Jump to content

இந்திய யூனியனுடன் இணைந்தாலென்ன?

Recommended Posts

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜுட் நன்றி

ஆக்க பூர்வமான சிந்தனையுடன் கட்டுரையை அணுகியிருக்கிறீர்கள். இலங்கைத் தமிழர் இனியும் தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது என்ற முடிவின் அடிப்படையிலேயே பாக்கு நீரிணைக்கு இருபுறத்திலுமிருக்கும் தமிழர் தேசியத்தை ஒன்றுபடுத்தி அதேவேளை இந்திய நலன்களுக்கும் பங்கமேற்படாத வகையில் எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென்ற ஆதங்கத்தில் இக்கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைத் தீவிற்குள் சீனாவினதும் பாகிஸ்தானினதும் உள் நுழைவால் தனது செல்வாக்கை இழந்து போய்க்கொண்டிருக்கும் இந்தியாவினது கைகளைப் பலப்படுத்துவதற்கு ஈழத்தமிழர்களின் இந்தியா சார்ந்த நிலைப்பாடே மிக முக்கியமானது. அதாவது இலங்கையில் இந்தியாவினது மக்கட்தொகையொன்று உள்ளது என்ற தோற்றப்பாட்டை உலகின்முன் வைக்கவேண்டிய கடமை ஈழத்தமிழர்களுக்கே உள்ளது. அத்தோற்றப்பாட்டை உருவாக்குதலில் தமிழகம் எமக்கு மிக ஆர்வத்துடன் துணைநிற்கும். இந்திய மாநிலங்களிலும் எமது இணைவுப் போராட்டத்திற்கு வலுச்சேரும்.

இலங்கையின் தற்போதைய குடியேற்ற நடவடிக்கைகளை இல்லாதொழிக்க, தமிழ்நாடும் இந்திய நடுவண்ணரசும் உரிமையோடு அத்தகைய இன ஒழிப்புச் செய்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இலங்கை ஓர் இறைமையுள்ள நாடு என்னும் போர்வையின்கீழ் தமிழர்களுக்குச் செய்யும் அநீதிகளுக்கெதிராக நேரடி நடவடிக்கையில் இந்தியா இறங்குவதற்கு இந்தியாவின் ஈழத்தமிழர் மீதான பாத்தியதை உலக அரங்கில் வலுப்பெறவேண்டும். அப்போது சீனாவோ, பாகிஸ்தானோ அதற்கெதிராகச் செயற்படமுடியாத நிலை உருவாகும். ஆனால் இத்தகைய அணுகுமுறையின் தொடக்கப்புள்ளி நம்பக்கத்திலத்தான் இருக்கிறது.

நீங்கள் மீண்டும் மீண்டும் அதே பல்லவியைப் பாடுகிறீர்கள். 6 கோடித் தமிழருக்காக இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதை எதை வைத்துக்கொண்டு முடிவெடுத்தீர்கள்??? எமது தேசிய விடுதலைப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே இதைத்தானே சொல்லி வருகிறீர்கள்?? ஆனால் இதுவரை என்னத்தைக் கிழித்தீர்கள்?? 2009 அதே 6 கோடித்தமிழரின் குரலையும் அடக்கிவிட்டுத்தானே எங்களைக் கொன்று குவித்தார்கள்?? எங்களை விடுங்கள், 700 தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களத்தால் பலியிடப்பட்டார்களே, இந்திய நடுவனரசு என்ன செய்தது??? இந்தியாவில் இன்றுவரை தம்மை இந்தியர்கள் என்று கூறிவரும் பல இங்களுக்கு இந்திய நடுவனரசு செய்து வரும் அக்கிரமங்களைப் பார்த்த பின்னருமா அதனுடன் சேர்ந்து இணைய வேண்டும் என்று கனவு காண்கிறீர்கள்.

நீங்கள் சொல்வது போலவே இந்தியாவுடன் இணைகிறோம் என்று வைத்துக்கொள்வோமே, அப்படி இணைந்த பின்னர் இந்திய மத்திய அரசு இலங்கை அரசை விட கொடூரமானது (எங்கள் எல்லோருக்கும் இந்த உண்மை 1987 இலலேயே விளங்கி விட்டது, பின்னர் 2009 இல் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது) நீங்கள் உணரும் பட்சத்தில் ன்ன செய்வதாக உத்தேசம்? சிறிய நாடான சிங்களத்திடமிருந்து விடுதலை பெறவே நாம் ளைன்னும் பாடு படும்போது, உலகின் 4 ஆவது வல்லர்சின் கைகளுக்குள் சிக்கிய பின்னர் எமதும் எமது வருங்காலச் சந்ததியும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அவர்களிடம் அடிமைப்பட்டு இருக்கப்போகிறோம் என்கிற எண்ணம் கொஞ்சமாவது உங்களுக்கு இருக்கிறதா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்ய நினைப்பதெல்லாம், தமிழர்களை சரித்திரத்திலேயே அடிமைகளாக்கும் கைங்கரியம்தான். இந்தியாவின் ஆளுகைக்கு உற்பட்ட கணமே எங்களின் இறையாண்மை, தேசியம், இனம், கலாச்சாரம் என்பவை அனைத்தையுமே தூக்கி மூட்டை கட்டிவிட்டு இந்தியர்கள் எனும் பட்டத்தை விருப்பமின்றிச் சுமந்துகொண்டு எமதினம் அடையாளமின்றி அழியும்வரை அடிமைகளாக இருக்கப்போகிறோம்.

