Sign in to follow this  
துளசி

அம்மாவையும் மனைவியையும் ஒப்பிடும் பல ஆண்கள்

Recommended Posts

[size=3]பல இளைஞர்களுக்கு திருமணத்தின் போது இருக்கும் எண்ணம், என் அம்மாவை போல எனக்கு மனைவி வேண்டும். கிட்ட தட்ட பல ஆண்களின் சிந்தனை இது தான் ஆனால் இதில் எவ்வளவு பெரிய விஷயங்கள் இருக்கு தெரியுமா? கிட்டதட்ட ஆணாதிக்கத்தின் ஆரம்பம் இது எனலாம்.[/size]

[size=3]mother.gif[/size]

[size=3]முதலில் தன் அம்மாவை நம் சமூகத்தில் உள்ள ஆண்களுக்கு ஏன் பிடிக்கிறது? பெரும்பாலான குடும்பத்தில் அப்பா எப்போதும் கொஞ்சம் விறைப்பான ஆளாகவே இருப்பார், அவரிடம் நேரடியாய் பேச முடியாது, ஆனால் அம்மா அப்படி இல்லை. கொஞ்சம் மூஞ்சிய தூக்கி வச்சுக்கிட்டு ஏதாவது கேட்டா போதும் உடனே கிடைத்து விடும். சில சமயம் கேட்டாலே போதும். ஸோ, தன் பேச்சை கேக்கணும். இது தான் அம்மா போல மனைவியை கேட்கும் முதல் காரணம். ஆனா இன்றைய காலகட்டத்தில் இது முறையா? முறையா என்பதை விட மிகப் பெரிய முட்டாள்தனம் இது.[/size]

[size=3]நம் அப்பாக்களை கொஞ்சம் உன்னித்து பாருங்கள், மனைவியிடம் ம்,சரி,என்ன,ஆமா என்று தான் பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளை மட்டும் பேசுவார்கள், ஆனால் மற்ற பெண்களிடம் அதிகமாக பேசுவார்கள். அதாவது மற்றவர்கள் முன்னிலையில் நான் என் மனைவி சொல்லை கேட்பவன் அல்ல. என் சொந்த சிந்தனையை பயன்படுத்துவன் என்று காட்டிக் கொள்ள. அப்படியான பெண்களை தான் இந்த சமூகத்தின் ஆண்கள் இன்றும் விரும்புகிறார்கள். [/size]

[size=3]இதே, தான் கேட்ட எதையும் வாங்கித் தராத ஒரு அம்மா, எப்போதும் முறைக்கும் ஒரு அம்மா போன்ற மனைவியை ஆண்கள் எதிர்பார்ப்பார்களா? இல்லையே. [/size]

[size=3]முதலில் அம்மாவையும், மனைவியையும் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அம்மா என்பவர் ஒரு மகனை/மகளை பொறுத்த வரை வெறும் மனுஷி அல்ல. அடுத்தவர் வாழ்க்கைக்கு வெளிச்சம் தர தன்னை உருக்கிக் கொள்ளும் மெழுகுவர்த்தி போல, ஒருவனால் எப்போதும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே வாழ்ந்து விட முடியாது, தன்னை உயர்த்திக் கொள்ள, உணர்ந்து கொள்ள அதை விட மேலான ஒரு வெளிச்சம் தேவைப்படுகிறது. அது ஒரு டார்ச் லைட் ஆகவோ அல்லது சூரியன் ஆகவோ கூடவோ இருக்கலாம். அந்த இரண்டாவது தான் மனைவி. இரண்டு பேரும் வேறு வேறு தலைமுறையில் இருக்கிறவர்கள். உங்கள் அப்பாவுக்கும் உங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்குமோ, அதே அளவு அம்மாவுக்கும் மனைவிக்கும் இருக்கும் அல்லவா?[/size]

[size=3]young-couple-in-pink-love-heart-cartoon.jpg[/size]

[size=3]தன் மனைவி தன் அம்மாவை போல இல்லை என்பவர்கள் சொல்லும் பல காரணங்களில் ஒன்று சமையல். அதெப்படிங்க மகனாக உங்களுக்கு பிடிக்கும் சமையல், உங்கள் அப்பாவுக்கு ஒரு கணவராக எப்படி பிடிக்கிறது? உங்கள் அம்மா, உங்கள் அப்பாவின் அம்மாவைப் போலத்தான் சமைக்கிறாரா? உங்க அப்பாவுக்கு கிடைச்சது போல ஒரு அனுசரனையான பொண்டாட்டி வேணும் ஆனா உங்களால் அனுசரித்து போக முடியாது. இதெப்படி நியாயம் ஆகும். உங்கள் மனைவி செய்யும் சமையல் உங்கள் குழந்தைக்கு பெரும்பாலும் பிடிக்கும் தானே? அப்போ தப்பு யார் மேல.

உங்க அப்பா இன்னும் அவங்க அம்மா சாப்பாட்டைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தால் உங்களுக்கே சாப்பாடு ஒழுங்கா வராது பாத்துக்கோங்க.

அடுத்து என் மனைவி என் அம்மா போல பாந்தமாக சேலை கட்டி தான் எப்போதும் இருக்க வேண்டும். அதாவது இவர்கள் மாடர்ன் உலகத்தை வரவேற்பார்கள்,பெண்கள் சுதந்திரத்தை அங்கீகாரம் செய்வார்கள். எப்படி என்றால், தன் அலுவலகத்தில், தான் பார்க்கும் பெண்கள் மாடர்ன் உடை உடுத்தினால். ஆனால் தன் மனைவி அப்படி இருக்கக் கூடாது. அப்படி எல்லோரும் நினைத்து இருந்தால் பாண்ட்,ஷர்ட் போட்ட ஒரு பெண்ணை கூட நீங்கள் தெருவில் பார்க்க முடியாது, அப்படிபட்ட மாடர்ன் பெண்களுக்கும் குடும்பம் இருக்கிறது. நீங்கள் எல்லாம் வெளியே சொல்லாதீர்கள் நான் மாடர்ன் பார்ட்டி என்று, இன்னும் 60களை தாண்டாத அசடுகள் நீங்கள்.

