Jump to content

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்


Recommended Posts

பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் பாரிய உண்ணாவிரதப் போராட்டம்!

இன்று, எம் ஈழத்திருநாட்டில், சிறீலங்கா இனவெறி அரசும், அதன் கொலைவெறிப் பட்டாளங்களும் நடாத்தும் கொலைவெறித் தாண்டவத்தை உடன் நிறுத்தக் கோரியும், உலகின் கண்களுக்கு சிங்களத்தின் முகத்திரையை கிளித்துக் காட்டவும், கரோ உள்ளூராட்சி சபையின் மக்கள் பிரதிநிதி திரு தயா இடைக்காடர் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நடாத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக நமபகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டமானது வரும் மே மாதம் 2ம் திகதி தொடக்கம் 6ம் திகதி வரையான காலப்பகுதியில் நடாத்துவதற்கான அனுமதிகளைப் பெறுவதிலும், ஏற்பாடுகளை செய்வதிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப்பதாக தெரியவருகிறது.

இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர்களைப் பங்கு பற்ற வைப்பதற்கான முயற்சிகளிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.

எம் இனத்தின் இன்றைய அவலத்தை உலகின் மனச்சாட்சிகளுக்கு ஓங்கி ஒலிக்க அலை அலையாக அணிதிரளுங்கள்!

பிரித்தானியாவில், தமிழ்த் தேசிய செயற்பாடுகளுக்கு தடங்கல்கள் வந்த போதிலும், அதையும் உடைத்து குரல் கொடுக்க முனைந்திருக்கும் திரு தயா இடைக்காடருடன், ஆயிரம் ஆயிரமாக திரண்டு எங்கள் குரல்களை ஓங்கி ஒலிப்போம் வாருங்கள்!!

விடியப் போகும் எம் தேசத்தின் குரலாக ஒலிப்போம்! ஒற்றுமையாக ஒன்று படுவோம்!!

... மேலதிக தகவல்கள் விரைவில் ....

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply

தாயா இடைகாடரின் இந்த துணிகர செயலுக்கு. தமிழ்மக்களின் கொலைகளை நிறுத்தகோரி

இருக்கும் இந்த உண்ணாவிரதற்க்கு அனைத்து மக்களும்

ஆதரவு கூடுக்கும்படி வேண்டிகொள்கிறேம்

[color=red]அன்று தியாகி அன்னை புூபதி. தியாகி லெப்டினன் கேணல் திலபன் தியாகங்கள் செல்ல முடியாதவை.

அதே ஆதஙகத்துடன் உலகதமிழரின் தொண்டன் கவுன்சரர்

தாயாஇடைகாதர் தொடரவுள்ளார் உமக்கு எமது வாழ்த்துகளும்

ஆதரவும் எந்தநேரத்திலும் உண்டு

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்.

நான் பிரித்தானிய கவுன்சிலர் தயா இடைக்காடர்.

அனைவருக்கும் வணக்கம்.

யாழ் கழத்தை நான் அதிகம் வாசிப்பவன்.

எனது பிறந்த நாழுக்கு நன்றி சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள்.

எனக்கு தேர்தல் காலத்தில் ஆயிரக்கணக்கான வாக்குபோட்ட தமிழ் மக்களுக்கும் தேர்தல் காலத்தில் தேர்தல் வேலைகள் செய்யும்போது வீட்டு வாசலில் கண்டவுடன் கௌரவித்த அனைவருக்கும் மற்றும் தேர்தலில் எனக்கு வேலைசெய்த 60 ஈழத்தமிழ் உறவுகளுக்கும் எனது நண்றிகள்.

என்னைநம்பி வாக்குபோட்ட ஈழத்தமிழர்களுக்காகவம் ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளுக்காகவும் நான் பிரித்தானியாவில் தனித்து நின்று உங்கள் புூரண ஆதரவுடன் ஒத்துளைப்புடன் அனுசரனையுடன் போராடவிரும்பகின்றேன்.

நான் தேர்தலில் வென்றவுடன் தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் கதைப்பது போன்று கதைத்துவிட்ட தேர்தலில் வென்றபின்பு மக்களை ஏமாற்றி தலைமறைவாகுபவன் இல்லை.

