Jump to content

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டொராண்டோவில் புதிதாக தொடங்கும் ஒரு பத்திரிக்கைக்கு அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நேற்றுத்தான் இலங்கையில் நடக்கும் உலக கோப்பை 20 twenty பற்றி ஒரு கட்டுரை எழுதினேன் .அப்போது தோன்றியது இந்த எண்ணம்.

யாரும் இங்கு ஆட்செபிக்காவிட்டால் ஒரு அட்டவணை தயாரித்து போட்டியை நான் வைக்கின்றேன் .

யாருக்கும் ஆட்சேபனை கிடையாது என நினைக்கின்றேன் . ஆனால் ........................

Link to comment
Share on other sites

  • Replies 877
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் கட்டாயம் பங்கு பற்றுவேன் அண்ணா...என்ன பரிசு தருவீங்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கட்டாயம் பங்கு பற்றுவேன் அண்ணா...என்ன பரிசு தருவீங்கள் :D

நானும் போட்டில கலந்து கொள்ளப் போறேன் ஆனால் எனக்கு பரிசு முக்கியம் இல்லை..நான் முதல் இடம் பிடிக்கனும் அது தான் என்ர கொள்கை lol :lol:.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]20- 20 உலக கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெறும்: பிளெமிங்[/size]

உலக கிண்ண டுவென்டி- 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவருமான ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், உலக கிண்ண டுவென்டி- 20 போட்டியில் பங்கேற்கும் அணிகளில் மேற்கிந்திய தீவுகள் சிறப்பாக உள்ளது.

அந்த அணியை வெல்வது கடினம். கெய்ல், பொல்லார்டு, நரேன், பிராவோ ஆகியோர் அணிக்கு பலமாக உள்ளனர்.

இந்தியாவுக்கு துடுப்பாட்ட வரிசை சாதகமாக உள்ளது. ஆனால் பந்துவீச்சில் மிகப்பெரிய ஓட்டை உள்ளது. டோனி நல்ல அணித்தலைவராக செயல்பட்டு வருகிறார் என்றார். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 தரவரிசை வெளியீடு: அவுஸ்திரேலியாவுக்கு பின்னடைவு

சர்வதேச டி20 போட்டிக்கான அடிப்படையில் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா 130 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 2வது இடத்திலும், இலங்கை 3வது இடத்திலும், பாகிஸ்தான் 4வது இடத்திலும், இந்தியா 5வது இடத்திலும் உள்ளன.

மேற்கிந்திய தீவுகள் 6வது இடத்திலும், நியூசிலாந்து 7வது இடத்திலும், வங்கதேசம் 8வது இடத்திலும் உள்ளன.

இதில் அவுஸ்திரேலியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கெதிரான இரண்டு டி20 போட்டியிலும் தோல்வியுற்றதால் அவுஸ்திரேலியா அணி 85 புள்ளிகளுடன் 9வது இடத்திலிருந்து 10வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

அயர்லாந்து அணி 88 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வெல்லும்: ஸ்ரீகாந்த்

இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கிண்ணத்தை கடந்த ஆண்டைப் போல வெல்லும் என்று இந்திய அணியின் தெரிவுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

தெரிவுக் குழுத் தலைவரான ஸ்ரீகாந்தின் பதவி காலம் வருகிற 27ம் திகதி முடிவடைகிறது.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், இலங்கையில் டி20 உலகக் கிண்ண தொடர் தொடங்க இன்னும் 8 நாட்கள் உள்ளது. இந்தியா வலுவான அணிகளில் ஒன்றாகும். ஆடும் 11 பேர் கொண்ட அணியை தெரிவு செய்வது அணி நிர்வாகத்தினருக்கு கடினமானதாகும்.

யாரை நீக்குவது என்று முடிவு செய்வது கடினமான காரியமாகும். டி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் திறன் இந்திய அணிக்கு உள்ளது. 100 கோடி மக்களின் பிரார்த்தனை 2011ம் ஆண்டு போல் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்ல உதவிகரமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

உலகக் கிண்ண போட்டி முடியும் போது நான் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன்.