நீங்கள் இன்று கூறிப் பயமுறுத்தும் சிங்களக் குடியேற்றங்களும், கலாச்சார ஆக்கிரமிப்புகளும் இந்தியாவின் பகுதியாகியபின்னர் நடக்கப்போவதில்லை என்று உங்களால் உறுதிப்படுத்தமுடியுமா?? இன்று ஒரு கோடியே 70 லட்சம் சிங்கள்வர்களால் எம்மீது நடத்தப்படுகின்ற ஆக்கிரமிப்பென்பது, உங்களது இந்திய ஈழத்தில் 120 கோடி வட இந்தியர்களால் நடத்தப்படப் போகிறதென்கிற உண்மை இப்போது உங்களின் கண்களுக்குத் தெரியப்போவதில்லை. இந்தியப் பால்குடித்து மயங்கியிருக்கும் நீங்கள் செய்வதெல்லாம் கோடரிக் கம்பு வேலை மட்டுமே. அழியப்போவதோ என்றும்போல நாங்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரு: நீங்கள் சொல்வதை யார் இப்போது முன்னெடுக்க முடியும்?

நந்தன்

நாம் நாமேதான் முன்னெடுக்க வேண்டும். முதலில் எமது அரசியல் வாதிகள் கல்விமான்கள் அறிவு ஜீவிகள் அனைவரும் இத்தகைய களங்களில் இந்த அணுகு முறையின் நன்மை தீமைகளை ஆராய வேண்டும். மக்களிடம் கருத்துக் கணிப்பொன்றைப் பெறவேண்டும், அதன்பிறகு அதனை ஒரு போராட்ட வழிமுறையாகத் தொடரவேண்டும்.

அதாவது தமிழீழம் எங்கள்தேசம் என்ற கோரிக்கை தமிழகத்திலும் தமிழீழத்திலும் உருவாகி அது இந்தியாவிலும் உலக அரங்கிலும் முன்வைக்கப்படவேண்டும். நீங்களும் மேலும் என்ன செய்யலாமென்பதை இதில் அக்கறையோ உடன்பாடோ இருந்தால் ஆராயுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன்

நாம் நாமேதான் முன்னெடுக்க வேண்டும். முதலில் எமது அரசியல் வாதிகள் கல்விமான்கள் அறிவு ஜீவிகள் அனைவரும் இத்தகைய களங்களில் இந்த அணுகு முறையின் நன்மை தீமைகளை ஆராய வேண்டும். மக்களிடம் கருத்துக் கணிப்பொன்றைப் பெறவேண்டும், அதன்பிறகு அதனை ஒரு போராட்ட வழிமுறையாகத் தொடரவேண்டும்.

அதாவது தமிழீழம் எங்கள்தேசம் என்ற கோரிக்கை தமிழகத்திலும் தமிழீழத்திலும் உருவாகி அது இந்தியாவிலும் உலக அரங்கிலும் முன்வைக்கப்படவேண்டும். நீங்களும் மேலும் என்ன செய்யலாமென்பதை இதில் அக்கறையோ உடன்பாடோ இருந்தால் ஆராயுங்கள்.

மட்டமான கருத்து.

ஈழக்கோரிக்கையே இந்திய நலனுக்கு எதிரானது என்று இந்தியா அறிவித்த பிறகு இந்தியாவுடன் இணையப்போகிறார்களாம், பின்னர் அங்கே இருந்துகொண்டு தமிழீழம் அமைக்கப் போகிறார்களாம்.

உங்களையும் முட்டாளாக்கி மற்றவர்களையும் முட்டாளாக்கப் பார்க்கிறீர்கள்.

உங்களின் உண்மையான நோக்கமென்ன?? இந்தியாவுடன் இன்னொரு மாநிலமாகச் சேர்வதா அல்லது ஈழத்துக்காக இந்தியாவிடம் உதவி கோருவதா???

நீங்கள் இந்திய உளவுப்பிரிவின் கைய்யாளாகச் செயற்படுகிறீர்களென்று நான் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

இந்தியாவோடை, அதுவும் நாங்கள்???? உதைவிட ஏதாவது ஆத்தில குளத்தில விழுந்து சாகலாம் :huh: . இந்தியா இவளவு காலமும் வெட்டிப் புடுங்கினது காணாது எண்டு இது வேறை :blink: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரு,நீங்கள் நித்திரையாக இருந்தால், எழுப்பி விடலாம்!

நித்திரை போல நடிப்பவர்களை, எழுப்ப முடியாது!

நீங்கள், தண்ணியின் சூடு, எவ்வாறு இருக்கின்றது எனப் பார்க்கின்றீர்கள் போல உள்ளது!

என்னைப் பொறுத்த வரையில், இந்தியா தனது ஆழுமையை, சிங்களத்திடம் தாரை வார்த்துவிட்டது, என்பதே உண்மை!

தமிழனின் இப்போதைய தேவை, புத்தி ஜீவிகளல்ல!

அவனுக்குத் தேவை, அவனது தினசரி வாழ்வு!

இனிமேலும் ஈழத்தமிழன் மீது குதிரையோடாதீர்கள்!