எனது நடவடிக்கைகளை செயலில் தொடர்ந்து காட்ட விரும்புகின்றேன்.

எனது நடவடிக்கைகள் தொடர்பாக பகிரங்கமாக உங்கள் கருத்தகளை அறிய வரும்பகின்றேன்.

இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் அதிசயமான ஒரு செயலை தமிழ் நண்பர்கள் சகிதம் செய்ய உள்ளேன்.

Link to comment
Share on other sites

எனது வெற்றிக்காக உளைத்த ரி.ரி.என் தொலைக்காட்சி நிறுவனம் ஜ.பி.சி வானொலி நிறுவனம் உட்பட இந்த நவீன நேர ஓட்டத்தில் தங்கள் வேலைப் பழுக்களை மறந்து எனக்கு வந்து தமிழன் அதாவது ஒரு தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறார் என்பதற்காக வந்து உழைத்த அனைவருக்கும் நன்றிகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வ நன்றிகள்.

மக்கள் சேவகன் நான் மக்கள் நலனின் அக்கறை காட்டி தாயகத்தில் அல்லலுறும் மக்களின் அவலத்தை பிரித்தானியாவில் அம்பலப்படுத்தி தமிழ் தேசியத்திற்கு வலச் சோர்பதே என் கடமை.

எனது கோரிக்கைகள்

அரச பவுத்த பயங்கரப்பேரினவாதம் பிரித்தானியாவில் தடை செய்யப்படல் வேன்டும்.

தமிழ் இனக் கொலைகள் நிறுத்தப்படல் வேன்டும்.

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவராலயம் அடித்து மூடப்படல் வேன்டும்.

தமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்படல் வேன்டும்.

தமிழ் தேசியத்தின் குரல் பிரித்தானியாவில் பலமடைய வேன்டும்.

தமிழ் தேசவிரோதிகள் கரோ பிரதேசத்தில் இல்லாது புூண்டோடு அகற்றப்படல் வேன்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கவுன்சிலர் தயா இடைக்காடர் அவர்களே.

உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

உங்கள் அறிமுகம்போல் நீங்கள் இதுவரை சாதித்தவைகளையும் எடுத்துக் கூறுங்கள். இலண்டனில் உள்ளவர்களுக்கு உங்களைப் பற்றித் தெரிந்திருந்தாலும் வேறு நாடுகளில் வாழ்பவர்களுக்காகக் கூறுங்கள்.

யாரோ உங்களை "தயா இடைக்காடர் யார்?" என்று களத்திலே கேட்டதாக படித்ததாக ஞாபகம்.

நீங்கள் பிரித்தானியாவில் தனித்து நின்று கள உறவுகளின் ஆதரவுடன் போராட விரும்புவது சற்று வித்தியாசமாக இருக்கிறது.

இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் அதிசயமான ஒரு செயலை தமிழ் நண்பர்கள் சகிதம் செய்ய உள்ளேன் என்று 9.20 இற்கு எழுதியிருக்கிறீர்கள். ஆனால் 6.10 இற்கே சோழன் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும், அதிலே இப்பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோர்களைப் பங்கு பற்ற வைப்பதற்கான முயற்சிகளிலும் திரு தயா இடைக்காடர் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. என்று எழுதியிருக்கின்றாரே!

இதனை விளக்க முடியுமா?

எனக்கு உங்களை நன்றாகவே தெரியும். உங்கள் பெயரைப் பாவித்து வேறு யாரோனும் களத்திலே வந்திருக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகின்றது. அதனால்தான் இப்படிக் கேட்கிறேன். தவறாயின் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

நிச்சயமாக இன்றைய சூழ்நிலையில் புலத்தில் நிகழ்த்த வேண்டிய போராட்டம். இது லண்டனில் மட்டுமல்ல கனடா, அவுஸ்ரேலியா, ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற வேண்டும்.

இப்படியான போராட்டங்கள்தான் சர்வதேசத்துக்கு சில நேரடி தாக்கங்களைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதைவிட ஊடகத்துரையினரின் கவனத்தையும் எங்கள் மீது திருப்புவதற்கும் ஏற்றதாக இருக்கும்.

