Jump to content

இந்திய யூனியனுடன் இணைந்தாலென்ன?

Recommended Posts

[size=4]ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தை தொடக்கி பலரையும் சிந்திக்கவைக்கும் உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். [/size]

[size=4]

தமிழீழத்தை ஐநாவி;ல் அங்கீகாரம் பெறவைக்கப் போராடுவதிலும் இது சாத்தியமானது.

[/size]

[size=4]கிழக்கு திமோர், தென் சூடான் போன்ற நாடுகள் ஐ.நா. அனுமதியுடன் மக்களின் சுயநிர்ணய வாக்கெடுப்பை நடாத்தின. எனவே அதுபோன்று எமது மண்ணிலும் நடாத்த முடியாது என்றில்லை. இல்லை அதை விட இந்திய யூனியனில் சேருவது இலகு என நீங்கள் கூறினாலும் அண்மைக்கால வரலாற்றில் அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை. [/size]

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நாரதர் அவர்களே!

நீங்கள் இந்தக் கருத்தின் தலைப்பை வாசித்திருப்பீhகளென எண்ணுகிறேன். தலைப்பே ஒரு கேள்வியாகத்தான் இருக்கிறது. அதிலுள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்து முடிவெடுப்பதுதான் செய்ய வேண்டியதும். அதற்காக ரகுநாதன் கேள்வி மேல் கேள்விகளை என்னிடம் அடுக்கியதில் என்ன பலனுண்டு. உலகவராற்றில் எத்தனையோ நிகழ்ச்சிகள் அவை பாதகமானவையாகவோ சாதகமானவையாகவோ நீதியானவையாகவோ, அநீதியானவையாகவோ நடந்திருக்கின்றன. அவற்றை முன்வைத்துக் கருத்துக் கூறுவதும் மிகச் சரியான அணுகுமுறையே ஆனால் உத்தரவாதம் கேட்பதுதான் அறிவுஜீவித்தனமானதாகப் படவில்லை. என்ன உத்தரவாதம் தரமுடியும். யார் கொடுப்பது நானா? அவரது கேள்வியென்ன? அவர் நாம் அடிமைகளாகி விடுவோமென்கிறார். அது கருத்தல்லவா? கேள்வியல்லவே! நான் அப்படியாகாது என்று கூறிவிட்டால் அது சரியான பதிலாகிவிடுமா? அதற்கு உத்தரவாதம் கேட்டால் இதோ நான் தருகிறேன் எழுத்துமூல உத்தரவாதமென்று கூறுவதா? அது நகைப்புக்கிடமல்லவா? என்ன இது? ஓர் கருத்தை சமூகத்தில் விடும்போது பதிலளிக்கக் கூடியதாகவ்லவா கேள்விகளை அடுக்கவேண்டும். வரலாற்றில் நடந்தவற்றையெல்லாம், நடப்பவற்றையெல்லாம் அடுக்கி அவை நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதமென்றால் நான் என்ன பதிலைக் கூறமுடியும். ஜெர்மனியில் இனக்கொலை நடந்தது என்பதற்காக நம்மவர்கள் அங்கே அகதித் தஞ்சம் கேட்காமல் விட்டுவிட்டார்களா? அதேபோலத்தான் இந்தியாவிடம் அடைக்கலம் புகுவதுமாகும். இந்தியா நமது பூர்வீக நாடு அதைவிட நமக்கு வேறு கதியில்லை. அதனாற்தான் இந்தக் கருத்து கேள்விரூபத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

நண்பர் அகூதா கேட்ட சுருக்கமான கேள்விக்கு அவர் விளங்கிக்கொள்ளக் கூடியதாக சுருக்கமான பதிலைக் கொடுத்தேன். அவர் அதனைப் புரிந்துகொண்டு கருத்தாடலில் கலந்து கொள்கிறார். அதைத்தான் தாக்குப்பிடிக்க முடியும். அதைவிடுத்துச் செய்திக்குவியலை அள்ளிச் சொரிவதால் என்ன பயன். இங்கே யாரும் கருத்துத் திணிப்புச் செய்ய வரவில்லை. கருத்தாடவே வந்திருக்கிறோம் ஆகவே விடயங்களை இலகுபடுத்த முயலுங்கள். சிக்கலாக்கினால் சும்மா நேரத்தை வீணடிப்பதாய்விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தை தொடக்கி பலரையும் சிந்திக்கவைக்கும் உங்களுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். [/size]

[size=4]கிழக்கு திமோர், தென் சூடான் போன்ற நாடுகள் ஐ.நா. அனுமதியுடன் மக்களின் சுயநிர்ணய வாக்கெடுப்பை நடாத்தின. எனவே அதுபோன்று எமது மண்ணிலும் நடாத்த முடியாது என்றில்லை. இல்லை அதை விட இந்திய யூனியனில் சேருவது இலகு என நீங்கள் கூறினாலும் அண்மைக்கால வரலாற்றில் அவ்வாறு நடந்ததாக தெரியவில்லை. [/size]

வராற்றைப் படைக்க வேண்டியது எமது பொறுப்பு எப்படியாவது சிங்கள மேலாண்மை வாதத்தின் பிடியிலிருந்து விடுபட்டு இந்தி;.யாவைத் தங்குதளமாக வைத்துக்கொண்டு மேற்கொண்டு தொடரவேண்டுமென்பதே நோக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் நாரதர் அவர்களே!

