Jump to content

புலம் பெயர் வாழ்க்கையும்,மன அழுத்தமும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வணக்கம் இத் தலைப்பில் மன அழுத்தம் எனப்படும் டிப்பிரசன் [dipression] பற்றி எனக்குத் தெரிந்ததை,நான் கேள்விப்பட்டதை எழுதுகிறேன் நீங்களும் இது சம்மந்தமாக உங்களுக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மன அழுத்தம் அநேகமாக தனிமையில் இருப்பவர்களைத் தான் அதிகம் தாக்கும்...இது ஆண்,பெண் வேறுபாடு,வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வரும்...தங்களை மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்று அதீத கோபத்திற்கு ஆளாகுவார்கள் ,வாழ்க்கையில் அதிக தோல்விகளை சந்தித்தவர்கள்,பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாதவர்கள்,தனிமையில் இருப்பவர்கள்,தங்களது சுக,துக்கங்களை பங்கிட்டு கொள்ள ஒரு வித விரக்தி நிலைக்கு சென்று மன நோய்க்கு ஆளாகின்றனர்.

இத்தகைய நிலை கொலை செய்யும் அளவிற்கு கொண்டு வந்து விடும்...எம்மினத்தவர்களும் இதில் அட‌ங்குவர் அதிலும் குறிப்பாக பெண்களே அதிகமாய் உள்ளனர்...கணவர் 24 மணி நேர‌மும் வேலை,வேலை என்று திரிய வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்...தனிமையில் இருத்தல்,குடும்பக் பொறுப்பு,குழந்தைகளை வளர்த்தல்[குழந்தைகள் குளப்படி அதிகம் என்டால் அழுத்தமும் அதிகம்],அன்பு காட்டுவதற்கு கூட ஒருத்தரும் இல்லாமை போன்ற கார‌ணங்களால் ஒரு வித மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர்...சில வருட‌ங்களுக்கு முன்னர் கூட‌ லண்ட‌னில் உள்ள ஒரு தமிழ்ப் பெண் தனது பிள்ளைகளை வெட்டிக் கொன்றார் :(

மன அழுத்தத்தின் அறிகுறி என்ன அநேகமாக இவர்கள் சாதுக்களாகத் தான் இருப்பார்கள்...மன அழுத்தம் கூடினால் நித்திரை வராது இர‌விர‌வாய் முழித்து இருப்பார்கள்,நிறைய கோப்பி குடிப்பார்கள்,மது,சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாவர்கள் அடிக்கடி சிகரெட் புகைப்பார்கள்,தேவையில்லாமல் கோபப்படுவார்கள்,ஒழுங்காக உணவு உண்ணாமல் கள்ளத் தீனிகளை[சொக்கலேட்,ஜஸ்கீறீம்,கிரிப்ஸ்] அடிக்கடி சாப்பிடுவார்கள்...இவர்களுக்கு மன அழுத்தம் கூடினால் உட‌ம்பும் கூடும் அது இவர்கள் கள்ளத் தீனி சாப்பிடுவதால் கூடுதா அல்லது மன அழுத்தம் கூடினால் உட‌ம்பு கூடுமா தெரியவில்லை ஆனால் சில பேர் சொல்கிறார்கள் மன அழுத்தம் அதிகமானல் உட‌ம்பு குறையும் என்று எனக்கு இது பற்றி சரியாகத் தெரியவில்லை யார‌வது மன நல மருத்துவர் இருந்தால் உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இவற்றுக்கு என்ன தீர்வு இவர்கள் பைத்தியங்கள் இல்லை...மருந்து,மாத்திரைகள் என்று போகும் முன்னர் இவர்களை கண்ட‌றியுங்கள் அன்பு,பாச‌ம் செலுத்துங்கள்,தனிமையில் இருக்க விடாதீர்கள்,பெண்கள் வேலைக்குப் போகலாம்,படிக்கப் போகலாம்,குடும்ப பொறுப்பு,குழந்தை வளர்ப்பு ஒருவர‌து தலையிலே சுமத்தாமல் இருவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்,ஆண்கள் வேலை,பணம் என்று அலையாமல் வீட்டில் மனைவிக்கு ஒத்தாசையாகவும் இருங்கள்,குடும்பமாக இருப்பவர்கள் என்டால் வார‌த்திற்கு ஒருநாள்,இருநாளாவது குடும்பமாய் உறவினர்,நண்பர்களது வீடுகளுக்கு செல்லலாம் தனியே இருப்பவர்கள் என்டால் சினிமாவிற்கு,உணவகங்கள் போன்ற உங்களுக்கு பிடித்த இட‌ங்களுக்கு செல்லலாம்,இனிமையான இசையைக் கேளுங்கள்,நகைச்சுவை பட‌ங்களை விரும்பிப் பாருங்கள் நிறைய புத்தகங்களை வாசியுங்கள்,முக்கியமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நட‌வுங்கள்.

பி;கு; எனக்கும் சில நேர‌ம் கோபம் கூடினால் வயிறு டக்கென்று உப்பி விடும் எனக்கும் மன அழுத்தம் இருக்குதோ தெரியவில்லை :unsure: யார் என்னிட‌ம் வெட்டு வேண்ட‌ப் போயினமோ ஆண்ட‌வா :lol:

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

[size=4]பணமோகம் தரும் சுகம் தரும் துன்பங்களில் முக்கியமான ஒன்று - மனவழுத்தம். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பணதுக்ககாக வேலை வேலையென்று அலைபவர்கள் தாங்க்க்களும்பெற்று [/size][size=1]

[size=4]மற்றவர்களுக்கும் தரும் போனஸ் பரிசு .........இது .இருப்பதைக் கொண்டு வாழனும். மற்றவனை போல ஆடம்பரமாக வாழ வெளிக்கிட்டால் இது தான் . மற்றும் ஊர் சூழல் திடீரென மாறுபட்டால் வரும் . தனிமையை தவிர்க்கணும் நேரத்தை பயனுள்ளதாக ஆக்கி வாழனும். [/size][/size]

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் ரதி அக்கா... :)

Link to comment
Share on other sites

தங்களை மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்று அதீத கோபத்திற்கு ஆளாகுவார்கள் ,வாழ்க்கையில் அதிக தோல்விகளை சந்தித்தவர்கள்,பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாதவர்கள்,தனிமையில் இருப்பவர்கள்,தங்களது சுக,துக்கங்களை பங்கிட்டு கொள்ள ஒரு வித விரக்தி நிலைக்கு சென்று மன நோய்க்கு ஆளாகின்றனர்.

எனது 24 வயதில் இங்க வந்தேன் . வந்து ஆறுமாதத்தால் அப்பா போய்விட்டார் . தனியொருவனாக எல்லாவற்றையும் எதிர்கொண்டேன் . சிலவேளைகளில் கடுமையான மனழுத்ததிற்கு ஆளானேன் . அப்பொழுது எனது மனதுடன் ஓர்மமாக சண்டை பிடிப்பேன் . தனிமையை போக்க நான் தெரிவு செய்த விடையம் வாசிப்பும் ,அறிவு பூர்வமான தொலைக்காட்சி நிகள்ச்சிகளும் தான் . ஆனால் இப்போது இவைகள் இல்லை உங்கள் பதிவு ஆராயப்படவேண்டியது . மிக்க நன்றி அக்கை பகிர்ந்ததிற்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்குத் தேவையான பதிவு, ரதி!

இதற்குத் தான் கோவில்கள் இருக்கின்றனவே!

ஆனால் என்ன புடவை கட்டுவது, என்பதே இங்குள்ளவர்களின் மன அழுத்ததிற்குக் காரணம்!!! :wub:

நானும் தேவையில்லாத காரணங்களுக்காக, மன அழுத்தங்களைத் தேடிக் கொள்கிறேன்!

யாருக்காக, நான் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றேனோ, அவர்கள் எந்த வித மன அழுத்தங்களும் இல்லாமல் இருக்கிறார்கள்!!!

