Jump to content

பாலியல் வன்புணர்வு செய்ததா இந்திய ராணுவம்?: ஜெயமோகனின் கேள்வி


Recommended Posts

என்னைப்பொறுத்தவரை

நீங்களும் நானும் ஒரே ஊர்தான். :icon_idea:

இருக்கலாம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது . ஏனெனில் மன்னிக்க முடியாத பொறுக்க முடியாத விடயங்களை கூட விட்டு கொடுத்து போகிறீர்களே . இந்த பெருந்தன்மை எங்க ஊரு ஆளுகளுக்கு மட்டுந்தேன் வரும் . ஐடியா மஞ்சி வாண்டுதேன் .எனினும் பிறந்தது ஒரு ஊராகிலும் பல ஊர்களை சுற்றுவதால் பல மனங்களுடன் பழகுவதால் மண் மனம் என்பது கொஞ்சம் கம்மி . மேலும் எனது கருத்துகளை கொஞ்சம் ஓவராகவே பிறர் மீது திணிப்பேன் .என் நண்பர்கள் டேக் இட் ஈஸி என எடுத்துகொள்வார்கள். எனது வட இந்திய நண்பர்கள் உட்பட. அனைவரும் அப்படியே இருக்கணும்னு நினைக்கிறதுல தான் என் பிரச்சினையே ஆரம்பம் ஆகுது .

நான் பீலா உடல உண்மைய சொல்லுறேன் . இது வரை குறைந்தது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு நான் தமிழ் எழுத படிக்க கற்று கொடுத்து இருக்கிறேன் . ( பொருள் புரியாது . ஆனால் படிக்க எழுத முடியும் ) . அதுவும் ஒரே வாரத்தில்.

ஈழ பிரச்சினைகளை புரிய வைத்து இருக்கிறேன் . அவ்வப்போது அவர்கள் எழுப்பும் கேள்விகளை வைத்து தான் நான் யாழ் களத்தில் சண்டையை ஆரம்பிக்கிறேன்

Link to comment
Share on other sites

  • Replies 174
  • Created
  • Last Reply

எனக்கு ஒரு பழக்கம் இருக்கு உண்மைய சொல்லிடறேன் . முதலில் திண்ணைக்கு போவேன் . அங்க hi என ஒரு தட்டு தட்டுவேன் . யாரும் பதில் கொடுக்கலன்னா வீரம் வந்து ( யாருமில்லை எனும் தைரியத்தில் ) திரி எல்லாத்துக்கும் பதில் இடுவேன் . ஆனால் மறைந்து இருந்து தாக்கும் கொரில்லா போல ஈழ உறவுகள் அட்டாக் பண்ண ஆரம்பிப்பாங்க . நம்ம பொழப்பு நாறிடும் . இந்த நேரம் பார்த்து ஒப்புக்கு கூட சப்போர்ட் பண்ண யாரும் வர மாட்டாங்க . தனியாவே களமாட வேண்டி இருக்கு . எவ்வளவு நேரந்தான் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.திடீர்னு கோபம் வந்து ஏதாவது எழுதிடுவேன் . அப்புறம் மனசு வேதனை படும் .. எனக்கு இதே பொழப்பா போச்சு

அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்

புன்மையால் காணப் படும். 185

Link to comment
Share on other sites

1987 - 1990

IPKF = Indian People Killing Forces

இந்திய இராணுவம் அப்பாவி மக்களை கொன்றழிக்கத்தயங்காத ஓர் கொலைகாரகூட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ பிரச்சினைகளை புரிய வைத்து இருக்கிறேன் . அவ்வப்போது அவர்கள் எழுப்பும் கேள்விகளை வைத்து தான் நான் யாழ் களத்தில் சண்டையை ஆரம்பிக்கிறேன்

புரிந்து கொண்டேன்.எம்முடன்தானே நீங்கள் பட்ட கடிகளை தூக்கிப்போடமுடியும். அதுவும் உரிமையோடு.

நன்றி சகோதரா.

Link to comment
Share on other sites

எனது தந்தையையும் சகோதரியையும் இந்திய இராணுவமே படுகொலை செய்தது அதுபற்றி 2009 ம் ஆண்டு ஒரு பேப்பரில் நான் எழுதிய பதிவு ஜெயமேகனிற்கு சமர்ப்பணம்.இதனை யாழிலும் இணைத்திருந்தேன் இப்பொழுது காணவில்லை

கீழே உள்ள இணைப்பில் அழுத்தி படிக்கலாம்

http://sathirir.blog...og-post_15.html

Link to comment
Share on other sites

எனது மாமா ஒருத்தர் கொழும்பிலிருந்து யாழுக்கு வந்து வீட்டின் அறையில் உடை மாற்றிக்கொண்டிருக்கும்போது ஜன்னலூடாக சுட்டுக்கொல்லப்பட்டார்.. காரணம் இந்திய ராணுவம் விரட்டிக்கொண்டு வந்த புலி தப்பிவிட்டது.. கண்ணில் பட்ட இவரைப் போட்டுத் தள்ளிவிட்டார்கள்..!

அவரவர் தங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.. தமிழ்ப்பைத்தியத்திற்கு ஓரளவு புரிய வைக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அன்ரியின் மூத்த மகனை 18 வயதாக இருக்கும் போது இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்டு இரு கண்களையும் பிடிங்கி ஜீப்பில் கட்டி இழுத்து இறந்தபின்னும் மிகவும் கொடுமைகளை புரிந்திருக்கின்றனர்.

அதைவிட பல உறவுக்காரர்களும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

சாத்திரியின் குடும்பத்திற்கு நடந்த இழப்பு இப்போ வாசித்துத்தான் அறிந்தேன் ,மிகவும் கஷ்டமாக இருந்தது .எனது அப்பா மாத்திரம் தான் அப்போ ஊரில் இருந்தார் .டிப்போவடியில் இருக்கும் அக்கா வீட்டில் அப்பா இருக்கும் போது இந்தியன் ஆமி வந்து அந்த பிரதேசத்தில் மாத்திரம் அறுபது பெயர்கள் வரை சுட்டுகொண்டார்கள் .பலர் எமது உறவினர்கள் .

அப்பாவிற்கு அந்த நினைவுகள் இன்னமும் போகவில்லை ,அதுவும் நேர்முன் வீட்டில் கணவன்-மனைவி( இருவரையும் சுட்டு மனைவி காயத்துடன் பலதூரம் இழுபட்டு போயிருக்கின்றார் .அவர்களின் மகனும் பின் புலிகளில் இணைந்தார் .இப்போ இங்கு இருக்கின்றார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ வண்டி லேசா ரூட்டு மாறுது . ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் .

இந்திய ராணுவம் தவறே செய்ய வில்லை என்று இங்கு யாருமே வக்காலத்து வாங்கவில்லை . முதலில் இதை புரிந்து கொள்ளுங்கள் . மேலும் அது எந்த நாட்டின் ராணுவமாக இருந்தாலும் மனித உரிமைகள் மீறலும் பாலியல் துன்புறுத்தலும் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய ராணுவம் ஆகாயத்தில் இருந்து குதித்தது என்றும் யாரும் சொல்ல வில்லை .

உண்மையில் இந்திய ராணுவம் செய்து இருந்தால் கூட என்ன செய்தது என்பதை மிகை படுத்தாமல் கூறுங்கள் என்று தான் கூறுகிறேன் .

உலகின் சக்தி வாய்ந்த அமெரிக்க ராணுவத்தின் தவறுகளையே மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டி காட்டி போராடுகின்றனர். பிறகு ஏன் எந்த மனித உரிமை இயக்கங்களும் அமைதி படை குறித்து வாயை திறப்பதில்லை ????? தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் மனித உரிமை குழுக்கள் என பெயர் வைத்துகொண்டு தப்பு தப்பாய் பேசும் சில குழுக்கள் மட்டுமே உளறுகின்றன.

மார்பில் கை வைத்ததை தமிழ் ராணுவ சிப்பாய் கண் கலங்கியதாக கூறுகிறீர்களே . குறைந்த பட்சம் அவரின் அடையாலங்களையாவது கூறலாமே ....

எந்த தமிழ் ராணுவ வீரனும் இவ்வாறு நடந்ததாக கூறவில்லை. மேலும் தமிழ் ராணுவ வீரர்கள் சிங்கள மக்களை தாக்கியதாகவும் சிலர் குற்ற சாட்டுகளை முன் வைத்துள்ளனர். ஏனெனில் இங்கு இந்தியாவில் வெள்ளை வானோ சிறை பயமோ கிடையாது . குறைந்தது ஓய்வு பெற்ற தமிழ் ராணுவ வீரர்கள் கூட இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் கூறவில்லையே . ஓஹோ அப்படியென்றால் உங்களின் கூற்றுப்படி இந்திய ராணுவத்தில் அதிகமாக உள்ள எங்கள் நாட்டை காக்கும் தமிழனும் கூட உங்களின் பார்வையில் ...................... உடனே ஒரு பதில் வரும் பாருங்கள் ( இந்திய ராணுவத்தை தான் வெறுக்கிறோம் . அதில் வேலை செய்யும் தமிழ் வீரர்களை அல்ல என்று )

யாழ்ப்பாண மருத்துவமனையில் இந்திய ராணுவம் தவறு செய்திருக்கிறது . அதனால் வெளியே சாட்சிகளோடு வெளிவந்து இருக்கிறது . கற்பழிப்பை விட்டு தள்ளுங்கள் . கொத்து கொத்தாய் அரிவாள் கொண்டு இந்திய ராணுவம் கொலை செய்ததாக கூறுகிறீர்களே . அவர்களின் பெயர் மற்றும் ஆதாரங்களோடு வெளியிடலாமே ????

.

ஆக உங்களுடைய இந்தக்கருத்தை வாசிக்கும்போது உங்களுக்கு எங்களுடைய கருத்துக்களில் ஏகப்பட்ட அவநம்பிக்கை மட்டுமே இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் அப்படித்தானே…. உங்களிடம் ஒரு கேள்வி உங்களுடைய தாயை அல்லது சகோதரியை அல்லது மனைவியை பல காமுகர்கள் நிர்வாணப்படுத்தி பாலியல் வன்புணர்வை மேற்கொண்ட பின்னர்…. அவளை உலகின் முன் பலரும் பார்க்கத்தக்கவகையில் அவள் சீரழிக்கப்பட்டது எப்படி என்று சொல்லும்படி நீங்கள் சொல்வீர்களா? இல்லாவிட்டால் நீங்கள் தன்னும் என்னுடைய மனைவியை அல்லது காதலியை அல்லது சகோதரியை, அம்மாவை இராணுவம் சிதைத்துவிட்டது என்று பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து அவர்களின் படங்களை இணைத்து வெளிக்காட்டிக் கொள்வீர்களா? பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வரவில்லை என்பதற்காக அப்படி எதுவுமே நடைபெறவில்லை என்று அர்த்தம் ஆகிவிடாது….

சமீபத்தில் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற அவலங்கள் போன்று நாம் ஏற்கனவே 87 இலிருந்து 90களின் முற்பகுதிவரைக்கும் பரவலாக சிறிது சிறிதாக நிறையவே இராணுவ வதைகளை அனுபவித்திருக்கிறோம். அமைதிப்படை என்ற முகமூடியுடன் எங்கள் நிலத்தில் ஒரு ஆக்கிரமிப்புப் படையைத்தான் நாம் சந்தித்தோம். இந்தியாவிற்கு எதிரான விரோதப்போக்கை முள்ளிவாய்க்கால் வரை நாம் எவரும் கடைப்பிடிக்கவில்லை அப்படிக் கடைப்பிடித்திருந்தால் என்றோ இந்தியத்தின் கோரப்பற்களை உலகிற்கு எடுத்துவந்திருப்போம். நட்புவேண்டியும், உறவுவேண்டியுமே இந்தியாவிற்கு எதிராக எங்கள் நிலைகளை உருவாக்கிக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டு உறவுகளும் நாங்களும் மொழியால் பண்பாட்டால் வேர் குலுக்கி உள்ளவர்கள். இந்தியாவுடனான எங்களின் உறவு என்பது சிங்களத்துடன் எமக்கு ஏற்படாத நெருக்கத்தை உடையது. அப்படித்தான் கடந்த மூன்றாண்டுகள் முன்பு வரை இருந்தது. ஆனால்’ இப்போது எங்களுக்கான உறவு தமிழ்நாட்டோடு மட்டுமானதாகவே இருக்கவேண்டும் என்ற அவா மட்டுமே எங்களிடம்

அதென்ன கேள்வி தமிழ்நாட்டு இராணுவத்தினனை அடையாளம் கூறக் கேட்டிருந்தீர்கள்…தெரியாமல்தான் கேட்கிறேன் பெண்கள் மீதான பாலியல் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படும் ஒரு தருணத்தில் தமிழ்நாட்டு வீரன் ஓருவன் தலை குனிந்த நிலையில் கண்கலங்கிய அத்தருணத்தில் அவனிடம் போய் அவனுடைய முகவரியையா கேட்டு வைத்திருக்க முடியும்? தன்னைத் தமிழனாக காட்டிக் கொண்ட அந்தச்சிப்பாய் ஒரு இராணுவகடைநிலை சிப்பாய் சிறப்புப் படையணிகள் அட்டூழிங்களை மேற்கொள்ளும் இடத்தில் காவலுக்கு நிற்கும் ஒரு கையாலாகாத நிலையில் உள்ள தன்னால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லி கண்கலங்கியது மட்டும்தான் அவனைப்பற்றிக் கூறக்கூடிய அடையாளம். இதை வைத்து உங்களால் கண்டு பிடிக்க முடியுமென்றால் கண்டு பிடியுங்கள்.

