Jump to content

Breaking News


Recommended Posts

:roll:   :? என்னகருத்தில் அப்படி எழுதியுள்ளீர்கள் கண்ணன்... சொல்லுங்கோ பாப்பம்

கூட்மைபினர் வெல்லலாம் தோற்கலாம்

அது வேறு பிரச்சினை

ஏகபிரதிகள் தாம் என்று உலகுக்குகாட்ட கூட்டமைபினருக்கு வாக்கு போடச்சொல்கிறார்கள்.

கூட்டமைபினர் தோற்றால் அது எமது தோல்வி என்று அதே மேடையில் கூறுவார்களா?

அப்படிக்கூறதவகையில் இந்த வெற்றியும் தோல்வியும் கூட்டமைப்பினருக்கு மட்டுமே

அது எனது கருத்தென்பதை விட சாதாரண லொஜிக் எனவே எனக்கு எவரும் பதில் எழுதவேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply

LTTE proposes: Vanni access for foreign, local polls monitors  

Polling booths to be sited in LTTE-held areas?

இந்த வன்னிக்குள் வாக்குச்சாவடி பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால்.. வாக்குப்போடுறது இராணுவப்பகுதிகளிலிருந்தால் கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்

:?: :?: :?:

Link to comment
Share on other sites

எங்கள் கருத்து இன்று உலகில் எங்கும் மக்களுக்கு உண்மையை தரிசிக்க யாரும் வழிகாட்டுவதில்லை...எல்லோரும் இதுதான் உண்மை என்று எதையோ திணிக்கவே முயல்கின்றனர்....! மக்களும் அப்படியே நம்பி...தமது இயலாமையை வெற்றிகொள்ள முடியாமல் இருப்பதால்தான் வாக்கும் சீட்டும் சன நாய் அகக் கூத்தும்.... கோடிக்கணக்கில் அதே மககளின் வரிப்பணத்தில் நடத்தப்படும் கூத்தாகி உலகெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.....! மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழியில்லை ஆனால் வாக்குச் சீட்டைக் கொடுத்து வாக்குப் போட அவர்களை காசு கொட்டி அழைத்து ஏமாற்ற முடிகிறது....! வாக்குப் போட்ட மறு நிமிடம் அதே மக்களின் நிலை என்ன....???! பழைய குருடி கதவைத் திறவடி நிலைதான்.....! பழையபடி வானம் பார்க்க வேண்டியதுதான்....!

:P :evil: :roll: :!: :?: :idea:

Link to comment
Share on other sites

எங்கள் கருத்து இன்று உலகில் எங்கும் மக்களுக்கு உண்மையை தரிசிக்க யாரும் வழிகாட்டுவதில்லை...எல்லோரும் இதுதான் உண்மை என்று எதையோ திணிக்கவே முயல்கின்றனர்....! மக்களும் அப்படியே நம்பி...தமது இயலாமையை வெற்றிகொள்ள முடியாமல் இருப்பதால்தான் வாக்கும் சீட்டும் சன நாய் அகக் கூத்தும்.... கோடிக்கணக்கில் அதே மககளின் வரிப்பணத்தில் நடத்தப்படும் கூத்தாகி உலகெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.....! மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழியில்லை ஆனால் வாக்குச் சீட்டைக் கொடுத்து வாக்குப் போட அவர்களை காசு கொட்டி அழைத்து ஏமாற்ற முடிகிறது....! வாக்குப் போட்ட மறு நிமிடம் அதே மக்களின் நிலை என்ன....???! பழைய குருடி கதவைத் திறவடி நிலைதான்.....! பழையபடி வானம் பார்க்க வேண்டியதுதான்....!
குருவிகாள்.. கருத்து கொஞ்சம் ஆட்டம் காணுது.. தேர்தலே நடக்கக்கூடாது எண்ட தோரணையிலை கருத்துப் போகுது..

என்ன பட்டிக்குள்ளையே எதிர்ப்பு கிளம்பியிருக்குதோ..?

