Jump to content

அந்தநாள் ஞாபகங்கள்


Recommended Posts

182172_456848441011672_505018900_n.jpg

குரும்பெட்டியில்-தையல்மெசின்

தென்னை ஓலையில்-மூக்குக்கண்ணாடி.கைகடிகாரம்.பாம்பு.காத்தாடி.

இப்படி எத்தனை விளையாட்டுக்கள் விளையாடி இருப்போம்.

கள உறவுகளே நீங்களும் உங்கள் அந்தநாள் ஞாபகங்களை தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிளியவன் உங்கள் இணைப்பை என்னால் பார்க்க முடியவில்லை

Link to comment
Share on other sites

தெண்ணை ஓலையில் செய்த கைக்கடிகாரம், மாவிலையில் செய்த தீர்தம் குடிக்கும் கரண்டி.கண்ணாடி,

Link to comment
Share on other sites

கிளியவன் உங்கள் இணைப்பை என்னால் பார்க்க முடியவில்லை

ஏனோ தெரியவில்லை ரதி..

அதாவது ஓரு படம் இணைத்திருந்தேன் நாம் சிறு வயதில் தென்னைஓலை.குரும்பெட்டி ஈர்க்கில் போன்றவைகளை பயன் படுத்தி நாம் விளையாடிய அந்தநாள் ஞாபகங்களை அந்த படத்தில் காணக்கூடியதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]படம் நன்றாக தெரிகிறது. அந்த நாள் ஞாபகங்கள். எவ்வளவு காலம் ...............கடந்து விட்டது . மீண்டும் ஐந்து எழு வயதுக்கு கொண்டு சென்று விட்டீர்கள் . இக்காலத்தில் இவை எல்லாம் எங்கே நம்பிள்ளைகளுக்கு தெரியும்..............[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூவரசம் இலையில் நாதஸ்வரம் பீப்பீ பீப்பீ

புளியங்கொட்டையில் தாயம்

அத்துடன் அளாப்பல் :lol::D

Link to comment
Share on other sites

காகிதக் கப்பல்

paper%252520boats.JPG

http://puduvaipuyal....-post_2716.html

கிட்டிப் புள்ளு

Game_Kittip-pullu.jpg

http://upload.wikime...ittip-pullu.jpg

ரயர் அல்லது சைக்கிள் உறுட்டல்

22122011history2.jpg

http://www.google.fr...,r:15,s:80,i:52

தாச்சி மறித்தல்

sarana13.jpg

http://mankavuchi.bl...01_archive.html

போளை அல்லது கீ அடித்தல்

A_boy_playing_one_of_a_Street_Games_of_Tamil_Nadu_-_Kozhi_Gundu_2.jpg

http://upload.wikime...zhi_Gundu_2.jpg

இதுகளையும் சேக்கலாமோ கிளியவன் ?

***எழுத்துப்பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஒல்லிக்கோளைகளைச் சேர்க்கும் ஒரு கயிறு

நீந்தப் பழகுபவர்களுக்குப் பாதுகாப்பு

Link to comment
Share on other sites

நொங்கு வண்டி உருட்டுதல் , குரும்பட்டியில் ஈர்க்கிளைச் செருகி ரொக்கற் விடுதல் , கிட்டிப் புள். குண்டு (கோழி) விளையாட்டு.

மூங்கில் குழாயின் இரு பக்கத்திலும் பாவட்டம் கொட்டையை அடைத்து (பாவட்டம் கொட்டையின் அளவுக்கு மூங்கிலின் துவாரம் சரிசமமாக இருக்க வேண்டும்), ஒரு பக்கத்தில் இன்னுமொரு சிறிய மூங்கிலால் அடித்து எதிரிக்கு காயம் உண்டாக்குதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லோரும் தற்போது புதுத் திரிகளை நாற்சந்தியில் திறக்கிறார்கள்?...அப்படி ஒளித்து திறப்பதற்கு இத் திரியில் என்ன இருக்குது?...எங்கள் மண்ணில் திறந்தால் உறுப்பினர் அல்லாததோரும் பார்க்கலாம் தானே!