இன்றைய பெண்கள் யாராவது தங்கள் அப்பாவை போல கணவரை கேட்கிறார்களா? பெரும்பாலும் இல்லை. ஏன் அப்பா என்பவர் தன்னிடம் பாசமாக இருக்கிறார் என்பதை தாண்டி, தன் அம்மாவை அவர் சக மனுஷியாக நடத்தவில்லை என்பது ஒரு முக்கிய காரணம். ஆனால் அப்படி கேட்கும் பெண்கள் தான் பெரும்பாலான ஆண்களுக்கு வேண்டும்.

சமீபத்தில் முகப்புத்தகத்தில் ஒரு செய்தி படித்தேன், (இதுக்கு நிறைய லைக் வேற, நான் கொடுத்தேனா என்று தெரியல)

“கோவம் வந்தால் சமைத்து விட்டு சாப்பிடாமல் படுப்பவர் அம்மா, சமைக்காமல் படுப்பவள் மனைவி”

இது என்னய்யா கொடுமை, உங்க அம்மா உங்களுக்கு மட்டுமா சமைக்கிறார், தன் கணவனுக்கும் தானே? ஒரு குழந்தை பிறந்த பின் உங்கள் மனைவியும் இதையே தான் செய்வார். சரி அப்படியே கோவம் வந்தால் யாரால்? பெரும்பாலும் கணவனால், அப்படி வந்தால் கோவத்தைக் காட்டுவதில் என்ன தவறு? ஒரு ஆண் கோவத்தைக் காட்டலாம் ஆனால் பெண் காட்டக் கூடாதா?

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் ஆண்களே , உங்கள் அம்மா என்பவர் ஒரு ஆணுக்கு மனைவி, உங்கள் மனைவி என்பவர் ஒரு மகனு(ளு)க்கு தாய்(வருங்காலத்தில் கூட இருக்கலாம்).[/size]

- Prabu Krishna -

பி.கு:- இதனை வாசிக்கும் போது நெடுக்ஸ் அண்ணாவின் நினைவு வந்தது. :D

அவர் ஒரு திரியில் கூறியிருந்தார், "தாயின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளுற ஆண்.. ஏன் மனைவியின் புத்திமதியை ஏற்றுக் கொள்ளுறான் இல்லை. அதற்கு காரணம்.. அவன் தாயை நம்பும் அளவிற்கு மனைவி மீது நம்பிக்கை வைக்கிற அளவுக்கு அவள் அவனோட நடந்துகொள்ளேல்ல.. அவனைப் புரிஞ்சு கொள்ள முயலல்ல என்று தானே" என்று. இங்கு மனைவியில் தவறா கணவனில் தவறா என்ற கேள்விக்கு விடை இங்கு உண்டு. :D

Edited by துளசி

Share this post

Link to post
Share on other sites

[size=3]....தன் மனைவி தன் அம்மாவை போல இல்லை என்பவர்கள் சொல்லும் பல காரணங்களில் ஒன்று சமையல். [/size]

[size=3]அதெப்படிங்க மகனாக உங்களுக்கு பிடிக்கும் சமையல், உங்கள் அப்பாவுக்கு ஒரு கணவராக எப்படி பிடிக்கிறது? உங்கள் அம்மா, உங்கள் அப்பாவின் அம்மாவைப் போலத்தான் சமைக்கிறாரா? உங்க அப்பாவுக்கு கிடைச்சது போல ஒரு அனுசரனையான பொண்டாட்டி வேணும் ஆனா உங்களால் அனுசரித்து போக முடியாது. இதெப்படி நியாயம் ஆகும்? உங்கள் மனைவி செய்யும் சமையல் உங்கள் குழந்தைக்கு பெரும்பாலும் பிடிக்கும் தானே? அப்போ தப்பு யார் மேல.

உங்க அப்பா இன்னும் அவங்க அம்மா சாப்பாட்டைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தால் உங்களுக்கே சாப்பாடு ஒழுங்கா வராது பாத்துக்கோங்க.

....[/size]

[size=3]....

இன்றைய பெண்கள் யாராவது தங்கள் அப்பாவை போல கணவரை கேட்கிறார்களா? பெரும்பாலும் இல்லை. ஏன் அப்பா என்பவர் தன்னிடம் பாசமாக இருக்கிறார் என்பதை தாண்டி, தன் அம்மாவை அவர் சக மனுஷியாக நடத்தவில்லை என்பது ஒரு முக்கிய காரணம்....[/size]

அம்மாடி, அறிவுக்கண்ணை திறந்துவிட்டீர்கள்...நெசமாவே...! :lol:

புதுசுவை, பிடிபடாத சூழல்...ம்.. கல்யாணம் ஆனவுடன் கொஞ்ச நாளைக்கு அப்பிடி இப்பிடின்னு சொல்லிகொண்டுதான் இருப்பாங்க... அப்புறம் உங்கள் பிடிக்குள் மாட்டுப்பட்டு யாவரும் அமிழ்ந்து போவதில்லையா? :D

இது, அனுபவத்தில் சொன்னதுதான். :icon_idea:

பகிர்வுக்கு நன்றி.

