Archived

This topic is now archived and is closed to further replies.

akootha

குட்டிமணி முதல் நிமலரூபன் வரை

Recommended Posts

akootha    1,057

[size=5]'ஆடியும் ஜூலையும் : குட்டிமணி முதல் நிமலரூபன் வரை' [/size]

[size=4]ஜூலையில் முந்தி ஆடிப்பிறப்பு வரும். அதுக்கெண்டு ஒரு நாள் விடுமுறையும் வரும்.[/size]

[size=4]'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை, ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே! கூடிப் பனங்கட்டிக் கூழும் குடித்திடலாம்...' என்று பள்ளிச்சிறுவர்களெல்லாம் ஆடிப்பாடுவார்கள். ஆடிப்பிறப்பு அன்றைக்கு பள்ளிகள் மட்டுமல்ல அரசாங்க அலுவலகங்களிலும் விடுமுறை இருந்தது.[/size]

[size=4]ஆடிப்பிறப்பன்று எல்லா வீடுகளிலும் கூழ் காய்ச்சப்படும். இந்தக்கூழ் மச்சக்கூழல்ல. இது பனங்கட்டிக்கூழ். கலவை ஏதுமில்லாத பனங்கட்டி வாசம் வீசும் இந்தக்கூழை வயிறுமுட்டத் தமிழரெல்லாம் குடித்தார்கள். குடித்துக் கொண்டாடினார்கள். கூழுடன் கொழுக்கட்டையும் அவித்துத் தின்றார்கள்.[/size]

[size=4]கூழைக் குடித்துக்கொண்டே 'தங்கத்தாத்தா' என்ற சோமசுந்;தரப்புலவரின் அந்தப் பாட்டைப் பாடினார்கள்.[/size]

[size=4]அப்போது ஆடிக் கூழுக்கொரு பாட்டும் ஒடியற்கூழுக்கு இன்னொரு பாட்டுமாக இரண்டு பாடல்கள் இருந்தன. அப்போதென்ன இப்போதும் அந்தப்பாட்டுகள் இருக்கின்றனதான். ஆனால் அதையெல்லாம் யார்தான் பாடுகிறார்கள்?[/size]

[size=4]ஆடிப்பிறப்புக்கும் அந்தக்கூழுக்கும் நவாலி சோமசுந்தரப்புலவர் அருமையாகப் பாடிவைத்திருந்தார். அப்பொழுது அந்தப்பாட்டு பள்ளிப்பாடப்புத்தகத்திலும் இருந்தது.[/size]

[size=4]அதேபோல ஒடியற்கூழைப்பற்றி 'ஆசுகவி கல்லடி வேலன்' என்ற வேலுப்பிள்ளை பாடியிருந்தாhர். இந்தப்பாட்டும் பாடப்புத்தகங்களில் இருந்தது.[/size]

[size=4]ஆடியில் (ஜூலையில்) அப்படியே ஆடிப்பூரத்திருவிழா வரும். கொழும்பில் ஆடி வேல்விழா வரும். இப்படிப் பொதுவாகவே ஆடியென்றால் ஒரே கொண்டாட்டம்தான். கீரி மலைக்குப்போய் தந்தையர்க்குப் பிதிர்க்கடன் நிறைவேற்றும் ஆடி அமாவாசையும் ஜூலையில்தான் வரும்.[/size]

[size=4] [/size]

[size=4]இது மட்டுமா 'ஆடிப்பெருக்கு' என்று ஒரு படமும் அந்தநாளில் வந்தது. ஏ.எம் ராஜா, ஜிக்கி பாடிய அருமையான பாடல்களும் அந்தப் படத்தில் இருந்தன. அதையும் தமிழர்கள் பார்த்தார்கள். பார்த்து மகிழ்ந்தார்கள்.[/size]

[size=4]'ஆடித் தள்ளுபடி' என்று பொருட்களில் விலைக்குறைப்பு, சலுகை வழங்கல் எல்லாம் ஆடியில் சிறப்புத் தள்ளுபடியாக நடந்தன. இன்றைக்கும் 'ஆடித் தள்ளுபடி' என்று தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் போய்க்கொண்டிருக்கின்றன.[/size]

