Jump to content

தமிழன், சிங்களவன், முஸ்லிம் - இன்னொரு பக்கம் (கொலன்னாவை எண்ணெய் குதங்களும் நானும்...). )

Recommended Posts

சிங்களவர்களிலும் நல்லவர்கள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இது எல்லா இனத்திற்கும் பொதுவானது.

சிங்களவர்கள் நன்றாக ஆதரிப்பார்கள், பழகுவார்கள். நல்ல ஜாலியான பேர்வழிகள். இது தமிழர்களிடம் குறைவு. இதுவே சிங்களவர்கள் நல்லவர்கள் என்று பரவலான மாயையான கருத்திற்குக் காரணம். 'இனம்' என்று வரும் பொழுது இந்த நல்லவர்களைக் காணமுடியாது. ஒரு சில விதிவிலக்குகள் உண்டு.

இன்னொரு விடயத்தையும் இங்கே கூற வேண்டும். கள உறவுகளில் பலர் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை வடக்கு கிழக்குப் பகுதிகளில் கழித்திருப்பீர்கள். நீங்கள் அறிந்த அல்லது மிக அண்மையில் கண்டு பழகிய சிங்களவர்கள் என்றால் அது இராணுவத்தினராகவொ அல்லர் பொலிஸ்காரராகவோ, அல்லது சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிறைக்கதிகளின் குடும்பங்களாகவோ இருக்கலாம். இந்த இராணுவத்தில் பெரும்பகுதியனர் தென்பகுதியில தேங்காய திருடர்களாக கோழித் திருடர்களாக கஞ்சா கடத்துபவர்களாக இருந்தவர்கள். வேறு தொழில்களைப் பெற முடியாத நிலையில் இலகுவாக இணைந்து கொள்ளக் கூடிய இராணுவத்தில் இணைந்தவர்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசால் 83 கலவரத்தின் பின்பே கென்ட் பார்ம்,டொலர் பார்ம், வாகரை மற்றும் சில பகுதிகளில் சிங்களக் குற்றவாளிகள் குடியமர்த்தப்பட்டார்கள். அதற்கு முன்பும் வரலாறு உண்டு. திருகோணமலை, அம்பாறை, மட்டக்கிளப்பிற்கு வட மேற்குப் பிரதேசங்களில் சுதந்திரத்திற்குப் பின் பெருவாரியாக சிங்களக் குடியேற்றம் நடத்தப்பட்டது. அங்கு வந்து குடியேறியவர்கள் எல்லாம் சாதாரண நல்ல சிங்கவர்கள்தான். அப்பொழுது அம்பாறை மாவட்டத்தில் 4 வீதமான சிங்களவர்கள்தான் இருந்தார்கள். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கோ, மட்டக்களப்பிற்கோ, அம்பாறைக்கோ பயணித்துப் பார்த்தால் தெரியும் சிங்களப் பகுதிகளில் எவ்வளவோ வளமான காணிகள் தரிசாகக் கிடக்கின்றன. அதனையும் தாண்டி வந்துதான் நல்ல சிங்களவர்கள் வட கிழக்கில் குடியேறினார்கள். அவர்களுடன் வாழ்ந்தவன் என்ற முறையில் அவர்களை நன்றாகவே தெரியும். நல்லவனோ கெட்டவனோ தமிழர் இடங்களைப் பறிப்பதில் அவர்களிடம் பாகுபாடு இருந்ததில்லை. அந்த விடயத்திலும் கூட தமிழர்களிடம்தான் முரண்பாடு உண்டு.

Link to comment
Share on other sites

  • Replies 205
  • Created
  • Last Reply

என்னோட சந்தேகத்த யாரேனும் சொல்லுங்கோ!

எனக்கு தெரூஞசி சிங்களம் என்பது இனம், தமிழ் என்பது இனம், முஸ்லிம் என்பது ஒரு மதம்.

ஈழ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் அரபி இன மக்கள் அல்ல. அவர்கள் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள முஸ்லிம்கள்.

என் புரிதல் தவறானதா?

Link to comment
Share on other sites

முஸ்லிம் என்பது மதமல்ல. இஸ்லாம் என்பதே மதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட சந்தேகத்த யாரேனும் சொல்லுங்கோ!

எனக்கு தெரூஞசி சிங்களம் என்பது இனம், தமிழ் என்பது இனம், முஸ்லிம் என்பது ஒரு மதம்.

ஈழ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் அரபி இன மக்கள் அல்ல. அவர்கள் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள முஸ்லிம்கள்.

என் புரிதல் தவறானதா?

உங்கள் புரிதல் பாதி சரி சத்யா. இலங்கையின் முஸ்லிம்கள் தென்னாசியாவின் மற்றைய நாடுகளின் முஸ்லிம்கள் போலவே அராபியர்கள் அல்லர். மொகலாயர்கள் இந்தியா வரை வந்து ஆட்சி செய்த போது இஸ்லாம் மதத்தைத் தழுவிய உள்ளூர் மக்களே பெரும்பாலான தென்னாசிய முஸ்லிம்கள். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் "தமிழ் பேசும் முஸ்லிம்கள்". தமிழ் முஸ்லிம் சிங்கள முஸ்லிம் என இரண்டு பிரிவுகள் இலங்கையில் இல்லை.