அவனை, அவன் வழியில் நீங்கள் விட்டு விட்டாலே, தமிழனின் பிரச்சனைகள அரைவாசி தீர்ந்து விடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இந்திய உளவுப்பிரிவின் கைய்யாளாகச் செயற்படுகிறீர்களென்று நான் நினைக்கிறேன்.

திரு ரங்கநாதன்

உங்களது மேற்படி குற்றச்சாட்டையிட்டு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை.

நீங்கள் மிகவும் அதிகமாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நாம் இந்தக் கருத்தைக் கொஞ்சம் நிதானமாக ஆராயலாம். ஓன்றும் அவசரமில்லை. நாம் அழிந்து போக இன்னும் பத்து வருடமாவது செல்லும். அதற்கிடையில் உங்களின் கனவுகள் (ஏதுமிருந்தால்) அது கூட நிறைவேறி விடலாம்.

இந்திய உளவுப்பிரிவு நம்மில் யாரையாவது நான் கூறியுள்ள வழியில் சிந்தியுங்கள் செயற்படுங்கள் என்று கூறுமாயின் அதையிட்டு நான் மகிழ்வடைவேன். ஏனென்றால் மீட்சிக்கான ஒரே பாதை இதுவாகத்தானிருக்க முடியும் என்று நம்புபவன் நான். அதை அவர்களே ஆரம்பித்து வைத்தால் அதில் ஒன்றும் தீமையில்லை.

இங்கே கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது அதற்கான தூண்டற்பேறு என்ன என்பதை அறிவதற்காகவே. ஆகவே இதிலுள்ள சாதக பாதங்களையும், இது நடைமுறைச் சாத்தியமானதா என்பதையும், எமது இனம் இந்தக் கருத்தை எப்படி எதிர்கொள்ளும் என்பதையும் முடிந்தால் ஆராயுங்கள். அப்படியாயின் வாதங்களை முன்வைக்க முடியும்.

யாரும் சொல்லி ஒரு கருத்தை உருவாக்குமளவுக்கு நான் ஓர் அடி முட்டாளாகவோ அல்லது அடிவருடியாகவோ சீடப்பிள்ளையாகவோ இல்லை. அதையிட்டுச் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

நீங்கள் பத்திரிகைகளி; வாசித்தவற்றை எழுதியிருப்பதாலும் அவற்றிற்குப் பதில் சொல்வது இங்கே தொடர்பற்ற விடயமாகப் போய்விடுமாதலாலும் நீங்கள் எழுதிய எல்லாவற்றையும் நான் வாசித்தாலும் அவற்றுக்குப் பதில் கூறமுயலவில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

[size=4] இந்திய யூனியனுடன் இணைந்தால் என்ன? [/size]

[size=4]இதற்கு இன்று ஈழத்தமிழர்களும் சோனியா தலைமையிலான காங்கிரசின் இந்திய நடுவண் அரசும் விரும்பினாலும் எவ்வாறு இது சாத்தியமாகும்? [/size]

[size=4]சிங்களம் இறைமையுள்ள ஐ.நா. நாடு. எனவே ஐ.நா. அங்கீகாரம் வேண்டும்? அப்படியானால் அது சாத்தியமா? சீனா அதை ஆதரிக்குமா? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரு,நீங்கள் நித்திரையாக இருந்தால், எழுப்பி விடலாம்!

நித்திரை போல நடிப்பவர்களை, எழுப்ப முடியாது!

நீங்கள், தண்ணியின் சூடு, எவ்வாறு இருக்கின்றது எனப் பார்க்கின்றீர்கள் போல உள்ளது!

என்னைப் பொறுத்த வரையில், இந்தியா தனது ஆழுமையை, சிங்களத்திடம் தாரை வார்த்துவிட்டது, என்பதே உண்மை!

தமிழனின் இப்போதைய தேவை, புத்தி ஜீவிகளல்ல!

அவனுக்குத் தேவை, அவனது தினசரி வாழ்வு!

இனிமேலும் ஈழத்தமிழன் மீது குதிரையோடாதீர்கள்!

அவனை, அவன் வழியில் நீங்கள் விட்டு விட்டாலே, தமிழனின் பிரச்சனைகள அரைவாசி தீர்ந்து விடும்!

புங்கையூரான்

தண்ணியைத்தொட்டுப் பார்த்துத்தானே சூட்டை அறிய முடியும்.

இந்தியாவின் ஆளுமையை ஓரளவு இலங்கையிடம் விலைபோகச் செய்தது நாங்கள்தான் என்றே நான் நினைக்கிறேன்.

ஈழத் தமிழனின் இன்றைய பரிதாபத்திற்குரிய தினசரி வாழ்வை எண்ணித்தான் இந்தக்கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் கையிலேயே இருக்கிறது.

காலம் சிலவேளை இத்தகைய கருத்துக்களுக்கு மதிப்பளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இந்திய யூனியனுடன் இணைந்தால் என்ன? [/size]

[size=4]இதற்கு இன்று ஈழத்தமிழர்களும் சோனியா தலைமையிலான காங்கிரசின் இந்திய நடுவண் அரசும் விரும்பினாலும் எவ்வாறு இது சாத்தியமாகும்? [/size]

[size=4]சிங்களம் இறைமையுள்ள ஐ.நா. நாடு. எனவே ஐ.நா. அங்கீகாரம் வேண்டும்? அப்படியானால் அது சாத்தியமா? சீனா அதை ஆதரிக்குமா? [/size]

தமிழீழத்தை ஐநாவி;ல் அங்கீகாரம் பெறவைக்கப் போராடுவதிலும் இது சாத்தியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு ரங்கநாதன்

உங்களது மேற்படி குற்றச்சாட்டையிட்டு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை.