நீங்கள் இந்தக் கருத்தின் தலைப்பை வாசித்திருப்பீhகளென எண்ணுகிறேன். தலைப்பே ஒரு கேள்வியாகத்தான் இருக்கிறது. அதிலுள்ள சாதக பாதகங்களை ஆய்வு செய்து முடிவெடுப்பதுதான் செய்ய வேண்டியதும். அதற்காக ரகுநாதன் கேள்வி மேல் கேள்விகளை என்னிடம் அடுக்கியதில் என்ன பலனுண்டு. உலகவராற்றில் எத்தனையோ நிகழ்ச்சிகள் அவை பாதகமானவையாகவோ சாதகமானவையாகவோ நீதியானவையாகவோ, அநீதியானவையாகவோ நடந்திருக்கின்றன. அவற்றை முன்வைத்துக் கருத்துக் கூறுவதும் மிகச் சரியான அணுகுமுறையே ஆனால் உத்தரவாதம் கேட்பதுதான் அறிவுஜீவித்தனமானதாகப் படவில்லை. என்ன உத்தரவாதம் தரமுடியும். யார் கொடுப்பது நானா? அவரது கேள்வியென்ன? அவர் நாம் அடிமைகளாகி விடுவோமென்கிறார். அது கருத்தல்லவா? கேள்வியல்லவே! நான் அப்படியாகாது என்று கூறிவிட்டால் அது சரியான பதிலாகிவிடுமா? அதற்கு உத்தரவாதம் கேட்டால் இதோ நான் தருகிறேன் எழுத்துமூல உத்தரவாதமென்று கூறுவதா? அது நகைப்புக்கிடமல்லவா? என்ன இது? ஓர் கருத்தை சமூகத்தில் விடும்போது பதிலளிக்கக் கூடியதாகவ்லவா கேள்விகளை அடுக்கவேண்டும். வரலாற்றில் நடந்தவற்றையெல்லாம், நடப்பவற்றையெல்லாம் அடுக்கி அவை நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதமென்றால் நான் என்ன பதிலைக் கூறமுடியும். ஜெர்மனியில் இனக்கொலை நடந்தது என்பதற்காக நம்மவர்கள் அங்கே அகதித் தஞ்சம் கேட்காமல் விட்டுவிட்டார்களா? அதேபோலத்தான் இந்தியாவிடம் அடைக்கலம் புகுவதுமாகும். இந்தியா நமது பூர்வீக நாடு அதைவிட நமக்கு வேறு கதியில்லை. அதனாற்தான் இந்தக் கருத்து கேள்விரூபத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

நண்பர் அகூதா கேட்ட சுருக்கமான கேள்விக்கு அவர் விளங்கிக்கொள்ளக் கூடியதாக சுருக்கமான பதிலைக் கொடுத்தேன். அவர் அதனைப் புரிந்துகொண்டு கருத்தாடலில் கலந்து கொள்கிறார். அதைத்தான் தாக்குப்பிடிக்க முடியும். அதைவிடுத்துச் செய்திக்குவியலை அள்ளிச் சொரிவதால் என்ன பயன். இங்கே யாரும் கருத்துத் திணிப்புச் செய்ய வரவில்லை. கருத்தாடவே வந்திருக்கிறோம் ஆகவே விடயங்களை இலகுபடுத்த முயலுங்கள். சிக்கலாக்கினால் சும்மா நேரத்தை வீணடிப்பதாய்விடும்.

உங்கள் கற்பனைக்கு உயிர்கொடுக்க நீங்கள் படும் பாடு புரிகிறது. ஆனால் யதார்த்தத்தில் சாத்தியமற்றதையே நீங்கள் பேசுகிறீர்கள், ஆகவே கனவென்பதில் மாற்றுக்கருத்தில்லை.

உங்களுக்குப் புரியவைப்பதற்காக இறுதியாக ஒன்று சொல்கிறேன்.

2009 முள்ளிவாய்க்கால் இனக்கொலையிலும் அதற்குப்பின்னரும் இந்தியா தொடர்ந்தும் சிங்களத்திற்கு ஏன் முண்டுகொடுத்து வருகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இந்தியாவைச் சுற்றி உள்ள அனைத்து நாடுகளிலும் தனது பிடியை இறுக்கி இறுதியில் இந்தியாவை சுற்றி தனது கயிற்றை இறுக்கும் கைங்கரியத்தில் சீனா இறங்கியிருக்கிறதென்பது இந்தியா உற்பட அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆகவே தனது தென்கோடியிலும் சீனா காலூன்றுவதை இந்தியா எப்பாடுபட்டாவது தடுத்தே தீரும். ஹம்பாந்தோட்டையிலும், மற்றைய பகுதிகளிலும் சீனா அபிவிருத்தி என்கிற பேரில் செய்துவரும் நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் இந்தியாவால், வெட்டொன்று துண்டு இரண்டென்று இலங்கையுடன் உறவைத் துண்டித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அது மதில்மேற் பூனையாக இருக்கும் சிங்களத்தை முற்றாகச் சீனப் பக்கம் சாய வழியேற்படுத்திக்கொடுத்து விடும். ஆகவேதான் சீனாவின் திருவிளையாடல்களுக்கு மத்தியிலும் கூட இந்தியா சிங்களத்தை விருப்பமில்லாவிட்டாலும் ஒட்டியிருக்க வேண்டியிருக்கிறது. இது சிங்களத்துக்கும் நன்கு தெரியும்.

சரி, உங்களின் யோசனைக்கு வருகிறேன். நீங்கள் சொல்வது போல இந்தியா வடக்குக் கிழக்கை தன்னுடன் இன்னொரு மாநிலமாக இணைக்குமாக இருந்தால், நிச்சயம் சிங்களம் இந்தியாவின் எதிரி நாடாக மாறுமென்பதில் சந்தேகமில்லை. அப்படி மாறும்போது சீனாவின் முற்றான இராணுவப் பிரசன்னம் இலங்கையில் ஏற்படுத்தப்படும். ஆக, சீன இந்திய எல்லைக்குள் நாங்கள் வாழவேண்டிவரும். இன்று காஷ்மீரிலும், அருணாச்சலப் பிரதேசத்திலும் நடக்கும் ஆக்கிரமிப்புக்கள், எல்லை கடந்த தாக்குதல்கள் போன்று எமது ஒன்றிணைக்கப்பட்ட மாநிலத்திலும் தொடங்கும். அதை இந்தியா வரவேற்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?? இந்தியா தானே விரும்பித் தனது தலையில் மண்ணள்ளிப் போடும் என்று எதிர்பார்க்கிறீர்களா??

நீங்கள் சொலவ்துபோல தமிழ்நாட்டுடன் எங்களையும் இணைத்தால் அவர்களது உரிமைகளாவது எங்களுக்குக் கிடைத்தால் நல்லது என்பதில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் அதன்பின்னரான நிகழ்வுகளை எண்ணிப்பார்கத்தான் முடியவில்லை.

நீங்கள் உங்கள் ஆலோசனைகளைத் தொடருங்கள். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நேரமும் நீங்கள் பலவிடயங்களையும் கூறிவிட்டு இப்போதுதான் இந்தக் கருத்தாடலில் சரியான பாதைக்கு வந்திருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். எனது வாதம் ஓர் கற்பனையென்பதை நான் முழுமையாக ஒத்துக்கொள்கிறேன். ஆனால் சாத்திப்படாத கற்பனையென்பதை ஏற்டகமாட்டேன்.

