Jump to content

தெரிந்தவர்கள் கூறுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திணிக்க எண்டு வருதில்ல.

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த படத்தை பார்க்கும் பல கேள்விகள் எழுகின்றது. முதலில் போக்குவரத்து குற்றங்களை கண்டுபிடிப்பதற்து தனியாக பொலீஸ் பிரிவு உள்ளதென்று தான் எண்ணத் தோன்றுகிறது. முதலில் படத்திலுள்ள ஜீப்பில் காவல்துறையினர் பிரயாணித்து வீதி ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பது நடக்காத விடயம். அப்படி செய்ய புலிகளிடம் போதுமானளவு வாகனங்களோ அல்லது தேவையோ இல்லை. போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொலீசார் அதிகம் மோட்டார் சைக்கிளில் தான் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்று நினைக்கிறேன். அப்படியாயின் அந்த வாகனத்தில் செல்லும் பொலீசார் வேறொரு தேவைக்காக செல்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் இவர்களை மறித்து தண்டிப்பார்கள் என்று எண்ண முடியாது. அத்துடன் அந்த வாகனத்தில் பின்னுக்கு நான்கு போலீசார் ஆயுதங்களுடன் இருக்கின்றனர். அவர்கள் என்ன தேவைக்காக செல்கிறார்களோ தெரியாது. அப்படியாயின் வீதிக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் காவல்துறைக்கு ஆயதம் எதற்கு.

இன்னுமொன்று படம் எடுத்த காலப்பகுதியையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இந்த படத்தை யுத்த நிறுத்த காலப்பகுதிக்கு முன்பு எடுத்திருந்தால் அப்போது தலைக்கவசம் அணிய வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அப்போது அதிகளவு வாகன நெருக்கடி வன்னியில் இல்லை. தற்போது தான் வன்னியில் அதிகளவு வாகனவிபத்து ஏற்படுகின்றது. அதனால் தான் வேகக்கட்டுப்பாட்டை கடுமையாக அமுல் படுத்துகிறார்கள். யுத்த காலத்தில் பொது மக்கள் எவரும் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செலுத்தியதை நான் பார்க்கவில்லை.

இறுதியாக எனக்கு இந்த படத்தை பார்த்தபோது எவ்வித ஆச்சரியமோ அல்லது ஒன்றுமே புரியாமலோ போகவில்லை.

அப்படி ஏற்படுவதற்கு இந்த படத்தில் எதுவித காட்சிகளும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்திய பதிலொண்டில "வெண்ணிலா"வின்ர கருத்தைச் சொல்லேக்கஇ 'தமிழினி' எண்டு வந்திட்டுது. இப்ப திருத்தியிருக்கிறன். தவறுக்கு மன்னிப்பும் கேக்கிறன். தெரியப்படுத்தின ஆக்களுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி எண்டு சொல்ல வந்தேன். நன்றியத் திண்டுபோட்டுது பக்கம்.

Link to comment
Share on other sites

சும்மா உந்த நம்பர் பிளேட் பிரச்சினைக்காக ஒருதரும் புடுங்குப்படாதையுங்கோ. நான் வடிவா எல்லாம் விசாரிச்சுப்போட்டன். உதுகள் என்னண்டா எல்லாம் புதுசா வாங்கின வாகனங்கள். உதுகளுக்கு உந்தப் படம் எடுக்கிற நேரம்

நம்பர் பிளேட் வரேல்லையாம். படத்துக்காண்டி சும்மா ரோந்திலை

விட்டதாம். ஆனால் இப்ப எல்லாத்திற்கும் நம்பர் புூட்டியாச்சாம் எண்டு காவல்துறை வட்டாரங்கள் சொல்லுது. இது ஊரிலை இருந்து வாற உண்மைத் தகவல் மிகவிரைவிலை இதை உறுதிப்படுத்த ஊர்க்குருவி நம்பர் பிளேட்டோடை படங்களை இறக்கிவிடும் பாருங்கோ.....

Link to comment
Share on other sites

நீர் Adobe PhotoShop ஆலை நம்பர் பிலோட் பூட்டேல்லை எண்டதுக்கு என்ன உத்தரவாதம்?

குறை நினைக்காதையும் ஜனநாயகம் எண்டால் உப்படியான வலது குறைஞ்ச கேள்வியள் வரத்தான் செய்யும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7 பக்கங்களை அடைந்தும் உம்மைப்போன்றவர்களால் ஒரு முடிவான விளக்கத்iதை தரமுடியாமல் உள்ளதே. இதிலிருந்த தெரியவில்லலையா யார் முட்டள் என்று?