Link to comment
Share on other sites

சமகால முக்கிய பிரச்சனைகளில் ஒண்டு மன அழுத்தம். புலத்தில் அநேகருக்கு பொருளாதார பிரச்சனைகள் தான் மன அழுத்ததிற்கு முக்கிய காரணியாய் அமைகின்றது. இயந்திரத் தன்மையான வாழ்க்கை முறை, குடும்ப, சமூக உறவுகளும் எதோ வகையில் பங்களிப்பு செய்கின்றன. எனக்கு மன அழுத்தம் பெரிதாக ஏற்படவில்லை ஆனால் வர முன்னரேயே தடுக்க முயற்சி செய்கிறேன். மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உடற்பயிட்சி, இசை, வாசிப்பு ஒருவகையில் எனக்கு உதவியிருகின்றன எனலாம். சில விடயங்களால் மனம் குழம்பும் போது ஜிம்முக்குப் போய் நல்ல இசையைக் கேட்டுக் கொண்டே நல்லா cardio செய்த பின்னர் உடலும் மனமும் இலேசாவதை அனுபவித்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

இது எம் புலம் பெயர் மக்கள் மட்டுமோ அல்லது போரை எதிர் கொண்ட ஈழ மக்கள் மட்டுமோ எதிர் கொள்ளும் பிரச்சனை அல்ல. உலகம் பூராவும் பரவலாக அதிகரித்துக் கொண்டு போகும் பிரச்சனை இது. கனடா, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் அனைத்திலும் இன்று மன அழுத்தம் பரவலாக அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

வளப் பற்றாக்குறையால் ஏற்படும் போட்டி வாழ்க்கை முறை, முதலாளித்துவ அமைப்பு முறையின் மூலம் உருவாகியுள்ள பணம் ஒன்றே வாழ்க்கை என்று இயங்கும் மனநிலை, பக்கத்து வீட்டுக்காரர்களையே அந்நியராக நோக்கும் தனக்குள் மட்டுமே ஒடுங்கி கொள்ளும் நத்தைக் குணம், உலகம் முழுக்க நடக்கும் அக்கிரமங்களை அப்படியே கண் முன்னே காட்டும் மீடியாக்களின் வக்கிர போக்கு, Privacy என்பதே அருகிப் போகச் செய்யும் தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி என்பன எல்லாவற்றின் கூட்டு விளைவு தான் இந்த மன அழுத்தம்.

குடும்பத்துக்குள் கூட தனக்கென ஒரு வட்டம் இட்டுக் கொண்டு ஒரு புன்னகை கூட சிந்த மறுக்கும் எத்தனை மனிதர்களை நாங்கள் தினமும் பார்க்கின்றோம். ஒரு பிரச்சனை ஏற்பட்டால் மனம் விட்டு கதைக்க கூட ஆள் அற்று, அல்லது அப்படி ஆட்கள் இருப்பினும் அவர்களின் மீது நம்பிக்கை அற்று, அப்படி நம்பிக்கை இருப்பினும் 'நான்' எனும் அகந்தையை விட்டு வர விருப்பமின்றி தனித்துப் போய் கிடக்கும் சூழ்நிலையில் மன அழுத்தம் வராமல் என்ன வரும்?

மனிதன் ஒரு கூட்டு வாழ்க்கை முறையை விரும்பும் விலங்கு. பெற்றோர்கள், சகோதரங்கள், உறவுகள், சுற்றம், இனம் என்று முற்றிலும் தன்னை சுற்றி பலமான வலையை ஏற்படுத்தி, அதற்கும் அப்பால் கலாச்சாரம் எனும் பெரு வட்டம் இட்டு, அதனுள் நிம்மதியாக படுத்து உறங்கும் விலங்கு. இப்படித் தான் இந்த விலங்கு பல ஆயிரம் வருடங்களாக வாழ்கின்றது. அதன் மனம், சித்தம், ஊன், உடம்பு எல்லாமே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த இந்த வாழ்க்கை முறையில்தான் கட்டமைக்கப்பட்டது. ஆனால், இன்று இவை அனைத்துமே ஆட்டம் காணும் போது இந்த விலங்கின் மனம் பாதிப்புக்குள்ளாகாமல் என்ன செய்யும்? மன அழுத்ததில் இருந்து, மனிதரை வெட்டி வீதி வீதியாக வீசும் பயங்கர மனச் சிதைவு வரைக்கும் வராமல் என்ன செய்யும்?

காலகாலமாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இயற்கை உணவுகளையே உண்டு அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மூளையும் அதன் இயக்கமும் இன்று கடந்த ஒரு 50 வருடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை உணவுகளையும், fast food உணவுகளையும் உணவாக எடுக்கப்படும் போது முன்னை மாதிரியே எப்படி ஆரோக்கியமாக செயல்படும்?

இவற்றில் இருந்து ஓரளவுக்கேனும் வெளியே வந்து, ஒரு 4 நல்ல நண்பர்களை உருவாக்கி, எதனையும் ஒழிக்காமல் வெளிப்படையாக கதைத்து பழகும் குணத்தையும் பழக்கப்படுத்தி, சிரிப்பு வரும் போது சிரித்து, அழுகை வரும் போது அழுது, ஆத்திரம் வரும் போது ஆத்திரப் பட்டு வாழ்க்கை எந்த வழியில் எம்மை எதிர் கொள்கின்றதோ அதனை அப்படியே வாழ்ந்து கொண்டு இருக்கும் போது மன அழுத்தத்தில் இருந்து தப்பிப் பிழைக்கலாம்.

Link to comment
Share on other sites

உங்களுக்கு எது அவசியம் என்று படுகிறதோ, அதைத் துறக்க இக்கணமே நீங்கள் தயாராக இருந்தால் மன அழுத்தம் வரவே வராது..! :rolleyes:

Link to comment
Share on other sites

முதலில் நன்றி ரதிக்கு ,

உலகமெங்கும் எல்லா இனத்தவருக்கும் உள்ள பிரச்சனை என்று தள்ளி விடாது எம்மவரை மட்டும் குறி வைத்து பார்ப்பதுதான் நல்லது .

இரண்டு வருடங்களாக புது இடத்தில் வேலை ,அதற்கருகில் ஒரு செல்டர் .அதில் பலர் தமிழர்கள்.அன்றாடம் அவர்களை காண்கின்றேன் .தெருவில் எறிந்து விட்ட அடிக்கட்டை சிகரெட் பொறுக்குபவர்களும் ,கையில் பியர் கானுடன் ஏதோ தமக்குள் பேசிக்கொண்டு அலைபவர்களும் ,(போலிசுக்கு தெரியும் சுகமில்லாதவர் என்று அதனால் பியர் வைத்திருந்தாலும் பிடிப்பதில்லை ),சாமியார் வேஷம் போட்டவர்களும் ,என்னிடம் வந்து கடிதம் நீட்டியவர்களும் ,( தனது படத்தை ஒட்டி யாரோ ஒருவருக்கு காதல் கடிதம் ) இப்படி பல பல .(முன்னாள் எம்.பி *** மகனும் உட்பட .)

அன்றாடம் சந்திக்கின்றேன் இவர்களை ,இதைவிட குடும்பமாக சந்தோசமாக இருக்கின்றார்கள் என நாங்கள் நம்பும் அரைவாசி பெயர்களுக்கு மேல் டிபிறேசனில் தான் ..

மற்றவர்களுக்கு தீர்வு நாம் சொல்லவது மிக இலகு ஆனால் அவர் பிரச்சனைகள் அவர்களுக்குத்தான் தெரியும் .

எமக்கென இலாப நோக்கற்ற சமூகஅக்கறையுள்ள அமைப்புகளை உருவாக்காமல் வெறும் யுத்தம் என்று நின்றுவிட்டோம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி, மன அழுத்தம் பல பேருக்கு உண்டு, கண்டுபிடிப்பது கஷ்டம், ஆரம்பத்தில் கண்டு பிடித்தால் நல்லது, அத்துடன் யாழில் இணைத்திருப்பது நல்லது, கன விஎப் இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை

email:

[size=4]Vitamin F......[/size]

[size=4]I loved this and wanted to share it with you...

Why do I have a variety of friends who are all so different in character? How can I get along with them all? I think that each one helps to bring out a "different" part of me.[/size]

[size=4]With one of them I am polite. With another I joke. with another I can be a bit naughty ..[/size]

[size=4]I sit down and talk about serious matters with one. With another I laugh a lot. I listen to one friend's problems. Then I listen to another one's advice for me.[/size]

[size=4]My friends are like pieces of a jigsaw puzzle. When completed, they form a treasure box. A treasure of friends! They are my friends who understand me better than I understand myself.

They're friends who support me through good days and bad. [/size]

[size=4]Real Age doctors tell us that friends are good for our health.

Dr. Oz calls them Vitamin F (for Friends) and counts the benefits of friends as essential to our well being. Research shows that people in strong social circles have less risk of depression and terminal strokes.[/size]

[size=4]If you enjoy Vitamin F constantly you can be up to 30 years younger than your real age. The warmth of friendship stops stress and even in your most intense moments, it decreases the chance of a cardiac arrest or stroke by 50%.[/size]

[size=4]I'm so happy that I have a stock of Vitamin F![/size]

[size=4]In summary, we should value our friends and keep in touch with them. We should try to see the funny side of things and laugh together and pray for each other [/size][size=4]In the tough moments.[/size]

[size=4]Some of my friends are friends on line.[/size]

[size=4]I know I am part of theirs because their names appear on my computer screen every day and I feel blessed that they care as much for me as I care for them.[/size]

[size=4]If ever you don't see my name on your screen please remember that it is not because I have forgotten you but because something has happened to me.[/size]

[size=4]I know as we age we can not be on line forever but we are making the best of it while we still can. While there is breath in me I will always keep in touch and will not forsake you E[/size][size=4]ver.[/size]

Link to comment
Share on other sites

மன அழுத்தம் நீங்க 30 வழிகள்

tension-headaches.jpg?w=150&h=150&h=150

வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும்..வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்த படிநிலை நோக்கி நகர்வதற்கும் கை கொடுக்கின்றன.

மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது.

இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது.

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.

ஆழ்ந்த சுவாசம்:

கீழை நாடுகள், மேலை நாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

காட்சிப்படுத்துங்கள்:

பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ‘ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.

அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:

உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.

புன்னகையின் சக்தி:

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

கடைவாய் – ஒரு ரகசியம்:

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

மனம் சொல்லும் மந்திரம்:

நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

அடுத்தது என்ன…..?

மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன?” என்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிற போது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.

எழுதிப்பாருங்கள்:

மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது.

அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.

தடாலடிகளைத் தள்ளிப்போடுங்கள்:

அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.

காபி குடிப்பதைக் குறையுங்கள்:

காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.

தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.

முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்:

எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கில் போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள் வட்டத்துக்குள் எரிந்துவிழச் செய்கிறது. இந்தக் கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்துவிடும் என்பதால், செய்யமுடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.

நறுமணங்களின் நலம் பெறுங்கள்:

தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.

உங்கள் உஷ்ணமே உங்களுக்குதவும்:

டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.

மூன்று முக்கிய இடங்கள்:

பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.

1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.

2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.

3. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.

அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.

கவலைக்கென்று நேரம் ஒதுக்குங்கள்:

மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வைத்துக்கொண்டால், அந்தக் கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .

நொறுக்குத் தீனி நொறுக்குங்கள்:

கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள்

சொல்கிறார்கள்.

வைட்டமின் வேண்டும்:

வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடையாளம் என்ன?

மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.

ஆகாயம் பாருங்கள்:

அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

நடைப்பயிற்சி நலம் தரும்:

நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.

வெந்நீர்க்குளியல்:

வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.

இசையால் வசமாகும் இதயம்:

எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.

செல்லப் பிராணிகள்:

நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. முயன்று பாருங்கள்.

கவனம் குவியுங்கள்:

மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதன் அளவு, வடிவம், வண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.

நண்பர்களை அழையுங்கள்:

மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

வஜ்ராசனத்தின் வல்லமை:

மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான்.

குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.(இதை இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் க‌டைப்பிடிக்கிறார்கள்)

பிரார்த்தனை:

மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.

நிமிர்ந்து அமருங்கள்:

சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.

தாவரங்களோடு சிறிது நேரம்:

பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.

http://shuhaibmh.wordpress.com/2010/06/16/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-30-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாள்,இருநாளாவது குடும்பமாய் உறவினர்,நண்பர்களது வீடுகளுக்கு செல்லலாம் .

கிழிஞ்சுது :rolleyes: உது இன்னும் கூட்டுறத்துக்குரிய வழி. மற்றும்படி நல்லதோர் விடையத்தை தொட்டு இருகிறீர்கள்.வாழத்துக்கள் ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நன்றி ரதி அக்காவிற்கு.நான் இதைப்பற்றி ஒரு திரி தொடங்க வேண்டும் என்று இருந்தேன்.எனது நண்பன் இந்த மன அழுத்தத்தினால் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கிறார்.இவ்வளவு நாளும் ஒருநாளும் தனிய இருந்தது கிடையாது .இப்போது அவருக்கு வேலை தூர இடத்துக்கு 2013 ஜனவரியில் இருந்து மாற்றப்படுகிறது.வேறை வேலைக்கும் முயற்சி செய்ய முடியாது ஏனென்றால் அவருக்கு விசா அனுமதி நீட்டிக்க வேண்டி இருக்கிறது.இவர் முதலே எந்த ஒரு சின்ன விடயத்திற்கும் தேவையே இல்லாமல் வருத்தப்படுபவர்.இப்போது இரவு நித்திரை கொள்ளுவதில்லை.எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் பார்ப்பதில்லை.எந்த நேரமும் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்ற புலம்பல் தான்.தான் நடுத்தெருவிலை நிற்கிறன் .ஒருத்தரும் தனக்கு உதவி செய்கிறார்கள் இல்லை என்று அடிக்கடி கூறுவார்.முக்கியமாக இப்போது தன்னுடைய இந்த நிலைமைக்கு நான் தான் காரணம் என்று இப்போது நான் என்ன சொன்னாலும் உடனடியாக என்னைத்தான் குறை சொல்லுவார்.

நானும் என்னுடைய நிறுவனத்தில் அவருக்கு வேலைக்கு முயற்சி செய்தும் பார்த்தாயிற்று.ஆனாலும் நான் முயற்சி செய்தேன் என்று கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை.நான் என்ன ஆறுதல் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராய் இல்லை.எது என்றாலும் என்னுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்.இதை விட அவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அதுவும் சரி வருகுதில்லை என்பதும் பிரச்சினையாக இருக்கிறது.

நண்பனைப் பற்றி இங்கே கூறுவது சரியில்லை தான் என்றாலும் அவரை எப்படி இவற்றில் இருந்து விடுபட செய்வது என்று புரியவில்லை.நான் என்ன சொன்னாலும் உனக்கு இது விளங்காது என்றும் தன்னை பாவிச்சு போட்டு கை எல்லாரும் கை விட்டிட்டினம் என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்.

இப்படியே போனால் தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகி விடுவாரோ என்று பயமாக உள்ளது.இதற்கு என்ன செய்யலாம் என்று யாராவது ஆலோசனை கூறினால் நன்றாக இருக்கும் .

உங்களால் முடிந்தால், இவரை ஒரு நல்ல மனநிலை மருத்துவரைப் பார்க்கச் சொல்லுங்கள்! இதில் எந்தக் கவுரவக் குறைவும் அவருக்கு வந்து விடாது. உங்களுக்கும் மனநிலை மருத்துவருக்கும் மட்டுமே தெரியட்டும்! பொதுவாக, அடுத்தவரின் தனிப்பட்ட வாழ்வில், நான் தலையிடுவதை விரும்புவதில்லை, சில வருடங்களுக்கு, முன்பு, வெளிநாடொன்றில், இந்த நிலையில் இருந்த நண்பர் ஒருவர், அறையைப் பூட்டிவிட்டுத் தனக்குத் தானே நெருப்பு மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். அத்துடன், அவருக்குத் திருமணம் வேறு பேசுவதால், இன்னொருவரின் வாழ்வும் அநியாயமாகப் பாதிக்கப் படலாம்! இதை, ஒரு நல்ல நண்பன் என்ற முறையில், செய்ய முடிந்தால், செய்து விடுங்கள்!!!

Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு ரதி.

தொடர் தோல்விகளை / கவலையான நிகழ்வுகளை சந்திப்பவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதைக் கண்டிருக்கிறேன். இதைவிட மற்றவர்களுடன் தனது நிலையை ஒப்பிட்டுப் பார்க்கிறது, எதிர்மறை எண்ணம், ஆக்களோட சேராம ஒதுங்கியிருத்தல், திருப்தியின்மை, சுயபரிதாபம், சோம்பேறித்தனம், நகைச்சுவை உணர்வு இல்லாமை, போன்ற குண இயல்பு உள்ளவர்களுக்கும் வருகிறது. வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் தமிழ்ப் பெண்களுக்கும் அதிகம் வருவதைப் பார்த்திருக்கிறேன்.

'சும்மா இருப்பவனின் மனது சாத்தானின் விளையாட்டு மைதானம்' கண்டதையும் யோசிக்கும்.

வரும் முன் காப்பதுதான் நல்லது.

ஒவ்வொருவருக்கும் நல்ல உழைப்பு, நல்ல நண்பர்களின் கூட்டு, விருப்பமான பொழுது போக்கு (குந்தி இருந்து தொலைக்காட்சி பாப்பது அல்ல), கூடியளவு இயற்கையுடன் ஒத்து வாழுதல், உடற்பயிற்சி (உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு இது தேவையில்லை) அவசியம். ஆகலும் முடியாத விசயங்களோட கிடந்து மல்லுக் கட்டுறத விட, முடிந்ததைச் செய்து சந்தோசமாக இருக்கலாம்.

என்னைப் பொறுத்த அளவில, வீட்டில ஒரு இரண்டு மாதம் சும்மா இருந்தனெண்டா பயித்தியம் பிடித்து விடும். தொடர்ச்சியாக ஒரே விதமான செயல்படுவதைத் (routine)தவிர்த்து வருகிறேன் வேலை நேரம் போக ஏதாவது வீட்டு வேலை, தோட்டம், பிடித்தமான சமையல் செய்வது, மெல்லிசை கேட்பது, உடற்பயிற்சி நிலையம் போவது என்றிருப்பேன். மனதுக்கு உற்சாகமாக இருக்கும். இயற்கையோடு ஒத்து வாழ்ந்தாலே பெரிய மாற்றம் தெரியும். சிற்றோடை நீரின் சத்தத்தைக் கேட்டுக் கொண்டு பசும் புல்தரையில் வெறும் காலோடு நடந்து பாருங்கள் மனது இலகுவாகும்.

