Jump to content

சிரி இனி நீ!


Recommended Posts

சிரி இனி நீ!

ஒன்றல்ல.....

இரண்டல்ல.....

ஓராயிரமும் அல்ல....

இருபது ஆயிரங்களை

நெருங்கும் வீரர்கள் இழப்பு!

அத்தனையும் மொத்தமாய்

வெறும் அறிக்கையில்

எச்சரிக்கை - என்றாகுமோ.....

தவித்தது நீயும் -நானும் தான்!

தவறு தவறு!

பெரும் நெருப்பின் முகம்

எங்கள் பிதா மகன் பிரபா!

அவர்-எப்போ என்ன நினைப்பார்

என்று யாரறிவார்!

அலை மூசி வீசினால்

கரையில் நிற்கவே

பயப்பிடுவான் - தமிழன்

ஆழ்கடலில் போர் செய்யும்

வீரம் கூட - எப்பிடி

ஒரு தமிழிச்சி பெற்றாள்?

தலைவா-எல்லாம் உன்னால்!

அமைதி என்று பேசி நின்று

அடிப்பவனுக்கு ஆயுதம்

கையில் தந்து -அடிமையாய்

கிடப்பவனில் பிழை

பிடிக்கும் உலகம் !

திரும்பும் திசை எங்கும் தடை

செத்தொழிந்து போவதா

இனி எமக்கு விடை?

என்ன ஆகுமோ என்று

தவித்தாய்-நீ!

ஒன்றும் ஆகாது.......

நாலு வருசம்

அடங்கி கிடந்தால்....

எரிமலை பனிகட்டி ஆகுமா என்ன?

புலி படுத்தாலும் ....

எலியை விட பல மடங்கு உயரம்!

சுற்றி சுற்றி சொன்ன ஒரே வரிகள்

இனி ஓயலாம் !

வெற்றிலைகேணியில்

எழுந்த தீயில் -என்னமோ இருக்கு!

ஏதோ விடையொன்று அங்கிருக்கு....

தாய் நிலம் இனி வாடாது

உன்னை ஈன்ற பூமி - இனி

உறங்கி கிடக்காது!

என்னவெல்லாம் சொல்வார் கயவர்

எட்ட நின்று பேசுகிறோம் என்றே....

போகட்டும் - உன் தந்தை உறவுகள் கூட

இன்னும் அங்கிருக்கு!

இந்த தரம் கெட்டவர் பேச்சை

இனியும் நம்புவியா என்ன ?

வெளியில் வா - சூரியன் முதுகில் ஏறு

சுதந்திரம் வந்தே ஆகணும்

போருக்கு அழைத்தவர் வாய் மூட

எம் வேலுப்பிள்ளை மகன் அஞ்சார்

வெற்றி எமதே-

சிணுங்கி சாகாதே

சிரி இனி நீ!

8)

_________________

பூமியை கேட்டா வான் மழை தூவும்?

பூக்களை கேட்டா வண்டுகள் பாடும்?

Link to comment
Share on other sites

அமைதி என்று பேசி நின்று

அடிப்பவனுக்கு ஆயுதம்

கையில் தந்து -அடிமையாய்

கிடப்பவனில் பிழை

பிடிக்கும் உலகம் !

திரும்பும் திசை எங்கும் தடை

செத்தொழிந்து போவதா

இனி எமக்கு விடை?

என்ன ஆகுமோ என்று

தவித்தாய்-நீ!

ஒன்றும் ஆகாது.......

நாலு வருசம்

அடங்கி கிடந்தால்....

எரிமலை பனிகட்டி ஆகுமா என்ன?

உணர்வு பூர்வமான கவி வர்ணன்...வாழ்த்துக்கள் ...தலைவரின் காலத்திலேயே

விடுதலையின் வெற்றியை கொண்டாடும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கின்றது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வு பூர்வமான கவி வர்ணா பாராட்டுகள்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.