நீங்கள் மிகவும் அதிகமாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். நாம் இந்தக் கருத்தைக் கொஞ்சம் நிதானமாக ஆராயலாம். ஓன்றும் அவசரமில்லை. நாம் அழிந்து போக இன்னும் பத்து வருடமாவது செல்லும். அதற்கிடையில் உங்களின் கனவுகள் (ஏதுமிருந்தால்) அது கூட நிறைவேறி விடலாம்.

இந்திய உளவுப்பிரிவு நம்மில் யாரையாவது நான் கூறியுள்ள வழியில் சிந்தியுங்கள் செயற்படுங்கள் என்று கூறுமாயின் அதையிட்டு நான் மகிழ்வடைவேன். ஏனென்றால் மீட்சிக்கான ஒரே பாதை இதுவாகத்தானிருக்க முடியும் என்று நம்புபவன் நான். அதை அவர்களே ஆரம்பித்து வைத்தால் அதில் ஒன்றும் தீமையில்லை.

இங்கே கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது அதற்கான தூண்டற்பேறு என்ன என்பதை அறிவதற்காகவே. ஆகவே இதிலுள்ள சாதக பாதங்களையும், இது நடைமுறைச் சாத்தியமானதா என்பதையும், எமது இனம் இந்தக் கருத்தை எப்படி எதிர்கொள்ளும் என்பதையும் முடிந்தால் ஆராயுங்கள். அப்படியாயின் வாதங்களை முன்வைக்க முடியும்.

யாரும் சொல்லி ஒரு கருத்தை உருவாக்குமளவுக்கு நான் ஓர் அடி முட்டாளாகவோ அல்லது அடிவருடியாகவோ சீடப்பிள்ளையாகவோ இல்லை. அதையிட்டுச் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

நீங்கள் பத்திரிகைகளி; வாசித்தவற்றை எழுதியிருப்பதாலும் அவற்றிற்குப் பதில் சொல்வது இங்கே தொடர்பற்ற விடயமாகப் போய்விடுமாதலாலும் நீங்கள் எழுதிய எல்லாவற்றையும் நான் வாசித்தாலும் அவற்றுக்குப் பதில் கூறமுயலவில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.

முதலில் எனது பெயர் ரங்கனாதன் இல்லை,

இரண்டாவது நான் எழுதிய விடயங்கள் நீங்கள் இங்கே எழுதிய கற்பனைக் கதைபோல பத்திரிக்கையில் வந்த கற்பனைக் கதைகள் இல்லை. உண்மையாக நடந்தவை, வரலாற்றில் இடம்பெற்றவை. அவற்றை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பதனால் மட்டுமே பத்திரிக்கைச் செய்தியாகிவிடாது.

நான் எழுதியவற்றிற்கு பதிலளிக்க விரும்பவில்லை என்பதை விட உங்களிடம் அதற்குப் பதில் இல்லை என்பதுதான் உண்மை. நான் எழுதியவற்றுக்கும் இங்கே நீங்கள் எழுதிய கற்பனைக் கதைக்கும் தொடர்பில்லாததால் பதிலளிக்க விரும்பவில்லை என்று சொல்லும் நீங்கள், நான் எழுதியதை முழுமையாகவே வாசிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

இந்தியா எனும் பெருந்தேசியவாதத்திற்குள் ஆற்படத் துடிக்கும் உங்கள் செயலாமல் நான் அனுபவிக்கப்போகும் கொடுமைகளை இன்று அங்கே நடந்துவரும் அக்கிரமங்களை உதாரணம் காட்டி எழுதியிருந்தேன். அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அல்லது அப்படி ஏற்றுக்கொண்டால், உங்களின் கற்பனைக் கதை அத்துடன் முற்றுப்பெற்றுவிடும் என்பதுதான் உண்மை. ஆகவேதான் கண்டும் காணாததுபோல விலத்தி நடக்கிறீர்கள்.

நான் முன்வைத்த கேள்விகள் நியாயமானவை. உங்களின் கற்பனைப்படி நாங்கள் இந்தியாவுடன் இணைகிறோம் என்றே வைத்துக்கொள்வோம், அதன்பிறகு எம்மை சிங்களவன் இப்போது நடத்துவதை விடக் கேவலமாக இந்தியா நடத்தாது என்று சத்தியம் செய்வதற்கு உங்களிடம் என்ன சான்று இருக்கிறது. அல்லது அப்படி நடக்காது என்பதற்கு உங்களிடம் உள்ள உத்தரவாதம் என்ன? அப்படி இந்தியா எங்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தும் பட்சத்தில் உங்களிடமுள்ள தெரிவுகள் என்ன?? இன்று இலங்கைக்கு அப்பு வைக்க இந்தியாவுடன் சேர்வதுபோல, நாளை இந்தியாவுக்கு ஆப்பு வைக்க யாருடன் சேர்வதாக உத்தேசம்?? இந்த அப்பு வைக்கும் நடவடிக்கைகள் எதுவரை நீளும்??