நீங்கள் சொல்வது போல இந்தியாவுக்கு எஞ்சியுள்ள சிறீலங்கா பகை நாடாகுமென்பதிலும் எந்தவித மாறுபட்ட கருத்திற்கும் இடமில்லை. ஆனால் இன்றைய எமது கனவான தனித்தமிழீழத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும்போது எத்தகைய பகையை இலங்கையுடன் இந்தியா உருவாக்கிக் கொள்ளுமோ அதைவிடக் குறைவானதாகத்தான் அந்த முரண்பாடு இருக்கும். இதை நீங்கள் மறுக்க மாட்டீர்களென்றே எண்ணுகிறேன்.

ஆகவே அந்தவகையில் சிந்திக்கும்போது இந்தியாவுக்கு இது சௌகரியமானதாகவும் ஏனைய நாடுகளின் தற்போதைய தலையீடுகளைவிடக் குறைவான தலையீட்டையே எதிர்நோக்கக் கூடியதாகவும் இருக்குமல்லவா? தமிழ் மக்கள் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கவும் இந்திய அனுசரணையைப் பெறவும் இது சுமுகமான வழியல்லவா? சிங்களத்திற்கும் தமிழ்ப் பிரதேசங்களை எம்மிடம் விட்டுக்கொடுப்பதிலும் இந்தியாவிடம் விட்டுக்கொடுத்துவிடுவது சற்று ஆறுதலளிப்பதாக இருக்குமல்லவா? தீவில் தொடர்ந்து கொண்டே இருக்கக்கூடிய எல்வைப் பிரச்சனைகளையும் இனமுரண்பாடுகளையும் இந்தியாவின் தலைமையில் தீர்த்துக்கொள்ள வழியேற்படுமென சிங்களம் நினைக்கலாமல்லவா? என்ன சொல்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

அதற்காக ரகுநாதன் கேள்வி மேல் கேள்விகளை என்னிடம் அடுக்கியதில் என்ன பலனுண்டு. உலகவராற்றில் எத்தனையோ நிகழ்ச்சிகள் அவை பாதகமானவையாகவோ சாதகமானவையாகவோ நீதியானவையாகவோ, அநீதியானவையாகவோ நடந்திருக்கின்றன. அவற்றை முன்வைத்துக் கருத்துக் கூறுவதும் மிகச் சரியான அணுகுமுறையே ஆனால் உத்தரவாதம் கேட்பதுதான் அறிவுஜீவித்தனமானதாகப் படவில்லை. என்ன உத்தரவாதம் தரமுடியும். யார் கொடுப்பது நானா? அவரது கேள்வியென்ன? அவர் நாம் அடிமைகளாகி விடுவோமென்கிறார். அது கருத்தல்லவா? கேள்வியல்லவே! நான் அப்படியாகாது என்று கூறிவிட்டால் அது சரியான பதிலாகிவிடுமா? அதற்கு உத்தரவாதம் கேட்டால் இதோ நான் தருகிறேன் எழுத்துமூல உத்தரவாதமென்று கூறுவதா? அது நகைப்புக்கிடமல்லவா? என்ன இது? ஓர் கருத்தை சமூகத்தில் விடும்போது பதிலளிக்கக் கூடியதாகவ்லவா கேள்விகளை அடுக்கவேண்டும். வரலாற்றில் நடந்தவற்றையெல்லாம், நடப்பவற்றையெல்லாம் அடுக்கி அவை நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதமென்றால் நான் என்ன பதிலைக் கூறமுடியும். ஜெர்மனியில் இனக்கொலை நடந்தது என்பதற்காக நம்மவர்கள் அங்கே அகதித் தஞ்சம் கேட்காமல் விட்டுவிட்டார்களா? அதேபோலத்தான் இந்தியாவிடம் அடைக்கலம் புகுவதுமாகும். இந்தியா நமது பூர்வீக நாடு அதைவிட நமக்கு வேறு கதியில்லை. அதனாற்தான் இந்தக் கருத்து கேள்விரூபத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அவர் உத்தரவாதம் கேட்பதற்கு முதல் கருத்தில் இன்னொரு கேள்வி கேட்டிருந்தார்.

அதாவது இந்தியாவுடன் நாம் இணைவதாக வைத்துக்கொண்டால் இந்திய மத்திய அரசு இலங்கை அரசை விட கொடூரமானது. அவர்கள் இலங்கை அரசை விட கொடூரமான முறையில் எம்மை நடத்தினால் அப்பொழுது என்ன செய்வது என்ற அர்த்தத்தில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு கூட இந்த திரியில் நீங்கள் பதிலளிக்க கூடாதா? :)

அந்த கேள்வி இந்த இணைப்பில் (அவர் கருத்தில்) இரண்டாவது பந்தியில் உள்ளது.

http://www.yarl.com/...=20#entry783818

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டியர் துளசி

இந்திய யூனியனில் அவர்களது மக்களாக இணைந்திருக்கும்போது பாண்டிச்சேரி தமிழ்நாடு பிரதேசங்களைப் போல தனிப்பொலீஸ் படை காணியதிகாரங்கள் என்றெல்லாம் கிடைக்கலாமல்லவா?

அப்போது நமது ரிஏன்ஏ தற்போது கேட்கும் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுவிடலாம். கிளர்ச்சித்தனமான மக்கள் போராட்டங்களுக்கு இடமில்லாமற் போகும்போது அடக்குமுறைக்கும் இடமில்லையல்லவா? மேலும் சகோதர மாநிலங்களின் உதவியும் ஆதரவுக்குரலும் இருக்குமே! நாமும் இந்திய நடுவண்ணரசின் பாராளுமன்றத்தில் எமது பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதோடு சில வேளை நடுவண்ணரசிலும் அங்கம் வகிக்க இடமுண்டாகுமே!

இதனாலெல்லாம் அங்கு அடக்கு முறைக் கொடுமைகள் ஏற்பட என்னகாரணம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

இந்தக்கருத்து புதியதல்ல. இது போன்ற கருத்துகள் முன்பே கூறப்பட்டிருக்கின்றன. ஈழத்தமிழர் பிரச்சினையில்

உண்மையான அக்கறைகொண்ட தமிழக அரசியல் ஆய்வாளர்கள்கூட இத்தகைய கருத்தை முன்வைத்திருக்கிறார்கள்.