Link to comment
Share on other sites

[size=3]படம் நன்றாக தெரிகிறது. அந்த நாள் ஞாபகங்கள். எவ்வளவு காலம் ...............கடந்து விட்டது . மீண்டும் ஐந்து எழு வயதுக்கு கொண்டு சென்று விட்டீர்கள் . இக்காலத்தில் இவை எல்லாம் எங்கே நம்பிள்ளைகளுக்கு தெரியும்..............[/size]

உண்மைதான் நிலாமதி நினைவுகள் மட்டும் தான் எம்மோடு காலம் உருண்டோடி விட்டது

பூவரசம் இலையில் நாதஸ்வரம் பீப்பீ பீப்பீ

புளியங்கொட்டையில் தாயம்

அத்துடன் அளாப்பல் :lol::D

பசுமையான நிணைவுகள் எத்தணை புளியங்கொட்டையை சாப்பிட்டு இருப்பம் :D

Link to comment
Share on other sites

இரண்டு ஒல்லிக்கோளைகளைச் சேர்க்கும் ஒரு கயிறு

நீந்தப் பழகுபவர்களுக்குப் பாதுகாப்பு

நீந்தப்பழகிய காலங்களில் நீரினுள்ளே மூச்சடக்கி நீண்ட நேரம் இருப்பது யார் என்ற போட்டி வேற எப்படி மறக்க முடியும் அந்தக்காலங்கலை

Link to comment
Share on other sites

நொங்கு வண்டி உருட்டுதல் , குரும்பட்டியில் ஈர்க்கிளைச் செருகி ரொக்கற் விடுதல் , கிட்டிப் புள். குண்டு (கோழி) விளையாட்டு.

மூங்கில் குழாயின் இரு பக்கத்திலும் பாவட்டம் கொட்டையை அடைத்து (பாவட்டம் கொட்டையின் அளவுக்கு மூங்கிலின் துவாரம் சரிசமமாக இருக்க வேண்டும்), ஒரு பக்கத்தில் இன்னுமொரு சிறிய மூங்கிலால் அடித்து எதிரிக்கு காயம் உண்டாக்குதல்.

கிட்டிப் புள்.கிட்டிப் பொல்லும் பம்பரமும் கிருக்கி அடிக்க பாலாறு பாலாறு பாலாறு.....என்று மூச்சு விடாமல் கத்திக்கொன்டே ஓட எம் பின்னாலே ஒருவரும் ஓடி வருவார் மூச்சு விடுரானா இல்லைய என்று பார்க்க எப்படி மறப்பது அந்த நாட்களை.

Link to comment
Share on other sites

பாண்டி குண்டு

[media=]

பாண்டி குண்டு (பல்லாங்குழி) பெண்கள் அநேகமாக விளையாடும் விளையாட்டு.உங்கள் பகிர்விற்கு நன்றி மல்லையூரான்.

Link to comment
Share on other sites

[size=4]கோமகன்[/size]

காகிதக் கப்பல்

கிளித்தட்டு

ரயர் அல்லது சைக்கிள் உறுட்டல்

தாச்சி மறித்தல்

போளை அல்லது கீ அடித்தல்.

பட்டம் விடுதல்

மீன் பிடித்தல். என பல வகையான விளையாட்டுக்களை படம் போட்டு காட்டி மீண்டும் நாம் சிறு பிள்ளைகளாக மாற மாட்டோமா என்ற ஏக்கத்திற்குல் ஆழ்த்தி விட்டீர்கள் உங்களின் அந்தநாள் ஞாபகங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் கோமகன்.

தொடர்ந்து எமது சிறு வயதில் நாம் விளையாடிய அணைத்து விளையாட்டுக்களையும் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

ஏன் எல்லோரும் தற்போது புதுத் திரிகளை நாற்சந்தியில் திறக்கிறார்கள்?...அப்படி ஒளித்து திறப்பதற்கு இத் திரியில் என்ன இருக்குது?...எங்கள் மண்ணில் திறந்தால் உறுப்பினர் அல்லாததோரும் பார்க்கலாம் தானே!

உண்மைதான் ரதி.

