Archived

This topic is now archived and is closed to further replies.

நிழலி

பாலியல் வன்புணர்வு செய்ததா இந்திய ராணுவம்?: ஜெயமோகனின் கேள்வி

Recommended Posts

இந்துத்துவத்தையும், இந்திய தேசத்தின் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் கருத்தியல் தளத்தில் தன் பூரண ஆதரவு கொடுத்து வரும் ஜெயமோகனின் கேள்வி இது

பாலியல் வன்புணர்வு செய்ததா இந்திய ராணுவம்?

அனுபவம், எதிர்வினைகள், சமூகம்

May 162012

அன்புள்ள ஜெ,

நான் இந்திய ராணுவத்தில் 28 வருடங்களாக கர்னலாக பணியாற்றி ஓய்வுபெற்றவன். பல்வேறு விவாதத்துக்குரிய விஷயங்களில் உங்கள் நன்கு சமன்செய்யப்பட்ட கருத்துக்களை வியந்து கவனித்து வருபவன்

சமீபத்தில் உங்கள் கட்டுரைகளில் ராணுவங்கள் கூட்டான பெரும் கொள்ளை மற்றும் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபடுவதைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பதை வாசித்தேன். அதெல்லாம் கடந்தகாலத்தில் உண்மையாக நிகழ்ந்திருக்கலாம், ஆனால் அவை இப்போது அவ்வளவு சாதாரணம் அல்ல. நவீன ராணுவங்கள் எல்லாம் முப்பதுபேர் கொண்ட பிளாட்டூன் எனப்படும் அடிப்படை சிறுகுழுக்களால் வலுவாகக் கட்டப்பட்டவை. லெஃப்டினெண்ட் தரத்தில் உள்ள இளம் அதிகாரிகளால் அவை நடத்தப்படும். இந்த இளைஞர்கள் பெரும்பாலும் கொள்கைப்பிடிப்பும் அதற்கான களங்கமின்மையும் கொண்டவர்களாகவும் இலட்சியவாதத்தை இழக்காதவர்களாகவுமே இருப்பார்கள். ரோந்து சுற்றுதல், கண்காணித்தல் போன்ற வேலைகளை ஈடுபாட்டுடனேயே செய்வார்கள். அவர்கள் இதைப்போன்ற கீழ்த்தரமான செயல்களைத் தங்கள் வீரர்கள் செய்ய ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இதைப் பலமுறை நான் நேரில் கவனித்து உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். இந்த ராணுவ வீரர்கள் ஒரு அராஜகச்சூழலில் பிறந்துவளர்ந்தவர்கள் அல்ல. நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் மனைவி குழந்தைகள் சகோதரிகள் அன்னையர் உண்டு. நாங்களும் அவர்களை நேசிப்பவர்கள்தான். நாங்களும் குடிமை மனசாட்சி கொண்டவர்களே.

நான் ஜம்மு காஷ்மீரில் பல்லாண்டுகள் தொடர்ச்சியாகப் பணியாற்றியவன். என் அனுபவத்தில் நான் ஒருமுறைகூட உண்மையிலேயே பாலியல் வல்லுறவு நடந்த ஒரு நிகழ்ச்சியைக்கூடக் கேள்விப்படவோ சந்திக்கவோ இல்லை. பரஸ்பர ஒப்புதல் மூலம் உறவு நடப்பதுண்டு. ஏழைப்பெண்களை அவர்களின் வறுமையைப்பயன்படுத்தி சிலர் பாலியலுக்கு பயன்படுத்திக்கொள்வதுண்டு. பணம், ரேஷன் பொருட்களை இதற்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள். அதுகூட மிக அபூர்வம். அதன் அபாயம் மிக அதிகம். மற்றபடி பாலியல் வல்லுறவு என்பதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. அப்படி சில குற்றச்சாட்டுகள் மிக அபூர்வமாக வரும், விசாரித்தால் அவை தவறென தெரியும்

உண்மையில் நான் இன்று தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு இலங்கை சென்ற இந்திய அமைதிப்படைக்கு எதிராக செய்து வரும் அவதூறுப்பிரச்சாரத்தால் மிக மனம் வருந்துகிறேன். இலங்கையில் இந்திய ராணுவம் தமிழ்ப்பெண்களைக் கூட்டுக்பாலியல் வல்லுறவு செய்தது என்று இங்கே எழுதுகிறார்கள், மேடையிலே பேசுகிறார்கள். மொத்தத் தமிழ்நாடே மெல்லமெல்ல இந்தத் திட்டமிட்ட அவதூறை நம்புகிறது. உங்கள் எழுத்துக்களைப்பார்க்கையில் அதை நீங்களும் நம்புவதாகவே தெரிகிறது. நீங்கள் இவ்விஷயத்தின் மறுபக்கத்தைச் சொல்லவில்லை என்பதனால் நான் இதை எழுதுகிறேன்.

நான் இவ்விஷயத்தை முன்னாள் ராணுவத்தினருக்கான பல தளங்களிலும் இதழ்களிலும் விவாதித்திருக்கி இதைப்பற்றிக் கேட்டபோது நான் பெற்ற பதில்களை இணைத்திருக்கிறேன். இந்த அதிகாரிகள் எல்லாருமே ஓய்வுபெற்றவர்கள். இந்திய அமைதிப்படையில் வேலைபார்த்தவர்கள். அவர்கள் பொய் ஏதும் சொல்லவேண்டிய தேவை இல்லை

ஜாஸ் டயஸ்

*

indianexservicemen@yahoogroups.com – தளத்தில் ஜாஸ் டயஸ் எழுதியது

அன்புள்ள மூத்த வீரர்களே

நான் தமிழ் இதழ்கலில் இந்திய ராணுவம் ஆபரேஷன் பவன் நடவடிக்கையின்போது ஏராளமான தமிழ்ப்பெண்களை கற்பழித்தது என்ற செய்திகளை வாசிக்கிறேன். இது இன்று திட்ட்மைட்டு பரப்பட்டு பெரும்பாலானவர்களால் நம்பவும் படுகிறது. என்னுடைய நோக்கில் இது மிகமிக அபத்தமான ஒரு குற்றச்சாட்டு. ஏனென்றால் நான் பணியாற்றிய எந்த ராணுவ மையத்திலும் இந்தவகையான செயல்பாடுகளுக்கான வாய்ப்பே கிடையாது.

நான் எதையாவது கவனிக்காமல் விட்டுவிட்டேனா? அக்காலத்தில் இலங்கையில் பணியாற்றிய ஏதாவது மூத்த ராணுவ வீரர் என்னுடைய ஐயத்தை தீர்க்கமுடியுமா? நாம் ஏன் இந்த அப்பட்டமான அவதூறுகளை தீர்க்க எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை?

ஜாஸ்

indianexservicemen@yahoogroups.com தளத்தில் ramantn sarma

எழுதியது

அன்புள்ள மூத்த வீரர்களே

ஜாஸ் டயஸின் மின்னஞ்சலை ஒட்டி இதை எழுதுகிறேன்.

நான் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்த மொத்த நாட்களிலும் அங்கே சி.சி. பீரங்கிப்படையில் பணியாற்றினேன். 1990ல் படைகள் அந்தத் தீவை விட்டு விலகுவது வரை அங்கிருந்தேன். கர்னல் ஹரிஹரன் அப்போது என்னுடைய தலைவராக அங்கே இருந்தார்

பாயிண்ட் பெட்ரோ மற்றும் பட்டிகொலாவ் இடங்களில் விடுதலைப்புலிகளை அரசு உத்தரவின்படி வைத்திருந்த தடுப்புக்காவல் நிலையங்கள் இந்திய ராணுவத்தினரால் காவல்காக்கப்பட்டன. நான் என் பணியின் பகுதியாக நான் அவற்றைப் பார்வையிடச் செல்வதுண்டு. ஒருமுறை நான் பாயிண்ட் பெட்ரோ மையத்துக்குச் சென்றபோது எல்.டி.டி.இ யின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்னிடம் இந்திய அமைதிப்படையால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண் அங்கே இருப்பதாகச் சொன்னார்.