[size=4]ஆடியில் இன்னும் சில காரியங்களிருந்தன. ஆடியில்தான் கிணறு வெட்டினார்கள். அது கடுங்கோடை காலமல்லவா. கடுங்கோடையில் கிணறு வெட்டினால் பிறகு எந்தக் கோடையிலும் தண்ணீர் வற்றாது என்பது ஒரு காரணமும் நம்பிக்கையும். 'ஆடிக்கிணறு ஆழக்கிணறு'.[/size]

[size=4]'ஆடி விதை தேடி விதை' என்றொரு பழமொழியுமுண்டு. ஆடியில் விதை எடுத்தால் அந்த விதை நூறு வீதம் விளைச்சலைத் தரும் வினைத்திறனிருக்கும் என்பது அனுபவம். 'முளைதிறனும் விளைதிறனும்' ஆடிவிதைக்கு சிறப்பாக உண்டென்று விவசாயத் துறையாளர் சொல்கிறார்கள்.[/size]

[size=4]ஆடிமாதம் பற்றி இன்னுமுண்டு. 'ஆடிக்காற்றுக்கு அம்மியும் பறக்குமெ'ன்பார்கள். அந்தளவுக்கு ஆடியில் காற்றடிக்கும். அது சோழகக்காற்று. கடைச் சோழகம். அந்தக்காற்றுக்கு குளம் குட்டையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவே வற்றிவிடும். அது கடுங்கோடைக்காற்று. அனலாய் வீசும்.[/size]

[size=4]ஆனால், 'ஆடியிலே காற்றடித்தால் ஐப்பசியில் மழைபெய்யும்;' என்று சொல்வார்கள். ஆடிக்காற்றை தமிழகத்தில் 'மேகாத்து' என்றும் சொல்வார்கள். ஒரு காலத்தில் ஆடிமாதத்தில் வெள்ளம்பாயக்கூடிய அளவுக்கு மழை பெய்யும். அதை வைத்துத்தான் 'ஆடிப்பெருக்கு' என்று சொன்னார்கள். பிறகு அதை வைத்தே 'ஆடிப்பெருக்கு' என்ற படமும் அந்தநாளில் வந்தது. ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த முதற்படம். [/size]

[size=4]இந்தப் படத்தில்[/size]

[size=4]'காவேரி ஓரம் கவி சொன்ன காதல்[/size]

[size=4]கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்[/size]

[size=4]அலை மோதும் நிலை கூறவா..' என்ற பாடலும் இருந்தது.[/size]

[size=4]ஆடியில் பெய்யும் மழையைத் தொடர்ந்து விதைப்புக்கான ஆரம்பவேலைகள் தொடங்கிவிடும். வயலில் வரம்பு கட்டுவார்கள். பதிவான நிலத்தில் 'புழதி' போடுவார்கள். 'புழுதி போடுவது' என்றால் மாரிமழைபெய்யும் போது வெள்ளம் மூடிப் பயிர் அழிந்து விடாமல் இருப்பதற்கான முன்னேற்பாடு. அதாவது வெள்ளத்துக்கு 'முந்திப்பயிர் வளர்த்தல்'.[/size]

[size=4]தமிழர்கள் ஆடிப்பிறப்பைத்தான் பெரிதாகக் கொண்டாடினார்கள். ஆடிப்பிறப்பை வருசப் பிறப்பு மாதிரியே அவர்கள் கருதினர். ஆடியை விதைப்புக் காலம் என்றும் தை மாதத்தை விளைச்சலை அறுவடை செய்யும் காலம் என்றும் வகைப்படுத்தி வைத்திருந்தார்கள். அது ஆறுமாதப் பயிர் வளர்த்த காலம். நெல்லும் ஆறுமாதப் பயிராகவே இருந்தது. மரவள்ளியும் ஆறுமாதமாகவே இருந்தது. ஆடியிலே புதிதாகத் தொழில் தொடங்கினார்கள். இன்றும் பல இடங்களில் இந்த வழக்கமுண்டு. ஆரியர் வந்து ஆடியை ஒதுக்கி வைக்கும் வரையில் ஆடிதான் சிறப்புக் காலம்.[/size]

[size=4]இப்படி ஆடிபற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக ஆடி என்பது தமிழர்களின் வாழ்வில் முக்கியமாக இருந்தது.[/size]

[size=4]இப்படியெல்லாமிருந்த ஆடியில்தான் எங்களுக்கு எல்லாப் பொல்லாப்புகளும் வந்தன.[/size]

