Jump to content

மன உளைச்சலோடு தான் பதவி ஏற்கிறேன்: கருணாநிதி


Recommended Posts

மன உளைச்சலோடு தான் பதவி ஏற்கிறேன் : கருணாநிதி வருத்தம்:

""நான் மகிழ்ச்சியோடு பதவியை ஏற்கவில்லை. ஒருவித மன உளைச்சலோடு தான் பதவியேற்கிறேன்,'' என்று கருணாநிதி கூறினார்.

தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் கருணாநிதி தலைமையில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவர் பொறுப்புக்கு கருணாநிதியை பொதுச் செயலர் அன்பழகன் முன்மொழிந்தார். பொருளாளர் ஆற்காடு வீராசாமி வழிமொழிந்தார். பதவியை ஏற்றுக்கொண்டு கருணாநிதி பேசியதாவது:

பொதுச் செயலர் முன்மொழிந்த பொறுப்பை நான் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் ஏற்றுக் கொள்கிறேன். தமிழகத்தை வளர்ப்பதற்கும், சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், செம்மைப்படுத்துவதற்கும் இந்த பதவியை ஒரு கருவியாக பயன்படுத்துவதற்காக இந்த பொறுப்பை நான் ஏற்கிறேன். நமது அரசு ஒரு வலுவுள்ள அரசாக அமைய வேண்டும் என்ற குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு இந்த பொறுப்பை ஏற்க சம்மதிக்கிறேன். ஐந்தாவது முறையாக நான் முதல்வர் பொறுப்பை ஏற்கவிருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். கடந்த நான்கு முறை நான் முதல்வராக இருந்தபோது கிடைத்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவேன்.

இந்த தேர்தலில் நான் எதிர்பார்த்ததை விட குறைவான இடங்களே கிடைத்துள்ளன. 123 தொகுதிகளில் நாம் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தேன். ஆனால், 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். எதிர்க்கட்சிகள் சார்பாக ஒரே கூட்டணியில் 69 பேர் வருகிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். தமிழக வரலாற்றில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் எதிர்க்கட்சி இருந்ததே இல்லை. ஆளுங்கட்சியாக இருந்தபோதே அவர்கள் எப்படி அநாகரிகமாக நடந்து கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எதிரே விஷப் பாம்புகள் மத்தியில் இருக்கிறோம் என்ற எண்ணத்துடன் நீங்கள் இருக்க வேண்டும்.

பண பலத்தையும், படை பலத்தையும் எதிர்த்து இந்த வெற்றியை பெற்றுள்ளோம். இதற்கு நமது பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சியின் துணையோடு இந்த வெற்றியை பெற்றுள்ளோம். இந்த பதவியை நான் மகிழ்ச்சியோடு ஏற்கவில்லை. ஒருவித மன உளைச்சலோடு தான் ஏற்கிறேன். தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மற்றவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக அரசை பரிபாலனம் செய்ய முடியும். எந்த கட்டத்திலும் எள்ளளவும், துளியளவும் மற்றவர்கள் மனம் கோணாமல் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நடந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினர் எந்த குறையும் நம்மீது சுமத்த முடியாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

http://www.dinamalar.com/2006may13/fpnews1.asp

Link to comment
Share on other sites

83 வயதில பதவி எடுக்கும் போது மன உளைச்சல் இல்லாமல் என்ன உளைச்சல் இருக்கும்.......

மகனுக்கு பதவியை தாரை வார்க்க வேண்டும் என்ற உளைச்சல்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.