இதற்கு அனுமதி கிடைப்பதில் பல தடைகள் ஏற்படலாம். பலபல எதிர்ப்புகள் கிளம்பலாம். அவற்றையெல்லாம் தகர்த்து இப்போராட்டம் நடைபெற்றால் நிச்சயமாக இது சில மாற்றங்களை அகதிகள் விடயத்திலும் கூட ஏற்படுத்தலாம்.

எல்லாவற்றிற்கும் ஈழ்பதீஸான் துணை புரிவானாக!

அரோகரா...

Link to comment
Share on other sites

செல்வமுத்து அவர்களே

வணக்கம்

சோழனை எனக்கு தெரியாது. எங்கிருந்து தகவல் எடுத்தாரோ தெரியவில்லை.

இன்று சில நண்பர்களுடன் ஆலோசித்து எடுத்த முடிவு தான் இது.

பொலிசின் முடிவு தெரியும் வரை வெளிவிட விரும்பவில்லை. எப்படியே வந்து வந்து விட்டது.

என் சாதனைகளை நானே சொல்வது அழகில்லை. ஏதாவது நல்லது செய்தால் அதை உடனே மறந்து விடவேணும்.

மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

உங்கள் முயற்சி வெற்றியடைய எனது வாழ்த்துக்கள். அதிகாரத்தில் உள்ளவர்களின் பேச்சு எடுபடும், உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் வெற்றிபெறும், எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு.

Link to comment
Share on other sites

வணக்கம் தயா,

நீங்கள் தான் உண்மயாகவே அவரெனில்,

முதலில் வாழ்த்துக்கள்.

நீங்கள் ,லண்டன் வாழ் தமிழ் மக்களை இணய வலையினூடாக யாழ்க்களத்தினூடாக தொடர்பாட முயன்றிருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.

உங்களைப் போன்ற செயல்வீரர்களின் உழைப்பினால் தான் நாங்கள் லண்டனில் தமிழ் தேசியத்திற்கானா ஆதரவை மீளக் கட்டி எழுப்ப வேண்டி இருக்கிறது.இந்த வகையில் உங்களின் முயற்சிக்கு லண்டன் வாழ் யாழ்க் கள உறவுகளும், யாழ் வாசகர்களும் முழு அளவிலான ஆதரவை நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் இணயத்தில் மக்கள் போராட்டாம்,ஜன நாயகம் என்று வெற்றுக் கோசங்களை பக்கம் பக்கமாக எழுதுவதை விட , செயற்பாட்டு ரீதியாக அரசியல் போராட்டங்களை நடத்துவதே ஓரளவுக்கேனும் ஊள்ளூரில் அழுத்தங்களை ஏற்படுத்தும்.

ஒன்றாக உழைத்து தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை விரைவு படுத்துவோம்.

Link to comment
Share on other sites

மேலும் இன்றைய ஐலண்ட் பத்திரிகையில் இதைப்பற்றி தலைப்பு எழுதி உள்ளனர்.இதைக் குழப்புவதற்கான முயற்சிகள் தொடங்கி விட்டன.ஆகவே உங்கள் அரசியற் செல்வாக்கைப் பாவிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.லண்டன் வாழ் தமிழ் மக்கள் அனைவரும் உங்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் சகிதம் வந்து கலந்து கொள்ளவும்.

Link to comment
Share on other sites

உந்த தாயா இடைக்காடருக்கு வேறுவேலையில்லபோல்

தேவையில்லாமல் மண்டயபோடபோகுது

இவருக்கு புகைக்காமல் இலுக்கமாட்டார்

சாப்பிடாம இருக்கமாட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இப்படிச் சொல்கின்றீர்கள் பாண்டியன்?

Link to comment
Share on other sites

பாண்டியன்தான் ஜலன் பேப்பருக்கு எழுதும் வித்தகரோ? எல்லாரும் சொல்லுவினம் தேர்தல் முடிய அரசியலும் முடியும் என்று அப்படி இல்லை தமிழர் அவலத்தில் இருக்கும்போதுதான் அவர்களுக்கு நிவாரனம் வேன்டும். அதற்காகத்தான் இந்த முடிவு.

