Archived

This topic is now archived and is closed to further replies.

பிழம்பு

2000மாம் ஆண்டு என்னை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டது –எரிக் சொல்ஹெய்ம்

Recommended Posts

2000 மாம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, தம்மைகொலை செய்ய முயற்சித்ததாக எரிக் சொல்செய்ம் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குச் சக்திகள் தமக்கு கொலை மிரட்டல்விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

2000மாம் ஆண்டு மே மாம் 22ம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கபண்டாரநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் தாம் உள்ளிட்ட நோர்வே பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது குண்டுத் தாக்குதல் நடத்தி தம்மை படுகொலை செய்ய சில தரப்பினர் முயற்சி செய்ததாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அப்டீன்போஸ்டின் என்னும் நோர்வேயிலிருந்து வெளியாகும் பத்திரிகைக்குஅளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

படுகொலை முயற்சி தொடர்பான தகவல்களை அப்போதைய பாதுகாப்புதரப்பினருக்கு தாம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடும்போக்குடைய சிங்கள மக்கள் பற்றி தெரிந்திருந்த, நோர்வேயில்வாழும் மக்களும் கொலை முயற்சி குறித்த தகவல்களை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வே பிரஜைகள் என்ற ரீதியில் உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடியஒரே இடமாக இலங்கை காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மெய்ப்பாதுகாவலர்கள் இன்று தாம் இலங்கையின் எந்தவொரு பகுதிக்கும்விஜயம் செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விஜயத்தை முடித்துக் கொண்டு சொல்ஹெய்ம் நாடு திரும்பிய அதேதினத்தில் இலங்கைக்கான நோர்வேத் தூதரகம் மீது கைக்குண்டுத் தாக்குதல்நடத்தப்பட்டிருந்தது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/80755/language/ta-IN/article.aspx

Share this post


Link to post
Share on other sites

இதெல்லாம் புதுசு இல்லைத்தானே? ராஜீவுக்கும் இதே தான் நடந்தது.

Share this post


Link to post
Share on other sites

[size=4]அப்படியானால் இந்த 'சமாதான தூதுவர் ' எவ்வாறுதான் 'சமாதானம்' எனக்கூறி இந்தக்கொலையாளிகளுடன் தமிழர்களை வாழச்சொல்லி கேட்டாரோ? கைவிட்டாரோ?[/size]

Share this post


Link to post
Share on other sites

[size=4]அப்படியானால் இந்த 'சமாதான தூதுவர் ' எவ்வாறுதான் 'சமாதானம்' எனக்கூறி இந்தக்கொலையாளிகளுடன் தமிழர்களை வாழச்சொல்லி கேட்டாரோ? கைவிட்டாரோ?[/size]

அதுதானே.................

Share this post


Link to post
Share on other sites

2000 ஆம் ஆண்டு நடந்ததை 2012 ஆம் ஆண்டு சொல்கிறார். இவ்வளவு காலம் தமிழர்கள் துன்பத்தில் இன்பம் கண்டாரோ?

Share this post


Link to post
Share on other sites

புலிகளை நலியச் செய்ததே இந்த பேச்சுவார்த்தை தான்.நோர்வேயின் பங்கு அளப்பரியது.

விதார் ஹெல்கசனுக்கு( :unsure: )பூநகரியில் ஸெல் அடித்ததும் ஒரு கொலை முயற்சி தான்.

Share this post


Link to post
Share on other sites

[size=3]

கொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட றோகணவின் மகன் உவிந்துவும்!

Rohana-Wijeweera-JVP-DYS-300x234.jpg“ ஒரு நாகரீகமடைந்த தேசமாக, எதிர்காலச் சந்ததிக்காக,எதிர்காலத்தில் நிகழக்கூடிய இனக் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய இன நல்லிணக்கம் அவசியமாகிறது. தமிழ் அரசியலைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல் தெற்கு அரசியலின் குருட்டுத்தனமானதும் இறுக்கமானதுமான அரசியல் காரணமாக தமிழ் அரசியல் எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளதென்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.”

- உவிந்து குருகுலசூரிய.