நல்லா cardio செய்த பின்னர் உடலும் மனமும் இலேசாவதை அனுபவித்திருக்கிறேன்.

வேக உடற்பயிற்சி செய்தால் அன்று முழுக்க மனது புத்துணர்வாக இருக்கும். Depression கொடுக்கும் குளிசையில் உள்ள இரசாயனம், வேக உடற்பயிற்சி செய்யும் பொழுது சுரப்பதாக எங்கோ வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பணமோகம் தரும் சுகம் தரும் துன்பங்களில் முக்கியமான ஒன்று - மனவழுத்தம். [/size]

நன்றி அகூதா உங்கள் வருகைக்கு...இன்றைய வாழ்க்கை முறைக்கேற்ப ஆண்களும் பணம்,பணம் என்று அலைகிறார்கள் பெண்கள் சிலரும் பணம் கொண்டு வா என ஆண்களை கஸ்டப்படுத்துகிறார்கள்...எல்லோரும் புரிந்து நடக்க வேண்டும்.

[size=4]பணதுக்ககாக வேலை வேலையென்று அலைபவர்கள் தாங்க்க்களும்பெற்று [/size]

[size=1][size=4]மற்றவர்களுக்கும் தரும் போனஸ் பரிசு .........இது .இருப்பதைக் கொண்டு வாழனும். மற்றவனை போல ஆடம்பரமாக வாழ வெளிக்கிட்டால் இது தான் . மற்றும் ஊர் சூழல் திடீரென மாறுபட்டால் வரும் . தனிமையை தவிர்க்கணும் நேரத்தை பயனுள்ளதாக ஆக்கி வாழனும். [/size][/size]

உண்மை தான் அக்கா...நன்றி அக்கா உங்கள் வருகைக்கு

தொடர்ந்து எழுதுங்கள் ரதி அக்கா... :)

நன்றி காதல் உங்களுக்கும் சமூக அக்கறை இருக்குது.நீங்களும் பார்த்த விடயங்களை எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்று அதீத கோபத்திற்கு ஆளாகுவார்கள் ,வாழ்க்கையில் அதிக தோல்விகளை சந்தித்தவர்கள்,பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாதவர்கள்,தனிமையில் இருப்பவர்கள்,தங்களது சுக,துக்கங்களை பங்கிட்டு கொள்ள ஒரு வித விரக்தி நிலைக்கு சென்று மன நோய்க்கு ஆளாகின்றனர்.

எனது 24 வயதில் இங்க வந்தேன் . வந்து ஆறுமாதத்தால் அப்பா போய்விட்டார் . தனியொருவனாக எல்லாவற்றையும் எதிர்கொண்டேன் . சிலவேளைகளில் கடுமையான மனழுத்ததிற்கு ஆளானேன் . அப்பொழுது எனது மனதுடன் ஓர்மமாக சண்டை பிடிப்பேன் . தனிமையை போக்க நான் தெரிவு செய்த விடையம் வாசிப்பும் ,அறிவு பூர்வமான தொலைக்காட்சி நிகள்ச்சிகளும் தான் . ஆனால் இப்போது இவைகள் இல்லை உங்கள் பதிவு ஆராயப்படவேண்டியது . மிக்க நன்றி அக்கை பகிர்ந்ததிற்கு .

நன்றி கோமகன் உங்கள் வருகைக்கும்,கருத்திற்கும் நானும் அநேகமாக யாழிலும் புத்தகங்கள் வாசிப்பதிலும் தான் என் பொழுதை போக்குவேன்...நல்ல தமிழ் புத்தகங்கள் வாங்குவதும் அதிக செலவு தான் குடும்ப பொறுப்பு உள்ளவர்களுக்கு அப்படி வாங்கி வாசிப்பது கடினமாயிருக்கும்

காலத்திற்குத் தேவையான பதிவு, ரதி!

இதற்குத் தான் கோவில்கள் இருக்கின்றனவே!

ஆனால் என்ன புடவை கட்டுவது, என்பதே இங்குள்ளவர்களின் மன அழுத்ததிற்குக் காரணம்!!! :wub:

நானும் தேவையில்லாத காரணங்களுக்காக, மன அழுத்தங்களைத் தேடிக் கொள்கிறேன்!

யாருக்காக, நான் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றேனோ, அவர்கள் எந்த வித மன அழுத்தங்களும் இல்லாமல் இருக்கிறார்கள்!!!

மன நிம்மதிக்கு கோயிலுக்குப் போனாலும் கோயில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்து மன அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்...சத்தியமான உண்மை நானும் சம்மந்தப்பட்டவர்களிடம் நானும் சொல்லியிருக்கிறேன் அவர்கள் நீங்கள் தேவையில்லாமல் யோசிப்பதற்கு தாங்கள் என்ன செய்ய என்று என்னிடமே கூசாமல் சொல்லுவார்கள் :( நன்றி புங்கையூரான்

சமகால முக்கிய பிரச்சனைகளில் ஒண்டு மன அழுத்தம். புலத்தில் அநேகருக்கு பொருளாதார பிரச்சனைகள் தான் மன அழுத்ததிற்கு முக்கிய காரணியாய் அமைகின்றது. இயந்திரத் தன்மையான வாழ்க்கை முறை, குடும்ப, சமூக உறவுகளும் எதோ வகையில் பங்களிப்பு செய்கின்றன. எனக்கு மன அழுத்தம் பெரிதாக ஏற்படவில்லை ஆனால் வர முன்னரேயே தடுக்க முயற்சி செய்கிறேன். மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உடற்பயிட்சி, இசை, வாசிப்பு ஒருவகையில் எனக்கு உதவியிருகின்றன எனலாம். சில விடயங்களால் மனம் குழம்பும் போது ஜிம்முக்குப் போய் நல்ல இசையைக் கேட்டுக் கொண்டே நல்லா cardio செய்த பின்னர் உடலும் மனமும் இலேசாவதை அனுபவித்திருக்கிறேன்.

நன்றி தும்பளையான் உங்கள் வருகைக்கு...உங்கள் மனைவி உங்களோடு ஒத்து வாழ்ந்தால் மன அழுத்தம் வருவதற்கு வாய்ப்புகளே இல்லை :D

Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவுக்கு நன்றிகள் ரதி. புலம்பெயர் நாடுகளில் மனஅழுத்தங்களால் பாதிப்புக்குள்ளாபவர்கள் பலர். ஆரம்பத்தில் இது தான் மனஅழுத்தம் என்று கண்டுபிடிக்கமுடியாமையால் பலர் அதை கவனத்தில் எடுப்பதில்லை. மனஅழுத்தம் மிகவும் கொடியநோய் போன்றது......ஆரம்பத்தில் தகுந்த மாற்றுவழி செய்யாவிட்டால் அது மரணத்தின் பிடியில் கொண்டுபோய் விட்டுவிடும்.

தனிமையை விடுத்து நண்பர்களுடனாவது மனவலிகளை சொல்லி மனஆறுதல் தேடவேண்டும் மாறாக வடுக்களையும் வலிகளையும் எம்முள்ளே வைத்து அதைப்பற்றி யோசிப்பது இன்னும் மனஅழுத்தத்தை கூட்டி நிரந்தர நோயாளியாக்கிவிடும். இங்கு மனஅழுத்தம் இருப்பது கண்டுபிடித்தால் முதலில் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டு பின்னர் சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

நல்லதொரு பதிவு

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எம் புலம் பெயர் மக்கள் மட்டுமோ அல்லது போரை எதிர் கொண்ட ஈழ மக்கள் மட்டுமோ எதிர் கொள்ளும் பிரச்சனை அல்ல. உலகம் பூராவும் பரவலாக அதிகரித்துக் கொண்டு போகும் பிரச்சனை இது. கனடா, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் அனைத்திலும் இன்று மன அழுத்தம் பரவலாக அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

வளப் பற்றாக்குறையால் ஏற்படும் போட்டி வாழ்க்கை முறை, முதலாளித்துவ அமைப்பு முறையின் மூலம் உருவாகியுள்ள பணம் ஒன்றே வாழ்க்கை என்று இயங்கும் மனநிலை, பக்கத்து வீட்டுக்காரர்களையே அந்நியராக நோக்கும் தனக்குள் மட்டுமே ஒடுங்கி கொள்ளும் நத்தைக் குணம், உலகம் முழுக்க நடக்கும் அக்கிரமங்களை அப்படியே கண் முன்னே காட்டும் மீடியாக்களின் வக்கிர போக்கு, Privacy என்பதே அருகிப் போகச் செய்யும் தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி என்பன எல்லாவற்றின் கூட்டு விளைவு தான் இந்த மன அழுத்தம்.

