Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

டெசோ அமைப்பின் அடுத்த மாநாட்டை அர்ஜெண்டினாவில் நடத்த திமுக திட்டம்?

Recommended Posts

karunanidhi_CI.jpg

தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான "டெசோ"வின் அடுத்த மாநாட்டை தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் நடத்தலாமா என்பது குறித்து திமுக ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில் கடந்த 12-ந் தேதி நடத்தப்பட்ட டெசோ மாநாட்டையொட்டி ஆய்வரங்கத்தில் வெளிநாட்டில் டெசோ மாநாட்டை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடு ஒன்றில் டெசோ மாநாட்டை நடத்துவதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்றும் திமுக கருதுவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆய்வரங்கில் கலந்து கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும் வெளிநாடு ஒன்றில் டெசோ மாநாட்டை நடத்துவது குறித்து கருத்தும் பெறப்பட்டிருக்கிறது

பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அர்ஜெண்டினா போன்ற ஒரு நாட்டில் நடத்தலாம் எனக் கூறியிருக்கின்றனர். டெசோ மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் சுபவீரபாண்டியனும் கூட இதனைக் கோடிட்டுக் காட்டுப் பேசினார். பன்னாட்டுப் பிரதிநிதிகள் அர்ஜெண்டினாவில் நடத்த ஆர்வம் காட்டுவதாகவும் சுப.வீரபாண்டியன் கூறியிருந்தார்.இந்நிலையில் அர்ஜெண்டினாவில் டெசோ மாநாட்டை நடத்துவது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகவும் அதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன.

http://www.globaltam...IN/article.aspx

Share this post


Link to post
Share on other sites

உள்ளூர்ல ஆளு கிடைக்க மாட்டேங்குதே . அர்ஜென்டினாவில நடத்தினா தான் தொல்லை இல்லாம இருக்கும் . ஐரோப்பா அமெரிக்கான்னா புலம்பெயர் புலிகள் வந்து தொல்லை பண்ணும் . என்ன இருந்தாலும் எங்க தலைவர் மூளையே மூளை தான்

Share this post


Link to post
Share on other sites
SUNDHAL    1,079

அங்க தான் நிறைய புலி இருக்கு :D

Share this post


Link to post
Share on other sites

உள்ளூர்ல ஆளு கிடைக்க மாட்டேங்குதே . அர்ஜென்டினாவில நடத்தினா தான் தொல்லை இல்லாம இருக்கும் . ஐரோப்பா அமெரிக்கான்னா புலம்பெயர் புலிகள் வந்து தொல்லை பண்ணும் . என்ன இருந்தாலும் எங்க தலைவர் மூளையே மூளை தான்

:lol: :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites
akootha    1,057

[size=4]உலகநாடு ஒன்றில் நடாத்துவது நல்லம், அது வாசிங்க்டன் இல்லை இலண்டன் என்றால் அதிக முக்கியத்துவம் கிடைக்கும். அதற்கு முதல் டெல்லியில் நடத்தவேண்டும். [/size]

Share this post


Link to post
Share on other sites
arjun    1,731

மரடோனா,மெஸ்சி எல்லாம் வருகின்றார்களா?

Share this post


Link to post
Share on other sites

ஆயென்ரீனா நல்ல தெரிவாக படவில்லை. அரசியல் மன மாற்றம் ஏற்படுத்த வாசிங்டன், லண்டன், டெல்கி நல்ல தெரிவு. மக்களை அழைக்க வேண்டுமாயின் ஐரோப்பா, நியு யோர்க், கனடா நல்ல தெரிவு. உடனடி உபயோகம் இருக்க வேண்டுமாயின் கொழும்பில் வைக்க வேண்டும்.

புலம் பெயர் மக்கள் மகாநாட்டை எதிர்த்தது, இதை வைத்து கருணாநிதி அரசியல் லாபம் தேடமுயலக்கூடாது என்பதாலேயே. அப்படி செய்யும் போது அதில் பலன் அடைவது டெல்கியும், கொழும்புமேதான். இதில் கேள்விக்கு இடமில்லாமல் மகாநாடு அரசியல் லாபத்திற்கவேதான் கூட்டப்பட்டது. நிச்சயமாக தமிழ் நாட்டுக்கு வெளியில் இந்த கூட்டம் நடந்திருந்தால் புலம் பெயர் மக்களின் எதிர்ப்பு இருந்திருக்காது. கூட்டத்தை திட்டமிடலில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் தலைவர்களின் பங்கு இருந்திருந்தால் புலம் பெயர் மக்களின் ஆதரவும் பெறப்பட்டிருக்கும். முன்னர் மனோகனேசன் கூறியிருந்த மாதிரி தமிழ்நாட்டு அகில தமிழ் கட்சிகளின் கூட்டமாயிருந்திருந்தால் இலங்கை,இந்தியா கலங்கியிருக்கும்.