வி.எஸ் சுப்பிரமணியம் என்பவர் குறிப்பிடத்தக்கவர். எனவே இது ஆழமாக ஆராயப்படவேண்டிய விடயம்.

Tamil trauma- Eelam’s accession to India - the only viable and dharmic solution

by Vssubramaniam February 20, 2010

Link to comment
Share on other sites

[size=4]சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு பல தடவைகள் டெல்லிக்கு சென்றுள்ளன, இலங்கையில் உள்ள தூதுவர் சந்திக்கின்றார். உலகத்தமிழர் பேரவையின் சுரேன் சோனியாவை சந்தித்திருந்தார். கருணாநிதி காங்கிரசுடன் மத்தியில் ஆட்சி செய்கிறார்.

எனவே இந்த திட்டத்திற்கு இந்திய அரசு வடிவம் கொடுக்க நினைத்தால் அது கொடுக்கலாம். பந்து அதன் கைகளிலே உள்ளது.[/size]

Link to comment
Share on other sites

[size=4]இந்த கொள்கையளவிலான கோட்பாட்டை முன்னர் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் பாரிஸ்டர் அம்பலவாணர் முன்வைத்ததாக கூறப்படுகின்றது. அப்பொழுது எந்தமாதிரியான வரவேற்பை டெல்லியில் இது பெற்றது என தெரியவில்லை. [/size]

Link to comment
Share on other sites

சீனா இப்போது வேண்டும் என்றால் உலக அரங்கில் ஒரு பலமான நாடாக இருக்கலாம்

ஆனால் 60 களின் போது ஒரு உலக அரசியலை நிர்ணயிக்கும் நாடாக இருக்கவில்லை..

எமது பிரச்சினை 60 - 70 களிலேயே தொடங்கிவிட்டதே ..அப்போது எப்படி சீனாவும் ஒரு பங்காளி ஆகும்?

....

சீனாவின் வரவு 90 களின் பின்னேயே தான் இருக்கும்,

சீனா ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு சபையின் முதல் நான்கு பெரும் சக்தி கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆரம்பத்திலிருந்தே (1945 முதல்) இருந்து வருகிறது. உலக அணுச்சக்தி வல்லரசுகளில் ஒன்றாக சீனா நீண்டகாலமாக இருக்கிறது.

1959ல் திபெத்தியர்களுக்கும் தலாய் லாமாவுக்கும் இந்தியா அடைக்கலம் கொடுத்ததில் இருந்து ஏற்பட்ட எல்லை மோதல்கள் 1962ல் சீன இந்திய போராக வெடித்தது. 1970களில் ஆட்சிக்கு வந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி சீனசார்பு கட்சியாக இருந்தது. சிறிமாவோ சீனாவுக்கு 1970களில் சென்ற போது சீன பிரதமர் சூ என் லாய் அன்பளிப்பாக பண்டாரநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தை 35 மில்லியன் டொலர்கள் செலவில் கட்டிக்கொடுத்தார். இன்றைய சிறிலங்கா சுதந்திரக்கட்சி சீனாவின் முழு ஆதரவுடன் அமெரிக்காவையே எதிர்க்கவும் துணிந்து செயற்படுகிறது. இந்த உறவு 1970களில் இருந்தே கட்டியெழுப்பப்பட்ட உறவு.

BMICH2.jpg

இலங்கைத்தமிழர்கள் தமது துன்பங்களுக்கு காரணமான புவியியல் அரசியல் போட்டியை சரியாக விளங்கிக்கொள்ள சீனாவை பற்றிய அறிவு தேவையானதாக இருந்திருக்கிறது. ஆனால் அதனை அவர்கள் போதியஅளவில் பெற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

இலங்கைத்தமிழர்கள் தமது துன்பங்களுக்கு காரணமான புவியியல் அரசியல் போட்டியை சரியாக விளங்கிக்கொள்ள சீனாவை பற்றிய அறிவு தேவையானதாக இருந்திருக்கிறது. ஆனால் அதனை அவர்கள் போதியஅளவில் பெற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

[size=4]இன்றைய கால உலக அரசியலை வைத்துப்பார்த்தலும், தமிழர் தரப்பால் சீன விடயத்தில் எவ்வாறான அணுகுமுறையை எடுக்கமுடியும்? என்பது சவாலானதே. யார் எதை வைத்து எவ்வாறு சீனாவுடன் எமது உரிமைகளை வென்றெடுப்பது பற்றி பேச இல்லை அணுகமுடியும் என்பதும் அவ்வாறு அணுகும்போது அது டெல்லியால் இல்லை வாசிங்கடனால் பலமிழக்க செய்யப்படலாம். [/size]

[size=1]

[size=4]தமிழரசு கட்சி சார்பில் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் சீனா சென்றார். ஆனால் அதன் பெறுபேறுகள் இல்லை தொடர் அணுகுமுறைகள் பற்றி எதுவுமே கூறப்படவில்லை. அது ஏன்? என்பதும் ஆராயப்படவேண்டியது. [/size][/size]

[size=1]

[size=4]பீகிங் - டெல்லி - வாசிங்க்டன் - மொஸ்கோ எனப்பார்க்கும்பொழுது வாசிங்க்டனை நம்புவது மேல். இது கோசவா, இலிபியா, நாளை சிரியாவில் கூட வாசிங்கடனே வெற்றி கொண்டது. [/size][/size]

Link to comment
Share on other sites

நல்ல ஆய்வு. நிச்சயம் நாம் முன்னர் விட்ட பிழைகளை மீள் ஆய்வு செய்யவேண்டும் ஆனாலும் எனது பார்வையில் எமது பலம் (எண்பது மில்லியன்கள் தமிழர்கள்) இன்றை அரசியல் / பொருளாதார நலன்களுக்கு அமைய இணைக்கப்பட வேண்டும் என்பது. அதாவது தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் பலமான தலைமை இருக்கவேண்டும்.

அதற்கான தேவை தமிழக முதலமைச்சருக்கு இல்லையே? தமிழக முதலமைச்சருக்கு தேவையானது தேர்தலில் வெற்றி பெற்றுக் கொடுப்பதற்கு வேண்டிய பெரும்பான்மை.