ஒளித்து திறப்பதற்கு இத் திரியில் ஒன்றும் இல்லை ரதி இத்திரியை எங்கு இணைப்பது என தெரியாத ஒரு குழப்பத்தில் தான் நாற்சந்தியில் திறந்தேன். இருந்தும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு இத்திரியை எங்கள் மண்ணிற்கு நகர்த்த முடியுமாக இருந்தால் நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு நகர்த்தி விடும்படி மிக தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

f.jpg

http://3.bp.blogspot...Xac/s1600/f.jpg

சிறுவர்களின் விளையாட்டுக்களிலும் பெரியவர்களின் விளையாட்டுக்களிலும் அவற்றில் வரும் பிரதான பாத்திரங்களையும் செயல் அல்லது அசைவையும் அடிப்படையாகக் கொண்டு பெயர்கள் அமைந்திருப்பதைக் காணலாம். அதிலும் சார்பு நிலைப் பாத்திரங்கள் அதாவது நல்ல பண்புடைய பாத்திரங்கள் மனிதன் தான் விரும்பும் அல்லது தன்னை அதனுடன் அடையாளப்படுத்தும் பாத்திரம் இதனை நேர்ப் பாத்திரமென்றும் குறிப்பிடலாம். (Pழளவைiஎந ஊhயசயஉவழச) இந்தப் பாததிரமே விளையாட்டின் இறுதியில் வெற்றி பெறும் அல்ல. வெற்றி பெற வேண்டுமென்று பார்வையாளர்களால் விரும்பப்படும்.

அடுத்தது எதிர்நிலைப் பாத்திரங்கள் நல்ல பாத்திரங்களுக்கு எதிராக உள்ளவை. குறிப்பாக கூடாத ஃ கெட்ட பண்புகளைக் கொண்ட பாத்திரங்கள் இவை தோல்வியடைய வேண்டும் அல்லது அழிந்து போக வேண்டுமென்று விரும்பப்படும். எதிரிடைளயான பாத்திரங்களாக (யேபயவiஎந ஊhயசயஉவழச) இதனைச் சுட்டுவர். இதன் ஆற்றலை விடக் குறைந்த ஆற்றலுடைய நேர்ப்பாத்திரம் ஏய்ப்புக்காட்டி அல்லது தன் புத்திசாதுரியத்தால் வெல்வதாகவே இப்பாத்திரங்கள் அமைகின்றன. பலத்தால் வெல்வதாக அமைகின்ற பாத்திரங்களும் உண்டு.

1. கோழியும் பருந்தும்

2. பசுவும் புலியும்

3. கள்ளன் பொலிஸ்

போன்ற விளையாட்டுக்களை இவற்றுக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அசைவுகளை அடிப்படையாகக் கொண்டும் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. விளையாட்டின் விளைவுகள் கூட பெயராக குறிப்பிடப்பட்டுள்ளன. போல் பந்து எறிந்து பிடித்து எதிர் அணியில் உள்ளவரின் முதுகில் எறிகின்ற விளையாட்டுக்குப் பெயர் ‘புளிச்சல்’ முதுகில் போல் ஃ பந்து பட்டால் முதுகு புளிக்கும் அதனைச் சுட்டுவதாக இந்தப் பெயர் அமைந்துள்ளது. செயலை அடிப்படையாகக் கொண்டு பல விளையாட்டுக்கள் அமைந்துள்ளன. கோழி பற பற, எவடம் எவடம் புளியடி புளியடி, அடிச்சுப் பிடிச்சு, கிலுக்குப் பேணி, உருளைக்கிழங்குப் பிரட்டல், பூப்பறிக்க வருகின்றோம், நுள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டி, தாள தாள மயிலடிக்க, கருவாடு காயப்போடல், உப்பு விற்றல், ஆனை ஆனை, கைவீசம்மா, ஒருகுடம் தண்ணீர் வார்த்து இதேபோல் விளையாட்;டின் ஓசைப் பெறுமானத்தை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டின் பெயர்கள் காணப்படுகின்றன. கொக்கரக்கோ, டிக் டிக், கீச்சு மாச்சு தம்பளம்.

கேள்வி கேட்டு விளையாடுகின்ற விளையாட்டுக்களில் கேள்வியே விளையாட்டின் பெயராக அமைந்திருப்பதைக் காணலாம். எது விளையாட்டில் பிரதானமாக அமைகிறதோ அதுவே பெயராகின்றது. ஆற்றுகையென்ற அடிப்படையில் நோக்கினால் பிரதான விடயம் (ஆயin ளுரடிதநஉவ) அல்லது (வுhநஅந) தலைப்பாகிறது. தலைப்பே விளையாட்டை விளக்கப்படுத்தி விடுகின்றதையும் நோக்கலாம். உதாரணமாக எங்கிருந்து வாரீர்? எவடம் எவடம்? கப்பின் கப்பின் யார்கையில், என்ன குடம்? ஆச்சி ஆச்சி என்னெனை தேடுறாய்? டிக் டிக் யார் வந்தார்?

