Jump to content

பெண்களின் உணர்ச்சிகளை தூண்ட உதவும் உணவுகள்


Recommended Posts

நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளுக்கும் அதிக தொடர்பு உள்ளது. அதனால்தான் சித்தர்களும், முனிவர்களும் சாத்வீக உணர்வுகளை தரும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்தனர். ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழமுடியும்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்களுக்கு லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தி குறையத் தொடங்கும். இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்படும். எனவே லிபிடோ சக்தியை உற்சாகம் குறையாமல் வைத்துக்கொள்ள சில உணவுகள் உதவி புரியும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆவகேடோ

வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் ஆவகேடோ பழத்தில் உயர்தர பி6 வைட்டமின்கள் உள்ளன. இது டெஸ்டோஸ்ட்டிரான் உற்பத்தியை அதிகரிக்கிறது. அதேபோல் இதில் உள்ள பொட்டாசியம் பெண்களின் தைராய்டு சுரப்பியின் நிலையை சமநிலையில் வைத்திருக்கும். பாலுணர்வு சக்தியை உற்சாகமாக வைத்திருக்க உதவும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் பெண்களின் உற்சாகத்திற்கு அதிக பலன் தரக்கூடிய பழமாகும். இந்த பழத்தில் உள்ள பி வைட்டமின்கள், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம் போன்றவை டெஸ்ட்ரோஸ்ட்ரோன் ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டுகிறது. அதைத் தவிர வாழைப்பழத்தின் வடிவம் கூட பெண்களின் உற்சாகத்தை தூண்டுவதற்கு ஒருவித காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

துளசி இலைகள்

துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் பெண்களின் பாலுணர்வை குறைபாட்டினை நீக்குகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மன அழுத்தம் நீக்கும் மருந்தாக இருப்பதோடு தலைவலியை போக்குமாம். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் குறைபாடு ஏற்பட்டாலும் அதனை துளசி இலைகள் நீக்குவதோடு பெண்களின் பாலுணர்வு சக்தியை உற்சாகப்படுத்துகிறதாம்.

பாதாம் பருப்பு

பாதம் பருப்பில் உள்ள சத்துக்கள் குழந்தை பிறப்பதில் ஏற்படும் குறைபாட்டினை நீக்குகிறதாம். தவிர பெண்களின் லிபிடோ சக்தியை ஊக்குவிக்கிறதாம்.

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ்சில் உள்ள சத்துக்கள் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறதாம். சோயாபீன்ஸ் உயர்தர புரதம் அடங்கியது. இது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் போன்றவைகளை குறைக்கிறதாம். பெண்களின் செக்ஸ் உணர்வுகளை குறையாமல் பார்த்துக்கொள்கிறது போஃப்ஸ் இதழில் தகவல் வெளியாகி உள்ளது.

http://newyarl.lk/comments_news.php?pid=643

Link to comment
Share on other sites

நண்டுக்கறி, முருங்கைக்காய் போன்றவை ஆண்களுக்கு சூட்டைக் கிளப்பும் உணவு வகைகளாகும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவாக்ககாடோ ஒரு கொலஸ்ரோல் கூடிய பழமல்லவா சாப்பிட்டால் அவ்வளவு தான் :lol:

Link to comment
Share on other sites

அவாக்ககாடோ ஒரு கொலஸ்ரோல் கூடிய பழமல்லவா சாப்பிட்டால் அவ்வளவு தான் :lol:

இல்லை ரதி

அவகாடோ, கூடாத கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை (monounsaturated) தரும் மிக ஆரோக்கியமான பழம். உடல் எடையைக் குறைக்க வெண்டும் என்பவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவு.

http://www.fatburningfurnace.com/blog/avocado-nutrition-facts-%E2%80%93-health-benefits-of-avocado

http://www.lookcut.com/articles/avocado-and-weight-loss.html

பொதுவாக மரக்கறி, பழங்களில் இருக்கும் கொழுப்பு நல்ல கொழுப்பாகவே இருப்பதுண்டு. விலங்குக் கொழுப்புக்கும், மரக்கறி கொழுப்புக்கும் இடையில் இருக்கும் மிக முக்கிய வேறுபாடு இது

Link to comment
Share on other sites

பாதாம் பருப்பு ஆண்களுக்கும் உணர்சிகளைத் தூண்டக் கூடிய உணவு. அதுதான் பொதுவாக முதலிரவில் பால் பழத்துடன் பாதாம் பருப்பையும் வைக்கிறார்களாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ரதி

அவகாடோ, கூடாத கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை (monounsaturated) தரும் மிக ஆரோக்கியமான பழம். உடல் எடையைக் குறைக்க வெண்டும் என்பவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவு.

http://www.fatburnin...fits-of-avocado

http://www.lookcut.c...eight-loss.html

பொதுவாக மரக்கறி, பழங்களில் இருக்கும் கொழுப்பு நல்ல கொழுப்பாகவே இருப்பதுண்டு. விலங்குக் கொழுப்புக்கும், மரக்கறி கொழுப்புக்கும் இடையில் இருக்கும் மிக முக்கிய வேறுபாடு இது

உண்மையாகவா எனக்கு யாரோ சொல்லிச்சினம் அவக்காடோ சாப்பிடக் கூடாது என்றும் சாப்பிட்டால் உடம்பு வைக்கும் என்றும் அன்றில் இருந்து சாப்பிடுவதில்லை...தகவலுக்கு நன்றி நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவா எனக்கு யாரோ சொல்லிச்சினம் அவக்காடோ சாப்பிடக் கூடாது என்றும் சாப்பிட்டால் உடம்பு வைக்கும் என்றும் அன்றில் இருந்து சாப்பிடுவதில்லை...தகவலுக்கு நன்றி நிழலி

நாங்கள் சொல்லுவதை நீங்கள் ஒருநாளும் கேட்பதில்லை..........