எனது சிக்னேச்சர் பகுதியில் ஒரு வாசகம் இணைக்கப்பட்டிருக்கிறதே கவனித்தீர்களா

“மனைகளின் முகப்புக்களையே மயானங்கள் ஆக்கி சிதைகளை மூட்டிய வரலாறு எமக்குண்டு”

இந்த வாசகம் பொய்யானது இல்லை. இந்த வாசகத்தை எமக்கு அளித்த பெருமை இந்திய இராணுவத்திற்கே உரியது. வெளியே வேலையாக சென்ற எனது தந்தையின் முழங்காலில் சுட்டு கெந்தித்திரியவைத்த்தும், எனது தமையனை மிகக் கோரமான சித்ரவதைகள் செய்து சிறையில் அடைத்ததும். எனது அயலவரை சுட்டுக் கொன்றதும், எனது பெரிய்ய்யாவையும், சின்னய்யாவையும், அப்பாச்சி கண்ணெதிரே சுட்டுக் கொன்றும் தடுக்க எத்தனித்த 70 வயது கிழவியை சுட்டுதுடிதுடித்து மூனறு நாட்களாக வைத்திய உதவி இல்லாமல் ஊரையே பிணங்களால் புழுக்க வைத்த்தும், எனது பெரிய்ய்யாவின் , சினய்யாவின் புழுத்த பிணங்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் ஊரையே பிணக்காடாய் ஆக்கி, ஒப்பாரி வைக்கவும், ஒரு கையணைக்கவும் எவரையும் அனுமதிக்காமல் இந்திய இராணுவம் ஊழிக்கூத்தாடிய அத்தருணத்தில் எனது பெரியம்மாவும், அத்தையும் வீட்டின் முகப்பிற்கு அருகிலேயே நெஞ்சாங்கட்டை போடாமல் கணவனின், சகோதரனின் பிணத்தை எரியூட்டியதும்… குழந்தை பெற்றே மூன்று மாதங்கள் ஆன ஒரு நாலு பிள்ளைகளை உடைய இளம்பெண்ணை அம்மணமாக தலைமுடியில் பிடித்து கதறக்கதற ரோட்டில் நடக்க்க்கூட விடாமல் இழுத்தும் அவளின் பால் சுரக்கும் தாய்மைத்தனங்களில் சப்பாத்துக் கால்களால் ஏறி மிதித்து உழக்கியும் அந்தத்தனங்களின் சிதைவில் உதிரமும் பாலும் பீய்ச்சி அடிக்க அவள் கதறி துடித்த்தும் இப்போது நினைத்தாலும் ஈரக்குலை நடுங்கிப் போகிறது… இது மட்டுமில்லை இன்னும் நிறையச் சங்கதிகள் உண்டு…

எப்போது தொடங்கியது இந்திய விரோதம்? இவற்றுக்குப் பின்புகூட….. எங்கள் தலைவர் சொன்னார் இந்தியா எங்களுடைய நட்புநாடு இந்தியாவிற்கு எதிராக எக்காரணம் கொண்டும் நாம் மாறமாட்டோம் என்று…… ஏமாந்துவிட்டோம். இனிமேல் ஏமாறுவதற்கு எம்மிடம்தான் ஒன்றும் இல்லையே….

இப்போதுகூட இன்னும் காறி உமிழாமல் இருக்கிறோம். ஒருவேளை முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழாமல் இந்தியா தன் மனிதாபிமானத்தைக் காட்டியிருந்தால் காலம் எங்கள் காயங்களை ஆற்றியிருக்கும் இப்போது அந்தக்காயங்கள் ஆற்றப்படாமலே மேலும் புண்பட்டிருக்கிறோம் தயவு செய்து எங்கள் புண்களில் குத்தாதீர்கள். மாறா ரணங்களுடன் மருகிக்கிடக்கிறோம். இயலாமை என்பது நீண்டகாலத்திற்கு எங்களுடன் ஒட்டியிருக்காது. நாங்கள் நிமிர்வோம்….. நிமிரும் அன்றும் நாங்கள் நாங்களாகவே இருப்போம். இந்தியா எங்களின் நட்பு நாடு. இந்தியாவின் பாதுகாப்பில் எங்களுக்கும் பங்குண்டு ஏனெனில் எங்களின் வேர் கொடிகள் அங்கும் விரிந்திருக்கிறார்கள். என்றோ ஒரு நாள் எங்களுக்காக கண்கலங்கிய அந்தத் தமிழ்நாட்டு திருவனந்தபுரத்து சிப்பாயைப்போல பல லட்சம் உறவுகள் இன்று எங்களுக்காக மனங்கசிந்தபடி உள்ளார்கள் என்பதை அறிவோம் எங்களுக்காக அவர்களும் அவர்களுக்காக நாங்களும்….. நாம் விட்டு விலகிவிட முடியாத பந்தம்.

Link to comment
Share on other sites

:( :( :(

ஏனைய உறவுகளும் எழுதுங்கள்..! :unsure:

Link to comment
Share on other sites

எனது தந்தையையும் சகோதரியையும் இந்திய இராணுவமே படுகொலை செய்தது அதுபற்றி 2009 ம் ஆண்டு ஒரு பேப்பரில் நான் எழுதிய பதிவு ஜெயமேகனிற்கு சமர்ப்பணம்.இதனை யாழிலும் இணைத்திருந்தேன் இப்பொழுது காணவில்லை

கீழே உள்ள இணைப்பில் அழுத்தி படிக்கலாம்

http://sathirir.blog...og-post_15.html

நானும் இன்றுதான் இதை வாசித்தேன். ஆழ்ந்த அனுதாபங்கள்.

பகவத்கீதை உண்மையாக இருப்பின் இந்தியா நமக்கு செய்த அநியாயங்களுக்கு ஒரு காலத்தில் தண்டனையை நிச்சயம் அனுபவிக்கும்.

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டு இராணுவத்தினர் இந்திய இராணுவம் வருவதை முன்கூட்டியே மக்களுக்கு எச்சரிப்பது வாடிக்கையாக இருந்தது.. என்ன இருந்தாலும் ஒரே இரத்தமல்லவா??!! இதன்காரணமாகவே மெட்ராஸ் ரெஜிமெண்டை நடவடிக்கைகலில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தார்கள்..! :unsure:

வட ஹிந்திய ராணுவத்தை அப்போதே தமிழக இராணுவத்தினர் நன்கு புரிந்து கொண்டிருந்தார்கள்.! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்

வணக்கம் ஐயா சேமம் எப்படி?

ஈழத்திலிருந்து ஒரு அடிமுட்டாளிடமிருந்து இப்படி ஒரு மடலை நீங்கள் காண வேண்டிய பாக்கியம் பெற்றது தங்களது தூரதிஸ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் பலருக்கு எமது உணர்வுகள் வியாபாரப் பொருளாகிப் போனதால் புல் பூண்டு கூட அறச்சீற்றத்துடன் தான் இங்கிருக்கிறது.

இந்திய ராணுவத்தின் இலங்கை வருகையின் போது எனக்கு 2 வயது தான் ஆனால் அவர்கள் தந்த தாக்கமோ எத்தனை வருடங்களானாலும் எம் மனதை விட்டு அகலாது.

இந்திய ராணுவ வெளியேற்றத்திற்காக போராடியவர்களில் எனது தந்தையும் ஒருவராவார். தியாகி திலீபன் அண்ணா உண்ணாவிரதம் இருந்த காலப்பகுதியில்வல்வெட்டித்துறை சந்தியில் 5 நாட்கள் இருந்த நால்வரில் அவரும் ஒருவர். இது பற்றி பழநெடுமாறன் ஐயா இங்கு வந்தது பற்றி எழுதிய புத்தகத்தில் பெயருடன் குறிப்பிட்டுள்ளார். அப்போது இந்தியருடே வெளியிட்ட சஞ்சிகையில் அவர் மடியில் இருக்கும் சிறுவன் தான் நான்.

என் தந்தை அடிக்கடி சொல்வார். எம் மீது இந்தளவு கோரம் செய்த சிங்கள ராணுவத்தை விட இந்திய ராணுவத்தின் மேல் தான் எனக்கு கோபம் அதிகம். ஏனென்றால் சிங்கள ராணுவத்திற்கும் எமக்கும் பகைமைக்கான காரணம் இருக்கிறது. ஆனால் இந்திய ராணுவம் அப்படியில்லையே. அதே வல்வெட்டித் துறை சந்தியில் 48 அப்பாவி பொது மக்களை கட்டடம் ஒன்றினுள் வைத்து குண்டு வைத்து கொன்றார்கள். உங்களுக்கு மடல் போட்ட அந்த ராணுவவீரரிடம் இதற்கு காரணம் கேட்டு சொல்ல முடியுமா?

பாலியல் வல்லுறவு என்றால் என்னவென்று தெரியாதது போல கேட்கும் அவர்களால் வரலாற்றை ஒரு போதும் மறைக்க முடியாது. ஏனென்றால் மட்டக்களப்பில் நடந்த சம்பவம் ஒன்றை கேளுங்கள். இது ஒரு படத்திலும் காட்டப்பட்டிருந்தது.

“ஒரு ஏழைப் பெண் வீட்டு முற்றத்தில் இருந்து தோசை சுட்டுக் கொண்டிருந்தார். அழும் குழந்தையை ஆற்றுவதற்காக அருகே கிடத்தியிருந்தார். அப்போது இந்திய ராணுவக் காடையர் வந்திருக்கிறார்கள். அவர்களது தப்பான கதையைக் கேட்டு அப் பெண் வீட்டினுள் ஓடிப் போய் கதவை சாத்திவிட்டாள். அப்போது அந்த பிள்ளையை தூக்கி தோசைக்கல்லில் போட்டு விட்டு அந்தப் பெண்ணையும் வன்முறை செய்து விட்டு போய்விட்டார்கள். அப்பெண் அதே வீட்டினுள் தூக்கிட்டு மரணத்தை தேடிக் கொண்டாள். அந்தக் காலத்தில் பல பெண்கள் அகப்பையை எறிந்து விட்டு சுடு குழல் தூக்க காரணமாக அமைந்த சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.”

இதை இந்த ராணுவ வீரர்களால் மறைக்க முடியுமா?

இது மட்டுமல்ல அவர்களின் சபலப் புத்திக்கு இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். திருவெம்பாவை மற்றும் விரத காலங்களில் பெண்கள் அதிகாலையே குளிப்பதற்கு கிணற்றடி போவர்கள். அப்படியான காலத்தில் றோந்து என்னும் சாக்கில் வந்து இரவே இவர்கள் கிடந்து விடுவார்கள். ஆனால் இவர்களிடம் பாதகமான ஒரு விடயம் என்னவென்றால் இவர்களில் ஒருவித நெய் மொச்சை அடிக்குமாம் அதை வைத்து பெண்கள் அறிந்து விடுவார்கள். அதன் பின்னர் என்ன அன்று விரதம் அதோ கதி தான்.

அதே போல இன்னுமொரு கருத்திருக்கிறது. ராணுவத்தில் ஒதுக்குப்புறமான சென்ரிகளில் (அரங்குகளில்) நிற்பவர்கள் உள்ளாடை அணிவதில்லையாம். பெண்களைக் கண்டால் ஜீன்சை கழட்டி விட்டு ஏதோ செய்வார்களாம். இதையெல்லாம் உங்களுக்குக் கடிதம் எழுதிய ராணுவ வீரர்களால் மறுக்க முடியுமா?

இது மட்டுமல்ல இதே காட்டுமிராண்டிகள் தான் யாழ் வைத்தியசாலையில் 50 ற்கு மேற்பட்ட வைத்தியர், தாதியர், ஊழியர் என பலரை சுட்டுக் கொன்று குவித்தார்கள். அதெல்லாம் வரலாறில்லையா? அதை இவர்களால் மறுக்க முடியுமா? இவர்களை வரவேற்க தமிழ் நாட்டுக்காரன் போகவில்லை என்று கேட்கும் போது நான் உச்சி குளிர்ந்து சந்தோசப்பட்டேன்.

உதாரணத்திற்கு இந்திராகாந்தி செத்த போது யாழ்ப்பாணமெங்கும் 3 நாள் கடையடைப்புச் செய்து வாழை மரம் நாட்டி ஒட்டு மொத்த தமிழனும் துக்கதினம் அனுஸ்டித்தான். ஆனால் அதே தாயின் மகன் இறந்த போது கற்கண்டு, ரொபி கொடுத்து கொண்டாடினார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இங்கு புலிகளின் பிரச்சாரமோ அல்லது ஊடகங்களின் பிரச்சாரமோ அவர்களை மாற்றவில்லை. ராஜீவின் மேல் இருந்த அந்தளவு வெறுப்பும் தான் காரணம்.

