Jump to content

இந்த சர்வதேச சமூகம் எண்டால் யார் மச்சான்?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சர்வதேச சமூகம் எண்டால் யார் மச்சான்?

கனடாத்தடைக்கு எங்களவர்கள் அங்கே கருத்தாதரவு தேடாததுதான் காரணம் என்கிறார் சிவத்தம்பி.

குழந்தைகளை கொன்றதை சர்வதேச சமூகத்தின் மத்தியில் கொண்டுசென்று பரப்புரைக்குமாறு வேண்டுகின்றன புதினம், நிதர்சனம் உள்ளிட்ட வலைத்தளங்கள்.

சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்கிறார் தமிழ் செல்வன்.

அதையே தம்பக்கமிருந்து சொல்கிறார் மகிந்த.

எங்குபார்த்தாலும், யாரைக்கேட்டாலும், ஒருவார்த்தை மிகவும் பிரபலமாகி இருக்கிறது. அதுதான் "சர்வதேச சமூகம்".

சர்வதேச சமூகம் என்றால், உலக நாடுகளில் வாழ்கின்ற மக்களா? அவர்கள் எப்படி எமது பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு தேடித்தருவார்கள்?

பெரும்பாலும், நாட்டை ஆள்வது மக்கள் இல்லை என்பதாலும், இயல்பிலேயே தேர்தலைத்தவிர மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும், ஆளும் சபைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதாலும், இவ்வாறான நெருக்குவாரங்களை பிரயோகிக்கும் வல்லமையுள்ள சர்வதேச சமூகம் அவர்கள் இல்லை என்று ஆகிறது.

அப்படியானால் சர்வதேச சமூகம் என்பது, உலக நாடுகளை ஆளும் அரசாங்கங்களாகத்தான் இருக்கவேண்டும்.

உலக நாட்டு அரசாங்கங்கள் எல்லாமே சர்வதேச சமூகம் தானா?

கியூபாவும், கென்யாவும் சோமாலியாவும் மாலைதீவும் இலங்கை பிரச்சனையில் கருத்துக்கூறினால் அதற்கு ஏதாவது அர்த்தம் இருப்பதாக யாரேனும் கருதுவார்களா?

ஆக சர்வதேச சமூகம் என்பது படைபலம், உலக, பிராந்திய அரசியல் வல்லாதிக்கம் கொண்ட நாடுகளின் அரசாங்கங்கள். அதிலும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளின் அரசாங்கங்கள்.

இந்த நாடுகளின் அரசாங்கங்கள் எல்லாம் என்ன? தம்மளவில் சுயாதீனமான, ஜனநாயகவழியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளா? ஒருபோதுமில்லை. அந்தந்த நாடுகளின், உலகின் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகள்.

ஆகமொத்தத்தில் சர்வதேச சமூகம் என்பதற்கான சரியான விளக்கம், உலகத்தின் அதிகாரவர்க்கங்கள் என்பதாகத்தான் அமையமுடியும்.

இலங்கையை பொறுத்தவரையில், இந்திய பிராந்திய அதிகார வர்க்கத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த 'அதிகாரவர்க்கம் == சர்வதேச சமூகத்தின்' உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பணிகளை முன்னெடுத்துச்செல்லும்படித

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் காட்டுக்குள் இருந்தலூம் நல்ல ஒரு ஆக்கத்தை பிரசுரித்ததுக்கு நன்றி மச்சான்........

Link to comment
Share on other sites

சர்வதேசம் பற்றிய உங்கள் பார்வை சரியானதே.ஆனால் புலிகள் சர்வதேச நன்மதிப்பு என்னும் கானல் நீரை நம்பி ஏமாறிக் கொண்டிருப்பதாக நீங்கள் நினைப்பது தவறு என்று நினக்கிறேன்.இதற்கு எதிர்காலத்தில் நடக்கப் போகிறவை உங்களுக்கு விடை பகரும் என்று எண்ணுகிறேன்.வெளிப்படயாக புலிகள் இவை பற்றிக் கதைப்பது கிடயாது.