இதில் கருணாநிதி, ஈழத்தமிழர்களின் தீர்வு விசையத்தில் தம்மை சம்பந்த படுத்த விரும்பும் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து அமெரிக்கா, நோர்வே, சுவீடன், போன்ற நாட்டுகளின் பிரதிநிதிகளையும் வரவழைத்திருந்தாராயின், டெல்கிக்கு ஒரு செய்தி சொல்லி இருக்க முடியும்.

மகாநாட்டால் கருணாநிதி டெல்கியின் காலடியில் விழுந்தளவுக்கு, டெல்கி இலகுவில் ஈழத்தமிழரின் நலன்களுக்கு கருணாநிதியிடம் வளைந்து கொடுக்கவில்லை. அதாவது இந்த சரணாகதி அரசியலை டெல்கியிடம் கருணாநிதி செய்ததால்தான் முள்ளிவாய்க்காலில் டெல்கி இரசாயனக்குண்டுகள் போடும் போது தான் உண்ணாவிரதநாடகமாடி டெல்கி செய்த போர்க்குற்றங்களை மறைக்க வேண்டிய நிலைக்கு டெல்கியால் காலின் கீழ் போட்டு மிதிக்கப்பட்டார். தமிழ் நாட்டின் அடிமை நிலையில் சிறிதளவு தன்னும் மற்றம் ஏற்பட்டது ஜெயலலிதா பதவி ஏற்ற பின்னர்தான். இப்போ இந்த மகாநாட்டை கண்டு டெல்கி பயந்ததில்லை. ஜெயலலிதாவை கண்டு டெல்கியின் மனதில் ஏற்பட்டிருந்த மெல்லிய பீதியும் மகாநாட்டின் பின் கலையத் தொடங்கியிருக்கும். ஜெயலலிதா இலங்கை பிரதிநிதிகள் வரும் போது தனக்கு அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப மத்திய அரசு ஒத்துத்தான் போகிறது. ஜெயலலிதா இலங்கை இராணுவத்தை தமிழ் நாட்டில் பயிற்றுவிக்க வேண்டாம் என்றால் மத்திய அரசு செவிமடுத்தேதான் ஆகிறது. ஆனால் ஈழம் என்ற தமிழ் சொல்லை மகாநாட்டில் பாவிக்க கருணாநிதி மத்திய அரசிடம் காலில் விழுந்துதான் அனுமதி பெறுகிறார். இந்த மகாநாட்டால் கருணாநிதி தமிழ்நாட்டில் இதுவரையில்அங்கே இருக்காத எதாவது புதிய உணர்வை ஏற்படுத்தி இருக்கிறாரோ இல்லையோ, ஆனால் மத்திய அரசை ஜெயலலிதா இடித்து இடித்துப் பெற்ற சிறிய இடைவெளியையும், மத்திய அரசிடம் மகாநாட்டில் தமிழ் பேச காலில் விழுந்து அனுமதி வாங்கி மத்திய அரசுக்கு திரும்பவும் விட்டுக் கொடுத்துவிட்டார் என்றே வைத்துக்கொள்ள வேண்டும். துணிச்சலாக "ஈழம்" என்ற வார்த்தையை பேசிவிட்டு ஒரு வழக்கை நடத்தி டெல்கியை வெல்ல திராணி இல்லாமல் எதற்காக இந்த மகாநாட்டை நடத்தினார்?

Share this post


Link to post
Share on other sites
SUNDHAL    1,079

மரடோனா,மெஸ்சி எல்லாம் வருகின்றார்களா?

ஆ மரடோனா வரமாட்டாராம் மடோனா வாரவாம் என்ன மாதிரி வாறிங்களா?

Share this post


Link to post
Share on other sites
akootha    1,057

[size=4]

இப்போ இந்த மகாநாட்டை கண்டு டெல்கி பயந்ததில்லை. ஜெயலலிதாவை கண்டு டெல்கியின் மனதில் ஏற்பட்டிருந்த மெல்லிய பீதியும் மகாநாட்டின் பின் கலையத் தொடங்கியிருக்கும்.[/size][size=4]
[/size]

[size=4]நல்ல கருத்துக்கள் மல்லையூரான்.[/size]

[size=4]இந்த மாநாட்டுக்குப்பிறகு ஜெயலலிதா கருணாநிதியை விட ஈழத்தமிழர் பிரச்சனையில் ஒரு படி மேலே போகவேண்டிய தேவை இருந்தால், அது எமக்கு வெற்றிகளை தரலாம்.[/size]

Share this post


Link to post
Share on other sites

எனிவரும் காலங்களில் சுவிஸ் வங்கிகளில் பணம் வைக்க முடியாது... எனவே ஆர்ஜான்ரீனா, பிரேஸ் போன்றவற்றின் வங்கிகள் தான் கறுப்புப்பணம் வைக்கச் சரியான தேர்வு!

Share this post


Link to post
Share on other sites