ஆகவே நான் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தேன். தமிழ் ஊடகவியலாளர்களின் முன்னால் அந்தப்பெண்ணை விசாரித்தேன். அந்தப்பெண்மணிக்கு எண்பது வயதிருக்கும். அவர் மிகுந்த அமைதியுடன் இருப்பதாகவே தோன்றியது. இந்திய அமைதிப்படையின் முகாம் ஊழியர்கள் அவரை நன்றாகவே கவனித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்

விடுதலைப்புலிகளின் பேச்சாளர் அவளிடம் அவளை இந்திய அமைதிப்படை கற்பழித்த நிகழ்ச்சியைப்பற்றி சொல்லும்படி தூண்டினார். அவள் விழித்தாள். அவரிடம் ’யார் கற்பழித்தது, யாரை?’ என்று கேட்டாள்

கொஞ்சநாள் கழித்து நான் செனைக்கு வந்தேன். விமானநிலையத்தில் இருந்து இந்திய அமைதிப்படை தலைமையகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது நான் பேருந்துகளில் இந்திய அமைதிப்படையை அவமதித்து ஒட்டப்பட்டிருந்த பல சுவரொட்டிகளைப் பார்த்தேன். இந்திய அமைதிப்படை பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டது என்று அவை குற்றம் சாட்டின. விளம்பரப்பலகைகளில் ஒட்டப்பட்டிருந்த வண்ணச்சுவரொட்டிகளில் பாயிண்ட் பெட்ரோவில் நான் பார்த்த அதே வயதான பெண்மணியின் படமிருந்தது. இம்முறை அவர் செத்துப்போன இளைஞன் ஒருவனின் படத்தை தாங்கிக்கொண்டிருந்தார். அது அவரது மகன் என்று அந்த போஸ்டர் சொல்லியது

இன்றுகூட பல தமிழ் இதழ்கள் இந்த அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் முக்கியமானவை ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் என்னும் இரண்டு இதழ்கள். இந்திய ராணுவம் வெளிப்படையாக இதைப்பற்றி விவாதிக்கமுடியாது என்பதனால் இந்த அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரச்சாரங்கள் உண்மையாக ஆகின்றன. நான் அச்சு ஊடகங்களில் பல கடிதங்களை எழுதியிருக்கிறேன்.

முக்கியமான வினா என்னவென்றால் தமிழர்கள் இந்த எதிர்மறைப் பிரச்சாரத்தை நம்புகிறார்களா என்பதுதான் . என் பதில் இல்லை என்பதே. ஏனென்றால் விடுதலைப்புலிகளுக்காக இந்த பொய்ப்பிரச்சாரத்தை முன்னெடுத்த எந்தத் தலைவரும் எந்த தேர்தலிலும் வென்றதில்லை. வை கோபாலசாமி, ராமதாஸ் ஆகியோரைச் சுட்டிக்காட்டுவேன். பெரிய கட்சிகளுடன் உடன்பாடுகொண்டு சில இருக்கைகளை அவர்களால் வெல்ல முடிகிறது அவ்வளவுதான்.

afvoachennai@yahoogroups.comதளத்தில் Col N Viswanathanஎழுதுகிறார்

அன்புள்ள மூத்த வீரர்களே

நான் இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் இருந்த இறுதி ஒரு வருடம் டெபுடி டவுன் கமாண்டண்ட் ஆகப் பணியாற்றும் அதிருஷ்டம் கொண்டிருந்தேன். எங்கள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் இருந்த மக்களை மீள்குடியமர்த்துவது அவர்களுக்கான தங்குமிடம் ஆரோக்கியம் போன்ற நலப்பணிகளைச் செய்வது கட்டுமானங்களை அமைப்பது போன்றவற்றை மட்டுமே செய்துவந்தது. என்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்களுடன் தொடர்ந்து எங்கள் அலுவலகத்துக்கு வந்துகொண்டே இருந்த ஏராளமான சாதாரண தமிழர்களுடன் பழக நேர்ந்தது. நான் உறுதியாகவே சொல்கிறேன், ஒரேஒரு பாலியல் வல்லுறவுச்செய்தியைக்கூட நான் கேள்விப்படவில்லை. இவையெல்லாம் அன்று புலிகள் அமைப்பு அவர்களுடைய அரசியல் ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து திட்டமிட்டு செய்த பிரச்சாரம் மட்டுமே

விஸ்வநாதன்

******

--------------------------ஜெயமோகன் சொல்றார் கீழே--------------------------------------------------------------------------------------

அன்புள்ள ஜாஸ்,

உங்கள் கடிதம் கொஞ்சநாளாகவே என்னை நிம்மதியிழக்கச் செய்கிறது. இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மிக முக்கியமான சிலரிடம் நானும் இதைப்பற்றிக் கடிதம் மூலம் விசாரித்தேன்.

நான் ஆயுதப்படைகளை அதிகம் சந்தித்ததில்லை. என்னுடைய கருத்து பெரும்பாலும் வரலாற்று வாசிப்பு வழியாக வந்தது. ஒரே ஒரு விதிவிலக்கு, நான் வாச்சாத்திக்குச் சென்று அங்கே இருந்த மக்களைச் சந்தித்திருக்கிறேன்.

வாச்சாத்தியில் காவலர் அக்கிராமத்து மக்களைக் கற்பழித்தார்கள் என்பது உண்மை, நானே இரு பெண்கள் அதைப்பற்றி சொல்வதை நேரில் கேட்டேன். அவர்களின் கண்களை நினைவுகூர்கிறேன். ஆகவே என் எண்ணம் உறுதிப்பட்டது.

இலங்கைக்குச் சென்ற அமைதிப்படையின் நடவடிக்கைகளைப்பற்றி நான் என்னுடைய கருத்து என எதையும் சொன்னதில்லை, காரணம் எனக்கு உறுதியாக ஏதும் தெரியாது. நான் பொதுவாக உலக வரலாற்றில் உள்ள ராணுவம் பற்றிய என் மனப்பதிவை மட்டுமே சொன்னேன்.

ஆனால் இதை ஒட்டி சிலவற்றை நினைவுகூர்கிறேன். இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்ற நாட்களில் அ.ஏசுராசா அவர்கள் காலச்சுவடு இதழில் நா.அமுதசாகரன் என்ற பெயரில் ‘சிங்கத்தின் கால்களும் அசோகச்சக்கரமும்’ என்ற கட்டுரையை எழுதினார்.

மிகவும் கசப்புடன் ஒற்றைப்படையான வேகத்துடன் எழுதப்பட்ட கட்டுரை அது என இப்போது நினைக்கிறேன். அக்கட்டுரை இந்தியஅமைதிப்படையைத் தமிழர்களுக்கு எதிரியாகக் கட்டமைக்க முயன்றது. அதை நான் மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன்[ எம்.காளீஸ்வரன் என்ற பேரில்] விரிவான குறிப்புகளுடன் ஜயகேரளம் என்ற இதழில் வெளிவந்தது. மேலும் பலகட்டுரைகளை நான் அவ்விஷயம் பற்றி மலையாளத்திலும் தமிழிலும் எழுதினேன்.

அக்கட்டுரையில்கூட இந்திய அமைதிப்படை குண்டுதேடும் சாக்கில் பெண்களை மரியாதையில்லாமல் சோதனை செய்கிறார்கள், முன்னறிவிப்பில்லாமல் வீடுகளுக்குள் நுழைந்து சோதனயிடுகிறார்கள் என்ற வகையிலான குற்றச்சாட்டுகளே இருந்தன.

இந்திய அமைதிப்படை பற்றிய பெருமளவில் பாலியல் வல்லுறவுக்குற்றச்சாட்டுகள் உருவானது பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வுக்குப் பின்னர்தான். இந்தியாமீதான கடும் வெறுப்பை உருவாக்குவது சிங்கள தேசியத்தின் தேவை. அதை உருவாக்க புலிகளை பிரேமதாசா பயன்படுத்திக்கொண்டார்.

இன்றுகூட இந்திய அமைதிப்ப்டை அதிகாரிகளுக்கு அன்றைய அரசியல் சுழற்சிகள் புரியவில்லை. ராஜீவ்காந்தி கொலைக்குப்பின்னர்தான் அப்பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. புலிகளின் அரசியல் உத்திகளை ஒட்டி இப்பிரச்சாரங்கள் வடிவமைக்கப்பட்டன.

இதைப்பற்றிப் புலிகளில் சில முக்கியமானவர்களிடம் பேசியிருக்கிறேன். ’போராட்டம் என்பது பிரச்சாரக்களத்தில்தான் முதலில் வென்றெடுக்கப்படும்’ என்று சொல்வாகள். ’போரில் வெற்றி மட்டுமே எல்லாவற்றையும் நியாயப்படுத்தும்’ என்பார்கள். ‘தோல்வி வந்தால்?’ என்று கேட்டால் ‘அதைப்பற்றி யோசிக்கவே கூடாது, கண்டிப்பாக வெற்றிதான்’ என்பார்கள்.