புளி.. ஏவறை வருகுது.. :!: :idea: :?:

Link to comment
Share on other sites

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றக்கூடிய அரசில் நாம் ஒருபோதும் அங்கம் வகிக்கப்போவதில்லை: ரவூப் ஹக்கீம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றக்கூடிய அரசாங்கம் ஒன்றில் தாம் ஒருபோதும் அங்கம் வகிக்கப்போவதில்லை என சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையான டெய்லி மிரருக்கு வழங்கிய நீண்ட செவ்வியொன்றிலேயே, ரவூப் ஹக்கீம் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தமக்கும் இடையில் பொதுவான உடன்பாடுகள் கிடையாது எனத் தெரிவித்துள்ள ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களது உரிமைகளையும், அபிலாசைகளையும் தமிழ் தேசியக் கூட்;;டமைப்பினர் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், அத்தகையவர்களுடன் இணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமற்ற ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தமது கட்சி இணையக்கூடிய வாய்ப்பிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விடயம் n;தாடர்பில் தாம் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகத

Link to comment
Share on other sites

எங்கள் கருத்து இன்று உலகில் எங்கும் மக்களுக்கு உண்மையை தரிசிக்க யாரும் வழிகாட்டுவதில்லை...எல்லோரும் இதுதான் உண்மை என்று எதையோ திணிக்கவே முயல்கின்றனர்....! மக்களும் அப்படியே நம்பி...தமது இயலாமையை வெற்றிகொள்ள முடியாமல் இருப்பதால்தான் வாக்கும் சீட்டும் சன நாய் அகக் கூத்தும்.... கோடிக்கணக்கில் அதே மககளின் வரிப்பணத்தில் நடத்தப்படும் கூத்தாகி உலகெங்கும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.....! மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழியில்லை ஆனால் வாக்குச் சீட்டைக் கொடுத்து வாக்குப் போட அவர்களை காசு கொட்டி அழைத்து ஏமாற்ற முடிகிறது....! வாக்குப் போட்ட மறு நிமிடம் அதே மக்களின் நிலை என்ன....???! பழைய குருடி கதவைத் திறவடி நிலைதான்.....! பழையபடி வானம் பார்க்க வேண்டியதுதான்....!

:P  :evil:  :roll:  :!:  :?:  :idea:

அப்போ இந்த வடக்கு கிழக்கு தேர்தல் பத்தி உங்க கருத்து என்ன? தமிழ் மக்கள் வாக்களிக்கணுமா கூடாதா?

Link to comment
Share on other sites

எங்கள் கருத்து சன நாய் அக தேர்தல் கூத்துத் தொடர்பானது.....பொதுக்கருத்து....!

எதிர்ப்புக் கிளம்பிற அளவில இல்லை...மக்களும் அவையின்ர பிள்ளையளும் பட்டபாடு....நமக்குத்தான் வாக்குச் சீட்டே இல்லையே...பிறகேன் அதுக்க மூக்கை நுழைப்பான்....! சின்னதுரை மாதிரி என்ன சின்ன விளையாட்டுப் புத்தியே எங்களுக்கு...சின்னாக்கள் எண்டாலும் சிந்திக்கத் தெரியும் ஏதோ இயன்ற மட்டுக்கு....! :) :idea:

:P :twisted: :D

Link to comment
Share on other sites

மட்டக்களப்பில் வேட்பாளர் மீது இனந் தெரியாத இளைஞர் குழு துப்பாக்கிப் பிரயோகம்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் சின்னத்தம்பி சுந்தரம்பிள்ளை இனந் தெரியாத இளைஞர் குழுவால் தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 11.30 மணியளவில் ஆரையம்பதி காளி கோவில் வீதியில் உள்ள இவரது இல்லத்திற்கு கைத்துப்பாக்கியுடன் சென்ற இளைஞர் குழு இவரை வீட்டிற்கு வெளியே அழைத்துள்ளது.இதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த இளைஞர் குழு வேட்பாளரையும், வேட்பாளரின் மைத்துனரையும் தாக்கிவிட்டு வேட்பாளரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

துப்பாக்கிச் சன்னம் வேட்பாளரின் கையில் பட்டதால் சிறுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டில் உள்ள பொருட்களை இளைஞர் குழு சேதப்படுத்தி விட்டுச் சென்றதாக காத்தான்குடி காவல்த்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்ற முதலாவது தேர்தல் வன்முறைச் சம்பவம் இதுவாகும்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம் பெறுவதாக காத்தான்குடி காவல்த்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நன்றி - புதினம்

Link to comment
Share on other sites

எங்கள் கருத்து சன நாய் அக தேர்தல் கூத்துத் தொடர்பானது.....பொதுக்கருத்து....!