தமிழர்களை அரசியல் பொருளாதார நலன்களுக்கு அமைவாக ஒன்றிணைப்பதில் நன்மை பெறக்கூடியவர்களே அவர்களை ஒன்றிணைக்க முன்வருவார்கள்.

அப்படி தமிழர்கள் ஒன்றிணைக்கப்பட்டாலும் அதன் நோக்கம் இலங்கை தமிழர்களுக்கு உதவுவதை முதன்மையாக கொண்டிருக்கும் சாத்தியம் குறைவு. பொருளாதார நலன்களுக்காக தமிழர்கள் ஒன்றிணைந்தால் அது ஒன்றிணைந்தவர்களின் பொருளாதார நலன்களை முன்னெடுப்பதாகவே அமையும். சர்வதேச அளவில் அரசியல்நலன்களுக்காக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புபவர்களில் இலங்கைத்தமிழர்களே அதிகம். அதற்கு காரணம் இலங்கை தமிழர்களுக்கு சர்வதேச அளவில் உதவி தேவையாக இருக்கிறது. ஆனால் உலக தமிழர்களில் இலங்கை தமிழர்கள் மிகவும் சிறிய தொகையினர் என்ற அளவில் இந்த விருப்பம் சாத்தியமாவதும் எதிர்பார்க்கும் பயனை தருவதும் சந்தேகமானதே.

ஆம், இந்தக்கூற்று கொள்கை அளவில் சரியானது. நீங்கள் கூறுவது போன்று நடக்கவேண்டும் என்றால் முதலில் தமிழர் தரப்பு ஒப்பீட்டளவில் பலமாக இருந்துகொண்டே இதை செய்ய முற்பட வேண்டும். தலைவர் பிரபாகரன் காலத்தில் இது நடந்தது, ஆனால், இந்தியாவோ / சிங்களமோ அதை உணராமல் எம்மை அழிக்கவே முடிவுகட்டின.

ஒப்பீட்டளவில் பலமாக இருந்து கொண்டே ஏனையவர்களுடன் இணைந்து இலங்கை தமிழர்கள் தங்கள் பாதுகாப்புக்கு வழிகாண வேண்டும் என்று நீங்கள் சொல்லுவது இராணுவ பலத்தை குறிக்குமாக இருந்தால் இந்த பலம் பயனற்றது என்பதை தலைவர் பிரபாகரன் காலத்து பேச்சுவார்த்தைகளே காட்டி நிற்கின்றன. உண்மையில் பலம் என்பது அரசியற்பலம், பொருளாதார பலம், இராஜதந்திர பலம் என பல பகுதிகளை கொண்டது. மேலும் பலம் குன்றியவர்கள் பலம்பொருந்தியவர்களுடன் இணைந்து தமக்கு பாதுகாப்பையும் வளர்ச்சிக்கான வழிவகைகளையும் அமைத்துக்கொண்டதற்கு நிறையவே ஆதாரங்கள் இருக்கின்றன. இரண்டாம் உலகயுத்தத்தில் தோற்றுப்போன ஜப்பானும் ஜேர்மனியும் தம்மை தோற்கடித்த அமெரிக்காவுடன் ஒத்துழைத்து உலகில் பொருளாதாரத்திலும் வாழ்க்கைத்தரத்திலும் சிறந்த நாடுகளாக உயர்ந்ததை நாம் அறிவோம். அமெரிக்கா ஜப்பான் மீது அணுக்குண்டு தாக்குதல் நடத்தி மனித வரலாற்றிலேயே மோசமான அழிவை செய்தது. ஆனால் அதையும் தாங்கிக்கொண்டு ஜப்பான் அமெரிக்காவுடன் ஒத்துழைத்தது.

438px-Nagasakibomb.jpg

வறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூரின் தலைவர்கள் அன்று ஒப்பிட்டளவில் பலமாக இருந்த மலேசியாவுடன் இணங்கி செயற்பட்டே சிங்கப்பூர் தனிநாடானது. ஆகவே இந்தியாவுடனும் சிறிலங்காவுடனும் சிங்கள மக்களுடனும் இணைந்து இலங்கை தமிழ்மக்கள் தமக்கு இந்த வல்லரசு போட்டிக்கு மத்தியில் பாதுகாப்பு தேட சமபலம் தேவை என்ற கருத்து சரியானதா என்ற கேள்வி எழுகிறது.

சிங்கள மற்றும் இந்திய தலைமைகள் சீன - அமெரிக்க திட்டங்களை உணராமல் இருக்கும்வரை எமது தலைமைகளால் எதுவுமே செய்யமுடியாது.

.இது உண்மையானால் அது மிகவும் கவலைக்குரிய நிலை. இலங்கைத்தமிழ் மக்கள் அழிந்து போவதை தவிர வேறு வழியில்லை என்றாகிறது. ஆகவே அழிவிலும் பார்க்க சிறந்தது ஏதாவது உண்டா என்று முயற்சிப்பது பயனுள்ளாதாக இருக்கும். சிங்கள தலைவர்களும் இந்திய தலைவர்களும் சீன அமெரிக்க நலன்களை பற்றி இலங்கை தமிழர்களிலும் பார்க்க நன்கு அறிந்திருப்பதாகவே தெரிகிறது.

இந்திய தலைவர்கள் தமது நாடு சோவியத் யூனியன் போல பல நாடுகளாக பிரியும் என்பதை நீண்டகாலமாகவே எதிர்பார்த்திருக்க வேண்டும். தமிழீழம் உருவாவதை இந்தியா எதிர்ப்பதற்கு இதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது. இந்தியா இவ்வாறாக பிரியும் போது தமிழீழம் என்ற நாடு இருந்தால் அது நிச்சயமாக தமிழ்நாடு பிரிவதை ஆதரிக்கும் என்பதில் இந்தியாவுக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்காது. இந்தியா இவ்வாறாக பிளவுபடுவதை அமெரிக்காவும் சீனாவும் மறைமுகமாக முதலிலும் பின்னர் வெளிப்படையாகவும் ஆதரிக்கலாம் என்று இந்தியா கருதியிருக்க கூடும்.

