Jump to content

மாவீரர் காலத்தில் நடத்தப்படும் இளையராஜாவின் நிகழ்ச்சியை புறக்கணிப்போம்-செந்தமிழன் சீமான்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்கீயூஸ்மி வருகின்ற நவம்பர் மாதம் பூரா சீமானுக்கு எந்த சூட்டிங்கும் இல்லையா என யாராவது கேட்டுச் சொல்வீங்களா

நான் நவம்பர் மாதம் முழுவதும் வேலைக்கு போறனான் ரதி

கார்த்திகை 27 உட்பட............. :(

Link to comment
Share on other sites

  • Replies 139
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் நவம்பர் மாதம் முழுவதும் வேலைக்கு போறனான் ரதி

கார்த்திகை 27 உட்பட............. :(

நீங்கள் வேலைக்குப் போறதும்,அவர் சூட்டிங் போறதும் ஒன்று என்டால் இளையராஜா செய்ய வாறாதும் வேலை தான்...எல்லாம் பணம் தான்...தான் மட்டும் சூட்டிங் போகலாம் பணம் உழைக்கலாம் என்டால் அதை இசைஞானி செய்யக் கூடாதோ :unsure:

Link to comment
Share on other sites

வரும் அறிக்கைகள் மடல்கள் எல்லாவற்றையும் யார் யார் எழுதுகிறார்கள் என பார்க்கும் போது வியாபார போட்டி என்பது மட்டும் விளங்குகிறது.இளையராஜாவின் நிகழ்ச்சியை குழப்ப மாவீரர் நாள் (வாரம்,மாதம்) யுக்தியாக பயன்படுத்தப்படுகிறது.மக்களோ இரு பக்க அறிக்கைகள் மடல்களை பார்த்து வழக்கம் போல குழம்பி இரு குழுவாகி செயற்படுகிறார்கள்.தருணம் பார்த்து குட்டையை குழப்பவும் சில சக்திகள் முனைகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸ்கீயூஸ்மி வருகின்ற நவம்பர் மாதம் பூரா சீமானுக்கு எந்த சூட்டிங்கும் இல்லையா என யாராவது கேட்டுச் சொல்வீங்களா

அவர் சூட்டிங் ஸ்பொட்டில நின்றாலும் ஒரு கார்த்திகைப் பூவேந்திய நிலையில் நிற்பார். களியாட்டங்களைத் தவிர்ப்பார்.

இசைஞானி பாடலுக்கு இசையமைக்க.. படத்திற்கு இசையமைக்க அல்ல கனடா வருகிறார். அவர் ஒரு களியாட்ட நிகழ்வுக்கு வருகிறார்.

உங்களுக்கு இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடு புரியல்லைன்னா.. அதைப் புரிஞ்சுக்க முயன்று கொண்டு கருத்தெழுத்துவது சிறப்பு..!

மாவீரர்களுக்காக யாரையும் மரணிக்கச் சொல்லவில்லை. அந்த மாதத்தில் என்றாவது.. அவர்களின் நினைவேந்தவே சொல்கிறார்கள்..! நவம்பர் மாவீரர் நினைவேந்தும் மாதமாக இருப்பதால் தவிர்க்கப்படக் கூடிய களியாட்டங்களை தவிர்க்கச் சொல்கின்றனரே தவிர அன்றாட கடமை.. தொழிலை அல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

வரும் அறிக்கைகள் மடல்கள் எல்லாவற்றையும் யார் யார் எழுதுகிறார்கள் என பார்க்கும் போது வியாபார போட்டி என்பது மட்டும் விளங்குகிறது.இளையராஜாவின் நிகழ்ச்சியை குழப்ப மாவீரர் நாள் (வாரம்,மாதம்) யுக்தியாக பயன்படுத்தப்படுகிறது.மக்களோ இரு பக்க அறிக்கைகள் மடல்களை பார்த்து வழக்கம் போல குழம்பி இரு குழுவாகி செயற்படுகிறார்கள்.தருணம் பார்த்து குட்டையை குழப்பவும் சில சக்திகள் முனைகின்றன.