போர் என்று வந்தபின், மரணவெளி கண்முன் திறந்தபின், எல்லாமே நியாயமாகிவிடுகிறதென்பது ஒருவகையில் உண்மையே. அதைப்பற்றி இன்று பேசிப்பயனில்லை.

ஆனால் புலிகளின் இந்தப்பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர்கள் தமிழ்த்தேசியம் பேசும் ஃபாசிஸ்டுகள். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்தியவிரோத அன்னிய அமைப்புகள். இந்த உச்சகட்ட பிரச்சாரத்தை இந்திய ராணுவமோ இந்திய அரசோ எதிர்கொள்ளவே இல்லை. ஆனால் அவர்கள் தாங்களே மிகையாக நாடகத்தனமாகப் பேசி அவற்றை சாயம்வெளுக்கச்செய்தனர்

இந்தப் பிரச்சாரத்தின் முக்கியமான எதிர்விளைவு என்பது உண்மையிலேயே தமிழர்களுக்குப் பேரழிவு வந்து அதைத் தமிழ் ஊடகங்கள் உலகம் முன் கூவிச்சொன்னபோது அதையும் வழக்கமான மிகை, பொய்ப்பிரச்சாரம் என்றே அனைவரும் எடுத்துக்கொண்டார்கள் என்பதே

இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்.

ஜெ

http://www.jeyamohan.in/?p=27320

Share this post


Link to post
Share on other sites

குற்றம் செய்தவன் எவனும் தான் செய்ததை ஒப்புக்கொள்ளபோவதில்லை .அதுவும் இந்திய ஆமிக்காரனை கேட்கவும் வேண்டாம் .

ஆனால் ஜெயமோகனுக்கு அதை நியாயப்படுத்த இப்ப என்ன தேவை வந்தது என்பது விளங்கவில்லை .

Share this post


Link to post
Share on other sites
:rolleyes: ஜெய மோகன் புனை கதைகளை நிறைய வாங்கி வாசிச்சு உச்சுக் கொட்டுங்கோ! சன் ரிவி என்ன செய்தாலும் மெகா சீரியல் பார்க்க ஒரு பெரும் ஈழத்தமிழர் கூட்டம் இருக்கிற மாதிரி, இந்தக் குருவி மண்டைக்கும் எங்களிடையே "முதிர்ச்சியடந்த இலக்கிய வாசகர்" கூட்டம் இருக்கிறது. அது வரை இது எல்லாம் சொல்லும்!

Share this post


Link to post
Share on other sites

அமைதிப்படை விவகாரம் தான் இந்திய ஈழ உறவில் பிரச்சினையின் ஆரம்பம் . நடு நிலையாளர்களுக்கு இன்று வரை குழப்பம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது . தெளிவான பதில் இன்று வரை யாருமே கொடுக்கவில்லை . யாழ் மருத்துவமனை விவகாரம் ஒன்றை தவிர . எனினும் இந்த கட்டுரையின் போக்கு இன்னமும் குழப்பி விடுகிறது . ஏனெனில் அமைதிப்படை காலத்தில் இந்தியாவிற்கு வந்த அகதிகளில் பலர் மாணவர்கள். அவர்களோடு ஒன்றாக பள்ளியில் படித்து இருக்கிறேன் . அவர்களும் அமைதிப்படை அட்டூழியம் செய்தது என்று தான் சொன்னார்கள் . ஆனால் இந்த கட்டுரை அது புலிகளின் திட்டமிட்ட பிரச்சாரம் என்று கூறுகிறது . ( மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்க ஆரம்பிக்கவும் )

Share this post


Link to post
Share on other sites

29jul1987.jpg

29jul1987-1.jpg

அமைதிப்படை வர முன்பு ராஜீ காந்திக்கு சிங்களவன், பிடரியில் அடி கொடுத்து கொல்லப் பார்த்ததில் இருந்து ஆரம்பிக்க வேணும்.

Share this post


Link to post
Share on other sites

facebook இல் இருக்கும் ஒரு தமிழக நண்பரின் கருத்து (இவருக்கு நடுநிலை என்று நடிக்கத் தெரியாது...பல்லாயிரக்கணக்கான ஈழ தமிழ் மக்களுக்கு படு அநியாயம் செய்த இந்திய இராணுவம் செய்த அட்டூளியங்கள் பற்றித் 'எனக்குத் தெரியாது என்று நடிக்கத் தெரியாது")

பரணிதரன்:

ஈழத்தில் இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்கள் அனைத்தையும் - பாதிக்கப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்கள், சாட்சியங்களையும் அந்நேரத்தில் வெளியான பத்திரிகைச் செய்திகள், முக்கிய சம்பவங்களையும் உள்ளடக்கி வெளியான ஒரே புத்தகம் '' The Satanic Force '' (சாத்தானின் படைகள்).

1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் பிரித்தானியாவில் அச்சிடப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் சென்னையில் வைத்து க்யூ பிராஞ்சினால் கைப்பற்றப்பட்டு 5000 பிரதிகளும் எரியூட்டப்பட்டன. 875 பக்கங்களில் வர்ண அச்சுப்பிரதியாக வெளிவந்த இந்தப் புத்தகம் இப்போது ஒரே ஒரு பிரதி மட்டும் லண்டனில் இருப்பதாக தகவல். ஆனால் யாரிடம் இருக்கிறதென்று தெரியாது. 1990 களிலேயே ஒரு புத்தகம் இந்திய மதிப்பில் 5000 ரூபாய்கள்.

-----------------

சாட்சியங்களை மெளனமாக்கிய இந்திய அரசின் செயல்கள் பற்றி தெரியாமல் இருப்பவர்களே அதிகம்

Share this post


Link to post
Share on other sites

அந்த புத்தகத்தை வாங்கி ஸ்கேன் பண்ணி இணையதில் ஏற்றி விட்டால் புண்ணியமா போகும் .

நடிப்பு என்பது எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல இருப்பது தான் என நினைக்கிறேன் .

பிறர் வழியாக கேட்டு ஆறாவது அறிவு ஆராய முற்படுவது நடிப்பில்லை என அடியேனின் தாழ்மையான கருத்து

( கண்ணால் காண்பதும் பொய் காதல் கேட்பது பொய் தீர விசாரிப்பதே மெய் என பெரியோர்கள் சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் விசாரிக்க அல்லது கேள்வி கேட்க ஆரம்பித்தால் வசை மழை கொட்ட ஆரம்பித்து விடுகிறதே )

இங்கும் மாபெரும் முரண்பட்டு காணப்படுகிறது . விடுதலை புலிகளால் வெளியிடப்பட்ட புத்தகம் என்னும் போதே அதன் நம்பக தன்மை கேள்விக்குரியதாகிறது . மேலும் உங்கள் கருத்து அந்த கட்டுரையின் மூல பொருளான விடுதலை புலிகளின் பிரச்சாரமே அமைதிப்படை மேலான குற்றச்சாட்டுகள் என்பதற்கு வலு சேர்க்கிறது

Share this post


Link to post
Share on other sites

-----------------

சாட்சியங்களை மெளனமாக்கிய இந்திய அரசின் செயல்கள் பற்றி தெரியாமல் இருப்பவர்களே அதிகம்

"தெரியாமல்" என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதுவும் ஒரு எழுத்தாளருக்குத் தெரியாமல் இருப்பது என்பது நம்ப இயலாத விடயம். கிழக்கு பாகிஸ்தானில், காஷ்மீரில், அசாமில் எல்லாம் இந்திய மிருகங்கள் பாலியல் வல்லுறவு செய்திருக்கின்றன, செய்கின்றன (அதையும் குருவி மண்டை நம்பவில்லை!). சிறி லங்காவில் மட்டும் இது நடக்காமலிருக்க வாய்ப்பு அதிகம் என்று செய்தவனே வந்து சொன்னால் நம்புபவன் எல்லாம் முதலில் மனிதனே இல்லை, பிறகெப்படி எழுத்தாளன்? இனியாவது புலம் பெயர் தமிழர்கள் இலக்கியம் வேறு போராட்டம் வேறு என்று பல்லவி பாடாமல், இவனது புனைவுகளைப் புறக்கணிக்க வேண்டும். விமானச் சீட்டெல்லாம் வாங்கி கொடுத்து கனேடியத் தமிழர் வீடுகளில் வந்து திண்டு குடிக்க எல்லாம் இவனை இனி அனுமதிக்காதீர்கள்!

