உடன்பாடில்லை.

கட்டுப்பெட்டித்தனங்கள் எல்லாருக்குள்ளும் ஒரு வகையில் இருக்குது. உங்களை அறியாமல் உங்களுக்குள்ளும் மற்றவர்கள் வெறுக்கத்தக்க கட்டுப்பெட்டித்தனம் இருக்கும். அதனை நீங்கள் இனங்காண முடியாது. அந்த வகையில் ஒரு கோட்பாட்டை பேசுவதற்கு அல்லது ஆதரித்து நிற்பதற்கும் கட்டுப்பெட்டித்தனங்களுக்கும் முடிச்சுப் போட வெளிக்கிட்டால்.. யாருமே எந்தத் தேசியவாதத்தையும் முன்னிறுத்த முடியாது.

சீமானின் அரசியல் களம் தான் அவரின் அரசியல் வடிவத்தை தீர்மானிக்கிறதே அன்றி சீமான் வெறும் உணர்ச்சி அரசியல்வாதின்னு நான் சொல்ல மாட்டேன். சீமானின் படைப்புக்கள் அதற்குச் சான்று.

பெரியாரின் உளறல்களில் இருந்த கோதை விட்டு.. சாறை உறிஞ்சி அவரை தந்தை ஆக்கியதை ஏற்றுக் கொள்ளும் தமிழர்களில் நீங்களும் ஒருவர்..! அந்த வகையில் சீமானின் உணர்ச்சிக் கொதிப்பில் ஈர்க்கப்பட்டு புரட்சி செய்ய புறப்பட்டுள்ள இளைஞர் படையையும் நாம் காண்கிறோம். சீமான் தோற்றுப் போன அரசியல்வாதியல்ல..! தோற்றம் பெற்றுள்ள அரசியல்வாதி..! போகப் போக.. அரசியல் முதிர்ச்சியும் அனுபவங்களும் அவரை பக்குவப்படுத்தும். ஆனால் உணர்ச்சியற்ற அரசியல் என்பது மனிதர்கள் மத்தியில் செத்த பாம்பை வைத்து வித்தை காட்டுவதற்கு ஒப்பானது..! :icon_idea::)

Link to comment
Share on other sites

தாயகத்தில் வாழும் மக்களின் எதிர்காலத்தில் உண்மையான அக்கறை கொண்டபடியினாலேயே புலம்பெயர்வாழ் மக்களில் ஒரு பகுதியினர் [எல்லோரும் அல்ல] அன்று தொட்டு இன்று வரை எத்தனையோ துன்ப துயர அனுபவங்கள் மத்தியிலும் மனிதாபிமான பணியை செய்திருக்கிறார்கள் ,செய்து கொண்டும் இருக்கிறார்கள் ...............போராட்டம் நடைபெற்ற காலங்களில் கூட மாவீரர் தினத்தை அதற்குரிய முறையில் செய்ததுமன்றி, எல்லா மக்களையும் ஒருங்கிணைக்கும் உன்னதமான முயற்சிக்கும் அந்த புனிதமான நிகழ்வை பயன்படுத்தினார்கள்.ஆனால் முல்லிவாய்க்காளுக்குப்பின் பல சவால்களை இந்த மாவீரர் தின நிகழ்வு வரும் காலங்களில் சந்தித்திருக்கிறார்கள் ........சந்தித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

ஆனால் இம்முறை அதற்கான பிரச்னை வேறு ஒரு வடிவில் உருவாகியிருப்பதே கொடுமையிலும் கொடுமை ........இங்கே சில சந்தேகங்கள் கேள்விகளாய் எழுப்பப்படுவது நியாயமானதே ........... உதாரணமாக இளையராயாவின் நிகழ்ச்சி எப்படி மாவீரர் நிகழ்வை குழப்பும் என்னும் நியாயமான கேள்வியைப்போல் ,தமிழர்களின் திறமைகளில் ஒன்றான அந்தக்கலஞ்சனின் ,தமிழனின் நிகழ்ச்சியை அதே தமிழர்களின் மாவீரர் தினம் நடைபெறவுள்ள அந்த மாதத்தில் நடாத்தாமல் இன்னொரு மாதத்தில் நடாத்தினால் என்ன என்றொரு கேள்வியும் உள்ளதல்லவா .அவற்றில் இருந்து தெளிந்து தாயக மக்களினதும்,புலம்பெயர்வாழ் மக்களினதும் எதிர்காலத்தை செம்மைப்படுத்துவதே இன்றைய காலத்தின் கட்டாயம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் அரசியல் களம் தான் அவரின் அரசியல் வடிவத்தை தீர்மானிக்கிறதே அன்றி சீமான் வெறும் உணர்ச்சி அரசியல்வாதின்னு நான் சொல்ல மாட்டேன். சீமானின் படைப்புக்கள் அதற்குச் சான்று.