உங்கள கருத்து தான் உண்மை நுணா.......... கீழே உள்ள எனது கருத்து இன்னொரு திரிக்காய் என்னால் எழுதப்பட்டது

பல தரப்பட்ட வாய்வெளிச்செய்திகள் மூலம் மாவீரர் தினம் இந்த முறை பல தரப்பினராலும் சேர்ந்து ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் நடக்கப்போவதாக தகவல்கள் கசிந்திருக்கின்றன................நானும் புலம்பெயர் வாழ தமிழன் என்ற வகையில் இந்த உத்தியோகபூர்வமற்ற செய்தி என் காதுக்கு எட்டியது.............அப்படி நடந்தால் அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சி கொள்ளவேணும்...............ஆனால் இப்போ வரும் , திடீர் திடீர் என்று விசக்கிருமிகள் போல் ,குழப்பங்களை உருவாக்குவது போல் வரும் தலையங்கங்களையும், செய்திகளையும் பார்க்கும்போது .................உண்மையில் மாவீரர் தினம் ஒரு குடையின் கீழ் நடக்கும் என்ற செய்தி உண்மை போலவே தோன்றுகிறது ...........

புரியவில்லையா ...........மாவீரர் தினத்தை ..குழப்புவதற்கு விசக்கிருமிகளால் இயலாவிட்டால் வேறு ஏதாவது மாற்று வழிகளை தானே பின்பற்ற வேண்டும் .............

Link to comment
Share on other sites

மாவீரர்களை மாண்ட மக்களை இன அழிப்பை அடையாளப்படுத்தும் மாதங்களாக நவம்பர்.. மே இரண்டையும் கணித்து பெரும் எடுப்பிலான களியாட்டங்களை தவிர்க்கக் கோருவது என்பதில் எந்தத் தவறும் யாரும் காண முடியாது. அப்படி காணும் ஈழ வரலாறு தெரிந்த தமிழர்கள்.. சராசரி மனிதர்களாக இருக்கக் கூட தகுதி அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்..!

தமிழக திரையுலகமும்.. கலைஞர்களும்.. தமிழ் தேசிய உணர்வாளர்களும்.. தமிழீழ ஆர்வலர்களும்..

1) யார் கோருகிறார்கள்? எப்போதிலிருந்து கோருகிறார்கள்? சீமான் தான் இப்போது எமக்கு வழிகாட்டியா?

2) இனிமேல் ஈழத் தமிழர்கள், திருமணம் போன்ற விழாக்களும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் செய்வது தவறாகுமா?

3) தமிழுக்கான நாட்காட்டியா? ஆங்கில நாட்காட்டியா? எதை பின்பற்ற வேண்டும்?

4) காட்டமான வார்த்தைப் பிரயோகத்தை ஏன் உபயோகிக்க வேண்டும்? 12 மாதங்களில் இரண்டு மாதம் என்பது நீண்ட காலம். அதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

நான் கனடாவில் இல்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் போவதும் இல்லை.

ஆனால், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும், வேறு நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் சொல்வதுடன் உடன்படவேண்டி இருக்கிறது.. படமெடுப்பது அவர் தொழில்.. ஆனால் அந்தப் படத்தை மே, நவம்பரில் வெளியிடாமல் பார்த்துக் கொண்டால் சரி.. (பிறகு அது களியாட்டம் ஆகிவிடலாம்.) :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) யார் கோருகிறார்கள்? எப்போதிலிருந்து கோருகிறார்கள்? சீமான் தான் இப்போது எமக்கு வழிகாட்டியா?

2) இனிமேல் ஈழத் தமிழர்கள், திருமணம் போன்ற விழாக்களும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் செய்வது தவறாகுமா?

3) தமிழுக்கான நாட்காட்டியா? ஆங்கில நாட்காட்டியா? எதை பின்பற்ற வேண்டும்?