Share this post


Link to post
Share on other sites

விடுதலை புலிகளின் மேலான குற்றச்சாட்டுகள் சிங்களவர்கள் வைக்கும் போது என் ஆறாம் அறிவு எப்படி நம்ப மறுக்கிறதோ ............ சிங்களர்களே போர்க்குற்றங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை எப்படி என் ஏழாம் அறிவு நம்ப மறுக்கிறதோ.................. அதே போல புலிகளின் புத்தகம் அமைதிப்படையின் மீது குறை கூறுவதையும் என் எட்டாம் அறிவு நம்ப மறுக்கிறது.

ஒரு சாரார் மீது எதிரிகளான மற்றொரு சாரார் புகார் சொல்லும் போது மிக அவதானமாக கவனிக்க வேண்டும்

( இது தான் நடுநிலை . இது எப்படி இருக்கு ??????? )

"தெரியாமல்" என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதுவும் ஒரு எழுத்தாளருக்குத் தெரியாமல் இருப்பது என்பது நம்ப இயலாத விடயம். கிழக்கு பாகிஸ்தானில், காஷ்மீரில், அசாமில் எல்லாம் இந்திய மிருகங்கள் பாலியல் வல்லுறவு செய்திருக்கின்றன, செய்கின்றன (அதையும் குருவி மண்டை நம்பவில்லை!). சிறி லங்காவில் மட்டும் இது நடக்காமலிருக்க வாய்ப்பு அதிகம் என்று செய்தவனே வந்து சொன்னால் நம்புபவன் எல்லாம் முதலில் மனிதனே இல்லை, பிறகெப்படி எழுத்தாளன்? இனியாவது புலம் பெயர் தமிழர்கள் இலக்கியம் வேறு போராட்டம் வேறு என்று பல்லவி பாடாமல், இவனது புனைவுகளைப் புறக்கணிக்க வேண்டும். விமானச் சீட்டெல்லாம் வாங்கி கொடுத்து கனேடியத் தமிழர் வீடுகளில் வந்து திண்டு குடிக்க எல்லாம் இவனை இனி அனுமதிக்காதீர்கள்!

இப்படியே புறக்கணித்து கொண்டே போனால் யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே உண்மையான தமிழர்களாக மிச்சம் இருப்போம்

Share this post


Link to post
Share on other sites

"தெரியாமல்" என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அதுவும் ஒரு எழுத்தாளருக்குத் தெரியாமல் இருப்பது என்பது நம்ப இயலாத விடயம். கிழக்கு பாகிஸ்தானில், காஷ்மீரில், அசாமில் எல்லாம் இந்திய மிருகங்கள் பாலியல் வல்லுறவு செய்திருக்கின்றன, செய்கின்றன (அதையும் குருவி மண்டை நம்பவில்லை!). சிறி லங்காவில் மட்டும் இது நடக்காமலிருக்க வாய்ப்பு அதிகம் என்று செய்தவனே வந்து சொன்னால் நம்புபவன் எல்லாம் முதலில் மனிதனே இல்லை, பிறகெப்படி எழுத்தாளன்? இனியாவது புலம் பெயர் தமிழர்கள் இலக்கியம் வேறு போராட்டம் வேறு என்று பல்லவி பாடாமல், இவனது புனைவுகளைப் புறக்கணிக்க வேண்டும். விமானச் சீட்டெல்லாம் வாங்கி கொடுத்து கனேடியத் தமிழர் வீடுகளில் வந்து திண்டு குடிக்க எல்லாம் இவனை இனி அனுமதிக்காதீர்கள்!

ஜஸ்ரின்,

இங்கு நான் "தெரியாமல்" என்று குறிப்பிட்டது ஜெயமோகனை அல்ல. அவருக்கு எம்மை விட அதிகம் இது தொடர்பாக தெரியும். இந்தியப் படையின் அட்டூளியங்கள் தொடர்பான அனைத்து விடயஙகளை அறிந்த பின் தான் இந்திய தேசத்தின் மானத்தை காப்பாற்ற தன் இலக்கிய கோவணத்தை அவி்ழ்க்கின்றார் தன் வலைப்பதிவில்

நான் தெரியாமல் என்று சொன்னது இவரது 'விபச்சாரத்தனமான' கருத்துகளை வாசித்து அதையே நம்புகின்றவர்களை

எல்லாம் தெரிந்தும், "என்னோட பக்கத்து சீட்டுக் காரன் ஈழத்தவன் அவன் இப்படிச் சொல்லவில்லை" என்று நடிக்கும் பேர்வழிகளையும் சேர்த்துதான் சொன்னேன்

Share this post


Link to post
Share on other sites

விடுதலை புலிகளின் மேலான குற்றச்சாட்டுகள் சிங்களவர்கள் வைக்கும் போது என் ஆறாம் அறிவு எப்படி நம்ப மறுக்கிறதோ ............ சிங்களர்களே போர்க்குற்றங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை எப்படி என் ஏழாம் அறிவு நம்ப மறுக்கிறதோ.................. அதே போல புலிகளின் புத்தகம் அமைதிப்படையின் மீது குறை கூறுவதையும் என் எட்டாம் அறிவு நம்ப மறுக்கிறது.

( இது தான் நடுநிலை . இது எப்படி இருக்கு ??????? )

இப்படியே புறக்கணித்து கொண்டே போனால் யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே உண்மையான தமிழர்களாக மிச்சம் இருப்போம்

இந்திய மிருகங்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு குருவி மண்டையின் கருத்து நிச்சயம் புறக்கணிப்பு வரை போக வைக்கும். உங்களுக்கு இது அதிகமாகத் தெரியக் காரணம் நீங்கள் "என் வாசலுக்கு நெருப்பு வந்தால் தான் நம்புவேன்" என்ற ரகம். பொறுத்திருங்கோ, நீங்கள் உயிர் வாழும் காலத்திலேயே நடக்கக் கூடும்! <_<

Share this post


Link to post
Share on other sites

ஒன்று மட்டும் நிச்சயம் என்னால் கூற முடியும்!

சிங்கள ராணுவம், இந்திய ராணுவத்தின் தொடர்பு ஏற்பட முன்பு, தற்போது போல அதிகமாக, வன் புணர்வுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் மிகவும் குறைவு!

இதை சிங்கள ராணுவத்திற்கு வக்காலத்து வாங்குவதற்காக இங்கு எழுதவில்லை!

இந்திய இராணுவம், எப்படிப் பட்டது, என்பதற்காக எழுதிகின்றேன்!

அர்ஜுன் எழுதுவது போல, ஜெயமோகனுக்கு இது ஒரு தேவையில்லாத வேலை!

Share this post


Link to post
Share on other sites

ராஜீவின் கொலை சம்பவத்திற்கும் satanic force இற்கும் நெருங்கிய தொடர்பு என்று உளவுப்படை நம்பியது .

புலிகளுக்கெதிரான முறிந்த பனையிலேயே இந்தியன் ஆமியின் அட்டகாசங்கள் பற்றி மிக தெளிவாக இருக்கு .

சில சம்பவங்கள மிகை படுத்தபட்டிருக்கலாம் அதற்காக எதுவும் நடக்கவில்லை என்பது அப்பட்டமான பொய்.

ஜெயமோகனை விட கேடு கெட்ட ஜென்மங்கள் எங்களுக்குள் இன்னமும் ஈழ விடுதலை என்று சொல்லிக்கொண்டு அலைகின்றார்கள் .

Share this post


Link to post
Share on other sites

இந்திய மிருகங்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு குருவி மண்டையின் கருத்து நிச்சயம் புறக்கணிப்பு வரை போக வைக்கும். உங்களுக்கு இது அதிகமாகத் தெரியக் காரணம் நீங்கள் "என் வாசலுக்கு நெருப்பு வந்தால் தான் நம்புவேன்" என்ற ரகம். பொறுத்திருங்கோ, நீங்கள் உயிர் வாழும் காலத்திலேயே நடக்கக் கூடும்! <_<

அன்பரே திருப்பியும் ராங் ரூட்ல போறீங்களே . என் கண்முன் நடந்த முள்ளி வாய்க்கால் சம்பவத்தை விடவா கோரமான சம்பவம் வேண்டும் ??? இனி துயரமான சம்பவமே நமக்கு வேண்டாம் என கூறுகிறேன் .