Link to comment
Share on other sites

இசைக் கலைஞன்,சிங்கள தேசியவாதத்தை ஊக்குவித்து அரசியல் பண்ணும் வித்தை பண்டாரநாயக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் அதில் வெற்றியும் கண்டார்.ஆனால் 1994இல் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவேன் என்று தென்னிலங்கையில் மேடைக்கு மேடை கூறி சமாதானப் புறா வேடமிட்டு வாக்குச் சேர்த்த சந்திரிக்கா பண்டாரநாயக்காவை சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் ஆதரித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தெருக்களில் ஒட்டப்பட்டிருந்த சந்திரிக்காவின் படங்களுக்கு நெற்றியில் பொட்டிட்டு இனவாதத்தைத் தூண்டிய போதிலும் அவரது வெற்றியைத் தடுக்க முடியவில்லை.அதேபோல 12003இல் என்று நினைக்கிறேன். நான் ஆட்சிக்கு வந்தால் புலிகளுடன் பேசி சமாதானத் தீர்வு காணுவேன் என்று தென்னிலங்கை மேடைகளிலெல்லாம் பேசியே ரணில் விக்கிரமசிங்கா வாக்குக் கேட்டார். அப்போது ரணில் ஆட்சிக்கு வந்தால் தனித் தமிழ் நாடு உருவாகி விடும் என சந்திரிக்காவின் கட்சியனர் பிரச்சாரம் செய்தனர். ஆனாலும் ரணில் விக்கிரமசிங்கவிற்கே வெற்றி கிடைத்தது.எனவே தமிழ் மக்களிற்கு உரிமை வழங்குவதற்குத் தடையாக இருப்பவர்கள் சிங்கள ஆட்சியாளர்களே என்ப என்னுடைய கருத்து.

கவனித்துப் பார்த்தோமானால், பிரேமதாச கொலைக்குப்பிறகு ஐக்கியதேசியக் கட்சியில் பலமான தலைவர் வரவில்லை. சந்திரிக்காவுக்கு நல்ல வாய்ப்பாக அது போய்விட்டது.. :D விதவை என்கிற நிலையும் சாதகமாக அமைந்துவிட்டது.. சமாதானம் வேண்டியே சிங்களவர்கள் சந்திரிக்காவுக்கு வாக்களித்தார்கள் என்பதை நான் நம்பமாட்டேன்.. :D

அதேபோல ரணில் பிரதமராக வந்ததற்கு ஒரு பெரிய காரணம் ஜெயசிகுறு சமரில் சிங்களப் படைகளுக்குக் கிடைத்த பாரிய தோல்வி.. கவனியுங்கள் இது பாராளுமன்றத் தேர்தல் மட்டுமே.. அதிபர் தேர்தல் அல்ல..

அப்படியே சமாதானம் வேண்டியிருந்தால் மகிந்தவுக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் எனது அன்புக்குரிய சிங்கள வாக்காளர்கள்..! :D ரணில் ஒழுங்காகத்தான் சமாதானம் பேசிக்கொண்டிருந்தார்.. ரணில் புலிகளிடம் நாட்டைக் காட்டிக்கொடுத்து விட்டதாகப் பிரச்சாரப்படுத்தியே மகிந்த பதவிக்கு வந்தார்.. :rolleyes:

Link to comment
Share on other sites

உங்கள் புரிதல் பாதி சரி சத்யா. இலங்கையின் முஸ்லிம்கள் தென்னாசியாவின் மற்றைய நாடுகளின் முஸ்லிம்கள் போலவே அராபியர்கள் அல்லர். மொகலாயர்கள் இந்தியா வரை வந்து ஆட்சி செய்த போது இஸ்லாம் மதத்தைத் தழுவிய உள்ளூர் மக்களே பெரும்பாலான தென்னாசிய முஸ்லிம்கள். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் "தமிழ் பேசும் முஸ்லிம்கள்". தமிழ் முஸ்லிம் சிங்கள முஸ்லிம் என இரண்டு பிரிவுகள் இலங்கையில் இல்லை.

நன்றி ஜஸ்டின்

Link to comment
Share on other sites

சிங்களக் காடையர்கள் என்னை அகதியாக்கிய கதை

1984 டிசம்பர் 4. (திகதி 4 அல்லது 5 எனக்குச் சரியாக நினைவில்லை). என்வாழ்வில் நான் இன்னொரு பக்கத்தைக் கண்ட நாள். எல்லாம் என்னுடையவை என்று எண்ணிக் கொண்டிருந்த என் சின்ன மனத்திற்குள் எதுவும் நிரந்தரமில்லை என்ற வித்து விழுந்த நாள்.

காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை செய்த பத்திற்கும் மேற்பட்ட சிங்கள ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி அன்று மாலையே பரவ ஆரம்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஒருவித பதட்டம் சு+ழ்ந்து கொள்ள தமிழர்கள் தாக்கப்படலாம் என்ற செய்தி மெள்ளக் கசியத் தொடங்கியிருந்தது.