4) காட்டமான வார்த்தைப் பிரயோகத்தை ஏன் உபயோகிக்க வேண்டும்? 12 மாதங்களில் இரண்டு மாதம் என்பது நீண்ட காலம். அதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

நான் கனடாவில் இல்லை. இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்குப் போவதும் இல்லை.

ஆனால், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும், வேறு நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகின்றன.

1. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஈகங்கள் மறக்கப்படக் கூடாது மழுங்கடிக்கப்படக் கூடாது அந்தப் போராட்டம் வீழ்ச்சி இன்றி அதன் இலக்கை எட்ட வேண்டும்.. மாண்டவர்களின் கனவு பலிக்க வேண்டும்.. என்று விரும்புபவர்கள் கோருகின்றனர்.

2. சீமானும் ஒரு வழிகாட்டி. தமிழீழ தேசிய தலைவரை அவர் வழிகாட்டியாகக் கொண்டிருப்பதால்.

3. களியாட்டங்கள் என்பது பொதுக் களியாட்டங்கள். தனிப்பட்ட நபர்களின் சொந்த வாழ்க்கைப் பிரச்சனைகள் நிகழ்வுகளை யாரும் தவிர்க்க கோர முடியாது. அது அவரவரின் தேவை நோக்கம்.. மனச்சாட்சியின் பாற்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டிய விடயங்கள்..!

4. உங்கள் தேவை எதோ அதற்கேற்ப நீங்கள் பின்பற்றலாம். மாவீரர் வாரம்.. நாள்.. ஆங்கில நாட்காட்டி வழிதான் தேசிய தலைமையால் தீர்மானிக்கப்பட்டது.

5. இதமாக.. பண்பாகச் சொல்லியும் செவிமடுக்காதவிடத்து காட்டமாகத் தான் சொல்லச் செய்வார்கள். அதற்கான சூழலையும் நாமே தான் உருவாக்குகிறோம்..! வேறு யாருமல்ல..! :icon_idea:

Link to comment
Share on other sites

சீமான் ,செல்வமணி ,அமீர் என்ன நடக்குது இங்க .தமிழ்நாடு திரைப்பட சங்க கூட்டமா ? அடுத்து ரோஜா மீனா

வீடியோவும் வருமோ தெரியவில்லை .

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேலைக்குப் போறதும்,அவர் சூட்டிங் போறதும் ஒன்று என்டால் இளையராஜா செய்ய வாறாதும் வேலை தான்...எல்லாம் பணம் தான்...தான் மட்டும் சூட்டிங் போகலாம் பணம் உழைக்கலாம் என்டால் அதை இசைஞானி செய்யக் கூடாதோ :unsure:

நெடுக்கு எழுதியுள்ளது தான் எனது பதிலும்.

தயவு செய்து சீமான் எமக்காக செய்த பல தியாகங்களில் ஒன்று அவரது திரைப்படத்துறை வருமானம். எப்படியும் உழைக்கலாம் என்றிருந்த சினிமாவை இப்படி ஆக்கணும் என்று உழைத்து அதற்காக பல மாற்றங்களை தன்னிலும் தான் செய்யும் தொழிலிலும் தன்னை சார்ந்தவர்களுடாகவும் செய்பவர் சீமான்.

இளையராசாவின் இசையை மதிக்கின்றேன். ஆனால் அதற்காக சீமானுடன் ஒப்பிடாதீர்கள்

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சூட்டிங் ஸ்பொட்டில நின்றாலும் ஒரு கார்த்திகைப் பூவேந்திய நிலையில் நிற்பார். களியாட்டங்களைத் தவிர்ப்பார்.

இசைஞானி பாடலுக்கு இசையமைக்க.. படத்திற்கு இசையமைக்க அல்ல கனடா வருகிறார். அவர் ஒரு களியாட்ட நிகழ்வுக்கு வருகிறார்.