[size=4]'ஒரு ஆடி கலங்கினால் ஏழு ஆடி கலங்கும்' என்று ஆச்சி சொல்லுவா. ஆச்சி சொன்ன மாதிரியே காரியங்கள் நடந்தன. இப்போது நாங்கள் ஏழு ஆடியில் மட்டுமா கலங்குகிறோம். வருகின்ற எல்லா ஆடியும் கலங்கவைக்கும் ஆடியாகத்தானிருக்கு.[/size]

[size=4]ஆடிக்கலக்கம் அல்லது ஆடிக்கலகம் இன்னும் தீரவில்லை. 1983 ஜூலையில் ஜே.ஆர். மூட்டிய தீ.... இன்னும் அடங்கவில்லை. அது எரிகிறது. எரிந்து கொண்டேயிருக்கிறது. பாருங்கள் தமிழர்களின் ஆடியில் என்னமாதிரித் தீயை மூட்டியிருக்கிறார்கள் என்று.[/size]

[size=4]அன்றைக்கு மூட்டிய தீயில் தென்னிலங்கையில் தமிழர்கள் எரிந்தனர். சிறையிலிருந்த தமிழர்களையும் அது விட்டு வைக்கவில்லை. தங்கத்துரை, ஜெகன், குட்டிமணி, இராசகிளி என்று 53 பேரை அது தின்று தீர்த்தது.[/size]

[size=4]அந்தத் தீ இந்த ஆண்டும் (2012 இலும்) கொழுந்து விட்டுக் கொண்டேயிருக்கிறது. இப்போது அதே மாதிரிச் சிறையில் நிமலரூபனை அது தின்று தீர்த்திருக்கிறது.[/size]

[size=4]யாரோவெல்லாம் வருகிறார்கள், போகிறார்கள். இலங்கைப்பிரச்சினை பற்றிப் பேசாத ஆட்களும் இல்லை. நாடுகளும் இல்லை. அவரவர் தங்கள் தங்கள் விருப்பம், நோக்கம், தேவைக்கேற்றமாதிரி ஒவ்வொரு அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் சொல்கிறார்கள்.[/size]

[size=4]ஆனால் தமிழர்கள் தெருவிலும் திண்ணையிலும் குடிசையிலும் அகதி முகாமிலும் சிறையிலும் கிடந்து வாழவேண்டியதே யதார்த்தமாயிருக்கிறது.[/size]

[size=4]1983 ஜூலையில் தமிழர்களின் மீது தீப்பிடித்தது என்றேன். அப்பொழுது இலங்கையில் ஆட்சியிலிருந்தார் ஜே.ஆர் என்ற ஜே.ஆர். ஜெயவர்த்தனா. பண்டாரநாயக்கா, 1956 இல் செல்வநாயகத்துடன் தமிழரின் பிரச்சினைக்கு அரசியற் தீர்வு காணும் நோக்கில் உடன்படிக்கை ஒன்றைச் செய்தபோது அதற்கெதிராகக் கொழும்பிலிருந்து கண்டிக்குப் பாத யாத்திரை போனவர் இந்த ஜே.ஆர். இப்ப அவரே 'எல்லாம் வல்;ல' பெரும் அதிகாரத்திலிருந்தார். அதனால் தன்னை எதிர்ப்பவர் யார்? என்று கேட்டார். தமிழர்களைப் பார்த்துப் போர் என்றால் போர் என்று அறைகூவல் விடுத்தார்.[/size]

[size=4]எனவே நாடு தீப்பற்றி எரிந்தது.[/size]

[size=4]அப்போது மெல்;ல மெல்ல தமிழர்களின் போராட்டம் சூடு பிடித்திருந்த காலம்.[/size]

[size=4]யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் ஒரு கண்ணிவெடித் தாக்குதல் நடந்தது. அது 1983 ஜூலை 13. அதுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் எந்த வீதியில் போனாலும் எந்த ஒழுங்கைக்குள் சென்றாலும் அங்கே எப்போதென்று தெரியாமல் வருகிற ஆமிக்காரர்கள் சனங்களைத் தாக்கினார்கள்.[/size]