குடும்பத்துக்குள் கூட தனக்கென ஒரு வட்டம் இட்டுக் கொண்டு ஒரு புன்னகை கூட சிந்த மறுக்கும் எத்தனை மனிதர்களை நாங்கள் தினமும் பார்க்கின்றோம். ஒரு பிரச்சனை ஏற்பட்டால் மனம் விட்டு கதைக்க கூட ஆள் அற்று, அல்லது அப்படி ஆட்கள் இருப்பினும் அவர்களின் மீது நம்பிக்கை அற்று, அப்படி நம்பிக்கை இருப்பினும் 'நான்' எனும் அகந்தையை விட்டு வர விருப்பமின்றி தனித்துப் போய் கிடக்கும் சூழ்நிலையில் மன அழுத்தம் வராமல் என்ன வரும்?

மனிதன் ஒரு கூட்டு வாழ்க்கை முறையை விரும்பும் விலங்கு. பெற்றோர்கள், சகோதரங்கள், உறவுகள், சுற்றம், இனம் என்று முற்றிலும் தன்னை சுற்றி பலமான வலையை ஏற்படுத்தி, அதற்கும் அப்பால் கலாச்சாரம் எனும் பெரு வட்டம் இட்டு, அதனுள் நிம்மதியாக படுத்து உறங்கும் விலங்கு. இப்படித் தான் இந்த விலங்கு பல ஆயிரம் வருடங்களாக வாழ்கின்றது. அதன் மனம், சித்தம், ஊன், உடம்பு எல்லாமே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த இந்த வாழ்க்கை முறையில்தான் கட்டமைக்கப்பட்டது. ஆனால், இன்று இவை அனைத்துமே ஆட்டம் காணும் போது இந்த விலங்கின் மனம் பாதிப்புக்குள்ளாகாமல் என்ன செய்யும்? மன அழுத்ததில் இருந்து, மனிதரை வெட்டி வீதி வீதியாக வீசும் பயங்கர மனச் சிதைவு வரைக்கும் வராமல் என்ன செய்யும்?

காலகாலமாக, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இயற்கை உணவுகளையே உண்டு அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மூளையும் அதன் இயக்கமும் இன்று கடந்த ஒரு 50 வருடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை உணவுகளையும், fast food உணவுகளையும் உணவாக எடுக்கப்படும் போது முன்னை மாதிரியே எப்படி ஆரோக்கியமாக செயல்படும்?

இவற்றில் இருந்து ஓரளவுக்கேனும் வெளியே வந்து, ஒரு 4 நல்ல நண்பர்களை உருவாக்கி, எதனையும் ஒழிக்காமல் வெளிப்படையாக கதைத்து பழகும் குணத்தையும் பழக்கப்படுத்தி, சிரிப்பு வரும் போது சிரித்து, அழுகை வரும் போது அழுது, ஆத்திரம் வரும் போது ஆத்திரப் பட்டு வாழ்க்கை எந்த வழியில் எம்மை எதிர் கொள்கின்றதோ அதனை அப்படியே வாழ்ந்து கொண்டு இருக்கும் போது மன அழுத்தத்தில் இருந்து தப்பிப் பிழைக்கலாம்.

நன்றி நிழலி உங்கள் விரிவான பதிவுக்கு நேரம் எடுத்து விரிவாக எழுதியுள்ளீர்கள்...ஒரு பிரச்சனை ஏற்பட்டால் மனம் விட்டு கதைப்பதற்கு நம்பிக்கையான ஆட்கள் இன்னும் இந்த உலகத்தில் உள்ளனரா நிழலி?

எவ்வளவு நல்லவராக இருந்தாலும் தான்,தமக்கு மட்டும் என்று சுயநலமாய் இருப்போர்கள் இந்த உலகில் உள்ளனர்...அவர்களுக்கு பிரச்சனையான நேரம் அவர்களது மன ஆறுதலுக்கு நாங்கள் தேவைப்படுவோம் அப்போது நேரம்,காலம்,அதிகாலை,நள்ளிரவு என பார்க்காமல் அவர்களோடு கதைப்பதற்கு நாங்கள் தேவைப்பட்டு இருப்போம்.அந்த நேர‌ம் எல்லாவற்றையும் வந்து சொல்வார்கள்[வெளிப்படையாக கதைப்பார்கள்],ஆறுதல் தேடுவார்கள் அந்த நேரம் அட்வைஸ்,ஆறுதல் என சொல்லுவோம். நாங்கள் மட்டும் அவர்கள் போதும் வேறு நண்பர்கள் தேவையில்லை என்று இருப்போம் ஆனால் அவர்கள் தங்கள் நண்பர்கள் கூட்டத்தை விரிவு படுத்திக் கொண்டே போவார்கள் அது த‌ப்பில்லை ஆனால் தங்களுக்கு புதுப்,புது நண்பர்கள் கிடைத்ததும் பழைய நண்பர்களை கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மாய் கழட்டி விட‌ப் பார்ப்பார்கள்...என்னுடைய நண்பர் ஒருவர் இப்படித் தான் இருந்தார் ஒரு நாள் அவர் தனக்குத் ஊரில் தெரிந்த நண்பர் ஒருவர் இங்கு வந்திருக்கிறார் அவரோடு கதைக்கலாமோ எனக் கேட்டார் நான் ஆம் என்றேன் அந்த புது நண்பரோடு கதைக்க தொடங்கினார் அதற்கு பிறகு என்னோடு கதைப்பது குறைந்து போயிட்டுது கேட்டால் உங்களையும் பார்க்க தனது விட‌யங்களை அவரோடு பங்கிடுவது தனக்கு பிடித்திருக்குது என சொன்னார்.அத்தோடு அவரது விசயங்களை பங்கிடும் அளவிற்கு நான் இல்லையாம்.அவருக்கு ஒருதரும் இல்லாத நேரம் அவருடைய விடயங்களை பங்கிட நான் அவருக்கு ஏற்றவராய் இருந்திருக்கிறேன்...அவர்களது ஆறுதலுக்கு நாங்கள் தேவையாய் இருந்தோம் ஆனால் எங்களோட ஆறுதலுக்கு கதைத்துப் பேச‌ அவர்கள் வர‌ மாட்டார்கள்...இந்த காலத்தில் தூய்மையான நண்பர்கள் என்பது எல்லாம் பொய் வார்த்தை அவர்கள் எவ்வளவு நல்லவர்களாய் இருந்தாலும் சுயநலமே அதிகமிருக்குது...நல்ல நற்பு என்று ஒன்று இல்லை அல்லது என்னால் நல்ல நண்பர்களை அடைய முடியவில்லையோ தெரியாது...இதை எழுதும் போது கூட அழுதழுது தான் எழுதினேன்

முதலில் நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டும்...நாங்கள் மட்டும் வெளிப்படையாய் கதைத்தால் போதாது அவர்களும் வெளிப்படையாக கதைக்க வேண்டும்...நண்பர்கள் என்டால் ஒருத்தர் மட்டும் வெளிப்படையாக கதைத்து என்ன பிர‌யோச‌னம்?...முதலில் ஈகோவை விட்டு எறிய வேண்டும் ...ஆர‌ம்பத்தில் அவர்களிட‌ம் ஈகோ இருக்காது ஆனால் அவர்கள் வளர‌,வளர‌ ஈகோவும் சேர்ந்து வளரும்

உங்களுக்கு எது அவசியம் என்று படுகிறதோ, அதைத் துறக்க இக்கணமே நீங்கள் தயாராக இருந்தால் மன அழுத்தம் வரவே வராது..! :rolleyes:

நன்றி இசை வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து இருக்கிறீர்கள் யோசித்துப் பார்த்தால் உண்மை தான்

முதலில் நன்றி ரதிக்கு ,

உலகமெங்கும் எல்லா இனத்தவருக்கும் உள்ள பிரச்சனை என்று தள்ளி விடாது எம்மவரை மட்டும் குறி வைத்து பார்ப்பதுதான் நல்லது .

இரண்டு வருடங்களாக புது இடத்தில் வேலை ,அதற்கருகில் ஒரு செல்டர் .அதில் பலர் தமிழர்கள்.அன்றாடம் அவர்களை காண்கின்றேன் .தெருவில் எறிந்து விட்ட அடிக்கட்டை சிகரெட் பொறுக்குபவர்களும் ,கையில் பியர் கானுடன் ஏதோ தமக்குள் பேசிக்கொண்டு அலைபவர்களும் ,(போலிசுக்கு தெரியும் சுகமில்லாதவர் என்று அதனால் பியர் வைத்திருந்தாலும் பிடிப்பதில்லை ),சாமியார் வேஷம் போட்டவர்களும் ,என்னிடம் வந்து கடிதம் நீட்டியவர்களும் ,( தனது படத்தை ஒட்டி யாரோ ஒருவருக்கு காதல் கடிதம் ) இப்படி பல பல .(முன்னாள் எம்.பி *** மகனும் உட்பட .)

அன்றாடம் சந்திக்கின்றேன் இவர்களை ,இதைவிட குடும்பமாக சந்தோசமாக இருக்கின்றார்கள் என நாங்கள் நம்பும் அரைவாசி பெயர்களுக்கு மேல் டிபிறேசனில் தான் ..