பிரதான பாத்திரங்கள் ஓசை நயத்துடன் இணைந்து விளையாட்டில் பெயராகி விடுகின்றன. இங்கு இப்பாத்திரங்கள் சம அந்தஸ்து நிலையுடையன. முன்பு குறிப்பிட்டது போல எதிர் பாத்திரம், நேர் பாத்திரம் என்ற அந்தஸ்து நிலை இல்லையெனலாம். உதாரணமாக கோழி கோட்டான், நாயும் இறைச்சியும், பழமும் பூவும் போன்ற விளையாட்டுக்களைக் குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்ட பெயர்கள் பாத்திரங்களாகி நின்று விளையாடும் விளையாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டமைகின்றன. இதனை விட சடப் பொருட்களோடு தொடர்புபட்டு காணப்படும் விளையாட்டுக்கள் அதன் பெயர்களையும் கோடு கீறி விளையாடும் விளையாட்டுக்கள் கோட்டமைப்பையும் அடிப்படையாகக் கொண்டமைகின்றன.

குழந்தைப் பருவ விளையாட்டுக்களில் காணப்படும் பாவனை செய்யும் பண்பு

குழந்தை பிறப்பில் இருந்து அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் துணை நிற்பதாக விளையாட்டுக்களை பண்பாடு உருவாக்கி ஊடுகடத்தி வருகின்றது. தாய், தந்தை, மாமன், பேரன், பேத்தி என்று பலரும் பச்சிளம் பாலகனுடன் விளையாடுகிறார்கள். அவ்வாறு விளையாடும் போது குழந்தையை வௌ;வேறு பொருளாக, மிருகங்களாக, பெரியவர்களாக கருதி அவ்வாறு பாவனை செய்து குழந்தையை அசையச் செய்கிறார்கள். குழந்தை தன்னை அந்தப் பாத்திரமாகக் கருதுவதில்லை. பிள்ளையின் அசைவு ஒவ்வொன்றையும் வேறொரு பாத்திரத்தில் (ஊhயசயஉவழச) ஏற்றி அதனைப் பார்த்து பெரியவர்கள் மகிழ்கின்றார்கள். இந்த மாயை (ஐடரளழைn) முக்கியமானது. வேடப்புனைவு, காட்சியமைப்பு எதுவும் இல்லாது ஒரு புனைவுக்களம் உருவாக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக : பிள்ளையை யானையாகக் கருதி யானை அசைவது போல பிள்ளை அசைவதற்காக ஒரு பாடலைப்பாடி யானையொன்றை அசைந்து வரச் செய்கின்றதை இங்கு சுட்டிக் காட்டலாம். தாய் அல்லது பேத்தியார் பிள்ளையை நிலத்தில் இருத்தி,

“ஆனையலையிது அலையிது அலையிது

வாழைப்பழத்துக்கும் பிட்டுக்கும் அலையிது

ஆனையலையிது அலையிது அலையிது

ஆனையலையிது அலையிது அலையிது”

“ஆனை ஆனை அசைந்தாடும் ஆனை

ஐந்தாறு வீதிக்குப் போய்வரும் ஆனை

உன்னானை என்னானை நான்

விளையாடும் எங்க வீட்டு மதயானை”

என்று பாட பிள்ளை இருந்தபடி முன்னும் பின்னும் உடம்பை அசைக்கும். இவ்வாறு பல உதாரணங்களைக் குறிப்பிட முடியும்.

பிள்ளையை உப்பு மூட்டையாகக் கருதி முதுகில் சுமந்து சென்று உப்பு விக்கின்ற போது பிள்ளையும் பெற்றோரும் உளம் பூரித்து மகிழ்கிறார்கள். இங்கு பிள்ளை உப்பு மூட்டையாகப் பாவனை செய்யப்படுகிறது.

