Jump to content

அங்கு நானிருப்பேன்!


Recommended Posts

மொட்டென முகம் மூடியிருந்தேன்.............

கிளி - கொத்தாதவொரு கொவ்வை பழமாய்.........

என் பாட்டில் நானிருந்தேன்!

சட்டென்று கடந்தது ஒரு -மைனா.....

பட்டென்று முழைத்தது - காதல்!

எழுத்துகூட்டி தமிழ் படித்தவன்

ஒரே இரவில் கவிஞன் என்றானேன்!

இதயத்தின் அடியிலொரு நீர் வீழ்ச்சி.....

இனி என் இயங்கு திசை எங்கும் ..........

அவள் ஆட்சி!

ஆயுள் ரேகை உண்டென்று..........

உலகம் ஆயிரம் சொல்லும்......

ஆளவந்தாள் என்னை - இனி

அவளே என் ஆயுளுக்கு நீதிபதி!

பாடல் கேட்க பிடிக்குது......

சித்ரா பாடியது அதுவென்று தெரிந்தும்........

என் சித்திரம் பாடுதென்று ........

திருட்டு கனவு வருது!

போச்சு போச்சு................

இனி என்ன செய்ய நான்?

ஊர் உறங்கும் நேரமதில்........

நீயும் உறங்கியிருப்பாய்.......

விழித்திருக்கும் என் ஆன்மா.......

உன் வீதியுலா வலம் வருமே.....

விளங்கி கொண்டதுண்டா- நீ?

நிசப்தத்தை கிழிக்கும் என் ஜீவனின் அலறல்.......

உந்தன் நீள்தூக்கத்தை -கலைத்ததுண்டா?

இல்லை என்றிடாதே........

விழித்தெழுந்தபின்........

விழிகளை மீண்டும் மூடு.........

உன் நாடி துடிப்பை மெதுவாய் கேள்......

அங்கு நானிருப்பேன் அன்பே!

Link to comment
Share on other sites

முக்கியம் மிக முக்கியம்... :twisted: :twisted: :twisted:

தூக்கத்தில் புரளல்...

துக்கத்தில் உளரல்...

காதலால் எதுக்குகிந்த

மாறாட்டம்.

அதை... போக்கினால்

மனதுக்கு சாந்தி

எடுதம்பி கைகளில் பிராந்தி,

அதை கோப்பையில் ஏந்தி

«ÊðÎ...

போ தம்பி வீட்டுக்கு

ரோட்டால நீந்தி..

எடுதம்பி கக்கூசில் வாந்தி

தூர ஓடுவாள் காதலி

முந்தி...

ஹா.... ஹா..... ஹா :D

:lol::D:lol::lol:

Link to comment
Share on other sites

வர்ணன் கவிதை நன்றாகவுள்ளது...ஆனால் தலா சொல்வதை கேளாதீர்கள்...அவர் தனது அனுபவத்தை சொல்லுகின்றார் ..... அதுதான் அவர் ஓடிக்கொண்டே இருக்கின்றார்... :lol: தலாவின் கவிதையும் நன்றாக உள்ளது

இருவருக்கும் வாழ்த்துக்கள்

thi121447537320319fg.gifthi121447537320319fg.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் நன்றாக இருக்கிறது உங்கள் காதல்க்கவிதை.. வாழ்த்துக்கள்.

தல அனுபவசாலிகள் அழகாய் புத்திமதி சொல்ற மாதிரியிருக்கு.. :wink: :P

Link to comment
Share on other sites

வணக்கம் வர்ணன்

உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. அனுபவித்து எழுதுறீங்கள் போலக்கிடக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

எழுத்துகூட்டி தமிழ் படித்தவன்

ஒரே இரவில் கவிஞன் என்றானேன்!

இதயத்தின் அடியிலொரு நீர் வீழ்ச்சி.....

இனி என் இயங்கு திசை எங்கும் ..........

அவள் ஆட்சி!

இந்த உங்கள் வரிகள் மிகவும் நன்றாக உள்ளது

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

ஆகா தல - ஆரம்பிச்சிட்டிங்களா - ?