நான் அவசரமாக எழுதுவதால் பல ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டது. பாலியல் வல்லுறவு சம்பந்தமாக வழங்கப்பட்ட பேட்டிகள் அடங்கிய பத்திரிகைக் கோவைகள் சேகரித்துத் தருவதா இருந்தால் சொல்லுங்கள் தேடி எடுத்துத் தருகிறேன். நீங்கள் ஒரு பக்கச்சார்பற்ற நடுநிலையான எழுத்தாளர் என நிருபிக்க நினைத்தால் கடிதம் வரைந்த அதே நபர்களிடம் இதற்கு விளக்கம் பெற முயற்சியுங்கள். ஏனென்றால் இவை வடுக்கள் என்றும் அழியாதவை.

நன்றியுடன்

அன்புச் சகோதரன்

ம.தி.சுதா

http://www.mathisutha.com/2012/05/blog-post_17.html

நடிகையை கற்பழித்த எழுத்தாளர் ஜெயமோகன்!

எழுத்துலக மோதாவிகளின் மறு பக்கம் - தமக்கு தாமே விமர்சனம் செய்து மகிழும் வித்தகர்களின் சில்லறைக் குணம்!

வணக்கம் வாசக உள்ளங்களே.... இப் பதிவின் தலைப்பு “நடிகையை கற்பழித்த எழுத்தாளர் ஜெயமோகன்" என்பதாகும். எழுத்தாளர் ஜெயமோகன் ஓர் நடிகையினை கற்பழித்திருக்கார் என்று சொல்லும் போது அதனை நிரூபிக்கும் வகையில் என்னிடம் ஆதாரம் இருக்க வேண்டும். இல்லையேல் தொடர்புடைய செய்திகள் இருக்கனும். அது கூட இல்லாவிட்டால் ஜெயமோகனால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட நடிகையின் வாக்குமூலமாச்சும் இருக்கனும். இங்கே எடுகோளாக ஜெயமோகன் எனும் எழுத்துலக மனிதரை எடுத்து வைத்துக் கொண்டு, அவர் கோடம்பாக்க சினிமா வட்டாரத்துடன் தொடர்புடைய ஓர் பெண்மணியை வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டார் என்று கூறினால் அந்தச் செய்தி பொய்யான செய்தியாகும். லாஜிக் அடிப்படையில் எழுத்தாளர் கற்பழித்தார் என்று ஓர் செய்தியினை கூறுவது அப்பட்டமான பொய்யாகும்!

என்னுடைய தனிப்பட்ட வெறித்தனத்தை, தீர்த்து கொள்ளும் நோக்கில் நான் எழுதிய செய்தியாக இந்தச் செய்தி வாசக உள்ளங்களால் நோக்கப்படும். எழுத்துலகில், அதுவும் சிறப்பாக இலக்கியவியாதிகளுக்கு ஓர் தனித்துவமான பண்பு உண்டு. தம்மை தாமே புகழ்ந்து ஓதுவது, தமக்கு தாமே போலி வாசகர் பேரில் விமர்சக கடிதம் எழுதி தாமும் பலரால் விமர்சிக்கபடுகின்றோம் என்று சுய இன்பம் காண்பது, பத்திரிகை, வானொலி, மற்றும் இலத்திரனியல் ஊடக நேர்காணலின் போது தம்முடைய வித்துவச் சிறப்பினை அறிவிப்பாளர் - நிகழ்ச்சி தொகுப்பாளர் தவற விடாது புகழ்ந்து வாசிக்கனும் எனும் நோக்கில் எழுத்தில் சமர்ப்பிப்பது தான் சில சில்லறை வியாதிகளின் பண்பாகும். அதற்கு இந்த இன மானத்தை இலக்கியவியாதி ஜெயமோகனும் விதி விலக்கு அல்ல.

இந்திய அமைதிப் படை தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்த்திய, சொற்களில் அடங்காத வலிகளையும், வடுக்களையும் அறியாதவர் அல்ல இந்த அதிமேதாவி எழுத்தாளர் ஜெயமோகன். பேரும், புகழும் கண்ணை மறைக்கும் போது இப்படியான இன உணர்வற்ற, பிறரின் இன மானத்தை விற்று சுய சொறிதல் காணும் எழுத்தாளர்கள் தம் புகழை நிலை நாட்ட பின் நிற்க மாட்டார்கள் என்பது நாம் கண்டு, கடந்து வரும் எழுத்துலக யதார்த்தமாகும். இந்திய அமைதிப்படை 1987இன் பின்னர் இலங்கையில் நிலை கொண்டிருந்த போது நிகழ்த்திய அடாவடித்தனங்களை, அத்துமீறல்களை தன் சுய சொறிதலுக்கு ஏற்றாற் போல அப்படி ஏதும் நடக்கவில்லை என ஓர் இனத்தின் பேச்சாளர் போல் பதிலுரைத்திருக்கிறார் ஜெயமோகன். பாதிக்கப்பட்ட மக்களின் வலியையாச்சும் கேட்டு, படித்து அறிந்து கொள்ளும் பக்குவம் கூட இந்த நர மனிதர்களுக்கு இல்லையே என்பது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழ் மக்களுடைய வலியையும், வடுக்களையும் ஜெயமோகன் போன்ற சுய சொறிதல் வியாதிகள் மறந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் வடுக்களை மறைத்து தன் கருத்து தான் தமிழ் மக்களின் கருத்து எனச் சொல்வதற்கு இந்த அற்ப ஜென்மங்களுக்கு உரிமையினை யார் கொடுத்தது? போலியாக தானே ஓர் வாசக பெயரினை உருவாக்கி எழுத்துலகில் அண்மையில் தான் பலராலும் கண்டு கொள்ளப்படவில்லையே எனும் மூத்த இலக்கியவியாதி அனுபவத்தின் அனுதாபத்தின் வெளிப்பாடாக, இப்படி ஓர் சர்ச்சையினை கிளப்பும் பதிலை வழங்கினால் தான் கண்டு கொள்ளப்படுவேன் என நினைத்தாரோ ஜெயமோகன்! ப்ளீஸ்...இலக்கிய வியாதிகளே! இனியும் தமிழர்களை உங்களின் இத்துப் போன பொன்னாடைகளுக்காகவும், புகழ் மாலைகளுக்காகவும் விலை பேச வேணாம்!

ஒரு படைப்பாளியின் எழுத்தாணி என்பது துப்பாக்கி குண்டினை விட வலிமையானது என்று கூறுவார்கள். ஆனால் பேருக்கும், புகழுக்கும், பொன்னாடை எனும் சுய இன்பச் சொறிதலுக்கும் ஆசை கொள்ளும் உங்களைப் போன்றோருக்கு இன மானம் கூட ஓர் சிறு தூசாக தெரிவது தான் வேடிக்கையாக இருக்கிறது. வதந்திகளையும், பொய்க் கருத்துக்களையும் பரப்பி எழுத்துலகில் நிலைக்க வேண்டும் என்றால் உங்கள் குடும்பத்தினையே வீதிக்கு இழுத்து வந்து விபச்சாரம் செய்ய வைத்து உங்கள் எழுத்து வெறியை தீர்த்து கொள்ளலாமே திருவாளர் ஜெயமோகன் அவர்களே!

எழுதிச் செல்லும் விதியின் கை

எழுதி எழுதி மேற் செல்லும்

அழுத கண்ணீர் ஆறெல்லாம்

அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?

(ஆன்றோர் வாக்கு)

போர் இடம் பெறும் பிரதேசங்கள் எதுவாயினும், அங்கே உள்ள மனிதாபிமானமற்ற வீரர்கள் வல்லுறவு, வன்புணர்வு, மற்றும் கொடுஞ் செயல்களில் ஈடுபடுவது இயல்பு. இதற்கு ஆதி காலம் முதல் அண்மைய ஆப்கான், ஈராக் போர் அரங்கு, ஈழத்தின் இறுதிப் போர் முதலிய சம்பவங்களே சாட்சி பகர்கின்றன. அப்படி இருக்கையில் ஓர் எழுத்தாளன் நடு நிலமையாக, எழுத வேண்டும், உண்மையினை உரத்துச் சொல்ல வேண்டும், எனும் எழுத்தாளனுக்குரிய அடையாளங்களை எப்படி ஜெயமோகன் போன்ற சுய சொறிதல் மனிதர்களால் இலகுவில் மறந்து விட்டு இந்திய இராணுவம் ஈழப் போர் அரங்கில் வன்முறைகளை நிகழ்த்தவில்லை என்றோர் செய்தியினை முன் வைக்க முடியும்? மிகுதிக் கருத்துக்களை வாசகர்களாகிய உங்களின் பார்வைக்கு முன் வைக்கின்றேன்.

பிற் சேர்க்கை: இப்படி ஓர் பதிவினை எழுதுவதற்கு காரணமான இலக்கிய வியாதி, இனமானத்தை தன் சுய புகழுக்காக விற்கும் எழுத்து மேதாவி ஜெயமோகனின் பதிவினைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

http://www.thamilnattu.com/2012/05/blog-post_9532.html

------------------------------------------------------------------------------

புலி எதிர்ப்பாளர் சோபாசக்தியின் வலைப்பதிவில் இருந்து

ஜெயமோகனின் வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் ‘கற்பழித்ததா இந்திய இராணுவம்’ என்ற கட்டுரையைப் படிக்கையில் மனம் பதறிப்போகிறது. இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய மூத்த இராணுவ அதிகாரிகள் “இலங்கையில் இந்திய அமைதிப் படையினர் பாலியல் வன்புணர்வுக் கொடுமைகளில் ஈடுபடவே இல்லை” என அந்தக் கட்டுரையில் சாதிக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை வழிமொழியும் ஜெயமோகன் ‘அமைதிப் படையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாமே புலிகளாலும் அவர்களது தமிழக ஆதரவாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பொய்ப் பிரச்சாரங்களே’ என்ற முடிவுக்கு வருகிறார். நமது கண்முன்னேயே, இந்திய அமைதிப் படையினரின் போர்க் குற்றங்களிற்கு நேரடிச் சாட்சியங்களான என் போன்ற இலட்சக்கணக்கானவர்கள் உயிரோடு இருக்கையிலேயே, இருபத்தைந்து வருடங்களிற்குள்ளாகவே வரலாறு திரிக்கப்படும் காலக் கொடுமையிது.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்ற நல்வாய்ப்பை நாங்கள் தவறவிட்டுவிட்டோம். அன்று நாங்கள் நிராகரித்த அதே ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தக் கோரியே (பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல் செய்வது ) இப்போது தமிழர் தரப்புகள் போராடிக்கொண்டிருக்கின்றன என்பதுதான் இன்றைய அரசியல் எதார்த்தமாயிருக்கிறது. ஆனால் இந்த எதார்த்தம் எந்த வகையிலும் இலங்கையில் இந்திய இராணுவம் நடத்திய போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அராஜகங்களையும் நியாயப்படுத்திவிடாது.

ஜெயமோகன் சொல்வது போல புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் சம்பவங்களை மிகைப்படுத்தி பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள் என்பது உண்மைதான். ஆனால் அதைக் காரணமாக வைத்து இந்திய அமைதிப் படையினரின் போர்க் குற்றங்களை மறைப்பது நியாயமற்றது.

இந்திய அமைதிப்படையினர் பொதுமக்கள் மீது நடத்திய கொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் நான் நேரடிச் சாட்சி. ஒவ்வொரு நாளும் பாலியல் வன்புணர்வுக்குச் சம்பவங்கள் நடைபெற்றன. 10 வயதுச் சிறுமியிலிருந்து 80வயது மூதாட்டிவரை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். சிறுவர்களும் தப்பவில்லை.

இவையெல்லாம் ஆதாரபூர்வமாகப் பல இடங்களில் தொகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் முதன்மையான ஆவணம் யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கத்தால் வெளியிடப்பட்ட ‘THE BROKEN PALMYRA’ ஆகும். இதனது தமிழ் வடிவம் ‘முறிந்தபனை’. ராஜினி திரணகம, ராஜன் ஹுல், தயா சோமசுந்தரம், கே. சிறீதரன் ஆகியோரால் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டது. ‘முறிந்தபனை’யின் இரண்டாவது பகுதியில் 5வது அத்தியாயம் முழுவதுமாக ஈழத்தில் பெண்கள்மீது IPKF இழைத்த கொடுமைகள் விரிவாகச் சாட்சியங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அத்தியாயத்தின் தலைப்பு: “அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை”.

‘முறிந்த பனை’யின் புதிய பதிப்பு அ.மார்க்ஸின் விரிவான முன்னுரையோடு தமிழகத்தில் கிடைக்கிறது (பயணி வெளியீடு). www.noolaham.org இணையத்தில் PDF வடிவத்தில் முறிந்த பனையைப் படிக்கலாம்.

