Sign in to follow this  
nedukkalapoovan

நான் வே**.. அவள்..??!

Recommended Posts

facebook-front_1796837b1.jpg

மாலை வேளை

மூளை ஓய்வுக்காய்..

முகம் கழுவிக் குந்துகிறேன்

முகநூலின் முன் பக்கம்..!

முக்கி எழுகிறது

முகநூல் "சாட்" யன்னல்...

Hi

ASL pls...

முகமறியா ஒன்று

கதை கேட்க..

நானும் ஏதோ பதில் போட

தொடர்கிறது...

Foto pls...

பதிலுக்கு நான்..

L8R

podi vesai....

திட்டிக் கொண்டே

மறுமுனை

யன்னல் மூடுகிறது..!

யோசிச்சுப் பார்க்கிறேன்..

புரோபைலில்

நடிகையின் முகம் காட்டும்..

என் முகவரிக்கே

இக் கதி என்றால்

உண்மையில்..

அவள்

கணக்கிற்கு...???!

:icon_idea: :)

Edited by nedukkalapoovan
அநாகரீகமாக எழுதப்பட்ட தலைப்பு மாற்றப்பட்டுள்ளது
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Foto pls...

பதிலுக்கு நான்..

L8R

podi vesai....

யோசிச்சுப் பார்க்கிறேன்..

புரோபைலில்

நடிகையின் முகம் காட்டும்..

என் முகவரிக்கே

இக் கதி என்றால்

உண்மையில்..

அவள்

கணக்கிற்கு...???!

உங்கள் பெரும்பாலான கவிதைகள், கவிதை தலைப்புக்கள் ஒரு மாதிரி தான் இருக்கு.... :unsure::icon_mrgreen: :icon_mrgreen:

அந்த முகம் தெரியாத நபருடனான உரையாடல் மூலம் அது ஒரு ஆண் என்று ஏன் சிந்திக்கவில்லை? :D(உங்களை பெண் என்று நினைத்து கதைத்திருக்கிறார்)...

ஆனால் அவரை இறுதியிலும் அவள் என்று போட்டிருக்கிறீர்கள். அதுதான் கேட்கிறேன். :)

பொதுவாக அனைவரும் முகம் தெரியாத நபர்களுடன் chat பண்ணுவதை தவிர்ப்பது நல்லது... :) யாழ் கள உறவுகளுடன் அதிலும் ஓரளவு நம்பிக்கைக்குரியவர்களுடன் chat பண்ணலாம். அவர்களும் தவறாக கதைப்பின் அவர்களுடனான chat ஐ கைவிடலாம். :wub:

ஆனால் வெளி நபர்களுடன் chat பண்ணாமல் இருப்பது தான் நல்லது... :)

Edited by காதல்

Share this post

Link to post
Share on other sites

என்ன தலைப்பு இது நீங்கள் கூட தற்பொழுது வியாபார ரீதியான தலைப்புகள் வைக்கத் தொடங்கி விட்டீர்கள்...சகிக்க முடியாத மாற்றம்...மெம் மேலும் இப்படிப்பட்ட தலைப்புகளை வைத்து கவிதை,கதை,கட்டுரை எழுத வாழ்த்துக்கள்

Share this post

Link to post
Share on other sites

கண்டவங்கள் எல்லாம் வந்து சாட்டிங் பண்ண ஏன் கதவைத் திறந்து வச்சிருக்கிறீங்கள்? :rolleyes: காற்று வரட்டும் என்றா? :icon_idea:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

உங்கள் பெரும்பாலான கவிதைகள், கவிதை தலைப்புக்கள் ஒரு மாதிரி தான் இருக்கு.... :unsure:

அந்த முகம் தெரியாத நபருடனான உரையாடல் மூலம் அது ஒரு ஆண் என்று ஏன் சிந்திக்கவில்லை? :D(உங்களை பெண் என்று நினைத்து கதைத்திருக்கிறார்)...

ஆனால் அவரை இறுதியிலும் அவள் என்று போட்டிருக்கிறீர்கள். அதுதான் கேட்கிறேன்.