தெரிவு குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்கையில் நாங்கள் எல்லோரும் கனவு மட்டுமின்றி இலக்கை வைத்து இருந்தோம் என்றும் அதேபோல் 2011ம் ஆண்டில் இந்திய அணி கிண்ணத்தை வென்று அசத்தியது எனவும் கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடந்த விளையாட்டில் இந்தியா அதிர்ச்சி தோல்வி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல்., அனுபவம் கைகொடுக்கும் * டேரன் சமி நம்பிக்கை

கொழும்பு:""ஐ.பி.எல்., போட்டியில் விளையாடிய அனுபவம் "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சாதிக்க கைகொடுக்கும்,'' என, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி நம்பிக்கை தெரிவித்தார்.

நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் விளையாட டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே இலங்கை சென்றது. கடந்த 1975, 79ல் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2004ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வென்றது. அதன்பின் ஐ.சி.சி., நடத்திய மிகப் பெரிய தொடர்களில் சாதித்தது கிடையாது. கடந்த 2007ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2009ல் அரையிறுதி வரை சென்றது. கடந்த 2010ல் "சூப்பர்-8' சுற்று வரை முன்னேறியது.

இம்முறை கோப்பை வெல்லக்கூடிய தகுதி உள்ள அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒன்று. ஏனெனில் இந்த அணியில் உள்ள நிறைய வீரர்கள், இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடி உள்ளனர்.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி கூறியது: "டுவென்டி-20' தொடரை மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இம்முறை கோப்பை வெல்லக் கூடிய அணிகளில் எங்கள் அணியும் ஒன்று என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுவது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், இப்படி கருத்து தெரிவிப்பதன் மூலம் பைனலுக்கு முன்னேறி விட முடியாது. எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல், ஒவ்வொரு போட்டியிலும் மிகுந்த கவனமுடன் விளையாடி வெற்றி பெற வேண்டும்.

எங்கள் அணியில் இடம் பெற்றுள்ள நிறைய வீரர்கள் இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடி உள்ளனர். இந்த அனுபவம் உலக கோப்பை போட்டியில் சாதிக்க உதவும். கிறிஸ் கெய்ல், போலார்டு, டேரன் பிராவோ உள்ளிட்டோர் பேட்டிங்கில் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சுழலுக்கு சாதகமாக இலங்கை மைதானத்தில், இளம் வீரர் சுனில் நரைன் கைகொடுப்பார் என நம்பப்படுகிறது. ஐ.பி.எல்., போட்டியில் சாதித்த இவர்கள், தங்கள் நாட்டுக்காக "டுவென்டி-20' உலக கோப்பை தொடரிலும் அசத்த விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல்., அனுபவம் கைகொடுக்கும் * டேரன் சமி நம்பிக்கை

கொழும்பு:""ஐ.பி.எல்., போட்டியில் விளையாடிய அனுபவம் "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சாதிக்க கைகொடுக்கும்,'' என, வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி நம்பிக்கை தெரிவித்தார்.

நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் விளையாட டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே இலங்கை சென்றது. கடந்த 1975, 79ல் நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2004ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வென்றது. அதன்பின் ஐ.சி.சி., நடத்திய மிகப் பெரிய தொடர்களில் சாதித்தது கிடையாது. கடந்த 2007ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2009ல் அரையிறுதி வரை சென்றது. கடந்த 2010ல் "சூப்பர்-8' சுற்று வரை முன்னேறியது.

இம்முறை கோப்பை வெல்லக்கூடிய தகுதி உள்ள அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஒன்று. ஏனெனில் இந்த அணியில் உள்ள நிறைய வீரர்கள், இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடி உள்ளனர்.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி கூறியது: "டுவென்டி-20' தொடரை மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இம்முறை கோப்பை வெல்லக் கூடிய அணிகளில் எங்கள் அணியும் ஒன்று என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுவது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், இப்படி கருத்து தெரிவிப்பதன் மூலம் பைனலுக்கு முன்னேறி விட முடியாது. எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல், ஒவ்வொரு போட்டியிலும் மிகுந்த கவனமுடன் விளையாடி வெற்றி பெற வேண்டும்.