ஆம் மூத்த இராணுவ அதிகாரிகளே! நீங்கள் ஈழத்தில் பலநூறு அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றீர்கள். பலநூறு பாலியல் வன்புணர்வுகளைச் செய்தீர்கள். பல்லாயிரக்கணக்கான மக்களை அவமானப்படுத்தினீர்கள்.

ஜெயமோகனுக்கும் ஒரு வார்த்தை: ‘முறிந்த பனை’ ஆவணத்தை உருவாக்கியவர்கள் புலிகளோ அவர்களது ஆதரவாளர்களோ அல்ல. அந்த ஆவணத்தை உருவாக்கியவர்களில் மூவர் இன்றுவரைக்கும் புலிகளின் அரசியலைக் கடுமையாக விமர்சித்து வருபவர்கள். நான்கமவரான ராஜினி திரணகம ‘முறிந்த பனை’ ஆவணத்தை உருவாக்கியதற்காக விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தந்தையையும் சகோதரியையும் இந்திய இராணுவமே படுகொலை  செய்தது  அதுபற்றி 2009 ம் ஆண்டு  ஒரு பேப்பரில்  நான் எழுதிய பதிவு   ஜெயமேகனிற்கு சமர்ப்பணம்.இதனை யாழிலும் இணைத்திருந்தேன் இப்பொழுது காணவில்லை

கீழே  உள்ள இணைப்பில்  அழுத்தி படிக்கலாம்

http://sathirir.blog...og-post_15.html

http://thooya.blogspot.com/2007/01/blog-post_19.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வதந்திகளையும், பொய்க் கருத்துக்களையும் பரப்பி எழுத்துலகில் நிலைக்க வேண்டும் என்றால் உங்கள் குடும்பத்தினையே வீதிக்கு இழுத்து வந்து விபச்சாரம் செய்ய வைத்து உங்கள் எழுத்து வெறியை தீர்த்து கொள்ளலாமே திருவாளர் ஜெயமோகன் அவர்களே!

இதையும் செய்யத் தயங்காதுகள் இவன் போன்ற குண்டூசி மண்டைகள். இதுகளுக்குக் கடிதம் எல்லாம் நீளமாக எழுதிப் பயன் இல்லை. பழைய காலணிகள், சப்பாத்துக்களை எறிந்து விடாமல் சேர்த்து வைத்திருங்கள். ஈழத் தமிழர் இருக்கும் பக்கம் வராமல் போய் விடுவானா?

Link to comment
Share on other sites

1987 - 1990 காலப்பகுதியில் மனித குலத்திற்கு எதிராக போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இந்திய அழிவுப்படை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இவ்வாறான அப்பட்டமான இருட்டடிப்புக்கள் வலியுறுத்துகின்றன.

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில் நாங்கள் எல்லோரும் ஒருமித்து நிற்பதை பார்க்க மிக சந்தோசமாக இருக்கின்றது .

எமக்கு அநியாயம் செய்தவன் எவனேன்றாலும் அவனுக்கு எதிராக ஒன்று சேர தயங்க கூடாது .

Link to comment
Share on other sites

அண்மையில் ஏவுகணை முயற்சி வெற்றிபெற்ற உசாரில் பழைய இரத்தக்கறைகளைக்கழுவி உலகஅரங்கில் தாம் புனிதமானவர்கள் என்று வேடம் போடுகின்றார்கள் போல்.

Link to comment
Share on other sites

By Ramanitharan Kandiah from facebook

எத்தனையோ மாதங்களின் முன்னால் தனக்கு இந்திய இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களிடமிருந்து வந்த கடிதங்களைத் திடீரென ஜெயமோகன் இவ்வாரம் குறிப்பாக மே 18 இனை உள்ளடக்கிய - ஸ்ரீலங்கா_ஈழம்_இந்தியா சார்ந்த அரசியலிலே ஒரு மாற்றுப்புள்ளியினை ஏற்படுத்திய மூன்றாமாண்டினை நினைவுகூரும்- இவ்வாரம் ஜெயமோகன் முன்னெடுத்துப்போட்டது எதேச்சையாக நடைபெற்றதல்ல; ஜெயமோகனின் ஈழம் குறித்த இலக்கியம் என்ற பெயரிலான அரசியல் மிகவும் தெளிவானது. முன்னைய குறிப்பிலே இதனைக் கோடி காட்டியிருந்தேன். அஃது இவரினைத் தமிழ்நாட்டுக்கு/இந்தியாவுக்கு அப்பாலே பிறநாடுகளிலே ஆதரிக்கின்றவர்களின் அரசியலை நம்பி வளைத்துநிகழ்வது என்பதாக நான் ஊகிக்கின்றேன். இவற்றிலே கனடா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஸ்ரீலங்கா (ஆம்! ஸ்ரீலங்கா) இவை நான்கினையும் எடுத்துக்கொள்ளலாம். கீழே காண்பவை என் அவதானிப்பூடான புரிதல்(மட்டுமே)

கனடா

கனடாவிலே இவரை அழைக்கின்றவர்கள் + உபசரிக்கின்றவர்கள் (நான் அவதானித்ததன்படி) மூன்று வகையான அரசியலைக் கொண்டிருப்பவர்கள்: கண்மூடித்தனமான புலி எதிர்ப்பாளர்கள்; புலி & புலியல்லாதது இரண்டிலும் நியாயமான விமர்சனத்தினைக் கொண்டிருப்பவர்கள்; ஈழ அரசியலுக்கு எட்டாவது முக்கியத்துவத்தினைக்கூடக் கொடுக்காமல் சுயபிம்பத்தினைக் கட்டியெழுப்பவும் தமிழகத்தின் மத்தியதட்டிடம் விரிக்கவும் பரஸ்பரமுதுகு சொறியத்தயாராகவிருப்பவர்கள். (அதிலே இரண்டாவது வகையினைச் சேர்த்தவர்கள்மீது எனக்கு முழுமையான மதிப்புண்டு). கடைசிவகையினரை அவர்கள் பற்றிய பயணக்குறிப்புகளாலும் புத்தவிமர்சனத்தாலும் மிஞ்சி விஞ்சிப்போனால் அவர்களைப் பற்றியே புத்தகம் போட்டே சொறிந்துகொள்ளலாம். முதலாம் வகையினருக்கு புலி அரசியலைச் சாடைமாடையாக விமர்சிப்பதாகக் காட்டிக்கொண்டால் போதுமானது எனும் போக்கும் "புலி எதிர்ப்பு= இந்திய ஆதரவு" என்ற எளியசூத்திரப்புரிதலும் அவரிடமிருக்கின்றதோ என்ற சந்தேகம் அவரின் இந்திய இராணுவக்கட்டுரையைக் கண்டபின்னாலே, வந்திருக்கின்றது. புலி எதிர்ப்பாளர்கள் எல்லோரும் இந்திய ஆதரவாளர்களாக இருக்கமுடியாதென்பது அவரின் இன்றைய திட்டத்திலே ஓட்டையைப்போட்டிருக்கலாம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கமுடியாது; "புலி எதிர்ப்பாளர் தான்" என்பதைச் சுட்டியே அவரிடம் இந்திய இராணுவத்தினைப் பற்றிச் சுட்டிய திருமாவளவனிடம் திருமாவளவனிடமும் (அதேபோலவே எதிர்த்திருக்கும்) ஷோபா சக்தியிடமும் தனக்கு மதிப்பு இருக்கின்றதென்பதைச் சொல்லி இந்திய இராணுவம் நடத்தியதையெல்லாம் "ஒரு துன்பியல் நிகழ்வாக" ஈழத்தமிழர்கள் மறந்துவிட்டு, இந்தியாவிடம் நெருங்கிவரவேண்டுமென்கின்றார்.

அமெரிக்கா

அமெரிக்காவிலே ஜெயமோகனைத் தூக்கிப்பிடிப்பவர்கலீன் அரசியல் எனது அவதானிப்பின்படி, அமெரிக்கா உறையும் இந்தியத்தேசியம்பேசும் குழுவினரினதாகும் - தவிர கணிசமானவளவு தினமும் உணவிலே இந்துத்துவா உப்பினைச் சேர்த்து உண்பவர்களும் அடக்கம். இப்படியான இந்தியதேசியம், இந்திரா காங்கிரஸ் மற்றும் இந்துத்துவா கூட்டத்தினரின் வலைஞ்சிகை, பதிவுகளைத் தேடிக்காண்க. இவர்களினைச் சார்ந்த நண்பர்களின் ஈழம் தொடர்பான அரசியலைப் பற்றியோ ஜெயமோகன் அமெரிக்கா வந்தபோது, அவருக்கு வழிகாட்டியவர்களின் அரசியல் பற்றியோ பெரிதும் சொல்லவேண்டிய அவசியமில்லை. இணையத்தினைக் கடந்த பத்தாண்டிலே கண்டவர்கள் உணர்வார்கள். (சண்டைபோடத் தெம்பில்லாததாலே ஏதும் தெரிவிக்கவிரும்பவில்லை. வேண்டுமானவர்கள், ஒரு குறுக்குவெட்டுமாதிரிக்கு, 2000 அளவிலே திண்ணை வலைஞ்சிகையிலே நிகழ்ந்த பின்னூட்டச்சண்டைகளையோ 2004 ஆம் ஆண்டின் http://tamiltruth.blogdrive.com/http://tamiltruth.blogdrive.com/archive/cm-5_cy-2012_m-5_d-17_y-2012_o-20.html பின்னூட்டங்களையோ 2009 மே-ஜூன் இலே ஜெயமோகனின் அமெரிக்கவழிகாட்டியின் பதிவின் 2009 மே-ஜூன் உள்ளடக்கங்களின் தொனியையோ காண்க ;-)

(ஜெயமோகனின் இயல் விருது பற்றிய கருத்துகள், அஃது அவருக்கு 2007 இலே விவாதத்துக்கு வந்து 2008 இலே செத்து பிறகு 2010 இலே உரிந்து 2011 இலே ரஜினிகாந்தின் விழாவில் சிறகு விரித்துக் கூத்தாடிய அரசியல் தனியே எழுத வேண்டியது)

=========

அவுஸ்ரேலியா

ஈழத்திலே 2009 ஏப்ரல் இறுதியிலே இத்தனைபேர் செத்துக்கொண்டிருக்கும்போது அவுஸ்ரேலியாவுக்கு ஜெயமோகனை அழைத்துச் சென்றவர்களிலே முன்னுக்கு நின்றவர்கள் - ஜெயமோகனின் பதிவூடாகவே நான் காணும் தகவல்களின்படி இருவர் http://www.jeyamohan.in/?p=2423 ; http://www.jeyamohan.in/?p=2420 லெ. முருகபூபதி & நோயல் நடேசன். (இதிலே மும்முரமாக இருந்தபடியாலேயே உலோகம் எழுதும்வரைக்கும் ஜெயமோகனுக்கு இலங்கை நிகழ்வுகளைப் பற்றிக் கருத்துச்சொல்ல நேரம் கிடைக்கவில்லை என்பதை இத்தால் நாங்கள் உணரவேண்டும்)

லெ. முருகபூபதி என்பவரும் நோயல் நடேசன் என்பவரும், 2010 ஓகஸ்ரிலே கொழும்பிலே ஞானம் சஞ்சிகையை நடத்தும் ஞானம் என்ற ஞானசேகரன் போன்றோரின் உதவியுடன் எல்லாப்பிரச்சனையும் தீர்ந்துவிட்டதாக "உலகத்தமிழெழுத்தாளர் மகாநாடு" நடத்தியவர்கள். http://www.sponnuthurai.com/ இதை நான் சொல்லவில்லை; எஸ். பொன்னுத்துரை சொல்கிறார் ;-) ஸ்ரீலங்கா அரசு எல்லாப்பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டதாகத் தோற்றமளிக்கச்செயற்பட்ட இம்மகாநாட்டினை நடத்தவேண்டாம் என்று கையெழுத்துவேட்டைகள் முதல் வாதப்பிரதிவாதங்கள்வரை இணையத்திலே நடத்தப்பட்டன. (லெ. முருகபூபதிக்கும் அண்மையிலே இந்திய உளவுத்துறையாலே வீட்டுள்ள புகுந்து விசாரிக்கப்பட்ட 'கீற்று' சஞ்சிகை நந்தனுக்கும் நிகழ்ந்தவைகூட இணையத்திலே காணலாம்) . மிருகவைத்தியர் & உதயம் இணைய இதழ் நடத்தும் நோயல் நடேசன் என்பவரின் பதிவு தேடியவர்களுக்குக் கிட்டும் (பாஸ்டன் பாலாஜி, உங்கள் பிரபாகரன் வெறுப்பு ஈழ எதிர்ப்பு snapjudgement இற்கு அருமையான இணைப்புகள் அங்கே கிட்டும் ;-)). 2009 மே முடிந்தவுடன், ராஜபக்ஷவினைத் தமிழ்மக்கள் விடுதலை செய்துவாழ்த்தி, வவுனியா முகாம்களுக்குச் சென்று எல்லோரும் நலமே என்று அறிக்கைவிட்டு ராஜபக்ஷவோடு படங்களும் எடுத்துவந்து இன்றுவரை ஸ்ரீலங்கா அரசின்செயற்பாடுகளை முற்றாக ஆதரிப்பவர்களிலே நோயல் நடேசன் முக்கியமானவர். இங்கே அவரின் கட்டுரை, " I am grateful to President Mahinda Rajapaksa for finishing Prabhakaran and saving my people" http://transcurrents.com/news-views/archives/3203