பிள்ளையைப் பெரியவனாகக் கடைக்குப் போபவனாகப் பாவனை செய்து பாடுகின்ற பாட்டு கைவீசம்மா, கைவீசு கடைக்குப் போகலாம் கைவீசு, மிட்டாய் வாங்கலாம் கைவீசு, வடிவாய்த் தின்னலாம் கைவீசு பாடல் காணப்படுகிறது.

இதேபோல் தண்ணீர் இறைக்கும் பாட்டையை குழந்தையாகப் பாவனை செய்து குழந்தையின் கைகளையும் கால்களையும் இருவர் பிடித்து பட்டையில் தண்ணீர் அள்ளி கீரைக்கு இறைப்பதாகப் பாவனை செய்கிறார்கள். இப்போதும் ஒரு பாடல் பாடப்படுகிறது

“கீரைக்குத் தண்ணி இறைக்கிறம் இறைக்கிறம்

கீரைக்கு தண்ணி இறை தண்ணி இறை”

குழந்தை விளையாட்டுக்கள் அனைத்தும் ஒரு வகையான தாள அமைவும் பாடல்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. தாளத்திற்கு அசைதல் என்பது உடலையும் மனத்தையும் சீரான ஒருங்கிணைவான அசைவியக்கத்துக்கு கொண்டுவருவதாகும். இதனால் இந்த வகையான அசைவுகளும் பாடல்களும் பிள்ளையின் சீர் இயக்க நிலைக்கு உதவிபுரிகின்றன.

பிள்ளை வாழ்க்கைத் தத்துவத்தை விளக்குவதாக பிள்ளை நடக்க ஆரம்பிக்கின்ற போது அதனது ஒவ்வொரு பருவங்களுக்கும் ஏற்ற மாற்றத்தை குறிப்பிட்டு அவற்றைப் பிள்ளை பாவனை செய்வதாகக் கருதுகிறார்கள். இதன்போதும் கூட பாடல் காணப்படுகின்றது.

“தத்தக்க பித்தக்க நாலு கால்

தான் நடந்தால் இரண்டு கால்

முற்றிப் பழுத்தால் மூன்று கால்

நடந்து போக ஆறு கால்

தான் அறிந்தால் பத்துக்கால்”

பிள்ளையின் கையை பூவாகப் பாவனை செய்து பூ அசைவது போல பிள்ளை கையை அசைப்பதைக் கண்டு மகிழ்கிறார்கள்.

“தா பூ தாமரைப் பூ

தாயார் வீட்டு மல்லிகைப் பூ

இது என்ன பூ, சிரிப்பு பூ”

பிள்ளையின் உள்ளங்கையில் கீரை கடைவதும் விரல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கறிகளாக கருதிக் கொள்வதும் நண்டு ஊருவதாகப் பாவனை செய்து பிள்ளைக்கு சிரிப்பு மூட்டுவதும் கூட ஒருவகையில் பாவனை பண்ணும் முறையாகவே காணப்படுகிறது.

“சின்னான் சின்னிவிரல்

சித்தரிப்பு மாலை விரல்

வாழை நெடுங்காற்று

ஒன்றும் தெரியாத ஊமைப்

பிள்ளைக்கு

கீரை கடைந்து

நண்டூருது நரியூரூது”

பாத்திரமேற்று விளையாடுதல்:

பாரம்பரிய விளையாட்டுக்களிலும் பாத்திரம் ஏற்று ஆடுகிறார்கள். ஆனால் இங்கு ஏற்றுக் கொள்ளப்படும் பாத்திரங்கள் அந்தப் பாத்திரங்களின் பண்பு நிலைக்கு ஏற்ற உடல் அசைவு, குரல், வேடப்புனைவுகளை மேற்கொள்வதில்லை. நாடகப்பாங்கான பாத்திரங்களை (னுசயஅயவiஉ ஊhயசயஉவழசள) காணமுடிவதில்லை. மாறாக மனிதர்களாகவே நிற்கிறார்கள். அவர்களுக்கு விளையாடும் களங்களில் மட்டும் புலி, நரி, பசு, கோழி, பருந்து, கோட்டான் என்று பெயர் சூட்டப்படுகின்றது. இந்தப் பெயர்களில் மனித இயல்போடு நிற்கிறார்கள். இவை சூட்டப்படும் பெயர்களின் பண்புகளை உள்வாங்கிக் கொண்டால் இந்த விளையாட்டுக்கள் நாடக ஆற்றுகைகளாக மாற்றம் பெற்றுவிடும். இங்கு அவ்வாறு நடப்பதில்லை.

