Jump to content

ரிபிசி ராம்ராஜ், ஆனந்த சங்கரி மற்றும் நான் (சிறுகதை)


Recommended Posts

ரிபிசி ராம்ராஜ் அப்படி சொன்னதை எனக்கு ஜீரணிக்கச் சற்றுக் கடினமாகத்தான் இருந்தது. மாவிலாறில் அப்பொழுதுதான் பிரச்சனை ஆரம்பமாகிக் கொண்டிருந்தது. தமிழீழப் போராட்டம் போகப் போகின்ற கொடுரமான திசை பற்றி யாரும் கனவிலும் நினைக்காத நேரம்

என்னுடைய இணையத்தில் ரிபிசி பற்றி வந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்கு தொடர்பு கொண்ட ராம்ராஜ் அப்பொழுது நடந்த உரையாடலின் போது ஜீரணிக்க முடியாத ஒரு எதிர்வுகூறலை சொன்னார்.

அவர் சொன்னதன் சாரம்சம் இதுதான். விரைவில் பெரும் யுத்தம் வரும் உலகின் பலநாடுகள் சிறிலங்காவிற்கு உதவி செய்யும். விடுதலைப் புலிகள் வன்னியின் ஒரு பகுதியில் முடக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள். பிரபாகரன் மீது உண்மையான விசுவாசம் வைத்திருக்கும் சில ஆயிரம் புலிகள் கடைசி மட்டும் போராடி உயிர் துறப்பார்கள். மற்றைய புலிகள் எல்லோரும் சரணடைவார்கள்.

அவர் இதை எனக்கு மட்டும் கூறவில்லை. தன்னுடைய வானொலியிலும் இதே போன்ற கருத்துக்களை அவ்வப்போது வைத்திருக்கிறார். இதைச் சொல்கின்ற நேரங்களில் பலரிடம் இருந்து தூசணத்தால் திட்டும் வாங்கியிருக்கிறார்.

.............

சம்பூரை நோக்கி பெரும் படை நடவடிக்கை நடந்து கொண்டிருந்தது. பல ஆயிரம் எறிகணைகள் ஒரே நேரத்தில் வந்து விழுந்து கொண்டிருந்தன. அந்த வாரத்திற்கான கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தேன்.

கிழக்கை இழக்க வேண்டி வரும் என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தொடர்ச்சியாக இல்லாமல் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களால் துண்டாடப்பட்டிருந்தன.

கட்டுரையை முடிப்பதற்குள் திருகோணமலைக்கு தொடர்பை எடுத்தேன். அப்பொழுது இணையங்களில் எழுதிக் கொண்டிருந்த ஒரு போராளியுடன்தான் முதலில் பேசினேன். நீங்கள் எப்படித் தாக்குப் பிடிக்கப் போகிறீhகள்? இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அல்லவா உங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிகள் இருக்கி;ன்றன? என்று கேட்டேன்.

அவர் சிறிதும் தயங்காது பதில் சொன்னார், „வரைபடத்தை கவனமாகப் பாருங்கள், நாங்கள்தான் அவர்களைச் சுற்றி வளைத்திருக்கிறோம்'

அந்த முறை என்னுடைய கட்டுரையின் முடிவு இதைத்தான் அடைப்படையாகக் கொண்டு இருந்தது. கட்டுரையைப் படித்த நிறையப் பேர் என்னைப் பாராட்டித் தள்ளி விட்டார்கள்.

.............

இராணுவம் வன்னிக்குள் அகோரமான பாய்ச்சலை நடத்திக் கொண்டிருந்தது. ஆனந்தசங்கரி தேசியத் தலைவருக்கு இரண்டாவதோ மூன்றாவதோ கடிதத்தை எழுதிக் கொண்டிருந்தார். அனைத்துக் கடிதங்களும் மீண்டும் மீண்டும் ஒன்றையே சொன்னதனால், எது எந்தக் கடிதம் என்று நினைவு வைத்துக் கொள்வது கடினமானது.

ஆனால் அனைத்துக் கடிதங்களிலும் அவர் சொன்னது இதுதான். „போரை நிறுத்துங்கள், பேச்சுவார்த்தைக்கு திரும்புங்கள், இல்லையென்றால் மக்களும் உங்களுடைய இயக்கமும் அழிந்து போய்விடும்.

அத்துடன் போர் நிறுத்தம் செய்வதன் ஊடாக சமஸ்டி முறையில் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார்.