பொதுவாக அனைவரும் முகம் தெரியாத நபர்களுடன் chat பண்ணுவதை தவிர்ப்பது நல்லது... யாழ் கள உறவுகளுடன் அதிலும் ஓரளவு நம்பிக்கைக்குரியவர்களுடன் chat பண்ணலாம். அவர்களும் தவறாக கதைப்பின் அவர்களுடனான chat ஐ கைவிடலாம். :wub:

ஆனால் வெளி நபர்களுடன் chat பண்ணாமல் இருப்பது தான் நல்லது... :)

இணையச் சமூகத்தில் கண்மூடித்தனமாக உலாவும் நடந்து கொள்ளும் ஜீவன்களை எப்படியான தலைப்பில் விபரிக்க முடியும்.. சகோதரி..!

ஒரு படத்தைப் பார்த்தவுடன்.. அதுவும் பெண்ணென்று பார்த்தவுடன்.. அவளோடு.. வலிந்து கதைக்க முண்டியடிக்கும் கூட்டங்கள் மத்தியில்.. உண்மையான அந்தப் படங்களுக்குரிய பெண்கள் சிக்கிக் கொண்டால் என்னாகும்.. என்பதை தான்.. "அவள்" என்பதால் விளித்துள்ளேன்..! :):lol:

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

என்ன தலைப்பு இது நீங்கள் கூட தற்பொழுது வியாபார ரீதியான தலைப்புகள் வைக்கத் தொடங்கி விட்டீர்கள்...சகிக்க முடியாத மாற்றம்...மெம் மேலும் இப்படிப்பட்ட தலைப்புகளை வைத்து கவிதை,கதை,கட்டுரை எழுத வாழ்த்துக்கள்

அக்கா.. சமூகத்தில் இப்படி அநாகரிகமாக நடக்கின்ற ஆக்கள் உள்ள போது.. அதை ஏன் நாகரிகமாக ஒளிச்சு வைச்சு அவங்க தப்புப் பண்ண அனுமதிக்கனும். அதைவிட.. அவங்கட அநாகரிகத்தை இனங்காட்டி மக்களை உசார்ப்படுத்துவது மேல் அல்லவா..!! மற்றும்படி.. இந்தத் தலைப்பில் வேறு எந்த வியாபார எண்ணமோ.. விளம்பர எண்ணமோ இல்லை..! :icon_idea:

கண்டவங்கள் எல்லாம் வந்து சாட்டிங் பண்ண ஏன் கதவைத் திறந்து வச்சிருக்கிறீங்கள்? :rolleyes: காற்று வரட்டும் என்றா? :icon_idea:

கதவு திறந்திருக்கு என்பதற்காக கண்ட வீட்டுக்குள்ளும் நுழையனும் என்றது என்ன இணையத்தின் எழுதாத சட்டமா...! உள்ள நுழையவிட்ட படியால் தான்.. என்ன பண்ணினம் என்று அறிய முடியுது..! இல்ல இதனை எல்லாம் எப்படி அறிஞ்சு கொள்ள முடியும். எப்படி தான்.. இந்த ஜென்மங்களை எல்லாம்.. இந்தப் பொண்ணுங்க சமாளிக்கிறாய்களோ..! :lol::icon_idea:

Share this post

Link to post
Share on other sites

ஒரு படத்தைப் பார்த்தவுடன்.. அதுவும் பெண்ணென்று பார்த்தவுடன்.. அவளோடு.. வலிந்து கதைக்க முண்டியடிக்கும் கூட்டங்கள் மத்தியில்.. உண்மையான அந்தப் படங்களுக்குரிய பெண்கள் சிக்கிக் கொண்டால் என்னாகும்.. என்பதை தான்.. "அவள்" என்பதால் விளித்துள்ளேன்..! :):lol:

ஆம். தவறு என்னுடையது தான். நீங்கள் சுட்டிக்காட்டிய பின்னர் தான் கவனித்தேன். மீண்டும் வாசிக்கும் போது புரிந்தது... நன்றி உங்கள் விளக்கத்திற்கு. :)

கண்டவங்கள் எல்லாம் வந்து சாட்டிங் பண்ண ஏன் கதவைத் திறந்து வச்சிருக்கிறீங்கள்? :rolleyes: காற்று வரட்டும் என்றா? :icon_idea:

:lol::D:lol:

chat பண்ணினாலும் தப்பான நோக்கத்தில் தான் கதைக்க வேண்டுமேன்றில்லையே... :) ஆனால் இப்பொழுது சமூகத்தில் ஒருபகுதியினர் அவ்வாறு அவ்வாறு மாறிவிட்டார்கள். :( :(

Share this post

Link to post
Share on other sites

நெடுக்கு பெண்களை வம்புக்கு இழுக்கிறது என்றால் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி?