பசுவும் புலியும், கோழியும் கோட்டானும், கோழியும் பருந்தும், கள்ளன் பொலிஸ், கோழி பற பற, பழமும் பூவும், உருளைக்கிழங்குப் பிரட்டல், கருவாடு காயப்போடுதல் போன்ற பல விளையாட்டுக்களை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

இங்கு பசுவும் புலியும் விளையாட்டை எடுத்து நோக்குவோம்:

சிறுவர்கள் வட்டமாகக் கைகோர்த்து நிற்பர். இவர்களை வேலியென்று கருதிக் கொள்வார்கள். வட்டமாகவுள்ள வேலிக்குள் பசு நிற்கும் இதற்காக ஒரு சிறுவன் விடப்படுவான். வேலிக்கு வெளியில் புலியாக ஒரு சிறுவன் நிற்பான். புலி பசு நிற்பதை நிகர்ந்து அறிந்து கொள்ளும் வேலியைச் சுற்றிச் சுற்றி வந்து பசுவைத் தேடும். வேலிக்குள்ளால் செல்ல முடியாததால் வேலியைக் கேட்டுப்பார்க்கும் பசு நிற்குதோ என்று வேலி இல்லையென்று மறுக்க வேலிக்குள் புல்லுக்கட்டொன்றை போடுவதாகப் புலி பாவனை செய்யும் புல்லைக் கண்டு மாடு ஓடிவர புலி பாயும் வேலிவிடாது இவ்வாறாக விளையாட்டு நகர்கிறது. இதில் ஒரு முரண்நிலையும் பாத்திரங்களும் உரையாடல்களும் தெளிவாகக் காணப்படுகின்றன.

புலி : சங்கிலி புங்கிலி கதவத் திற

வேலி : நான் மாட்டன் தேங்காய்ப் புலி

புலி : பசு மாட்டைக் கண்டீங்களா?

வேலி : இல்லை

புலி : பால் மணக்குது

வேலி : பக்கத்து வீட்டில்

புலி, பசு, வேலி பாத்திரங்கள் ஒரு முரண் நிலைச் சூழலைப் படைத்துவிடுகின்றன. இது சிறந்ததொரு நாடகப் பாங்கான விளையாட்டாகும். இதேபோன்று பாரம்பரிய விளையாட்டுக்கள் பலவற்றில் முரண் விருத்திக்கான உரையாடல்களும் பாத்திர ஊடாட்டங்களும் அசைவியக்கங்களும் காணப்படுகின்றன. உரையாடல்கள், பாடல்களாக, பாடல் தர்க்கங்களாக அமைந்திருக்கின்றன. பாடல்கள் தாள அமைவுக்கு ஏற்ற சொற்கட்டுக்களைக் கொண்டமைவதையும் காணமுடிகின்றது.

பாடல்களே விளையாட்டின் தாளகதியையும் நிர்ணயிக்கின்றன.

புனைவு வெளியை சிருஸ்டித்தல்

அரங்கில் வெறும் வெளி ஆற்றுகை வெளியாக்கப்படுகின்றது. குறிப்;பாக கற்பனை சார்ந்த அசைவியக்கங்கள், செயல்கள் ஊடாக புனைவை வெளியை தரிசிக்க முடியும். குளக்கரை விளையாட்டை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். சிறுவர்கள் வட்டமாக நிற்கிறார்கள். வட்டத்தின் உட்பகுதி குளம் என்றும் வெளிப்பகுதி கரையென்றும் கற்பனை பண்ணப்பட்டு ஒருவர் குளம், கரை, குளம், கரை என்று கட்டளையிட பிள்ளைகள் அதற்கேற்ப அசைவதாக விளையாட்டு அமைகிறது. இங்கு வெறும் வெளி குளமாகவும் அதன் கரையாகவும் ஆகிவிடுவதை உணரமுடியும். இதேபோல உருளைக்கிழங்குப் பிரட்டல் விளையாட்டில் வெறும் வெளி கறிவைக்கும் சட்டியாகவும் உருளைக்கிழங்குகளாக விளையாடுவோரும் ஆடிப்பிடித்து விடாமல் மிரட்டுவதாகவும் அமைகின்றன.