என்னைப் பொறுத்தவரை இலங்கையுடன் போராடி எமதுரிமைகளைப் பெறுவதை விட இந்தியாவுடன் போராடி எமதுரிமைகளைப் பெறுவது மிகவும் கடிணமனாது. ஏனெறால் இந்தியா ஈழத்தமிழர் மேல் எவ்வாறான அபிமானத்தை வைத்திருக்கிறதென்பதை இன்றுவரை நாம் கண்டும் அனுபவித்தும் வருகிறோம். இந்தியாவுடன் சேர்வதால் மட்டும் இந்நிலை மாறிவிடப்போவதில்லை.

இறுதியாக, இந்தியத் தேசமெங்கும் இருக்கும் மாநிலங்கள் எதற்காக தம்மை இந்தியத் தேசியத்திலிருந்து பிரித்து தனிநாடாக அமையவேண்டும் என்று போராடுகிறார்கள் என்று ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள்.

இப்போது இந்தியாவின் ஒரு அங்கமாக இருப்பவர்களே பிரிந்துபோக எத்தனிக்கும்போது, எம்மைக் கருவறுத்த ஒரு வல்லாதிக்கத்திடமே சென்று எங்களைக் கைய்யளிக்கலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது என்று எனக்குப் புரியவில்லை.

நான் கேட்கும் கேள்விகளுக்கு உங்களிடம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலகளிருந்தால் உங்கள் முயற்சிக்கு நானும் ஆதரவு தருவேன். ஆனால், நீங்கள் கேள்விகளைத் தவிர்த்துக்கொண்டு கற்பனையில் மட்டுமே சஞ்சரித்தால் நாம் உங்களுடன் பயணிக்கத் தயாரில்லை.

எனது கனவுகள் இன்னும் 10 வருடத்தில் அழியாது. உரிமையையும் விடுதலையும் கனவென்று கூறும் உங்களின் மனோபாவம் ஒரு முற்றான அடிமைத்தனத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒருவரின் ஆசையை என் கண்முன்னே கொண்டுவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு ரகுநாதன் (பெயர் மாறுபட்டதற்கு மன்னிக்கவும்)

நீங்கள் வாசித்து எழுதியுள்ள பத்திரிகைச் செய்திகளை நான் கற்பனைச் செய்திகள் என்று மறுக்க வரவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு இந்த விடயத்தை ஆராய முடியாது. அதைத்தான் எழுதினேன்.

உலகத்தில் அரசியல் தீர்வுகளுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது. தமிழீழத்தில் பிரதேசவாதம் இருக்காது என்று என்ன உத்தரவாதம் அதுபோலத்தான் இதுவும்.

ஆகவே உத்தரவாதங்களை என்னிடம் கேட்காமல் நீங்களாகவே சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

தமிழரின் நல்வாழ்வுக்கான உங்கள் முடிவு எது என்று எழுதுங்கள். அதுவே முக்கியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. பதிலை முன்வைய்யுங்கள், மேற்கொண்டு உங்கள் கற்பனையை ஆராயலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தேசத்தின்மீதான இந்திய பாக்கிஸ்த்தானிய ஆக்கிரமிப்புகள்பற்றி காஷ்மீரிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய விவரணம். ஜோதியில் ஐக்கியமாக நினைப்பவர்களுக்கு இது சமர்ப்பணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அரசால் 1984 இல் மேற்கொள்ளப்பட்ட சீக்கிய இனவழிப்பு.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டு முதலமைச்சர் , ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று கேட்ட பின்னரும், இவ்வாறான ஆலோசனைகளை எழுதுபவர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று விளங்கவில்லை.

இந்திய உபகண்டம் அய்ரோப்பிய யூனியனைப் போல் பல்வேறு நாடுகளின் கூட்டமைவாக இருந்த்தால் அதில் இணைவதில் எமக்கு பிரயோசனம் இருக்கும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத வட நாட்டு ஆளும் உயர் சாதிய வர்க்கத்தால் சிறைப்படுத்தப்படிருக்கும் பல்வேறு தேசிய இன அடிமைகளுடன் நாமும் சேர்ந்து சிறைப்படுவது ஒரு அடக்கு முறையில் இருந்து இன்னொன்றிற்க்குள் செல்வதாகவே இருக்கும்.

நான் கஷ்ட்டப்பட்டு பந்தி பந்தியாக எழுதி புரிய வைக்க முயன்றதை இரத்தினச் சுருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. பதிலை முன்வைய்யுங்கள், மேற்கொண்டு உங்கள் கற்பனையை ஆராயலாம்.

முதலில் பதிலளிக்கக் கூடிய கேள்விகளாகக் கேளுங்கள். அங்கே அது நடந்தது இங்கே இது நடந்திருக்கிறது ஆகவே நமக்கும் நடக்காதிருக்குமென்பதற்கு என்ன உத்திரவாதம்? என்பதை ஒரு கேள்வியாகக் கருத முடியாது. அது உங்களுடைய கருத்து.