இப்படி அடுத்தவன் சொல்லுற நாதாரி கதைகளை கேட்டே உங்கள் வாழ்கையில் முள்ளும் புதருமாக இருக்கு.

அவோகடோ சாப்பிட்டிருந்தால் எவளவு நல்ல விடயம் நடந்திருக்கும்?

உடட்பயிட்சி இல்லாமலே உடல் ஸ்லிமா இருந்திருக்குமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி இலைகள்

துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணம் பெண்களின் பாலுணர்வை குறைபாட்டினை நீக்குகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மன அழுத்தம் நீக்கும் மருந்தாக இருப்பதோடு தலைவலியை போக்குமாம். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் குறைபாடு ஏற்பட்டாலும் அதனை துளசி இலைகள் நீக்குவதோடு பெண்களின் பாலுணர்வு சக்தியை உற்சாகப்படுத்துகிறதாம்.

http://newyarl.lk/co...ews.php?pid=643

அதுதான் ஆடு வயுத்து குத்து என்று படுப்பதில்லை போல?

ஆறு மாதம் ஒரு குட்டி போட்டுவிட்டு துளசி இலையில் இரண்டை கடித்துவிட்டு துள்ளிக்கொண்டு திரியிது.

எங்கட பெண்கள்தான்.............

எல்லாம் இயக்கத்தை......... சாரி இயற்கையை கைவிட்ட பிரதி பலன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சொல்லுவதை நீங்கள் ஒருநாளும் கேட்பதில்லை..........

இப்படி அடுத்தவன் சொல்லுற நாதாரி கதைகளை கேட்டே உங்கள் வாழ்கையில் முள்ளும் புதருமாக இருக்கு.

அவோகடோ சாப்பிட்டிருந்தால் எவளவு நல்ல விடயம் நடந்திருக்கும்?

உடட்பயிட்சி இல்லாமலே உடல் ஸ்லிமா இருந்திருக்குமே?

நீங்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும்????????????????

ஒரு பழ விடயத்தில் ஏதேதோ தத்துவம் எல்லாம் சொல்றீங்கள் எனக்கும் ஒன்டும் விளங்கேயில்ல :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் இருந்தால்தானே இடம் வரும்.........???

ஏன் கேட்க வேண்டும் என்று தள்ளி நின்றால். எப்படி கேட்பதும் விளங்குவதும்?

நிழலி அண்ணா எல்லாம் விளக்கமாகத்தானே எழுதியிருக்கிறார். அந்த பழம் உடல் பருமனை குறைக்க உதவும் என்று.

இனி திருப்பி விளக்கி எழுத என்ன இருக்கு? மேலே எல்லாமே விளக்கமாக இருக்கும்போது?

Link to comment
Share on other sites

அவாக்ககாடோ ஒரு கொலஸ்ரோல் கூடிய பழமல்லவா சாப்பிட்டால் அவ்வளவு தான் :lol:

இல்லை. அவகாடோ பல நிரம்பாத கொழுப்பமிலங்களை கொண்ட கொழுப்பை/ எண்ணெயை கொண்டது. உடலுக்கு நல்லது.

கீழே உள்ள அட்டவணையில் அவகாடோ எண்ணெய்க்கும் ஒலிவ் எண்ணெய்க்கும் உள்ள வேறுபட்டு. அவகாடோ எண்ணெயில் 16 :1 , 18 :1 ,

18 :2 , 18 :3 , 20 :1 எனும் இலக்கங்காளால் குறிப்பிட பட்டவை நிரம்பாத கொழுப்பமிலங்கள். உடலுக்கு நன்மை பயப்பவை.

able 3: Fatty acid composition of avocado oil/olive oil.

tablewr.png[size=1] [/size]

http://www.olivado.com/studies4.htm

******* இன்னும் ஒரு முக்கியமான விடயம் பலரும் தவறாக சொல்லுவது கொலஸ்திரோல் உள்ள எண்ணெய் உதாரணம் தேங்காய் எண்ணெய் . தாவரங்களில் இருந்து எடுக்கும் எந்த எண்ணெயிலும் கொல்ஸ்திரோல் இல்லை. கொல்ஸ்திரோல் என்பது விலங்கு உணவுகளில் மட்டுமே உண்டு. ஆனால் தாவர எண்ணெய் வகையை பொறுத்து மனித உடலில்/ குருதியில் கொல்ஸ்திரோல் (LDL cholesterol) அளவு அதிகரிக்கவோ/ குறையவோ செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தாவர எண்ணெய் வகையை பொறுத்து மனித உடலில்/ குருதியில் கொல்ஸ்திரோல் (HDL cholesterol) அளவு அதிகரிக்கவோ/ குறையவோ செய்யலாம்.

HDL-LDL1.jpg

[size=2]image: http://www.cholesterol-is.com/2012/05/[/size]

இந்தக் கருத்தில் தவறு இருக்கிறது. HDL கொலஸ்ரோல் அல்ல. HDL - high density lipoprotein... மேலும் HDL கெட்டதல்ல. நல்லது. காரணம்.. அது கொலஸ்ரோலை ஈரலுக்கு கொண்டு சென்று குருதியில் அதன் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆனால் இதுவும் சரியான அளவில் குருதியில் இருக்க வேண்டும். இன்றேல் இதனாலும் ஆபத்து விளைய வாய்ப்புள்ளது.

