Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உதவி..

வீட்டுக்கு வரும் தேவை அற்ற தொலை பேசி அழைப்புக்களை (இலக்கங்களை) புளக் பண்ணுவது எப்படி என்று தயவு செய்து யாராவது அறியத் தர முடியுமா..???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தொழில் நுட்ப ரீதியாக தெரியாது ஆனால் உங்களுக்கு வரும் தேவையில்லாத அழைப்புக்களை துண்டிக்க வேண்டுமாயின் உங்கள் தொலைத் தொட‌ர்பு நிலையத்தை தொட‌ர்பு கொண்டு தேவையில்லாத இலக்கத்தில் இருந்து வரும் தொலைபேசியை துண்டிக்க சொன்னால் துண்டிப்பார்கள் அல்லது இலக்கம் பார்த்து எடுக்கிற தொலைபேசி வாங்கினால் உங்களுக்கு தேவையான இலக்கத்தை அதில் பதிந்து போட்டு, இலக்கத்தை பார்த்து தேவையில்லாத அழைப்பிதழை எடுக்காமல் விடலாம்.

Link to comment
Share on other sites

உங்களுடைய தொலை பேசி இலக்கத்தை கனடா ரெலிக்கொம்மில் NUMARO ROUGHE ( HOT LIST ) லிஸ்ற்றில் போட்டால் உங்கள் தொலைபேசி இலக்கத்தை மற்றவர்கள் டிறக்ரறியிலோ , அல்லது வேறு வகையிலோ எடுக்க முடியாது . இதற்கு நீங்கள் அவர்களுக்குக் காசு கட்டவேண்டிவரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,கோமிண்ணா இருவருக்கும் நன்றிகள்..ஓம் பெல் கனடா நிறுவனத்தினரோடு தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் இந்த ஒரு பகுதியை வளமையாக இருக்கும் இணைப்போடு சேர்த்துக் கொள்வதற்கு அதிக பணம் அறவிடுவோம் என்று சொன்னார்கள்..ஆகவே அவர்களை பின் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி வைச்சுட்டு..இங்கே இந்தப் பதிவை இட்டு விட்டு.கற்லொக்கின் உதவியுடன் வேண்டாத தொலைபேசி இலக்கங்களை புளக் பண்ணியும் விட்டேன்.

Link to comment
Share on other sites

1800, 1888 போன்ற எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் நான் எடுப்பதே இல்லை.. முக்கியமான விடயம் என்றால் குரல் தகவலை (voice message) விடுவார்கள்தானே??!! :D

அப்படியும் சிலதடவைகள் மாட்டுப்படுவது உண்டு.. அப்படி வியாபார நோக்கிலான அழைப்புகளை எடுத்துவிட்டால் வில்லங்கமான பதில்களைக் கொடுத்து வெறுப்பேற்றுவது வழமை.. :lol:

நீங்கள் குறிப்பிடும் இலக்கதைச் சேர்ந்தவர்கள் ஒரு பக்கம் என்றால் மறு பக்கம் நம்மவர்களும் தான் அண்ணா..ஆயுள் காப்புறுதி செய்யப் போறீங்களா,அப்படியா,இப்படியா என்று கேட்டுத்து ரொம்ப தொந்தரவு....இடையிடையே தேவை அற்ற கேள்விக்கணைகள்..பெண்ணாய் பிறப்பதே பாவம்..:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட பக்கத்தில, இந்தியாக்காரண்ட தொல்லை, தாங்க ஏலாமக் கிடக்கு!

வேலையால, வீட்ட வந்து, ஒரு தேத்தண்ணி குந்தியிருந்து குடிக்கேலாமக் கிடக்கு! :(

Link to comment
Share on other sites

  • You can add your name to the National Do Not Call Registry by calling 1-888-382-1222 or visitingwww.donotcall.gov.
  • Political / Campaign calls are not illegal. Request the caller remove your phone number from the calling list. You can also visit the Federal Trade Commission to find more information.
  • Debt Collection calls are not illegal. If you have no knowledge of the person they are asking for, you may request the collection calls stop. If you have requested that the collection calls stop and they continue to call, you may contact the Federal Trade Commission to file a complaint or call 1-877-382-4357.
  • Collect Call Block may be available in your area. Please contact us by phone to activate this feature.

இப்படி ஏதாவது கனடாவிலும் இருக்கும்.விசாரித்து பார்க்கவும்.

மிக்கி நன்றி உங்களுக்கு..முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தொலைபேசி இலக்கத்தை, மஞ்சள் புத்தகத்தில் பதிவதால்... இப்படியான அழைப்புகள் வரத்தான் செய்யும்.