எதிர்ப்புக் கிளம்பிற அளவில இல்லை...மக்களும் அவையின்ர பிள்ளையளும் பட்டபாடு....நமக்குத்தான் வாக்குச் சீட்டே இல்லையே...பிறகேன் அதுக்க மூக்கை நுழைப்பான்....! சின்னதுரை மாதிரி என்ன சின்ன விளையாட்டுப் புத்தியே எங்களுக்கு...சின்னாக்கள் எண்டாலும் சிந்திக்கத் தெரியும் ஏதோ இயன்ற மட்டுக்கு....!  :)  :idea:  

:P  :twisted:  :D

உங்களுக்கு வடக்கு கிழக்கு பகுதில வாக்குசீட்டு இருந்தா வாக்களிப்பீங்களா இல்லை புறக்கணிப்பீங்களா?

Link to comment
Share on other sites

இல்லையே பிறகேன் அதைப்பற்றிச் சிந்திக்க... அதைவிட எத்தனை மிக்கிய விடயம் கிடக்கு....எங்கட காசிலையே வாக்குச் சீட்டும் அடிச்சு கள்ளவாக்கும் போட்டு கதிரையும் பிடிச்சு..எங்களுக்கே கொள்ளி செருகுவினம்..உதுதான் சன நாய் அகம்....! இப்படியே உலகத்தை மாறி மாறி சன நாய் அகம் என்று கொண்டு ஏமாத்த வேண்டியதுதான்....! பணக்கார முதலைகள் வாய்க்குள் மக்கள் விழுந்தழிய வேண்டியதுதான்....!

மக்களால் மக்கள் ஆளப்படுதல் போய் பணத்தால் மக்கள் விழுங்கப்படுதல்....இதுதான் சன நாய் அகம்....!

இந்த நிலை மாறினால் வாக்களிப்பது குறித்துப் பரிசீலிக்கலாம்....!

:P :twisted: :roll:

Link to comment
Share on other sites

இந்த வன்னிக்குள் வாக்குச்சாவடி பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால்.. வாக்குப்போடுறது இராணுவப்பகுதிகளிலிருந்தால் கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன்

:?: :?: :?:

அட வன்னிக்குள்ளையிருந்து வெளியிலை வாறதுக்கே பெரிய புறொசீச்சர்.. அதைவிட வந்திட்டு திரும்பப் போனது பிந்தினால் முந்தினால் அதுக்குக்கூட என்குவயறி.. இப்படி பலதும்.. அப்படியிருக்க இந்த ஓட்டுப்போடப்போற சனத்தின்ரை நிலைமை எப்படியிருக்கும் எண்டு கேட்டால் தணிக்கை பாயுது..

:!: :?: :idea:

Link to comment
Share on other sites

வன்னிக்க என்ன இருக்கு எண்டதில உங்க சர்வதேசமும் பாத்து வர ஆக்களை அனுப்பிக் கொண்டிருக்கு.... அட பொடியள் கிட்டடியிலதான் வாசிச்சன்....வன்னியில இருக்கிற பொடியள் சரியா இரகசியம் பேணுறாங்களாம் என்று உலகத்திற்கெல்லாம் தலைமை வகிக்கிறதா நினைச்சு சர்வாதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிற சில நாடுகளின் வரிசையில் ஒரு நாட்டுக்காரர்கள் எழுதி இருக்கினம்...எதுக்கும் உள்ள வாறது வெளியில போறதுகளில கவனமடா பொடியள்...உதுதான் சந்தர்ப்பம் என்று நாலு நச்சுப்பாம்பும் வந்திடும்....!