LDL - Lower density lipoprotein இதுதான் மிகக் கெட்டது. இது கொலஸ்ரோலை குருதி வழி கலங்களுக்கு காவுவதால்... குருதியில்.. கலங்களில் கொலஸ்ரோலின் அளவைக் கூட்டச் செய்கிறது. ஆனால் குருதியில் இதன் அளவும் சரியாகப் பேணப்பட வேண்டும். இதனை முற்றாக குறைப்பதும் ஆபத்து.

அந்த வகையில் கொலஸ்ரோலை குருதியில் கட்டுப்படுத்த.. HDL/LDL விகிதம் சரியாகப் பேணப்பட வேண்டும்.

HDL - LDL இரண்டுமே lipoprotein வகைகள். தனியக் கொலஸ்ரோல்.. அல்ல. கொலஸ்ரோல் என்பது ஸ்ரொயிட் வகை கொழுப்பு ஆகும். அநேக தாவர எண்ணெய்களில் (சில தாவர எண்ணெய்களில் நிரம்பிய கொழுப்பு அதிகம். அவை LDL அளவை குருதியில் அதிகரிக்கச் செய்யும்) உள்ள நிரம்பாத கொழுப்பமிலங்களை அதிகம் கொண்ட கொழுப்புகளின் அளவைப் பொறுத்து.. குருதியில் HDL / LDL விகிதம் சரியாக பேணப்படும் நிலை அதிகம் என்பதால்.. அவை உடலுக்கு நல்லம். விலங்கு கொழுப்பில் அதிகம் நிரம்பிய கொழுப்பு உள்ளதால்.. அதில் LDL குருதியில் அதிகரிக்க.. கொலஸ்ரோல் அதிகமாகும்.

எல்லா தாரவ எண்ணெய்களும் நல்லதல்ல. காரணம்.. சில தாவர எண்ணெய்களில் நிரம்பிய கொழுப்பு நிரம்பாததை விட அதிகம் உண்டு..! குறிப்பாக.. நீரின் உறை நிலையை அண்மித்த வெப்ப நிலையில் உறையக் கூடிய தாவர எண்ணெய்களில் நிரம்பிய கொழுப்பு அதிகம். தேங்காய் எண்ணெயில் நிரம்பிய கொழுப்பு நிரம்பாததை விட அதிகம். இது சாதாரண மக்கள் நிரம்பிய கொழுப்பு அதிகம் உள்ள தாவர எண்ணெய்களை இனங்காண செய்யக் கூடிய எளிமையான சோதனை ஆகும்.

மேலும்....................

கீழுள்ள படத்தில் saturated - நிரம்பிய கொழுப்பையும்.. unsaturated - நிரம்பாததையும் குறித்து நிற்கின்றன.

நிரம்பாததில்.. ஒரு C=C மட்டும் கொழுப்பமிலத்தில் இருந்தால் அது mono (மொனோ) வகை ஆகும். பல இருந்தால் அது poly (பொலி) வகை ஆகும்.

மொனோ.. பொலி இரண்டு நிரம்பாத கொழுப்புக்களும் சரியான அளவில் உட்கொண்டால்.. உடலுக்கு பெரிய அளவில் தீங்கைத் தரா. மொனாவை விட பொலி அதிகம் இருப்பது நல்லம். அதற்காக மொனா கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் இவை நல்லம் என்பதற்காக அதிக அளவில் உண்ணக் கூடாது. அதேபோல்.. அதிகளவு நிரம்பிய கொழுப்பை உண்பதும் ஆபத்து. ஆனால் நிரம்பிய கொழுப்பும் உடலுக்கு அவசியம். குறைந்த அளவில் அதனையும் உண்ணலாம்.

Fat_type_percentage_graph.png

[size=2]Chart from: http://www.heartfoundation.org.nz[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

******* இன்னும் ஒரு முக்கியமான விடயம் பலரும் தவறாக சொல்லுவது கொலஸ்திரோல் உள்ள எண்ணெய் உதாரணம் தேங்காய் எண்ணெய் . தாவரங்களில் இருந்து எடுக்கும் எந்த எண்ணெயிலும் கொல்ஸ்திரோல் இல்லை. கொல்ஸ்திரோல் என்பது விலங்கு உணவுகளில் மட்டுமே உண்டு.

அவகாடோவிலும்.. சூரியகாந்தி எண்ணெய்யிலும் கிட்டத்தட்ட ஒரே அளவு நிரம்பிய கொழுப்பு உள்ளது. ஆனால் சூரியகாந்தியில் அதிகம் பொலி நிரம்பாத கொழுப்பு உள்ளது. அந்த வகையில் அவகாடோவை விட சூரியகாந்தி நல்லது. ஆனால் தேங்காய் எண்ணெய்யில் இவை எல்லாவற்றையும் விட கூடிய நிரம்பிய கொழுப்பு உண்டு..! அதனை உண்பது கூடிய அளவுக்கு கொலஸ்ரோல் உருவாக வாய்ப்பை அளிக்கும்..! இதனால் தேங்காய் எண்ணெய்யை நாளாந்த பாவனையில் இருந்து தவிர்க்கச் சொல்வதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. மேலுள்ள அட்டவணையில் உள்ள தரவுகளோடு ஒப்பிட்டு பார்த்தால்.. இந்த விடயம் இலகுவாகப் புரியும். :icon_idea:

Link to comment
Share on other sites

நான் கேட்பதையிட்டு சிரிக்காதீர்கள் ........அவக்கோடா என்றால் என்ன பழம் .... :D

ஏனனில் தற்போது நானும் எடையை குறைக்கும் நிப்பந்தந்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.....வருடக்கணக்கில்

உடற்பயிற்சி :lol: ,கராத்தே :D என்றல்லாம் செய்து உடம்பு முடியுதில்லை. ஆனால் உணவையும் குறைக்க முடியிதில்லை .....உணவைக்குறைக்காமல் உடம்பைக்குறைப்பதேன்றால் ஏதாவது இன்னும் அவக்கோடா போன்ற ஞானப்பழங்கள் இருந்தால் தயவு செய்து கூறுவீர்களா...........அவக்கூடாவின் படத்தை யாராவது இணைத்து விடுவீர்களா ....... :icon_idea: :icon_idea:

டிஸ்க்கி .......