ஒரு பொருள் இன்னொரு பொருளாக பாவனை பண்ணப்படுதல்:

விளையாட்டில் சடப்பொருட்களும், உடல் உறுப்புக்கள் மனிதர்களும் வௌ;வேறு பொருட்களாகப் பாவனை செய்யப்பட்டு விளையாடப்படுவதைக் காணலாம். இங்கு ஒன்று இன்னொன்றாகுதல் என்ற பண்பு அரங்கிற்குரிய விசேடமான பண்பாகும். மனத்திரையில் உருவங்களைப் படைத்து அவற்றை ஊடாட விடுகின்ற அரங்கப் பண்பையும் இங்கு காண முடிகின்றது. நாயும் இறைச்சியும் விளையாட்டில் இறைச்சி ஒரு குழைக் கொப்பு இறைச்சித் துண்டாகக் கருதப்படுகிறது. அதனை எடுக்க நாய்கள் சண்டையிடுவதாகக் கற்பனை செய்யப்படுவதால் அந்த விளையாட்டு விறுவிறுப்பாக நடைபெறுகின்றது எனலாம்.

கருவாடு விளையாட்டில் நீட்டியிருக்கும் கால்களை கருவாடாகக் கருதுகிறார்கள். கால்களை மடக்கினால் அவை ஒவ்வொன்றும் காணாமல் போவதாகக் கருதிக்கொள்கிறார்கள். அழுகல் பூசனிக்காய், விளையாட்டில் விளையாடுவோர் சப்பாணி கட்டி இருந்து தமது கால் பெருவிரல்களைப் பிடித்திருப்பர். அவ்வாறு பிடித்திருக்கும் போது முற்றிய பூசணியாகவும் தூக்கிச் செல்லும் போது கைப்பிடி விலகினால் அழுகிய பூசனியாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பூப்பறிக்க வருகிறோம் விளையாட்டில் பிள்ளைகள் எதிர் எதிர் நிற்பவர்கள் பூக்களாகக் கருதப்படுகிறார்கள். பூக்களைப் பறிப்பதற்கு வருவதாகவும் பறித்தெடுப்பதாகவும் செயல்கள் அமைகின்றன.

என்ன குடம் விளையாட்டில் பொத்திய கை குடமாக கருதப்பட்டு என்ன குடம் என்று கேட்கப்படும். போர்க்குடம், பால் குடம், தயிர்க்குடமென்று பாவனை பண்ணப்படுகிறது.

மாங்கொட்டை விளையாட்டில் பொத்திய கை மாங்கொட்டையாக கொழுக்கட்டையாகப் பாவனை பண்ணப்பட்டு விளையாடப்படுகிறது. இதேபோல் ஒரு குடம் தண்ணீர் வார்த்து விளையாட்டிலும் அவ்வாறே கருதப்படுவதை காணலாம்.

கோழிக்காய் விளையாட்டில் ஒரு சிரட்டைத் துண்டு கோழிக்காயாகவும் கொத்தாளங்காயாகவும் கருதப்பட்டு எறிந்து ஏந்தி விளையாடப்படுகிறது. விளையாடும் போது ஒரு பொருளை வேறொன்றாக கற்பனை அல்லது பாவனை பண்ணுதல். விளையாட்டு முடிவில் வெறும் பொருளாகுதல் என்பன அரங்கிற்குரிய பண்புகளாகும்.