புத்தளம் சீமெந்துத் தொழிற்சாலைக்கருகில் சிங்களக் காடையர்கள் வாள்கள், கத்திகள் பொல்லுகளுடன் கிளம்பத் தயாராயிருக்கிறார்கள் என்ற செய்தி எமக்குக் கிடைத்த போது நேரம் இருள ஆரம்பித்திருந்தது. இதற்கு மேல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட புத்தளம் நகரத்திற்குள் போவதற்கு நேரம் இல்லை என்பதுடன் பாதுகாபபும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட 50இற்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் அருகிலுள்ள பற்றைக் காடுகளுக்குள்ளும் மனிதநேம் மிக்க சிங்களவர்களின் வீடுகளுக்கும் புகுந்து புகலிடம் தேடிக் கொள்கின்றனர்.

நாமும் எமது அடுத்த வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்து கொள்கிறோம். வங்கி ஊழியரான காமினி நவரட்ணவின் படுக்கையறைக்குள் எமது குடும்பமும் இன்னொரு தமிழ்க் குடும்பமும் மரண பயத்துடன் அடங்கிக் கொள்கிறோம்.

நேரம் ஆக ஆக சிங்களக் காடையர்களின் கூக்குரலும் ஜெயவேவாக் கோசங்களும் மிக அண்மையாகக் கேட்கத் தொடங்கியிருந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவம் இப்போதும் என் மனத்தின் ஒரு மூலையில் பதுங்கியிருந்து அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது.

எமது அண்டை வீடுகள் தீக்கிரையாகிக் கொண்டிருந்த வெளிச்சத்தை முகட்டின் ஓட்டைககளுக்குள்ளால் காணக்கூடியதாயிருந்தது.

ஐயா வணக்கம்... ஐயா பின்னாலை ஓடி.... இந்தக் கொச்சையான நையாண்டி கலந்த குரல் வேறு யாருடையதுமல்ல. எங்கள் தென்னந்தோட்டத்தில் வேலை செய்து எங்கள் வீட்டிலேயே உணவருந்தி ஒவ்வொரு நாளும் எங்களுடைய வீட்டிற்கு வந்து போகும் செபஸ்ரியனுடைய குரல் தான் அது...

அதனைத் தொடர்ந்து எமது உடமைகள் உடைக்கப்படும் சத்தமும் தீப்பற்றியெரிந்ததால் வந்த வெளிச்சத்தையும் எம்மால் உணரக்கூடியதாயிருந்தது.

சுமார் ஒருமணிநேரம் எங்கள் வீட்டில் வெறித் தாண்டவம் ஆடிய அந்தக் கும்பலின் கூச்சலும் ஆரவாரமும் மெல்ல மெல்ல அகன்று கொண்டிருந்தது. எமது அண்டையிலிருந்த தமிழ் வீடுகள் அனைத்தையும் துவம்சம் செய்து விட்டு அந்தக் கும்பல் அகன்று விட்டது.

நிலைமையின் விபரீதத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளும் வயதையெட்டாத எனது தங்கையும் தம்பியும் நித்திரையாகி விட்டார்கள். நானும் அக்காவும் அம்மாவும் அப்பாவும் எம் உணர்வுகளைக் கூடப் பகிர்நது கொள்ள முடியாத நிலையில் மௌனமாக அன்றைய இரவைக் கழிக்கிறோம்.

காலையில் வெளியே வந்து பார்த்த எங்களுக்கு சாம்பல மேடுகள் நிறைந்த அரையும் குறையுமான வீட்டையே காணக் கூடியதாயிருந்தது. வீட்டிற்குள்ளிருந்த சாமான்கள் அத்தனையையும் வீட்டிற்குள் போட்டுக் கொழுத்தி வளவில் நின்ற பெருமளவான வாழை மரங்களை வாளால் வெட்டிச் சாய்த்த அந்தக் காடையர் கும்பல் நகைப்புக்கிடமான ஒரு காரியத்தையும் செய்திருந்தது. எங்கள் சுவாமியறையிலிருந்த முருகன், பிள்ளையார் சரஸ்வதி படங்களை எடுத்து வந்து கிணற்றடியில் பத்திரமாக வைத்து விட்டே அழித்தொழிப்பை முன்னெடுத்திருந்தது. என்னே கடவுள் பக்தி!

கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்த அத்தனை சொத்தையும் அழிச்சுப் போட்டாங்கள் என்று சொல்லிச் சொல்லி அம்மா அழுகிறார். அப்பாவின் முகம் இறுகிப் போயிருந்தது. எந்தவொரு உணர்ச்சியையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

புத்தளம் நகரத்திலிருந்து வந்திருந்த முஸ்லிம் நண்பரொருவரின் வாகனத்திலேறி நாங்கள் புத்தளம் நகரை வந்தடைகிறோம். எம்மைப் போலவே தமது அத்தனை சொத்துக்களையும் ஒரே இரவில் பறிகொடுத்திருந்த சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களிற்கும் புத்தளம் நகரத்தில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அரவணைத்துக் கொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

