Jump to content

இழந்ததைப் பிடிக்குமா இந்தியா?


Recommended Posts

[size=5]இழந்ததைப் பிடிக்குமா இந்தியா?[/size]

[size=1]

[size=4]ஆக்கம்: கே. சஞ்சயன்[/size]

[/size]

குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடியது போலத் தான், இந்தியாவும் இப்போது இலங்கை விவகாரத்தில் ஓடவிட்டதைப் பிடிக்க முனைகிறது. தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசாக இருக்கும் இந்தியாவுக்கு இன்றுள்ள மிகப் பெரிய சிக்கல் சீனாவோ பாகிஸ்தானோ அல்ல. சின்னஞ் சிறிய நாடான இலங்கை தான்.

[size=4]எப்போதும் தன் காலடிக்குள் கிடக்கும் என்று இந்தியா நம்பிய இலங்கை, அதன் கால்களுக்குள் புகுந்து ஓடி விளையாடத் தொடங்கி விட்டதால், இந்தியா இன்று என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது. [/size]சீனாவின் செல்வாக்கில் இருந்து, இலங்கையை எப்படித் தன்பக்கம் இழுப்பது என்ற சிக்கலுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய நிலையில் இப்போது உள்ளது.

[size=4]விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை எப்போது முடிவுக்கு கொண்டு வந்ததோ, அப்போதே இந்தியாவின் கையை விட்டு இலங்கை போய்விட்டது.[/size]

[size=4]ஜே.ஆரைப் போலவே மஹிந்த ராஜபக்ஷவும் மிகவும் தந்திரசாலி என்பது பலருக்குப் புரிவதில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை- இந்தியாவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே நடத்திய விதத்தைப் பார்க்கும் எவரும், அவர் ஒரு தந்திரசாலி என்பதை நம்பித் தான் ஆக வேண்டும்.[/size]

[size=4]ஒரு பக்கத்தில் சீனாவிடம் இருந்தும், பாகிஸ்தானிடம் இருந்தும் தேவையானளவுக்கு ஆயுதங்களை வாங்கி புலிகளுக்கு எதிரான போரை நடத்திக் கொண்டிருந்தார். [/size]இன்னொரு பக்கம் அந்த நாடுகளுக்கு விரோதமான இந்தியாவுடன் உறவுகளைப் பேணி- விடுதலைப் புலிகளை காப்பாற்றக் கூடிய புறச்சூழல்களையெல்லாம் அவர் உடைத்தெறிந்திருந்தார். இந்த விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு இந்தியா ஒத்துழைக்காது போயிருந்தால், சீனாவினதோ, பாகிஸ்தானினதோ ஆயுதபலத்தை வைத்து ஒன்றையும் சாதித்திருக்க முடியாது.

[size=4]சர்வதேச அழுத்தங்கள் எப்படியோ ஒரு கட்டத்துக்கு அப்பால் போரை நகர்த்த இடமளிக்காத நிலையை உருவாக்கியிருக்கக் கூடும்.[/size]

[size=4]மிகவும் நெருக்கடியான சமயத்தில் ஜே.ஆர் மிகத் தந்திரமாக இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியை பொறியில் சிக்கவைத்து, இந்தியப் படைகளை வடக்கு, கிழக்கில் கொண்டு வந்து இறக்க வைத்தார். [/size]இதன்மூலம் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான போர் இலங்கை இராணுவத்திடம் இருந்து இந்தியப்படைகளின் கைக்கு மாறியது. ஜே.ஆர் ஒதுங்கி நின்று அதை வேடிக்கை பார்த்தார். அதேபோலத் தான், இந்தியாவைப் பயன்படுத்திக் கொண்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

[size=4]போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் இந்தியா எதிர்பார்த்தது போன்று எதுவுமே நடக்கவில்லை. உண்மையில் சொல்லப்போனால், பி்ராந்திய வல்லரசாக இருந்தும், இலங்கை விவகாரத்தில் இந்தியா கையாலாகாத நிலையில் தான் இருக்கிறது.[/size]

[size=4]போர் முடிவுக்கு வந்த மூன்றாண்டுகளுக்குள் இந்தியாவின் இரண்டு வெளிவிவகார அமைச்சர்கள், இரண்டு வெளிவிவகாரச் செயலர்கள், இரண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று முக்கிய அதிகாரமட்டத்தினர் எல்லாம் கொழும்புக்கு பலமுறை வந்து போயினர். [/size]இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மட்டும் தான், இன்னமும் கொழும்புக்கு வந்து அழுத்தம் கொடுக்த குறை. அவர் கூட, புதுடெல்லியிலும், வெளிநாடுகளில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கும் போதெல்லாம் இதுபற்றிப் பலமுறை கூறிவிட்டார். இலங்கையிடம் முடிந்தளவுக்குத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பார்த்து விட்டது புதுடெல்லி. ஆனாலும் இலங்கை அரசை மசியவைக்க முடியவில்லை.

[size=4]இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்திலும் சரி, வடக்கு மாகாணசபைக்கு தேர்தலை நடத்தும் விடயத்திலும் சரி, இந்தியா சொல்லும் எதையும் இலங்கை செய்யவும் இல்லை. கேட்கவும் இல்லை.[/size]

[size=4]அதேவேளை, ஒரேயடியாக இலங்கை அவற்றை நிராகரித்து விடவும் இல்லை. ஆமாம்... செய்கிறோம்.. என்று சொல்லப்படும். வாக்குறுதியும் அளிக்கப்படும். ஆனால், அது நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படும். இந்த நடைமுறை தான் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.[/size]

[size=4]கடைசியாக கடந்த மாத இறுதியில் கொழும்பு வந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனால், வடக்கு மாகாணசபைத் தேர்தலை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்குக் கூட இலங்கை அரசை இணங்க வைக்க முடியாது போனது. [/size]இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது, இலங்கை இந்தியாவின் கையை விட்டுப் போய் விட்டது என்று சொல்வதில் தப்பில்லை.