.

Edited by ராஜவன்னியன்

Share this post

Link to post
Share on other sites

தனது மகனின், ஏற்ற இறக்கங்கள், எல்லாவற்றையும், ஒரு தாய், ஒரே மாதிரியே பார்க்கின்றாள்!

இன்பம் வரும் போதும், அல்லது துன்பம் வரும்போதும், அவளது அன்பில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடுவதில்லை!அவளது அன்பு, நிபந்தனையில்லாதது!

ஆனால், மனைவியின் அன்பு, நிபந்தனையுடன் கூடியது! ஒரு ஒப்பந்தத்தின், அடிப்படையில், உருவாக்கப் படுவது! அவளது, எதிர்பார்ப்புகள், நிறைவேறாத போது, சலிப்படைந்து போய் விடுவாள்!

ஒரு ஆண், தனது மனைவி, தான் தாயைப்போல, இருக்கவேண்டும் என்று, எதிர் பார்ப்பதில் எந்தத் தவறும், இருப்பதாக, நான் கருதவில்லை!

  • Like 5

Share this post

Link to post
Share on other sites

[size=3]“கோவம் வந்தால் சமைத்து விட்டு சாப்பிடாமல் படுப்பவர் அம்மா, சமைக்காமல் படுப்பவள் மனைவி” [/size]

சமைக்காமல் படுத்தால், மனைவியும் பட்டினி தானே.....

மக் டொனால்ஸ், பேர்கர் கிங் எல்லாம்... இபடியான நேரத்தில் ஆண்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் என்பதை, சில மனைவிமார் லேட்டாக புரிந்து கொள்கின்றார்கள்.

என்ன செய்வது, "பெண்புத்தி, பின் புத்தி" என்று சும்மாவா... சொன்னார்கள்.

Share this post

Link to post
Share on other sites

சமைக்காமல் படுத்தால், மனைவியும் பட்டினி தானே.....

மக் டொனால்ஸ், பேர்கர் கிங் எல்லாம்... இபடியான நேரத்தில் ஆண்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் என்பதை, சில மனைவிமார் லேட்டாக புரிந்து கொள்கின்றார்கள்.

தெரிந்த ஒருவர் தானும் கோபித்துக் கொண்டு போவது மாதிரி வெளியில் போய் கணவாய்ப் பொரியல், கொத்து ரொட்டி..... என்று ஒரு வெட்டு வெட்டிட்டு, ஒன்றுமே சாப்பிடாமல் பட்டினி கிடந்த மாதிரி வீட்டிற்குப் போய் நல்லா நடிப்பார்.

Share this post

Link to post
Share on other sites

தனது மகனின், ஏற்ற இறக்கங்கள், எல்லாவற்றையும், ஒரு தாய், ஒரே மாதிரியே பார்க்கின்றாள்!

இன்பம் வரும் போதும், அல்லது துன்பம் வரும்போதும், அவளது அன்பில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடுவதில்லை!அவளது அன்பு, நிபந்தனையில்லாதது!

ஆனால், மனைவியின் அன்பு, நிபந்தனையுடன் கூடியது! ஒரு ஒப்பந்தத்தின், அடிப்படையில், உருவாக்கப் படுவது! அவளது, எதிர்பார்ப்புகள், நிறைவேறாத போது, சலிப்படைந்து போய் விடுவாள்!

ஒரு ஆண், தனது மனைவி, தான் தாயைப்போல, இருக்கவேண்டும் என்று, எதிர் பார்ப்பதில் எந்தத் தவறும், இருப்பதாக, நான் கருதவில்லை!

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

ஒரு ஆண் தனது தாயை போல் மனைவியை விரும்புகிறான் என்றால் அவனது தந்தை தனது தாயை போல் மனைவியை அல்லவா விரும்ப வேணும். அப்படி தன் மனைவி இல்லை என்றவுடன் divorce எடுத்திருந்தால் இந்த ஆண் பிறந்திருப்பாரா? எனவே தந்தை தனது மனைவியுடன் சகிப்புடன் நடந்தால் இவனால் ஏன் நடக்க முடியாது?

இதே போல் பெண்களும் தனது தந்தை போல் கணவன் அமைய வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஆணுடன் சச்சரவு தான் அதிகரிக்கும். :) (ஆனால் பெண்கள் அப்படி கேட்பது குறைவு. காரணம் கூடுதலாக அவர்கள் தந்தை தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அவதானித்திருப்பார்கள்)

சமைக்காமல் படுத்தால், மனைவியும் பட்டினி தானே.....

மக் டொனால்ஸ், பேர்கர் கிங் எல்லாம்... இபடியான நேரத்தில் ஆண்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் என்பதை, சில மனைவிமார் லேட்டாக புரிந்து கொள்கின்றார்கள்.

என்ன செய்வது, "பெண்புத்தி, பின் புத்தி" என்று சும்மாவா... சொன்னார்கள்.

வெளிநாட்டில் இருந்தால் இப்படி தான் தனிய வெளிநாட்டை மட்டும் சிந்தித்து கருத்து எழுதுவது. ஆண்கள் புத்தி அவசரப்புத்தியோ? :lol:

தெரிந்த ஒருவர் தானும் கோபித்துக் கொண்டு போவது மாதிரி வெளியில் போய் கணவாய்ப் பொரியல், கொத்து ரொட்டி..... என்று ஒரு வெட்டு வெட்டிட்டு, ஒன்றுமே சாப்பிடாமல் பட்டினி கிடந்த மாதிரி வீட்டிற்குப் போய் நல்லா நடிப்பார்.

:lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

தெரிந்த ஒருவர் தானும் கோபித்துக் கொண்டு போவது மாதிரி வெளியில் போய் கணவாய்ப் பொரியல், கொத்து ரொட்டி..... என்று ஒரு வெட்டு வெட்டிட்டு, ஒன்றுமே சாப்பிடாமல் பட்டினி கிடந்த மாதிரி வீட்டிற்குப் போய் நல்லா நடிப்பார்.

இவரின் நடிப்பை, மனைவி கண்டுபிடித்தால்....

கோவித்துக் கொண்டு சமைக்காமல் இருப்பதை நிறுத்திவிடுவார். :D:lol:

Share this post

Link to post
Share on other sites

நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

(ஆனால் பெண்கள் அப்படி கேட்பது குறைவு. காரணம் கூடுதலாக அவர்கள் தந்தை தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை அவதானித்திருப்பார்கள்)

:lol: :lol:

உங்களைப் பாராட்டாமலிருக்க, முடியவில்லை, காதல்!

இந்த நேரம் பார்த்துப், பச்சை கையை விட்டிடுது!

Share this post

Link to post
Share on other sites
ஜீவா    681

இந்தக்கட்டுரை என்னவோ அரைப்பழசுகளுக்கு எழுதியது போல இருக்கு.

யார் இப்ப சமையலை,சாறியை மனைவியிடம் எதிர்பார்க்கிறார்களோ தெரியாது?

ஆசியாவிலை இருந்து,ஜரோப்பாவிலை இருந்து,மெக்சிக்கன் ல இருந்து அத்தனை வகை உணவுகளையும்

செய்ய தெரிந்த இளைஞர்கள் தான் பலர். இந்த தலைமுறை முன்னையவர்களை போல மனைவி என்ற பெயரில் வீட்டுவேலை செய்ய வேலைக்காரியை எதிர்பார்க்கவில்லை பாட்னரை தான் எதிர்பார்க்கிறார்கள். யாரும் யாருடைய சுயத்தையும் இழக்கத்தேவையில்லை ஒருவருக்கொருவர் சகலவிதத்திலும் உறுதுணையாயமிருப்பதையே எதிர்பார்க்கிறோம். மனைவி சமைத்தால் கூட விடுமுறைநாட்களில் ஆயினும் சமைத்துக்கொடுக்கும் ஆண்கள் தான் அதிகம். :rolleyes:

அப்புறம் சாறி.. அது கட்டினால் அனைவருக்கும் தான் இடைஞ்சல் :rolleyes: :rolleyes: ஒரு சேஞ்சுக்கு எப்பவாச்சும் கேட்போம். ஒரே மாதிரி பார்க்க முடியாது என்று மற்றும் படிக்கு ஆணாதிக்கம்,பெண்ணடிமை என்று பேசுபவர்கள் காலமாற்றத்தை உணராது ஏதோ எழுதித்தொலைக்க :wub: வேண்டும் என்பதற்கான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களே இவை. :icon_idea:

[size=3](அதற்காக முற்று முழுதாக இல்லை என்று மறுக்கவும் முடியாது,இன்னும் நாகரீகமடையாதவர்களிடம் மிக மிகக்குறைந்தளவு நடக்கவே செய்கிறது)[/size]

  • Like 1

அண்ணா, இந்த கட்டுரையை எழுதியவர் இந்தியாவில் உள்ளார். நீங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு அவர் அரைப்பழசுகளுக்கு எழுதின கட்டுரை மாதிரி இருக்கெண்டு சொல்லுறது நல்லதில்லை. :D

வெளிநாட்டில் இருப்பவர்கள் சாறிக்கு ஒன்றும் சொல்லாவிட்டாலும் சமையல் விடயத்தில் பலர் இன்னும் இப்படி சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆண்கள் சமைத்தால் கூட தன் மனைவி சமைக்கும் போது "உனக்கு அம்மா மாதிரி சமைக்க தெரியாது" என்றும் "உன்னை விட நான் நல்லா சமைப்பன்" என்றும் சொல்பவர்களும் உண்டு.

கால மாற்றம் இதையும் முற்றாக மாற்றி விட்டால் அவர்கள் ஏன் எழுதப்போகிறார்கள்? நான் ஏன் இணைக்கப்போகிறேன்? :D

வெளிநாடு கூட எம் நாடுகள் போல் இருந்திருந்தால் அங்கும் சாறி கட்ட சொல்லி சொல்லியிருப்பார்கள். ஆனால் அங்கு பல இனத்தவர் வாழும் சூழலில் வேலைக்கும் சாறியுடன் போனால் வேலை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். இது பழக்கத்தில் வந்ததால் சாறி உடுக்கும் பழக்கம் குறைந்து விட்டாது. அத்துடன் குளிர் காலநிலை காரணமாகவும் ஜீன்ஸ் அணிவது வழக்கம்.

ஆனால் இன்றும் வெளிநாட்டில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியை எடுத்துக்கொண்டால் பல பெண்கள் சாறி உடுத்தி வெளியில் செல்வார்கள். winter நேரத்தில் கூட சாறி உடுத்து அதன் மேல் jacket போட்டுக்கொண்டு செல்வார்கள். உங்கள் வயதிலுள்ளவர்களை கவனிக்காமல் கொஞ்சம் வயது கூடினவர்களை கவனியுங்கள். :D

நான் ஆணாதிக்கம், பெண்ணடிமை பற்றி பேசுபவள் அல்ல. ஆண், பெண் இருபகுதிக்காகவும் கதைப்பேன். ஆனால் ஆணில் பிழை இல்லை என்று சொல்லிக்கொண்டு பெண்ணில் மட்டும் பிழை பிடித்து கதைப்பவர்களுக்கு பதிலளிப்பதை பார்த்து நீங்கள் அப்படி நினைத்து விட்டீர்கள். :D

அது சரி பெரிய எழுத்தில் போட வேண்டியதை ஏன் சிறிய எழுத்தில் போட்டிருக்கிறீர்கள்? தேவையற்றதை பெரிய எழுத்தில் போட்டு விட்டு முக்கியமான விடயத்தை மக்களின் கண்களில் படாதவாறு சிறிய எழுத்தில் போடுவது விற்பனைக்கு பயன்படும் உத்தி அல்லவா? :icon_idea:

Share this post

Link to post
Share on other sites
Eas    35

பெண்களும் தான் "நான் உந்தன் தாயாக வேண்டும்" என்று ஏங்குகிறார்கள். அது ஏன்?