மணிவாசகன் உங்கள் அரசியல் தொடரை மிகவும் உன்னிப்பாக வாசித்து வருகின்றேன் . அரசியலில் உங்கள் பார்வை சிறிது வேறுபட்டதாகவே இருக்கின்றது . தமிழர் தாயகத்தின் எல்லையோரங்களிலும் , யாழ் குடாநாட்டைத் தவிர்ந்து ஏனைய தமிழர் நிலப்பரப்புகளிலும் வசிப்பவர்களின் எண்ணங்கள் , சிந்தனைகள் அரசியல் பார்வையில் யாழ்குடாநாட்டு அரசயல் சிந்தனைகளிலும் வேறுபட்டே இருக்கின்றன . இதற்கு முக்கிய காரணமாக யாழ்பாணியத்தின் வீச்சுக்கள் இருபக்கங்களிலும் வேறுப்பட்டே இருக்கின்றன . ( இதை யாரும் பிரதேசவாதமாக எடுக்க வேண்டாம் ) . உங்கள் அரசியல் பார்வை வித்தியாசமாக இருந்தபோதிலும் , தமிழர் தரப்பை சிங்கள அரசு ( குடிமக்கள் உட்பட ) அந்த நாட்டின் மக்களாகக் கருதி அவர்களுடைய தமிழர் தாயகம் , வடக்கு கிழக்கை இணைத்தல் , சுயநிர்ணய உரிமை போன்றவற்றை அங்கீகரித்து தீர்வை வழங்க முன்வரும் என்று கருதுகின்றீர்களா ???? உங்கள் தொடர் ஓர் புதிய பார்வை வீச்சைத் தரும் என நம்புகின்றேன் . ஏற்கனவே இரு கள உறவுகள் மிக அண்மையில்அரசியல் தொடரை ஆரம்பித்து சரமாரியாக வந்த விமர்சனங்களால் தொடராமலே போய்விட்டார்கள் . அதுபோல் இல்லாமல் நீங்கள் தொடரவேண்டும் என்பதே எனது ஆவல் .

Link to comment
Share on other sites

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி கோமகன் அண்ணா!

தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து இதே பதிவிலேயே நான் கருத்தெழுதியிருந்தேன்.

சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வது என்ற விடயத்தையும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் என்ற விடயத்தையும் நான் இரு வேறு விடயங்களாகவே பார்க்கிறேன்.

தமிழழ் மக்கள் தமது மண்ணிலே சகல உரிமைகளையும் பெற்று தங்கள் நிர்வாக பரிபாலனத்தை தாங்களே மேற்கொள்ளுகின்ற நிலையில் தமது அபிவிருத்தித் திட்டங்களைத் தாமே தீர்மானித்து மேற்கொள்ளக்கூடிய வகையில் வெளிநாடுகளிலிருந்தான பொருளாதார உதவிகளை நேரடியாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதான அரசியல் உரிமைகளைப் பெற்றேயாக வேண்டும்.

அதை சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அப்படி ஒரு கட்சி அரசியல்தீர்வு காண முயற்சித்தாலும் மற்றைய கட்சி அதற்கெதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களைத்திசைதிருப்பத்தான செய்யும்.

இந்த நிலையில் சர்வதேசத்தின் உதவியுடன் மட்டுமே தமிழ் மக்களால் அரசில் உரிமைகளைப் பெற முடியும். அது நேரடியான சர்வதேசத் தலையீடாகவே அல்லது சிறிலங்கா அரசிற்கான சர்வதேச அழுத்தங்காளாலோ தான் கிடைக்க முடியும். இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது தாயக மற்றும் புலம்பெயர் தமிழ் அரசியல் சக்திகளின் பொறுப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரியின் கதை சார்ந்தன்றி.. பகிரப்படும் கருத்துக்கள் சார்ந்து எனது பார்வை ஒன்றையும் பதிவிடுகிறேன்.....

2006 ம் ஆண்டு இறுதி ஈழப் போரை திருகோணமலையில் சிங்களக் கடற்படைக்கு ஆயுதங்களும் கண்காணிப்புப் படகுகளும் வழங்கி தொடக்கி வைத்த முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபாட் பிளாக் சொன்ன வார்த்தை..

90% தமிழ் மக்கள் சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்வதையே விரும்புகின்றனர். விடுதலைப்புலிகள் போன்ற பயங்கரவாதிகளே சிறு குழுவினரே அதை விரும்பவில்லை என்று.

அவர் என்ன அடிப்படையில் அந்தக் கருத்தைக் கூறினாரோ.. அதே அடிப்படைகளோடு எம்மவரிலும் பலர் அதை ஏற்க தயாராகவே இருக்கிறார்கள்..!

தமிழர்கள் சிங்களவர்களின் பகுதிகளில் வாழும் போது அவர்களுக்கு (சிங்களவர்களுக்கு) பயந்து அடக்க ஒடுக்கமாக வாழ்வது பற்றி ரொபாட் பிளேக் அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை.

சிங்களப் பகுதிகளில்.. நுவரெலியாவில் இருந்து.. முகத்துவாரம் வரை சென்று வந்த.. வாழ்ந்து வந்த அனுபவங்களின் அடிப்படையில்.. எங்கும் தமிழ் மக்கள் சுதந்திர உணர்வோடு மனதில் எழக் கூடிய இயல்பு நிலை பற்றி வாழவில்லை. இந்த உண்மையை பலர் மறைத்து விடுகிறார்கள்... அல்லது உணர மறுக்கிறார்கள். ஏன் என்பதும் எமக்குப் புரியவில்லை.