Share this post

Link to post
Share on other sites

நெடுக் அண்ணா சற்றில் ஆண் என்று தெரியாத மற்றும் ஒரு ஆணிடம் அம்பிட்டவர் என்றால் என்னால் அதை முற்று முழுதாக நம்பிக் கொள்ள முடியாது இருக்கிறது..நெடுக் அண்ணாவுக்கு தெரியாத விசயங்களையா நாங்கள் புதுசா சொல்லப் போறம்..நல்ல வேளை நான் பல காலமாக சற் பக்கமே வாறது இல்லை..யாராவது கதைக்க வேணும் என்று கேட்டால் கூட மெயில் மூலம் என்ன கதைக்க வேணும் என்று முதலில் அறியத் தந்தால் மட்டுமே அதன் பின் என் கதை தொடரும்..ஓரளவுக்கு இப்படியான பிரச்சனைகளை தவிர்க்க வேணும் என்றால் எங்கள் அனுமதி இன்றி எங்கள் முகநூலில் விரும்பத்தகாத படங்களையோ இல்லை இன்ன பிற விசயங்களை போஸ்ற் பண்ணுவதை உடனடியாகவே நீக்குவதில் இருந்து அனைத்தையும் கொஞ்சம் கடுமையாக்கி விட்டோம் என்றால் நன்று...பெரியவர்கள் வாயிலயே இலகுவில் வராத,பேச விரும்பாத வார்த்தைகளை எல்லாம் தற்போது மிக,மிக இளம் வயதினர் பேசிக் கொள்கிறார்கள்...அவர்களின் உருவங்களை தேடிப் பார்த்தால் ரொம்ப சிரிப்பாக இருக்கும் ஆனால் பேசும் வார்த்தைகள் அசிங்கமாக இருக்கும்..

Edited by யாயினி

Share this post

Link to post
Share on other sites

இப்பவும் ASL கேட்டா chatting தொடங்குகின்றார்கள்? ^_^

ஒரு காலத்தில் IRC (Internet Relay Chat) இல் மணிக்கணக்காக நேரத்தைச் செலவழித்த trolls தற்போது இணையத்தின் சகல அதல பாதாளத்திலும் குடியிருக்கின்றார்கள்!

main-troll.jpg

Edited by கிருபன்

கிருபண்ணா.. இவ்வாறான செயல்களின் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஈடுபடுவதோடு.. ஆண்களை தவறான வழிக்கு இட்டுச் செல்லும் பெண்களின் செயற்பாடுகளும்.. இணைய உலகில்.. குறிப்பாக.. சமூக வலையில்.. பேஸ் புக்.. எம் எஸ் என்னில் அதிகரித்து வருகிறது. அதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்..! :icon_idea::)

Share this post

Link to post
Share on other sites

நெடுக்கு பெண்களை வம்புக்கு இழுக்கிறது என்றால் உங்களுக்கு அப்படி என்ன மகிழ்ச்சி?

உங்களுக்கு எப்பவுமே அருண்ட கண் தானா..??! இதில் இணையத்தில்.. பெண்களின் இடர் தொடர்பில்.. தானே கருப்பொருளை உருவகித்து தந்திருக்கிறேன். இதில் எங்கே வம்புக்கு இழுத்தேன் என்று சொல்ல முடியுமா அக்கா..??! :):lol:

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

முகம் தெரியாமல் முக்காடு போட்டு கதைக்கையில் ,

'சாட்' யன்னலில் முகம் காட்டியது ஆணாகவும் இருக்கலாம்.