இப்படியானவர்கள் அழைக்க சரியாக மூன்றாண்டுகளுக்குமுன்னால், ஈழத்தமிழர்கள் தெருநாய்கள்போலக் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அவுஸ்ரேலியா போய் வந்த ஜெயமோகன், இந்திய இராணுவத்தின் நேர்மையை இவ்வாரத்திலே பறைசாற்ற வடகிழக்கினைச் சாராத முருகபூபதி, ஸ்ரீலங்கா அரசினை இக்கொலைகளிலே முழுதாக நியாயப்படுத்தும் நோயல் நடேசன் போன்றவர்களின் ஆதரவு கிட்டலாமோ என்னவோ தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால், இங்கே இன்னொரு புள்ளி ஆரம்பிப்பதை இன்று ஒரு நண்பர்கள் அனுப்பிய அஞ்சலிலிருந்து உய்த்தறியமுடிகின்றது:

மேலே லெ. முருகபூபதி, நோயல் நடேசன் இவர்களுடன் கொழும்பிலே உலகத்தமிழ்மகாநாட்டினை 2010 இலே நிகழ்த்தியவர் பதிவுசெய்யப்பட்ட வைத்திய அதிகாரி ஞானசேகரன் என்ற ஞானம் http://www.thinasary.com/index.php?option=com_content&view=article&id=3899%3Ajaffna-02-07-05-2012&catid=158%3Acommon-jaffna&Itemid=551

அவர் இன்னும் மூன்று வாரங்களிலே கொழும்பு தமிழ்ச்சங்கத்திலே (ஜூன் 2,3, 4 இலே) மீண்டும் உலகத்தமிழ்மகாநாட்டினை நடத்தப்போகின்றார்; அது பற்றி அவர் அனுப்பிய மின்னஞ்சலைத்தான் நண்பர் அனுப்பியிருந்தார்: கீழே காண்க.

இப்போது, ஜெயமோகனின் இந்திய இராணுவத்தின்மீதான "ஊறப்போட்ட உளுந்தை எடுத்து அரைத்துத் தோசை சுட்டத"ற்கான முழு நோக்கு விரிந்து தெரிகிறது.

சோழியன்குடுமி சும்மா ஆடுமா?

("ஜெயமோகனைக் கொழும்புக்குப் போகாமல் பகிஷ்கரி" என்று ஆர்ப்பரித்துக் கையெழுத்துவேட்டையும் பதிவுகளும் பேஸ்புக்குறிப்புகளும் இடப்போகின்றவர்கள், கொடும்பாவி எரிப்பவர்கள், கூக்குரல் வைப்பவர்கள் ஊக்கத்துடன் செய்யவிரும்பின், செய்யவும். அவரையோ தமிழகத்தின் முன்னணி முடிபிடிங்கி மொழிப்புனைவுமல்லர்களிலே எனக்கேதும் மதிப்பில்லை. இவர்களுக்காக என் இரண்டு நனோமீற்றர் "நான்" இனைவிட்டுக் கையெழுத்து வைக்கப்போவதில்லை; வேண்டுமானால், கைநடுவிரலை உயர்த்திக் காட்டிவைக்கிறேன்.

இலக்கியம் என்பது இலக்கு உய்ய அரசியல் செய்கின்றவனுக்கு

தத்துவம் என்பது தன்னை சுற்றிக் கோவில்கட்டும் அயோக்கியனுக்கு;

எனக்கு என் பொறியியலே தினப்பருக்கை பொரிகின்றது

இலக்கியக்கீரை அநாவசியம்",

=========

From: Gnanam Gnanam <editor@XXXXXX.yyyy>

Date: 17 May 2012 09:01

Subject: Jeyamohan attents conference

கொழும்புத் தமிழ்ச்சங்க உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழகப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்

கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன் 2,3,4ஆம் திகதிகளில் உலகத்தமிழ் மாநாடு ஒன்றினை சங்கத்தின் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பிப்பார் எனத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியச் செயலாளர் தி. ஞானசேகரன் தெரிவித்தார். உலகறிந்த எழுத்தாளரான ஜெயமோகன் தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாவல், சிறுகதை, அரசியல், வரலாறு போன்ற படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து வெற்றிகண்டவர்.

விஷ்ணுபுரம் என்னும் சிறந்த நாவல் மூலம் உலகளவில் புகழ்பெற்ற ஜெயமோகன் அவர்கள் கொற்றவை, அனல்காற்று, இரவு, உலோகம் உட்பட பதினொரு புதினங்களையும், ஜெயமோகன் சிறுகதைகள், ஜெயமோகன் குறுநாவல்கள், போன்ற ஒன்பது தொகுதிகளையும், அரசியல் கட்டுரைத் தொகுப்புகளையும், வரலாற்று நூல்களையும், வடக்குமுகம் என்னும் நாடக நூலையும் கொற்றவை என்னும் காவியத்தையும் படைத்தவர்.

தவிரவும், இலக்கியத் திறனாய்க்வுக் கட்டுரைகளையும் மலையாளக் கவிதைகளின் பல காலகட்ட மொழிபெயர்ப்புகளையும் தமிழில் வெளியிட்டவர். மலையாளத்திலும் பல படைப்புகளைத் தந்தவர். 2010 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் நாவலுக்கான பரிசுடன் அகிலன் நினைவுப் போட்டி கதாவிருது பாவலர் விருது உட்பட பலவிருதுகளையும் ஜெயமோகன் பெற்றுள்ளார். மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ள ஜெயமோகன் இலக்கிய ஆய்வரங்கில் பங்கு பற்றுவதுடன் மாலை நிகழ்வுகளில் சிறப்புரையாற்றவும் உள்ளார்.

தவிரவும் பேராளர் பதிவுக்கான முடிவுத் திகதி பலரின் வேண்டுகோளுக்கு அமைய இம்மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் இலக்கியச் செயலாளர் தி.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

Kind Regards

T. Gnanasekaran

http://tamiltruth.blogdrive.com/tamiltruth.blogdrive.com

LikeUnlike· · Share

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.nisaptham.com/2012/05/blog-post_18.html

http://wandererwaves.blogspot.com.au/2012/05/blog-post_17.html

அமைதிப் படை: அழிவின் நாட்களும்… அழியா ஞாபகமும்….

ஜெயமோகனுக்குச் சமர்ப்பணம்

இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அது நிகழ்ந்தது. இன்றுபோல உலகம் இவ்வளவு கிராமமாகச் சுருங்கியிருக்கவில்லை. இத்தனை நாடுகள் மூளைக்குள் குந்தியிருக்கவுமில்லை. அவற்றின் அரசியல் முகமோ நிறமோ அறியாதவளாக நானிருந்தேன். யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு மைதானத் திடலில் அந்த வானூர்தி ஒரு மாயப்பறவையின் வசீகரத்தோடு தரையிறங்கியது. அதன் விசிறி சடசடவென்று பேரோசை எழுப்பியபடி சுற்றித் தணிய, புற்கள் நளினமாக மடங்கித் தலைசாய்த்திருக்க, ‘நியாயத்தின் திருவுரு’க்களாக அவர்கள் இறங்கிவந்த அந்தக் காட்சியை மாணவர்களாகிய நாங்கள் முண்டியடித்துக்கொண்டு பார்த்தோம். ‘இதோ எமது பாதுகாவலர்கள்’என்று மனம் குதியிட்டது. அந்தப் பாதுகாவலர்களின் துப்பாக்கிகள், சில மாதங்களிலேயே எங்களுக்கு எதிராகத் திரும்பவிருக்கின்றன என்று, அப்போது யாராவது எதிர்வு கூறியிருந்தால் எள்ளி நகையாடியிருப்போம்.

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதைத் தொடர்ந்து, இந்திய இராணுவம் ஈழமண்ணில் கால்பதித்தது. ‘இனி இந்த மண்ணில் போர் இல்லை’என்ற நினைவு எத்தகைய ஆசுவாசம் தரக்கூடியது! ‘இனி எங்கள் தெருக்களில் விடுதலையடைந்தவர்களாக நாங்கள் உலவமுடியும்’என்ற நம்பிக்கை எத்தகைய புளகாங்கிதத்தைப் பரத்தக்கூடியது! தொடர்ந்து வந்த நாட்களில், ஒளிரும் விழிகளுடன் திருநெல்வேலியின் பரமேஸ்வராச் சந்தியிலும் அதனையொட்டிய வீதிகளிலும் நாங்கள் கூட்டம் கூட்டமாக நின்று கதைபேசினோம். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த போராளிகள் சாதாரண உடைகளில் இராணுவ பயமற்று உலவித் திரிந்தார்கள். துப்பாக்கி தாங்கிய இராணுவத்தினரும் (அது எந்த நாட்டு இராணுவமாக இருந்தபோதிலும்) போராளிகளும் ஒரே இடத்தில் உலவியதானது காட்சிப்பிழையாகவே எங்கள் கண்களுக்குத் தோன்றியது.

அவர்கள்தாம் (அமைதிப்படையினர்) எவ்வளவு அழகாகப் புன்னகைக்கவும், குழந்தைகளைப் பார்த்துக் கையசைக்கவும் செய்தார்கள்! இந்தியாவைப் பற்றி எங்கள் மூதாதையர்களால் அதுநாள்வரை கட்டியெழுப்பப்பட்டிருந்த புனித பிம்பங்கள் மேலும் கொஞ்சம் ஊதிப் பெருத்தன. ‘காந்தி தேசம்’, ‘கலாச்சாரத் திருநிலம்’, ‘புத்தரின் பூமி’, ‘இரண்டாவது தாய்நாடு’, ‘தொப்பூள் கொடி உறவு’ இன்னபிற அடைமொழிகள் உருவேற்ற உணர்ச்சிப் பெருக்கில் (நன்றி ஒரு துளி தூக்கலாக) மிதந்து திரிந்தோம்.

ஆகஸ்ட் 4ஆம் திகதியன்று (ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆறு நாட்களின் பின்) சுதுமலையை நோக்கி பெருந் திரளாய் சனங்கள் போய்க்கொண்டிருந்தார்கள். அவ்வளவு சனத்திரளை என் வாழ்நாளில் கண்டதில்லை. (நான்கு இலட்சம் பேர் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.) எங்கெங்கோவிருந்தெல்லாம் மக்கள் வந்து குவிந்துகொண்டிருந்தனர். கூட்டம் நடக்கும் இடம்வரை செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நாங்கள் வெகு தொலைவில் இறக்கிவிடப்பட்டு சுதுமலை அம்மன் கோயிலை நோக்கி நடந்து போனோம். கூட்டம் நடைபெறும் இடத்தை நெருங்க நெருங்க ஒருவரோடொருவர் தட்டுப்படாமல் நடக்கமுடியாத அளவிற்கு அடர்த்தியாயிற்று சனத்திரள். அவ்வளவு கூட்டத்தில் மேடையைச் சரிவரப் பார்க்க முடியாதென்பதனால் அருகிருந்த மரங்களிலும் வீடுகளின் கூரைகளிலும்கூட இளைஞர்கள் ஏறியிருக்கக் கண்டோம். அன்றுஇ இந்தியாவிடம் ஆயுதங்களை ஒப்படைத்து (முழுமையாக அல்ல) ‘நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்’என்ற தலைப்பில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையொன்றை ஆற்றினார். அந்த உரையில், “எமது மக்களைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பை எங்களிடமிருந்து (விடுதலைப் புலிகள்) இந்திய அரசு கையேற்றுக்கொள்கிறது”என்ற வாசகம் இடம்பெற்றது. மேலும், “மிகப் பெரிய வல்லரசொன்று எங்கள் மக்களின் அரசியல் விதியை முடிவுசெய்யத் தீர்மானித்துவிட்டிருக்கும்போது, அதை மீறி எதையும் செய்வதென்பது எமது இயலுமைக்கு அப்பாற்பட்டது.”எனவும் கூறியிருந்தார் (ஆனால், மிகப் பெரிய வல்லரசை அவர்களால் தோற்கடிக்க முடிந்தது என்பது வரலாறு.)

போர் அல்லது போராட்டம் நடைபெறும் நாடுகளில் வாழும் எவரும் அரசியல் கலவாத தன்வரலாறுகளையோ சம்பவங்களையோ எழுதுவதென்பது சாத்தியமேயில்லை. அமைதிப் படையின் அநீதிக் காலத்தில் நான் அங்கே இருந்தேன் என்பதனால் ‘என்’, ‘நான்’என்று பிரயோகிக்க வேண்டியுள்ளது. அரசியலில் நேரடியாகப் பங்கேற்காத ஒருவரது கண்களில் அமைதிப் படையினர் எங்ஙனம் தோன்றினார்கள் என்பதைப் பதியவேண்டிய அவசியம் உள்ளது.