ஆனால் சிங்களவர்களுக்கு அப்படி ஒரு நிலை இல்லை. இன்று யாழ்ப்பாணத்தில் நிற்கும் சிங்களப் படையினர்களில்.. யாரும்.. யாருக்கும் பயப்பிட்டு.. அடங்கி ஒடுங்கி.. அவன் குறை சொல்வானோ.. இவன் குறை காண்பானோ.. இவன் அப்படிச் செய்தா இப்படிச் செய்தா.. அடிப்பானோ.. வெட்டுவானோ... என்று பயந்து வாழும் நிலை இல்லை. ஆனால்.. இன்றும் கொழும்பில் வாழும் தமிழர்கள் சிங்களவன் எப்ப அடிப்பானோ.. துரத்துவானோ... என்ற பயம் இன்றி வாழ முடியவில்லை.. என்பதுவே அங்குள்ள யதார்த்தம்..!

இதனை எல்லாம்.. ரொபாட் பிளேக் மட்டுமல்ல.. தமிழர்களில் பலருமே வெளில சொல்லப் போறதில்லை. காரணம்.. அது அவர்களின் போலி.. மகிழ்ச்சியுடன்.. இணக்க வாழ்வு என்ற அடிப்படைக்கு சாவு மணி அடித்துவிடும் என்ற பயம்...! அரசியல் செய்ய முடியாத கெளரவக் குறைச்சல்.. ஆகிடும்.

ஆனால்.. தமிழர்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் அந்த சுதந்திரம் உணராத வாழ்வு என்பது சிங்களவர்களுக்கு எதிராக ஒரு போராட்டம் முளைவிடுகின்ற சந்தர்ப்பத்தில் அந்தப் போராட்டத்திற்கு.. வெளிக்காட்டாத ஆனால் மன அளவில் என்றாலும் தார்மீக ஆதரவை ஈட்டித் தரும் என்பதே இலங்கைத் தீவின் கள யதார்த்தம்..!

கொழும்பில்.. மலையகத்தில்.. பிறந்து.... பூர்வீகமாக வாழும் தமிழர்களிடம் கூட இந்த மன நிலையை உணரலாம்.! ஆனால் வடக்குக் கிழக்கு தமிழர்கள்.. தெற்குக்குப் போய் நடுங்கிக் கொண்டு வாழ்ந்தாலும்.. தங்களின் சிங்கள நேசத்தை.. நம்ம சம்பந்தன் ஐயா மாதிரி.. வைச்சு சும்மா வெளுத்துக்கட்ட பாவிப்பதில் பின் நிற்பதில்லை..! என்று மாறுமே இந்த நிலை...????! எல்லாம் உள்ளூர சிங்களவன் மீதிருக்கும் பய பக்தியின் வெளிப்பாடு என்பதே வெளிப்படை உண்மை..! :icon_idea:

Link to comment
Share on other sites

புத்தளம் நகரத்திலிருந்து வந்திருந்த முஸ்லிம் நண்பரொருவரின் வாகனத்திலேறி நாங்கள் புத்தளம் நகரை வந்தடைகிறோம். எம்மைப் போலவே தமது அத்தனை சொத்துக்களையும் ஒரே இரவில் பறிகொடுத்திருந்த சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களிற்கும் புத்தளம் நகரத்தில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் தங்குமிடம் உணவு ஆகியவற்றை வழங்கி அரவணைத்துக் கொள்கிறார்கள்.

முஸ்லிம் சகோதரர்கள் இரண்டு மணிநேரக் காலக்கெடுவில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட போது நாம் கையைக்கட்டிக்கொண்டு தான் நின்றோம். எம்மில் சிலர் அவர்கள் போனதும் அவர்களின் வீடுகளை சூறையாடல் செய்ததும் நடந்த ஒன்று தான். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் சகோதரர்கள் இரண்டு மணிநேரக் காலக்கெடுவில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட போது நாம் கையைக்கட்டிக்கொண்டு தான் நின்றோம். எம்மில் சிலர் அவர்கள் போனதும் அவர்களின் வீடுகளை சூறையாடல் செய்ததும் நடந்த ஒன்று தான். :(

தயவுசெய்து.. வரலாற்றை மாற்றாதேங்கோ... திரிக்காதேங்கோ. உண்மை தெரியல்லன்னா.. பேசாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் அவர்களின் பாதுகாப்பு நிமித்தம் வெளியேறக் கேட்கப்பட்டனரே தவிர யாரும் மூதூரில் இருந்து தமிழ் மக்கள் அடித்து விரட்டப்பட்ட கணக்காக அவர்களை விரட்டவில்லை...!

மேலும் முஸ்லீம்கள் வெளியேற 72 மணி நேரத்துக்கும் அதிகமாக கால அவகாசமும்.. போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன..!

வீடுகள் சூறையாடப்பட்டது என்ற தகவல் தவறாகும். கிழக்கில் இருந்து முஸ்லீம்களால் அடித்து விரட்டப்பட்டு ஆபத்தான கடல்வழிப் பயணம் மேற்கொண்டு.. வடக்கு நோக்கி வந்து.. வடக்கில் தங்கி இருந்த மக்களுக்கு சில தங்குமிடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டனவே தவிர.. சூறையாடல்கள் எல்லாம் பெருமளவில் கிழக்கில் தான் நடந்திருந்தன.