[தமிழ்சிறியை தவிர வேறு யாராவது படங்களை இணைக்கலாம் .... :D :D :icon_idea: .]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Avocado - அவகாடோ

avocadop.jpg

Link to comment
Share on other sites

avocado.jpg

இதை வாழ்நாளில் இன்னும் நான் சாப்பிட்டுப் பார்த்ததில்லை.. :blink:

Link to comment
Share on other sites

நான் கேட்பதையிட்டு சிரிக்காதீர்கள் ........அவக்கோடா என்றால் என்ன பழம் .... :D

ஏனனில் தற்போது நானும் எடையை குறைக்கும் நிப்பந்தந்திற்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.....வருடக்கணக்கில்

உடற்பயிற்சி :lol: ,கராத்தே :D என்றல்லாம் செய்து உடம்பு முடியுதில்லை. ஆனால் உணவையும் குறைக்க முடியிதில்லை .....உணவைக்குறைக்காமல் உடம்பைக்குறைப்பதேன்றால் ஏதாவது இன்னும் அவக்கோடா போன்ற ஞானப்பழங்கள் இருந்தால் தயவு செய்து கூறுவீர்களா...........அவக்கூடாவின் படத்தை யாராவது இணைத்து விடுவீர்களா ....... :icon_idea: :icon_idea:

டிஸ்க்கி .......

[தமிழ்சிறியை தவிர வேறு யாராவது படங்களை இணைக்கலாம் .... :D :D :icon_idea: .]

அவகடோவை இலங்கையில் 'பட்டர் புரூட்' என்று கூறுவார்கள்.

வாயைக் கட்டுப்பத்தினால்தான் உடம்பு குறையும். நாங்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பைக் கரைக்க 'bleach ' தான் குடிக்க வேண்டும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

avocado.jpg

ஏனோ தெரியவில்லை நான் கொடுத்த இணைப்பு வேலை செய்யவில்லை, அதனை மீண்டும் இணைத்தமைக்கு நன்றி. ; )

Link to comment
Share on other sites

avocado.jpg

இதை வாழ்நாளில் இன்னும் நான் சாப்பிட்டுப் பார்த்ததில்லை.. :blink:

தேங்காயின் சுவை. வாட்டிய பாண் / ரொட்டியில் தடவி உண்ண நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் NMA ,இசை .தப்பிலி. இந்தப்பழம் இங்கேயும் நிறைய உண்டு.....ஆனால் நானும் ஒரு தடவை கூட

சுவைத்ததில்லை......ஆனால் பெயரை தேடிப்பர்ர்த்தேன்....நெதர்லாந்து மொழியிலும்,அவக்கோடா என்றுதான்

உள்ளது....ஆனால் தமிழில் வெண்ணை [பழம்] என்று உள்ளது ............உண்மையில் சாப்பிட்டால் உடம்பு குறையுமா???அல்லது கூடுமா?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவாக்காடோவை அநேகமானோர் சலாட்டுட‌ன் கலந்தே உண்பார்கள் தனிய சாப்பிடுவது குறைவு...என்னோடு முந்தி வேலை செய்த வெள்ளை அவாக்காடோவை நெடுக சாப்பிட‌க் கூடாது என்றும் அது கொலஸ்ரோல் கூடினதென்றும் சொன்னார்...மதியம் சோறு சாப்பிடாமல் தனிய சலட் சாப்பிட்டால் அவக்காடோ சாப்பிட‌லாம் என்று நினைக்கிறேன் :unsure: ஆனால் சோறும் சாப்பிட்டு அவாக்காடோவும் சாப்பிட‌க் கூடாது.

இந்தப் பழம் சாப்பிட‌ நல்லாயிருக்கும் எனக்குப் பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் உணர்ச்சிகளை தூண்ட உதவும் உணவு

அன்பு ஒன்றே. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேங்காயின் சுவை. வாட்டிய பாண் / ரொட்டியில் தடவி உண்ண நன்றாக இருக்கும்.

ஒன்றுமை வேற்றுமை;

அவகாடோ- தேங்காய்

கொழுப்பு ;

அ நல்லது - தே- கூடாது

சுவை ; இரண்டும் ஒன்று

சிரட்டை; அ- உள்ளுக்கு தேங்காய் - வெளியில்

அ ; வாட்டிய பாண் / ரொட்டியில் தடவி உண்ண நன்றாக இருக்கும்

தே ; சம்பல்லாக்கி பானுடன் சாப்பிட நன்றாக இருக்கும்

Link to comment
Share on other sites

HDL-LDL1.jpg

[size=2]image: http://www.cholesterol-is.com/2012/05/[/size]

இந்தக் கருத்தில் தவறு இருக்கிறது. HDL கொலஸ்ரோல் அல்ல. HDL - high density lipoprotein... மேலும் HDL கெட்டதல்ல. நல்லது. காரணம்.. அது கொலஸ்ரோலை ஈரலுக்கு கொண்டு சென்று குருதியில் அதன் அளவைக் குறைக்க உதவுகிறது. ஆனால் இதுவும் சரியான அளவில் குருதியில் இருக்க வேண்டும். இன்றேல் இதனாலும் ஆபத்து விளைய வாய்ப்புள்ளது.