உரையாடல்கள்

பாத்திரங்கள் நிர்ணயம் செய்யப்படுதலும் சூழ்நிலை உருவாக்கப்படுதலும் நடைபெற்ற பின் பாத்திரங்களுக்கிடையில் உரையாடல்கள் நடைபெறுகின்றன. உரையாடல்கள் ஒரு முரண்நிலைக்கு இட்டுச் சென்று அது செயலுக்கு சென்று செயலில் இருந்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டு முடிவடைகிறது. இது விளையாட்டில் மீள மீள நிகழ்கிறது. இதுவே மகிழ்ச்சியை ஊட்டுவதாகவும் வேகத்தையும் ஆர்வத்தையும் தூண்டுவதாகவும் அமைகின்றன. இந்த உரையாடல்கள் பாடல்களுக்குள் அடங்கிவிடுவதும் உண்டு. கூத்துக்களில் காணப்படும் தர்க்கப்பாடல் அமைப்பு அல்லது வினாவிடை அமைப்பிலான பாடல்கள் பாத்திரங்களுக்கிடையிலான உரையாடலாகக் காணப்படுகின்றன. பசுவும் புலியும் விளையாட்டில் புலிக்கும் வேலிக்கும் இடையில் உரையாடல் காணப்படுகின்றது. பூப்பறிக்க வருகிறோமில் ஒரு வகை பாடல் சார்ந்த உரையாடல் காணப்படுகின்றது. ஆச்சி ஆச்சி என்னெனை தேடுறாய் விளையாட்டில் வினா விடைப் பாங்கிலான உரையாடலைக் காணமுடியும். டிக் டிக் யார் வந்தான்? அரசன் வந்தான். விளையாட்டிலும் வினா விடைப்பாங்கான உரையாடல்கள் காணப்படுகின்றன. எவடம் எவடம், சங்கிலி புங்கிலி கதவத்திற, கருவாடு, எங்கிருந்துவாரீர்கள் விளையாட்டுக்களிலும் கேள்வியும் பதிலுமான உரையாடல் காணப்படுகின்றது.

இங்கு, ஒரு பாத்திரத்திற்கும் குழுவுக்குமிடையிலான உரையாடல்களையே அதிகம் காணப்படுவதை உணரலாம்.

அசைவியக்கம்:

அரங்கில் குறிப்பிடப்படுவது போன்று அரிஸ்ரோட்டலின் வரைவிலக்கணத்திற்கு அமைவாக நாடகக் கட்டமைப்புக்கு ஏற்ப பாரம்பரிய விளையாட்டுக்களின் அசைவியக்கத்தையும் உணர முடியும். ஆரம்பம், முரண்நிலை, முரண்நிலையில் இருந்து உச்சத்தை நோக்கி வளர்ந்து செல்லுதல், முடிவு, வீழ்ச்சி என்ற பண்பை விளையாட்டுக்களிலும் காணமுடியும். ஓடுதல், துரத்திப்பிடித்தல் என்பன உச்சமான செயல் இயக்கமாகக் காணப்படுவதோடு மீள மீளச் செய்தலும் இதன் பிரதானமான செயல் இயக்கமாகவுள்ளது. இது கூத்தின் பிரதானமான அறிக்கை முறைமையாகும்.

http://jaffnatheatre.../blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பெட்டியில்... ரெலிபோன் கதைத்தல்.

ஒளிச்சுப், பிடிச்சு விளையாடுதல்.

பிலாமரம்,மாமரம், தென்னை மரங்களில்.... ஆணியால் பெயர் எழுதல்.

கொஞ்சம் வளர... கள்ள இளநீர், மாங்காய் பிடுங்குதல். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெடியள் சேர்ந்து களவாக கோழி கறி காச்சி பாணுடன் சாப்பிட்டது அதைவிட சிறியவயசில் கள்ளன் போலிஸ் விளையாடினது கிட்டி பொல்லு விளையாட்டில் பெல்லி நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டு பின்னர் அம்மாவிடம் பூவரசம் தடியால் அடிவாங்கியது அதைவிட சிறிய வயசில் மாங்காய் களவெடுத்து சாப்பிடுவது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . :D:lol:

Link to comment
Share on other sites

கள்ளமாகக் கள்ளுக் குடித்தல்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Toddy_fresh%26bubbling.jpg

Toddy_fresh%26bubbling.jpg

Link to comment
Share on other sites

நெருப்பெட்டியில்... ரெலிபோன் கதைத்தல்.

ஒளிச்சுப், பிடிச்சு விளையாடுதல்.

பிலாமரம்,மாமரம், தென்னை மரங்களில்.... ஆணியால் பெயர் எழுதல்.

கொஞ்சம் வளர... கள்ள இளநீர், மாங்காய் பிடுங்குதல். :D:lol:

ஒரே பந்தியில் சொல்லி முடிச்சிட்டீங்களே சிறி அண்ணா.மிகுதியான உங்கள் அந்த நாள் ஞாபகங்களையும் எழுதுங்களன் :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.