சிறிலங்காவின் அரச தலைவர்கள் எந்த திட்டத்தையும் சரியாக செய்ய முடியாதவர்கள் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்று. தமிழர் பிரச்சினைக்கான பல தீர்வு முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும் பிழைத்து போனது ஏனைய பல செயற்திட்டங்கள் தோற்றுப்போனது போன்றதே. அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தாலும் சிறிலங்கா கோரமாக அழித்திருக்கிறது. இந்தியாவும் அவ்வாறே செய்திருக்கிறது. அமெரிக்காவும் சீனாவும் கூட தமது அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுபவர்களை இவ்வாறாக கோரமாக கொன்றிருக்கின்றன. ஆகவே இவை சிறிலங்காவின் தலைவர்கள் சீன அமெரிக்க பலப்போட்டியை அறியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் என கருதப்பட முடியாதவை.

சிங்களவர்களின் இனம் வாழும் நாடு இலங்கை. தமிழர்கள் தமிழ்நாட்டிலும் உலகெங்கும் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இதனால் தமிழருக்கு தனியான நாடு உருவாகி அதனால் தரைவழியான எல்லை உருவாகுமானால் எல்லை போர் முதல் நில அபகரிப்பு என்று தாம் அழிக்கப்படுவோம் என்ற பயம் சிங்களவர்களுக்கு இருப்பதால் அவர்கள் தமிழர்களை தனிநாடு அமைக்க விடமாட்டார்கள். இந்த பயத்தை போக்க சந்தேகத்துக்கு இடமற்ற ஒரு வழியை உருவாக்கினால் சில சிங்கள தலைவர்களையாவது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வைப்பது சாத்தியமாகலாம்.

இலங்கை தமிழர்கள் தமக்கு ஒரு நிம்மதியான வாழ்வுக்குரிய தீர்வுக்கு சிறிலங்கா தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு சீனாவின் உதவியை முயற்சித்து பார்ப்பது பயனுள்ளதாக அமையலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

  • சீனா தனது செல்வாக்கை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் காட்ட சிறப்பான ஒரு தீர்வுக்கு முயற்சிக்கலாம்.
  • சிறிலங்கா இன்று சீனாவுக்கு நிறைய கடன்பட்டு சீனாவில் தங்கியிருக்கிறது. ஆகவே சீனாவை உதறித்தள்ள முடியாது.
  • தான் ஒரு கட்சி ஆட்சி கொண்ட பொதுவுடமை நாடாக இருக்கும் அதே வேளை தன்னுடன் இணைந்து கொண்ட ஹொங்கொங்கை மக்களாட்சி பிரதேசமாக அதிகளவிலான சுதந்திரங்களுடனும் முதலீட்டு பொருளாதார முறையுடனும் தொடர்ந்து செயற்பட வழி வகுத்து, எப்படி மாறுபட்ட கொள்கை கொண்டவர்கள் இணைந்து வாழமுடியும் என்று சீனா வழிகாட்டியிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள (கணவர்) சரியில்லை என்றால் இந்திய (கணவர்) வசம் போகலாமா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?

இரண்டு விடயங்கள் நினைவுக்கு வருகின்றது.

முதலாவது தமிழில் உள்ள ஒரு பழமொழி: சொர்க்கத்தில் அடிமையாக இருப்பதிலும் பார்க்க நரகத்துக்கு ராஜாவாக இருப்பது மேலானது.

(இந்த பழமொழியினை நான் கூட வேலை செய்யும் ஆங்கிலேயரிடமும் பல தடவை கூறி, அவர்களும் அதன் கருத்தினை ரசித்தனர்)

இரண்டாவது தமிழ் படங்களில் பார்த்த, இந்தியாவில் நடக்கும் நிகழ்வு: பாலியல் பலாத்காரம் செய்தவனையே, பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு கட்டி வைப்பது.

கச்சதீவு பேச்சுவார்த்தை மூலமே முடிவானது. ஏனெனில் அங்கு மக்கள் இல்லை. Spain நாட்டின் Gibaltar நாட்டின் மீதான கோரிக்கை, அந்த நாட்டு மக்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பான வாக்களிப்பின் மூலமே UK நிராகரித்து தனது முடிக்குரிய நாடாக வைத்து உள்ளது.

அதே போல் Falklands Islands மீதான Argentina வின் கோரிக்கை மீது இதே வகையில் முடிவு செய்ய போவதாக UK அறிவித்து உள்ளது.

எனவே நீங்கள் கேட்டவுடன், இந்தியாவோ எடுக்கவோ, இலங்கை கொடுக்கவோ முடியாது.

பேசாமல் எமது மக்களுக்கு தமது சுய நிர்ணய உரிமை தொடர்பான வாக்களிப்பு தேவை என போராடுவதே சரியான செயல். தமிழ் கூட்டமைப்பினர், மற்றும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் இது தொடர்பாக பேசுவதனை ஊக்குவிக்க வேண்டும். (அண்மையில் சுமந்திரன் MP யின் சுய நிர்ணய உரிமை தொடர்பான பேச்சு 'a dangerous dogma' என தயான் ஜெயதிலக என்பார், DailyMirror பத்திரிகையில் எழுதினார்.

இதில் தான் தமிழர் அரசியல் எதிர்காலம் உள்ளது. இதனை செயல் படுத்தக் கூடியது இலங்கையோ அல்லது இந்தியாவோ அல்ல. ஐ.நா மட்டுமே. East Timor, Kosova, South Sudan, Eritra என பல நாடுகள் இவ்வாறே உருவாகின.

சீனாவின், ஊடுருவலால் இந்திய அரசு கூட இதனை ஆதரிக்க வேண்டிய நிலை வரலாம்.

Link to comment
Share on other sites

அதற்கான தேவை தமிழக முதலமைச்சருக்கு இல்லையே? தமிழக முதலமைச்சருக்கு தேவையானது தேர்தலில் வெற்றி பெற்றுக் கொடுப்பதற்கு வேண்டிய பெரும்பான்மை.

தமிழர்களை அரசியல் பொருளாதார நலன்களுக்கு அமைவாக ஒன்றிணைப்பதில் நன்மை பெறக்கூடியவர்களே அவர்களை ஒன்றிணைக்க முன்வருவார்கள்.