LDL - Lower density lipoprotein இதுதான் மிகக் கெட்டது. இது கொலஸ்ரோலை குருதி வழி கலங்களுக்கு காவுவதால்... குருதியில்.. கலங்களில் கொலஸ்ரோலின் அளவைக் கூட்டச் செய்கிறது. ஆனால் குருதியில் இதன் அளவும் சரியாகப் பேணப்பட வேண்டும். இதனை முற்றாக குறைப்பதும் ஆபத்து.

அந்த வகையில் கொலஸ்ரோலை குருதியில் கட்டுப்படுத்த.. HDL/LDL விகிதம் சரியாகப் பேணப்பட வேண்டும்.

HDL - LDL இரண்டுமே lipoprotein வகைகள். தனியக் கொலஸ்ரோல்.. அல்ல. கொலஸ்ரோல் என்பது ஸ்ரொயிட் வகை கொழுப்பு ஆகும். அநேக தாவர எண்ணெய்களில் (சில தாவர எண்ணெய்களில் நிரம்பிய கொழுப்பு அதிகம். அவை LDL அளவை குருதியில் அதிகரிக்கச் செய்யும்) உள்ள நிரம்பாத கொழுப்பமிலங்களை அதிகம் கொண்ட கொழுப்புகளின் அளவைப் பொறுத்து.. குருதியில் HDL / LDL விகிதம் சரியாக பேணப்படும் நிலை அதிகம் என்பதால்.. அவை உடலுக்கு நல்லம். விலங்கு கொழுப்பில் அதிகம் நிரம்பிய கொழுப்பு உள்ளதால்.. அதில் LDL குருதியில் அதிகரிக்க.. கொலஸ்ரோல் அதிகமாகும்.

[size=2]Chart from: http://www.heartfoundation.org.nz[/size]

நன்றி. தவறை சுட்டி கட்டியதற்கு. கருத்தில் LDL cholesterol என மற்றம் செய்துள்ளேன்.

மற்றையது LDL/HDL cholesterol LDL/HDL என்பது எதை குறிக்கிறது என்பதை தெரியும். ஆனால் பொது பாவனையில்/ நடை முறையில் சொல்லும் முறையில் மட்டுமே அந்த கருத்தை சொல்லியிருந்தேன்.

(Studies have shown that higher levels of type-B LDL particles (as opposed to type-A LDL particles) promote health problems and cardiovascular disease, they are often informally called the bad cholesterol particles, (as opposed to HDL particles, which are frequently referred to as good cholesterol or healthy cholesterol particles).

http://en.wikipedia....ty_லிபோப்ரோடீன்

அத்துடன் விஞ்ஞான ஆரய்ச்சி கட்டுரைகளிலேயே LDL, or HDL cholesterol levels என பொதுவாக குறிக்கும் வழக்கம் இருக்கிறது.

http://atvb.ahajourn...5/11/1917.short

Link to comment
Share on other sites

[size=5](******* இன்னும் ஒரு முக்கியமான விடயம் பலரும் தவறாக சொல்லுவது கொலஸ்திரோல் உள்ள எண்ணெய் உதாரணம் தேங்காய் எண்ணெய் . தாவரங்களில் இருந்து எடுக்கும் எந்த எண்ணெயிலும் கொல்ஸ்திரோல் இல்லை. கொல்ஸ்திரோல் என்பது விலங்கு உணவுகளில் மட்டுமே உண்டு.)[/size]

LDL/HDL- cholesterol தொடர்பில் ஏற்பட்ட தவறை தவிர ஏனைய கருத்தில் எந்த தவறும் இல்லை. தாவர எண்ணெய்களில்/கொழுப்புகளில் கொலஸ்திரோல் இல்லை. தாவர எண்ணெய்களில் விலங்கு கொழுப்பு கலந்துள்ளதா/ தூய தாவர எண்ணெயா என சோதிக்க குறிப்பிட்ட எண்ணெய் அல்லது கொழுப்பில் கொலஸ்திரோல் இருக்கிறதா என சோதிப்பது ஒரு முறை. கொலதிரோல் இருந்தால் அது மிருக கொழுப்பு கலப்புள்ளது.

மற்றும்படி உண்ணும் தாவர எண்ணெய் வேறுபாட்டிற்கு ஏற்ப மனித உடலில் LDL cholesterol எனப்படும் low density lipoprotein ஆல் காவப்படும் கொல்ஸ்திரோல் (bad cholesterol ) இன் அளவில் அதிகரிப்போ குறைவு ஏற்படும். எனவே கருத்தை இரண்டாக உடையது முழுமையாக வாசியுங்கள். இரண்டாக உடைத்து புது விளக்கம் கொடுக்காதீர்கள்.

நீங்கள் சுட்டிகாட்டிய தவற்றை திருத்திய பின்.

******* இன்னும் ஒரு முக்கியமான விடயம் பலரும் தவறாக சொல்லுவது கொலஸ்திரோல் உள்ள எண்ணெய் உதாரணம் தேங்காய் எண்ணெய் . தாவரங்களில் இருந்து எடுக்கும் எந்த எண்ணெயிலும் கொல்ஸ்திரோல் இல்லை. கொல்ஸ்திரோல் என்பது விலங்கு உணவுகளில் மட்டுமே உண்டு. ஆனால் தாவர எண்ணெய் வகையை பொறுத்து மனித உடலில்/ குருதியில் கொல்ஸ்திரோல் (LDL cholesterol) அளவு அதிகரிக்கவோ/ குறையவோ செய்யலாம்.