எங்கள் அணியில் இடம் பெற்றுள்ள நிறைய வீரர்கள் இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., தொடரில் விளையாடி உள்ளனர். இந்த அனுபவம் உலக கோப்பை போட்டியில் சாதிக்க உதவும். கிறிஸ் கெய்ல், போலார்டு, டேரன் பிராவோ உள்ளிட்டோர் பேட்டிங்கில் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சுழலுக்கு சாதகமாக இலங்கை மைதானத்தில், இளம் வீரர் சுனில் நரைன் கைகொடுப்பார் என நம்பப்படுகிறது. ஐ.பி.எல்., போட்டியில் சாதித்த இவர்கள், தங்கள் நாட்டுக்காக "டுவென்டி-20' உலக கோப்பை தொடரிலும் அசத்த விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"டுவென்டி-20' உலக கோப்பை கிடைக்குமா! * என்ன சொல்கிறார் தோனி

கொழும்பு:"" ஒருநாள் போட்டியில் இந்தியா தான் உலக சாம்பியன். இதே போல 20 ஓவர் உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்படுவது மிகவும் முக்கியம். அணியின் இளம் வீரர்கள் சாதிக்க காத்திருப்பதால், மீண்டும் "டுவென்டி-20' உலக கோப்பையை கைப்பற்றுவோம்,''என, இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.

உலக கோப்பை "டுவென்டி-20' தொடர் இலங்கையில் செப்., 18 முதல் அக்., 7 வரை நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை (செப்., 19) சந்திக்கிறது. கடந்த 2007ல் "டுவென்டி-20' உலக கோப்பை வென்ற இந்திய அணி, மீண்டும் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:

டெஸ்ட் போட்டிகளில் இருந்து "டுவென்டி-20' ஆட்டத்துக்கு ஏற்ப, திடீரென மாறுவது சிரமம் தான். ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் "வைடாக' பந்து வீசினால் உதிரியாக அதிக ரன்கள் போகாது. ஆனால், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' எனில் "ஆப் அல்லது லெக் ஸ்டம்பில்' இருந்து சற்று விலகிச் சென்றாலும் "வைடாகி' விடும்.

அதேநேரம், தொழில் ரீதியிலான கிரிக்கெட் வீரர்களான நாங்கள் விரைவில் "அட்ஜஸ்ட்' செய்து கொள்வோம். இந்திய வீரர் சேவக், மூன்று வகை கிரிக்கெட்டிலும் எப்போதும் அசத்தும் திறமை பெற்றுள்ளார்.

வேறுபடுத்த நேரமில்லை:

தற்போது, 50 ஓவர் போட்டியில் நாங்கள் தான் உலக சாம்பியன். எங்களுக்கு இந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் முக்கியமானது. இதனால், டெஸ்ட், ஒருநாள் என்று வேறுபடுத்தி பார்த்துக் கொண்டிருக்க நேரமில்லை. இத்தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்ல முயற்சிப்போம்.

அணியின் "பேட்டிங் ஆர்டர்' பலமாக உள்ளது. தவிர, "டாப்' பேட்ஸ்மேன்கள் சிலர், "பார்ட்-டைம்' பவுலராவும் சிறப்பாக செயல்படுகின்றனர். இது "டுவென்டி-20' கிரிக்கெட்டுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

சாம்பியன் வீரர்:

தேர்வாளர்கள் உணர்ச்சி வசப்பட்டு அணியில் யுவராஜ் சிங்கை சேர்த்து விட்டனர் என்ற கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், இது தேர்வாளர்கள் பிரச்னை. ஆனால், "மேட்ச் வின்னர்' மற்றும் சாம்பியன் வீரரான இவர், இடம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி. "டுவென்டி-20' அணியில் ஐந்தாவது பவுலர் இடம் பெற முடியாத நிலையில், யுவராஜ் வருகை இதை சமன் செய்துள்ளது.

ஏனெனில், இந்திய அணியின் சரியான "ஆல்-ரவுண்டர்கள்' இல்லை. வேறு வழியில்லாததால் பேட்ஸ்மேன்களான "பார்ட்-டைம்' பவுலர்களை நம்ப வேண்டியதுள்ளது. விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, ரெய்னா வரிசையில் யுவராஜ் சிங்கும் இதில் இடம் பெற்றுவிட்டார். இதில் ஒவ்வொருவரும் ஒரு ஓவர் வீசினால் கூட, ஐந்தாவது பவுலர் குறை நீங்கிவிடும்.

மாறிய ஆடுகளம்:

கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் ஆடுகளங்கள் அதிகமாக மாறிவிட்டது. 2005ல் வந்த போது இருந்ததை விட, இப்போது ஏகப்பட்ட மாற்றங்கள் உள்ளன. சமீபத்திய இலங்கை தொடரில் சுழலுக்கு ஆடுகளங்கள் ஒத்துழைக்கவில்லை. உலக கோப்பை தொடரில் சில மைதானங்களில் மட்டும் போட்டி நடக்கிறது.