Link to comment
Share on other sites

நான் மக்கள் சேவகன்

மக்கள் எனக்கு வாக்குப்போட்டு தந்த பொறுப்பை செய்ய தீர்மானித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ӾĢø ¾Â¡ ³Â¡.. ¿£í¸û¾¡ý «Åá «Å÷¾¡ý ¿£í¸Ç¡ ±ýÈ ºó§¾¸õ ±ÉìÌ þýÛõ þÕ츢ÈÐ. þí§¸ ÀÄ÷ ƒÂ§¾Åý, ¬Éó¾ºí¸Ã¢ ²ý ¸Õ½¡ ±ýȦÀÂ÷¸Ç¢¦ÄøÄ¡õ ÓýÉ÷ Åó¾¢Õ츢ȡ÷¸û.

¯ñ¨Á¢ø ¿£í¸û¾¡ý «ó¾ ¾Â¡ þ¨¼ì¸¡¼÷ ±ýÈ¡ø ¯í¸¨Ç þí§¸ ºó¾¢ôÀ¾¢ø ¦ÀÕÁ¸¢ú.

¿£í¸û Äñ¼É¢ø ¦ºöÂÅ¢ÕìÌõ þõÓÂüº¢ìÌ àà þÕìÌõ ±í¸Ç¡ø ±ý¦ÉýÉ Å¨¸Â¢ø ¯¾Å¢¦ºö ÓÊÔõ ±É ¦ÅÇ¢ôÀÎò¾¢É¡ø ÓÊó¾Å¨¸Â¢ø ¯¾Å¢¦ºöÂò¾Â¡Ã¡¸ þÕ츢§È¡õ.

Link to comment
Share on other sites

நீங்கள் எனது செயலை முன்னுதாரனமாக வைத்து உங்கள் நாட்டில் இப்படியான சத்தியாகிரகப்போராட்டங்களை மகறானி இல்லத்திற்கு முன்னாலை அல்லது பாரளுமன்றத்திற்கு முன்னாலை அல்லது அது போன்ற முக்கிய இடங்களில் நடாத்தலாம்.

தமிழிலை செய்தி எழுதி அல்லது தமிழிலை ஆர்பாட்டம் நாடாத்தி வெளிநாட்டவரை எமக்கு இரங்ககூடிய விதத்திலை மாத்த முடியாது.

அவர்களுக்கு விழங்கும் மொழிநடையில் அவர்களுக்கு விழக்கவேனும்.

எல்லா நாடுகளிலும் கொலைகளுக்கு எதிராக ஆர்பாட்டம் நடாத்தினால் உலகம் சிந்திக்கும்.

Link to comment
Share on other sites

வணக்கம் யாழ்கள உறவுகளே!

இவ் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பான செய்தி, எனக்கு மிக நம்பிக்கையான வட்டாரத்திலிருந்துதான் தெரியவந்தது. எனக்கு வந்த தகவலின் பிரகாரம் "கவுன்ஷிலர் இடைக்காடர், பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்பாக உண்ணாவிரதம் இருக்க முயற்சிப்பதாகவும், அதற்கு வேண்டிய சகல ஒத்துளைப்புகளையும் இயலுமானவரை செய்து கொடுக்கும்படி" தகவல் வந்தது. அதை முற்கூட்டியே யாழ்களத்தில் போட்டு விட்டேன்.

திரு இடைக்காடருக்கு என்னைத் தெரியாது! என்னை இப்போராட்ட காலத்தில் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஆனால் திரு இடைக்காடரை தெரியாத பிரித்தானிய ஈழத் தமிழர்கள் இல்லையெனலாம்! கடந்த சில காலங்களாக அத்தனி மனிதன் சாதித்தவைகள் ஏராளமானவை!

* பிரித்தானியாவில் தமிழ்த் தேசியத்திற்கு தடை வந்த பின் துணிந்து குரல் கொடுக்க ஆரம்பித்த சிலரில் முதன்மையானவர் இடைக்காடர்!

* அகதிகள் பிரட்சனையாகட்டும், அத்தமிழனின் ஆதரவுக் குரல் ஒலிக்கும்!