மேலும் யாராவது முள்ளி வாய்க்காலில் எதுவுமே நடக்கவில்லை என என் முன் வந்து கூறினால் அல்லது நான்காம் ஈழ போரில் தமிழர்கள் பாதிக்க படவில்லை என கூறினால் அல்லது போர் குற்றம் நடக்கவில்லை என கூறினால் முதலில் காலணியால் அவர்களை அடித்து விட்டு தான் பதில் சொல்வேன் . ( கல விதி முறை படி செருப்பால் அடிப்பேன் என கூறினால் நாகரீகம் அற்ற வார்த்தைகளாம் ).

ஏனெனில் முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்கு புள்ளி விவரங்கள், கண்ணால் கண்ட சாட்சியங்கள், மக்கள் தொகை ஒப்பீடல்கள், பல மீடியாக்களின் ஆராய்ச்சிகள் மேலும் பல உறுதியான ஆதாரங்கள் இருக்கிறது . மேலும் முள்ளி வாய்க்காலில் படுகொலை நடந்து இருக்கிறது என அனைவரும் எதிரிகள் உட்பட ஒப்புக்கொண்டு உள்ளனர் .

அது போல தெளிவான சாட்சியங்கள் அமைதிப்படை விவகாரத்தில் இல்லை . கேட்டால் காற்றிலே எழுதுகிறார்கள் அல்லது அங்கே , இங்கே, எனது நண்பருக்கு, எங்களின் பக்கத்து ஊரில், எனது நண்பர் ஒருவர் கூறினார் என பொத்தாம் பொதுவாய் நழுவல் பதில் அல்லது திட்டு வருகிறதே தவிர தெளிவான உருப்படியான பதில்களை இதுவரை காணோம் . யாழ் மருத்துவமனை சம்பவம் தவிர . மேலும் தற்போது உள்ள தொழில் நுட்பங்களை பயன் படுத்தி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் திறமையால் அமைதிப்படையின் மீதுள்ள குற்ற சாட்டுகளை நிரூபிக்க முயற்சி செய்யலாமே ??? நிருபிக்க முடியாது . ஏனெனில் அதற்கான பதிலும் அந்த கட்டுரையிலேயே உள்ளது. நடந்த உண்மைகளை மிகைபடுத்தி கூறும்போது நம்பக தன்மை கேளிக்குறியாகிறது. இதனால் தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் கூட இந்திய மீடியாக்கள் அவ்வளவு கவனம் எடுத்து கொள்ளவில்லை .

மேலும் ஈழ ஆதரவு என்றால் எப்போதும் ஒரு ஜால்ராவை கையில் வைத்துகொண்டு ஜிங் ஜாங் அடித்து கொண்டே இருக்க சொல்கிறீர்களா என்ன ?. மாற்று கருத்துகளுக்கும் பொறுப்பான பதில் கூறி பழகுங்கள் . அதை விட்டு விட்டு ஒரு மாற்று கருத்து கூறினால் உடனே புறக்கணிப்பு மற்றும் துரோகி என தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் போல ஆரம்பித்து விடுகிறீர்களே . என்ன செய்வது பழக்க தோஷம் உங்களையும் விடவில்லை என நினைக்கிறேன்

Share this post


Link to post
Share on other sites

முதலில் எழுத்தாளர் யெயமோகனுக்கு,

இந்திய இராணும் மிக ஒழுக்கமானது என்று நினைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது இன்னும் அவர்களின் ஒழுக்கத்தைப்பற்றித் தெரியாது என்று நீங்கள் அறியாதது போல் நடித்துக் கொண்டிருந்தாலோ தயவு செய்து அவற்றை விட்டுவிடுங்கள். ஒரு தமிழனாக, எழுத்தாளனாக உலாவரும் உங்களுக்கு பல தமிழச்சிகளுக்கு இந்திய இராணுவத்தால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைத் தெரியாது என்றால் அது நகைப்பிற்கு இடமானது. இந்த இலட்சணத்தில் இதற்குள் "உலோகம்" என்ற உங்கள் கற்பனை மிகுந்த கதை ஈழப்போராளியை வேறு மேய்ந்திருக்கிறது. எதை வரலாற்று ரீதியாக பார்த்துவருகிறீர்கள்? நீங்கள் எழுதிய "உலோகம்" நாவலில் ஈழப் போராளிபற்றிப் புனையத் தெரிந்த கற்பனை வளத்திற்கு உண்மையிலேயே பலே சொல்லவேண்டும். அது எப்படி உங்களால் தெரியாது என்று இலாவகமாகப் பதிலளிக்க முடிகிறது. இந்திய இராணுவம் பற்றி ஈழத்தில் ஒவ்வொரு தமிழச்சியிடமும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு கதை இருக்கும். எங்களுடைய விடுதலைக்கான போராட்டத்திற்குள் எத்தனையோ விரக்திகளையும் சுமந்தபடிதான் வாழப் பழக்கப்பட்டுப் போனோம். எந்த ஒரு பெண்ணும் ஒளிவட்டத்தில் வந்து நின்று நான் இராணுவத்தால் சீரழிக்கப்பட்டேன் என்று சொல்லிக் கொள்ளும் அதி உச்ச நாகரீகத்தில் நிர்வாணநிலையில் வாழவில்லை. உங்கள் போன்றவர்'களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் வந்து சொன்னாலும் நம்புவீர்களோ தெரியாது. இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளான எந்த இளம்பெண் தன் நிழல்படத்தைக் கொடுத்து நான் இவர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டேன் என்று சொல்வாள்..87 ஆம் ஆண்டிலிருந்தே எங்கள் இனம் அதிகமான பாலியல் வன்புணர்வுகளையும், அத்தகைய சித்ரவதைகளினூடான படு கொலைகளையும் அதிகமாகச் சந்தித்தது. எவரும் இல்லை என்று மறுத்துவிடமுடியாது. மாராப்புக்குள் கைபோட்ட பரா இராணுவத்தின் செயலைப்பார்த்தும் மௌனமாகத் தலைகுனிந்து நின்ற தமிழ்நாட்டு இராணுவ வீரனின் கண்கள் கலங்கியதை நீங்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை. நீங்கள் ஒரு எழுத்தாளன்தானே உங்களுக்கு ஈழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு தழிழ்நாட்டு இராணுவ வீரனும் கிடைக்கவில்லையா...ஈழத்தில் இந்திய இராணும் செய்தது என்ன என்று சொல்ல?

எங்கள் அவலங்களை உங்களுக்கு ஆதாரங்களோடு சொன்னாலும் நீங்கள் என்ன செய்வீர்கள்..... உங்களுக்கு ஏற்றாறபோல திரிவு செய்து இந்திய இராணுத்தினனை ஈழப்பெண் காமஇச்சையூட்டி வன்புணர்வில் ஈடுபட்டாள் என்று எழுதி பணம் பார்க்க மாட்டீர்களா என்ன?

போங்கய்யா நீங்களும் உங்கள் கருத்தும்

தெரியாது என்று முழுப்பூசணிக்காயை சோத்துக்குள்ளே புதைக்கிறீங்களே........வாழ்க உங்கள் கருத்தும், எழுத்தும்

எழுதத் தெரிந்தளவுக்கு விவரங்கள் தெரியாமல்.......அல்லது நடிப்பா?

Share this post


Link to post
Share on other sites

அன்பரே திருப்பியும் ராங் ரூட்ல போறீங்களே . என் கண்முன் நடந்த முள்ளி வாய்க்கால் சம்பவத்தை விடவா கோரமான சம்பவம் வேண்டும் ??? இனி துயரமான சம்பவமே நமக்கு வேண்டாம் என கூறுகிறேன் .

மேலும் யாராவது முள்ளி வாய்க்காலில் எதுவுமே நடக்கவில்லை என என் முன் வந்து கூறினால் அல்லது நான்காம் ஈழ போரில் தமிழர்கள் பாதிக்க படவில்லை என கூறினால் அல்லது போர் குற்றம் நடக்கவில்லை என கூறினால் முதலில் காலணியால் அவர்களை அடித்து விட்டு தான் பதில் சொல்வேன் . ( கல விதி முறை படி செருப்பால் அடிப்பேன் என கூறினால் நாகரீகம் அற்ற வார்த்தைகளாம் ).

ஏனெனில் முள்ளி வாய்க்கால் சம்பவத்திற்கு புள்ளி விவரங்கள், கண்ணால் கண்ட சாட்சியங்கள், மக்கள் தொகை ஒப்பீடல்கள், பல மீடியாக்களின் ஆராய்ச்சிகள் மேலும் பல உறுதியான ஆதாரங்கள் இருக்கிறது . மேலும் முள்ளி வாய்க்காலில் படுகொலை நடந்து இருக்கிறது என அனைவரும் எதிரிகள் உட்பட ஒப்புக்கொண்டு உள்ளனர் .