Share this post

Link to post
Share on other sites

ஆணோ.. பெண்ணோ.. ஒரு நாகரிகமான மனித சமூகத்தை பிரதிநிதிப்படுத்த இணையம் தடையா..??! என்பது தான் கேள்வியே தப்பிலி..???! :):icon_idea:

Share this post

Link to post
Share on other sites

நெடுக் அண்ணா சற்றில் ஆண் என்று தெரியாத மற்றும் ஒரு ஆணிடம் அம்பிட்டவர் என்றால் என்னால் அதை முற்று முழுதாக நம்பிக் கொள்ள முடியாது இருக்கிறது..நெடுக் அண்ணாவுக்கு தெரியாத விசயங்களையா நாங்கள் புதுசா சொல்லப் போறம்..நல்ல வேளை நான் பல காலமாக சற் பக்கமே வாறது இல்லை..யாராவது கதைக்க வேணும் என்று கேட்டால் கூட மெயில் மூலம் என்ன கதைக்க வேணும் என்று முதலில் அறியத் தந்தால் மட்டுமே அதன் பின் என் கதை தொடரும்..ஓரளவுக்கு இப்படியான பிரச்சனைகளை தவிர்க்க வேணும் என்றால் எங்கள் அனுமதி இன்றி எங்கள் முகநூலில் விரும்பத்தகாத படங்களையோ இல்லை இன்ன பிற விசயங்களை போஸ்ற் பண்ணுவதை உடனடியாகவே நீக்குவதில் இருந்து அனைத்தையும் கொஞ்சம் கடுமையாக்கி விட்டோம் என்றால் நன்று...பெரியவர்கள் வாயிலயே இலகுவில் வராத,பேச விரும்பாத வார்த்தைகளை எல்லாம் தற்போது மிக,மிக இளம் வயதினர் பேசிக் கொள்கிறார்கள்...அவர்களின் உருவங்களை தேடிப் பார்த்தால் ரொம்ப சிரிப்பாக இருக்கும் ஆனால் பேசும் வார்த்தைகள் அசிங்கமாக இருக்கும்..

என்னவோ சொல்லுங்க.. நாட்டில நடக்கிறதை தான் நாங்க சொல்லுறம். அதற்காக இணைய உலகில் எல்லோரும் அநாகரிமானவர்கள் என்பதல்ல பொருள். குறிப்பிட்ட ஒரு தொகை அநாகரிகமாக நடந்து கொள்ள சந்தர்ப்பத்தைப் பாவிக்கிறது என்பதையே நாங்க சொல்ல வாறம் தங்கச்சி.

மற்றும்படி.. இந்த நிலையை சமாளிக்கிறதுக்கு நீங்க சொன்ன ஐடியாக்கள்.. உதவலாம். சிலர் அதைக் கூட தங்களின் அநாகரிகத்துக்குப் பயன்படுத்தலாம்..! இணையத்தில் இப்படித்தான் நடக்கனும் என்று யாரையும் கட்டுப்படுத்த முடியாது இது தான் சேவ் என்றும் இல்லை. இவற்றை உணரச் செய்து சுயகட்டுப்பாட்டை வளர்த்துத் தான் அங்கு பிள்ளைகளை.. வளர்ந்தோரை.. பெற்றோர் கூட உலவ விட வேண்டும். பெற்றோரும் உலவ வேண்டும். இன்றேல்.. விளைவு விபரீதமாகக் கூட இருக்கலாம். :):icon_idea:

Share this post

Link to post
Share on other sites

உங்களுக்கு எப்பவுமே அருண்ட கண் தானா..??! இதில் இணையத்தில்.. பெண்களின் இடர் தொடர்பில்.. தானே கருப்பொருளை உருவகித்து தந்திருக்கிறேன். இதில் எங்கே வம்புக்கு இழுத்தேன் என்று சொல்ல முடியுமா அக்கா..??! :):lol:

உங்கள் தலைப்பிலும் "அவள்" என்று போட்டிருக்கிறீர்கள்... உங்கள் கூற்றுப்படி உங்களையே அப்படி கூறிய அந்த ஆண் உண்மையில் அந்த படத்திற்குரிய பெண் சிக்கினால் அவரை எப்படி கூறியிருப்பார் என்று நினைத்து போட்டிருக்கலாம்.