[size=5]அவகாடோவிலும்.. சூரியகாந்தி எண்ணெய்யிலும் கிட்டத்தட்ட ஒரே அளவு நிரம்பிய கொழுப்பு உள்ளது. ஆனால் சூரியகாந்தியில் அதிகம் பொலி நிரம்பாத கொழுப்பு உள்ளது. அந்த வகையில் அவகாடோவை விட சூரியகாந்தி நல்லது. ஆனால் தேங்காய் எண்ணெய்யில் இவை எல்லாவற்றையும் விட கூடிய நிரம்பிய கொழுப்பு உண்டு..! அதனை உண்பது கூடிய அளவுக்கு கொலஸ்ரோல் உருவாக வாய்ப்பை அளிக்கும்..! இதனால் தேங்காய் எண்ணெய்யை நாளாந்த பாவனையில் இருந்து தவிர்க்கச் சொல்வதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. மேலுள்ள அட்டவணையில் உள்ள தரவுகளோடு ஒப்பிட்டு பார்த்தால்.. இந்த விடயம் இலகுவாகப் புரியும்[/size]. :icon_idea:

மற்றையது அவகாடோ எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் ஒப்பீடு பற்றியது. சூரிய காந்தி எண்ணெயில் பல்-நிரம்பல் அடையத கொழுப்பமிலம் (poly-unsaturated fatty acid) லினோலிக் (linoleic) அமிலம் 69 % உண்டு. ஆனால் அவகாடோ எண்ணெயில் தனி-நிரம்பாத கொழுப்பமிலம் (mono-unsaturated) ஒலிக் (oleic ) அமிலம் 70 -74 % உண்டு.

சூரிய காந்தியில் அதிக அளவில் பல்-நிரம்பல் அடையாத கொழுப்பமிலம் இருக்கிறது என்பதற்காக அது நல்லது என்று அர்த்தம் அல்ல. :icon_idea:

சொல்லபோனால் அதிக பல்-நிரம்பல் அடையாத கொழுப்பமிலம் (poly-unsaturated fatty acid) இருப்பது உடலுக்கு பாதகமாக கூட அமையலாம்.

பல்-நிரம்பல் அடியாத கொழுப்பமிலங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட காபன்-காபன் இரட்டை பிணைப்பு இருக்கும். தனி-நிரம்பலடையாத கொழுப்பமிலத்தில் ஒரு காபன்-காபன் இரட்டை பிணைப்பு இருக்கும்.

கொழுப்பமிலத்தில் அதிக இரட்டை பிணைப்பு இருக்கும் பொது அது இலகுவில் ஒட்சியேற்றம் அடையும் இயல்பை பெறுகிறது இதனால், பல்-நிரம்பலடையாத கொழுப்பு அதிகம் உள்ள சூரிய காந்தி எண்ணெயை உண்ணும் பொது உடலில் இலகுவாக ஒட்சியேற்ற தாக்கத்துக்கு உட்பட்டு உடலில் ஒட்சியேற்ற அழுத்தத்தை (stress) ஐ கொடுக்கவல்லது. இது உடலுக்கு பதிப்பை கொடுக்கலாம்.

Effect of dietary monounsaturated and polyunsaturated fatty acids on the susceptibility of plasma low density lipoproteins to oxidative modification.

Oxidized low density lipoproteins (LDLs) are thought to play an important role in atherogenesis. Nutritional and biochemical studies suggest that diet can modulate the susceptibility of plasma LDL to undergo oxidative degradation by affecting the concentration of polyunsaturated fatty acids and antioxidants in the lipoprotein particle. In the present study 11 healthy male volunteers underwent two diet phases. In one phase the diet was enriched in oleic acid (mono), while in the other it was high in linoleic acid (poly). Both diets lowered plasma total and LDL cholesterol contents. The sensitivity of plasma LDL to oxidation was estimated by challenging these lipoproteins with 2,2'-azobis(2-amidinopropane)dihydrochloride, a free-radical initiator. Although neither diet affected the antioxidant content of plasma LDL, the resistance to lipid peroxidation, measured after the consumption of antioxidants present in the lipoprotein, was higher during the mono phase. Indeed, the peroxidation rate of plasma LDL was inversely correlated with the oleic acid to linoleic acid ratio in the LDL particle. These results support the thesis that diets rich in monounsaturated fatty acids increase the resistance of plasma LDL to oxidative modification, independent of their content of antioxidants. This effect could lower the atherogenicity of these lipoproteins.

http://atvb.ahajourn.../12/4/529.short

மற்றையது தனி-நிரம்பலடையாத கொழுப்பமில உணவு / பல் நிரம்பல் அடையாத கொழுப்பமில உணவுகளின் உடலின் LDL, or HDL cholesterol அளவு பற்றி ஆய்வுகளை ஒப்பிட்ட பொது இரண்டு வகை உணவுகளுமே உடலில் பாதகம் தர கூடிய LDL,cholesterol (bad LDL, cholesterol) அளவை குறைப்பதில் பங்கு வகிக்கிறன எனவும் அவற்றிற்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்றுமே சொல்கிறது.