இதனால், ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக மாறும் என நம்புகிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப, போட்டியில் திட்டமிட்டுக் கொள்வோம். சர்வதேச கிரிக்கெட் தொடரில் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

இவ்வாறு தோனி கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:unsure:அப்கானிஸ்தான் கப்டனுக்கு பெரிசா ஆங்கிலம் தெரியாது.... :unsure:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசி பார்க்கும் இந்திய அணி! * உலக கோப்பைக்கான உடையில் மாற்றமில்லை

மும்பை:இந்திய அணி 2011ல் நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அணிந்த அதே ராசியான உடையில் தற்போதைய "டுவென்டி-20' உலக கோப்பை தொடரிலும் களமிறங்க உள்ளனர். புதிதாக வடிவமைக்கப்பட்ட "டி-சர்ட்டை' நிராகரித்து விட்டனர்.

இலங்கையில் நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை, செப்., 18 முதல் அக்., 7 வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கான, புதிய "டி சர்ட்' சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. நீல நிறத்தினால உடையில், இடது புறம் காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறத்திலான தேசிய கோடி போல சேர்க்கப்பட்டுள்ளது. நடுவில் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) முத்திரை உள்ளது. இதன் மேல், 1983, 2007, 2011 ல் உலக கோப்பை வென்றதை குறிக்கும் வகையில், தங்க நிறத்தில் மூன்று நட்சத்திரங்கள் இருந்தன.

தோனி விளக்கம்:

அப்போது கேப்டன் தோனி கூறுகையில்,"" வீரர்கள் வெள்ளை நிற ஆடையில் விளையாடுவதை "டிவி'யில் பார்த்தால் அது டெஸ்ட் போட்டி. நீல நிறம் என்றால் ஒருநாள் போட்டி என்று புரிந்து கொள்வோம். தற்போதுள்ள "டி சர்ட்டை' பார்த்தவுடன் "டுவென்டி-20' போட்டி என தெரிந்து கொள்ளும் நிலை ஏற்படும்,'' என்றார்.

மாறியது ஏனோ:

ஆனால், ஒரே மாதத்தில் பி.சி.சி.ஐ., எண்ணம் மாறிவிட்டது. 2011ல் தோனியின் அணி உலக கோப்பை வென்றபோது அணிந்திருந்த <சீருடை, இலங்கையிலும் தொடரும் என, பி.சி.சி.ஐ., தெரிவித்து விட்டது. இதனால் தான், சென்னையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான "டுவென்டி-20' போட்டியில் புதிய "டி சர்ட்டை' அணியவில்லையாம்.

பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,"" பழைய உடை ராசியானது. இந்திய அணிக்கு மீண்டும் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்,''என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"டுவென்டி-20'உலக கோப்பை பயிற்சியில் இலங்கை வெற்றி

கொழும்பு:உலக கோப்பை (டுவென்டி-20) பயிற்சி போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.

இலங்கையில், நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் செப். 18ல் துவங்குகிறது. இதற்கு முன், ஒவ்வொரு அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன.

கொழும்புவில் நேற்று நடந்த பயிற்சி போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல், கேப்டன் டேரன் சமி விளையாடவில்லை. கேப்டனாக டுவைன் பிராவோ களமிறங்கினார். "டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் மகிளா ஜெயவர்தனா, "பீல்டிங்' தேர்வு செய்தார்.

அபார பந்துவீச்சு:

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிம்மன்ஸ் (2), டுவைன் ஸ்மித் (5) மோசமான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த டுவைன் பிராவோ (14) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ஜான்சன் சார்லஸ் (30), டேரன் பிராவோ (29), போலார்டு (28*) ஓரளவு கைகொடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது.