[size=4]அதிலும், ஜெனிவா தீர்மானத்தின் போது இந்தியா எடுத்த நிலைப்பாட்டை அடுத்து, இலங்கையின் அலட்சியப் போக்கு இன்னும் அதிகரித்துள்ளதே தவிர, குறையவில்லை. [/size]அதனால் தான் தனது கொழும்புப் பயணத்தின் முடிவில் சிவ்சங்கர் மேனன், ஜெனிவாவில் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள மீளாய்வுக் கூட்டத்தை நினைவுபடுத்தியிருந்தார். போர் முடிவுக்கு வந்த பின்னர், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா எந்தப் பங்கையும் வகிக்க முடியாத கட்டத்தை அடைந்துள்ளது. இந்தநிலையில் தான் இந்தியா இன்னொரு கதவைத் திறந்து உள்ளே நுழையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

[size=4]கடந்தவாரம் யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணையுமாறு கோரியுள்ளார்.[/size]

[size=4]தம்முடன் முதலில் பேசி இணக்கப்பாடு கண்ட பின்னர் தெரிவுக்குழுவில் இணைவது பற்றி யோசிக்கலாம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.[/size]

[size=4]ஆனால், இந்தியாவோ நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்குள் எப்படியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு போய் நிறுத்த முனைகிறது. இதற்கான காரணத்தையும் அசோக் கே காந்தாவே கூறியுள்ளார்.[/size]

[size=5]இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண ஏனைய எந்தவழியிலும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்த வழியிலேனும் ஏதேனும் ஒரு இணக்கத்துக்கு வருகிறதா என்று பார்க்கலாம் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு.[/size]

[size=4]இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து பணிய வைக்க முடியாத நிலையில் தான் இந்தியா கடைசிக்கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.[/size]

[size=4]நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலேனும் ஏதாவது தீர்வு வருகிறதா என்று பார்க்கலாம் என்ற இந்தியாவின் கருத்து, இலங்கை அரசின் மூலம் தீர்வு ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் இந்தியா தோல்வி கண்டுள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது. நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் ஒரு தீர்வை பெறமுடியும் என்ற உறுதியான நம்பிக்கையை கூட இந்தியாவினால் வெளிப்படுத்த முடியவில்லை.[/size]

[size=4]உள்ளே வாருங்கள் பார்க்கலாம் என்பது தான் இந்தியாவின் பதிலாக இருந்துள்ளது. போருடன் முடிந்து போன இலங்கை மீதான இந்தியாவின் பிடியை, மீளக் கைப்பற்றும் இந்தியாவின் முனைப்புக்கு வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.[/size]

[size=5]இப்போது இந்தியாவுக்கு உள்ள ஒரே நம்பிக்கையும் – பிடிமானமும் என்னவென்றால், வரும் நவம்பர் முதலாம் திகதி நடக்கவுள்ள ஜெனிவா மீளாய்வுக் கூட்டம் தான்.[/size]

[size=4]அதைக் கூட இந்தியா எந்தளவுக்கு உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பது தெரியவில்லை. இந்தநிலையில் பிராந்திய வல்லரசான இந்தியா- உலக வல்லரசாக உருவெடுப்பதற்கு பெரிய நாடுகள் ஒன்றும் சவாலாக இல்லை.[/size]

[size=4]சின்னஞ்சிறிய இலங்கை தான் அதற்குச் சவாலாக மாறியுள்ளது.[/size]

[size=4]இந்தச் சவால் உருவாக இலங்கையின் போக்கோ, சீனாவின் செல்வாக்கோ மட்டும் காரணமல்ல இந்தியாவின் இராஜதந்திரத் தவறுகளும் கூடத் தான்.[/size]

[size=1]

[size=4]மூலம்: தமிழ் மிரர் - ஆடி24, 2012

பிரசுரித்த நாள்: Jul 24, 2012 10:12:36 GMT[/size]

[/size]

Link to comment
Share on other sites

[size=5]இழந்ததைப் பிடிக்குமா இந்தியா?[/size]

[size=4]போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும் இந்தியா எதிர்பார்த்தது போன்று எதுவுமே நடக்கவில்லை.[/size]

[size=4]இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணும் விடயத்திலும் சரி, வடக்கு மாகாணசபைக்கு தேர்தலை நடத்தும் விடயத்திலும் சரி, இந்தியா சொல்லும் எதையும் இலங்கை செய்யவும் இல்லை. கேட்கவும் இல்லை.[/size]

இதையெல்லாம் சொல்லத்தான் பிரனாப்பும், மற்ற பல அமைச்சர்களும் இந்தியாவில் இருந்து வந்தனர் என்று இன்னும் நம்புவது கவலையளிக்கிறது. இந்திய அரசின் நோக்கம் எல்லாம் எப்படி இந்தியாவின் பன்னாட்டு கம்பெனிகள் இலங்கையில் காலூன்றுவது, மற்றும் இதை சாக்காக வைத்துக்கொண்டு எப்படி தனக்கான சில பல தனிப்பட்ட ஆதாயங்களை தேடிக் கொள்வது என்பதற்காகத்தான். ஒன்றும் தெரியாத அப்பாவியாக நீங்கள் இங்கே இந்தியாவை சித்தரிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதெல்லாம் இந்தியாவின் கனவில் கூட இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் இலங்கையில் இனப்பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருப்பது இந்தியாவுக்கு மிகவும் பிடித்தமானதாகத்தான் தெரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.