“இங்கே கொள்கைகள் இருக்கின்றன இங்கேஉண்மைகளும் இருக்கின்றன. கொள்கைகள் மாறுபடலாம்ஆனால் எப்படியிருப்பினும் உண்மைகள் மறுக்கப்படமுடியாதவை. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இளையவர்கள் முதியவர்கள் என்ற பாகுபாடின்றித் தாக்கப்பட்டார்கள். இன்னும் குழந்தைகள் கூடத் தாக்கப்பட்டார்கள். தமிழர்கள் தங்களுடைய வாகனங்கள் உடமைகள் கட்டிடங்கள் வீடுகள் தொழிற்சாலைகள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டதைக் கண்ணுற்றார்கள். அவர்கள் அவமானப்பபடுத்தப்பட்டு நாதியற்றவர்களாக அகதிகளாகப் பயத்துடன் வாழவிதிக்கப்பட்டார்கள்”

இதயத்திலிருந்து வரும் ஒரு அழுகை…. 1983ம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்தது என்ன? (ஆயர் லக்ஷ்மன் விக்கிரமசிங்கவின் கடிதத்திலிருந்து

சனல் நான்கின் “கொலைக்களம்” விவரணப்படத்தின் இயக்குனர் கொலம் மக்றே சென்ற கிழமை இவ்வாறுஎழுதுகிறார்: 12 வயதுச் சிறுவன் நிலத்தில் விழுந்துகிடக்கிறான். இடுப்பிற்குமேல் நிர்வாணமாக்கப்பட்டு மார்புப் பகுதியில் அய்ந்து குண்டுத் துளைகளைக்கொண்டிருந்த அவன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வனான பாலசந்திரனாவான். அவனுக்கருகில் அவனது அய்ந்துமெய்ப்பாதுகாவலர்களின் உடல்களும் கிடந்தன. அவர்கள் நிர்வாணமாகவும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் சுடப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. மேலும் சாட்சியங்களை வைத்துப்பார்க்கும் போது இலங்கை அரசு சரணடைந்த புலிகளின் தலைவர்களையும்விடுதலைப்புலிப் போராளிகளையும் அது குழந்தைகளாக இருந்தபோதும் கூடக் கொல்வதில் ஒரு தெளிவான திட்டமிடலை அணுகுமுறையை கொண்டிருந்தது புலப்படுகிறது.

இதுவேதான் இலங்கை அரசுக்குள்ள பிரச்சினையும் ஆகும்எனேனில் இந்தக் கொலை ஒரு தற்செயலான அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவமாக இருக்கவில்லை என்பதுதான். அவ்வாறு இருந்திருந்தால் இதனை கோபம் கொண்ட இராணுவத்தினரின் எழுந்தமானமான நடவடிக்கை என்று புறந்தள்ளியிருக்கலாம். இங்கே பாலச்சந்திரன் பிரபாகரனின் மகனாக இல்லாதிருந்தால் சிலவேளை இன்றைக்கு உயிருடன் இருந்திருக்கக்கூடும் என ஒருவர் நினைப்பதற்கும் இடமுண்டு.

டெய்லிமிரரில் கடந்த புதன்கிழமை வாசகர் ஒருவர் பின்வருமாறு பின்னூட்டமிட்டிருந்தார்.

யுத்தம் ஒன்றில் நிகழும் குழந்தை ஒன்றின் மரணம் அவலமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாலச்சந்திரனின் மரணத்திற்கு தேவையில்லாமல் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கடந்த முப்பது வருடப் போரில் கொல்லப்பட்ட குழந்தை பாலச்சந்திரன் மட்டுமே என்னும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முனைகிறது. ஆனால் நடந்து முடிந்த போரில் எண்ணுக்கணக்கற்ற குழந்தைகள் இறந்து போனவர்களினதும் பாதிக்கப்பட்டவர்களினதும் பட்டியலில் அடையாளமற்றவர்களாக இருக்கிறார்கள்.

பிரபாகரனின் மகனைக் கொல்வது என்பது மேற்குறித்தது போல ஒரு சாதாரணமான விடையமா?

நடந்து முடிந்த இரத்தக்களரியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்;பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான் ஆனால் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டது சாதாரணமான விடையம் என நான் கருதவில்லை.