அப்பவே நினைச்சன் -இந்த காதல் கவிதை எழுதுறத விட்டுபுட்டு - நேரத்துக்கு தூங்கலாம்னு - ம்ம்ம் விதி யாரை விட்டுது - என்னை விட - !:lol:

ஏன் தல காதல பத்தி கவிதை எழுதுறது முக்கியம் இல்லையா?

எனக்கு தெரிந்த வரை காதலை வெறுக்கிறவங்க 2 வகை:

1) காதலிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவங்க -!

2) கல்யாணம் ஆனவங்க !

இதுல தல எந்த வகையோ? :wink: :P

Link to comment
Share on other sites

நன்றி கெளரி-பாலன் - தமிழினி யக்கோவ் - (இப்ப கொஞ்சம் நிம்மதி - கவிதை நல்லா எழுதுறவங்களே - நான் எழுதினதும் நல்லா இருக்குனு சொன்னதால) 8)

நன்றி சுஜீந்தன் - தொடர்ந்து எழுத சொல்லுறீங்க - வாங்கி கட்டுறேன் கவனிக்கலையா? :P

நன்றி சுமி!-

நன்றி அரவிந்தன் 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி வர்ணனுக்கு பால் இருக்கும் பசி இருக்காது, அடிக்கடி சிரிப்பார், சிந்தனைகள் வரும். கவிதையில் வெற்றி பெற்ற வர்ணன் காதலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

எனக்கு உங்கட கவிதைக்கு கருத்து எழுதும் அளவிற்கு தமிழ் அறிவு இல்லை. படிக்கும் போது நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

ஏன் தல காதல பத்தி கவிதை எழுதுறது முக்கியம் இல்லையா?

எனக்கு தெரிந்த வரை காதலை வெறுக்கிறவங்க 2 வகை:

1) காதலிக்க சந்தர்ப்பம் கிடைக்காதவங்க -!

2) கல்யாணம் ஆனவங்க !

இதுல தல எந்த வகையோ? :wink: :P

இதுல இன்னும் ஒண்டையும் சேருங்கோ....!

காதலிச்சு நொந்து போனவர்... :lol:

கல்யாணமும் ஆகீடிச்சு.... இதுல கல்லாயாணம் நல்லவிசயம்தானப்பு, முதலில் காதலிச்சு கட்டாமல் கடீட்டு காதலியுங்கோ உருப்படுவியள்... ( தேவை இல்லாத டென்சன் இல்லை பாருங்கோ... ) :D:lol::lol:

Link to comment
Share on other sites

தல அனுபவசாலிகள் அழகாய் புத்திமதி சொல்ற மாதிரியிருக்கு.. :wink: :P

தெரிஞ்சவர் சொல்லி திருத்திறவிசயமா அது... பட்டு அறிய வேணும்... அதுதான் பட்டறிவாம்.... :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் உங்கள் கவிதை அருமை.. உங்கள் உணர்வுகளை அல்லது கவி சொல்லும் உணர்வுகள் நன்கு புரிந்து கொள்ளகூடியதாக உள்ளது. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாய் இருக்கு கவிதை வித்தியசமாக இருக்கு கவி வாழ்த்துக்கள் வர்ணன் தொடர்ந்தும் எழுதுங்கள் :P

Link to comment
Share on other sites

வர்ணன்,

ஆகா மாட்டுப்பட்டுபோனீர்களா? எனது ஆழ்ந்த அநுதாபங்கள்.

கவிதையும் நன்றாகஇருக்குது.

தல, சூப்பர் :P

Link to comment
Share on other sites

எழுத்துகூட்டி தமிழ் படித்தவன்

ஒரே இரவில் கவிஞன் என்றானேன்!

இதயத்தின் அடியிலொரு நீர் வீழ்ச்சி.....

இனி என் இயங்கு திசை எங்கும் ..........

அவள் ஆட்சி!

ஆகா வர்ணன். வாழ்த்துக்கள். தொடர்ந்து தாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.