ஆனால் ஒரு ஆணின் தவறை சுட்டிக்காட்டி எழுதிய கவிதையின் தலைப்பில் "அவள்" என்பதற்கு பதிலாக "அவன் செயல்" என்பதை போட்டால் இக்குழப்பம் தீரும் என்று நான் நினைக்கிறேன். :)

Share this post

Link to post
Share on other sites

உங்கள் தலைப்பிலும் "அவள்" என்று போட்டிருக்கிறீர்கள்... உங்கள் கூற்றுப்படி உங்களையே அப்படி கூறிய அந்த ஆண் உண்மையில் அந்த படத்திற்குரிய பெண் சிக்கினால் அவரை எப்படி கூறியிருப்பார் என்று நினைத்து போட்டிருக்கலாம்.

ஆனால் ஒரு ஆணின் தவறை சுட்டிக்காட்டி எழுதிய கவிதையின் தலைப்பில் "அவள்" என்பதற்கு பதிலாக "அவன் செயல்" என்பதை போட்டால் இக்குழப்பம் தீரும் என்று நான் நினைக்கிறேன். :)

"நான்" இருந்த இடத்தில் ஒரு பெண் இருந்து.. அவள் அப்பாவியாக இருந்திருந்தால்.. நிலை என்னவாக இருக்கும்.. என்பதுதான்.. தலைப்பின் வினவலே..!

இது இணைய உலகில் அநாகரிகம் செய்யத் தயங்காது அலைபவர்களை நோக்கி அல்ல.. அவர்களிடம் அப்பாவிகள் சிக்காமல் இருக்க எழுதப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தான் தலைப்பை அப்படி இட்டேன்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

Share this post

Link to post
Share on other sites

"நான்" இருந்த இடத்தில் ஒரு பெண் இருந்து.. அவள் அப்பாவியாக இருந்திருந்தால்.. நிலை என்னவாக இருக்கும்.. என்பதுதான்.. தலைப்பின் வினவலே..!

ஆம். அது எனக்கு புரிகிறது. :) பலருக்கு இன்னும் புரியாததால் அப்படி கூறியிருந்தேன். :)

Share this post

Link to post
Share on other sites

அது போக.. யாழ் கவிதாயினிக்கே.. தலைப்புப் புரியல்ல என்பது தான்.. ஆச்சரியமா இருக்குது..??! :lol::D

Share this post

Link to post
Share on other sites

முகப்புத்தகம்

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும்

அனுமதி வழங்கும் புத்தகம்! ^_^

Share this post

Link to post
Share on other sites

முகப்புத்தகம்

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும்

அனுமதி வழங்கும் புத்தகம்! ^_^

முகப்புத்தகமா அல்லது முகப்புத்தகத்திலுள்ள chat ஆ? :unsure:

ஏனென்றால் ஒருவரின் கொள்கை பிடித்திருந்தால் அவர்களை add பண்ணுவதில் தவறில்லை. ஆனால் chat பண்ணுவது தான் தவறு. :icon_mrgreen:

என் முகப்புத்தகத்தில் நான் நண்பராக இணைத்துள்ள எவரையும் ஒருநாளும் நான் சந்தித்ததில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் நான் அவர்களின் ரசிகையாக இருப்பதால் இணைத்துள்ளேன். எனவே சில பிரபலங்களை நண்பராக இணைப்பதற்கும் facebook தான் வழி.

அவர்கள் போக்கு தவறாக சென்றால் block பண்ண வழியிருக்கிறது. :D(பிறகும் விட்டிட்டிருந்தால் எம்மில் தான் பிழை :icon_mrgreen::D)

அதற்காக கண்டவர்களையும் add பண்ண கூடாது. :lol: :lol:

Share this post

Link to post
Share on other sites

முகப்புத்தகம்

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும்

அனுமதி வழங்கும் புத்தகம்! ^_^

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் முகப் புத்தகம் என்ற நிலை இல்லை. முகப் புத்தகம்.. சமூக வலை அமைப்பிற்கு என்றும் அமைக்கப்பட்ட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. நான் அதற்காகவே தான் முகப்புத்தகம் வைத்துள்ளேன். முகம் தெரிந்தவர்களோடு.. போனில் கதைத்துக் கொண்டாலே.. பிரச்சனை வராதே..!