உங்களுக்கு இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடு புரியல்லைன்னா.. அதைப் புரிஞ்சுக்க முயன்று கொண்டு கருத்தெழுத்துவது சிறப்பு..!

மாவீரர்களுக்காக யாரையும் மரணிக்கச் சொல்லவில்லை. அந்த மாதத்தில் என்றாவது.. அவர்களின் நினைவேந்தவே சொல்கிறார்கள்..! நவம்பர் மாவீரர் நினைவேந்தும் மாதமாக இருப்பதால் தவிர்க்கப்படக் கூடிய களியாட்டங்களை தவிர்க்கச் சொல்கின்றனரே தவிர அன்றாட கடமை.. தொழிலை அல்ல..! :icon_idea:

இளையராஜாவையும்,இசைக் குழுவினரையும் ஒரு கார்த்திகைப் பூவை குத்திக் கொண்டு வரச் சொல்லுவோம்...மாவீரர்களுக்கு மரியாதை இல்லை கார்த்திகை பூவுக்குத் தான் மரியாதை...சீமான் கூடவே பிறந்து வளர்ந்தவர் மாதிரி அவர் களியாட்டங்களை தவிர்ப்பார் என எழுதி இருக்கிறீங்கள் பார்ப்போம் நவம்பர் மாதம் இனி மேல் தான் வரப் போகுது

புங்குடுதீவு ஆட்களால் கனடாவில் 10ம் திகதி ஒரு களியாட்ட நிகழ்வு நடக்கப் போகுதாம் அதை நிப்பாட்டுவதற்கு யாராவது,என்ன முயற்சியாவது எடுத்தார்களா?

என்ன செய்கிறது ஆட்டுக்கு ஆடு சொன்னால் கேட்காதம் மணி கட்டின ஆடு சொல்லோனுமாம். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஈகங்கள் மறக்கப்படக் கூடாது மழுங்கடிக்கப்படக் கூடாது அந்தப் போராட்டம் வீழ்ச்சி இன்றி அதன் இலக்கை எட்ட வேண்டும்.. மாண்டவர்களின் கனவு பலிக்க வேண்டும்.. என்று விரும்புபவர்கள் கோருகின்றனர்.

மறுக்க முடியாத உண்மை.

2. சீமானும் ஒரு வழிகாட்டி. தமிழீழ தேசிய தலைவரை அவர் வழிகாட்டியாகக் கொண்டிருப்பதால்.

அதனையும் ஏற்றுக்கொள்கின்றேன்.

3. களியாட்டங்கள் என்பது பொதுக் களியாட்டங்கள். தனிப்பட்ட நபர்களின் சொந்த வாழ்க்கைப் பிரச்சனைகள் நிகழ்வுகளை யாரும் தவிர்க்க கோர முடியாது. அது அவரவரின் தேவை நோக்கம்.. மனச்சாட்சியின் பாற்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டிய விடயங்கள்..!

நிச்சயமாக..

4. உங்கள் தேவை எதோ அதற்கேற்ப நீங்கள் பின்பற்றலாம். மாவீரர் வாரம்.. நாள்.. ஆங்கில நாட்காட்டி வழிதான் தேசிய தலைமையால் தீர்மானிக்கப்பட்டது.

:)

5. இதமாக.. பண்பாகச் சொல்லியும் செவிமடுக்காதவிடத்து காட்டமாகத் தான் சொல்லச் செய்வார்கள். அதற்கான சூழலையும் நாமே தான் உருவாக்குகிறோம்..! வேறு யாருமல்ல..! :icon_idea:

வேறு வழி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேலைக்குப் போறதும்,அவர் சூட்டிங் போறதும் ஒன்று என்டால் இளையராஜா செய்ய வாறாதும் வேலை தான்...எல்லாம் பணம் தான்...தான் மட்டும் சூட்டிங் போகலாம் பணம் உழைக்கலாம் என்டால் அதை இசைஞானி செய்யக் கூடாதோ :unsure:

இளையராஜா இந்தியாவில் இயல்பாக படங்களிற்கு இசை அமைத்தால் அது அவரின் தொழில் அது பிரச்சனை இல்லை அவர் வலியையும் ரணங்களை நேரடியாக அனுபவித்த ஈழத்தமிழர்களிடம் உழைப்பதற்கு வருவதுதான் பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளை ரதி முடிந்தால் இளையராசாவை நிகழ்ச்சிதொடங்கமுன் மாவீரருக்கு வேண்டாம் முள்ளிவாய்காலிற்கு அகவணக்கம் செய்யவை பாப்பம். இளையராசா இசை ஞானிதான்.அதுக்கு இனஉணா்வும் மனிதாபிமானமும் சுத்தசூன்யம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவையும்,இசைக் குழுவினரையும் ஒரு கார்த்திகைப் பூவை குத்திக் கொண்டு வரச் சொல்லுவோம்...மாவீரர்களுக்கு மரியாதை இல்லை கார்த்திகை பூவுக்குத் தான் மரியாதை...சீமான் கூடவே பிறந்து வளர்ந்தவர் மாதிரி அவர் களியாட்டங்களை தவிர்ப்பார் என எழுதி இருக்கிறீங்கள் பார்ப்போம் நவம்பர் மாதம் இனி மேல் தான் வரப் போகுது

புங்குடுதீவு ஆட்களால் கனடாவில் 10ம் திகதி ஒரு களியாட்ட நிகழ்வு நடக்கப் போகுதாம் அதை நிப்பாட்டுவதற்கு யாராவது,என்ன முயற்சியாவது எடுத்தார்களா?

புங்குடுதீவா ............ எங்கள் தானைத் தலைவர் களத்தில் இறங்கி இதை தடுப்பார் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு எழுதியுள்ளது தான் எனது பதிலும்.

தயவு செய்து சீமான் எமக்காக செய்த பல தியாகங்களில் ஒன்று அவரது திரைப்படத்துறை வருமானம். எப்படியும் உழைக்கலாம் என்றிருந்த சினிமாவை இப்படி ஆக்கணும் என்று உழைத்து அதற்காக பல மாற்றங்களை தன்னிலும் தான் செய்யும் தொழிலிலும் தன்னை சார்ந்தவர்களுடாகவும் செய்பவர் சீமான்.

இளையராசாவின் இசையை மதிக்கின்றேன். ஆனால் அதற்காக சீமானுடன் ஒப்பிடாதீர்கள்

நன்றி.

மன்னிக்க வேண்டும் அண்ணா தெரியாமல் தான் கேட்கிறேன் அப்படி என்ன பெரிய தியாகத்தை சீமான் எங்களுக்காக செய்து விட்டார்?...சீமானை விட தமிழ் நாட்டில் இருக்கும் கஸ்டப்பட்ட அப்பாவி சனங்கள் தான் எங்களுக்காக அதிகம் செய்து உள்ளனர்,செய்கின்றனர்.அவர்கள் தான் எங்களுக்காக தீக்குளிக்கின்றனர்.

தலைவரை சந்தித்தவர் என்ட ஒரு தகுதி இருந்தால் காணுமா?...புலத்தில் இருக்கும் பல பேர் தலைவரை சந்தித்து தான் இருக்கிறார்கள்...தலைவர் சந்தித்தவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்றோ,அவர்கள் எங்களுக்காக போராடுவார்கள் என்பதோ சுத்த பொய்...அப்படி அவர் உண்மையில் தலைவரையும்,ஈழத் தமிழரையும் நேசித்திருந்தால் 2009 யிலேயே எதாவது செய்து இருப்பார்...நான் அவரை மட்டும் சொல்லவில்லை தமிழக அரசியல்வாதிகள் எல்லோரையும் தான் சொல்கிறேன் ஆனால் அங்கு இருக்கும் ஈழத்தை நேசிக்கும் அப்பாவி பொது மக்கள் தான் பாவம்.