தனிமனிதனாய் நின்று நான் உங்களுக்கு அந்த உத்தரவாதத்தையெல்லாம் தரமுடியாது. இது மொத்தத் தமிழினமும் எடுக்க வேண்டிய முடிவு. நீங்கள் ஏதாவது மாற்றுப்பாதையைச் சொன்னால் அதற்கு உத்தரவாதம் நான் கேட்டால் நீங்கள் தந்துவிடவா போகிறீர்கள். ஆகவே ஏதாவது உருப்படியான கேள்வியிருந்தால் கேளுங்கள். நீங்கள் அறிந்தவற்றையெல்லாம் தகவல்களாக இங்கே குவித்து அதன் சார்பாக எதையாவது கேட்டு சும்மா ஓர் வாதாடுகளமாக மாற்றிக் கொண்டிருக்க முயலாமல் இதனை ஓர் ஆய்வுக்களமாக மாற்ற முயலுங்கள். இதுவோர் பட்டிமன்;றமல்ல. இங்கே யார் வெல்கிறார் யார் தோற்கிறார் என்பது முக்கியமல்ல. உங்களது கேள்விகளுக்குப் பதில் கூறுவதற்காக இந்தக் களம் தொடக்கப்படவில்லை. பலரதும் கருத்துக்களை அறிவதற்காகவே தொடக்கப் பட்டிருக்கிறது.

உங்களுக்குத் தனித்தமிழீழதேசம் (உங்களது தீர்வு அதுவாயிருந்தால்) எவ்வளவு தூரம் கற்பனையோ அதேயளவு ஆனால் யதார்த்தத்தில் சாத்தியப்படக்கூடியதான எனது தீர்வுத் திட்டமும் கற்பனையானதுதான் அதனை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டுமென்பதில்லை. தமிழீழம் பொய்யாய்க் கனவாய்ப் புனைகiதாயாயப் போய்விட்ட ஒன்று. இப்போது மிஞ்சியிருப்பது புலம்பெயர் தேசங்களில் பொழுது போக்குக்காக இயங்குகின்ற இயக்கங்கள்தான். நமது தாயகத்தில் ஒன்று நடக்க நாமோ இங்கு அங்கீகாரமற்ற அரசியலொன்றை இணையங்கள், பத்திரிகை, பொதுக்கூட்டங்கள் என்பவற்றில் வாயிலாக நடத்தி வெறுங்கையால் முழம்போட்டுக் கொண்டிருக்கிறோம். போராட்டம் புஸ்வாணமாகிவிட்டது. இனிப் போராட ஊரில் யாருமில்லை. அங்கே ஆறுதலாகச் சுவாசிக்க விரும்பும் மக்களுக்குத் தங்கள் அரசியல் பாதையைக் கொண்டு செல்ல பாதுகாப்பானதும் இலகுவானதுமானவோர் செயல்திட்டம் வேண்டியிருக்கிறது. நான் இதைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் உங்களுடையதை (ஏதாவது இருந்தால்) முன்வையுங்கள் அவ்வளவே. செய்திகளைக் குவிப்பதில் பலனில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இது இலங்கைமீதான இந்தியாவின் ஆதிக்கம் கையை விட்டு போய்விட்டதையே உணர்த்துகிறது, அது சீனாவிடமும்,அமெரிக்காவிடமும், முள்ளிவாய்காலின் பின் சென்றுவிட்டது, இழந்துவிட்ட இந்திய ஆதிக்கத்தை சில ஏவலாளிகள் மூலம் திரும்ப பெற நடக்கும் ஒரு முயற்சி, இந்தியா 70 துகளில் ஈழதமிழ் இளைஞர்கள் மூலம் இலங்கையை கட்டுபடுத்த ஆரம்பிக்க பட்ட முயற்சியை திரும்பவும் ஆரம்பிக்கிறார்கள்.

இணைவது என்றால் பலமில்லாத இந்தியாவுடன் இணைவதவிட பலமான சீனா, அல்லது அமெரிக்காவுடன் இணையலாம், சீனாகாரனுக்கு கச்சதீவோ அல்லது காங்கேசன் துறை துரைமுகமோ தேவையாக இருக்கலம், அமெரிக்கனுக்கு திருகோணமலை துறைமுகம் தேள்வையாக இருக்கலாம், தேவையானது கொடுக்க பட்டால் எமக்கு தேவையான ஆதரவும் இணைவும் கிடைக்கப்பெறும்.. தலைவர் இந்த பெரும் வல்லரசுகளின் கைகளில் விழாமல், இந்தியாவுடன் நட்பாக இருக்க விரும்பியதுதான் பெரும் தவறாக முடிந்துவிட்டது, தலைவரின் தீர்கதரிசனம், இப்போதைய நிர்கதியில் இந்தியாவுக்கு உறைத்து இருக்கும், கண்கெட்டபின்னர் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோசனம்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு முதலமைச்சர் , ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று கேட்ட பின்னரும், இவ்வாறான ஆலோசனைகளை எழுதுபவர்கள் ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று விளங்கவில்லை.

இந்திய உபகண்டம் அய்ரோப்பிய யூனியனைப் போல் பல்வேறு நாடுகளின் கூட்டமைவாக இருந்த்தால் அதில் இணைவதில் எமக்கு பிரயோசனம் இருக்கும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத வட நாட்டு ஆளும் உயர் சாதிய வர்க்கத்தால் சிறைப்படுத்தப்படிருக்கும் பல்வேறு தேசிய இன அடிமைகளுடன் நாமும் சேர்ந்து சிறைப்படுவது ஒரு அடக்கு முறையில் இருந்து இன்னொன்றிற்க்குள் செல்வதாகவே இருக்கும்.