மற்றவர்களுக்கு தீர்வு நாம் சொல்லவது மிக இலகு ஆனால் அவர் பிரச்சனைகள் அவர்களுக்குத்தான் தெரியும் .

எமக்கென இலாப நோக்கற்ற சமூகஅக்கறையுள்ள அமைப்புகளை உருவாக்காமல் வெறும் யுத்தம் என்று நின்றுவிட்டோம் .

நன்றி அர்ஜீன் அண்ணா நானும் இங்கு பலபேரைக் கண்டு இருக்கிறேன்...முள்ளி வாய்க்கால் பிரச்சனையால் மனநலம் பாதிக்கப் பட்ட ஒருவர் தன்னை ஊருக்கு அனுப்பச் சொல்லி[அவருக்கு விசா இல்லை] சிறிலங்கன் எம்பர்சி முன்னால் இருந்தார் பிற்கு காவல் துறை பிடித்துப் போய் விட்டது...தெரிந்த சிலர்,தெரியாத பலர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு எது அவசியம் என்று படுகிறதோ, அதைத் துறக்க இக்கணமே நீங்கள் தயாராக இருந்தால் மன அழுத்தம் வரவே வராது..! :rolleyes:

உண்மை மாமோய்..

ஒரு பெரியவிடையத்தை மிகவும் இலகுவாய் சொல்லியுள்ளீர்கள். அதிக எதிர்பார்ப்புக்கள்,ஆசைகள் தான் இவற்றுக்கெல்லாம் முக்கியகாரணம். என்னைப்பொறுத்தவரைக்கும் இது தான் எனக்கு எல்லாம் என்று எதுவுமே இல்லை. இது இல்லையென்றால் இன்னொன்று இல்லையென்றால் வேறொன்று அதனால் எதிர்பார்ப்புக்களும் இல்லை,விரக்தியும் இல்லை. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

இந்த காலத்தில் தூய்மையான நண்பர்கள் என்பது எல்லாம் பொய் வார்த்தை அவர்கள் எவ்வளவு நல்லவர்களாய் இருந்தாலும் சுயநலமே அதிகமிருக்குது...நல்ல நற்பு என்று ஒன்று இல்லை

எனக்கு யாழில் பல நண்பர்கள் இருந்தாலும் சில உண்மையான சுயநலமற்ற தூய்மையான நண்பர்கள் உள்ளார்கள். இந்த யாழுக்கு வந்ததிலேயே எனக்கு கிடைத்த மிக பெரும் பாக்கியம் அது என்று தான் கூறுவேன். அவர்களை இனம்காண எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் யாழில் நான் விட்ட தவறுகள்.

அவர்கள் இந்த திரியை பார்த்தால் அவர்களுக்கு இந்நேரம் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி, மன அழுத்தம் பல பேருக்கு உண்டு, கண்டுபிடிப்பது கஷ்டம், ஆரம்பத்தில் கண்டு பிடித்தால் நல்லது, அத்துடன் யாழில் இணைத்திருப்பது நல்லது, கன விஎப் இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை

email:

[size=4]Vitamin F......[/size]

[size=4]I loved this and wanted to share it with you...

Why do I have a variety of friends who are all so different in character? How can I get along with them all? I think that each one helps to bring out a "different" part of me.[/size]

[size=4]With one of them I am polite. With another I joke. with another I can be a bit naughty ..[/size]

[size=4]I sit down and talk about serious matters with one. With another I laugh a lot. I listen to one friend's problems. Then I listen to another one's advice for me.[/size]

[size=4]My friends are like pieces of a jigsaw puzzle. When completed, they form a treasure box. A treasure of friends! They are my friends who understand me better than I understand myself.

They're friends who support me through good days and bad. [/size]

[size=4]Real Age doctors tell us that friends are good for our health.

Dr. Oz calls them Vitamin F (for Friends) and counts the benefits of friends as essential to our well being. Research shows that people in strong social circles have less risk of depression and terminal strokes.[/size]

[size=4]If you enjoy Vitamin F constantly you can be up to 30 years younger than your real age. The warmth of friendship stops stress and even in your most intense moments, it decreases the chance of a cardiac arrest or stroke by 50%.[/size]

[size=4]I'm so happy that I have a stock of Vitamin F![/size]

[size=4]In summary, we should value our friends and keep in touch with them. We should try to see the funny side of things and laugh together and pray for each other [/size][size=4]In the tough moments.[/size]

[size=4]Some of my friends are friends on line.[/size]

[size=4]I know I am part of theirs because their names appear on my computer screen every day and I feel blessed that they care as much for me as I care for them.[/size]

[size=4]If ever you don't see my name on your screen please remember that it is not because I have forgotten you but because something has happened to me.[/size]

[size=4]I know as we age we can not be on line forever but we are making the best of it while we still can. While there is breath in me I will always keep in touch and will not forsake you E[/size][size=4]ver.[/size]

நன்றி உடையார்...நல்லதொரு செய்தியை இணைத்திருக்கிறீர்கள்...நல்ல நண்பர்கள் கிடைக்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் :)

மன அழுத்தம் நீங்க 30 வழிகள்

tension-headaches.jpg?w=150&h=150&h=150

வெளியே தெரியாத வலி, சொல்லத் துடித்தாலும் சொல்ல விடாமல் தடுக்கிற தயக்கம், எந்தச் செயலையும் செய்ய விடாமல் சோர்ந்துபோகச் செய்யும் மன உளைச்சல் ஆகியவை மன அழுத்தத்தின் அடித்தளங்களும் அறிகுறிகளும் ஆகும்..வாழ்வின் போக்கு பிடிபடும் வரையில் அழுத்தங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பலரும் ஆடிப்போய் விடுகிறார்கள். செய்த செயல் ஒன்றிற்கு எதிர்பார்த்த விளைவு ஏற்படாத போதும், எதிர்பாராத எதிர் விளைவுகள் ஏற்படும்போதும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

சிகிச்சை தேவைப்படும் அளவு மன அழுத்தத்தை முற்ற விடுபவர்களுக்கு சிகிச்சையே தீர்வு. ஆனால் அன்றாட வாழ்வில் நிகழும் சம்பவங்களால் ஏற்படும் பின்னடைவுகள் – மன அழுத்தங்கள் ஆகியவற்றை சரி செய்ய உலகெங்கும் உள்ள மனவியல் நிபுணர்கள் சில வழிமுறைகளைக் கண்டறிந்துள்ளனர்.

பல்வேறு சூழல்களில் பரிசோதிக்கப்பட்டு பலன் தருபவை என்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்த வழிமுறைகள், மன அழுத்தத்திலிருந்து உடனடி விடுதலை தருவதுடன் அடுத்த படிநிலை நோக்கி நகர்வதற்கும் கை கொடுக்கின்றன.

மனச்சோர்வைவிட மன அழுத்தம் எளிதில் கையாளக்கூடியது என்பதை மறந்துவிடக்கூடாது.

இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். ஆனால் மன அழுத்தத்திற்கென்று குறிப்பிட்ட காரணங்கள் உண்டு. காரணங்களைக் கண்டறிய முடிகிறபோது தீர்வைக் கண்டடைவதும் எளிது.

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணம் தரக்கூடிய சில பயிற்சி முறைகள், நீண்டகால நிவாரணத்திற்குரிய பயிற்சிமுறைகள் – இரண்டையுமே மனவியல் நிபுணர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது பார்க்கலாம்.

ஆழ்ந்த சுவாசம்:

கீழை நாடுகள், மேலை நாடுகள் இரண்டுமே ஒப்புக்கொள்கிற உத்தி இது. ஆழ்ந்த சுவாசத்தின் மூலம் இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு அதிகரிப்பதால் உங்கள் தசைகள் தளர்வுநிலை அடைகின்றன. மனம் இயல்புநிலை அடைகின்றது. அடிவயிற்றில் கையை லேசாக அழுத்திக்கொண்டு ஆழமாக சுவாசிப்பதன் மூலம் அடிவயிற்றின் அசைவுகளையும், உடலும் மனமும் தளர்வு நிலை அடைவதையும் கண்கூடாக உணரலாம்.

காட்சிப்படுத்துங்கள்:

பூப்பூவாய்த் தூவும் வென்னீர் ‘ஷவரின் கீழ் கண்மூடி நிற்பது போலவும், உங்கள் அழுத்தங்களும் பதட்டங்களும் அடித்துக் கொண்டு போவது போலவும் மனதுக்குள் ஒரு காட்சியை வரைந்து பார்க்கச் சொல்கிறார்கள் மனவியல் நிபுணர்கள்.