சமூக வலை என்பது.. எங்கள் கருத்தை.. நிகழ்வுகளை மற்றைய சூழலில் வாழும் சமூக அங்கத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதேவேளை.. அவர்களின் விடயங்களையும் பொதுவான நட்புறவோடு.. அறிந்து கொள்ளுதல். இது உலக அறிதலை விரிவாக்கும்.

இப்படியான சமூக வலையில்.. உள்நுழையும்.. கிருமிகளாகவே தான்.. இந்த அநாகரிக விசமிகள் உள்ளனர். அவர்களை அவர்களின் அணுகுமுறைகள் தொடர்பில் இனங்காட்டி.. மக்களை விழிப்புணர்வு படுத்துவதன் மூலம் சமூக வலை.. விசமிகள் குறைக்கப்பட்ட ஒரு காத்திரமான வலைப்பின்னலாக பேணப்பட வாய்ப்பு உருவாகும் இல்லையா..??!

ஆனால் ஒன்று விசமிகளை பூரணமாக கட்டுப்படுத்த முடியாது. காரணம்.. விசமிகள்.. சந்தர்ப்பதிற்கு ஏற்ப தோன்றக் கூடியவர்கள்..! அந்த வகையில் சமூக வலையில் விழிப்புணர்வு என்பது எப்போதும் அவசியம்..! :):icon_idea:

Share this post

Link to post
Share on other sites

உங்கள் சமூக அக்கறைக்கு நன்றி நெடுக்கு

ஆனால் இதை வேறு ஒருவர் பதிந்திருந்தால்

இந்தளவுக்கு கருத்துக்களில் காரம் வந்திருக்காது என்பது எனது கருத்து.

அந்தளவுக்கு பெண்கள் பற்றிய கருத்துக்களில் நெடுக்கு தாழ்வடைந்துள்ளது தெரிகிறது.

ஆனாலும் அவரது கருத்துக்கள் சமூக நன்மை கருதி எழுதப்படுவதால் சிலவற்றை சகிக்க முடியாவிட்டாலும் ஏற்கவேண்டியுள்ளது.

எனக்கும் அம்மம்மா

அம்மா

அக்கா

தங்கை

மனைவி

மருமக்ககள்

பிள்ளைகள்......... என்று இருப்பதால் அதற்கு இருக்கும் வரம்புக்குள்தான் நானும் நிற்கமுடியும். எழுதமுடியும்.

அந்த வகையில் நெடுக்கு வெளியில் நிற்கிறார். அவ்வளவுதான்.

அது அவரது சுதந்திரம்.

Share this post

Link to post
Share on other sites

இணையதளங்களில், 'சாட்' என்ற ஆபத்தான வலையில், சில விபத்துக்களும், அதிர்ச்சிகளும் அடிக்கடி ஏற்படுவதை கேள்விப்பட்டுள்ளேன்...

அவற்றில் கீழே இணைத்துள்ள காணொளி மாதிரியும் அமைய சந்தர்ப்பங்கள் உண்டு..! :icon_idea:

கவனம்!...கவனம்!! :lol:

.

Share this post

Link to post
Share on other sites

முகப்புத்தகமா அல்லது முகப்புத்தகத்திலுள்ள chat ஆ? :unsure:

ஏனென்றால் ஒருவரின் கொள்கை பிடித்திருந்தால் அவர்களை add பண்ணுவதில் தவறில்லை. ஆனால் chat பண்ணுவது தான் தவறு. :icon_mrgreen:

என் முகப்புத்தகத்தில் நான் நண்பராக இணைத்துள்ள எவரையும் ஒருநாளும் நான் சந்தித்ததில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் நான் அவர்களின் ரசிகையாக இருப்பதால் இணைத்துள்ளேன். எனவே சில பிரபலங்களை நண்பராக இணைப்பதற்கும் facebook தான் வழி.