அது போல தெளிவான சாட்சியங்கள் அமைதிப்படை விவகாரத்தில் இல்லை . கேட்டால் காற்றிலே எழுதுகிறார்கள் அல்லது அங்கே , இங்கே, எனது நண்பருக்கு, எங்களின் பக்கத்து ஊரில், எனது நண்பர் ஒருவர் கூறினார் என பொத்தாம் பொதுவாய் நழுவல் பதில் அல்லது திட்டு வருகிறதே தவிர தெளிவான உருப்படியான பதில்களை இதுவரை காணோம் . யாழ் மருத்துவமனை சம்பவம் தவிர . மேலும் தற்போது உள்ள தொழில் நுட்பங்களை பயன் படுத்தி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் திறமையால் அமைதிப்படையின் மீதுள்ள குற்ற சாட்டுகளை நிரூபிக்க முயற்சி செய்யலாமே ??? நிருபிக்க முடியாது . ஏனெனில் அதற்கான பதிலும் அந்த கட்டுரையிலேயே உள்ளது. நடந்த உண்மைகளை மிகைபடுத்தி கூறும்போது நம்பக தன்மை கேளிக்குறியாகிறது. இதனால் தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் கூட இந்திய மீடியாக்கள் அவ்வளவு கவனம் எடுத்து கொள்ளவில்லை .

மேலும் ஈழ ஆதரவு என்றால் எப்போதும் ஒரு ஜால்ராவை கையில் வைத்துகொண்டு ஜிங் ஜாங் அடித்து கொண்டே இருக்க சொல்கிறீர்களா என்ன ?. மாற்று கருத்துகளுக்கும் பொறுப்பான பதில் கூறி பழகுங்கள் . அதை விட்டு விட்டு ஒரு மாற்று கருத்து கூறினால் உடனே புறக்கணிப்பு மற்றும் துரோகி என தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் போல ஆரம்பித்து விடுகிறீர்களே . என்ன செய்வது பழக்க தோஷம் உங்களையும் விடவில்லை என நினைக்கிறேன்

நண்பரே,

நான் முதலிலேயே கூறியது போல "இந்திய மிருகங்கள் தமிழ்ப் பெண்களை வல்லுறவு செய்யவில்லை" என்று ஒரு குருவி மண்டை சொன்னால் அதை "கூலாக" மாற்றுக் கருத்து என்று எடுத்துக் கொண்டு நகர நாங்கள் உங்களைப் போல செய்திகளில் மட்டும் ரத்தமும் பிணமும் பார்த்த "எட்டறிவு" ஜீவன்கள் இல்லை. நான் இருந்த மார்ட்டின் வீதியிலேயே இரண்டு கேசுகள் நடந்தது என்று உங்களுக்கோ குருவி மண்டைக்கோ சொன்னாலும் கூட நீங்கள் நம்பப் போவதில்லை. ஏனெனில் சட்டமும் ஒழுங்கும் சாட்சிகளின் அடிப்படையில் நிலை நாட்டப்படும் இந்தியா என்ற "அபிவிருத்தியடைந்த" :rolleyes: நாட்டில் இருந்து நீங்கள் பேசுகிறீர்கள். எனவே சாட்சி இருந்தால் தான் நம்புவீர்கள் நீங்கள்!

Share this post


Link to post
Share on other sites

இந்திய இராணுவம் தமிழீழப் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது உண்மை. இந்திய ராணுவ காலத்தில் இதைத் தவிர்க்க அவர்கள் சோதனை நாடாத்த வீடுகளுக்குள் உள்ளிடுபோது எமது பெண்கள் அனவரும் ஆளுக்கொரு விளக்குமாத்தை எடுத்து வைத்திருப்பதை அனைவரும் அறிவார்கள், காரணம் விளக்குமாத்தைகண்டால் கொஞ்சம் என்ன நிறையவே பயம் அதாவது அவர்கள் அதால் அடித்துவிடுவார்களென்றில்லை, அப்படியான பெண்களைத்தொட்டால் தோசம் பிடித்துவிடுமென. என்னுடைய பாடசாலை சக மாணவியைக் கோவிலில்ப் பார்த்த இராணுவ அதிகாரி ஒருத்தர் அவரைப்பின்தொடர்ந்துபோய் தனக்குக் கலியானம் கட்டித்தா எனப் பெற்றோரை வற்புறுத்திய சம்பவம் உண்மை காரணம் அவ்விராணுவ அதிகாரி மிக உயர் தரத்திலுள்ளவர் அதனால்தான் கொஞ்சம் மரியாதையாக நடந்தார்.

இது ஒன்றும் இட்டுக்கட்டப்பட்ட விடையமே இல்லை உண்மையில் நடந்தவைதான்.

வல்வை கூறியதுபோல் எந்தப்பெண்களும் தாம் இப்படியான பிரச்சனைக்குட்பட்டதை விபரமாக விளக்கமாக கூறுவதையோ அன்றேல் விசாரணக்குட்படுத்தப்படுவதையோ எதிர்காலப் பிரச்சனையைத் தவிர்ப்பதற்காய் முற்படமாட்டார்கள் அதை அவர்கள் தமக்குச் சாதகமாக எடுத்து இப்போது கதை திரிக்க வெளிக்கிடுகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

இந்தியனாமி ரொம்ப,ரொம்ப நல்லவன் அவன் ஈழத்தில எல்லாப் பொண்ணுங்களையும் தன்ட சகோதரிதாய்த் தான் பார்த்தான் ஒரு பெண்ணைக் கூட தன்ட பாலியல் இச்சை தீர்க்க பயன்படுத்தவே இல்லை கண்ணால் கண்ட நாங்கள் சொல்வதெல்லாம் பொய்...இந்தியன் ஆமி எங்கள் பெண்களை மான பங்கப் படுத்தினார்கள் என்று பொய் சொன்னால் உடனே எங்களுக்கு ஈழம் கிடைத்திடும் பாருங்கள் ^_^

முள்ளி வாய்க்காலுக்கு முன் வரைக்கும் இலங்கை இராணுவம் அங்கொன்றும்,இங்கொன்றுமாய்த் தான் பாலியல் வன்புணர்வு செய்தது...பெண்களை கேடயமாக பயன் படுத்தி கூட்டுப் பாலியல் செய்ய கற்றுக் கொடுத்ததே இந்திய இராணுவம் தான் அதனைத் தான் இலங்கை இராணுவம் செய்தது.

தற்போது மாதிரி அந் நேர‌ம் இதை வீடியோவில் பதிவு பண்ணக் கூடிய வச‌தி இருக்கவில்லை இருந்திருந்தால் யாராவது எடுத்துப் போட்டு காசுக்கு வித்திருப்பார்கள்...பாதிக்கப்பட்ட பெண்கள் உயிரோடு இருந்தாலும் தற்போது வந்து தங்களுக்கு இப்படி நட‌ந்தது என சாட்சி சொல்லப் போவதில்லை.

இந்தியன் ஆமியாவது அந்த நேர‌ம் யுத்த வெறியில்,போதையில்,தங்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்ப‌தால் பாலியல் வன்புணர்வு செய்தார்கள் என்று வைப்போம் அவர்களைக் கூட‌ மன்னிக்கலாம் ஆனால் இங்கே வந்து நட‌ந்தது என்ன என்று தெரிந்து கொண்டு அப்படி ஒன்றும் நட‌க்கவேயில்லை என சொல்கிறார்கள் பாருங்கள் அவர்களை மன்னிக்கவே முடியாது...சக சகோதர‌ தமிழ் இனத்திற்கு இது நட‌ந்திருக்கு ஆனால் அவர்களுக்கு தங்கள் இனத்தை விட‌ தங்கள் தாய் நாடு முக்கியமாய் போய் விட்டது

Share this post


Link to post
Share on other sites

எப்படியோ வண்டி லேசா ரூட்டு மாறுது . ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் .

இந்திய ராணுவம் தவறே செய்ய வில்லை என்று இங்கு யாருமே வக்காலத்து வாங்கவில்லை . முதலில் இதை புரிந்து கொள்ளுங்கள் . மேலும் அது எந்த நாட்டின் ராணுவமாக இருந்தாலும் மனித உரிமைகள் மீறலும் பாலியல் துன்புறுத்தலும் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய ராணுவம் ஆகாயத்தில் இருந்து குதித்தது என்றும் யாரும் சொல்ல வில்லை .