அமைதியான இடமொன்றில் ஏகாந்தமாய் நீங்கள் கண்மூடிப் படுத்திருப்பது போன்ற காட்சியையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் அந்தக் காட்சியைத் துல்லியமாக உணர்வது அவசியம். அங்கு பார்வையில் படிகிற அம்சங்கள், கடற்கரையின் உப்பு வாசனை இவை அனைத்தையும் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மனஅழுத்தம் தீர விரல் அழுத்தம்:

உள்ளங்கைகளில், மற்ற கையின் கட்டைவிரலால் தொடர் அழுத்தம் தருவது தொடங்கி, முழுமையான மசாஜ் செய்துகொள்வது வரையிலான உடல் தளர்வு நிலை உத்திகள் மன அழுத்தத்தைப் போக்குகிற திறன் கொண்டவை.

புன்னகையின் சக்தி:

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் புன்னகைக்கிறீர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, புன்னகைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதும் உண்மை. நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து, பாதுகாப்பான உணர்வை மூளைக்கும் கொண்டு செல்லும் அற்புதம் ஒவ்வொரு புன்னகையின் போதும் நிகழ்கிறது என்கிறார் டாக்டர் கூப்பர். புன்னகையின் சக்தி புரியவேண்டுமா? புன்னகைத்துத்தான் பாருங்களேன்.

கடைவாய் – ஒரு ரகசியம்:

மனதில் உருவாகும் அழுத்தம் வந்து படிகிற இடங்களில் ஒன்று கடைவாய் இணைப்புகள். பற்களை இறுகக்கடித்து, காதுக்குக்கீழ் சுட்டுவிரலால் அழுத்திக் கொண்டு, நீளமாக மூச்சிழுப்பதும், வாயைத் திறந்தபடி காற்றை வெளியே விடுவதும், அழுத்தத்தின் சுவடுகளை உடலில் தங்காமல் வெளியேற்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கின்ற வழி.

மனம் சொல்லும் மந்திரம்:

நம்மை நாமே உற்சாகப் படுத்திக்கொள்ள ஆட்டோசஜஷன் முறைப்படி சில வாசகங்களை மனதுக்குள் உருவாக்கிக்கொள்வது மேலை நாட்டின் பாணி. நம்நாட்டில் அதற்குப் பஞ்சமே கிடையாது. “எல்லாம் செய்யக்கூடும்”, “நடப்பதெல்லாம் நன்மைக்கே” என்று எத்தனையோ வாசகங்கள், மனதுக்கு சக்திதரும். மந்திரங்களாய் உள்ளன. மனதுக்குள்ளேயே அவற்றைப் பத்து பதினைந்து முறைகள் சொல்லும்போது பெரிய அளவில் மாற்றங்கள் தெரியும்.

அடுத்தது என்ன…..?

மனஅழுத்தத்திற்கு ஆளாகிற பலரும் தன்னிரக்கத்தைத் தவிர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். “எனக்கேன் இது நிகழ்ந்தது? மற்றவர்களுக்கு இப்படி இல்லையே” என்கிற எண்ணங்கள் எழும்போது தன்னிரக்கம் நம் செயல் திறனை மேலும் பாதிக்கிறது. மாறாக, அடுத்தது என்ன?” என்ற அணுகுமுறையைக் கைக்கொள்கிற போது, செயல்படவேண்டும் என்ற தூண்டுதல் வேகம் பெறுகிறது.

எழுதிப்பாருங்கள்:

மனஅழுத்தத்தைத் தந்த சம்பவம், அதன் விளைவுகள், கையாள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றை ஒரு காகிதத்தில் எழுதுங்கள். மனதுக்குள்ளேயே பலவற்றையும் யோசிப்பதைவிட எழுதும்போது ஒரு புதிய தெளிவு பிறக்கிறது.

அந்தத்தெளிவே மன அழுத்தத்திலிருந்து விடுபடும் சக்தியைக் கொடுக்கிறது. தெளிவாக எழுதிப்பார்க்கும்போது தீர்வை நோக்கிப் பலஅடிகள் வைத்தது போன்ற மன நிறைவை எளிதில் எட்டமுடிகிறது.

தடாலடிகளைத் தள்ளிப்போடுங்கள்:

அழுத்தம் கொடுக்கும் பதட்டம் காரணமாக தடாலடியாய் சில தவறான முடிவுகளை எடுக்கக் தோன்றும். அந்த நேரப் பதட்டத்தில் எது தவறு எது சரி என்று சிந்திக்காமல் செயல்படுவது சேதங்களை வளர்க்கும். எனவே, மனம் பதட்டமாக இருக்கும்போது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுங்கள். பத்துவரை மனதுக் குள்ளேயே எண்ணி விட்டு, சிறிது தூரம் உலவிவிட்டு, பதட்டம் தணியும்வரை பொறுமையாய் இருந்தால் ஆக்கபூர்வமான முடிவுகள் சாத்தியமாகும்.

காபி குடிப்பதைக் குறையுங்கள்:

காலை மாலை காபி மிகவும் சுகமானதுதான். ஆனால் மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் காபியைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ஜேம்ஸ் ட்யூக் என்கிற ஆய்வாளர்.

தூய குடிநீர், பழச்சாறுகள் போன்ற பானங்கள் புத்துணர்வு தருவதாகவும் மன அழுத்தத்தைப் போக்கும் சக்தி தருபவையாகவும் இருக்கும். தண்ணீரோ பழச்சாறோ பருகும் போது, அந்தத் திரவம் உங்களுக்குள் கலந்து புத்துணர்வு தருவதை உணர்வுப் பூர்வமாய் ஏற்பது மேலும் ஊக்கம் தரும்.

முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்:

எல்லோரையும் திருப்திப்படுத்தும் எண்ணம் எங்கேயோ நமக்குள் இருக்கிறது. இது வேண்டாத விஷயங்களையும் மேலே தூக்கில் போட்டுக் கொண்டு, மற்றவர்களிடம் சிரித்தாலும், நம் உள் வட்டத்துக்குள் எரிந்துவிழச் செய்கிறது. இந்தக் கூடுதல் பாரம், மன அழுத்தத்தை வளர்த்துவிடும் என்பதால், செய்யமுடியாதவற்றையும் செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.

நறுமணங்களின் நலம் பெறுங்கள்:

தீயவாசனையை அடையாளம் கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு மனிதர்கள் நறுமணங்களின் சுகத்தில் ஈடுபட்டு அனுபவிப்பதில்லை. நறுமணம் தரும் மலர்கள், எண்ணெய் வகைகள் ஆகியவற்றின் மூலம் மனதை மிக விரைவில் லேசாக்கிக் கொள்ளமுடியும்.

உங்கள் உஷ்ணமே உங்களுக்குதவும்:

டேவிட் சோபெல் என்ற மனநல மருத்துவர், மிக எளிதான வழியொன்றைச் சொல்கிறார். இரண்டு கைகளையும் பரபரவென்று தேய்த்து மூடிய கண்களுக்கு மேல் வைத்து, ஆழமாக சுவாசிக்கும்போதே அந்த உஷ்ணத்தையும் உள் வாங்குகிறபோது, புதிய உத்வேகம் உங்களுக்குள்ளேயே உருவாகும் என்கிறார் அவர்.

மூன்று முக்கிய இடங்கள்:

பெர்க்லேயில் உள்ள அக்யூ பிரஷர் மையத்தின் இயக்குநர் மைக்கேல் ரீட் கேச் மன அழுத்தம் வலுவிழந்து போக உடலிலுள்ள மூன்று இடங்களில் அழுத்தம் கொடுக்குமாறு அறிவுறுத்துகிறார்.

1. புருவங்களின் மத்தியில் அழுத்தம் தருதல்.

2. பின் கழுத்தில் அழுத்தம் தருதல்.

3. கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தருதல்.

அழுத்தத்தின் கனத்தை உணரும் அளவு அழுத்தலாம். அங்குள்ள நரம்பு மண்டலங்கள் செயல்பட்டு, மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் உந்துசக்தியை மூளைக்கு வழங்கும்.

கவலைக்கென்று நேரம் ஒதுக்குங்கள்:

மனதில் தோன்றும் கவலைகள் எல்லா நேரமும் உங்களை அரித்தெடுப்பதை அனுமதிக்காதிருக்க வழி உண்டு. கவலைகள் என்னவென்று பார்க்க ஒரு நேரம் ஒதுக்குவது, கால்மணி நேரம் என்று வைத்துக்கொண்டால், அந்தக் கால் மணி நேரமும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டியதில்லை. கவலைகளை ஆராய்ந்து அவற்றை உங்கள் கட்டுக்குள் கொண்டு வரத்தான் அந்த நேரம் .

நொறுக்குத் தீனி நொறுக்குங்கள்:

கார்போஹைட்ரேட் கொண்ட நொறுக்குத் தீனியை நொறுக்கினால் அதிலிருந்து செரிடானின் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்று ஆய்வாளர்கள்

சொல்கிறார்கள்.

வைட்டமின் வேண்டும்:

வைட்டமின் பி, மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்களை சிறிதளவு சேர்த்துக்கொண்டே வருபவர்கள் அவ்வளவு எளிதாக மன அழுத்தத்திற்கு ஆட்பட மாட்டார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அடையாளம் என்ன?

மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.