இது போர்க்குற்றம் என்ற ஒரு குற்றச்சாட்டிற்கு அப்பால் இந்தக் கொலையை இலங்கைச்சமூகத்துள் நிலவும் வன்முறையான கலாசாரக்கட்டமைப்பை வெளிப்படையாகக் காட்டும் ஒரு அசாதாரணமான சம்பவமாகக் கருதுகிறேன்.

முரண்பாடுகளைத் தீர்க்கும் வல்லுனர்கள் சொல்வது போல் இராசதந்திரிகள் சமரசப் பேச்சாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் உலகில் நிலவும் முரண்பாடுகளை கடந்த 50 வருடங்களாக ஆராய்ந்து முரண்பாடுகள் நிலவும் சமுகங்களில் நிலவும் வன்முறைகள் பற்றித் தெளிவான நுண்மையான கோட்பாட்டைஉருவாக்கியிருக்கிறார்கள்.

முரண்பாட்டுக்கும் வன்முறைக்குக்கும் உள்ள தொடர்பை விளக்கும் கோட்பாட்டைப்பற்றி முதலில் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

எல்லாவிதமான முரண்பாடுகளும் வன்முறையை வெளிப்படுத்துபவை அல்ல. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது முரண்பாடுகள் தோன்றுகின்றன. சிலர் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுவார்கள் மற்றவர்கள் எதிர்ப்பார்கள். இந்த உடன்பாடின்மை அல்லது முரண்பாடு என்பது அமைதியான முறையில் வழிநடத்தப்பட்டால் அது முன்னேற்றகரமான நடைமுறையாக இருக்கும். ஆனால் ஒரு முரண்பாடு சரியான முறையில் வழிநடாத்தப்படாவிட்டால் அது வன்முறையாக மாறுகிறது. முரண்பாடு ஒன்றில் வன்முறைகைக்கொள்ளப்படும் போது மக்கள் அச்சமடைகிறார்கள். மக்கள் தமது பாதுகாப்பிற்கு இருப்பிற்கு ஆபத்துஏற்படுவதை உணர்கிறார்கள்.

பொதுவில் முரண்பாடு என்று சொன்னாலேயே வழமையாக வன்முறை நிறைந்த முரண்பாட்டைச் சுட்டுவதாகவே ஆகிவிடுகிறது…

பௌதீக ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் வெளிப்படையானவை எல்லோராலும் அறிந்து கொள்ளப்படக்கூடியவை. தனிநபர்கள் அல்லது குழுக்கள் தம்முள் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஒருவரை ஒருவர் காயப்படுத்தவோ கொல்லவோ முயற்சி செய்கிறார்கள் இதனால் பலர் பாதிக்கப்படவும் செய்கிறார்கள்

ஆனால் இவற்றுக்கப்பால் ஒரு சமூகத்தை ஆழமாகப் பாதிக்கின்ற பல்வேறு வகையான வன்முறை வடிவங்களும் இரக்கக்கூடும். இவற்றை கண்டு கொள்வதும் ஆராய்வதும் விளங்கிக் கொள்வதும் மக்களுக்கு கடிமனாக இருக்கும். இவை மறைந்திருக்கும் வன்முறைகளாக இருக்கும். கலாச்சார ரீதியானவன்முறைகளையும் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளையுமே இங்கே குறிப்பிடுகிறேன்.

பல ஆண்டுகளாக ஒரு குழு இன்னுமொரு குழு மீது கலாச்சார ரீதியான வன்முறையைப் பிரயோகித்திருக்கக் கூடும். பௌதீக ரீதியான வன்முறையை நியாயப்படுத்துகின்ற பேச்சுக்கள் உரையாடல்களை ஒரு குழு நடத்தியிருக்கலாம். வன்முறையைத் தூண்டுகிற விம்பங்களை பரப்பி இருக்கலாம்.

வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுக்களைப் பேசுதல் தமது சமூகத்தைச் சாராதவர்கள் மீதான வெறுப்புணர்வை வளர்த்தல் போர்வீரம் பற்றிய ஜதிகங்களை பரப்புதல்வளர்த்தல் பாலியல் ரீதியான ஒடுக்குமுறைகளை போரை நியாயப்படுத்தும் சமயக் கருத்துக்களை ஊக்குவித்தல் போன்றவை கலாச்சார ரீதியான வன்முறைகளைச் சார்ந்தவை.

ஒரு குழுவினது அல்லது சமூகத்தினது மரபுரீதியான பழக்க வழக்கங்களில் அல்லது அவர்களது சட்டங்களில்இருக்கக்கூடிய வன்முறையைக் கட்டமைக்கப்பட்ட வன்முறையாகக் கருதலாம்.

இத்தகைய வன்முறைகள் மிகவும் பாதிப்புக்களை உண்டுபண்ணக்கூடியவை. இவை இயல்பாகவேஅந்தச்சமூகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லது கண்டும் காணாமல் விடப்பட்டிருக்கும். நிறுவனமயப்பட்ட நிறவாதம் அல்லது பாலின ஒடுக்குமுறையை இங்கேஉதாரணமாகக் குறிப்பிடலாம்.

அரச அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் வாய்ப்புக்களை வழங்கும் போது நட்புக்காக உறவுக்காக தகுதி உள்ளவர்களை புறக்கணித்தல்; ஊழல் செய்தல்;வறுமை ஏற்படுத்தல் கொடூரமான சுரண்டலைச் செய்தல்;பால் அல்லது இனரீதியான ஒடுக்குதலைச் செய்தல் குடியேற்றவாதத்திற்குத் துணைநிற்றல் போன்ற இன்னோரன்ன விடையங்களைச் செய்வதற்காக சட்டத்தைப் பேணுவதிலும் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும் பாரபட்சம் காட்டுதலைக் கட்டமைக்கப்பட்ட வன்முறையின் ஒரு பகுதியாகக் கருதலாம்.

இந்த வன்முறைகள் மிகமிக முக்கியமாக அடையாளம் காணப்பட வேண்டியவை. ஏனேனில் இவைகள்தான் பௌதிக ரீதியான வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருப்பவை.

பௌதீகரீதியான வன்முறையை அடையாளம் கண்டு நிறுத்துவது மட்டும் போதாது ஏனேனில் சமூகத்துள் மறைந்துள்ள கட்டமைக்கப்பட்ட கலாச்சார ரீதியான வன்முறைகளை களையாவிட்டால் பௌதீக ரீதியான வன்முறைகள் மீளவும் தலையெடுக்கவே செய்யும்.

போரை வென்றபின் ராஜபக்ச அமைதி வந்துவிட்டதாகக்கூறினார். உண்மையிலும் அவ்வாறு அமைதி ஏற்பட்டுவிட்டதா?

இப்போது பாலசந்திரன் கொல்லப்பட்ட நிகழ்வைஇலங்கையில் நிலவுகின்ற கட்டமைக்கப்பட்ட வன்முறைஎன்னும் கருத்தியலுடன் இணைத்துப் பார்க்க முடிகிறதா?

உங்களுக்கு அவ்வாறு முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஒரு நாகரீகமடைந்த தேசமாக, எதிர்காலச் சந்ததிக்காக,எதிர்காலத்தில் நிகழக்கூடிய இனக் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய இன நல்லிணக்கம் அவசியமாகிறது. தமிழ் அரசியலைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல் தெற்கு அரசியலின் குருட்டுத்தனமானதும் இறுக்கமானதுமான அரசியல் காரணமாக தமிழ் அரசியல் எவ்வாறு மாற்றமடைந்தது வந்துள்ளதென்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.

அரச வன்முறையாகட்டும்சரி அல்லது அரசு அல்லாத குழுக்களின் வன்முறையாகட்டும் சரி அது மக்களுக்கு எதிரானது என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.

அரசதலைவராகவும் அரசஇராணுவத்தின் தலைவராகவும் இருந்த இலங்கையின் எல்லா அரசியல்வாதிகளும் கொலைகளுக்கான உத்தரவை வழங்கியே இருந்தனர். அதுபோல புரட்சி அமைப்புக்களின் தலைவர்களாக இருந்த விஜயவீரவும் பிரபாகரனும் கூடக் கொலைகளுக்கான உத்தரவுகளை வழங்கியே இருந்தனர்.