உண்மையில் இந்திய ராணுவம் செய்து இருந்தால் கூட என்ன செய்தது என்பதை மிகை படுத்தாமல் கூறுங்கள் என்று தான் கூறுகிறேன் .

உலகின் சக்தி வாய்ந்த அமெரிக்க ராணுவத்தின் தவறுகளையே மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டி காட்டி போராடுகின்றனர். பிறகு ஏன் எந்த மனித உரிமை இயக்கங்களும் அமைதி படை குறித்து வாயை திறப்பதில்லை ????? தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் மனித உரிமை குழுக்கள் என பெயர் வைத்துகொண்டு தப்பு தப்பாய் பேசும் சில குழுக்கள் மட்டுமே உளறுகின்றன.

மார்பில் கை வைத்ததை தமிழ் ராணுவ சிப்பாய் கண் கலங்கியதாக கூறுகிறீர்களே . குறைந்த பட்சம் அவரின் அடையாலங்களையாவது கூறலாமே ....

எந்த தமிழ் ராணுவ வீரனும் இவ்வாறு நடந்ததாக கூறவில்லை. மேலும் தமிழ் ராணுவ வீரர்கள் சிங்கள மக்களை தாக்கியதாகவும் சிலர் குற்ற சாட்டுகளை முன் வைத்துள்ளனர். ஏனெனில் இங்கு இந்தியாவில் வெள்ளை வானோ சிறை பயமோ கிடையாது . குறைந்தது ஓய்வு பெற்ற தமிழ் ராணுவ வீரர்கள் கூட இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் கூறவில்லையே . ஓஹோ அப்படியென்றால் உங்களின் கூற்றுப்படி இந்திய ராணுவத்தில் அதிகமாக உள்ள எங்கள் நாட்டை காக்கும் தமிழனும் கூட உங்களின் பார்வையில் ...................... உடனே ஒரு பதில் வரும் பாருங்கள் ( இந்திய ராணுவத்தை தான் வெறுக்கிறோம் . அதில் வேலை செய்யும் தமிழ் வீரர்களை அல்ல என்று )

யாழ்ப்பாண மருத்துவமனையில் இந்திய ராணுவம் தவறு செய்திருக்கிறது . அதனால் வெளியே சாட்சிகளோடு வெளிவந்து இருக்கிறது . கற்பழிப்பை விட்டு தள்ளுங்கள் . கொத்து கொத்தாய் அரிவாள் கொண்டு இந்திய ராணுவம் கொலை செய்ததாக கூறுகிறீர்களே . அவர்களின் பெயர் மற்றும் ஆதாரங்களோடு வெளியிடலாமே ????

இங்கு அமைதியாக தெளிவாக பண்போடு கருத்தை வைத்து கொண்டு இருக்கிறேன் . தவறாக ஒன்றும் எழுதவில்லை . கள பொறுப்பாளர்கள் கவனத்தில் வைக்கவும் .

ராஜீவ் கொல்லப்பட்ட போது கூட நாங்கள் அமைதி காத்தோம் . காரணம் எதோ இருக்கலாம் என கண் மூடித்தனமாக நம்பிக்கொண்டு தான் இருந்தோம். இன்னும் நம்பிக்கொண்டு தான் இருக்கிறோம் . அதே அமெரிக்கா அல்லது வேறு நாட்டு தலைவர்கள் கொல்ல பட்டு இருந்தால் இந்நேரம் நடந்திருக்கும் கதையே வேறு . இந்தியா பொறுத்ததற்கு காரணம் இந்தியாவிலுள்ள தமிழர்களுக்கு அவர்களின் உறர்வுகளை மதிப்பு அளித்து தான் .ஆனால் நாங்கள் உங்களுக்காக பரிந்து பேசும் போது எங்களிடம் பிற மொழி மக்கள் கேட்கும் கேள்விகள் தான் ஆதாரம் பற்றியது . ஆதாரத்தை காண்பியுங்கள் . நாங்கள் அதற்காகவும் போராட தயார் . இப்போது கூட ஈழ ஆதரவு என்ற பெயரில் இந்தியாவை கொச்சை படுத்தும் தலைவர்கள் தமிழ் நாட்டில் நிறைய பேர் சுக போகங்களோடு இருக்கின்றனர் . ஏனெனில் எங்கள் நாட்டில் கருத்து சுதந்திரம் அதிகம் . முக்கியமான இன்னொரு விடயம் . ஈழ இணையங்கள் அதிகமான பார்வையாளர்களை கொண்டு இருப்பது இந்தியா தான் . நினைத்தால் ஒரே நிமிடத்தில் தடை செய்து விட முடியும் .

ஈழ பிரச்சினையின் ஆரம்பம் ராஜீவ் கொலைக்கு பின் ஆரம்பம் ஆனது அல்ல என்ற தெளிவான கண்ணோட்டம் எங்களுக்கு இருப்பதால் தான் இன்னும் ஈழ தமிழர்களை ஆதரிக்கிறோம் . அதேபோல இந்தியா மீது வெறுப்பை உமிழ்வதாக நினைத்து கொண்டு நீங்கள் வெளியிடும் காஷ்மீர் பற்றிய கருத்துகள் எல்லாம் உங்களின் நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது . ஐநூறுக்கும் மேற்பட்ட கோவில்கள் உடைக்கப்பட்டு காஷ்மிரி பண்டிட்டுகளை கிராமம் கிராமமாக படுகொலை செய்யப்பட்டு ( உள்ளூர் ஆட்களின் உதவியோடு ) சொந்த மண்ணை விட்டு துரத்தப்பட்ட பின்னர் தான் ராணுவம் நுழைந்தது . மேலும் ஜம்முவில் 62 சதவிகித இந்துக்கள் லடாக்கில் 45% புத்த மதத்தை சேர்ந்த சீனாவை விரும்பாத மக்களும் இன்னும் வாழும் பகுதி அது . காஷ்மிரி மக்கள் கூட இந்தியாவின் ஆளுகைக்குட்பட்ட சுயாட்சி பிரதேசமாக இருப்பதையே விரும்புகின்றனர் .மேலும் இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் தான் அங்கே ஆளுகின்றனர் .அந்த மாநிலத்தின் வெளியே அகதிகளாக உள்ள காஷ்மிரி பண்டிட் தொகை இதில் சேர்க்கப்படவில்லை . உங்களுக்கு அநியாயம் நடந்தால் மட்டுமே அநியாயம் . பிறருக்கு அநியாயம் நடந்தாலும் நீங்கள் அதை மறைத்து இந்தியாவை எப்படி எல்லாம் குறை கூற முடியுமோ அதை மட்டும் செய்கிறீர்கள் . காஷ்மீர் படுகொலைகளுக்கு நிறைய ஆதாரங்கள் இருக்கிறது .

தீவிரவாதிகளின் கையாள்களாக மாறியுள்ள சிலர் தூண்டிவிடும் கலகங்கள் மற்றும் அதை ராணுவம் கையாளும் முறைகளே அதிகம் விமர்சிக்க படுகிறது . பாலியல் வல்லுறவு பாலியல் வல்லுறவு என ஓலமிட்டு கத்துவதால் எதிர் கேள்விகள் தான் முளைக்கும் . கேள்விகள் நீளும் போது பிரச்சினைதான் முளைக்கிறது . அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் இந்தியாவின் சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் எதோ இந்தியா முழுவதும் இப்படித்தான் என்பது போல நீங்கள் கதைப்பதை கண்டு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை

இது போன்று ஒரு வருடம் முன்பு கூட கதுதைவு நடந்தது . அப்போதும் இதே போல எழுதினேன் . கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் மலுப்புவதற்கு முயற்சி செய்வது இல்லாவிட்டால் வேறு எங்கோ கவனத்தை திசை திருப்பும் படி எழுதுவது . அல்லது துவேசம் கொண்டு எழுதி திரியை முடக்க முயற்சிப்பது . இது தான் நடந்து கொண்டு இருக்கிறது இங்கே.

இங்கு நாம் எழுதும் கருத்துகள் நம்மில் உள்ள முரண்பாடுகளை களையவே ஒழிய வேற்றுமையை வளர்த்து கொள்வதற்கு அல்ல . தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் .

