Archived

This topic is now archived and is closed to further replies.

easyjobs

வணிக வளாகம் மீது டொரண்டோ போக்குவரத்து பேருந்து மோதல். ஓட்டுனர் உள்பட மூவர் படுகாயம்.

1 post in this topic

[size=1]

[size=5]மேற்கு குயின் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் மீது டொரண்டோ மாநகர பேருந்து மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு குயின் தெருவையும் பீட்டர் தெருவையும் இணைக்கும் சந்திப்பின் மூலையில் இருந்த கட்டிடத்தின் மீது 10:18 a.m மணியளவில் திடிரென டொரண்டோ மாநகர பேருந்து மோதியது. உடனடியாக காவல்துறைக்கும் , அவசர ஊர்திக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. [/size][/size]

[size=1]

[size=5]சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர ஊர்தி விபத்தில் காயமடைந்த மூவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. காயமடைந்தவர்களில் ஒருவர் மாநகரப் பேருந்தின் ஓட்டுனர் என்பதும் , இருவர் பயணிகள் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். [/size][/size]

[size=1]

[size=5]விபத்தின் போது பேருந்திற்கு அருகே வந்து கொண்டிருந்த காரில் பேருந்து லேசாக மோதியதில் காரின் முன்புறமுள்ள அடி தாங்கி உடைந்ததுடன் , விபத்துக்குள்ளான பேருந்தின் முகப்பு பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பகுதிகளும் உடைந்து தெறித்ததால் அந்தப் பகுதி முழுவதும் பிளாஸ்டிக் துகள்கள் சிதறிக் கிடந்தன. [/size][/size]

[size=1]

[size=5]போக்குவரத்து காவல்துறையினர் விசாரிக்க வசதியாக உடனடியாக மேற்கு குயின் தெருவில் நேற்று போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் அந்த பகுதியில் இருந்த பிளாஸ்டிக் , கண்ணாடி உடைந்த பாகங்கள் அகற்றப்பட்டு 5 p.m மணியளவில் மீண்டும் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது[/size][/size]

[size=1]

[size=5]TO SEE THE IMAGES OF ACCIDENT BUS PLEASE CLICK HERE[/size][/size]

Share this post


Link to post
Share on other sites