ஆனால் சரவதேசமாகிய ஆதிக்கச் சக்திகளுடன் அவர்கள் ஒருவகை சித்து விளயாட்டில் ஈடுபடுவதாகவே எனக்குப் படுகிறது.இது அவர்களுக்கு சில அனுகூலங்களை வழங்கி இருப்பதாகவே நான் கருதுகிறேன்.சர்வதேசம் பற்றிய புலிகளின் மதிப்பீட்டை ரணிலின் தேர்தல் தோல்வி நன்கு உணர்த்தும்.

மேலும் புலிகளின் தற்போதய இராணுவ உபாயம் எண்பதுகளில் அவர்கள் பாவித்த கண்ணிவெடி தாக்குதல் உபாயத்தின் மறு வடிவம்.இதை இப்போது அவர்கள் பாவிப்பதன் நோக்கம் இனி விரியும் கள நடவடிக்கைகள் மூலம் புலனாகும் என்று எண்ணுகிறேன்.

நீங்கள் நினைப்பதைப் போல் முழுமயானா போரைத் தொடக்கி புலிகள் ஓர் இரு நாட்களில் வெற்றி பெற முடியும் என்கின்ற உங்கள் எண்ணம் தவறானது.இராணுவ வலுச் சம நிலை சார்ந்து பார்ப்போமாயின் , ஆளனி,படையணி ரீதியாக இது சாத்தியப்பாடாகாது.

புலிகளின் பல தளபதிகள் கூறியிருப்பதைப் போல் போர் ஏற்கனவே தொடங்கி விட்டது,அதன் வடிவமும் களமும் மாறுபட்டுக்கொண்டு வருகிறது.

முரண்களின் உக்கிரமே மக்களை போரை நோக்கி அணிதிரள வைக்கும்.ஆளணித்திரட்ச்சியே வெற்றியை நிச்சயமாக்கும்.எண்பதுகளில் நிகழ்ந்த கண்ணிவெடி உபாயமே அக் காலத்தில் விடுதலைப் போரை உக்கிரம் அடய வைத்து ஆயுதப் போராட்டத்திற்குத் தேவயான திரட்ச்சியை ஏற்படுத்தியது.ஆயிரம் மேடைகளில் அறை கூவல் விடுத்தாலும் பக்கம் பக்கமாக கணணியில் அடித்தாலும் இந்தத் திரட்சி ஏற்படாது.

Link to comment
Share on other sites

நல்லொரு பார்வை...... அது சரி மச்சான் ... . இந்த சின்னவயசிலை..எப்படி.. பெரிய விமர்சகர் மாதிரி...எழுதுறீர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர் தமிழர்களை பரப்புரை போரை தொடங்க சொன்னார் க.வே. பாலகுமாரன் அவர்கள். ஆனா இங்கு இருக்கிற விடுதலைப்புலிகள் அமைப்பினரே அதை செய்ய முன் வரவில்லையே. ஒரு சாதாரண மனிதன் எப்படி முன் வருவான்? எனக்கு தெரிந்த அளவில் சுவிசில் இன்னும் அப்படி ஒன்றும் ஏற்பாடு செய்யப்படவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்தில் எனக்கு முழுமையாக உடன்பாடில்லை. அல்லைப்பிட்டிக் கொலையைக் கூட புலிகளும், தமிழ் அமைப்புக்களும் அறிக்கை விட்ட பின்பு தான் சர்வதேச மனித உரிமை அமைப்புத் தொடக்கம் பல அமைப்புக்கள் கண்டித்தன. செய்திகள் வெளியால் எட்டியது.

அது மாதிரித் தான் கோபி அனான், கூட விமானக் குண்டுத் தாக்குதலை கண்டித்திருப்பதற்கு எம் மக்களால் வெளியுலகத்திற்கு செய்திகள் அனுப்பப்பட்டமை தான் காரணம். மயுூரன் எழுதுவது வார்த்தைகளுக்கு கேட்க இனிப்பாக இருக்கலாம். ஆனால் ஒரு செய்தியை வெளியுலகத்திற்கு கொண்டு செல்லும்போது வெளியுலம் தவிர்க்க முடியாமல் கூட அரச பயங்கரவாதத்தை கண்டிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகும். அவ்வாறு கண்டிப்பதில் இருந்து தவறினால் அதன் ஜனறாயக முகமூடி கிழிந்து விடுமோ என்ற அச்சத்தில் எதோ கருத்தையாவது வெளியிடும்.