சூப்பர் ஜோடி:

சுலப இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு தில்ஷன் முனவீரா (24) சுமாரான துவக்கம் கொடுத்தார். பின் இணைந்த தில்ஷன், ஜெயவர்தனா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். இலங்கை அணி 15.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெயவர்தனா (57), தில்ஷன் (50) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஜிம்பாப்வே தோல்வி:

மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் "டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் பிரண்டன் டெய்லர், "பீல்டிங்' தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு நியால் ஓ'பிரையன் (62), கெவின் ஓ'பிரையன் (30*), ஜாய்சி (29) கைகொடுத்தனர். அயர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு மசகட்சா (44), எர்வின் (24) ஓரளவு ஆறுதல் அளித்தனர். மற்றவர்கள் ஏமாற்ற, ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 127 ரன்கள் மட்டும் எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அணிக்கு அக்னிபரீட்சை: அஷ்வின்

கொழும்பு:""கடந்த 2007ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு பின் நடந்த இரு தொடர்களில் சோபிக்கவில்லை. இம்முறை நம்பிக்கையுடன் செயல்பட்டு கோப்பை வெல்வது மிகவும் முக்கியமானது,'' என, அஷ்வின் தெரிவித்தார்.

இலங்கையில், நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் செப். 18ல் துவங்குகிறது. கடந்த 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. அதன்பின் 2009, 2010ல் நடந்த தொடர்களில் ஏமாற்றியது. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது. இதனால் ஐந்து ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தோனி தலைமையிலான இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் கூறியது: கடந்த 2007ல் உலக கோப்பை வென்ற இந்திய அணி, அதன்பின் நடந்த இரண்டு தொடர்களில் ஏமாற்றியது. இம்முறை நம்பிக்கையுடன் செயல்பட்டு கோப்பை வெல்வது மிகவும் முக்கியமானது. சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. எனவே ஒவ்வொரு போட்டியிலும் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும்.

உலக கோப்பை வெல்ல 20 நாட்கள் போராட வேண்டும். இத்தொடருக்கு முன், இரண்டு பயிற்சி போட்டியில் விளையாட இருப்பது சாதகமான விஷயம். இதனால் இங்குள்ள தட்ப வெப்பநிலை, ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப தயார் செய்து கொள்ள முடியும். தொடர் துவங்க இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால், போதுமான பயிற்சி மேற்கொள்ள முடியும்.

இத்தொடர் இந்திய அணிக்கு முக்கியமானது. ஏனெனில் கடந்த ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் கண்ட மோசமான தோல்விக்கு, இத்தொடரில் கோப்பை வென்று ஆறுதல் தேடிக் கொள்ளலாம்.

சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, தற்போது "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. ஒரு வாரத்திற்கு முன், இலங்கையில் பயிற்சி மேற்கொண்டு வருவதன் மூலம், "டுவென்டி-20' போட்டிக்கேற்ப சிறப்பான முறையில் தயார் செய்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு அஷ்வின் கூறினார்.

இர்பான் பதான் ஆர்வம்

இந்திய "ஆல்-ரவுண்டர்' இர்பான் பதான் கூறுகையில், ""உலக கோப்பை (டுவென்டி-20) தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை (செப். 17) அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.

இந்தியா-இலங்கை மோதல்

"டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் இன்று இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்திய அணி, இப்பயிற்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து, வங்கதேசம்-ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான்-இலங்கை "ஏ' அணிகள் விளையாடுகின்றன.

கபில் கணிப்பு என்ன

கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறுகையில்,""இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பையை வெல்லும் என்று என் இதயம் சொல்கிறது. ஆனால், என் கிரிக்கெட் மூளையோ இது மிகவும் கடினம் என்று கணிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய "டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி, ஒரு ரன்னில் வெற்றியை அநியாயமாக கோட்டைவிட்டது. ஒரு மிகப் பெரும் தொடர் துவங்குவதற்கு முன் இப்படி சொதப்புவது சரியல்ல,''என்றார்.

இந்திய அணிக்கு அக்னிபரீட்சை: அஷ்வின்

கொழும்பு:""கடந்த 2007ல் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு பின் நடந்த இரு தொடர்களில் சோபிக்கவில்லை. இம்முறை நம்பிக்கையுடன் செயல்பட்டு கோப்பை வெல்வது மிகவும் முக்கியமானது,'' என, அஷ்வின் தெரிவித்தார்.