கவிதைகளிலும் கூட இந்த மாதிரியான உவமைகள் வந்துள்ளன.

தாய் தாய் தான் - மனைவி மனைவி தான்.

ஏன் ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டும்? எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

Share this post

Link to post
Share on other sites

இந்த கட்டுரை சொல்ல வரும் செய்தி.

ஒரு ஆண் தன் தாயாரை போல் மனைவி வேண்டும் என்று நினைக்காமல் தன் மனைவியுடன் சமாளித்து நடக்க வேண்டும். அதே மனைவி உங்கள் பிள்ளைக்கு நல்ல தாயாக இருப்பார். உங்கள் தாயை எப்படி உங்களுக்கு பிடிக்கிறதோ அதே போல் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் தாயை (உங்கள் மனைவியை) பிடிக்கும்.

பெண்களும் தான் "நான் உந்தன் தாயாக வேண்டும்" என்று ஏங்குகிறார்கள். அது ஏன்?

கவிதைகளிலும் கூட இந்த மாதிரியான உவமைகள் வந்துள்ளன.

தாய் தாய் தான் - மனைவி மனைவி தான்.

ஏன் ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டும்? எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

கவிதை எழுதும் போது கற்பனைகளை கொண்டு எழுதுவது. அது முழுக்க வாழ்க்கைக்கு பொருந்தாது. ஒரு சிலர் தாயை போல் அன்பாக நடப்பவர்கள் உள்ளார்கள். ஆனால் அரிது. அனைவரும் அப்படி பெண்கள் வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.

நீங்கள் கூறுவது சரி. தாய் தாய் தான் - மனைவி மனைவி தான். அதை தான் இந்த கட்டுரை சொல்கிறது. :)

Edited by துளசி

Share this post

Link to post
Share on other sites
nunavilan    1,950

ஆணுக்கு தன் தாய் போல் மனைவி அமைய வேண்டும் என்பது விருப்பமாக இருக்கலாம்.தாயானவள் அன்பை பொழிபவள் என்பதால் அப்படியான ஒரு குணமுள்ள பெண் தனக்கு வரவேண்டும் என ஆசைப்படல்லம்.

அதே போல் மனைவியும் தனது தந்தை போல் அன்பை பொழியும் (இன்னும் என்னென்ன குணங்கள் தனது தந்தையில் பிடிக்குமோ) கணவர் வரவேண்டும் என விரும்புவதற்கு சகல சுதந்திரமும் உண்டு.

காலமாற்றத்திற்கேற்ப அன்பு பாசத்தின் அளவு குறைந்து வருகிறது. வேலைப்பளு, மன அழுத்தம் என்பவை கூட இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே தாய் தன் கணவனிடம் காட்டிய பாசம் கூட இன்றைய மனைவியால் கணவனிடம் காட்ட முடியாது. எனவே அதை புரிந்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் வீண் சச்சரவுகளை தவிர்க்கலாம்.

தாயை போல் தன் மனைவி வேண்டுமென்று ஆசைப்படலாம் ஆனால் அப்படியான மனைவி அமையாதவிடத்து அவளை தாயுடன் ஒப்பிட்டு கதைப்பது நல்லதல்ல. பிள்ளைகளுக்கு தாயை பிடிக்கும் போது அதே தாயை அவள் கணவனுக்கு (தந்தைக்கு) பிடிக்காமல் போகிறது தானே? அதற்கு இப்படியான ஒப்பீடுகளும் ஒரு காரணம்.

தாய் மாருக்கு அதிகமாக ஆண்பிள்ளைகளையும் தந்தைமாருக்கு அதிகமாக பெண் பிள்ளைகளையும் பிடிக்கும். ஆனால் பிள்ளைகளுக்கு அதிகமாக தாயை தான் பிடிக்கும். (அது பெண்பிள்ளையாக இருந்தாலும்)

எனவே பிள்ளைகளுக்கு தந்தையை பிடிக்க வேண்டுமென்றால் அது தந்தையின் கைகளில் தான் உண்டு. :)

[size=5]இப்படியா[/size]

:) :)

அம்மாவுக்கு பதிலா அம்மம்மாவின் படத்தை போடுறியள். :D தாயைப்போல் மனைவி வேண்டும் என்று ஆண்கள் கேட்பது உருவ அமைப்பை வைத்தல்ல. குணத்தை தான் சொல்கிறார்கள். :)

அம்மாடி, அறிவுக்கண்ணை திறந்துவிட்டீர்கள்...நெசமாவே...!

புதுசுவை, பிடிபடாத சூழல்...ம்.. கல்யாணம் ஆனவுடன் கொஞ்ச நாளைக்கு அப்பிடி இப்பிடின்னு சொல்லிகொண்டுதான் இருப்பாங்க... அப்புறம் உங்கள் பிடிக்குள் மாட்டுப்பட்டு யாவரும் அமிழ்ந்து போவதில்லையா?