ஈழத்தமிழர்கள்பால் ‘கருணை’கூர்ந்து இலங்கை சனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும்

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்கள். இதில் நகைமுரண் என்னவென்றால், எந்த இனம் துடிக்கப் பதைக்க படுகொலை செய்யப்பட்டதோ, தமது வாழ்விடங்களிலிருந்து அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டதோ, பெரும்பான்மையாளர்கள் ஆட்சியாளர்களாக இருந்த காரணத்தால் கல்வி உள்ளடங்கலான உரிமைகளில் எவருக்குப் பாரபட்சம் காட்டப்பட்டதோ, அவர்களைக் கலந்தாராயாமல், ஒருதலைப்பட்சமாக அந்த ஒப்பந்தம் எழுதப்பட்டு, தமிழர்களது விருப்பத்திற்கு முரணாக அவர்கள்மீது திணிக்கப்பட்டது என்பதுதான்.

‘ஈழமுரசு’பத்திரிகைக் காரியாலயத்தின் அச்சகப் பகுதியும் அச்சியந்திரமும் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதாக ஒரு நாள் (ஒக்டோபர் 10, 1987) காலையில் நாங்கள் அறிந்தோம். அன்றே ‘முரசொலி’பத்திரிகையின் அச்சியந்திரமும் சிதைக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இதனிடையில்- குமரப்பா, புலேந்திரன் ஆகிய தளபதிகள் உட்பட பதினேழு பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்து, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விதிகளை அடாவடித்தனமாக மீறினார்கள். இலங்கையின் அதிகாரத் தரப்பினைத் தட்டிக் கேட்க இந்தியத் தரப்பு தயங்கியது. விளைவு, சிறைப்பிடிக்கப்பட்ட பதினேழு பேரும் ‘சயனைட்’அருந்தினார்கள். பன்னிரு விடுதலைப் புலிகள் இந்திய-இலங்கை கூட்டுச்சதிக்குப் பலியாகப்பட்டார்கள். ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினார்கள். நிலைமை வரவர பதட்டமடைந்துகொண்டே சென்றது.

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, நீரும் அருந்தாமல் திலீபன் உண்ணாவிரதமிருந்த நல்லூர்க் கோயிலுக்கு அண்மையிலேதான் நாங்கள் வாடகைக்குக் குடியிருந்தோம். ஆகவே ஒவ்வொரு நாட்களும் அங்கே போகக் கிடைத்தது. அந்த மெல்லிய உருவம் மேலும் உருக்குலைந்து ஈற்றில் சருகாக உதிர்ந்தபோது (செப்டெம்பர் 26, 1987) அங்கிருந்து பெரும் அழுகைச் சத்தம் கேட்டது. வீட்டிலிருந்து ஒரே பாய்ச்சலாக ஓடிச்சென்றேன். ‘காந்தி தேசம்’ எங்களைக் கைவிட்டுவிட்டது. ‘அஹிம்சைநெறியால் ஈழத்தை வென்றிருக்க முடியும்; ஆயுதப் போராட்டத்தால் மக்களைக் கொன்றுவிட்டார்கள்’என்று சொல்பவர்களின் மனச்சாட்சியை ‘திலீபன்’என்ற பெயரும் தொந்தரவு செய்வதில்லை என்பது வியப்பிற்குரியதே.

நல்லூர்க் கோயில் முன்றல் உணர்ச்சிக் கொந்தளிப்பில் கனன்றுகொண்டிருந்தது. கோபமும் கண்ணீரும் ஆற்றாமையும் ஆயாசப்பொருமலுமாய் மக்கள் அலைமோதிக்கொண்டிருந்தார்கள். ‘கண்கெட்டுப் போவார்’என்று, மண்ணை வாரியிறைத்து இந்திய அமைதிப் படையினரை பெண்கள் சபித்துக்கொண்டிருந்தார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் மேடையிலிருந்த திலீபனின் உயிரற்ற உடலை நோக்கிச் செல்ல முயன்றார்கள். தொண்டர்கள் சிலர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றார்கள்.

மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் கைவிடப்படுகிறோம்? மீண்டும் மீண்டும் நாங்கள் ஏன் ஏமாற்றப்படுகிறோம்? என்ற கேள்விகள் எங்கள் மனங்களைக் குதறிக்கொண்டிருந்தன. இலங்கை இராணுவத்தின் இனவெறியாட்டத்திலிருந்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு உள்ளே வந்தவர்கள், இந்தியாவின் பிராந்திய நலனைப் பாதுகாக்க முற்பட்டனரேயன்றி, எளிய மக்களது உயிர்களையோ உரிமைகளையோ ஒரு பொருட்டாகக் கருதினார்களில்லை.

ஒக்டோபர் 21இ 1987 தீபாவளியன்று இந்தியப் படைகளால் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் நடத்தப்பட்ட நரவேட்டை இந்திய சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது! ‘இறுதிப் போர்’என்று சொல்லப்படுகிற முள்ளிவாய்க்கால் சண்டையின்போது இலங்கை இராணுவத்தினரும் வான்படையும் வைத்தியசாலைகளைக் குறிவைத்துத் தாக்குதல்களைத் தொடுத்தன. அந்தத் தாக்குதல்களுக்கெல்லாம் அடியெடுத்துக் கொடுத்ததாக, முன்னுதாரணமாக யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரி மீது இந்தியப் படைகளால் தொடுக்கப்பட்ட தாக்குதலைச் சொல்லலாம். வைத்தியசாலை வளவினுள் விடுதலைப் புலிகள் ஒளிந்திருப்பதாகக் கூறிக்கொண்டு உள்நுழைந்த ‘அமைதி’ப் படையினர்‘ வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளிகள் உள்ளடங்கலாக 70 பேரைச் சுட்டுக்கொன்றனர். பிணங்களோடு பிணங்கள் போலவே கிடந்து உயிர்தப்பிய சிலரது வாக்குமூலங்கள் நெஞ்சை அதிரவைத்தன.

‘இப்படியெல்லாம் நடக்கக்கூடுமா?’என்ற அதிர்ச்சியிலிருந்து எங்களால் மீள முடியவில்லை. ‘ஒரு தாய் தன் குழந்தைக்கு நஞ்சூட்டிக் கொன்றாள்’ என்ற செய்தி எவ்வளவுக்கெவ்வளவு அதிர்ச்சியூட்டுமோ அதனிலும் அதிகமதிகமான அதிர்ச்சியில் திகைத்துப்போனோம்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் சண்டை தொடங்கிய பிற்பாடு, பொதுசனங்களெல்லாம் புலிகளானார்கள். பெரும்பான்மைச் சிங்களச் சிப்பாய்களுக்குப் பதிலாக, ‘இறையாண்மை’மிக்க இந்தியாவின் பன்மொழி பேசும் சிப்பாய்கள் இனவழிப்பைச் சிரமேற்கொண்டார்கள்.

நல்லூர்க் கோயில் ஞாபகத்திற்கு வரும்போதெல்லாம், பசியின் ஞாபகமும் கூடவே வந்துவிடுகிறது. இந்திய அமைதிப்படையின் அட்டூழியத்திற்கு அஞ்சி கோயிலுக்குள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்த பல்லாயிரக்கணக்கானோரில் நாங்களும் இருந்தோம். ஒரு துண்டு பாணுக்காக (தமிழகத்தில் ரொட்டி) ஏங்கிப் பசித்திருந்த அந்த நாட்கள் மறக்கப்படக்கூடியனவல்ல. ஓயாத பேச்சொலிகள், கைது செய்யப்படுவோம் என்ற பதட்டம், உயிர்ப்பயம், குழந்தைகளின் அழுகுரல், இரவுகளில் எப்போதாவது வெடித்தெழும் விசும்பல்கள், மூத்திர-மல நாற்றம் என்று கோயிலின் முகமே மாறிவிட்டது.

இது எங்கள் குடும்பத்தின் கதை மட்டுமன்று; அந்த மண்ணில் வாழ்ந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அவலம். அமைதிப்படை என்று வந்தவர்கள் சாதாரணர்களின் வாழ்வில் எத்தகைய கோரத்தாண்டவத்தை நிகழ்த்தினார்கள். அவர்களுடைய நம்பிக்கைகளின் மீது எப்படிக் காறியுமிழ்ந்தார்கள் என்பதைப் பேச விரும்புகிறேன். இந்தியா என்ற வல்லரசு எளிய மக்களின் வெறுப்புக்கு எவ்விதம் ஆளானது என்பதைப் பகிர விரும்புகிறேன். காரணமற்ற வெறுப்பை ஈழத்தமிழர்களோ தண்டகாரண்யவாசிகளோ நாகாலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், காஷ்மீரைச் சேர்ந்தவர்களோ கொண்டிருக்கவில்லை என்பதை, இந்தியாவின் ‘தேசபக்தர்கள்’புரிந்துகொள்ள வேண்டும். முதலாளித்துவ சார்புடைய, மக்கள் விரோத அரசுகளன்று; மக்களே கரிசனைக்குரியவர்கள்.

பசி பொறுக்கமாட்டாத ஒருநாளில் எனது பெற்றோரும் நானும் நல்லூர்க் கோயிலை விட்டு வெளியேறி எங்கள் பெற்றோரின் கிராமத்துக்குப் போனோம். தெருவோரம் விழுந்து கிடந்த பிணமொன்றின் தலையை நாய் முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. எங்கெங்கோ எறிகணைகள் விழுந்து வெடிக்கும் ஓசை. துப்பாக்கி வேட்டுகளின் விடாத சத்தம். இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடுஞ்சமர் நடந்துகொண்டிருந்தது.

எனது பெற்றோரின் ஊரில் சில நாட்களே அமைதி நீடித்தது. ‘அமைதி’ப்படை நெருங்கி வந்த பிறகு அமைதி நிலவுதல் எங்ஙனம் சாத்தியம்? அவர்கள் ஊரை நோக்கி வருகிறார்கள் என்ற செய்தி அறிந்த அடுத்த நிமிடமே, புயலில் அலைக்கழியும் பறவைகள் போல தெருக்களில் அலைமோத ஆரம்பித்துவிட்டோம். உயிர்ப்பயம் எங்களை விரட்டியது. வீடுகளைப் பூட்டியும் பூட்டாமலும், ஓரிரு ஆடைகளுடனும் சொற்ப கையிருப்புகளோடும் வெளியேறி நடக்கத் தொடங்கினோம். எங்கே செல்வது என்ற சர்ச்சைகளின் பின் கோயில்களுக்குச் செல்வது என்று முடிவாயிற்று. சிலர் தேவாலயங்களை நோக்கிப் போனார்கள். வேறு சிலர் இந்துக் கோயில்களை நோக்கிப் போனார்கள். என் தாயார் ஒரு பானையில் அரிசியைப் போட்டுத் தலையில் சுமந்து வந்தார். அது எத்தகைய பெறுமதியானது என்பதை நாங்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

வெளியில் குண்டுச் சத்தங்கள் தொடர்ந்துகொண்டேயிருந்தன. மூளாய் என்ற ஊர் வழியாக அமைதிப் படை உள்நுழைந்துகொண்டிருப்பதாகச் சிலர் சொன்னார்கள். நாங்கள் ‘கடவுளே… கடவுளே’என்று அரற்றியபடி தஞ்சம் புகுந்த இடங்களுள் தவித்தபடியிருந்தோம். ஈற்றில் இந்திய இராணுவம் பேராரவாரத்துடன் ஊர்மனைக்குள் நுழைந்தது.

கண்ணிமைத்து மூடும் நேரத்திற்குள் வானைக் கீறி மறையும் மிராஜ் விமானங்கள் பேரிடி போன்ற சத்தத்தோடு பறந்து அச்சுறுத்தின. கோயில் அர்ச்சகரது கழிப்பறையை இளம்பெண்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. மற்றவர்கள் கோயிலைச் சுற்றவர இருந்த வயல்களுக்குள் மலங்கழித்தார்கள். கழிப்பறைக்கு இருக்கும்போது அங்கேயே குண்டு வீழ்ந்து இறந்துவிடலாகாது என்பதே எங்களது பிரார்த்தனையாக இருந்தது. ஆரம்பத்தில் அவரவர் கொண்டு வந்திருந்த அரிசியில் உணவு சமைத்து உண்டோம். இராணுவத்தினரால் ‘ரேஷன்’கணக்கில் எப்போதாவது அரிசி வழங்கப்பட்டது. பெரும்பாலும் பீற்றூட் கறியும் பருப்பும்தான். நல்ல உணவு என்பதைக் கனவில் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. வீடுகளில் தானியங்கள் இருந்தபோதிலும் அங்கு சென்று எடுத்துவர எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், அப்படிச் சென்றுவருவது ஆபத்து மிகுந்ததாக இருந்தது. ஆகவே, நாங்கள் எப்போதாவது அல்லது கிடைக்கும்போது உணவு உண்ண எங்கள் வயிறுகளைப் பழக்கப்படுத்திக்கொண்டோம்.