அப்படி தமிழர்கள் ஒன்றிணைக்கப்பட்டாலும் அதன் நோக்கம் இலங்கை தமிழர்களுக்கு உதவுவதை முதன்மையாக கொண்டிருக்கும் சாத்தியம் குறைவு. பொருளாதார நலன்களுக்காக தமிழர்கள் ஒன்றிணைந்தால் அது ஒன்றிணைந்தவர்களின் பொருளாதார நலன்களை முன்னெடுப்பதாகவே அமையும். சர்வதேச அளவில் அரசியல்நலன்களுக்காக தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புபவர்களில் இலங்கைத்தமிழர்களே அதிகம். அதற்கு காரணம் இலங்கை தமிழர்களுக்கு சர்வதேச அளவில் உதவி தேவையாக இருக்கிறது. ஆனால் உலக தமிழர்களில் இலங்கை தமிழர்கள் மிகவும் சிறிய தொகையினர் என்ற அளவில் இந்த விருப்பம் சாத்தியமாவதும் எதிர்பார்க்கும் பயனை தருவதும் சந்தேகமானதே.

[size=4]உலக வல்லரசுகள் தமது இராணுவ, அரசியல் பலத்தை பேண அடிப்படையில் உள்ளது - பொருளாதாரம். பொருளாதார பலத்தை பேண இராணுவ, அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன. இதில் தமிழர்களும் அடங்குவார்கள்.[/size]

[size=4]இன்று வளர்ந்து வரும் தமிழக பொருளாதார பலத்தை அமெரிக்கா உணர்ந்து ஹிலரி சென்னை வந்திருந்தார். உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்துபட்ட பொருளுதார, அறிவியல் வளத்தை கொண்டுள்ளனர்.[/size]

[size=4]இதை ஒன்றுசேர்த்து, பலம்பொருந்திய சமூகமாக மாற்றவேண்டும். அதன்மூலம் அரசியல் பலத்தை நாம் பெறலாம். அதை[/size] இன்று செய்யக்கூடிய நிலையில் உள்ளவர் - தமிழக முதல்வர் என்பதே எனது வாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிமையாகிய நாங்கள் எஐமானர்களைத்தெரிவு செய்ய முடியாது

எமது புதிய இந்திய எஐமானர் இதற்கு ஒப்புதல் தருவாரா?

எம்மை ஏற்க தயாராக உள்ளாரா??????

Link to comment
Share on other sites

இந்தியன் யூனியனின் கீழ் 1987 - 1990 வரை தாயகத்தில் அடிமைகளாக வாழ்ந்ததை எவரும் ஆயுளுக்கு மறக்கமாட்டார்கள். இந்த சிந்தனையை பரிந்துரை செய்து ஆய்வுக்கட்டுரை எழுதியவர்களும், ஆதரிப்பவர்களும் அமைதிப்படை எனும் பெயரில் ஆக்கிரமிப்புசெய்த இந்திய இராணுவத்திடம் பச்சை மட்டையால் குண்டியில் நல்ல வாங்கு வாங்கியிருந்தால் இப்படி கதைக்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

[size=4]அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் மிட் ரொம்னி கடந்த சில நாட்களாக இஸ்ரேலில் இருந்தார். ஒரு சில நாடுகளுக்கு பயணிக்கும் இவர் இஸ்ரேல் செல்வதற்கும் அதற்கு சார்பாக கதைப்பதற்கும் ஒபாமா அவர்களும் அண்மையில் இஸ்ரேல் பாதுகாப்பு சம்பந்தமாக ஒரு ஒப்பத்தந்தை எழுதுவதற்கும் காரணம் - யூத மக்களின் பொருளுதார பலம். அதிலிருந்து பிறக்கும் இராணுவ அரசியல் பலம் இஸ்ரேலை அறுநூறு மில்லியன்கள் அரபர்களுக்கு நடுவே பலமாக நிற்க வைக்கின்றது.[/size]

[size=4]இஸ்ரேல் தரும் பாடம் என்ன?[/size]

Link to comment
Share on other sites

ஏற்கனவே பலர் தாங்கள் கருத்துக்களை சொல்லிவிட்டலும்.

நிங்கள் சொல்லுவதன் சுருக்கம் என்ன என்றால். அடிமை அடிமையாகவே இருப்பான் முதலாளியை மட்டும் மாற்றுங்கள் என்பது தான்.

முதலில் நிங்கள் அடிமையாக இருக்க விரும்பினாலும் இந்தியா முதலாளியாய் இருக்க விரும்பாது என் என்றால் இந்தியாவின் பயமே நாங்கள் தமிழகத்தையும் கிளப்பி கொண்டு போய் விடுவோமோ என்று தான்.

ஏற்கனவே இங்கு பலர் சுற்றி காட்டியது போல் ஏன் மற்ற மாநிலங்கள் பிரிந்து போக விரும்புகின்றனர் என்பதை நிங்கள் விளங்க படுத்த முடியுமா?

தமிழகமே தங்களுக்கு உரிமையான தண்ணீருக்கு கேரளாவுடனும் கர்நாடகத்தினுடனும் மல்லுகட்டி இன்னும் தேர்வை கண்ட பாடில்லை. இதிலை நாங்கள் வேற போய் என்னத்தை செய்வது? இதை ஏன் நான் இங்கு சொளுகிறேன் என்றால் நிங்கள் விரும்பினமாதிரி அங்கு போய் ஒட்டி கொண்டாலும் எங்களுக்கு திருகு வலி போய் முதுகு வலி வந்த கதை தான். எங்கள் பிரச்சினை திர சத்தியம் குறைவு. அழுதாலும் பிறந்தாலும் நம் பிள்ளையை நாம் தான் பெற வேண்டும்.

மற்றம்படி நாங்கள் தமிழ் ஈழத்துக்காக கனவு காண்பதாக கூறுகிரிகள் ஒத்துகொள்கிறோம். உங்கள் எஜமான் நாட்டுக்காரரே ( அப்துல் கலாம்) கனவு காணும் படி தான் கூறுகிறார். என்ன ஒரு வித்தியாசம் நாங்கள் எங்கள் மக்கள் சுகந்திரமாக இருக்க கனவு காண்கிறோம் நிங்கள் மிண்டும் அடிமையாக்க கனவு காண்கிறிர்கள்.