தங்கள் இனத்தை விட நாடு முக்கியமாகி விட்டது . ஆமாம் நான் அழைக்கிறேன் . நீங்கள் வாழும் நாட்டையும் போராடும் ஈழத்தையும் விட்டு விட்டு வாருங்கள் தமிழ் நாட்டிற்கு . நாங்கள் எழு கோடி பேர் இருக்கிறோம் . தமிழ் நாட்டான் இருபது பேர் சேர்ந்து பத்து பத்து ரூபாய் போட்டு ஈழ தமிழன் ஒருவனை வாழ்நாள் முழுவதும் எந்த கஷ்டமும் வராமல் காப்பாற்றுகிறோம் . அந்த கணக்குப்படி முப்பத்தி ஐந்து லட்சம் ஈழ உறவுகளுக்கு நாங்கள் கை கொடுக்க முடியும் . வந்து விடுங்கள் தமிழ் நாட்டிற்கு . எதற்கு போராட்டம் எதற்கு பிரச்சினை . வருவீர்களா ??????????????????????????????????? உங்களால் வர முடியாது . ஏன்????????????????

வாழ்ந்த இடம் . விளையாடிய இடம் . வளர்ந்த மண் . ஆயிரம் தியாகங்களை கொடுத்து இன்றும் கட்டிக்காக்கும் மண் ஈழம் . அனைவரும் எங்கள் மண்ணான ஈழத்தில் சாவோமே ஒழிய பிறர் நாட்டில் வந்து யாசகம் கேட்டு பிழைக்க மாட்டோம் என பதில் வரும் . நீங்கள் இந்த பதில் கூறுவீர்களா இல்லையா என தெரியாது . ஆனால் இன்றும் ஈழத்தில் உலகின் மிகவும் சகிக்க முடியாத கொடூரங்கலோடும் துன்பங்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் ஈழ உறவுகள் கண்டிப்பாக இந்த பதிலை தான் கொடுப்பார்கள். புலம் பெயர் பற்றி நான் கதைக்க விரும்பவில்லை .

அதே போல எங்களுக்கும் எங்கள் நாடு மிக முக்கியம் . தமிழன் என்பவன் தனது மண் மீது மதிப்பு கொண்டவன் . ஈழ தமிழனுக்கு ஈழத்தின் மேல் பற்று என்றால் தமிழ் நாட்டானுக்கு இந்தியாவின் மேல் பற்று . இதில் என்ன குறை கண்டீர் ??? ( இப்ப புரட்சி முழிச்சிக்கிட்டு குரல் கொடுக்கும் பாருங்க )

தமிழர்கள் தனிநாடு கேட்கவில்லை என சுஷ்மா சொன்னதும் காட்டு கத்தல் . அதே த தே கூட்டமைப்பு சொல்லுது சத்தத்தையே காணோம் .

இந்தியாவை வெறுக்கிறார்கள் தமிழ்நாட்டை நேசிக்கிறார்கள் . இந்தியரை வெறுக்கிறார்கள் . தமிழனை விரும்புகிறார்கள் . என்ன கொடுமை சரவணன் சார் .

Share this post


Link to post
Share on other sites

இது குற்றவாளிகளிடமே சாட்சி சொல்லச் சொன்ன கதையாக் கிடக்கு.

இந்திய இராணுவம் வருவதற்கு முன், சிங்கள இராணுவத்தால் குறைந்த அளவிலேயே தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு நடத்தப்பட்டது. பாலியல் வல்லுறவை கைத்தொழிலாக சிங்கள இராணுவத்திற்குக் கற்றுக் கொடுத்தவர்கள் இந்தியப் படைகள். வயதான பெண்களையும் விட்டு வைக்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites

இந்தியா என்னும் தேசம் காலனியவாதிகளான ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.தமிழ் நாடு என்னும் தமிழ்த் தேசமும் ஈழத் தேசத் தமிழருக்குமான உறவு என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் தமிழ்ப்பைத்தியம்.வரலாற்றைப் படியுங்கள் உண்மை விளங்கும்.

Share this post


Link to post
Share on other sites

வரலாறு என்பதே தனக்கு பிடித்தபடி முன்னோர்கள் மிகைபடுத்தி எழுதியது தானே நாரத நண்பா . அதையே பார்த்துகிட்டு பட்டினி கிடந்தது சாக சொல்றீரா. கொஞ்சம் பிரக்டிகல்லா தற்காலதையும் சிந்தித்து செயல்படுவதே மேல்.

நம்மளை திராவிடம் மற்றும் நாத்திகம் பேசியே குழப்பி விட்டு விட்டனர் நம் தலைவர்கள் . ஆத்தி சூடி எழுதியவர் அவ்வை என்பது உண்மையாம் . அதை ஏற்று கொள்வார்களாம் . அவ்வையோடு முருகன் விளையாடியது ஏற்றுகொள்ள முடியாதாம் . என்ன கொடுமை நாரதன் சார்

தமிழ் வரலாறுகளும் இலக்கியங்களும் உயரிய கருத்துகளை கொண்டதாம் . ஆனால் அதில் சாமிய பத்தி சொல்லியிருந்தா மூட நம்பிக்கையாம் . என்ன கொடுமை தப்பிலி சார்.

சித்த மருத்துவம் உண்மையாம் . அந்த சித்தர்கள் கும்பிட்ட சிவன் பொய்யாம் . என்ன கொடுமை நிழலி சார்

சூரனை எதிரிகளை வதம் செய்ய முருக பெருமானின் மஞ்சள் உடை பொய்யாம் . இவங்க மட்டும் மஞ்சள் துண்டை போட்டு தமிழன் கலர்னு கதை விடுவார்களாம்.

தமிழன் கும்பிடுவது சிவனையும் பெருமாளையும்

இந்தியர் அனைவரும் கும்பிடுவதும் இவர்களை தான் .

தற்போது கண்முன்னே எனக்கு தெரிந்து இருப்பது இது மட்டும் தான் .

யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் இங்கே . பதினைந்து வருடம் முன்பே ஒரு தமிழனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது ( மூப்பனார் ) கெடுத்தது நம் தமிழனே ( யார்ன்னு உங்களுக்கே தெரியும் )

ஒருத்தர் ஜனாதிபதியா கூட ஆயிட்டார் . தமிழன் அமராத இரண்டே பதவி பிரதமர், துணை அல்லது இணை பிரதமர் மட்டும் தான் . நாங்கள் ஆறு சொச்சம் சதவிகிதம் தான். இந்திய அரசில் தமிழன் அதைவிட அதிகமாகவே பதவி வகிக்கிறார்கள் . நாங்கள் ஹாப்பி.

எத சொன்னாலும் திருப்பி திருப்பி கழுவி கழுவி ஊத்த நினைக்கிறீங்களே . என்ன கொடுமை கலைஞன் சார் .

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தில் இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்கள் அனைத்தையும் - பாதிக்கப்பட்டவர்களின் நேரடி வாக்குமூலங்கள், சாட்சியங்களையும் அந்நேரத்தில் வெளியான பத்திரிகைச் செய்திகள், முக்கிய சம்பவங்களையும் உள்ளடக்கி வெளியான ஒரே புத்தகம் '' The Satanic Force '' (சாத்தானின் படைகள்).

1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் பிரித்தானியாவில் அச்சிடப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் சென்னையில் வைத்து க்யூ பிராஞ்சினால் கைப்பற்றப்பட்டு 5000 பிரதிகளும் எரியூட்டப்பட்டன. 875 பக்கங்களில் வர்ண அச்சுப்பிரதியாக வெளிவந்த இந்தப் புத்தகம் இப்போது ஒரே ஒரு பிரதி மட்டும் லண்டனில் இருப்பதாக தகவல். ஆனால் யாரிடம் இருக்கிறதென்று தெரியாது. 1990 களிலேயே ஒரு புத்தகம் இந்திய மதிப்பில் 5000 ரூபாய்கள்.

சாட்சியங்களை மெளனமாக்கிய இந்திய அரசின் செயல்கள் பற்றி தெரியாமல் இருப்பவர்களே அதிகம்

அந்த புத்தகத்தை வாங்கி ஸ்கேன் பண்ணி இணையதில் ஏற்றி விட்டால் புண்ணியமா போகும் .

யாழ் கருத்துக்கள பொறுப்பாளர் நிழலி அவர்களே,

கையில் வெண்ணையை வைத்திகொண்டு நெய்க்கு அலைகிறீர்களே....

The heinous crimes of indian peace keeping

© Yarl Inaiyam. All rights reserved. ||||||||

Share this post


Link to post
Share on other sites

முறிந்த பனை மீண்டும் படிக்க ஆரம்பித்து உள்ளேன் . அது முடிந்ததும் இதை படிக்கிறேன் . நன்றி

Share this post


Link to post
Share on other sites