இருந்திருந்துவிட்டு எங்களை வரிசையாக கோயிலிலிருந்து வெளியே வரச் சொல்வார்கள். கைகளை உயர்த்திக்கொண்டு வெளிவரவேண்டும். அடையாள அணிவகுப்பு போல ஒன்று நடத்தப்படும். குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவது தாங்கமுடியாத அவமானத்தை அளித்தது. அப்போது ஒருவர் கண்களை மற்றவர்கள் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவோம். குறிப்பாக வயதானவர்களின் கண்களை நாங்கள் பார்ப்பதேயில்லை. மரியாதைக்குரிய அவர்கள் இழிவாக நடத்தப்படுவதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உள்ளுக்குள் கோபநெருப்பு கனன்றுகொண்டேயிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பல இளைஞர்களும் இளம்பெண்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். இந்திய இராணுவத்திடம் பிடிபடுவதைக் காட்டிலும் அது பாதுகாப்பானது என்று நினைத்தது மட்டும் போராட்டத்தில் தம்மை இணைந்துகொள்ளக் காரணமாக இருக்கவில்லை. ‘இழிவுசெய்யப்பட்டோம்’ என்ற சுடுநினைவும் அவர்களை போராட்டம் நோக்கி உந்தித் தள்ளியது.

அன்று மட்டுமென்றில்லை; காலகாலங்களாக ‘நீங்கள் மனிதர்களல்ல… மனிதர்களல்ல…’என்று இடைவிடாது ஒலித்த இனவெறி, பிராந்திய வல்லாதிக்கக் கூச்சல்களே இளைஞர்களையும் பெண்களையும் களமாடத் தூண்டியது என்பதை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.

அமைதிப் படை பலத்த தாக்குதலுக்கு ஆளாகும் நாட்களில் அந்தத் தாக்குதல் அகதி முகாம்களில் எதிரொலிக்கும். இரவுகளில் சப்பாத்துக் கால்கள் பேரோசையெழுப்ப அகதி முகாம்களுக்குள் நுழையும் படையினர், ஒவ்வொரு முகங்களாக ‘டார்ச்’வெளிச்சத்தில் பார்ப்பார்கள். துணியால் முகம் மறைத்து அவர்களோடு வந்திருக்கும் முகமூடி (காட்டிக் கொடுப்பவர்) விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர்களை அடையாளங் காட்டுவார். (அந்தப் புண்ணிய கைங்கரியத்தை பெரும்பாலும் ஈ.பி.ஆர்.எல்.எப். இனரே செய்துவந்தனர்.) அடையாளங் காட்டப்பட்டவரை கூட்டத்திலிருந்து வெளியில் இழுத்தெடுப்பார்கள். அவரை அழைத்துச் செல்லவிடாமல் உறவினர்கள் காலைப் பிடித்து இழுப்பார்கள். அல்லது அமைதிப் படையின் கால்களில் விழுவார்கள். காலில் விழும் உறவினரை மிலேச்சத்தனமாகத் தாக்கிவிட்டு ‘சந்தேக நபர்’களை இழுத்துச் செல்வார்கள்.

இளம்பெண்களை வைத்திருக்கும் தாய்மார்கள் படையினரைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். ‘அமைதி’ப்படையினரின் தலையாய பணிகளுள் ஒன்றாக பாலியல் வல்லுறவும் அமைந்திருந்ததே அந்த அச்சத்திற்குக் காரணம்.

உரிமைகளுக்காகப் போராடும் சிறுபான்மை இனத்துப் பெண்களை வல்லுறவு செய்வதன் மூலமாக, அந்த நிலத்தையே வெற்றிகொண்டதாக இறையாண்மையுள்ள அதிகாரங்கள் மமதை கொள்ளும் ‘போர்நெறி’களை நாமறிவோம். இந்திய அமைதிப் படை ஈழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். பயணங்களின்போதும் சுற்றிவளைத்துத் தேடுதல் போன்ற நடவடிக்கைகளின்போதும் பெண்கள் தங்கள் உடல்களையே தமக்கு எதிரிகளாகக் கருதவேண்டியிருந்தது. சோதனைச் சாவடிகளில் பேருந்துகளிலிருந்து ஆண்கள் இறக்கிவிடப்படுவர். அது பெண்கள் என்ற இரக்கத்தின்பாற்பட்டதன்று; இராணுவத்தின் பாலியல் தினவின்பாற்பட்டதே. மார்புகளை அழுத்தி, ‘குண்டு இருக்கிறதா?’என்று பற்களைக் காட்டும்போதும், பையைச் சோதனையிடும் சாக்கில் பெண்களது முழங்கால்களில் தங்களது ‘ஆண்மை’யை அழுத்திப் பரிசோதிக்கும்போதும் நாங்கள் கண்களில் நீர்முட்டச் சகித்துக்கொண்டோம். அருவருப்போடு அழுத்தி அழுத்தித் தேய்த்தாலும் போகாத அழுக்கைப் போல அந்த ஞாபகம் காலம் முழுவதும் இருக்கும். அமைதிப் படையினர் தமது உணவுத் தயாரிப்பின்போது கடலை எண்ணெயையே பயன்படுத்தினார்கள். பாம்புகளின் அருகாமையை உழுந்து வாசனை மூலம் அறிந்துகொள்வதுபோல, (பாம்புகளின் கொட்டாவி உழுந்து வாசனையுடையது என்பார்கள்) கடலை எண்ணெய் வாசனை இந்தியப் படையினரது பிரசன்னத்தை அறிவித்துவிடும்.

ஒருவழியாக, அகதி முகாம்களிலிருந்து வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டோம். ஊரின் முகமே மாறியிருந்தது. எறிகணை வீச்சினால் கட்டிடங்கள் சிதைந்திருந்தன. எங்களுக்குத் தெரிந்த பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். எங்கெங்கு திரும்பினும் இந்திய இராணுவச் சிப்பாய்களே தென்பட்டார்கள். பல வீடுகள் அவர்களால் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன. தற்காலிகமாகத் தங்கவந்த இடத்திலிருந்து யாழ்ப்பாண நகருக்குத் திரும்பிவிட நாங்கள் தீர்மானித்தோம். அங்குதான் எங்களது உடமைகள் இருந்தன. மேலும், அந்தக் கடின காலத்தில் உறவினர்களது வீடுகளில் அவர்களுக்குச் சுமையாக நீண்ட நாட்கள் தங்கியிருப்பது உவப்பானதாகவோ நியாயமானதாகவோ இருக்கவில்லை.

ஏறக்குறைய பத்து மைல் தூரத்தை கால்நடையாகவே நாங்கள் கடக்கவேண்டியிருந்தது. பேருந்துகள் ஓடவில்லை. பத்திரிகைகள் கிடைக்கப் பெறவில்லை. அஞ்சலகங்கள் உள்ளிட்ட எந்தவொரு அலுவலகமும் இயங்காத காரணத்தால் தனித் தனித் தீவுகளில் தொடர்பறுந்தவர்களாக நாங்கள் வாழவேண்டியிருந்தது. யாழ்நகருக்குத் திரும்பும் வழியெங்கும் நாட்பட்ட பிணங்களை நாங்கள் பார்த்தோம். அவற்றிலிருந்து எழுந்த துர்நாற்றம் தாங்கமுடியாததாக இருந்தது. கட்டிடங்கள் உருக்குலைந்து கிடந்தன. இடிபாடுகள் நிறைந்த நகரமொன்றினூடாக காலமற்ற காலமொன்றினுள் நடப்பதைப் போல நாங்கள் நடந்துபோனோம். எந்நேரமும் கொல்லப்படலாம் என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. துப்பாக்கிச் சன்னங்களை நினைத்து முதுகு கூசியது. வழிவழியே அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டோம்.

யாழ் நகருக்கு அண்மையிலிருந்த (பெயர் மறந்துபோய்விட்டது) மயானத்திற்கு அருகிலிருந்த இராணுவ முகாமில் ஒரு சீக்கிய இராணுவத்தினன் முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டிருந்தான். அப்படியொரு உயரமும் பருமனுமான மனிதனை நான் இன்னமுந்தான் கண்டதில்லை. வேற்றுலகவாசியோவென்று ஐயுறும்படியான தோற்றம். திடீரெனத் திரும்பி கண்களைப் பார்த்தபோது உயிரே உறைந்துபோனாற்போலிருந்தது. கட்டளை இன்றியே நின்றுவிட்டிருந்த எங்களைப் பார்த்து அதிசயிக்கத்தக்க விதமாகச் சிரித்தபடி ‘போ’என்று கையசைத்தான். நாங்கள் ஏறத்தாழ ஓடி அவ்விடத்தை நீங்கினோம். அன்றைக்கு மட்டுமல்ல; வேறு சில சூழ்நிலைகளிலும் இந்திய அமைதிப்படையிலிருந்த சீக்கியப் படையினர் தமிழர்களிடம் ஒப்பீட்டளவில் கருணையோடு நடந்துகொண்டதை அவதானித்திருக்கிறேன்.

நாங்கள் வாழ்ந்திருந்த தெருவே வெறிச்சிட்டிருந்தது. அயலவர்களில் பலர் எங்கேயென்றே தெரியாதபடி காணாமல் போயிருந்தார்கள். பக்கத்து வீடு இந்திய அமைதிப் படையின் இருப்பிடமாகியிருந்தது. ஒரு இரவுகூட அங்கு நிம்மதியாக உறங்க முடியுமென்று தோன்றவில்லை. பாலைவனத்தில் தன்னந்தனியாக மாட்டிக்கொண்டதாக உணர்ந்தோம். இவை போதாதென்று பக்கத்து வீட்டிலிருந்து அடிக்கடி எழுந்த அழுகுரல்கள் எங்களை நிலைகுலைய வைத்தன. “ஐயோ… ஐயோ””என்று பெண்கள் அலறியழும் ஓசைகளைக் கேட்டோம். “என்னை ஒன்றும் செய்யாதையுங்கோ…”என்று மன்றாடும் குரல்களைச் செவியுற்றோம். பாலியல் வதைகூடமொன்றின் அருகில் நாங்கள் இருந்துகொண்டிருக்கிறோம் என்ற நினைவு பதைபதைக்கச் செய்தது. என் தாயின் முகம் பித்துப் பிடித்தாற்போல மாறியிருக்கக் கண்டேன். தந்தையோ இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தார். அந்த இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்தோம். அதிகாலையில் பேருந்து நிலையத்தில் இருந்தோம். எங்கள் குடும்பம் வவுனியாவை நோக்கிப் பயணப்பட்டது. அங்கு எனது அண்ணா இருந்தார். யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடும்போது,வவுனியாவில் நிலைமை சகித்துக்கொள்ளத்தக்கதாக இருந்தது. அதன் பிறகு எங்கள் உடமைகளை எடுத்துக் கொள்வதற்காகக் கூட நாங்கள் யாழ்ப்பாண வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை.

ஆனால், ஞாபகங்கள் தசாப்தங்களைத் தாண்டிப் பயணிக்கின்றன. ‘ஐயோ… ஐயோ’என்ற அலறல் இன்னமும் மனசுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. எங்காவது கடலை எண்ணெய் மணத்தை நுகர நேர்ந்தால், இரு தசாப்தங்களுக்கு முந்தைய அந்தக் கொடிய காலத்துள் சென்று விழுந்துவிடுகிறேன். தலை பிய்ந்து கிடந்த அந்தப் பெயரறியாப் பிணத்தையும், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கிணற்றில் வீசியெறியப்பட்டிருந்த பெண்ணின் நீரில் ஊறிச் சிதைந்த கண்களையும் எங்ஙனம் மறப்பது?

1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி ஈழத்திலிருந்து இந்திய ‘அமைதி’ப் படை வெளியேறிவிட்டதாக (அல்லது வெளியேற்றப்பட்டதாக) எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,அவர்கள் எப்போதும் வெளியேறவில்லை என்பதை நாமறிவோம்.