* சுனாமி வந்தபோது பிரித்தானியாவிலிருந்து செயலில் செய்து ஒலித்த முதன்மைக் குரல்!

* புலத்தில் கோயில் களவெடுத்தவனெல்லாம் மாற்றுக்கருத்து அரசியல்வாதி வேடம் பூண்டு, காட்டிக்கொடுப்பு, மொட்டைக்கடிதங்கள், மிரட்டல்கள் என தலைவிரித்தாடியபோது துணிந்து மணி கட்ட வெளிக்கிட்ட தமிழன்!

... இப்படியாக "நாடு உனக்கு என்னத்தை செய்தது என்று கேட்பதை விடுத்து, நீ நாட்டுக்கு என்னத்தை செய்தாய்" எனற தத்துவத்திற்கமைய வாழும் ஈழத்தமிழன்!

இன்று எம்மக்களின் அவலத்தை சர்வதேசத்தின் கண்களுக்கு எடுத்துரைப்பதில் திரு தயா இடைக்காடர் போன்றோர் முயற்சிப்பது பாராட்டத்தக்கது! அதிலும் வருங்கால பிரித்தானிய பிரதமராகப் போகும் திரு கோடன் பிரவுனுடனும், ஏனைய முக்கிய அமைச்சர்களுடனும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் திரு தயா இடைக்காடர் போராட்டத்தில் குதிப்பது, பிரித்தானிய அரசு வட்டாரத்தில் எம்மக்கள் நோக்கிய சில சாதகமான பார்வைகளை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

மாறாக, அவர்கள் செய்வார்கள், இவர்கள் செய்வார்கள் என்றிருக்காமல் "யார் குத்தி அரிசியானாலும் சரி" என்பதற்கமைய, இது போன்ற போராட்டங்களுக்கு எம்மாலான முழு ஆதரவுகளையும் அளித்து, திரு தயா இடைக்காடர் போன்றோரை ஊக்குவித்து, எம்மக்களின் அவலங்களை சர்வதேசத்தின் கண் முன்னால் கொண்டு வருவோம்.

திரு இடைக்காடர் அவர்களே! நீங்கள் முன் வைத்த காலை பின் வைக்க வேண்டாம். நாமெல்லாம் உங்களோடு தோளோடு தோள் நிற்போம். இன்று கொலை வெறித்தாண்டவத்தில் அல்லலுறும் எம் தாயக மக்களே எம் கண் முன்னால் தெரிய வேண்டியவை. ஒன்றுபட்டு எம் மக்களின் இன்னல்களை உலகிற்கு தெரியப் படுத்துவோம்.

Link to comment
Share on other sites

தமிழ் மக்களின் கொலைகளை நிறுத்தக்கோரி நடைபெற இருக்கும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து மக்களும் கரம் தந்து, ஆதரவு தந்து ஒன்றுபடுவோம்.

Link to comment
Share on other sites

இவருக்கு சலரோகம் ஊசி போடுகிறார்

இவருக்கு இது தேவையா இவர் மண்டயை போட்டால்

குடும்பத்தை யார்பார்ப்பது

Link to comment
Share on other sites

ஐயா போராட்டம் மத்திய லண்டனில் ஒரு இடத்தில் நடப்பதாகவும் அது 21 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் எண்று கேள்விப்பட்டேன்...

சரியான இடம் நேரம் ஆகியவற்றை காலம் தாமதிக்காது சொன்னால் நல்லது... தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்... விரைவாக செய்தால் நண்றாக இருக்கும்...

Link to comment
Share on other sites

அது வேற தால இது வேற இது சந்தியிலை இது பாராளுமன்ற வாசலிலை 100 மணித்தியாலம் இரவு பகல் உண்ணாவிரதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

இங்கு தயா இடைக்காடரின் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரிகளை இணைக்கிறேன். உங்கள் கருத்துக்களை தயாவிடம் தெரிவியுங்கள்.

Tel: 020 8863 2372 or 07812028741

Fax: 020 8427 6041

e-mail: thaya10@aol.com

அரோகரா...