தொலைபேசிக்கு விண்ணப்பிக்கும் போது... முன் யோசனையாக இதனை தவிர்த்திருக்கலாம்.

இனி... ஒன்று செய்யலாம், புது இலக்கத்துக்கு விண்ணப்பித்து, மஞ்சள் புத்தகத்தில் உங்கள் பெயரை பதிய வேண்டாம் என்று சொல்லுங்கோ யாயினி.

ஜேர்மனியில் தொலைபேசியில் தொல்லை கொடுப்பது குறைவு. வெள்ளி, சனி... தபால் பெட்டி மட்டும், விளம்பரங்களால் நிரம்பி வழியும்.

Link to comment
Share on other sites

உதவி..

வீட்டுக்கு வரும் தேவை அற்ற தொலை பேசி அழைப்புக்களை (இலக்கங்களை) புளக் பண்ணுவது எப்படி என்று தயவு செய்து யாராவது அறியத் தர முடியுமா..???

வர்த்தக ரீதியாக வரும் தொலைபேசி அழைப்புக்கள் பெரும் பாலும் 9 - 7 வரும்.. அந்த நேரத்தில் நான் வீட்டில் இருந்தால் தொலைபேசியை எடுப்பதில்லை.. தொலைபேசி நின்றதும் யார் அழைத்தார்கள் என்று அறிய ஒரு இலவச இலக்கம் இங்கு உள்ளது, அதன் மூலம் அறிந்து கொள்வேன்.. அதே நேரம் வெளிநாட்டு அழைப்பாக இருந்தால் அவர்கள் நிச்சயம் அழைப்பிற்கான காரணத்தை recording message ல் விடுவார்கள். அவசரமான காரணமாயின் வீட்டுத் தொலைபேசி அழைப்பை எடுக்காவிட்டால் அடுத்து கைத் தொலைபேசிக்கு அழைப்பார்கள் தானே?

7 மணிக்குப் பின்பு வரும் வர்த்தக ரீதியான தொலைபேசி அழைப்புக்களை ஹலோ சொல்லி எடுத்தமும் நானே துண்டித்துவிடுவேன்... கடுப்பில் இருக்கும் போது வந்தால் அவர்களாகவே எனது இலக்கத்தை அழிக்குமளவுக்கு வெறுப்பேத்தி விடுவேன்... ^_^

நீங்கள் குறிப்பிடும் இலக்கதைச் சேர்ந்தவர்கள் ஒரு பக்கம் என்றால் மறு பக்கம் நம்மவர்களும் தான் அண்ணா..ஆயுள் காப்புறுதி செய்யப் போறீங்களா,அப்படியா,இப்படியா என்று கேட்டுத்து ரொம்ப தொந்தரவு....இடையிடையே தேவை அற்ற கேள்விக்கணைகள்..பெண்ணாய் பிறப்பதே பாவம்.. :(

தனிப்பட்ட ரீதியில் தொல்லை தரும் எம்மவர்களாக இருந்தால் அதனை வேறு முறையில் கையாளலாம்.. அப்படியாயின் அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

நீங்கள் குறிப்பிடும் இலக்கதைச் சேர்ந்தவர்கள் ஒரு பக்கம் என்றால் மறு பக்கம் நம்மவர்களும் தான் அண்ணா..ஆயுள் காப்புறுதி செய்யப் போறீங்களா,அப்படியா,இப்படியா என்று கேட்டுத்து ரொம்ப தொந்தரவு....இடையிடையே தேவை அற்ற கேள்விக்கணைகள்..பெண்ணாய் பிறப்பதே பாவம்.. :(

நுணாவிலான் சொன்னதுபோல Do not call Registry இல் உங்கள் பெயரைச் சேர்க்கலாம்.. ஆனால் இந்த முறை நடைமுறைக்கு வந்த புதிதில் இவ்வாறு பெயரை இணைத்துக்கொண்டவர்களுக்கு இன்னும் கூடுதலான அழைப்புகள் வந்ததாக ஒரு குற்றச்சாட்டு வந்தது.. :lol: ஆனால் இப்போது எப்படியோ தெரியாது.