பெரியாரின் உளறல்களில் இருந்த கோதை விட்டு.. சாறை உறிஞ்சி அவரை தந்தை ஆக்கியதை ஏற்றுக் கொள்ளும் தமிழர்களில் நீங்களும் ஒருவர்..! அந்த வகையில் சீமானின் உணர்ச்சிக் கொதிப்பில் ஈர்க்கப்பட்டு புரட்சி செய்ய புறப்பட்டுள்ள இளைஞர் படையையும் நாம் காண்கிறோம். சீமான் தோற்றுப் போன அரசியல்வாதியல்ல..! தோற்றம் பெற்றுள்ள அரசியல்வாதி..! போகப் போக.. அரசியல் முதிர்ச்சியும் அனுபவங்களும் அவரை பக்குவப்படுத்தும். ஆனால் உணர்ச்சியற்ற அரசியல் என்பது மனிதர்கள் மத்தியில் செத்த பாம்பை வைத்து வித்தை காட்டுவதற்கு ஒப்பானது..! :icon_idea::)

சீமானை ஒரு பத்து வருடம் கழித்துப் பார்ப்போம்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108014

''தமிழீழத்தை அடைய என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது?''

''அரசியல் புரட்சி. 12 கோடித் தமிழரில் ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டிவிட்டால்கூட மிகப் பெரிய புரட்சி. அட, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் நாடு அடைந்துவிடுவேன்!''

''பிரபாகரனுக்குப் பிந்தைய காலகட்டத்தில் உருவாகி இருக்கும் வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் போட்டியின் வெளிப்பாடுதான் உங்களுடைய அரசியல் என்று சொன்னால், ஏற்பீர்களா?''

''இல்லை. ஒரு நீண்ட போராட்டத்தின் தொடர்ச்சி இது. ஆயுதம் ஏந்திய புரட்சி மௌனித்த பிறகு, அரசியல் புரட்சியாக அது வெடிக்கிறது. பல தளங்களில் வெடிக்கிறது. நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்... ஒரு காலகட்டத்தில் மிகக் கூர்மையான, வலிமையான புரட்சியாக அது வெடிக்கும். இன்னும் 10 ஆண்டுகள் கழித்துப் பாருங்கள்... நிச்சயமாக தேசியக் கட்சிகளோ, திராவிடக் கட்சிகளோ இந்த நிலத்தில் இருக்கப்போவது இல்லை!''

''ஈழத் தமிழர் நலனுக்காக வைகோ, திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?''

''முடியாது. இந்திய தேசிய, திராவிட, சாதியக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் நிற்கிறோம். இனியும் தமிழ்ப் பிள்ளைகளான நாங்கள், இவர்கள் பின்னால் செல்ல முடியாது.''

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்துப் பார்ப்போம். மரணம் அதற்குள் எம்மை தழுவாவிட்டால்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

இசை நீங்கள் இப்படி கோழையாய் இருக்க கூடாது :lol::D:icon_idea:

சரியோ, பிழையோ.. சீமான் நமக்காக குரல் குடுக்கிறார்.. :unsure: அதுக்கு ஒரு மரியாதை குடுக்கலாமெண்டு ஒரு சிந்தனை.. :D

என்ன இவ்வளவு சிரிப்பு. வாங்கின டிக்கெட்டை வித்தாச்சா? :lol:

அது தமிழ்சூரியன் எழுதினதுக்கு வந்த சிரிப்பு.. :D இப்ப அந்தப் பகுதியை நியானி வெட்டியாச்சு.. :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.