இலங்கையில், நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் செப். 18ல் துவங்குகிறது. கடந்த 2007ல் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. அதன்பின் 2009, 2010ல் நடந்த தொடர்களில் ஏமாற்றியது. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை (50 ஓவர்) தொடரில் இந்திய அணி கோப்பை வென்று சாதித்தது. இதனால் ஐந்து ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தோனி தலைமையிலான இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் கூறியது: கடந்த 2007ல் உலக கோப்பை வென்ற இந்திய அணி, அதன்பின் நடந்த இரண்டு தொடர்களில் ஏமாற்றியது. இம்முறை நம்பிக்கையுடன் செயல்பட்டு கோப்பை வெல்வது மிகவும் முக்கியமானது. சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. எனவே ஒவ்வொரு போட்டியிலும் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும்.

உலக கோப்பை வெல்ல 20 நாட்கள் போராட வேண்டும். இத்தொடருக்கு முன், இரண்டு பயிற்சி போட்டியில் விளையாட இருப்பது சாதகமான விஷயம். இதனால் இங்குள்ள தட்ப வெப்பநிலை, ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப தயார் செய்து கொள்ள முடியும். தொடர் துவங்க இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால், போதுமான பயிற்சி மேற்கொள்ள முடியும்.

இத்தொடர் இந்திய அணிக்கு முக்கியமானது. ஏனெனில் கடந்த ஆண்டு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் கண்ட மோசமான தோல்விக்கு, இத்தொடரில் கோப்பை வென்று ஆறுதல் தேடிக் கொள்ளலாம்.

சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, தற்போது "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. ஒரு வாரத்திற்கு முன், இலங்கையில் பயிற்சி மேற்கொண்டு வருவதன் மூலம், "டுவென்டி-20' போட்டிக்கேற்ப சிறப்பான முறையில் தயார் செய்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு அஷ்வின் கூறினார்.

இர்பான் பதான் ஆர்வம்

இந்திய "ஆல்-ரவுண்டர்' இர்பான் பதான் கூறுகையில், ""உலக கோப்பை (டுவென்டி-20) தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை (செப். 17) அதிக எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும்,'' என்றார்.

இந்தியா-இலங்கை மோதல்

"டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகளில் இன்று இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்திய அணி, இப்பயிற்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து, வங்கதேசம்-ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான்-இலங்கை "ஏ' அணிகள் விளையாடுகின்றன.

கபில் கணிப்பு என்ன

கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கூறுகையில்,""இந்திய அணி "டுவென்டி-20' உலக கோப்பையை வெல்லும் என்று என் இதயம் சொல்கிறது. ஆனால், என் கிரிக்கெட் மூளையோ இது மிகவும் கடினம் என்று கணிக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய "டுவென்டி-20' போட்டியில் இந்திய அணி, ஒரு ரன்னில் வெற்றியை அநியாயமாக கோட்டைவிட்டது. ஒரு மிகப் பெரும் தொடர் துவங்குவதற்கு முன் இப்படி சொதப்புவது சரியல்ல,''என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் அப்கானிஸ்தானின் அகோர அடி

சிறிலங்கன் நைசினல் ரிமில் விளையாடினவையோடை விளையாடி 209ஒட்டம்

இதை யாராவது நம்புவினமா..அப்கானிஸ்தான் இப்படி விளையாடுறதை...

வாழ்க்க அப்கானிஸ்தான்.....

afhan.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கிண்ணத்தை வெல்வது யார்

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இம்முறை இலங்கையில் நடைபெற உள்ளது.

நான்காவது முறையாக நடத்தப்படும் இப்போட்டியில் 12 நாடுகள் பங்கேற்கின்றன. நாளை மறுநாள் தொடங்கி ஒக்டோபர் 7ம் திகதி முடியவுள்ள இத்தொடரின் கிண்ணத்தை வெல்வதற்கு அனைத்து நாடுகளும் ஆர்வத்தில் உள்ளன.

அனைத்து அணிகளும் இலங்கையை வந்தடைந்துள்ளன. நாடுகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இதுவரை நடந்து முடிந்த 3 டி20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி 2007ம் ஆண்டில் முதல் கிண்ணத்தை வென்றது. 2009ம் ஆண்டு பாகிஸ்தான் அணி கிண்ணத்தை வென்றது. 2010ம் ஆண்டில் இங்கிலாந்து அணி கிண்ணத்தை வென்று தற்போது நடப்பு சாம்பியனாக உள்ளது.

இத்தொடரில் 12 அணிகளில் ஆறு அணிகள் முக்கியமான அணிகளாக உள்ளன.