தெரியாத இலக்கம் என்றால் எடுக்காமலே விடலாம். தேவையானவர்கள் குரல் தகவலை விடுவார்கள்தானே.. :rolleyes: ஆனால் சில பழசுகள் அதைச் செய்யாயினம். :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வர்த்தக ரீதியாக வரும் தொலைபேசி அழைப்புக்கள் பெரும் பாலும் 9 - 7 வரும்.. அந்த நேரத்தில் நான் வீட்டில் இருந்தால் தொலைபேசியை எடுப்பதில்லை.. தொலைபேசி நின்றதும் யார் அழைத்தார்கள் என்று அறிய ஒரு இலவச இலக்கம் இங்கு உள்ளது, அதன் மூலம் அறிந்து கொள்வேன்.. அதே நேரம் வெளிநாட்டு அழைப்பாக இருந்தால் அவர்கள் நிச்சயம் அழைப்பிற்கான காரணத்தை recording message ல் விடுவார்கள். அவசரமான காரணமாயின் வீட்டுத் தொலைபேசி அழைப்பை எடுக்காவிட்டால் அடுத்து கைத் தொலைபேசிக்கு அழைப்பார்கள் தானே?

7 மணிக்குப் பின்பு வரும் வர்த்தக ரீதியான தொலைபேசி அழைப்புக்களை ஹலோ சொல்லி எடுத்தமும் நானே துண்டித்துவிடுவேன்... கடுப்பில் இருக்கும் போது வந்தால் அவர்களாகவே எனது இலக்கத்தை அழிக்குமளவுக்கு வெறுப்பேத்தி விடுவேன்... ^_^

தனிப்பட்ட ரீதியில் தொல்லை தரும் எம்மவர்களாக இருந்தால் அதனை வேறு முறையில் கையாளலாம்.. அப்படியாயின் அறியத்தாருங்கள்.

குட்டி அண்ணாவின் கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றிகள்..கடசியாக எழுதி இருப்பது பற்றிய விபரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் பிரியோசனமாக இருக்கும்..

நுணாவிலான் சொன்னதுபோல Do not call Registry இல் உங்கள் பெயரைச் சேர்க்கலாம்.. ஆனால் இந்த முறை நடைமுறைக்கு வந்த புதிதில் இவ்வாறு பெயரை இணைத்துக்கொண்டவர்களுக்கு இன்னும் கூடுதலான அழைப்புகள் வந்ததாக ஒரு குற்றச்சாட்டு வந்தது.. :lol: ஆனால் இப்போது எப்படியோ தெரியாது.

தெரியாத இலக்கம் என்றால் எடுக்காமலே விடலாம். தேவையானவர்கள் குரல் தகவலை விடுவார்கள்தானே.. :rolleyes: ஆனால் சில பழசுகள் அதைச் செய்யாயினம். :blink:

இசை அண்ணா நீங்கள் மேற் சொன்ன பகுதிக்குள்ளும் தொலைபேசி தொடர்பை ஏற்படுத்தி வைத்திருந்தோம்..அந்த வரையறைக்குள் இருக்கும் போது வரும் அனேகமான தொலைபேசி அழைப்புக்கள் எல்லாம் வெளி நாட்டு போண் போன்று தான் வரும்..பெயர் விளாது,இலக்கம் விளாது இன்னும் அதிக தொல்லை கூடியது..ஓம் வயது போனவர்கள் சொல்வளி கேட்பது குறைவு தானே ..தலை மாட்டிலயே போணை வைச்சு கொண்டு இருந்துட்டு வாற போண் எல்லாம் பார்க்காமல் எடுத்துவார்கள்..பின் யாரு,எவர் என்று வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தொல்லை தான்..இங்கும் அந்தப் புரிந்துணர்வு இன்மை இருக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி

எல்லாவற்றிலும் நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது

நல்லவற்றை அனுபவிக்கும் நாம் அதிலிருந்து அதனால் வரும் தீமையானவற்றை கண்டு மனம் சலிக்கின்றோம்.

அவற்றுக்கு முகம் கொடுக்கணும்

இன்று தொலைபேசி அழைப்பில் வந்தவர் இனிமேல் தங்கள் இலக்கத்தை நினைத்தே பார்க்கக்கூடாதது போல் பேசணும்.

தற்போதைய அபரீத தொடர்புச்சாதன வளர்ச்சியால் தொடர்ந்து தொல்லை கொடுப்பவரை கண்டு பிடிப்பது சுலபம். அத்துடன் அவரை சட்டத்திலும் மாட்ட வழிகள் உண்டு. எனவே அவர் அத்துடன் நிறுத்திக்கொள்வார்.