அவருடைய கடிதங்களுக்கு விடுதலைப் புலிகள் நேரடியாக பதில் சொல்லவில்லை. ஆயினும் புலம்பெயர்ந்து வாழும் சிலர் தமது எழுத்தின் மூலம் சிறப்பான பதிலடியை ஆனந்த சங்கரிக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரங்களில் தமிழர்களால் மிகவும் கீழ்த்தரமான சொற்களால் அர்ச்சிக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் ஆனந்த சங்கரி முதலிடத்தில் இருந்தார்.

.............

அண்மையில் என்னுடைய முன்னாள் வாசகர் ஒருவரை சந்தித்தேன். என்னுடைய ஆய்வுக் கட்டுரைகளை ஒரு பிடிபிடித்தார். தமிழர்களை என்னைப் போன்றவர்கள் தவறாக வழிநடத்தி விட்டார்கள் என்று சொன்னார்.

சொற்களுக்கு இடையில் வாசிப்பார்கள் என்று எதிர்பார்த்தது என்னுடைய தவறுதான். சுpல விடயங்கள் தெரிந்திருந்தும் கூறாமல் போனதும் என்னுடைய தவறுதான். என்றாலும் சமாளிக்கப் பார்த்தேன். அதை நான் முன்னமேயே சொன்னேனே, இதை நான் முன்னமேயே சொன்னேனே என்ற விளக்கத்தை எல்லாம் அவர் ஏற்கவில்லை.

எனக்கே இப்படி என்றால் பின்னாலே பலாப்பழத்தோடு நிற்பவர்களின் நிலையை நினைத்துக் கொண்டேன்.

எனக்கு உண்மையில் அவருடைய பேச்சு வருத்தத்தை தரவில்லை. அன்றைக்குப் பாராட்டியதற்கு இது சரியாகப் போய்விட்டது என்று என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்

ஆனால் எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை. „புலிகள் அழியப் போகிறார்கள், சரணடையப் போகிறார்கள்' என்றெல்லாம் சரியான எதிர்வுகூறலை செய்த ரிபிசி ராம்ராஜ் மற்றும் ஆனந்த சங்கரியை ஏன் யாரும் போற்றிப் புகழ்வதில்லை??

Link to comment
Share on other sites

  • Replies 137
  • Created
  • Last Reply

எனது கோரிக்கையை நிறைவேற்றிய உங்களுக்கு மிக்க நன்றிகள் சபேசன் . உங்களில் மிகவும் மரியாதை வைத்திருக்கின்றேன் . இதை வாசிக்கும்பொழுது சத்தியமாக கதை வாசிச்ச உணர்வு எனக்கு வரேலை . உங்களுடைய இணையத் தளத்தை அரசியலுக்காகவே என்னுடய நண்பர்கள் பலருக்கு அறிமுகப்படுத்தினேன் . வாழ்த்துக்கள் சபேசன் .

Link to comment
Share on other sites

நீங்கள் என்னை நக்கல் அடிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. சற்றுப் பொறுங்கள். பயணத் தொடரையும் எழுதுகிறேன். அதை எழுதுவதற்கான முன்னோட்டங்கள்தான் இவைகள்.

என்னவெல்லாம் வாங்கிக் கட்டப் போகிறேன் என்று பரிசோதித்துக் கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

ஆனால் எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை. „புலிகள் அழியப் போகிறார்கள், சரணடையப் போகிறார்கள்' என்றெல்லாம் சரியான எதிர்வுகூறலை செய்த ரிபிசி ராம்ராஜ் மற்றும் ஆனந்த சங்கரியை ஏன் யாரும் போற்றிப் புகழ்வதில்லை??

வெரி சிம்பிள்....

இந்தியா சொல்லி இருக்கும் . தற காசு எல்லாம் 2009 மே 18 திகதியோட்டு நிப்பாட்ட போறோம். அதோடு ரார்ம்ராஜ்க்கும் உடும்பு இறச்சி திண்ணி ஆனந்த சங்கரிக்கு விளங்கி இருக்கும் . புலிகளை அழிக்க போகிறார்கள் என்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் உரிமையைவிட தங்களின் சுயநலத்தில் அக்கறை கொண்டவர்கள்தான் இந்த ராமராச்சும், ஆனந்த சங்கரியும். புலிகளின் அழிவை விரும்பியவர்கள். தமது விருப்பத்தையே உங்களிடம் அவர்கள் கூறினர். களநிலைமைகளையோ அல்லது பூகோள அரசியல் நிலைமைகளையோ ஆய்வுசெய்து போராட்டத்தின் அழிவை எதிர்வு கூறவில்லை.

இப்படியான சுயநலவாதிகளைத் தூக்கிப்பிடிப்பதை நிறுத்துங்கள்.