தமிழ்ப்போராளிகள் கொண்டிருந்த பயங்கரவாதம் அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே ஏற்பட்டிருந்தது. இது ஒரு எதிர்விளைவாகும். 1983ம் ஆண்டு காலிமுகத்திடலில் தமிழர்களால் நடாத்தப்பட்ட அமைதியான போராட்டம் அந்நாளைய பிரதமர் பண்டாரநாயக்காவின் (S.W.R.D Banadarnaike.) உத்தரவின் பேரில் தாக்கப்பட்டு இரத்தக்களரியாக்கப்பட்டது.

அன்றைய பிரதமரினால் எவ்வாறு தாக்குதல்களுக்கான உத்தரவு வழங்கப்பட்டது என்பதை அன்றைய IGP ஆன த.சில்வா (S. W. O de Silva) 1958 ம் ஆண்டு ஜூன் மாதம் பொலிஸ் தலைமையகத்தில் நிகழ்ந்த இரகசிய கூட்டத்தில் DIG களுக்கு கூறியிருந்ததை யாவரும் அறிவர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து 20 வருடங்களின் பின்பு தமிழ்ப் போராளிகளின் பயங்கரவாதம் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப்புலிகளைத் ஸ்தாபித்ததுடன் தோன்றியது.

அரசல்லாத சிங்களப் போராளிகள் கடைப்பிடித்தபயங்கரவாதம் என்பது அரச வன்முறையின் விளைவாக வந்ததல்ல பதிலாக அரசைக் கைப்பற்றுவதற்கான வன்முறையாக அது உருவெடுத்தது.

இது றோகண விஜிய வீர JVP யை ஸ்தாபித்ததுடன் தோன்றியது.

1971ம் ஆண்டு JVP இன் பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு தனது பயங்கரவாதத்தைக்கட்டவிழ்த்து விட்டது.

இன்னொரு மொழியில் சொல்வதானால் தமிழ் போராளிகளின் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் தொடங்கியதன் பின்னரே தொடங்கியது. ஆனால் சிங்களப் போராளிகளின் பயங்கரவாதம் அரசு தொடங்கமுன்னரேயே தொடங்கிவிட்டது.

இன்றைக்கு அரசு அல்லாத இரண்டு பயங்கரவாதக்குழுக்களின் தலைவர்களும் உயிருடன் இல்லை. மேலும் இவர்கள் இருவரும் அரச பயங்கரவாதத்திற்கு பலியாகியும் உள்ளனர். இருவரும் தமது நோக்கங்களை அடைய முடியாமல் எதிர்வன்முறைக்குப் பலியாகியுள்ளனர்.

றோகண விஜிய வீர கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதையும் பயங்கரமாக்கிக் கொண்டேஅரசுக்குக்கெதிராகப் போர் செய்துகொண்டிருந்தார். றோகண விஜிய வீர தனது மனைவி மக்களுடன் கைது செய்யப்பட்ட போது நாவலப்பிட்டியில் உள்ள பண்ணையொன்றின் உரிமையாளராக அத்தநாயக்க என்ற பெயரில் வசித்துக் கொண்டிருந்தார். அதே வேளை ஆயிரக்கணக்காகன ஜே.வீ.பி போராளிகள் அரசுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால் பிரபாகரன் கடைசி நேரம் வரையும் அரசாங்கத்துடன் போர்க்களத்தில் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.

விஜிய வீர எப்படிக் கொல்லப்பட்டார்? பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார்? என்பதுவெல்லாம் அரச இரகசியமாகவே உள்ளன. பொதுமக்களுக்கு இவை ஒருபோதும் தெரியப்போவதில்லை. ஆனால் இங்கே பலகேள்விகள் எழுகின்றன.

இருதலைவர்களினது குடும்பங்களின் எதிர்காலம் எப்படி இருக்கின்றது?