இது, அனுபவத்தில் சொன்னதுதான். :icon_idea:

பகிர்வுக்கு நன்றி.

:lol: :lol:

நல்ல அனுபவம் போலிருக்கு. :D நன்றி வருகைக்கும் கருத்திற்கும். :)

Edited by துளசி

Share this post

Link to post
Share on other sites
ஆரதி    336

[size=5]அம்மா போல் மனைவி வேண்டும் - ஆண்களின் குரூரம்[/size]

[size=5]இல்லை இப்படியா[/size]

[size=5]1. வாய் முழுக்க வெத்திலை பாக்கு [/size]

[size=5]2. சாயம் பிடித்த பற்கள்[/size]

[size=5]3. சோல்ற் அண்ட் பெப்பர் கேயர்[/size]

[size=5]4. காதில் பெரிய கடுக்கன்[/size]

[size=5]5. குறுக்குக் கட்டு[/size]

[size=5]6. தலையில் கடகம்[/size]

[size=5]7.செருப்பில்லாத பித்த வெடிப்புக் கால்[/size]

[size=5]8. கையால் பல் விளக்கும் பிகர்[/size]

Edited by அலைமகள்

இது அவர்களின் தவறல்ல. அவர்களின் குடும்ப சூழ்நிலை, அவர்கள் வளர்ந்த விதம் அப்படியாக உள்ளது. ஆனால் அவர்களுக்கும் அன்பு செலுத்த தெரியும்.

அப்படியான அம்மாமார் கூட பிள்ளைகளில் நல்ல பாசம் வைத்திருந்தால் ஆண் பிள்ளைகளும் தன் அம்மா போல் அன்பு செலுத்தும் மனைவி வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் மனைவியின் தோற்றத்தில் இந்த காலத்திற்கேற்ப மாறுதலை எதிர்பார்ப்பார்கள்.

கீழே உள்ளதை போன்றதொரு அம்மா அமையுமெனின் அம்மா போல் மனைவி வேண்டுமென்று கேட்க மாட்டார்கள்.

[size=3]தான் கேட்ட எதையும் வாங்கித் தராத ஒரு அம்மா, எப்போதும் முறைக்கும் ஒரு அம்மா போன்ற மனைவியை ஆண்கள் எதிர்பார்ப்பார்களா? இல்லையே. [/size]

இதேபோல் தொட்டதுக்கும் அடிக்கும் அம்மா, பிள்ளைகளை பிள்ளைகளாக மதிக்காத அம்மா.... etc.. அமைந்தாலும் அப்படி கேட்க மாட்டார்கள்.

Share this post

Link to post
Share on other sites

நல்ல அனுபவம் போலிருக்கு...

இல்லையா பின்னே?

திருமண காலத்தில் நானும் இப்படித்தான் சொல்லிக்கொண்டு திரிந்தேன். ஆனால் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்களே...அது போல தான்.

சம்சாரி வாழ்க்கை செல்லச் செல்ல, நம் உணர்வுகளோடும், உறவோடும் ஒன்றிணைந்து எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு முன்னேற்றுவதில் அது குடும்பத்திலாகட்டும், கணவனின் தொழில் சம்பந்தமாகட்டும் மனைவியே அங்கே மந்திரமாய், மந்திரியாய் நிற்கிறாள். தாய் பரிவோடு ஒதுங்கிவிடுகிறார். தாயின் சாப்பாடு ஒருவித சுவையென்றால், மனைவியின் சமையலும் ருசியாக போகப் போக தாய்க்கு நிகராகவே மாறி நிற்கிறார்...கரும்பின் சுவைபோல்.

தாய் பூஜைக்குரியவர்தான். ஆனால் மனைவியும் ஆராதனைக்குரியவரே!

  • Like 2

நன்றி அண்ணா. நீங்கள் மனைவியுடன் சமாளித்து நடப்பவர் என்று புரிகிறது. :) அனைவரும் இதே போல் புரிந்து நடந்தால் அவர்கள் வாழ்க்கையிலும் சண்டை சச்சரவுகள் குறைந்து செல்லும். :)

Share this post

Link to post
Share on other sites

தலைப்ப தப்பானது

அடுத்தவர் தாய் போலா கேட்டோம்

எம் தாய் பொலக்கேட்டதற்கே ஏனிந்த காழ்ப்புபுணர்ச்சி

என்னைப்பொறுத்தவரை அம்மா போல பெண் வேண்டும் என்பது அன்பின் வெளிப்பாடு

ஒருவருடைய அன்பை போற்றுவதற்கான நுளைவாயில்

எம்மால் விரும்பப்பட்ட

அன்பு செலுத்தப்பட்ட ஒருவரின் தொடர்பை பேணுவதற்கான முயற்சி

நான் அம்மா போல்தான் பெண் எடுத்தேன்

உருவத்திலும் குணத்திலும்...

அதனால்தான் என் குடும்பத்தவர் எல்லோருக்கும் அவரை என்னைவிடப்பிடிக்கும்

அத்துடன் தாயைப்பார்தத்து பெண் எடுத்தேன் என்றம் அடிக்கடி சொல்வேன்

காரணம் அப்படி என் மாமனாரை அவர்களது பிள்ளைகளை எனது மாமியார் பார்த்தார்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

துளசி அறிமுக உறுப்பினரா..? ஒப்பனிங்கே அமர்களமாக கிடக்கு.. :lol: :lol:

Share this post

Link to post
Share on other sites
ஜீவா    681

அண்ணா, இந்த கட்டுரையை எழுதியவர் இந்தியாவில் உள்ளார். நீங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு அவர் அரைப்பழசுகளுக்கு எழுதின கட்டுரை மாதிரி இருக்கெண்டு சொல்லுறது நல்லதில்லை.