Link to comment
Share on other sites

எனது வெற்றிக்காக உளைத்த ரி.ரி.என் தொலைக்காட்சி நிறுவனம் ஜ.பி.சி வானொலி நிறுவனம் உட்பட இந்த நவீன நேர ஓட்டத்தில் தங்கள் வேலைப் பழுக்களை மறந்து எனக்கு வந்து தமிழன் அதாவது ஒரு தமிழ் தேசியத்தை ஆதரிக்கிறார் என்பதற்காக வந்து உழைத்த அனைவருக்கும் நன்றிகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வ நன்றிகள்.

மக்கள் சேவகன் நான் மக்கள் நலனின் அக்கறை காட்டி தாயகத்தில் அல்லலுறும் மக்களின் அவலத்தை பிரித்தானியாவில் அம்பலப்படுத்தி தமிழ் தேசியத்திற்கு வலச் சோர்பதே என் கடமை.

எனது கோரிக்கைகள்

அரச பவுத்த பயங்கரப்பேரினவாதம் பிரித்தானியாவில் தடை செய்யப்படல் வேன்டும்.

தமிழ் இனக் கொலைகள் நிறுத்தப்படல் வேன்டும்.

பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதுவராலயம் அடித்து மூடப்படல் வேன்டும்.

தமிழ் தேசியம் ஏற்றுக் கொள்ளப்படல் வேன்டும்.

தமிழ் தேசியத்தின் குரல் பிரித்தானியாவில் பலமடைய வேன்டும்.

தமிழ் தேசவிரோதிகள் கரோ பிரதேசத்தில் இல்லாது புூண்டோடு அகற்றப்படல் வேன்டும்.

¿ýÈ¢ ³Â¡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதும் சந்தேகமாகத்தான் இருக்கின்றது.

பிரித்தானிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு 1 மைல் து}ரத்திற்குள் எதுவித ஆர்ப்பாட்டங்களோ, ஊர்வலங்களோ நடக்க அனுமதிக்கக்கூடாது என்ற சட்டம் அண்மையில் இயற்றப்பட்டதாக எங்கோ படித்ததாக ஞாபகம். அப்படியென்றால்?............எங்கேயோ இடிப்பதுபோல் இருக்கிறதே!

பாண்டியன் உங்கள் விளக்கத்திற்கு நன்றி. ஆனால் பல ஆண்டு காலமாக பலரும் இலண்டனில் தேசியத்திற்காக குரல்கொடுத்து வருகிறார்களே!

தமிழர்களுக்காக வேறும் பல கவுன்சிலர்கள் (தாங்கள் கவுன்சிலர்களாக வரமுன்னரே) இலண்டனில் பல பாகத்திலும் (தயா இடைக்காடர் வருவதற்கு முன்னரே) எத்தனையோ உதவிகளையும், சேவைகளையும் செய்துவருகின்றார்களே!

சுனாமி வந்தபோது நடாத்தியதைப்போல் இந்தவருடமும் நடாத்த தயா இடைக்காடர் முயன்றார் ஆனால் அது முடியவில்லையே? ஏன்? எத்தனையே தனிப்பட்டவர்கள், தமிழ்ப்பாடசாலைகள் பல ஆயிரக்கணக்கில் பணத்தை அல்லற்படுகின்ற எம்மக்களுக்காகக் கொடுத்தார்களே!

ஈழபதீஸ்வரர் கோவிலில் பல போராட்டங்கள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகின்றன. பல பத்திரிகைகளிலும் இவை வெளியானவைதான். ஆனால் தயா இடைக்காடர் கடைசியாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும்தான் சென்றிருந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் அந்தப் பிரச்சனை இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை. அதனை தயா இடைக்காடர் இனியும் முன்னின்று தீர்த்து வைக்க முன்வருவாரா?

நான் முன்னரும் குறிப்பிட்டிருந்தபடி சேவை செய்வதற்கு பதவியும், பட்டங்களும் தேவையில்லை. மேற்கூறியவற்றைச் செய்தவர்கள், செய்கின்றவர்களில் பலர் தங்கள் விளம்பரத்திற்காகச் செய்வதில்லை. இனிமேலும் அவர்கள் இதனை எதிர்பார்க்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

அண்மைக்காலமாகத்தான் தயா இடைக்காடரின் பெயர் அடிபடத்தொடங்கியிருக்கின்றத

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.