------

”நாம் அப்பவே சொல்லிவிட்டம் அழியப்போறீங்கள் எண்டு” முள்ளிவாய்க்காலில் போராட்டம் அழிக்கப்பட்ட பிறகு சிலதுகள் இப்படிச் சொல்லிக் கொண்டு திரியுதுகள். அவர்கள் “பூநகரியில் இருந்து இறுதிப் போர் தொடங்குது, நட்டுவக்காலி எண்டு” ஆய்வுகளை எழுதிய ஆக்கள்.

நல்ல காலம் நீங்கள் அப்படியில்ல. ராமராச்சுக்கும், ஆனந்த சங்கரிக்கும் கிரடிட் கொடுக்கிறீங்கள்.

Link to comment
Share on other sites

ராமராஜை நான் சந்தித்த முதல் நாள் இன்னமும் நினைவில் இருக்கு .வெள்ளை முழுக்கை சேட்டுடன் முஸ்தாபா என அறிமுகம் செய்துகொண்டார் .பின்னர் பலதடவைகள் சந்தித்தேன் .குறிப்பாக எனது அப்பா என்னை தேடிவந்து லொட்ஜில் இருக்கும் போது அங்கு இவரும் இன்னொருவரும் என்னை தலைமைக்கு தெரியாமல் வந்து சந்தித்தார்கள் .அவர்களுடன் என்னால் சேருவதேன்பது நினைத்து பார்க்க முடியாதாதொன்று .காலம் உருண்டோடி விட்டது .

ராமராஜ் சொன்னதும் ஆனந்த சங்கரி எழுதியதும் உலகம் அறிந்தது தான் .

உலகம் அறிந்த உண்மையை புலிகளை வைத்து வியாபாரம் செய்தவர்கள் புலிகளையும் அவர்கள் விசிவாசிகளையும் அதை அறியாமல் வைத்திருந்ததுதான் கெட்டித்தனம் .அதைவிட இந்த வியாபாரிகளின் சாணக்கியம் இன்றும் அவர்கள் அதை செய்தது அறியாமல் விசுவாசிகள் அவர்கள் மேல் விசுவாசமாக இருப்பதும், இன்னமும் நாடு இவர்கள் பிடிபார்கள் என நம்புவதும் ஆகும் .

Link to comment
Share on other sites

சபேசன்,

மன்னிக்கவும். உண்மையாக உங்கள் மனசைத் தொட்டுச் சொல்லுங்கள். புலிகள் வெல்வார்கள் என்ற மாயை அல்லது நம்பிக்கை உங்களிடம் இருந்ததா இல்லையா ?

சண்டை நடக்க நடக்க கிட்லரின் பிரச்சாரப்பீரங்கி கோயபல்ஸ் போல உண்மைகளை மறைத்து உளவியல் வெற்றியால் தமிழ்ஈழத்தைப் பிடித்துத் தரும் தங்களது ஆய்வுகளும் அரசியல் திறமைகளும் என வாயடித்த பலர் ஆய்வாளர்களின் ஆய்வின் முடிவையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்ன ராம்ராஜ் கதையை 2002 சமாதான காலம் ஆரம்பித்த போதே புலிகள் இயக்க பெரியவர்களுக்கு எங்களை வாழ விடாத இந்தியாவின் விசுவாசிகளால் சொல்லப்பட்டுக் கொண்டேயிருந்தது.

இப்போது பிரபாகரன் யுத்தத்தை நிறுத்தாமல் வெறும் சண்டைக்காரனாக இருந்தார் என எழுந்தமானமாக அரசியல் ஆய்வு செய்த எங்கள் ஊடகங்களின் ஆய்வாளர்களுக்கு பிரபாகரன் என்ற மனிதன் வெறும் ஆயுதங்களுடனான போரை ஆனையிறவோடு முடித்துக் கொண்டார் என்பதும் அரசியல் வெளியை நம்பி அதற்காக இயங்கினார் என்பதும் புரியாத புதிர்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மீது உண்மையான விசுவாசம் வைத்திருக்கும் சில ஆயிரம் புலிகள் கடைசி மட்டும் போராடி உயிர் துறப்பார்கள்.

ஆனந்த சங்கரிக்கும்,ராமராஜ் க்கும் தெரிந்த படியால் நிச்சம் புலிகளுக்கும் அதன் தலைவருக்கும் தெரிந்திருக்கும்.ஈழம் என்ற கொள்கைக்காக ஆயுதம் எடுத்த பின்பு அதை இடைநடுவில் விடுவதற்க்கு அவருக்கும் சிலபோராளிகளுக்கும் மனம் வந்திருக்காது.தொடர்ந்து போராடி வீரமரணம் அடைந்தார்கள்.