அரசு விஜிய வீரவின் மனைவியையும் (சித்திராங்கனி) பிள்ளைகளான உவிந்து சுபுன் சகா, தசுன் எகா மற்றும் மூன்று பிள்ளைகளையும் எவ்வாறு நடாத்தியது?

பிரபாகரனின் மனைவியான மதிவதனி மற்றும் பிள்ளைகளான சார்ஸ் அன்ரனி,( சார்ஸ் அன்ரனி போர்க்களத்தில் ஆயுததாரியாக இருந்தார் எனவே அவரை விட்டுவிடுவோம்) பாலச்சந்திரன், துவாரகா ஆகியோரை எப்படி நடாத்தியது?

விஜிய வீரவின் குடும்பம் கொல்லப்படவில்லை. அவர்கள் அரசினால் நன்றாகப் பராமரிக்கப்பட்டார்கள். அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

சித்திராங்கனி விஜிய வீர யு.என்.பி கட்சி கூட தங்களுக்குநன்கு உதவியதாக கூறி இருந்தார். 2004ம் ஆண்டு ஜூன்20 ம் திகதி சித்திராங்கனி சண்டே லீடருக்கு அளித்த பேட்டியில் மறைந்த சனாதிபதி ரணசிங்க பிரேமதாச கூட தங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்ததாகக் கூறினார். எங்களுக்கு உதவி முக்கியமாகத் தேவைப்பட்ட கணத்தில் அவர் அதனைக் கவனமெடுத்துச் செய்ததாகவும் மட்டக்களப்புப்பல்கலைக்கழகத் திறப்பு விழாவுக்கு ஜூனில் வரும்போது திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்ட தங்களைச் சந்திக்க வருவதாகக் கூறியிருந்ததாகவும் ஆனால் அவர் அந்த ஆண்டு மே மாதத்தில் கொல்லப்பட்டுவிட்டதால் அது நிகழவில்லை எனவும் கூறியிருந்தார்.

எப்படி இருப்பினும் பிரபாகரனின் மனைவி பிள்ளைகளுக்கு (சார்ஸ்சைத் தவிர) உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பது எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியாது.

தீர்க்கப்பட்ட வெடிகுண்டுகளில் முதலாவது குண்டு பிரபாகரனின் மகனை நோக்கியே இருந்திருக்கவேண்டும் என்பதாக பிரித்தானியத் தடயவியல் நிபுணரான கலாநிதி பவுண்டர் கூறுகிறார். சிறுவனின் மார்பில் உள்ள குண்டு துளைத்த அடையாளங்களைப் பார்க்கும் போது சிறுவன் இரண்டு அல்லது மூன்று அடி இடைவெளிக்குள்ளேயே சுடப்பட்டிருக்க வேண்டும் எனப் புலனாகிறது. தன்னைச் சுடவந்த துப்பாக்கியினை எட்டிக் கரங்களால் தொட்டிருக்கக்கூடிய நிலையிலேயே அவன் சுடப்பட்டிருக்கிறான்.

விஜிய வீரவின் குடும்பத்துடன் ஒப்பிடும் போதுபிரபாகரனின் குடும்பம் பாரபட்சமான முறையிலேயே நடாத்தப்பட்டிருக்கிறது.ஏன்?

இதற்கு காரணம் இலங்கையில் நிலவும் கட்டமைக்கப்பட்ட வன்முறை.

ஏனேனில் பிரபாகரன் தமிழன்.

உவிந்து குருகுலசூரிய.

uvindu@jouranalist.com

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் தேவ அபிரா[/size]

Share this post


Link to post
Share on other sites

நோர்வே....

நோபல் பரிசை உலகுக்கு கொடுத்தாலும், அரச பயங்கரவாதத்துக்கு துணை போகும் நாடு.

நசுக்கிடாமல்... காரியம் பார்த்த, எரிக் சோல்ஹம்முக்கு...

ஒரு, நோபல் பரிசு குடுக்கவேணும்.

எல்லாம்... முடிஞ்சபிறகு, சோல்கைம் இனி... வாயைத்திறந்தால்....

உன்னைப் போல... ஒரு, நாதாரி இந்த உலகத்தில் இல்லை என.. நான் நினைப்பேன்.

Share this post


Link to post
Share on other sites