எனவே இப்படியான புலம்பல்களுக்கு செவி கொடுக்காமல் கருத்துக்களை வெளிப்படுத்துவோம்!!

Link to comment
Share on other sites

இந்தக் கருத்தில் எனக்கு முழுமையாக உடன்பாடில்லை. அல்லைப்பிட்டிக் கொலையைக் கூட புலிகளும், தமிழ் அமைப்புக்களும் அறிக்கை விட்ட பின்பு தான் சர்வதேச மனித உரிமை அமைப்புத் தொடக்கம் பல அமைப்புக்கள் கண்டித்தன. செய்திகள் வெளியால் எட்டியது.

அது மாதிரித் தான் கோபி அனான், கூட விமானக் குண்டுத் தாக்குதலை கண்டித்திருப்பதற்கு எம் மக்களால் வெளியுலகத்திற்கு செய்திகள் அனுப்பப்பட்டமை தான் காரணம். மயுூரன் எழுதுவது வார்த்தைகளுக்கு கேட்க இனிப்பாக இருக்கலாம். ஆனால் ஒரு செய்தியை வெளியுலகத்திற்கு கொண்டு செல்லும்போது வெளியுலம் தவிர்க்க முடியாமல் கூட அரச பயங்கரவாதத்தை கண்டிக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகும். அவ்வாறு கண்டிப்பதில் இருந்து தவறினால் அதன் ஜனறாயக முகமூடி கிழிந்து விடுமோ என்ற அச்சத்தில் எதோ கருத்தையாவது வெளியிடும்.

எனவே இப்படியான புலம்பல்களுக்கு செவி கொடுக்காமல் கருத்துக்களை வெளிப்படுத்துவோம்!!

தூயவன், மச்சான் மயூரனை பற்றி உங்களுக்கு தெரியாதா? தமிழீழ விடுதைலை புலிகளின் தலைமையை ஏற்க மறுப்பவர், மாற்று கருத்து கொண்டவர், அவரது மற்றய கட்டுரைகளையும் கிளிக்கிப்பார்க்கவும், குறிப்பாக தமிழீழப்பண்ணை உற்று நோக்கவும், இது அவரது கருத்து, அவரது கருத்து மட்டுமே.

"எப்பொருள் யார் வழிகேட்பினும்,

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியும் தாயகத்தில் இருந்து தானே புலம்புவர். அவரது வலைப்பதிவுகளைப் படித்திருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று சொல்வார்கள். இந்தக் கட்டுரையாளரின் நோக்கம் பற்றி எனக்குச் சந்தேகம் தோன்றுகின்றது.

தமிழ்த் தேசியத்தின் வெற்றி பற்றி சிந்திக்கின்றாரா? அல்லது அதற்குக் குழி பறிக்கும் வழி வகைகள் பற்றி ஆழச் சிந்திக்கின்றாரா? என்பது பற்றி எனக்கு நிறையவே சந்தேகம் தோன்றியுள்ளது.

விரும்பியோ விரும்பாமலோ இன்று எமது சுதந்திரப் போராட்டம் என்பது உலகளாவிய ரீதியிலும் இந்து சமுத்திரப் பிராந்திய ரீதியிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளின் சுழற்சிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்த சக்திகளைப் புறம் தள்ளி எமது போராட்டத்தை வென்றெடுப்பது என்பது மிக மிகக் கடுமையான ஒரு செயற்பாடாகும்.

சர்வதேசம் என்று இங்கு நான் குறிப்பிட முயல்வது எம்மிலும் பலம் வாய்ந்த சக்திகளைத் தான். இன்று உலகில் நடந்து வரும் அத்தனை காரியங்களிலும் இந்த சர்வதேசம் என்ற சக்திகளின் ஆளுமை இருக்கின்றது.