சாம்பியனான இங்கிலாந்து அணி, சக்தி வாய்ந்த மேற்கிந்திய தீவுகள், அசைக்க முடியாத சக்தியாக தென் ஆப்ரிக்க அணிகள் மற்றும் ஆசியாவின் முதல் மூன்று அணிகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் ஆகியவை ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக கோப்பை "டுவென்டி-20: இந்தியா தோல்வி

கொழும்பு: பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை "டுவென்டி-20 பயிற்சி போட்டியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

இலங்கையில், நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை துவங்குகிறது. இதற்கு முன், ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது இரண்டாவது பயிற்சி போட்டியில், பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதில் "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, "பேட்டிங் தேர்வு செய்தார்.

16 பந்துகளில் 10 ரன் எடுத்த காம்பிர் முதலில் அவுட்டானார். அடுத்த ஓவரில் சேவக்கும் (26 ரன்கள், 14 பந்து) கிளம்பினார். ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. விராத் கோஹ்லி (75), யுவராஜ் சிங் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹபீஸ் (38), இம்ரான் நாசிர் (13) ஓரளவு ரன்கள் சேர்த்தனர். ஜாம்ஷெத், அப்ரிதி, "டக் அவுட்டாகினர். கடைசி நேரத்தில் கம்ரான் அக்மல், சோயப் மாலிக் இணைந்து சிக்சர்களாக விளாச, பாகிஸ்தான் அணி, 19.1 ஓவரில் 186 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கிண்ணத்தொடரின் ஆய்வுக்குழுவில் மிஸ்பா உல் ஹக்

பாகிஸ்தான் அணியின் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் அணித்தலைவராகவும் செயற்பட்டு வந்த மிஸ்பா உல் ஹக், உலக டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்ட போது அணித்தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு அணியிலும் இடம் கிடைத்திருக்கவில்லை.

இந்நிலையில் இலங்கையில் நாளை தொடங்கவுள்ள உலக டி20 தொடரை ஒளிபரப்புச் செய்யவுள்ள பிரதான தொலைக்காட்சி நிறுவனத்தின் கிரிக்கெட் ஆய்விற்கான நிபுணர்கள் குழுவில் மிஸ்பா உல் ஹக் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு இது புதிய அனுபவமாக அமையவுள்ளதாகத் தெரிவித்த மிஸ்பா உல் ஹக், தனக்குச் சிறந்த வாய்ப்பொன்று கிடைத்ததாகவும் அதன் காரணமாக அதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தப் பணியில் ஈடுபடுவதற்கான அனுமதியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ்பா உல் ஹக் தவிர, ஏற்கனவே இங்கிலாந்து அணியால் நிராகரிக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் சர்ச்சைக்குரிய அதிரடித் துடுப்பாட்ட வீரர் கெவின் பீற்றர்சனும் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கிண்ணம்: முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்துமா இலங்கை

டி20 உலகக் கிண்ண தொடரில் இன்று நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

சொந்த மண்ணில் தொடரை வெற்றியுடன் துவக்க இலங்கை அணி காத்திருக்கிறது.

இலங்கை அணியைப் பொறுத்தவரை சொந்த மண்ணில் விளையாடுவதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கைகொடுக்கும்.

சமீபத்தில் இலங்கை பிறீமியர் லீக் தொடரில் விளையாடி இருப்பது அதிக நம்பிக்கை அளிக்கும். துடுப்பாட்டத்தில் டில்ஷன், சங்கக்காரா, அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன நம்பிக்கை அளிக்கின்றனர்.

சகலதுறை வீரர்களாக ஏஞ்சலா மேத்யூஸ், திசாரா பெரேரா சாதிக்கலாம். வேகத்தில் அசத்த லசித் மலிங்காவுடன், நுவன் குலசேகரா, ஷமிந்தா எரங்கா உள்ளனர்.

சுழலில் அஜந்தா மெண்டிஸ், ஜீவன் மெண்டிஸ், ரங்கன ஹேரத் கைகொடுக்கலாம். இவர்களை தவிர திரிமன்னே, டில்ஷன் முனவீரா, அகிலா தனன்ஜெயா, தினேஷ் சண்டிமால் கைகொடுக்கும் பட்சத்தில் சுலப வெற்றி பெறலாம்.

ஜிம்பாப்வே:

டி20 அரங்கில் ஜிம்பாப்வே அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. இதுவரை விளையாடிய 20 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 16 போட்டியில் தோல்வி, ஒரு போட்டி சமன் ஆனது.