தேர்தல் கோவில் திருவிழா மாதிரி முடிஞ்சிடும்...முடிஞ்சாப் பிறகு கோவில் வீதியில புழுதி பறக்கும்...எங்க வானத்தில என்ன பறக்குமோ...ஆற்ர சற்றலைட் சுத்தி சுத்தி வருகுதோ....?! :roll:

:P :twisted: :idea:

Link to comment
Share on other sites

அப்போ இந்த வடக்கு கிழக்கு தேர்தல் பத்தி உங்க கருத்து என்ன? தமிழ் மக்கள் வாக்களிக்கணுமா கூடாதா?

உங்களுக்கு வடக்கு கிழக்கு பகுதில வாக்குசீட்டு இருந்தா வாக்களிப்பீங்களா இல்லை புறக்கணிப்பீங்களா?

இல்லையே பிறகேன் அதைப்பற்றிச் சிந்திக்க... அதைவிட எத்தனை மிக்கிய விடயம் கிடக்கு....எங்கட காசிலையே வாக்குச் சீட்டும் அடிச்சு கள்ளவாக்கும் போட்டு கதிரையும் பிடிச்சு..எங்களுக்கே கொள்ளி செருகுவினம்..உதுதான் சன நாய் அகம்....! இப்படியே உலகத்தை மாறி மாறி சன நாய் அகம் என்று கொண்டு ஏமாத்த வேண்டியதுதான்....! பணக்கார முதலைகள் வாய்க்குள் மக்கள் விழுந்தழிய வேண்டியதுதான்....!

மக்களால் மக்கள் ஆளப்படுதல் போய் பணத்தால் மக்கள் விழுங்கப்படுதல்....இதுதான் சன நாய் அகம்....!

:P  :twisted:  :roll:

குருவி நீங்க அரசியல்வாதி மாதி கருத்து சொல்லாம நழுவுறீங்க. தேர்தல் ஒரு கேலிக்கூத்து அது உங்களோட பொது கருத்துன்னு சொன்னீங்க. அப்பிடின்னா இந்தமுறை வடக்கு கிழக்கு தேர்தல்ல தமிழங்க என்ன செய்யணும் அப்பிடின்னு கேட்டேன். அதுக்கு அவங்களும் அவங்க பிள்ளை பாடும்ன்னு சொன்னீங்க. உங்களுக்கு வாக்கு உரிமை இருந்தா என்ன செய்வீங்கன்னு கேட்டேன். எனக்குதான் வாக்குரிமை இல்லையேன்னு நழுவுறீங்க.

மத்த எல்லா விசயத்திலயும் அப்பிடியா செய்றீங்க? அப்பிடின்னா சிங்கள ராணுவம் புலிகள் சண்டையில யார ஆதரிப்பீங்கன்னு கேட்டா எனக்கு தான் ஆயுதம் இல்லையே எப்பிடி சொல்றதுன்னு கேட்ப்பீங்களா?

Link to comment
Share on other sites

தேர்தல் கோவில் திருவிழா மாதிரி முடிஞ்சிடும்...முடிஞ்சாப் பிறகு கோவில் வீதியில புழுதி பறக்கும்...எங்க வானத்தில என்ன பறக்குமோ...ஆற்ர சற்றலைட் சுத்தி சுத்தி வருகுதோ....?! :roll:  

:P  :twisted:  :idea:

சற்லைட் மட்டுமா சுத்தும்??? :wink:

Link to comment
Share on other sites

நாம் ஆயுதத்தையே வெறுக்கின்றோம்...அதை யார் பாவித்தாலும் ஆதரியோம்....எமக்குத் தேவை எல்லா மக்களும் சம உரிமையோடு உலகில் வாழ வேண்டும் என்பதே...அதை எவ்வளவு சாத்தியமே அவ்வளவு சமாதான வழியிலேயே பெற வேண்டும் என்பதே....!

:P :twisted: :wink:

Link to comment
Share on other sites

நாம் ஆயுதத்தையே வெறுக்கின்றோம்...அதை யார் பாவித்தாலும் ஆதரியோம்....எமக்குத் தேவை எல்லா மக்களும் சம உரிமையோடு உலகில் வாழ வேண்டும் என்பதே...அதை எவ்வளவு சாத்தியமே அவ்வளவு சமாதான வழியிலேயே பெற வேண்டும் என்பதே....!  