****, அறிந்த தெரிந்த விளக்கத்தை எல்லாரும் தந்தாச்சு அதுக்கு பிறச்கும் விளக்கம் வேணும் எண்டு பினாத்துறது ஏன்.? மேலதிக விளக்கம் வேணும் எண்டால் வன்னிக்கு போய் கேக்கவேண்டியதுதானே. அதை விட்டுட்டு இங்கை வந்து முட்டையில புடுங்குறீர்கள். காவல்த்துறை ஆணையாளர் இங்கயே இருக்கார்.?

மேலை நாடுகளில் சைக்கிளில் போனாக்கூடத்தான் ஹெல்மெட் போட வேணும் அதுக்காக ஈழத்திலையும் போடவேணுமே.? ஈழத்தில மட்டும் எல்லாம் முறையா நடக்கவேணும். விட்டுக்குடுப்பு இருக்க கூடாது. ஆனா நீங்கள் ஊருக்கு ஒண்டும் செய்யமாட்டியள், அவயள் செய்யிறதில மயிர் புடுங்க நில்லுங்கோ.

இதையே அங்கு ஹெல்மெட் கட்டாய சட்டம்போட்டாங்கள் எண்டு தெரிஞ்சா ஐயோ மக்கள் எவ்வளவு கஸ்ரப்படுகுதுகள். உயிருகே பாதுகாப்பு இல்லாமல் ஆமிக்காறன் சுடுகிறான் அதை தடுக்கிறதை விட்டுட்டு தலையை காப்பாத்தி என்ன செய்ய எண்டு புசத்துற கூட்டத்தில ஒண்டுதானே நீர் உமக்கு விளக்கம் தேவைதான்.

**** நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாகன இலக்கத்தகட்டை வச்சு வாகன எண்ணக்கை தெரியுமெண்டதுக்காக அதைக் கழட்டிப்போட்டு படமெடுத்ததெண்ட புருடாவெல்லாம் கேக்க நல்லாத்தானிருக்கு. ஏனுங்கோ! அப்ப வன்னியில அந்த வாகனத்தை இலக்கத்தகட்டோட பாக்கிறவனுக்கு உதொண்டும தெரியாதோ? குறைந்தபட்சம் காவல்துறை இலக்கத்தகடே அணியிறேல எண்டாவது ஒரு கதை சொன்னா அதில ஞாயமிருக்கு. .

கனக்க அலம்புறீர் உம்மால ஏலும் எண்டால் புலிகள், காவல்த்துறை எவருடைய வாகனங்களின் படத்தையாவது இலக்க தகடுடன் காட்டும் பாப்பம்.

தாயகத்தில் இருந்து வெளியிடப்படும் நிர்வாக வாகனங்களின் படங்கள் எவையிலும் இலக்க தகடுகள் வராது வருவது இல்லை. இது தெரியாமல் வந்திடுவியள் இங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொன்று படம் எடுத்த காலப்பகுதியையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இந்த படத்தை யுத்த நிறுத்த காலப்பகுதிக்கு முன்பு எடுத்திருந்தால் அப்போது தலைக்கவசம் அணிய வேண்டிய தேவை இல்லை.

ஹெல்மெட் போடும்போது வெளியில் இருந்து வரும் சத்தங்களை தெளிவாக கேட்டக முடியாது வானத்தில் இலங்கை அரசாங்கத்தில் யுத்த விமானங்கள் வந்தால் கேட்டு அறியவும் முடியாது. தர்பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது. இதுகளை எல்லாம் சீர்துக்கிப்பாத்து ஹெல்மெற் கட்டாயம் போடவேண்டும் எண்ற சட்டத்தை கொண்டுவரக்கூடாது எண்டு தான் சொல்லவேணும்.

பிறகுயார் அனியாயமாய் குண்டு விளுந்து சாகிறது. இங்க இருக்கிற சிலதுகள் உயிர் மசிர் போலத்தானே போனப்போகட்டும் எண்டு ஆடுதுகள்.

ஈழத்தில இருக்கிற C90 சுப்பர் கப் மேட்டார் சைக்கிள்கள் 50Km வேகத்துக்கும் குறைவாகத்தான் ஓடக்கூடியவை அவைதான் அங்க அதிகமாக இருக்கு. CG125, பள்சர் ஹீரோ கொண்டா, 200, எல்லாம் பெடிதரவளியை வைச்சிருக்குதுதான் ஆனால் குறைவு. ரோட்டு சரி இல்லாததால A9 பாதையை தவிர வேற எங்கயும் வேகமா ஓட ஏலாது. அங்கு காவல்த்துறையின் கெடுபிடி அதிகம் எண்டதால சனம் வேகமாக ஓடுறது இல்லை. ஆகவே ஹெல்மெட் தேவையும் இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.