[size=4]அப்படிச் சனங்களைத்தாக்கிய இராணுவத்தின் மீது ஒரு கண்ணி வெடித்தாக்குதல். அதிலே பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதுவரையும் படையினருக்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே அந்தத் தாக்குதல்தான் பெரிய தாக்குதல். தாக்குதல் நடந்த இடத்திலேயே பதின்மூன்று இராணுவத்தினர் பலியாகினர். அந்தத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூத்த போராளிகளில் ஒருவராகிய செல்லக்கிளி அம்மான் என்பவர் சாவடைந்திருந்தார்.[/size]

[size=4]செல்லக்கிளியோடு கிட்டு, புலேந்திரன், சந்தோசம், அப்பையா, விக்ரர் மற்றும் பஸீர் காக்கா இப்படி விடுதலைப்புலிகளின் முக்கியமான போராளிகளெல்லாம் அந்தத் தாக்குதலில் பங்குபற்றினார்கள்.[/size]

[size=4]அந்தத்தாக்குதலில் புலிகளின் தலைவர் பிரபாகரனும் நேரடியாக ஈடுபட்டிருந்தார். 'அவர் (பிரபாகரன்) அந்தத்தாக்குதலில் நான்கு இராணுவத்தினரை சுட்டுக் கொன்றார்' என்று அந்தத் தாக்குதலைப்பற்றி கிட்டு எழுதியிருக்கிறார்.[/size]

[size=4]அந்த ஜூலை (ஆடி) யில் அது ஒரு சரித்திர நிகழ்வாக இருந்தது. இந்தத்தாக்குதல் நடந்து இரண்டு நாளில் தங்களுடைய தோல்வியின் வெப்பியாரத்தைக் காட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தன்னுடைய இனவாதிகளைக் கொண்டு பெரும் இன வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது.[/size]

[size=4]இதிலேதான் கொழும்பு எரிந்தது. தமிழரின் வீடுகளும் கடைகளும் கொழுத்தப்பட்டன. சிறிலங்காப் படையினரும் பொலிஸூம் பார்த்துக் கொண்டிருக்க இனவெறியர்கள் [/size]

[size=4]தமிழர்களின் மீது கத்தியைப் பாய்ச்சினர்.[/size]

[size=4]கொழும்பிலிருந்து தமிழர்கள் அகதியாக தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு, பாதி உயிரோடு கப்பலேறி அகதியாக ஊருக்கு வந்தார்கள். ஆக, ஒரு பக்கத்தில் சிறைச்சாலைப் படுகொலைகள். மறுபக்கத்தில் தென்னிலங்கை வன்முறை. அடுத்த பக்கத்தில் அங்கிருந்து அகதிகளாக வெளியேற்றம்.[/size]

[size=4]இதெல்லாம் சர்வதேச சமூகத்தை உலுக்கியதோ இல்லையோ தமிழ் மக்களை கடுமையாகத் தாக்கியது. அவர்களுக்கு இது ஆறாத வடு. தீயும் கண்ணீரும் பெருகிய ஆறாத காயம் அது. அந்த ஜூலை தமிழர்களின் வரலாற்றில் காயங்களின் பதிவு எனவாகியது. அதுவே கறுப்பு ஜூலை என்றானது.[/size]

[size=4]இதெல்லாம் பழைய கதைதான். இதை இங்கே ஏன் திரும்பவும் சொல்லி சலிப்பூட்டுவான்? அல்லது 'இப்ப இதைச் சொல்லி இன்னும் பகையை ஏன் வளர்க்க வேணும்?' என்று நீங்கள் கேட்கலாம். நான் மறக்கத்தான் நினைக்கிறேன். ஆனால், இதையெல்லாம் மறப்பதற்கு ஒரு அவகாசம் வேணும். ஒரு மாற்றம் வேணுமே. அப்படியா நடக்கிறது நாட்டில்?[/size]

[size=4]மீண்டும் அதே ஜூலையில், அதே மாதிரிச் சிறையில், அதே மாதிரி அரசியற் கைதியாக இருந்த தமிழர்களின் மீது தாக்குதல் என்றால்....?[/size]

[size=4]ஜூலை எங்களுக்குக் கறுப்புத்தான். ஆடி எங்களுக்கு நெருப்புத்தான்.[/size]

[size=4]1987 ஜூனில் யாழ்ப்பாணத்தை முழுதாக ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு ஜே.ஆர். வடமராட்சிப் பிரதேசத்தின் மீது பெரும் படையெடுப்பைச் செய்தார். சனங்களின் மீது படையெடுப்பைச் செய்யும் ஒரு மரபை இலங்கையில் தொடங்கி வைத்தார் ஜே.ஆர்.[/size]