வெளிநாட்டில் இருப்பவர்கள் சாறிக்கு ஒன்றும் சொல்லாவிட்டாலும் சமையல் விடயத்தில் பலர் இன்னும் இப்படி சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆண்கள் சமைத்தால் கூட தன் மனைவி சமைக்கும் போது "உனக்கு அம்மா மாதிரி சமைக்க தெரியாது" என்றும் "உன்னை விட நான் நல்லா சமைப்பன்" என்றும் சொல்பவர்களும் உண்டு.

கால மாற்றம் இதையும் முற்றாக மாற்றி விட்டால் அவர்கள் ஏன் எழுதப்போகிறார்கள்? நான் ஏன் இணைக்கப்போகிறேன்?

வெளிநாடு கூட எம் நாடுகள் போல் இருந்திருந்தால் அங்கும் சாறி கட்ட சொல்லி சொல்லியிருப்பார்கள். ஆனால் அங்கு பல இனத்தவர் வாழும் சூழலில் வேலைக்கும் சாறியுடன் போனால் வேலை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். இது பழக்கத்தில் வந்ததால் சாறி உடுக்கும் பழக்கம் குறைந்து விட்டாது. அத்துடன் குளிர் காலநிலை காரணமாகவும் ஜீன்ஸ் அணிவது வழக்கம்.

ஆனால் இன்றும் வெளிநாட்டில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியை எடுத்துக்கொண்டால் பல பெண்கள் சாறி உடுத்தி வெளியில் செல்வார்கள். winter நேரத்தில் கூட சாறி உடுத்து அதன் மேல் jacket போட்டுக்கொண்டு செல்வார்கள். உங்கள் வயதிலுள்ளவர்களை கவனிக்காமல் கொஞ்சம் வயது கூடினவர்களை கவனியுங்கள்.

நான் ஆணாதிக்கம், பெண்ணடிமை பற்றி பேசுபவள் அல்ல. ஆண், பெண் இருபகுதிக்காகவும் கதைப்பேன். ஆனால் ஆணில் பிழை இல்லை என்று சொல்லிக்கொண்டு பெண்ணில் மட்டும் பிழை பிடித்து கதைப்பவர்களுக்கு பதிலளிப்பதை பார்த்து நீங்கள் அப்படி நினைத்து விட்டீர்கள்.

அது சரி பெரிய எழுத்தில் போட வேண்டியதை ஏன் சிறிய எழுத்தில் போட்டிருக்கிறீர்கள்? தேவையற்றதை பெரிய எழுத்தில் போட்டு விட்டு முக்கியமான விடயத்தை மக்களின் கண்களில் படாதவாறு சிறிய எழுத்தில் போடுவது விற்பனைக்கு பயன்படும் உத்தி அல்லவா?

அப்ப இது இந்தியரால் இந்தியர்களுக்கு மட்டும் எழுதப்பட்டதா? அப்ப யாரை குறிவைத்து இதை இணைத்தீர்கள் என்ற ஒரு கேள்வி தொக்கி நிக்குதில்லையா???? :unsure:

அப்படி நான் விதண்டாவாதம் பண்ணலை :rolleyes:

பொதுவாக இந்தியா என்றாலும் சரி தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இருவர் வேலை செய்யும் இடங்களில் கணவன்,மனைவி இருவரும் தான் சமைக்கிறார்கள்.

இங்கு சமையல் ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. இந்தியாவில் என்றாலும் சரி வறியவர்களுக்கும் போதிய கல்வி வசதி கிடைத்தால் இவை எல்லாம் அருகிவிடும்.

முதல்லை படிப்பை குடுத்தால் பாதி பிரச்சனை தீர்ந்திடும். :icon_idea:

நீங்கள் சொன்னது போல நடுத்தர வயதுக்காரர் சாறி அணிவது கணவன் சொல்லி அல்ல, அவர்களுக்கு ஜீன்ஸ்,நாகரீக உடைகளை அணிவதில் உள்ள வெட்கம்,தயக்கமே தவிர எந்த ஆணும் சொல்லி இரார் குளிருக்கு போய் சாறி கட்ட சொல்லி. அவர்களுக்கு தெரியாது அவ்வளவு தான். <_<

இப்ப பிரச்சனை சமையலோ,சாறியோ அல்ல தாயைப்போல என்பதே,

எந்த ஒரு ஆணும் தாயைப்போல அச்சுஆசலாக எதிர்பார்ப்பான் என்பது மடமையே !

தாயைப்போல் ஒரு குணவதி,அன்பானவளை எதிர்பார்ப்பதில் என்ன தவறு?

எல்லாத்திலும் தாயைப்போல் எதிர்பார்ப்பவன் படுக்கையறையில் என்ன செய்வான்? :wub:

அன்பான மனைவி இருந்தால் மண்ணிருந்தாலும்,கல்லிருந்தாலும் , உப்பிருந்தாலும் இல்லை என்றாலும் அவள் கையால் சாப்பிட்டால் அமிர்தம் தான். எல்லாம் அவரவர் மனதில் தான் இருக்கிறது. :)

இதுக்கு போய் ஆணாதிக்கம் என்று காழ்ப்புணர்ச்சியை கொட்டுவது ஏன் என்பதே இங்கு கேள்வி. :icon_idea:

சிறியளவு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை வைத்து ஒட்டுமொத்தமாக இப்படித்தான் என்று அர்த்தப்படுத்தக்கூடாது என்று தான் அதை சிறிய எழுத்தில் போடவேண்டி வந்தது. :)

Share this post

Link to post
Share on other sites

தலைப்ப தப்பானது

அடுத்தவர் தாய் போலா கேட்டோம்

எம் தாய் பொலக்கேட்டதற்கே ஏனிந்த காழ்ப்புபுணர்ச்சி

என்னைப்பொறுத்தவரை அம்மா போல பெண் வேண்டும் என்பது அன்பின் வெளிப்பாடு

ஒருவருடைய அன்பை போற்றுவதற்கான நுளைவாயில்

எம்மால் விரும்பப்பட்ட

அன்பு செலுத்தப்பட்ட ஒருவரின் தொடர்பை பேணுவதற்கான முயற்சி

நான் அம்மா போல்தான் பெண் எடுத்தேன்

உருவத்திலும் குணத்திலும்...