"லொபி" எனப்படும் பரப்புரை சர்வதேசத்தின் சில சக்திகளையாவது எமது போராட்டத்தின் நியாயங்களைப் புரிய வைத்து எமது போராட்டத்தின் சார்பாக வென்றெடுப்பதற்கானதே.

வரலாற்றில் எமக்குக் கிடைக்கக் கூடிய படிப்பினைகளை நாம் கூர்ந்து கவனித்து எமது போராட்டத்தினை வளர்த்துச் செல்வதில் பயன் படுத்த வேண்டும். கிழக்குத் தீமோர், கொசோவா, பொஸ்னியா போன்ற நாடுகள் சர்வதேசத்தின் ஆதரவுடனேயே தமது இறைமையை வென்றெடுத்திருக்கின்றன.

தமிழீழ வி.புலிகளையும் அது சார்ந்த ஈழத் தமிழ் மக்களையும் பயங்கரவாதிகளாக உலக அரங்கில் சித்தரிப்பதற்கு பல சக்திகள் கங்கணங்கட்டிக் கொண்டு இருக்கும் வேளையில் இவ்வகையான எடுத்தேன் கவிழ்த்தேன் தன்மையிலான ஆழமில்லாத கருத்துகளை வெளியிடுவது எவ்வளவு தூரம் எம் போராட்டத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தும் என்று இக்கட்டுரையாளர் உணர்ந்து கொண்டிருக்கின்றாரா என்பது சந்தேகமாகவே இருக்கின்றது.

புலம் பெயர் நாடுகளில் வாழும் மக்களே இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்லும் சக்திகள் என்பதைப் புரிந்து கொண்டுள்ள சர்வதேசத்தின் சில வேண்டத்தகாத சக்திகள் ( எமது போராட்டத்தின் நலனுக்கு எதிரான சக்திகள்) புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்மை எமது போராட்டத்துடனும் தாய் மண்ணிடமிருந்தும் பிரித்தெடுக்க சதிசெய்து அடுக்கடுக்கான தடைகளைக் கொண்டுவர முயலும் இவ்வேளையில் இவ்வகையான அரைவேக்காட்டுத்தனமான "பம்பல்கள்" எத்தனை தூரம் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதுடன் எதிரியின் எண்ணங்களுக்கு நாம் இடம் கொடுக்காது எமது போராட்டத்தை சாதிரியத்துடன் நகர்த்திச் செல்ல வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

பரப்புரையானது அரசு சார்ந்த, அரசு சாரா அமைப்புகள், புத்தி ஜீவிகள் , பொதுமக்கள் என்ற சகல தரப்பினையும் குறிவைத்ததாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

இன்றும் ஈராக் போரினை ஒரு ஆக்கிரமிப்பு யுத்தம் என்று எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் அமெரிக்காவிலேயே இருக்கின்றன. வியற்நாம் போரில் அமெரிக்காவின் பின்வாங்கலுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு ஹோ சி மின்னின் செம்படை வீரர்கள் காரணமோ அவ்வளவுக்கு அவ்வளவு அமெரிக்கா உட்பட உலகம் எங்கும் ஏற்பட்ட அமெரிக்காவிற்கு எதிரான எதிர்ப்பும் காரணம் என்பதை நாம் மறந்து விட முடியாது.

பெரும் பண முதலைகளின் கைப்பொம்மையாய் இருக்கின்ற அரசியந்திரம் தன் நலனை சார்ந்து செயற்பட முனைந்தாலும் ஜனநாயக சக்திகளின் முன்னால் மக்கள் சக்தியின் முன்னால் பணிந்து போவதைத் தான் நாம் காலம் காலமாகப் பார்க்கின்றோம்.

இறுதியாக சர்வதேசம் என்பது அரசியந்திரங்களை மட்டுமல்லாது புத்தி ஜீவிகள், கலைஞர்கள், பொது மக்கள், பொதுஸ்தாபனங்கள் என்று அனைவரையும் உள்ளடக்கியது என்பதையும் இக்கட்டுரையாளர் புரிந்து கொள்ள வேண்டும்.

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.