கெரில்லா போர்முறையில் இருந்து மரபு போர் முறைக்கு வந்த பின்பு மீண்டும் கெரில்லா போர்முறைக்கு சென்று 5ஆம் ஈழப்போரை நடத்த நினைத்திருந்தால் தலைவர் அதை நிச்சயம் செய்திருப்பார் ஆனால் அது எமது போராட்டதை தொடர்ந்து இந்தியாவும் சிறிலங்காவும் தமக்குள்ளே வைத்திருந்திருப்பதற்க்கு ஏதுவா இருந்திருக்கும்.சர்வதேச மட்டத்திற்க்கு சென்றிருக்காது.

சமஸ்டிக்கு புலிகள் சென்றிருந்தால் இன்று நானும் நீங்களும் எப்படி கட்டுரை எழுதியிருப்போம் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

ஈழம் என்று தொடங்கி இப்ப சமஸ்டியில் வந்து நிற்க்கினம் என்று திட்டி இருப்போம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிக்கும் திட்டத்தில் சங்கரியும்,ராம்ராஜ்யூம் பங்காளிகள்...கடைசியில் சபேசனும் தன்ட பிழையை சரிக்கட்ட் இணையத்தில் எழுதிக் கொண்டு இருந்த போராளி மீது பழியை போட்டுட்டார்

Link to comment
Share on other sites

quoteராமராஜை நான் சந்தித்த முதல் நாள் இன்னமும் நினைவில் இருக்கு .வெள்ளை முழுக்கை சேட்டுடன் முஸ்தாபா என அறிமுகம் செய்துகொண்டார் .பின்னர் பலதடவைகள் சந்தித்தேன் quote

முஸ்தபா எனப்படும் ராமராஜ் இந்தியன் இராணுவ அடியாள்களாக செயற்பட்டவர்களில் அதி முக்கியமானவர். E .N .D .L .F. இல் முக்கிய உறுப்பினராகிய இவர் அவர்களுடைய முகாமாகிய யாழ் ஓட்டுமட முகாமில் தங்கி இருந்து செய்த வேலைகள்............தாய்கள் கதற , தந்தையர் கதற .அக்காமார் ,தங்கைமார் கதற ,துணைவியார் கதற ஆயிரம் ஆயிரம் எம் உறவுகளை நாய்களைப்பிடிப்பது போல் பிடித்து அடித்து இந்தியன் நாய் இராணுவத்திற்கு தாரை வார்த்துக்கொடுத்த ஓர் அஜோக்கியன் ......இவனுடன் கூட்டுச்சேர்ந்த இவர்கள் எல்லாம் உதுக்கு

வக்காளத்து

வாங்குவதை நினைக்கும் போது ............முடியல ....................இந்த இடத்தில் ஓர் உண்மை................... அன்று என் நண்பர்கள்

பொட்டுப்போட

தருணம் பார்த்தார்கள்....................அமையவில்ல. அது அன்று அமையாதது என்று என்னளவு தப்பு பாருங்கோ .........இதிலும் கவலை எமது இனிய பூமியான தென் தமிழீம் இவனையும் பெற என்ன பாவம் செய்ததோ.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மத்தியில் வந்து பேசமுடியாத TBC ராமராஜனைப்பற்றியும் ஆனந்த சங்கரியைப்பற்றியும் பேசுவதே தவறு , இவர்களை அரசியலில் இருந்து மக்கள் தூக்கி எறிந்து ரொம்பநாளாகிவிட்டது .

சபேசன் நீங்கள் ஏன் தூசு தட்டி மீண்டும் அவர்களை இழுத்து விட்டிருக்கின்றீர்கள் ? :D

Link to comment
Share on other sites

நன்றி சபேசன் உங்கள் கதைக்கு.

உங்களை இயக்குவது யார், உங்கள் நண்பர்கள் யார் யார் என்று மண்டையை பிய்த்து கொண்டிருந்தேன்.

அதை உங்கள் எழுத்து மூலம் உறுதிப்படுத்தி கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள் உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்.

இங்கு உங்கள் கட்டுரைகளை வாசிக்கும் ஏனைய உறவுகளும், உங்களை உறுதிபடுத்தி கொள்ள உங்கள் கட்டுரைகள் தொடரவேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

நான் இப்பொழுது ஒன்றை தீர்க்க தரிசனமாக சொல்லவா,

இவர்களை இயக்கும் இந்திய உளவுப்பிரிவும்,

இவர்களுடன் கொழும்பு ஹில்டனில் ஒன்றாக இராபோசனம் உண்ட கபில கெந்தவிதாரணவும்,

இவர்களை கைவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மட்டும் சொல்லிவிடுங்கள்.

