Jump to content

எடித்தாரா கப்பல் மூழ்கடிப்பில் காவியமான மாவீரர் நினைவு நாள்


Recommended Posts

thangam.jpg

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணி கடுமையான கடற்சமரின் நடுவே சிறிலங்கா கடற்படையின் “எத்தாரா” கட்டளைக் கப்பலை தகர்த்து மூழ்கடித்தது.

இந்த வெற்றிகர கடற்சமரில் மூன்று கடற்கரும்புலிகளும், கடற்சமரை வழிநடாத்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நரேஸ், கடற்புலிகளின் மகளீர் படையணித் தளபதி லெப்.கேணல் மாதவி ஆகியோர் உட்பட 14 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு

கடற்கரும்புலி மேஜர் தங்கம் (வீரய்யா மயில்வாகனம் - பதுளை - சிறிலங்கா)

கடற்கரும்புலி மேஜர் செந்தாளன் (நியூட்டன்) (பிரான்சில் டக்ளஸ் - குருநகர், யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப்.கேணல் சந்திரன் (நரேஸ்) (சிவராஜசிங்கம் நவராஜன் - திருகோணமலை)

கடற்புலி லெப்.கேணல் மாதவி (திருநாவுக்கரசு கலைச்செல்வி - இன்பருட்டி, யாழ்ப்பாணம்)

கடற்புலி கப்டன் வில்வன் (ஏரம்பமுர்த்தி ஜீவானந்தன் - பெரியபோரதிவு, மட்டக்களப்பு)

கடற்புலி கப்டன் கமலம் (குழந்தைவேல் சிறரஞ்சினி - காரைநகர், யாழ்ப்பாணம்)

கடற்புலி கப்டன் தாயகி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி - யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப்டினன்ட் பூமதி (கனகரட்ணம் சாந்தனி - வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப்டினன்ட் தவமலர் (துரைசிங்கம் கேமாவதி - மானிப்பாய், யாழ்ப்பாணம்)

கடற்புலி லெப்டினன்ட் சோபிதா (தர்மலிங்கம் மாலதி - பருத்தித்துறை, யாழ்ப்பாணம்)

கடற்புலி 2ம் லெப்டினன்ட் நித்தியா (மாரிமுத்து மஞ்சுளா - மாங்குளம், முல்லைத்தீவு)

கடற்புலி 2ம் லெப்டினன்ட் அருள்மதி (வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி - யாழ்ப்பாணம்)

கடற்புலி 2ம் லெப்டினன்ட் நதியரசி (செல்வராசா சாந்தவதனி - முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு)

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

40_lt_col_naresh.jpg

41_lt_col_mathavi.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் . [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு, வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வீரவணக்கங்கள். [/size]

Link to comment
Share on other sites

புலிப்பாய்ச்சலுக்கு வலுச்சேர்த்த வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.