முஸ்லீம்களுடனா உங்கட சகோதரத்துவத்தை மெச்சுறம். அதே நேரம் கிழக்கில் உங்கள் சொந்த உறவுகள் உடுத்த உடுப்போடு முஸ்லீம்களால் அடித்து விரட்டப் பட்ட கொடுமைகள் குறித்தும் பேச மறக்காதீர்கள். அப்படி மறந்துவிட்டு முஸ்லீம் சகோதரத்துவம் பேசின்.. அது முற்றிலுமாக போலி சந்தர்ப்பவாத சகோதரத்துவமாகவே நோக்கப்படும்..! :icon_idea:

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைக்குமாம்.

அவர்களின் பாதுகாப்பு கருதி வெளியேறச் சொன்னால் விருப்பம் இல்லாதவர்கள் இருக்க அனுமதித்திருக்கலாமே? 96 இல் யாழ்ப்பாண மக்களை வெளியேறச் சொன்னபோது விருப்பமற்றவர்கள் வெளியேற மறுத்து தம் வீடுகளில் இருந்தவர்களும் உண்டே.

வீடுகள் சூறையாடப்பட்டது நான் கண்ணால் கண்டது. நீங்களில்லை என்பதற்காக நானும் ஜால்ரா போடமுடியாது.

கருத்தாடல் ஆரம்பிக்க முன்னமே எமக்கு ஒரு பட்டம் பதவி எல்லாம் தருகிறார்கள். :(

அதென்ன நீங்கள் மட்டும் பட்டங்களை அள்ளி வழங்க முடிகிறது.. மற்றவர்கள் உண்மையைச் சொன்னால் மட்டும் தான் பிரச்சனையா..??!

முஸ்லீம்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட காலத்தில்.. ஒலி பெருக்கிகளில் வழங்கப்பட்ட தகவல்களோடு நாங்கள் நெருங்கி இருந்தவர்கள். அதில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு இதுதான்..

அன்பார்ந்த முஸ்லீம் சகோதரர்களே.. சிறீலங்கா அரசு கிழக்கைப் போன்று வடக்கிலும் தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே பிரச்சனையை உண்டு பண்ண திட்டம் தீட்டியுள்ளது. அதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த வகையில் உங்களின் பாதுகாப்பை முன்னிட்டு.. மீள் அறிவித்தல் வரை உங்கள் குடியிருப்புக்களை விட்டு பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்து செல்லுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்துப் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்பது தான் அந்த அறிவிப்பு. உங்களின் சொத்துக்களுக்கும் உடமைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

அங்க முஸ்லீம்களின் வீட்டை சூறையாடி.. பொல்லு... கத்தி வைச்சு யாரும் எவரையும் விரட்டேல்ல. உண்மையை சொல்லாமல்.. பூனை.. நாயி என்று கூப்பிடுவதால்.. உண்மை உறங்கிவிடாது. அல்லது உண்மையைச் சொல்ல யாரும் வரமாட்டார்கள் என்று நினைக்காதேங்கோ.

மேலும்.. யாழ்ப்பாண நகரில் இருந்தான இடம்பெயர்வு.. 1996 இல் நடக்கேல்ல. அது நடந்தது1995 இன் பிற்பகுதியில். மீளவும் வரலாற்றை சரியாக எழுதுங்கோ. இல்லாட்டி.. படித்துவிட்டு எழுதுங்கோ. அல்லது கேட்டறிந்து எழுதுங்கோ..!

யாழ்ப்பாண நகரை மற்றும் வலிகாமத்தை விட்டுத்தான் மக்கள் வெளியேறினர். தென்மராட்சி.. வடமராட்சியில் இருந்து மக்கள் வெளியேறக் கேட்கப்படவில்லை. காரணம்.. சிறீலங்கா இராணுவ நடவடிக்கை வலிகாமத்தை மையமாக வைத்து யாழ் நகரைக் கைப்பற்ற நடந்து கொண்டிருந்தது.

பின்னர் யாழ் நகரம் கைப்பற்றப்பட்டு.. சூரியக் கதிர் 2 நடவடிக்கை தென்மராட்சி நோக்கி நடந்த போது விரும்பிய மக்களே வன்னிக்கு நகர இடமிருந்தது. காரணம்... போக்குவரத்து நெருக்கடிகளும்.. எதிரியின் படைக்கலப் பிரயோகமும்..!

முஸ்லீம்கள் பாதுகாப்பாக நகரக் கேட்ட வேளையில் அவர்களுக்கு இப்படியான எந்த நெருக்கடிகளும் எவராலும் கொடுக்கப்படவில்லை. நிம்மதியாக பஸ்ஸில் வாகனங்களில் ஏறி அமர்ந்து போக வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்தார்கள்.