சபேசன்,

ஏன் நீங்கள் இவர்களை மாதிரியே எதிர்வு கூறிய டக்ளசையும், கருணாவையும் குறிப்பிடவில்லை என்ற கேள்வி தான் இப்போது என்னை குடைகிறது.

அதற்கு உங்களின் அடுத்த ஆய்வுக்கட்டுரை மூலம் பதில் தருவீர்களா .?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை இயக்குவது யார், உங்கள் நண்பர்கள் யார் யார் என்று மண்டையை பிய்த்து கொண்டிருந்தேன்.

அதை உங்கள் எழுத்து மூலம் உறுதிப்படுத்தி கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள் உங்களிடம் இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்.

இங்கு உங்கள் கட்டுரைகளை வாசிக்கும் ஏனைய உறவுகளும், உங்களை உறுதிபடுத்தி கொள்ள உங்கள் கட்டுரைகள் தொடரவேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

பிரபாகரன் சொல்வது தப்பு

இந்த இருவரும் சொல்வது வேத வாக்கு என்று போகுது கதை.

கதையல்ல இன்னொரு பக்க நியம்.

இதில் இன்னொரு உண்மையும் புல்லரிக்குது.

இதுக்கு வேற பச்சை குத்துறாங்கப்பா................??? :( :( :(

Link to comment
Share on other sites

ராமராஜ் இப்ப மட்டும் இல்ல அவர் புளட் காலத்தில் இருந்தே சொல்லுகிறார் புலிகள் அழிந்து விடுவார்கள் என்று. இந்திய ராணுவ காலத்தில் இன்னும் குரலை உயர்த்தி சொன்னார் புலிகள் அழிவார்கள் என்று அப்புறம் சமாதான காலத்தில் எங்கே புலிகள் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து ஈழம் பெற்று விடுவார்களோ என்று அவர்களுக்கு எதிரான பிரசாரத்தை பலமாக செய்தார். பின்னர் இவரும் இவரது சகாக்களுமே கருணாவுடன் இந்திய உளவுப் பிரிவின் சொல்படி இணைந்து தமிழ்(புலி) எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார்கள். தமிழருக்கு எதிரான எவளவோ வேலை திட்டங்களை செய்தார்கள். அவர்களது நீண்ட நாள் ஆசையே புலிகள் அழிவு தான். அத தான் அவர் உங்களுக்கு சொல்லி இருக்குறார். நீங்க அதை அவரது தீர்க்க தரிசனம் என்று நம்பி விட்டீர்கள். தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வச்சிருக்குறார் இந்த தீர்க்க தரிசி? அதை அவர் உங்களுக்கு ரோ விடம் கேட்டு தான் சொல்வார். கவனம் உங்களையும் தன்னுடன் இணைத்து விடுவார். ஆடு நனையுது என்று ஓநாய் அழுதிச்சாம். நல்லாய் இருக்கு உங்க காமெடி. உங்க எழுத்தெல்லாம் ஒரு போராளியின் எழுத்தா? அப்புறம் அர்ஜுன் நீங்களும் உங்க சுய சரிதைய எழுதாலமே..

Link to comment
Share on other sites

பிரபாகரன் சொல்வது தப்பு

இந்த இருவரும் சொல்வது வேத வாக்கு என்று போகுது கதை.

கதையல்ல இன்னொரு பக்க நியம்.

இதில் இன்னொரு உண்மையும் புல்லரிக்குது.

இதுக்கு வேற பச்சை குத்துறாங்கப்பா................??? :( :( :(

யார் யாருக்கு பச்சை குத்துவது என்பது எனது சுதந்திரம் . அதை உங்களிடம் நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை . எனது நல்ல குணங்களை கருத்துக்களத்தில் நீங்கள் தவறாக எடுக்கின்றீர்கள் என நினைக்கின்றேன் . அப்படி இருந்தால் அதை மாற்றுங்கள் விசுகர் <_< <_< <_< .

Link to comment
Share on other sites

ராமராஜனுக்கும் , ஆனந்த சங்கரிக்கும் புரிந்தது தலைவருக்கு புரியாமலும் தெரியாமலும் இருந்து இருக்குமா???

அப்படி தெரிந்தும் அவர் மாற்றுவழிகளை தேடாது இருந்து இருப்பாரா?

அல்லது தலைக்கு மேல் வெள்ளம் சான் என்ன முழம் என்ன என்று இருந்து விட்டாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை. „புலிகள் அழியப் போகிறார்கள், சரணடையப் போகிறார்கள்' என்றெல்லாம் சரியான எதிர்வுகூறலை செய்த ரிபிசி ராம்ராஜ் மற்றும் ஆனந்த சங்கரியை ஏன் யாரும் போற்றிப் புகழ்வதில்லை??