நண்பரே நீங்கள் இங்கையிலுள்ள வடகிழக்கு மாகாணங்களை ஐரோப்பிய யூனியனிலுள்ள நாடுகளைப் போல கற்பனை பண்ணி அவர்களுடன் ஒப்பிடுகிறீர்கள். முதலில் அந்தக் கருதுகோளை இங்கு கொண்டு வராதீர்கள். ஓன்றுமேயில்லாத வெறும் தாயக் கோரிக்கையை அதுவும் யாரும் ஏற்றுக்கொள்ளாததை வைத்துக்கொண்டு அதீதக்கற்பனையில் மூழ்குவதில் பயனில்லை. இதே எண்ணக் கருவுடன் இருந்துகொண்டு இங்கே கருத்தெழுதுபவர்களுக்கு இனிப் பதிலளிப்பது வீண்வேலையென நினைக்கிறேன்.

முதலில் எங்கள் தாயகத்தையும் அதன் அடையாளத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டியதே இன்றை முதல் வேலை. அதற்குத்தான் இந்தியாவுடனான கூட்டு எமக்குத் தேவாயாயயிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்

தண்ணியைத்தொட்டுப் பார்த்துத்தானே சூட்டை அறிய முடியும்.

இந்தியாவின் ஆளுமையை ஓரளவு இலங்கையிடம் விலைபோகச் செய்தது நாங்கள்தான் என்றே நான் நினைக்கிறேன்.

ஈழத் தமிழனின் இன்றைய பரிதாபத்திற்குரிய தினசரி வாழ்வை எண்ணித்தான் இந்தக்கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் கையிலேயே இருக்கிறது.

காலம் சிலவேளை இத்தகைய கருத்துக்களுக்கு மதிப்பளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

நீங்கள் வரலாற்றை ஒருபோதுமே படிக்கவில்லை என்பது தெரிகிறது. உங்களுக்கு ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன் கேளுங்கள்.

இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையிலான மலைப்பகுதியான் ஒரு தேசம்தான் காஷ்மீர். இந்தியா சுதந்திரம் அடையும்வரை காஷ்மீர் கூட ஒரு சிறிய இந்துக் குடியரசாகத்தான் இருந்தது. பெரும்பான்மையினராக முஸ்லீம்கள் இருந்தாலும் கூட, காஷ்மீரத்து மன்னர் ஒரு இந்து.

2 ஆம் உலக யுத்தத்தின் முடிவில் தனக்குக் கீழிருந்த பல நாடுகளை விடுவித்த இங்கிலாந்து இந்தியாவையும் பாக்கிஸ்த்தானையும் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரித்துக் கொடுத்தது. அதுவரை தனது பாதுகாப்புப் பற்றிக் கவலைப் படாமலிருந்த காஷ்மீர், தனது எல்லையில் முஸ்லீம் நாடான பாக்கிஸ்த்தான் உருவாகியபோது பயந்தது. சிலவேளை தனது பெரும்பான்மை மக்களான முஸ்லீம்களுக்கு ஆதரவாக பாக்கிஸ்த்தான் படையெடுத்து வந்து தமது தேசத்தை ஆக்கிரமிக்கலாம் என்று பயந்த காஷ்மீரத்து மன்னர், அப்போதிருந்த இந்தியப் பிரதமரான ஜவர்லால் நேருவுடன் ருடன் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டார். அதன்படி பாக்கிஸ்த்தான் தங்களை ஆக்கிரமிக்குமிடத்து இந்தியா காஷ்மீருக்கு பாதுகாப்பாக வருமென்பதே ஒப்பந்தம்.

இறுதியில் நடந்ததோ குரங்கு அப்பம் பிட்ட கதையாக ஆஸாத் காஷ்மீரை பாக்கிஸ்த்தான் ஆக்கிரமிக்க, இந்தியாவோ ஜம்முக் காஷ்மீரை ஆக்கிரமித்துக்கொண்டது. பின்னர் காஷ்மீர் மக்களுக்கு நடைபெற்று வரும் அநியாயம் உலகம் அறிந்தது.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், நீங்கள் சிங்களத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்க இந்தியாவை நாடி ஓட, அதுவோ உங்களை முழுமையாக அடிமையாக்கி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பரே நீங்கள் இங்கையிலுள்ள வடகிழக்கு மாகாணங்களை ஐரோப்பிய யூனியனிலுள்ள நாடுகளைப் போல கற்பனை பண்ணி அவர்களுடன் ஒப்பிடுகிறீர்கள். முதலில் அந்தக் கருதுகோளை இங்கு கொண்டு வராதீர்கள். ஓன்றுமேயில்லாத வெறும் தாயக் கோரிக்கையை அதுவும் யாரும் ஏற்றுக்கொள்ளாததை வைத்துக்கொண்டு அதீதக்கற்பனையில் மூழ்குவதில் பயனில்லை. இதே எண்ணக் கருவுடன் இருந்துகொண்டு இங்கே கருத்தெழுதுபவர்களுக்கு இனிப் பதிலளிப்பது வீண்வேலையென நினைக்கிறேன்.