குறிப்பு: ஒரு அநேமதேய அழைப்பு வந்தால் அவருடன் பேசிக்கொண்டே கைத்தொலைபேசியில் இவரது தொல்லை தாங்கமுடியவில்லை. அவர் பற்றிய தகவல்களைத்தருமாறு காவல்துறையுடன் பேசுவது போல் நடியுங்கள். அனைத்தும் நிற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி உங்களுக்கு தமிழர்களால் பிர‌ச்ச‌னை என்டால் அந்த இலக்கத்திற்குரியவர்களை காவல்துறைக்கு அறிவித்து விடுங்கோ அவர்கள் இலக்கம் விழாமல் தொலைபேசியில் அழைத்தாலும் காவல்துறை கண்டு பிடித்து நட‌வடிக்கை எடுப்பார்கள்.

ஒருதருக்கும் பாவம்,பரிதாபம் பார்க்காமல் கட் அன்ட் ரைட் ஆக இருக்க பாருங்கோ :)

Link to comment
Share on other sites

எனக்கு என்னென்ன கெட்ட வார்த்தைகளெல்லாம் தெரியும் என்பது இப்படியான அழைப்புகள் வரும்போதுதான் எனக்கே தெரிந்து கொள்ள முடிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் உப்பிடியான அழைப்புகள் அப்பப்ப வரும்...ஒருசில சவுண்டுகள் குடுப்பினம்....இல்லாட்டி கட்டில்லை இருந்து முனகிமுக்குற மாதிரி ரியூன் போடுவினம்.....இதைவிட எக்கச்சக்கமான ரியூன்கள் எங்கடை ஆக்கள் வைச்சிருக்கினம்..... :icon_mrgreen:

அவையளுக்கு நான் ரெலிகொம்மிலை வருசத்துக்கு 60 ஈறோ கட்டி....உவையளை கண்டுபுடிக்கிறவிசயம் இன்னும் தெரியேல்லை....நாடகம் நடத்தீனம்...நடத்தட்டும்...ஒட்டுமொத்தமாய் இறுகேக்கை இருக்கு கூத்து..... :)

தம்பி நிழலி! ஏலுமெண்டால் நேரகாலமில்லாமல் எனக்கு ரெலிபோன் எடுத்து பாருங்கோ அப்ப தெரியும் என்ரை செந்தமிழ் எப்பிடியெண்டு? :D

Link to comment
Share on other sites

குட்டி அண்ணாவின் கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றிகள்..கடசியாக எழுதி இருப்பது பற்றிய விபரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் பிரியோசனமாக இருக்கும்..

....

இணையத்தில் தேடியபோது கிடைத்தது, நீங்கள் இருக்கும் இடத்திற்கு இது பிரயோசனப்படுமா என்று பாருங்கள்..

http://ca.answers.ya...29195817AAJFg5n

http://www.wikihow.c...ive-Phone-Calls

http://blog.shvetsov...nted-phone.html

nuisance phone calls வரும் தேதி, துல்லியமான நேரம், எவ்வாறான தொலைபேசி அழைப்பு என்பவற்றைக் ஒரு வாரத்திற்காவது குறித்துக் கொள்ளுங்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் போய் நீங்கள் குறித்து வைத்துக் கொண்ட விபரங்களைக் காட்டி ஒரு முறையீடு பதிவு செய்யுங்கள்.. அந்த முறையீடு பதிவு செய்த இலக்கத்துடன் உங்கள் தொலைபேசி அழைத்து அவர்களிடம் விபரத்தைச் சொல்லி உங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புக்களை அவதானிக்கச் சொல்லுங்கள்.. காவல்துறையில் பதிந்த இலக்கத்தைக் கொடுப்பதால் அவர்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை அவதானித்து நீங்கள் குறிப்பிட்டுக் கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு அந்த இலக்கங்களை தடைசெயவார்கள்.. அதே நேரம் நீங்களும் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வரும் அழைப்புகளை சரியான தேதி, நேரம் என்பவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் எது உங்களுக்குத் தேவையான அழைப்பு எது தொல்லை தரம் அழைப்பு என்று அடையாள படுத்த முடியும். தொடர்ந்தும் தொல்லை தரக்கூடிய தொலைபேசி அழைப்புக்கள் வருமாயின் இவை நீங்கள் எடுத்துக் கொண்ட ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ள உதவும்.

(காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி ஆகக் கூடியது 7 மணிவரையும் தான் வர்த்தக ரீதியான அழைப்புக்கள் வரக்கூடும், அதற்குப் பிறகோ அல்லது முதலோ வருமாயின் அந்த அழைப்புக்களும் nuisance phone calls என்ற வரைமுறைக்குள் தான் வரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.