என்ன ஒரு 64 மில்லியன் டொலர் கேள்வி!. நீங்கள் ரூம் போட்டு யோசிக்கிறனீங்கள் எண்டு நான் நம்பிக் கொண்டிருக்க இப்பிடிச் சொதப்பிப் போட்டீங்களே ஆய்வாளர் சபேசன்??நான் ஒரு கதை சொல்லவா?

ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்குப் பகுதியில் ஒருவர் யூதர்களின் மனிதருக்கொவ்வாத சட்டங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார். குறுநில மன்னர்கள், ஆளுனர்கள், யூத "ஆய்வாளர்கள்" எல்லாரும், "இவன் ஒரு குழப்பக் காரன் மட்டுமே, இவன் பேசுவதையும் செயல் படுவதையும் நிறுத்தா விட்டால் கிருமினல்கள் போல சிலுவையில் அறையப் படுவான்" என்று திரும்பத் திரும்ப எதிர்வு கூறிக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் சிலுவையில் அறைய ஏதுவான வலுவான காரணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் யூதாஸ் என்ற ஒரு கூட இருந்து குழி பறிக்கும் ஒருவன் ஒரு நாள் காட்டிக் கொடுக்க அந்த மனிதரைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்றார்கள். அவரது பெயர் இயேசுக் கிறிஸ்து, அவர் சொன்னதையும் செய்ததையும் தழுவி உருவான நம்பிக்கை கிறிஸ்தவம். இயேசுவின் மரணத்தை எதிர்வு கூறிய கைப்பாசுகள், ஏரோதுகள், இறுதியில் காட்டிக் கொடுத்த யூதாஸ், இவர்களை அவர்கள் சார்ந்த யூத இனத்தினர் கூட இன்று நினைவு கூர்வதில்லை, புகழ்வதில்லை. நானும் ஏனெண்டு யோசிக்கிறன்! :rolleyes:

Link to comment
Share on other sites

ராமராஜை நான் சந்தித்த முதல் நாள் இன்னமும் நினைவில் இருக்கு .வெள்ளை முழுக்கை சேட்டுடன் முஸ்தாபா என அறிமுகம் செய்துகொண்டார் .பின்னர் பலதடவைகள் சந்தித்தேன் .குறிப்பாக எனது அப்பா என்னை தேடிவந்து லொட்ஜில் இருக்கும் போது அங்கு இவரும் இன்னொருவரும் என்னை தலைமைக்கு தெரியாமல் வந்து சந்தித்தார்கள்.

இச்சந்திப்பு Henry Kissinger இன் சந்திப்புடன் ஒப்பிடப்படுகிறது. :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ஜஸ்ரின்,

மீட்பர் என்று பலரால் நம்பம்படும் ஒருவரோடு தேசியத் தலைவரை ஒப்பிட்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

Link to comment
Share on other sites

பகலவன்,

தங்களுக்கு பிடிக்காத ஒன்றை எழுதுவதற்காக ஒருவரை "இயக்கப்படுகிறாநர், பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறார்" என்று வசை பாடுகின்ற குணத்தை நாம் மாற்றிக் கொள்வது நல்லது.

Link to comment
Share on other sites

சாந்தி,

உண்மையை சொல்கிறேன். வன்னிச் சண்டையில் அவர்கள் வெல்வார்கள் என்று நம்பிக்கை எனக்கு ஆரம்பத்தில் உண்மையாகவே இருந்தது.

பின்பு வெல்லமாட்டார்கள், ஆனாலும் சண்டை உத்திகளை மாற்றி தங்களை தக்கவைத்தபடி போராட்டத்தை தொடர்வார்கள் என்ற எண்ணம் இருந்தது. அதையும் இந்தக் களத்தில் எழுதியிருக்கிறேன். அதை தேடி இணைக்கிறேன்.

பின்பு 2009இன் ஆரம்பத்தில் நடக்கப் போகும் விபரீதமும் எனக்கு புரிந்து விட்டது. கோசிமின் இறந்த பிறகும் வியட்நாம் மக்கள் போராடி அமெரிக்காவை வெற்றி கொண்டார்கள் என்று எழுதியது எத்தனை பேருக்கு புரிந்ததோ தெரியாது.

Link to comment
Share on other sites

பகலவன்,

தங்களுக்கு பிடிக்காத ஒன்றை எழுதுவதற்காக ஒருவரை "இயக்கப்படுகிறாநர், பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறார்" என்று வசை பாடுகின்ற குணத்தை நாம் மாற்றிக் கொள்வது நல்லது.

முயற்சி செய்கிறேன் சபேசன்.