:P  :twisted:  :wink:

இது குருவிதானா இல்லை வேறை யாராவதா? இப்ப சற்றலட் சுத்தலை என் மண்டை சுத்துது. கொஞ்சம் யோசிக்க விடுங்க

Link to comment
Share on other sites

நாம் ஆயுதத்தையே வெறுக்கின்றோம்...அதை யார் பாவித்தாலும் ஆதரியோம்....எமக்குத் தேவை எல்லா மக்களும் சம உரிமையோடு உலகில் வாழ வேண்டும் என்பதே...அதை எவ்வளவு சாத்தியமே அவ்வளவு சமாதான வழியிலேயே பெற வேண்டும் என்பதே....!  

:P  :twisted:  :wink:

எனக்கு ஆச்சரியமாதான் இருக்கு. திடீர்ன்னு குருவில ஒரு மாற்றம் தெரியிற மாதிரி இருக்கு. நிறைய கருத்துக்கு பதில் சொல்லாம நழுவுறீங்க. என்ன தான் ஆச்சு?

Link to comment
Share on other sites

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள முன்னணி அரசியல் தலைவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்க இணக்கம்

வடக்கு, கிழக்கு மற்றும் தேர்தல் வன்முறை அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ள முன்னணி அரசியல் தலைவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனங்களை வழங்குவதற்கு சிறீலங்கா காவல்துறை இணக்கம் தெரிவித்துள்ளது.

பல அரசியல் கட்சிகளின் வேண்டுகோளின் பிரகாரமே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தமக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - புதினம்

Link to comment
Share on other sites

புலிகள் கட்டுப்பாட்டுபகுதியில் பொலீசுக்கு பதிலாக தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட போர் நிறுத்த கண்காணிப்பு குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

Source: Daliy News

Link to comment
Share on other sites

பாதுகாப்பு வழங்க ஈ.பி.டி.பி கோரிக்கை

பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் போட்டிýயிடுவதனால் அக்கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வடக்கு கிழக்கு உட்பட பிற மாவட்டங்களுக்கும் சென்று வருவதற்கு அவர்களின் போக்குவரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்குமாறு இக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் மா அதிபர் இந்திரா டP சில்வாவிடம் கடிýத மூýலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரப் பணிகளில் இக்கட்சி உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவும், விடுதலைப்புலிகளிடம் இருந்து எமது கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதால் ஏ9 பாதைய10டாக போக்குவரவு செய்யவும் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்கவும் எனவும் அக் கடிýதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தினக்குரல்

இதுபற்றிய புலிகளின் கருத்து

இந்தத் தேர்தலில் தமக்கு ஆசனம் கிடைக்கும் - மக்கள் தம்மை வெல்ல வைப்பார்கள் என தமிழ் விரோதக் குழுக்கள் கனவு காண்கின்றன.

இதற்குள் நு.P.னு.P குழு தலைமை வன்னிக்குள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தாம் பரப்புரை செய்ய வேண்டுமாம், அதற்கு சிறீலங்கா காவல்த்துறை தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. உண்மையாக தமிழ் மக்களுக்காக உழைக்கும் கட்சி என்றிருந்தால் இவர்கள் இப்படிக் கேட்டிருக்க மாட்டார்கள்.

கடந்த காலங்களில் அரச வாகனங்களையும், படையினர், காவல்த்துறையினரையும் பயன்படுத்தி ஆயுதங்களின் முனையில் மக்களையும் மிரட்டி தமிழ்;த் தேசியவாதிகளை தாக்கியும் - கொன்றும் கள்ள வாக்குகளைப் போட்டு நாடாளுமன்ற ஆசனங்;களைப் பெற்ற கூட்டம் - யதார்த்தத்தை உணராது வன்னிக்குள் பரப்புரை செய்ய சிறீலங்கா காவல்த்துறையின் பாதுகாப்பைக் கேட்கிறது. வன்னிக்குள் சிறீலங்கா காவல்த்துறை நுழைய முடியுமானால் நிலைமை இப்படியிருக்காது.

கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களில் கள்ள வாக்குகளை நு.P.னு.P போட முயன்ற போது அதனை எதிர்த்த அதிகாரிகளை மிரட்டி வாக்குப்பெட்டிகளை நிறைத்த சம்பவங்கள் யாழ். தீவகத்தில் பெருமளவில் நடந்திருக்கின்றன. வாக்குச் சீட்டுக்களை அபகரித்துச் சென்று தமது இடத்தில் வைத்து புள்ளடி போட்டு வாக்குப்பெட்டிகள் நு.P.னு.P யினரால் நிரப்பப்பட்டன.

இன்றைக்கும் சிறீலங்கா காவல்த்துறையினர், இராணுவத்தினருடன் திரியும் இவர்கள் உண்மையில் தமிழ் ;மக்களுக்கு சேவையாற்றுபவர்களா?. ஆளும் கட்சிகளுடன் நின்று பதவி ஆசைக்காக தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சிதைக்கும் கைங்கரியத்தை புரியும் இந்த தேச விரோதிகள் - இம்முறை தமிழ் மக்களின் உண்மையான வாக்களிப்பு யாருக்கு என்பதை புரிந்து கொள்ளுவர். தமது முகாம்களை சிறீலங்காப் படையினரின் உயர் பாதுகாப்பு வலயங்களைப் போல வைத்திருக்கும். நு.P.னு.P குழு தம்மை மக்களுக்காக உழைப்பவர்கள் எனக் கூற என்ன அருகதை இருக்கிறது?.

தமிழ் மக்களை போர்க் காலத்தில் படையினருடன் இணைந்தே கொலை செய்த கைங்கரியத்தை செய்தவர்களாக இருக்கிறார்கள். சிறீலங்கா அரசின் ஒட்டுப்படையாகவே அவர்கள் துணைப்படையினருக்குரிய சம்பளத்தைப் பெற்றுகொண்டிருக்கிறார்கள்.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று இப்பொழுதும் இவர்கள் பரப்புரை செய்கின்றனர். இவர்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஜே.வி.பி; - சந்திரிகா கூட்டணி எப்பொழுது தமிழ் மக்களுக்கு சுயாட்சியை தரப்போவதாக கூறிருக்கின்றன?. அல்லது இதுவரை சந்திரிகா கூட்டணி அரசுக்கு முண்டு கொடுத்து அமைச்சுப் பதவியையும் பெற்ற நு.P.னு.P கூட்டம் எப்போதாவது தமிழ் மக்களுக்கு சுயாட்சியைத் தர வேண்டும் எனக் கேட்டிக்கிறதா? அல்லது அதற்கான அழுத்தங்களையாவது கொடுத்திருக்கிறதா? அத்தகைய அழுத்தங்களைக் கொடுக்கக் கூடிய இராணுவ பலமோ அரசியல் பலமோ அற்றதே அக்கூட்டம்.

இத்தகைய கூட்டம் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதை கொள்கையாக வைத்திருப்பது எப்படிப்பட்ட போலி அரசியல் என்பதை சகலராலும் புரிந்து கொள்ள முடியும். இராணுவ ஒட்டுப்படையாக இருந்து கொண்டு - அரசுக்கு தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து ஒரு பங்குக்கு தாமும் மக்களை படுகொலை செய்து வந்த இந்தக்கூட்டம் தாமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்ட முனைகின்றது. இம்முறை தேர்தலில் இந்தக்கூட்டம் கடந்த தேர்தல்களில் எப்படி ஆசனங்களை பெற்றன என்பதை சகலரும் விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்.

தமிழ்த் தேசியத்துக்காகவே எப்பொழுதும் தமிழ் மக்கள் வாக்களித்து வந்தனர். 1948 முதல் தம் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே இழப்புகளைத் தாங்கியவாறு அர்ப்பணிப்புகளை செய்தவாறு தமிழ் மக்கள் தம் வாழ்வை நகர்த்திக் கொண்டு வந்துள்ளனர். அற்ப சலுகைகளுக்காக இலவசங்களுக்காக தமிழ் மக்கள் எப்பொழுதும் உரிமைகளை விட்டுக்கொடுத்ததில்லை.