அதனால் தான் வலிகாம இடம்பெயர்வின் போது மக்களை பாதுகாப்புக் கருதி..100% வெளியேற்ற முடியாமல் போனது..! இதுதான் அன்றைய கள யதார்த்தம். அப்போது அதே களத்தில் நின்றவர்கள் நாங்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

அங்க முஸ்லீம்களின் வீட்டை சூறையாடி.. பொல்லு... கத்தி வைச்சு யாரும் எவரையும் விரட்டேல்ல. உண்மையை சொல்லாமல்.. பூனை.. நாயி என்று கூப்பிடுவதால்.. உண்மை உறங்கிவிடாது. அல்லது உண்மையைச் சொல்ல யாரும் வரமாட்டார்கள் என்று நினைக்காதேங்கோ.

அவர்கள் போனபின்பு தான் அவர்கள் வீடுகள் சூறையாடப்பட்டன என்று குறிப்பிட்டிருந்தேன்.

பூனை என்று யாரையும் அழைக்கவில்லை. அதைப்புரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப் பட்டால், பின்பு ஏன் மீளக்குடியமர்வுக்கு வழி செய்யவில்லை?

மணிவாசகனின் பதிவை மேலும் திசை திருப்ப விரும்பவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் போனபின்பு தான் அவர்கள் வீடுகள் சூறையாடப்பட்டன என்று குறிப்பிட்டிருந்தேன்.

பூனை என்று யாரையும் அழைக்கவில்லை. அதைப்புரிந்து கொள்ளுங்கள்.

அவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப் பட்டால், பின்பு ஏன் மீளக்குடியமர்வுக்கு வழி செய்யவில்லை?

மணிவாசகனின் பதிவை மேலும் திசை திருப்ப விரும்பவில்லை!

வீடுகள் சூறையாடப் படவில்லை. அந்த வீடுகளில் இருந்த பொருட்கள் திருடர்களால் திருடப்படலாம் என்ற காரணத்தால்.. முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குக்கு அமைய அவற்றை பாதுகாக்கும் நோக்கில்.. வீடுகளின் இலக்கங்களோடு.. முஸ்லீம்கள் தந்த தரவுகளின் ஏடுகளில் இருந்த தரவுகள் சரிபார்க்கப்பட்டு.. யாழ் நல்லூரில் இருந்த ஒரு கட்டிடத்திற்கு விடுதலைப் புலிகளால் எங்கள் கல்லூரி உட்பட பல கல்லூரி மாணவர்களின் நேரடி ஒத்துழைப்போடு உதவியோடு.. கொண்டு செல்லப்பட்டன. இதில் மாணவர்கள் தவிர.. வெளியார் யாரும் ஈடுபடுத்தப்படவில்லை.

அநேக முஸ்லீம்களின் வீடுகளில் நிலக்கீழ் அறைகளில் பெறுமதியான பொருட்களும்.. சில இடங்களில் ஆயுதங்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன..! அவை குறித்த எந்த தகவல்களும் முஸ்லீம்களால் விடுதலைப்புலிகளுக்குச் சொல்லப்படவில்லை..! முஸ்லீம்கள் வழங்கிய தரவுகளோடு பொருட்கள் சரிபார்க்கப்பட்டு.. விடுதலைப்புலிகள் பத்திரமாகவே தான் அவற்றை பாதுகாப்பான இடம் நோக்கி.. எடுத்துச் சென்றிருந்தார்கள்.

அந்தப் பணியில் ஈடுபட்டவன் என்ற வகையில் இதனை 200% ஆதாரத்துடன் என்னால் உறுதி செய்ய முடியும்..!

இது மூதூரில் நடந்தது போன்ற சூறையாடலோ.. கதவுடைப்போ அல்ல. எல்லாவற்றிற்கும்.. பதிவுகள் விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டன. அவர்களின் நேரடிக் கண்காணிப்பு அளிக்கப்பட்டிருந்தது..! :icon_idea:

Link to comment
Share on other sites

முஸ்லிம் சகோதரர்கள் இரண்டு மணிநேரக் காலக்கெடுவில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட போது நாம் கையைக்கட்டிக்கொண்டு தான் நின்றோம். எம்மில் சிலர் அவர்கள் போனதும் அவர்களின் வீடுகளை சூறையாடல் செய்ததும் நடந்த ஒன்று தான். :(

கருத்திற்கு நன்றி!இந்த விடயத்தில் என்னுடைய நிலைப்பாட்டை நான் பல தடவை முன்வைத்துள்ளேன். உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

Link to comment
Share on other sites

இது மூதூரில் நடந்தது போன்ற சூறையாடலோ.. கதவுடைப்போ அல்ல. எல்லாவற்றிற்கும்.. பதிவுகள் விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டன. அவர்களின் நேரடிக் கண்காணிப்பு அளிக்கப்பட்டிருந்தது..! :icon_idea:

அந்தப் பொருட்கள் கடைசியில் அவர்களுக்கு கிட்டவில்லையே?

என் கருத்து என்னவென்றால், நாமும் தவறிழைத்திருக்கிறோம் என்பது தான்.

Link to comment
Share on other sites

தயவுசெய்து.. வரலாற்றை மாற்றாதேங்கோ... திரிக்காதேங்கோ. உண்மை தெரியல்லன்னா.. பேசாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்கள் அவர்களின் பாதுகாப்பு நிமித்தம் வெளியேறக் கேட்கப்பட்டனரே தவிர யாரும் மூதூரில் இருந்து தமிழ் மக்கள் அடித்து விரட்டப்பட்ட கணக்காக அவர்களை விரட்டவில்லை...!