Link to comment
Share on other sites

ராமராஜ் இப்ப மட்டும் இல்ல அவர் புளட் காலத்தில் இருந்தே சொல்லுகிறார் புலிகள் அழிந்து விடுவார்கள் என்று. இந்திய ராணுவ காலத்தில் இன்னும் குரலை உயர்த்தி சொன்னார் புலிகள் அழிவார்கள் என்று அப்புறம் சமாதான காலத்தில் எங்கே புலிகள் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து ஈழம் பெற்று விடுவார்களோ என்று அவர்களுக்கு எதிரான பிரசாரத்தை பலமாக செய்தார். பின்னர் இவரும் இவரது சகாக்களுமே கருணாவுடன் இந்திய உளவுப் பிரிவின் சொல்படி இணைந்து தமிழ்(புலி) எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார்கள். தமிழருக்கு எதிரான எவளவோ வேலை திட்டங்களை செய்தார்கள். அவர்களது நீண்ட நாள் ஆசையே புலிகள் அழிவு தான். அத தான் அவர் உங்களுக்கு சொல்லி இருக்குறார். நீங்க அதை அவரது தீர்க்க தரிசனம் என்று நம்பி விட்டீர்கள்.

சபேசன் ... உமக்கு ... யார் இந்த முஸ்தப்பா/ஆனந்தசங்கரி? என்ன செய்தார்கள்? கடந்த காலங்களில்? எவர்கள் இவர்களை இயக்கினார்கள்? எப்படி எப்படியெல்லாம் இயங்கினார்கள்/இயக்கினார்கள்? ... போன்றவைகளெல்லாம் தெரியாதவைகளல்ல ... தமிழ் மக்களின் பிணங்களில் சிங்களத்துடன் இணைந்து கும்மாளம் இட்டவர்களின் தீர்க்க தரிசனங்களை கொண்டு சென்று குப்பையினுள் போடும் ...

... ஆனால் ...

.. சிங்களமோ, இந்தியாவோ, அமெரிக்காவோ மற்றைய தேசங்களோ ... எமக்கு இவர்கள் போன்றோர் தான் துரோகிகள் என கூறி விட்டு .. அவர்கள் உள்ளுக்குள்ளேயே கூறு போட்டு விலைபேசி பிரித்தெடுக்கும் போது ... நாம் வேற்று உலகத்தில் இருந்து கொண்டிருந்தோம்!!

...

முன்பும் யாழில் பதிந்தவைகள் தான் ... இரு சம்பவங்கள் ...

... யுத்த நிறுத்தம் ரணிலுடன் கையெழுத்தாகி பாலா அண்ணா லண்டன் வந்த பின் சிலர் சென்று பாலா அண்ணாவுடன் யுத்தநிறுத்தம் கையெழுத்தாகியது தொடர்பாக விவாதித்தார்களாம், அங்கு சென்ற சிலர் .. "நாம் இராணுவ ரீதியில் பலமாகவும், சிங்களம் பலவீனமாகவும் உள்ள நிலையில் நாம் யுத்த நிறுத்தத்தில் கையெழுத்திட வேண்டுமா?" .. என கேட்க, உடனே அந்த தீர்க்கதரிசி .. "ஓர் ஆயுத போராட்டம், ஆயுதத்தின் மூலம் அடையக்கூடிய உயர் நிலையை நாம் அடைந்து விட்டோம், இனி ஆயுதமல்ல எம் அரசியலே மிகுதிப் பயணத்தை கொண்டு செல்ல வேண்டும். இல்லை இனியும் நாம் ஆயுதம் தூக்குவோமாயின், அதே ஆயுதங்கள் நம்மை குழி தோண்டிப்புதைத்து விடும்" ..