உலகக் கிண்ண அரங்கில் விளையாடிய நான்கு போட்டியில் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றது. மூன்றில் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் மசகட்சா, அணித்தலைவர் பிரண்டன் டெய்லர், சிபாபா, சிகும்புரா ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பந்துவீச்சில் உட்சேயா, சிகும்புரா, பிரைஸ், ஜார்விஸ், கிரிமர், மபோபு ஆகியோர் அசத்தும் பட்சத்தில் ஓட்டங்களை தடுக்கலாம்.

ஜிம்பாப்வே அணி அதிக தோல்விகளை பெற்றிருந்த போதிலும், 2007ல் கேப்டவுனில் நடந்த உலகக் கிண்ண லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அலை ஏற்படுத்தியதை இலங்கை வீரர்கள் மறக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கிண்ணத்தை ஆசிய அணியே கைப்பற்றும்: சனத் ஜெயசூர்யா

இலங்கையில் இன்று தொடங்கவுள்ள டி20 உலகக் கிண்ண தொடரினை ஆசியாவைச் சேர்ந்த அணிகளுள் ஒன்றே கைப்பற்றும் என இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், டி20 உலகக் கிண்ணத் தொடர் கடுமையான போட்டித்தன்மை கொண்ட தொடராக அமையவுள்ளது. இத்தொடரில் பங்குபற்றுகின்ற அணிகளில் பல அணிகள் சரியான ஆரம்பத்தைப் பெற்றால் தொடரை வெற்றிகொள்ளும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இப்போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளதால், இங்குள்ள ஆடுகள நிலைமைகள், காலநிலைகள் ஆகியன ஆசிய அணிகளுக்கு அதிக வாய்ப்புக்களை வழங்குகிறது.

இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான வெற்றியாளராக இலங்கை, இந்தியா அல்லது பாகிஸ்தானாகவோ அமைவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது.

இம்மூன்று அணிகளும் பலமான டி20 அணிகளைக் கொண்டுள்ளது என்றும் முதலில் துடுப்பெடுத்தாடிய மிகச்சிறப்பான ஓட்டமொன்றைப் பெற்றால் இவ்வணிகளைத் தோற்கடிப்பது கடினமாக அமையும் எனவும் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டி20 உலகக் கிண்ண லீக் போட்டியிலிருந்தே இந்தியா அசத்தும்: ரோகித் சர்மா

இலங்கையில் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

இன்றைய முதல் லீக் போட்டியில் இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

நாளை நடைபெற உள்ள லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. லீக் போட்டிகளுக்கு முன்னதாக 2 பயிற்சி போட்டிகளில் இந்திய அணி கலந்து கொண்டது.

இதில் இலங்கைக்கெதிரான முதல் பயிற்சி போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, 2வது பயிற்சி போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் டி20 உலகக் கிண்ணத் தொடரின் லீக் போட்டிகளிலிருந்து, இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று நடுவரிசை துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், டி20 உலகக் கிண்ண தொடரின் லீக் போட்டிகளில் இருந்தே இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பாகிஸ்தான் அணிக்கெதிரான தோல்வி என்பது இந்திய அணி கடந்து வந்து மோசமான நாட்களில் ஒன்றாக கருதலாம். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கெதிரான முதல் லீக் போட்டியில் சிறப்பாக ஆடுவோம்.

இலங்கை சுற்றுப்பயணம் எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. எனவே துடுப்பாட்டம் மற்றும் உடற்தகுதியில் முன்னேற்றம் காண கடும் பயிற்சியில் ஈடுபட்டேன்.

தற்போது அதன் பலனை அடைந்து வருகிறேன். டி20 உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சி போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளது. எனவே லீக் சுற்று போட்டிகளில் இருந்து தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டியுள்ளது.

என்னை பொறுத்த வரை பார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கடும் உழைப்பை என்றும் கைவிட கூடாது. தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும். இந்திய அணியில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்ய முயற்சி செய்வேன் என்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி முதலில் களத் தடுப்பை தெரிவுசெய்துள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பாவே கப்டன் செய்த‌து பெரிய முட்டாள் தனம்

ரொஸ் வின் பன்னின கையோடை மட்டையை தெரிவு செய்து இருக்கலா.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.