[size=6]பதில் அளிக்க முடியாததலைப்பை இங்கே கொண்டு வந்து இருக்ககூடாது, கொண்டுவந்தால் பதில் அளித்தே தீர வேண்டும்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]பதில் அளிக்க முடியாததலைப்பை இங்கே கொண்டு வந்து இருக்ககூடாது, கொண்டுவந்தால் பதில் அளித்தே தீர வேண்டும்.[/size]

உங்கள் கேள்வியே பதிலளிக்கத் தேவையில்லாதது. நான் கொண்டு வந்த கருத்தல்ல. நீங்கள் இறைமையும் சுயாதிபத்தியமுமுள்ள ஒரு நாடாக நமது ஊர்களைக் கருதி அந்த எண்ணக் கருவின் அடிப்படையில் கேள்விகளைக் குவிக்கிறீர்கள். உங்கள் எண்ணக்கருவில் நானில்லை ஆகவே பதிலளிக்க வேண்டிய அவசியமுமி;லை.

Link to comment
Share on other sites

நண்பரே நீங்கள் இங்கையிலுள்ள வடகிழக்கு மாகாணங்களை ஐரோப்பிய யூனியனிலுள்ள நாடுகளைப் போல கற்பனை பண்ணி அவர்களுடன் ஒப்பிடுகிறீர்கள். முதலில் அந்தக் கருதுகோளை இங்கு கொண்டு வராதீர்கள். ஓன்றுமேயில்லாத வெறும் தாயக் கோரிக்கையை அதுவும் யாரும் ஏற்றுக்கொள்ளாததை வைத்துக்கொண்டு அதீதக்கற்பனையில் மூழ்குவதில் பயனில்லை. இதே எண்ணக் கருவுடன் இருந்துகொண்டு இங்கே கருத்தெழுதுபவர்களுக்கு இனிப் பதிலளிப்பது வீண்வேலையென நினைக்கிறேன்.

முதலில் எங்கள் தாயகத்தையும் அதன் அடையாளத்தையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டியதே இன்றை முதல் வேலை. அதற்குத்தான் இந்தியாவுடனான கூட்டு எமக்குத் தேவாயாயயிருக்கிறது.

முதலில் ஆய்வு செய்வது என்றால் என்ன என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.சமூகத்தில் இருக்கும் பிரச்சினை என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சிறிலங்காவில் தமிழர்கள் மீதான அடக்குமுறை என்பது கற்பனை ஆனது இல்லை, அது நிஜமானது.அடக்குமுறைக்கு எதிராக மக்கள் போராடியது தான் உலக வரலாறு.வெவ்வேறு பகுதிகளில் அது வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்தது.எமது மண்ணிலும் அது தான் நடைபெறும்.ஆய்வென்பது வெவ்வேறு நாடுகளில் பிரதேசங்களில் என்ன நடந்தது. எமது மண்ணில் என்ன நடக்கிறது, என்பதை ஒப்பு நோக்கி இனி என்ன நடக்க முடியும் என்று சொல்வது தான்.அதனால் தான் நருகுனாதன் மினக் கெட்டு பல தகவல்களை இணைத்தார். நீங்கள் அவை எவற்றிற்க்கும் பதில் சொல்லாது ஆய்வு என்று தட்டிக் கழித்துள்ளீர்கள். இங்கே விதண்டாவாதாமாகக் கருத்தாடி இருப்பவர் நீங்கள் தான்.எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருப்பது உங்களின் கருத்தைத் தான் பலவீனமாக்கி உள்ளது.

இந்திய இராணுவம் இல்லாமல் நீங்கள் சொல்லும் தீர்வை அமுல்படுத்த முடியாது.காஸ்மிரிலும் மற்றும் மானிலஙகளிலும் இந்திய இராணுவம் என்ன செய்கிறது, ஈழத்தில் என்ன செய்தது எல்லாம் எம் மக்களுக்குத் தெரியும்.ஆகவே உங்களைப் போன்றவர்களின் கனவுகள் வெறும் இந்திய மேலாதிக்கக் கனவாகவே இருக்கும்.

ஒரு சில புலம் பெயர் அமைப்புக்களை, தனி நபர்களை ஆசை வார்த்தை காட்டி இந்திய உளவு அமைப்பு ஆளுமை செய்து வருவது எமக்குத் தெரியும்.அதன் ஓர் அங்கம் தான் உங்களின் கண்மூடித் தனமான கருத்து.இன் நபர்களும், அவர்கள் சார்ந்த்த அமைப்புக்களும் புலம் பெயர் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்.அது தெரிந்து தான் இவர்கள் மறைமுகமாக இயங்கி வருகிறார்கள்.எல்லாம் வெளியால் வெகு விரைவில் வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம் களவு செய்ய துணிந்த இவர்கள் மீது மிகச் சரியான நடவடிக்கை எடுக்கபட்டதால் களவு எடுப்பதில் ருசிப்பட்டு தொடர்ந்தும் களவு செய்யும்  வாய்ப்பு தடுக்கபட்டுவிட்டது .இனி இந்தியா சென்று பதவியில் இருக்கும் போது மக்களிடம் ஊழல் லஞ்சம் என்று கொள்ளையடிக்க மாட்டார்கள் 🙏
    • அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.