இதுவரை இதற்காக பட்ட துன்ப துயரங்களை இழப்புகளை தமிழ் மக்கள் அர்த்தமிழக்கச் செய்ய மாட்டார்கள். தமிழ் மக்கள் யார் தம் பிரதிநிதிகள் என்பதை இதுவரை கடந்து வந்த குருதிச்சுவடுகளின் சாட்சியாக வெளிப்படுத்துவர்கள். கடந்த காலங்களில் நு.P.னு.P போன்ற குழுக்களுக்களின் கொடூரங்களுக்கு பயந்து, பதுங்கியிருந்த தமிழ்மக்கள் - இன்று அவர்களின் வாகனங்களை கொழுத்தும் அளவுக்கு துணிந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அக்கூட்டம்;; வாகனங்களை வாடகைக்கு கேட்ட போது துணிச்சலாக மறுத்துள்ளனர். இதுவே வரலாற்று மாற்றம். அடுத்த கட்டமாக இக்கூட்டத்தை அடித்துத் துரத்தக் கூட மக்கள் தயாராகவுள்ளனர்.

தமிழ் மக்கள் உரிமைகளை பெற அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய நிலைமைக்கு இராணுவ hPதியாக அவர்கள் பெற்றிருக்கும் பலமே காரணமாகும். இதனை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். இத்தேர்தல் நாடாளுமன்றில் தமிழ் மக்களை அழுத்தம் கொடுக்கும் சக்தியாக மாற்றும் என்றாலும் அந்த ஆசனங்களுக்காக அல்லாது தமிழ் மக்களின் ஒரு கருத்துக்கணிப்பாகவே அமைகின்றது.

ஆகவே தமிழ் மக்கள் சகல சாத்தியப்பாடுகளையும் பயன்படுத்தி தமது வாக்குகளை வழங்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது தமிழ் மக்கள் உலகுக்கு சொல்லும் செய்தியாக அமையப் போகின்றது.

தமிழ் மக்கள் தமது கருத்துகளை தம் தாயகத்தின் குறியீடாக அமைந்துள்ளா ~வீடு| க்கு நேராக புள்ளடியிட்டு உலகுக்கு தெரியப்படுத்தவே போகின்றார்கள்.

நன்றி - புலிகளின் குரல்/தமிழ் நாதம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி B.B.C உண்மைச்செய்திகளை ஆதாரத்துடன் தருவதற்கு

நான் கூட முதலில் சேதுவுக்குப் போட்டியாக ஆரம்பித்துள்ளீர்களோ என நினைத்தேன் பரவாயில்லை விவாதத்திற்குரிய செய்திகள் தான்

தொடரட்டும் உங்கள் ஒலிபரப்புச்சேவை

Link to comment
Share on other sites

ஏன்.. எதற்காக..?

மட்டக்களப்பு ஐ.தே.க. வேட்பாளர் சுந்தரம்பிள்ளை இன்று சுட்டுக்கொலை!

மட்டக்களப்பிலிருந்து தேனுராள்

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சின்னத்தம்பி சுந்தரம்பிள்ளை இன்று காலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினமிரவு ஆரையம்பதி காளி கோவில் வீதியில் உள்ள இல்லத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளான சுந்தரம்பிள்ளை சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இவர், இன்று காலை 6 மணியளவில் இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மட்டக்களப்பு சிரேஷ்ட காவல்த்துறை அத்தியட்சகர் மகேஷ் சமர திவாகர தெரிவித்தார்.

நோயாளர்களைப் பார்வையிடுவது போல வந்த இருவரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

63 வயதான சுந்தரம்பிள்ளை ஓய்வுபெற்ற அதிபராவார்.

நன்றி புதினம்

:oops:

Link to comment
Share on other sites

உதுதான் சன நாய் அகம்.....! அமெரிக்கன் இரண்டும் செய்யுறான்....சன நாய் அகமும்...துவக்கும் ...ஏன் எதற்கு....????! அப்பப்ப நாய்களைச் சுட்டுத்தள்ளவோ....???! :roll:

:evil: :?:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.