கூடங்குளத்தில் அணு ஆலைக்கு எதிராக உதயகுமார் என்னும் ஒரு தனி மனிதனால் அரசிற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க முயலுமானால்,மக்களை திரட்ட முடியுமானால் ஏன் சீமான் போன்றவர்களால் முடியவில்லை?

தலைவர் கடைசி நேரத்தில் கேபியை ஏதோ ஒரு பதவியில் அமர்த்தினார் சீமானுக்கு எதாவது கொடுத்தாரா? அல்லது சீமானை பின் தொடர சொன்னாரா?...தலைவருக்கு கடைசி நேரத்திலாவது யார்,யார் என்ன மாதிரி என்று தெரிந்திருக்கும்...ஆபத்து நேரத்தில் தான் நண்பனையும்,பகைவனையும் தெரிந்து கொள்ளலாம்

தமிழகத்தில் உள்ள அப்பாவி ஜனங்கள் இன்னும் தமிழ் உணர்வோடும்,தேசிய பற்றோடும் தான் இருக்கிறார்கள் ஆனால் இவரைப் போன்ற அரசியல்வாதிகள் தங்கட சுயலாபத்திற்காக அதைப் பயன் படுத்துகிறார்களே தவிர எங்கட மண்ணுக்காகவும்,எமது மக்களுக்காவும் இது வரை ஒன்றும் செய்யவில்லை,இனி மேலும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்...அப்படி எதாவது எம் மக்களுக்காக இனி மேல் எதாவது நல்லது செய்து விட்டால் இதில் வந்து நான் மன்னிப்பு கேட்கிறேன்...சிங்கள ஆமியால் சுட்டுக் கொல்லப் படுகின்ற தங்கட மீனவரையே அவர்களால்

காப்பாற்ற முடியவில்லை :(

கருணாநிதி குடும்பம் இனி மேல் தமிழ் உணர்வுள்ள படங்களை மட்டும் எடுத்தால் உடனே கருணாநிதி ஈழப்பிரச்சனைக்கு ஆதரவாக எதாவது செய்து விடிவாரா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை ரதி முடிந்தால் இளையராசாவை நிகழ்ச்சிதொடங்கமுன் மாவீரருக்கு வேண்டாம் முள்ளிவாய்காலிற்கு அகவணக்கம் செய்யவை பாப்பம். இளையராசா இசை ஞானிதான்.அதுக்கு இனஉணா்வும் மனிதாபிமானமும் சுத்தசூன்யம்.

இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளர் அதில் எனக்கு மாற்று கருத்து கிடையாது, ஆனால் சரியான தலைக்கனம் கொண்டவர் இந்தாள், ஒருபோதும் தாயகபாடல்களை பாடியோ இசைமைத்ததோ கிடையாது முள்ளிவாக்காலில் எமது உறவுகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட வேளையில் இந்த மனிதன் ஒரு ஆர்ப்பாட்டத்திலும் கலந்து தனது எதிர்ப்பை காட்டியது கிடையாது பேரளவில் ஒரு அறிக்கை கூட விடவும் இல்லை அப்படியாக்கொத்த இவரிடம் நீங்கள் எதை எதிர்பார்க்க முடியும் ? :(

தன் மானம் இருந்த தமிழன் எல்லாம் களத்திலை போய்விட்டான்.

மிகவும் வருத்தம் கலந்த உண்மை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை ரதி முடிந்தால் இளையராசாவை நிகழ்ச்சிதொடங்கமுன் மாவீரருக்கு வேண்டாம் முள்ளிவாய்காலிற்கு அகவணக்கம் செய்யவை பாப்பம். இளையராசா இசை ஞானிதான்.அதுக்கு இனஉணா்வும் மனிதாபிமானமும் சுத்தசூன்யம்.