[size=4]பிறகென்ன? மூண்டது மறுபடியும் நெருப்பு.[/size]

[size=4]இந்த நெருப்பை ஏந்தியே ஒரு தாக்குதல். 1987 இல் நடந்த கரும்புலித் தாக்குதல், முதற்கரும்புலியாக மில்லர் நெல்லியடியில் படை முகாமிற்குள் பாய்ந்தார். இது சரியோ பிழையோ என்பதற்கப்பால், அப்படிப் பாயக்கூடிய ஒரு ஆவேசத்தை அன்றைய நிலைமைகள் ஏற்படுத்தியிருந்தன.[/size]

[size=4]கறுப்பு ஜூலையாக தமிழரின் மனங்களில் பதிவாகியிருந்த ஜூலை அன்று கரும்புலிகளின் ஜூலையாக மாறியது.[/size]

[size=4]ஒரு காலம் அழுது வடிந்த தமிழர்கள் அழுவதற்குப் பதிலாக அழ வைத்தவர்களை கதிகலங்க வைக்கும் புதிய மரபைத் தொடங்கினார்கள். இப்போது எல்லாமே மாறிவிட்டது. வரலாறு யாரும் எதிர்பார்க்காத மாதிரி தன்போக்கில் பயணிக்கிறது.[/size]

[size=4]மில்லர் நடத்திய தாக்குதலில் நிலை குலைந்த இலங்கை இராணுவத்தை எப்படி வழிப்படுத்துவதென்று தெரியாமல் தத்தளித்தது ஜே.ஆர் அரசாங்கம். அப்போது சந்தர்ப்பம் பார்த்து இந்தியா உள்நுழைந்தது.[/size]

[size=4]அதே ஜூலையில் இந்தியா முதலாவது பகிரங்க நடவடிக்கையை 'ஒப்பிரேஷன் பூமாலை' என்ற பெயரில் நடத்தியது. ஜே.ஆரின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டிருந்த தமிழர்களின் பிரதேசங்களில் இந்திய விமானங்கள் உணவுப் பொருட்களை வீசின.[/size]

[size=4]அதற்குப்பிறகு அதே ஆண்டில் (1987) ஜூலையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்தது. அந்தஒப்பந்தம் தமிழருக்கு இன்னொரு தீ வைப்பு என்றானது. பிறகு இரண்டாண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் இந்திய இராணுவத்தால் படாத பாடெல்லாம் பட்டார்கள்.[/size]

[size=4]இதெல்லாம் நடந்து கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததைப்போல இருக்கிறது.[/size]

[size=4]பட்ட கதையெல்லாம் மீண்டும் இங்கே வேண்டாம். ஆனால் இப்போதும் கறுப்பு ஜூலையின் முப்பது ஆண்டுகளைத் தொடுகின்ற இந்த நாட்களில், கரும்புலிகளின் அத்தியாயம் ஆரம்பமாகி இருபத்தி ஆறு ஆண்டுகளின் பின்னும், தமிழர்கள் போகவேண்டிய தூரம் பற்றி இன்னும் இந்த ஜூலையில் வேறு ஆட்களெல்லாம் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.[/size]

[size=4]இந்தியா பேசுகிறது. இந்தியாவுக்கு அப்பால் யப்பானியர்கள் பேசுகிறார்கள். நோர்வேக்காரர்கள் பேசுகிறார்கள். அமெரிக்கர்கள் பேசுகிறார்கள். பிரித்தானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், சீனர்கள் என்று எல்லோரும் பேசுகிறார்கள்.[/size]

[size=4]போதாக்குறைக்கு மனித உரிமை அமைப்புகள், ஐ.நா, சனல் 4, பி.பி.ஸி என இன்னும் ஏதேதோ எல்லாம் பேசுகின்றன....![/size]

[size=4]2012 ஜூலையில் சிறையில் கொல்லப்பட்ட நிமலரூபன் இந்த வரலாற்றுக்கு இன்னொரு சாட்சி. பலருடைய மனச்சாட்சிக்கும் அவருடைய மரணம் ஒரு சாட்சியே.[/size]

[size=4]http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=da98e70a-d7b8-4ee5-a86f-d30f5b7e92d2[/size]

Share this post


Link to post
Share on other sites