... சுவிஸில் நடைபெற்ற இறுதிப்பேச்சுவார்த்தைகளில் ஓர் நாள் ... சிங்கள, தமிழ் இரு தரப்புக்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து விட்டன. அங்கு எரிக் சொல்கைம், மற்றும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்/அதிகாரிகள் என வழமையாக பங்கு கொள்பவர்களை விட அப்போதைய அமெரிக்க இராஜாங்க செயலர், பிரித்தானிய அதிகாரிகள் என பலர் திரண்டிருந்தனராம். அன்றைய நிகழ்ச்சி நிரலின்படி பேச்சுக்கள் தொடங்கி சென்று கொண்டிருக்க சிறிது நேரத்தில் எரிக்சொகைம் இருதரப்பினரையும் பார்த்து சிறிது நேரம் நிறுத்துங்கள் என்று கூறிவிட்டு , குறிப்பாக தமிழர் தரப்பிடம் .."நீங்கள் பிடித்ததை பிடித்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா(தனிநாடு)? இல்லை ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வுக்கு வரப்போகிறீர்களா? .." ... என்றாராம். உடனே பாலா அண்ணா சுற்று முற்றமும் பார்த்திருக்கிறார், அங்கு எந்த பேச்சுவார்த்தையிலும் வராத சர்வதேசத்தை ஆட்டுவிப்பவர்கள், புரிந்து விட்டது பாலா அண்ணாவிற்கு! ... இவர்கள் ஏதோ ஒரு முடிபிற்கு வந்து விட்டார்கள் என்று, உடனே மறு கதையில்லால் கூறினாராம் .. "நாமும் சமஸ்டி தொடர்பாக பரிசீலிக்கின்றோம், அதை தீர்வாக ஏற்கவும் இருக்கிறோம்" .. என்று! பாலா அண்ணா கூறியதை புரியாத தமிழ்ச்செல்வன் ஜோய்ச்சினது வாயை பார்க்க, அவரோ பாலா அண்னா சமஸ்டிக்கு சம்மதித்து விட்டார் என்று மொழிபெயர்க்க .. தமிழ்ச்செல்வனோ பாலா அண்ணாவிற்கு தனது அதிருப்தியை முகபாவனையில் காட்டி விட்டு, தங்கி இருந்த விடுதி சென்று தொலைபேசியில் .. "யாரையும் கேட்காமல் சமஸ்டியை இவர், நாம் ஏற்று விட்டோம் என கூறி விட்டார்" ... என தனக்கு தெரிந்த அறிவு பூர்வமாக அறிவிக்க ... பின் எல்லாம் ஒவ்வொன்றாக முடிந்து விட்டது!

... எம் அரசியல் நடவடிக்கைகள், குறிப்பாக புலத்தில் நடவடிக்கைகள் யுத்தநிறுத்த காலங்களில் உறைநிலையில் இருந்தது, எம் ஆயுதக்கனவுகளினால் என்பது மறுக்க முடியாத உண்மை!

... ஆனால் ... விட்ட தவறை தொடர்ந்து தொடந்து கிளறுவதால் சாதிக்கப் போவதொன்றுமில்லை ... இன்றைய புலத்து எம் போராட்டங்கள் ... ஒரு தலைமையின் கீழ் என்று இராது (எந்தப்புத்தில் எந்தப்பாம்பு என்று இன்னும் சரியாக தெரியாத நிலையில்) ... தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இன்று அதற்கான அடித்தளங்கள் புலத்தில் இடப்படுகின்றன ... இவைகள் எம்மக்களின் விடுதலை வரை செல்ல வேண்டும் ...

Link to comment
Share on other sites

தேடிய இணைப்பை கண்டுபிடித்து விட்டேன். கிளிநொச்சி விழுவதற்கு முன்பு இந்தக் கருத்தாடலை நடத்தியிருந்தேன். மிகக் கவனமாக சொற்களைப் பயன்படுத்தியும் எனக்கு நிறைய கண்டனங்கள் வந்திருந்தன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=47196&st=0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாருக்கு பச்சை குத்துவது என்பது எனது சுதந்திரம் . அதை உங்களிடம் நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை . எனது நல்ல குணங்களை கருத்துக்களத்தில் நீங்கள் தவறாக எடுக்கின்றீர்கள் என நினைக்கின்றேன் . அப்படி இருந்தால் அதை மாற்றுங்கள் விசுகர் <_< <_< <_< .

எனது கோரிக்கையை நிறைவேற்றிய உங்களுக்கு மிக்க நன்றிகள் சபேசன் .

உங்களில் மிகவும் மரியாதை வைத்திருக்கின்றேன் . இதை வாசிக்கும்பொழுது சத்தியமாக கதை வாசிச்ச உணர்வு எனக்கு வரேலை .

உங்களுடைய இணையத் தளத்தை அரசியலுக்காகவே என்னுடய நண்பர்கள் பலருக்கு அறிமுகப்படுத்தினேன் .

வாழ்த்துக்கள் சபேசன் .

இதைப்பார்த்தபோது நீங்கள் சொல்லித்தான் அவர் எழுதியது போலும்

எனவே ரிபிசி ராம்ராஜ், ஆனந்த சங்கரி போன்றவர்களின் வழிகாட்டுதலை எம்மக்கள் பின் பற்றவேண்டும் பின் பற்றியிருக்கணும் என்ற கருத்தை நீங்களும் ஏற்று அதை தங்கள் நண்பர்ககளுக்கும் அறறிமுகப்படுத்தியது போலிருந்தது.

இது உண்மையென்றால்

நான் தங்கள் மீதான தவறான பார்வையை மாற்றுகின்றேன்....???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.