Link to comment
Share on other sites

[size=4]பழைய யுகொசிலாவியாவின் உத்தம நண்பனாக, பங்காளியாக உணர்வோடு இருந்தது சோவியத் யூனியன். அது பல நாடுகளாக உடைந்தபொழுது இறுதியாக உருவான நாடுகளில் ஒன்று - கோசவா. அங்கும் ஆயுதம் ஏந்தி போராடினர், பயங்கரவாதிகள் என முலாம் பூசப்பட்டனர்.[/size]

[size=4]இறுதியில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் அங்கீகரித்து. இன்றும் உருசியா, இந்தியா, சீன என்பன அங்கீகரிக்கவில்லை.[/size]

[size=4]கோசவா தரும் பாடம் என்ன?[/size]

Link to comment
Share on other sites

வறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கப்பூரின் தலைவர்கள் அன்று ஒப்பிட்டளவில் பலமாக இருந்த மலேசியாவுடன் இணங்கி செயற்பட்டே சிங்கப்பூர் தனிநாடானது. ஆகவே இந்தியாவுடனும் சிறிலங்காவுடனும் சிங்கள மக்களுடனும் இணைந்து இலங்கை தமிழ்மக்கள் தமக்கு இந்த வல்லரசு போட்டிக்கு மத்தியில் பாதுகாப்பு தேட சமபலம் தேவை என்ற கருத்து சரியானதா என்ற கேள்வி எழுகிறது.

சிங்களவர்களை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும் தமிழர்கள் அரசியல் ரீதியாகவோ (1977 தேர்த்தல்) ஆயுதரீதியாகவோ(2001 பேச்சுவார்த்தை) பலமாக இருந்த வேளைகளைகளில் கூட தமிழர்கள் ஏதும் பெற்றார்களா என்றால் இல்லை என்பதை விட கொத்து கொத்தாக கொல்லப்பட்டார்கள் என்பது தான் வரலாறு.

[size=4]இஸ்ரேல் தரும் பாடம் என்ன?[/size]

returning the favor

இந்திய தலைவர்கள் தமது நாடு சோவியத் யூனியன் போல பல நாடுகளாக பிரியும் என்பதை நீண்டகாலமாகவே எதிர்பார்த்திருக்க வேண்டும். தமிழீழம் உருவாவதை இந்தியா எதிர்ப்பதற்கு இதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க முடியாது. இந்தியா இவ்வாறாக பிரியும் போது தமிழீழம் என்ற நாடு இருந்தால் அது நிச்சயமாக தமிழ்நாடு பிரிவதை ஆதரிக்கும் என்பதில் இந்தியாவுக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்காது. இந்தியா இவ்வாறாக பிளவுபடுவதை அமெரிக்காவும் சீனாவும் மறைமுகமாக முதலிலும் பின்னர் வெளிப்படையாகவும் ஆதரிக்கலாம் என்று இந்தியா கருதியிருக்க கூடும்.

சிறிலங்காவின் அரச தலைவர்கள் எந்த திட்டத்தையும் சரியாக செய்ய முடியாதவர்கள் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்று. தமிழர் பிரச்சினைக்கான பல தீர்வு முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும் பிழைத்து போனது ஏனைய பல செயற்திட்டங்கள் தோற்றுப்போனது போன்றதே. அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்களாக இருந்தாலும் சிறிலங்கா கோரமாக அழித்திருக்கிறது. இந்தியாவும் அவ்வாறே செய்திருக்கிறது. அமெரிக்காவும் சீனாவும் கூட தமது அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுபவர்களை இவ்வாறாக கோரமாக கொன்றிருக்கின்றன. ஆகவே இவை சிறிலங்காவின் தலைவர்கள் சீன அமெரிக்க பலப்போட்டியை அறியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் என கருதப்பட முடியாதவை.

சிங்களவர்களின் இனம் வாழும் நாடு இலங்கை. தமிழர்கள் தமிழ்நாட்டிலும் உலகெங்கும் பெரும் எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இதனால் தமிழருக்கு தனியான நாடு உருவாகி அதனால் தரைவழியான எல்லை உருவாகுமானால் எல்லை போர் முதல் நில அபகரிப்பு என்று தாம் அழிக்கப்படுவோம் என்ற பயம் சிங்களவர்களுக்கு இருப்பதால் அவர்கள் தமிழர்களை தனிநாடு அமைக்க விடமாட்டார்கள். இந்த பயத்தை போக்க சந்தேகத்துக்கு இடமற்ற ஒரு வழியை உருவாக்கினால் சில சிங்கள தலைவர்களையாவது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வைப்பது சாத்தியமாகலாம்.

இலங்கை தமிழர்கள் தமக்கு ஒரு நிம்மதியான வாழ்வுக்குரிய தீர்வுக்கு சிறிலங்கா தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு சீனாவின் உதவியை முயற்சித்து பார்ப்பது பயனுள்ளதாக அமையலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

  • சீனா தனது செல்வாக்கை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் காட்ட சிறப்பான ஒரு தீர்வுக்கு முயற்சிக்கலாம்.
  • சிறிலங்கா இன்று சீனாவுக்கு நிறைய கடன்பட்டு சீனாவில் தங்கியிருக்கிறது. ஆகவே சீனாவை உதறித்தள்ள முடியாது.
  • தான் ஒரு கட்சி ஆட்சி கொண்ட பொதுவுடமை நாடாக இருக்கும் அதே வேளை தன்னுடன் இணைந்து கொண்ட ஹொங்கொங்கை மக்களாட்சி பிரதேசமாக அதிகளவிலான சுதந்திரங்களுடனும் முதலீட்டு பொருளாதார முறையுடனும் தொடர்ந்து செயற்பட வழி வகுத்து, எப்படி மாறுபட்ட கொள்கை கொண்டவர்கள் இணைந்து வாழமுடியும் என்று சீனா வழிகாட்டியிருக்கிறது.

சிந்திக்க வேண்டிய நல்ல கருத்து.நன்றி ஜூட்.

Link to comment
Share on other sites

[size=4]இந்திய யூனியனில் இணைந்தால் பொருளாதார ரீதியாக இந்த நிலை எமது மக்களுக்கும் வரலாம் [/size]

-----------------------------------------------------------------------------------

இந்திய ஏழைகளின் ஒருநாள் செலவு 17 ரூபாய்!

புதுடெல்லி: இந்திய கிராமங்களில் வாழும் ஏழைகளின் ஒருநாள் செலவு 17 ரூபாய் என்று கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105820&hl=

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.