அவர்கள் போக்கு தவறாக சென்றால் block பண்ண வழியிருக்கிறது. :D(பிறகும் விட்டிட்டிருந்தால் எம்மில் தான் பிழை :icon_mrgreen::D)

அதற்காக கண்டவர்களையும் add பண்ண கூடாது. :lol: :lol:

முகப்புத்தகத்தைத் தான் குறிப்பிட்டேன்...

சில பிரபல்யங்களின் பக்கங்களை like பண்ணுவது வேறு, அவர்களை add பண்ணுவது வேறு...

நீங்கள் online ல் இருப்பது உங்கள் (நீங்கள் யாரைத் தெரிவு செய்கிறீர்களோ அவர்களை மட்டும் தவிர) நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கவும் முகப்புத்தகத்தில் option உள்ளது என நினைக்கிறேன்.

எனது இயற்பெயரிலையே முகப்புத்தகக் கணக்கு வைத்திருப்பதாலும், தனிப்பட்ட தரவுகள், குடும்ப/ நண்பர்களின் படங்கள் இருப்பதாலும் முகம் தெரிந்தவர்களை மட்டுமே நான் சேர்த்துள்ளேன். இது எனது பாதுகாப்பை மட்டுமன்றி அவர்களின் பாதுகாப்பையும் ஓரளவு உறுதிப் படுத்தும்.

பொதுவான ஒரு புனைபெயரில் கணக்குவைத்துக் கொண்டு பிரபல்யங்களை/ முகம் தெரியாதவர்களைச் சேர்ப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து!

முகம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் முகப் புத்தகம் என்ற நிலை இல்லை. முகப் புத்தகம்.. சமூக வலை அமைப்பிற்கு என்றும் அமைக்கப்பட்ட சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது. நான் அதற்காகவே தான் முகப்புத்தகம் வைத்துள்ளேன். முகம் தெரிந்தவர்களோடு.. போனில் கதைத்துக் கொண்டாலே.. பிரச்சனை வராதே..!

சமூக வலை என்பது.. எங்கள் கருத்தை.. நிகழ்வுகளை மற்றைய சூழலில் வாழும் சமூக அங்கத்தவர்களோடு பகிர்ந்து கொள்ளும் அதேவேளை.. அவர்களின் விடயங்களையும் பொதுவான நட்புறவோடு.. அறிந்து கொள்ளுதல். இது உலக அறிதலை விரிவாக்கும்.

இப்படியான சமூக வலையில்.. உள்நுழையும்.. கிருமிகளாகவே தான்.. இந்த அநாகரிக விசமிகள் உள்ளனர். அவர்களை அவர்களின் அணுகுமுறைகள் தொடர்பில் இனங்காட்டி.. மக்களை விழிப்புணர்வு படுத்துவதன் மூலம் சமூக வலை.. விசமிகள் குறைக்கப்பட்ட ஒரு காத்திரமான வலைப்பின்னலாக பேணப்பட வாய்ப்பு உருவாகும் இல்லையா..??!

ஆனால் ஒன்று விசமிகளை பூரணமாக கட்டுப்படுத்த முடியாது. காரணம்.. விசமிகள்.. சந்தர்ப்பதிற்கு ஏற்ப தோன்றக் கூடியவர்கள்..! அந்த வகையில் சமூக வலையில் விழிப்புணர்வு என்பது எப்போதும் அவசியம்..! :):icon_idea:

அதிகமானோர் தொலைபேசியில் பேசுவதை விட முகப்புத்தகம் மூலமே தமது நண்பர்களோடு தொடர்பு வைத்திருப்பதாக கடந்த வருடம் நடந்த ஒரு ஆய்வில் கூறப்பட்டிருந்தது...

ஒரு நல்ல நோக்கத்திற்காக ஒரு குழுவாக சேர்ந்து பரப்புரைகளை செய்பவர்கள் விசக்கிருமிகளாக இருக்க வாய்ப்புக்கள் குறைவென்றே சொல்லலாம்.. முகம் தெரியாத தனிப்பட்டவர்களைத் தான் இங்கே நான் குறிப்பிட்டேன், அவர்களின் உள்நோக்கம் நாம் நினைப்பது போல் இருக்க முடியாதல்லவா?

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
Sign in to follow this