உண்மையாக மாவீரர்களை நேசித்தால் உங்கட ஈழத் தமிழரால் வருகின்ற நவம்பர் 10ம் திகதி கனடாவில் நடத்தப்படப் போகும் களியாட்ட நிகழ்வுகளை தடுத்து நிறுத்துங்கோ பார்ப்போம்

Link to comment
Share on other sites

சீமானை எல்லாம் சீரியசாக எடுக்கத்தேவை இல்லை. அவர் தமிழ்நாட்டில் ஒரு காமடிபீசாகி விட்டார். இன்றைக்கு அவரைக் கண்டால் பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி போன்றவர்களே ஓடி ஒளிக்கிறார்கள்.

சீமானுக்கு இன்றைக்கு பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதால், இசைஞானியின் நிகழ்ச்சியை எடுத்திருக்கிறார். நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறும். ஆகவே இவற்றை எல்லாம் கவனத்தில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ்நாட்டில் தமிழ் விரோதகட்சி காங்கிரசின் படுதோல்விக்கு யார் காரணம் ?

Link to comment
Share on other sites

அவர் சூட்டிங் ஸ்பொட்டில நின்றாலும் ஒரு கார்த்திகைப் பூவேந்திய நிலையில் நிற்பார். களியாட்டங்களைத் தவிர்ப்பார்.

இசைஞானி பாடலுக்கு இசையமைக்க.. படத்திற்கு இசையமைக்க அல்ல கனடா வருகிறார். அவர் ஒரு களியாட்ட நிகழ்வுக்கு வருகிறார்.

உங்களுக்கு இவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடு புரியல்லைன்னா.. அதைப் புரிஞ்சுக்க முயன்று கொண்டு கருத்தெழுத்துவது சிறப்பு..!

மாவீரர்களுக்காக யாரையும் மரணிக்கச் சொல்லவில்லை. அந்த மாதத்தில் என்றாவது.. அவர்களின் நினைவேந்தவே சொல்கிறார்கள்..! நவம்பர் மாவீரர் நினைவேந்தும் மாதமாக இருப்பதால் தவிர்க்கப்படக் கூடிய களியாட்டங்களை தவிர்க்கச் சொல்கின்றனரே தவிர அன்றாட கடமை.. தொழிலை அல்ல..! :icon_idea:

சினிமாவே ஒரு களியாட்டத்தை வைத்து பிழைப்பு தானே நடக்கிறது?

Link to comment
Share on other sites

இங்கும் பலர் சீமானை போல நடிகர்களே .

ரதி எழுதுவது முற்றிலும் உண்மை .(நாலு புத்தகம் வாசிப்பதால் தான் வந்ததோ ).

சீமான் மழைக்கு அவ்வப்போது முளைக்கும் ஒரு காளான் .இளையராஜா தமிழர் வாழ்வில் ஒரு பெரு விருட்சம் .

எதுவென்றாலும் அவனவன் விரும்பி செய்யவேண்டும் ,இன்னமும் மற்றவனை கட்டாயப்படுத்தும் உங்கள் சிந்தனை இன்னமும் மாறவில்லை .

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குக் காரணம் நிறைய உண்டு. காங்கிரஸ் கட்சியின் கோஸ்டி மோதல்கள் தொடங்கி தோழமைக் கட்சிகளின் ஒத்துழையாமை என்று நிறைய உண்டு. முள்ளிவாய்க்காலில் எங்களுக்கு ஏற்பட்ட அழிவும் தமிழக மக்களை பாதித்தது. ஆனால் அது ஒன்றுதான் காரணம் என்று நாங்கள் நம்பினால் அது எங்களின் அறியாமை.

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு சீமான் உரிமை கோரிக் கொண்டிருக்கிறார். சீமான் தேர்தலில் நின்றால் காங்கிரஸ் கட்சி பெறுகின்ற அளவிற்குத்தான் அவரும் வாக்குகளைப் பெறுவார்.

மற்றைய விடயங்களில் எப்படியோ, இதை அவர் உணர்ந்தே இருக்கிறார். அதனாலேயே தேர்தலில் நிற்பதை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார். இப்படியே அவர் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார் என்றுதான் நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.