ஆகாயம் பாருங்கள்:

அடைந்துகிடக்கும் உணர்வுகளை விடுவிக்கும் சக்தி திறந்தவெளிக்கு இருக்கிறது. அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்து, ஆகாயத்தை, அலையலையாய்ப் போகும் மேகங்களைப் பார்ப்பது பயன்தரும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.

நடைப்பயிற்சி நலம் தரும்:

நெஞ்சில் ஏதோ எண்ணங்கள் கனக்கத் தொடங்கிவிட்டால் கொஞ்சதூரம் நடந்துவருவது பயன்தரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். வெளியே உலவுவதற்கு நேரம் ஒத்துழைக்காத நிலையில் அலுவலகத்துக்குள் அங்குமிங்கும் உலவுவது இடைக்கால நிவாரணம் போன்றது.

வெந்நீர்க்குளியல்:

வெறுப்பாக இருந்தால் வெந்நீர்க் குளியல் போடுங்கள் என்கிறார் டாக்டர் வெஸ்டன். குளிக்கும் அளவு நிலைமையோ நேரமோ இல்லையென்றால் வெந்நீரில் கைகால்களையாவது கழுவுங்கள். இதம் செய்யும் ஆற்றல் வெந்நீருக்கு இருக்கிறது என்கிறார் அவர்.

இசையால் வசமாகும் இதயம்:

எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது மட்டுப்படுத்துவதோடு என்டார்ஃபின் பெருகவும் வழிவகுக்கிறது.

செல்லப் பிராணிகள்:

நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, இரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளது. முயன்று பாருங்கள்.

கவனம் குவியுங்கள்:

மனம் பதறுகிறபோது நுணுக்கமான விஷயங்களை நோக்கிக் குவியாமல் அலைபாயத் தொடங்கும். அப்போதெல்லாம், ஒரு சின்ன விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் முழு கவனத்தை செலுத்துங்கள். ஒரு சிறு பென்சிலாகக் கூட இருக்கலாம். அதன் அளவு, வடிவம், வண்ணம், கூர்மை என்று அனைத்தையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்குங்கள். உங்கள் மனம் இயல்பு நிலை அடைவதை உணர்வீர்கள்.

நண்பர்களை அழையுங்கள்:

மனதுக்கு நெருக்கமாக நீங்கள் உணரும் ஒருவரை அழையுங்கள். அவரிடம் உங்கள் சிக்கலைப் பற்றிப் பேசினாலும் சரி, பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் சரி. அந்த அன்பான குரலில் ஆதரவை உணர்வீர்கள்.

வஜ்ராசனத்தின் வல்லமை:

மன அழுத்தம் மாறுவதற்கு வஜ்ராசனத்தில் அமருங்கள் என்று சொல்பவர்கள் நம் ஊர் யோகக்கலை வல்லுநர்கள் மட்டுமல்ல. நியூயார்க்கில் உள்ள எக்யூனாக்ஸ் ஃபிட்னஸ் சென்டரின் இயக்குநர் மோலி ஃபாக்ஸ் கூடத்தான்.

குழந்தைபோல் மண்டியிட்டு கண்மூடி குதிகாலின் மீது சிறிது நேரம் அமருங்கள். அதுதான் வஜ்ராசனம். மெல்லக் குனிந்து முன் நெற்றியை நிலத்தில் பதியுங்கள். இதையே சில தடவைகள் செய்யுங்கள்.(இதை இஸ்லாமியர்கள் தங்களின் ஒவ்வொரு தொழுகைகளிலும் க‌டைப்பிடிக்கிறார்கள்)

பிரார்த்தனை:

மனமுருகும் பிரார்த்தனை, மன ஒருமை கொண்டு செய்யும் தியானம் இவையெல்லாம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிற வல்லமை கொண்டவை.

நிமிர்ந்து அமருங்கள்:

சோர்வு வரும்போது சுருண்டு படுக்கத்தான் மனது சொல்லும். முதுகுத்தண்டை நிமிர்த்தி நேராக, ஜோராக உட்காரும்போது இரத்த ஓட்டம் நன்கு நிகழ்ந்து உங்கள் சக்தியைப் பெருக்கும்.

தாவரங்களோடு சிறிது நேரம்:

பேச முடியாத, பார்க்க முடியாத தாவரங்களிடம் ஜீவசக்தி நிரம்பி வழிகிறது. ஒரு செடியுடனோ மரத்துடனோ நெருக்கமாக சிறிது நேரத்தை செலவிடுங்கள். அழுத்தம் அகல்வதை உணர்வீர்கள்.

http://shuhaibmh.wor...ீங்க-30-வழிகள்/

நன்றி நுணா நல்லதொரு ஆக்கத்தை இணைத்துள்ளீர்கள்...மன அழுத்தத்தில் இருக்கும் போது வேறு எதுவும் செய்ய மூளை விடாது பேசாமல் குந்தி இருந்து கொண்டு யோசிக்கத் தான் மனம் சொல்லும்...நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது நல்லது என்று இப் பதிவில் சொல்லப்பட்டு இருக்குது வேறு யாராவது இது பற்றி தெரிந்தால் எழுதுங்கள்...மன அழுத்தத்தில் இருக்கும் போது எப்படி மனதை ஒரு நிலைப்படுத்தி தியானம் செய்ய முடியும் என்று தெரியவில்லை?

கிழிஞ்சுது :rolleyes: உது இன்னும் கூட்டுறத்துக்குரிய வழி. மற்றும்படி நல்லதோர் விடையத்தை தொட்டு இருகிறீர்கள்.வாழத்துக்கள் ரதி.

நன்றி சஜீவன் வருகைக்கு நீங்கள் சொல்வதும் உண்மை தான்...இங்கு அநேக குடும்பங்களில் பிர‌ச்ச‌னை வர‌க் கார‌ணம் சொந்த,பந்தம் தான்

Link to comment
Share on other sites

மன அழுத்தம் யாருக்கு இல்லை ரதி? முடிந்தளவு நாங்களே தான் எங்களை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்...

உறவினர்/ நண்பர்களிலிருந்து இருந்து உங்களை நன்கு புரிந்து கொண்டவர்களை/ நம்பிக்கையுள்ளவர்களை மட்டும் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.. (வேற்று இனத்தவரையும் நட்புப் பட்டியலில் சேர்ப்பது நல்லது) இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது positive thoughts/ thinking உள்ளவர்களாக இருக்கவேண்டும்.. (சும்மா தொண தொணத்துக் கொண்டு இருப்பவர்களைக் காய் வெட்டிவிடுவது நல்லது..)

வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்காமல், வெளியே போய் வாருங்கள். நண்பர்களுக்கு நேரம் வசதி இல்லையா.. நீங்கள் எடுத்த முயற்சியை பின்போடாதீர்கள்.. உங்கள் மேல் நீங்களே அதிக சுமையைக் அழுத்தாதீர்கள்..

குறைந்தது 7 மணிநேர நித்திரை தேவை

இங்கே குளிர் தொடங்கினாலும், தினமும் கொஞ்ச நேரம் என்றாலும் வெளியில் போய் நடந்து வரவேண்டும்..

தினமும் உடற்ப்பயிற்சி செய்யுங்கள் (தினமும் 10 நிமிடங்கள் நடப்பதால் 2 மணிநேரம் உங்கள் மனநிலை சீராகும் என்கிறார்கள்..) உங்களால் அது முடியும் என்னும் போது தூரத்தை அதிகரிக்கலாம்.

சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.. விற்றமின் B குறைந்தால், உதாரணமாக folic acid and B-12 குறைந்தால் மன அழுத்தத்தை உருவாக்கும்.. அதனால், புளிப்புள்ள பழங்கள், பச்சை இலைவகையான மரக்கறிகள், பீன்ஸ், கோழி, முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். omega 3 மீன் எண்ணெய்/ குளிசை போன்றவையும் நல்லது.

இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், பின்னேரத்தில் கோப்பியைத் தவிர்த்து, horlicks, camomile tea போன்றவர்டைக் குடிக்கலாம்.. அதோடு பின்னேரத்தில் 1km தூரம் நடத்தால் உடல் களைப்பில் நித்திரை தானாக வரும்..

(வீட்டில் குழந்தைகள் உள்ளவர்களும் குழந்தைகளை சாட்டுச் சொல்லியும், வேலைக்குப் போவோர் வேலைப் பளுவைக் குறைசொல்லி இருக்கும் நிலையை இன்னும் மோசப்படுத்தாமல், அவர்களாகவே தான் தமது முன்னேற்றத்திற்கு நேரத்தை ஒதுக்கி செயல்பட வேண்டும், இல்லாவிட்டால் அதனால் வீட்டில் உள்ள மற்றவர்களையும் முக்கியம் குழந்தைகளையும் பாதிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து!)

மேலும் சில இணைப்புகள் இணையத்தில் தேடியபோது கிடைத்தவை..

http://www.helpguide...ession_tips.htm

http://www.dumblittl...depression.html

http://www.mind.org....CFUXHtAod9CcA_w

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.