அதனால்தான் என் குடும்பத்தவர் எல்லோருக்கும் அவரை என்னைவிடப்பிடிக்கும்

அத்துடன் தாயைப்பார்தத்து பெண் எடுத்தேன் என்றம் அடிக்கடி சொல்வேன்

காரணம் அப்படி என் மாமனாரை அவர்களது பிள்ளைகளை எனது மாமியார் பார்த்தார்.

அண்ணா, தலைப்பு நான் வைக்கவில்லை.

இது உங்களுக்கான தலைப்பும் அல்ல. ஏனென்றால் நீங்கள் அம்மா போல் பெண் எடுத்து விட்டீர்கள். ஆனால் அப்படி பெண் கிடைக்காதவர்கள் மனைவியிடம் எடுத்ததுக்கும் அம்மாவை கூறி சண்டை பிடிப்பார்கள். அவர்களை மையமாக வைத்து எழுதப்பட்டதால் இணைத்தேன்.

அதற்கு பொருத்தமாக தலைப்பு கூறினால் மாற்றி விடுகிறேன். எழுதியவர் பெயர் குறிப்பிட்டிருப்பதால் மாற்றுவதில் பிரச்சினை இல்லை. :)

துளசி அறிமுக உறுப்பினரா..? ஒப்பனிங்கே அமர்களமாக கிடக்கு.. :lol: :lol:

என்னை பார்த்தால் அறிமுகம் போலா தெரியுது? :icon_mrgreen: :icon_mrgreen: பெயர் மாற்றத்தின் பின் அறிமுக உறுப்பினர் போல் தான். :D

Share this post

Link to post
Share on other sites

அப்ப இது இந்தியரால் இந்தியர்களுக்கு மட்டும் எழுதப்பட்டதா? அப்ப யாரை குறிவைத்து இதை இணைத்தீர்கள் என்ற ஒரு கேள்வி தொக்கி நிக்குதில்லையா????

அப்படி நான் விதண்டாவாதம் பண்ணலை

------

------

நீங்கள் சொன்னது போல நடுத்தர வயதுக்காரர் சாறி அணிவது கணவன் சொல்லி அல்ல, அவர்களுக்கு ஜீன்ஸ்,நாகரீக உடைகளை அணிவதில் உள்ள வெட்கம்,தயக்கமே தவிர எந்த ஆணும் சொல்லி இரார் குளிருக்கு போய் சாறி கட்ட சொல்லி. அவர்களுக்கு தெரியாது அவ்வளவு தான்.

-------

------

அன்பான மனைவி இருந்தால் மண்ணிருந்தாலும்,கல்லிருந்தாலும் , உப்பிருந்தாலும் இல்லை என்றாலும் அவள் கையால் சாப்பிட்டால் அமிர்தம் தான். எல்லாம் அவரவர் மனதில் தான் இருக்கிறது. :)

இதுக்கு போய் ஆணாதிக்கம் என்று காழ்ப்புணர்ச்சியை கொட்டுவது ஏன் என்பதே இங்கு கேள்வி. :icon_idea:

சிறியளவு அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை வைத்து ஒட்டுமொத்தமாக இப்படித்தான் என்று அர்த்தப்படுத்தக்கூடாது என்று தான் அதை சிறிய எழுத்தில் போடவேண்டி வந்தது. :)

பொதுவாக அனைவரையும் மையமாக வைத்து தான் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் தான் வெளிநாட்டவரை மட்டும் மையமாக வைத்து கதைத்தீர்கள். அது தான் உங்களுக்கு இந்தியா, தமிழீழம் போன்ற நாடுகளும் இருப்பதை நினைவு படுத்தினேன்.

நான் வெளிநாட்டில் சாறி உடுக்கும் எல்லா பெண்களையும் சொல்லேல்லை. நீங்கள் சொல்வது போலும் உள்ளார்கள். நான் சொன்னது போலும் உள்ளார்கள். :)

அன்பு என்பது பெண்களின் மனதில் மட்டுமல்ல. ஆண்களின் மனதிலும் இருக்க வேண்டும். எடுத்ததுக்கும் "என் அம்மா என்றால் இப்பிடி செய்திருப்பா, அப்பிடி செய்திருப்பா" என்று கூறினால் அவளால் அன்பு வைக்க முடியாது. மற்றபடி நீங்கள் சொல்வது சரி. :)

வீட்டில் உப்பில்லாமல் சமையல் வருகிறது போலிருக்கு. :D

அண்ணா. ஆணாதிக்கம் என்பது இதிலிருந்து ஆரம்பமாகுது என்று தான் சொல்லப்பட்டிருக்கு. மற்றபடி இது முழுமையாக ஆணாதிக்கம் என்று சொல்லப்படவில்லை. :)

Edited by துளசி

Share this post

Link to post
Share on other sites
Sign in to follow this