Monounsaturated Versus Polyunsaturated Dietary Fat and Serum Lipids

A Meta-analysis

Abstract The objective of this study was to examine whether oils high in monounsaturated or polyunsaturated fats have a differential effect on serum lipid levels, using a meta-analytical approach. Fourteen studies (1983 through 1994) were identified that met six inclusion criteria, the primary criterion being that a study have at least two intervention diets that varied in monounsaturated and polyunsaturated fat content but were otherwise similar in total fat, saturated fat, fiber, and dietary cholesterol. Seven studies included a comparable high-saturated fat diet. Standardized effect sizes (observed treatment difference in mean end-point lipid levels, divided by the pooled SD) were calculated for individual studies, then individual effect sizes were pooled. The results indicated no significant differences in total, LDL, or HDL cholesterol levels when oils high in monounsaturated or polyunsaturated fats were compared directly. Triglyceride levels were modestly but consistently lower on the diets high in polyunsaturated fats (P=.05). Replacement of saturated fat with either monounsaturated or polyunsaturated fat led to significant decreases in total and LDL cholesterol (P<.001), and the pooled effect sizes were comparable for either type of unsaturate (effect sizes ranged from −0.64 to −0.68, ie, roughly a decrease of 0.65 mmol/L [25 mg/dL] relative to the high-saturated fat diets). Neither type of unsaturated fat significantly changed HDL cholesterol or triglyceride levels relative to the high-saturated fat diets. In conclusion, the evidence from this meta-analysis strongly indicates there is no significant difference in LDL or HDL cholesterol levels when oils high in either monounsaturated or polyunsaturated fats are exchanged in the diet. Any dietary recommendations for the use of one in preference to the other should be based on outcomes other than serum cholesterol levels.

http://atvb.ahajourn...5/11/1917.short

[size=4][size=5]அவகாடோவிலும்.. சூரியகாந்தி எண்ணெய்யிலும் கிட்டத்தட்ட ஒரே அளவு நிரம்பிய கொழுப்பு உள்ளது. ஆனால் சூரியகாந்தியில் அதிகம் பொலி நிரம்பாத கொழுப்பு உள்ளது. அந்த வகையில் அவகாடோவை விட சூரியகாந்தி நல்லது. ஆனால் தேங்காய் எண்ணெய்யில் இவை எல்லாவற்றையும் விட கூடிய நிரம்பிய கொழுப்பு உண்டு..! அதனை உண்பது கூடிய அளவுக்கு கொலஸ்ரோல் உருவாக வாய்ப்பை அளிக்கும்..! இதனால் தேங்காய் எண்ணெய்யை நாளாந்த பாவனையில் இருந்து தவிர்க்கச் சொல்வதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. மேலுள்ள அட்டவணையில் உள்ள தரவுகளோடு ஒப்பிட்டு பார்த்தால்.. இந்த விடயம் இலகுவாகப் புரியும்[/size]. [/size] :icon_idea:

தேங்காய் எண்ணெய் கேட்டது எனும் பொதுப்பட்ட கருத்து சம்பந்தமாக

தேங்காய் எண்ணெயில் அதிகளவில் நிரம்பிய கொழுப்பமிலங்கள் உண்டு என்பதும் உண்மை. ஆனால் தேங்காய் எண்ணெய் உடலுக்கு கேட்டது என்பது பற்றிய கருத்துக்கு , தேங்காய் எண்ணெய் பற்றி செய்த ஆய்வுகள் தேங்காய் எண்ணெயை ஐதரசநேர்ரம் செய்த மஜாரினை கொண்டு செய்யப்பட்டதால் அதில் இருக்கும் tarns-fatty acid உம ஆய்வில் கிடைத்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம். அத்துடன் ஏற்கவே இருக்கும் கேட்ட பெயர் காரணமாக யாரும் சாதாரண தேங்காய் எண்ணெயில் அதிக அளவு ஆய்வுகள் செய்வதில்லை.

According to Thomas Brenna, a professor of nutritional sciences at Cornell University who has extensively reviewed the literature on coconut oil, a considerable part of its stigma can be traced to one major factor.

“Most of the studies involving coconut oil were done with partially hydrogenated coconut oil, which researchers used because they needed to raise the cholesterol levels of their rabbits in order to collect certain data,” Dr. Brenna said. “Virgin coconut oil, which has not been chemically treated, is a different thing in terms of a health risk perspective. And maybe it isn’t so bad for you after all.”

http://www.nytimes.c...?pagewanted=all

அடுத்ததாக

தேங்காய் ஐ நாளாந்தம் உண்ணும் இலங்கை , பிலிப்பினோ போலிநேசியன் தீவு வாசிகளையும் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் பொது அதிகரித்த தேங்காய் பாவனை தேங்காய் எண்ணெய் பாவனை இருந்தும் அவர்களுக்கு இதய வருத்தங்களோ / குருதி கொல்ஸ்திரோல் அளவு என்பவை அதிகம் இல்லை.

இதற்கு சொல்லப்படும் காரணம் (முழுமையாக தமிழாக்க நேரமில்லை)

Coconut Oil Benefits: When Fat Is Good For You

Dr. Joseph Mercola

Physician and author

The Tropics' Best Kept Secret

The truth about coconut oil is obvious to anyone who has studied the health of those who live in native tropical cultures, where coconut has been a primary dietary staple for thousands of years.

Back in the 1930s, Dr. Weston Price found South Pacific Islanders whose diets were high in coconut to be healthy and trim, despite high dietary fat, and heart disease was virtually non-existent. Similarly, in 1981, researchers studying two Polynesian communities for whom coconut was the primary caloric energy source found them to have excellent cardiovascular health and fitness. (2)

Where were all the clogged arteries and heart attacks from eating all of this "evil" saturated fat?

Obviously, coconut oil was doing nothing to harm the health of these islanders.

It may be surprising for you to learn that the naturally occurring saturated fat in coconut oil is actually good for you and provides a number of profound health benefits, such as:

• Improving your heart health.(3)

• Boosting your thyroid. (4)

• Increasing your metabolism.

• Promoting a lean body and weight loss if needed.