நன்றி: 'பறை' சஞ்சிகை, பொதியவெற்பன் ஐயா

25 நவம்பர், 2011

http://tamilnathy.blogspot.com.au/2012/05/blog-post_17.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் பைத்தியம்,

நானும் இங்கே சில இந்திய தேசியத்தூன்களுடன் நட்பாக உள்ளேன், அவர்களின் ஒருவரின் தந்தையார் "ஆபரேஷன் பூமாலையில்' விமானியாக வேலைசெய்தவர், அவரது இன்னுமொரு உறவினர் விமானப்படையில் விமானியாக இருந்தவர். அவரும் நீங்களும், உங்களை போல பலரும்/ சிலரும் நினைப்பது போலத்தான் இருக்கிறார். இந்திய அமைதி குலைக்கும் படை, அமைதி காக்கும் பணியில்தான் ஈடுபட்டதென வாதிடுவார். ஆனால் அவர், தான் ஒரு தமிழ் பைத்தியம் என்று சொல்லமாட்டார். எனது சிறிய இந்திய நண்பர் வட்டாரத்தில், ஒருவர் இருக்கிறார், அவர் தான் ஒரு இந்தியன் அல்ல, சென்னைத்தமிழன் என்று சொல்லுவார். ஆனால் நீங்கள் இரண்டிற்கும் இடையில் நிற்கிறீர்கள். நாங்கள் மணிரத்தினத்தை தமிழன் என்று கொடாடுவோம், ஆனால் அவர் எங்கள் போராட்த்தை பற்றி கேவலமாக படம் எடுப்பார். அண்மையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திருப்ப பார்க்க சந்தர்பம் கிடைத்தது, அதிலே இந்தியன் ஆமி பாடசாலை பிள்ளைகளுக்கு ? உணவு கொடுப்பார்களாம், அதை போராளிகள், அந்த உணவு கொடுக்கும் வீரர்களை சுடுவார்களாம். அந்த நேரத்தில் அவர்கள் தங்களை சுட்டவரை நோக்கி ஒடுவார்கலாம். அப்படி எல்லாம் கற்பனை பண்ண மணிரத்தினால் தான் முடியும். இதில் உள்ள கடினமான பக்கம் எதுவென்றால் நாங்களும் உந்த குப்பைகளைத்தான் பார்க்கின்றோம். ஏனெனில் நாங்களும் உலகமயமாக்கப்பட்ட நிலையில் தான் உள்ளோம். எனவே நீங்கள் கேட்ட கேள்விகள் எல்லாம், "இந்த உலகமயமாக்கப்பட்ட இந்திய இளைஞர்களிடம்" மண்டிப்போய் உள்ளதென்பது உண்மைதான். உங்களது கேள்விகள் மூலம், எங்களில் சிலராவது தங்கள் பாதிப்புகளை சொல்லவதன் மூலம், இன்னும் கொஞ்சமாவது உங்கள் படையப்பர்றி இன்னும் கொஞ்சம் அறிந்தால், இங்கே இன்னுமொருவர் சொன்னமாதிரி, காங்கிரஸ் கட்சிக்காரர்களே, "தமிழ் ஈழம் ராஜீவ்இன் விருப்பம் என்று" செயற்பட தொடங்கலாம்.

இன்னுமொன்று, நீங்கள் சொல்லும், மேலும் மேலும் இந்திய எதிர்ப்பை தூண்ட வேண்டாம்/ அல்லது கிளற வேண்டாம் என்பது தேவைதான். ஆனால் அது எதுவரைக்கும் என்பதுதான் தெரியவில்லை.

அதே நேரத்தில் நீங்களே போர் குற்ற ஆதாரம் போல; வீடியோ கொண்டுவா, படம் கொண்டுவா என்பது எங்கள் ஊரில் சொலும் ஒரு பழமொழியைத்தான் நினைவு படுத்துகிறது " தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகிறது போல"

உங்களை மாதிரி சிலபோராவது, எங்கள் போராட்டத்தை புரிந்து கொண்டால், நாளடைவில் மாற்றங்கள் நிகழலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், ஒரு ராணியக்காவுக்குள்ளேயே , இவ்வளவு கதைகள் புதைந்திருக்கின்றன! இப்படி எத்தனை, ராணியக்காக்களின் கதைகள், எமது மண்ணுள் புதைந்து கிடக்கின்றனவோ?

உங்கள் ஒரு கதை எமது மொத்த அழிவுகளையும் சொல்லி நிற்கின்றது!

உளமார்ந்த நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கர மடத்தின் பார்ப்புக்கு ஒரு நீதி! மனு தர்மத்தின் நியதி!

பார்ப்பனியத்தின் தலைமை பீடமாக திகழ்ந்த சங்கர மடத்தை அவாள்களும் சரி, அவாள்களின் அரசியல் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸூம் சரி என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தற்போது நித்தியானந்தா ஆதீனமாக மலர்ந்திருக்கும் நிலையில் யாரும் ஜெயேந்திரன் விவகாரத்தை எழுப்பி விடக்கூடாது என்பதில் தினமணி வைத்தி மாமா மிகவும் கவலைப்ப்படுவது அதற்கோர் சான்று. அதாவது ஜெயேந்திரன் மடாதிபதியாக இருக்கும் போதுதான் குற்றம் சாட்டப்பட்டாராம். அது நீதிமன்றத்தால் நிரூபணமாகாத நிலையில் அவர் பதவி விலக தேவையில்லையாம். ஆனால் நித்தியானந்தா பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் புதிதாக மடத்தின் தலைவராக வருவது சரியில்லை என்று புலம்புகிறது தினமணி. எனில் அவர் நித்தியானந்தா தியான பீடத்தின் தலையாக வலம் வருவதில் வைத்திக்கு உடன்பாடுதான். புதிய பதவிதான் பிரச்சினையாம்.

நெஞ்சு நிமிர்த்தி ” நீதான் குற்றவாளி” என்று சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைதான், “நித்தியானந்தா ஆதினத்திற்கு பொருத்தமானவர் அல்ல, மரபுகள் தேவைப்படாத சித்த மரபைச் சேர்ந்தவர்”, என்றெல்லாம் செத்துப்போகும் பாயிண்டுகளை வைத்து பேசுகிறார் வைத்தி மாமா. என்னதான் கவனமாக இருந்தாலும் மல்லாக்க படுத்து துப்பும் போது எச்சில் கீழேதானே விழவேண்டும்?

நித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்!

நோ, நோ! திஸ் நான்சென்ஸ் இஸ் நாட் ஒரிஜினல் ஆன்மீகம் என்கிறார் ஜெயமோகன்

கொலையே செய்தாலும் ஒரு பார்ப்பனருக்கு மரண தண்டனை இல்லை எனும் மனு தர்ம விதி ஜெயேந்திரன் விசயத்திலும் அப்பட்டமாக பின்பற்றப்படுகிறது. பார்ப்பனரல்லாத சாமியார்களின் லீலைகளை கண்டிக்கும் எவரும் சங்கர மடத்திற்கு மட்டும் அனிச்சை செயலாய் விலக்கு கொடுத்து விடுகிறார்கள். நித்தியானந்தாவின் படுக்கையறை ஆட்டம் நாறிய போது தனது இந்து பக்தர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக ஆன்மீகம் – போலி ஆன்மீகம் தொடரை ஜெயமோகன் எழுதியிருந்தார்.

ஆனால் செத்துப் போன சீனியர் சங்கராச்சாரியின் சாதித் திமிர், மொழித் திமிர், ஆணாதிக்க திமிர் எல்லாவற்றையும் கடந்து அவர் ஒரு கலாச்சாரக் காவலர் என்று கொண்டாடும் ஜெயமோகன் அந்தக் காவலர் நியமித்த ஜெயேந்திரனது குற்றங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இவர் வேறு, அவர் வேறு என்று ஒற்றை வரியில் கடந்து செல்ல முடியாது. பெருசின் உள்ளொளிதானே சிறுசின் ஞானத்தை கண்டுபிடித்து அரியணையில் ஏற்றியிருக்கிறது. பெருசு உயிரோடு இருக்கும் போது மட்டும் சிறிசு நல்லாத்தான் இருந்தார் என்ற வாதமெல்லாம் பூமாரம் போல திருப்பித் தாக்கும்.

நமது கேள்வி எளிமையானது. அதிகார, அரசியல் தரகு மையமாக மாறியதால் மட்டும் ஜெயேந்திரன் தவறு செய்து விடவில்லை. இந்த வாதத்தை நீட்டித்தால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருமுன்னர் ஆர்.எஸ்.எஸ் கூட ஒழுக்கமாகத்தான் இருந்தது என்றும் சொல்லலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அரசியல் அதிகாரத்தை சுவைப்பதற்காக நெடுங்காலம் போராடிய இந்துமதவெறியர்கள் குறிப்பிட்ட காலத்தில் அதை பறித்தெடுக்கிறார்கள்.

ஒழுக்கத்தை வெறுமனே பாலியல் சார்ந்த தனிப்பட்ட ஒழுக்கமாக மட்டும் குறுக்குவதால் சமூகம் சார்ந்த பேரொழுக்கங்கள் மறைந்து கொள்கின்றன. கூடவே தனது ஆதிக்க பாசிசக் கொள்கையை நியாயப்படுத்தவும் செய்கின்றன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தை மதத்தால் சாதியால் மொழியால் ஒடுக்கும் கும்பல் பெண்ணாசை துறப்பு அல்லது தொடுப்பின் மூலம் தனது சமூக ஒழுக்கக் கேட்டை ஒழுக்கமாக சித்தரிக்கிறது.

ஜெயமோகன் போன்றோர் விழும் இடம் துல்லியமாக இதுதான். அந்த வகையில் பெரிய சங்கராச்சாரி மற்றும் ஆட்சிக்கு முந்தைய ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தன்னளவிலேயே உழைக்கும் மக்களுக்கு எதிரான பார்ப்பன பாசிசத்தை கொள்கையாகவும், மதமாகவும், சடங்காகவும் கொண்டிருந்ததார்கள். இந்த ஒடுக்குமுறை அரசியலை விடவா ஜெயேந்திரனது பாலியல் ஒழுக்கம் கீழானது? இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிறோம். ஒன்றின் வெளிப்பாடு மற்றதை இல்லை என்றோ உயர்ந்தது என்றோ ஆக்கிவிடாது. ஆயினும் இந்த எளிய உண்மையை ஜெயமோகன்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

மக்களுக்கான ஜனநாயகத்தை மறுப்பதால்தான் ஞானிகள், மடங்கள், அற்பவாத இலக்கியவாதிகளின் இருப்பு கருத்தாலும், நடைமுறையாலும் தனது வம்படியான மேல் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. அப்படித்தான் இவர்களது அகங்காரமே நீதிமன்றமாகவும், தன்னிலையே கேள்விக்கு அப்பாற்பட்டும், கருத்தே எதிர்க்கப்படக்கூடாததாகவும் தொழிற்படுகின்றன. அதனால் சமூகத்தின் பரந்துபட்ட செயல் துடிப்பில் வைத்து இவர்கள் எப்போதும் தங்களை விமரிசனம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆகவேதான் இத்தகைய ஞானிகளை நாம் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டுமே அன்றி நம்மை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பாமரத்தனம் என்று ஜெயமோகன் நீண்ட காலமாக ஓதுகிறார். பார்ப்பனியத் திமிரின் இலக்கிய சாட்சியாக அவர் நீடித்திருப்பதன் தத்துவம் இதுதான்.

நன்றி ...வினவு.கொம்

http://www.vinavu.com/2012/05/18/nithyananda-madurai-pontiff-issue-3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் குடும்பத்திற்கு நடந்த இழப்பு இப்போ வாசித்துத்தான் அறிந்தேன் ,மிகவும் கஷ்டமாக இருந்தது .எனது அப்பா மாத்திரம் தான் அப்போ ஊரில் இருந்தார் .டிப்போவடியில் இருக்கும் அக்கா வீட்டில் அப்பா இருக்கும் போது இந்தியன் ஆமி வந்து அந்த பிரதேசத்தில் மாத்திரம் அறுபது பெயர்கள் வரை சுட்டுகொண்டார்கள் .பலர் எமது உறவினர்கள் .

அப்பாவிற்கு அந்த நினைவுகள் இன்னமும் போகவில்லை ,அதுவும் நேர்முன் வீட்டில் கணவன்-மனைவி( இருவரையும் சுட்டு மனைவி காயத்துடன் பலதூரம் இழுபட்டு போயிருக்கின்றார் .அவர்களின் மகனும் பின் புலிகளில் இணைந்தார் .இப்போ இங்கு இருக்கின்றார் .

இந்திய ஆமியின் முதலை கெலி என்று இனம் காணபட்ட உலங்கு வானுர்தி தனது முதலாவது தாக்குதலை கோண்டாவில் டிப்போ அடியில்தான் தொடக்கியது. அதில் பதினெட்டு பேர் உயிர் இழந்தார்கள். இரண்டு பஸ்கள் எரிந்து சாம்பலாகின...........

சிங்கள ஆமியின் கெலி என்றால் நாங்கள் அதிகம் ஒரு பனையோ தென்னையோ கிடைத்தால் அதை சுற்றி சுற்றி வேடிக்கை பார்ப்பதே வழக்கம்.

இந்தியன் ஆமியின் கெலி அடித்த போதுதான் முதல் முதல் ஓடி ஒழிக்க தொடங்கினோம். அதன் சத்தம்தான் எல்லோரையும் அதிர செய்தது.............

தமிழ்ப்பைதியம் , எனக்குத் தெரிந்தவரை தமிழ்னாட்டுத் தமிழர்கள் எவரும் `தறுதலை ` என்னும் சொல்லைப் பாவிப்பதில்லை.

நீங்கள் ஒரு தமிழ் நாட்டுத் தமிழரைப் போல் வேடம் அணிந்து வேண்டுமென்றே இங்கு எதோ உள் நோக்கில் வந்திருகிறீர்கள் என்று சந்தேகிக்கிறேன்.

இதற்கு பிறகும் வெறும் சந்தேகம்தானா???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.