• Supporting your immune system. (5)

Coconut oil even benefits your skinwhen applied topically and has been found to have anti-aging, regenerative effects.

So, what are coconut oil's secrets to success?

How Coconut Oil Works Wonders in Your Body

Nearly 50 percent of the fat in coconut oil is of a type rarely found in nature called lauric acid, a "miracle" compound because of its unique health promoting properties. Your body converts lauric acid into monolaurin, which has anti-viral, anti-bacterial and anti-protozoa properties. (6)

Coconut oil is also nature's richest source of medium-chain fatty acids (MCFAs), also called medium-chain triglycerides or MCTs. By contrast, most common vegetable or seed oils are comprised of long chain fatty acids (LCFAs), also known as long-chain triglycerides or LCTs.

LCTs are large molecules, so they are difficult for your body to break down and are predominantly stored as fat.

But MCTs (7) , being smaller, are easily digested and immediately burned by your liver for energy -- like carbohydrates, but without the insulin spike. MCTs actually boost your metabolism and help your body use fat for energy, as opposed to storing it, so it can actually help you become leaner.

Back in the 1940s, farmers discovered this effect accidentally when they tried using inexpensive coconut oil to fatten their livestock.

It didn't work!

Instead, coconut oil made the animals lean, active and hungry.

Coconut oil has actually been shown to help optimize body weight, which can dramatically reduce your risk of developing Type 2 diabetes (8). Besides weight loss, boosting your metabolic rate will improve your energy, accelerate healing and improve your overall immune function.

And several studies have now shown that MCTs can enhance physical or athletic performance.(9)

And finally, as we have already discussed, coconut oil is incedibly good for your heart. The truth is this: it is unsaturated fats that are primarily involved in heart disease and too much sugar and processed foods, not the naturally occurring saturated fats, as you have been led to believe. (10)

list of references.

1) Kaunitz H, Dayrit CS. Coconut oil consumption and coronary heart disease. Philippine Journal of Internal Medicine, 1992;30:165-171

(2) Prior IA, Davidson F, Salmond CE, Czochanska Z. Cholesterol, coconuts, and diet on Polynesian atolls: a natural experiment: The Pukapuka and Tokelau Island studies, American Journal of Clinical Nutrition, 1981;34:1552-1561

(3) Raymond Peat Newsletter, Coconut Oil, reprinted at www.heall.com. http://www.heall.com...coconutoil.html An Interview With Dr. Raymond Peat, A Renowned Nutritional Counselor Offers His Thoughts About Thyroid Disease

(4) Baba, N 1982.Enhanced thermogenesis and diminished deposition of fat in response to overfeeding with diet containing medium-chain triglycerides, Am. J. Clin. Nutr., 35:379

(5) Dr. Mary G. Enig, Ph.D., F.A.C.N. Source: Coconut: In Support of Good Health in the 21st Century

(6) Isaacs CE, Litov RE, Marie P, Thormar H. Addition of lipases to infant formulas produces antiviral and antibacterial activity, Journal of Nutritional Biochemistry, 1992;3:304-308.

Isaacs CE, Schneidman K. Enveloped Viruses in Human and Bovine Milk are Inactivated by Added Fatty Acids(FAs) and Monoglycerides(MGs), FASEB Journal, 1991;5: Abstract 5325, p.A1288.

Mitsuto Matsumoto, Takeru Kobayashi, Akio Takenakaand Hisao Itabashi. Defaunation Effects of Medium Chain Fatty Acids and Their Derivatives on Goat Rumen Protozoa, The Journal of General Applied Microbiology, Vol. 37, No. 5 (1991) pp.439-445.

(7) St-Onge MP, Jones PJ. Greater rise in fat oxidation with medium-chain triglyceride consumption relative to long-chain triglyceride is associated with lower initial body weight and greater loss of subcutaneous adipose tissue, International Journal of Obesity & Related Metabolic Disorders, 2003 Dec;27(12):1565-71. http://www.ncbi.nlm....pubmed/12975635

(8) Geliebter, A 1980. Overfeeding with a diet of medium-chain triglycerides impedes accumulation of body fat, Clinical Nutrition, 28:595

(9) Fushiki, T and Matsumoto, K Swimming endurance capacity of mice is increased by consumption of medium-chain triglycerides, Journal of Nutrition, 1995;125:531. http://www.coconut-c...othyroidism.htm

(10) Barry Groves, PhD. Second Opinions: Exposing Dietary Misinformation: The Cholesterol Myth, parts 1 and ௨

http://www.huffingto...s_b_821453.html

Cholesterol, coconuts, and diet on Polynesian atolls: a natural experiment: the Pukapuka and Tokelau island studies.

Abstract

Two populations of Polynesians living on atolls near the equator provide an opportunity to investigate the relative effects of saturated fat and dietary cholesterol in determining serum cholesterol levels. The habitual diets of the toll dwellers from both Pukapuka and Tokelau are high in saturated fat but low in dietary cholesterol and sucrose. Coconut is the chief source of energy for both groups. Tokelauans obtain a much higher percentage of energy from coconut than the Pukapukans, 63% compared with 34%, so their intake of saturated fat is higher. The serum cholesterol levels are 35 to 40 mg higher in Tokelauans than in Pukapukans. These major differences in serum cholesterol levels are considered to be due to the higher saturated fat intake of the Tokelauans. Analysis of a variety of food samples, and human fat biopsies show a high lauric (12:0) and myristic (14:0) content. Vascular disease is uncommon in both populations and there is no evidence of the high saturated fat intake having a harmful effect in these populations.

Am J Clin Nutr. 1981 Aug;34(8):1552-61.

http://www.ncbi.nlm..../pubmed/7270479

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.