மேலும் முஸ்லீம்கள் வெளியேற 72 மணி நேரத்துக்கும் அதிகமாக கால அவகாசமும்.. போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன..!

வீடுகள் சூறையாடப்பட்டது என்ற தகவல் தவறாகும். கிழக்கில் இருந்து முஸ்லீம்களால் அடித்து விரட்டப்பட்டு ஆபத்தான கடல்வழிப் பயணம் மேற்கொண்டு.. வடக்கு நோக்கி வந்து.. வடக்கில் தங்கி இருந்த மக்களுக்கு சில தங்குமிடங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டனவே தவிர.. சூறையாடல்கள் எல்லாம் பெருமளவில் கிழக்கில் தான் நடந்திருந்தன.

முஸ்லீம்களுடனா உங்கட சகோதரத்துவத்தை மெச்சுறம். அதே நேரம் கிழக்கில் உங்கள் சொந்த உறவுகள் உடுத்த உடுப்போடு முஸ்லீம்களால் அடித்து விரட்டப் பட்ட கொடுமைகள் குறித்தும் பேச மறக்காதீர்கள். அப்படி மறந்துவிட்டு முஸ்லீம் சகோதரத்துவம் பேசின்.. அது முற்றிலுமாக போலி சந்தர்ப்பவாத சகோதரத்துவமாகவே நோக்கப்படும்..! :icon_idea:

பெரும்பாலான நேரங்களில் யதார்த்தமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் என்ற வகையில் இந்தப் பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.இதற்கான விரிவான பதிலை இன்றிரவு எழுதுகிறேன். அதுவரை ஒரேயொரு கேள்வி தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு தீவிரவாத சிங்களவர்களால் பாதுகாப்பு இல்லை. உங்கள் உடைமைகள் அனைத்தையும் விட்டு விட்டு நீங்கள் போய்விடுங்கள் என்றொரு அறிவிப்பை சிங்கள அரசு இன்றைக்கு விடுத்தால் அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்.இந்தச் சம்பவம் நடைபெற்ற போது நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகச் சொல்வதால் உங்களிடம் ஒரு கேள்வி? முஸ்லிம்களின் வீடுகளிலும் கடைகளிலிலிருந்தும் எடுக்கப்பட்ட பொருட்களை யாரும் விற்கவில்லையா? அவற்றை தமிழ் மக்கள் யாரும் வாங்கவில்லையா? ( நானும் அப்பொழுது யாழ்ப்பாணத்தில் தான் இருந்தேன்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பொருட்கள் கடைசியில் அவர்களுக்கு கிட்டவில்லையே?

என் கருத்து என்னவென்றால், நாமும் தவறிழைத்திருக்கிறோம் என்பது தான்.

மூதூரிலும்.. கிழக்கின் பல பாகங்களிலும்.. மன்னாரிலும்.. முஸ்லீம்களால் கொள்ளையிடப்பட்டவை எமது மக்களுக்கு மீளக் கிடைத்தனவா..???! ஏன்.. யாழ்ப்பாண இடம்பெயர்வின் பின்னரும் எமது மக்களின் பொருட்களும் தான் எமக்குக் கிடைக்கவில்லையே. எனது பள்ளிக்கால.. பரிசுப் பொருட்களில் இருந்து எதுவுமே இன்று வரை எங்கள் வீட்டில் இருந்து இடம்பெயர்வின் பின் மீட்கப்படவில்லை. எல்லாம் இராணுவத்தாலும்.. கூலிக்கும்பல்களாலும்.. கள்வர்களாலும் சூறையாடப்பட்டிருந்தனவே. அவற்றிற்காக நீங்களோ.. முஸ்லீம்களோ.. ஏன் கவலைப்படுவதில்லை..??????!

முஸ்லீம்களின் பொருட்களும் அப்படித்தான் அவை சேமிக்கப்பட்ட இடங்களில் இருந்து.. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்போடு சிங்கள இராணுவத்தால் சூறையாடப்பட்டிருக்கும். அதற்காக விடுதலைப்புலிகள் மீது... தமிழ் மக்கள் மீது..குற்றம் சுமத்த முடியாது. ஒருவேளை யாழ்ப்பாண சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிந்திருந்தால்.. முஸ்லீம்களிடம் நிச்சயம் விடுதலைப் புலிகள் அவர்களின் பொருட்களை கையளித்தே இருப்பர். இதுதான் நடைமுறை உண்மையாக இருந்தது அங்கு.

ஆனால் நீங்கள் பலர் உண்மையை திரித்து.. போலி சகோதரத்துவ பாசம் பொழிவதுதான் வேதனையான விடயமாக உள்ளது. :icon_idea:

Link to comment
Share on other sites

மூதூரிலும்.. கிழக்கின் பல பாகங்களிலும்.. மன்னாரிலும்.. முஸ்லீம்களால் கொள்ளையிடப்பட்டவை எமது மக்களுக்கு மீளக் கிடைத்தனவா..???! ஏன்.. யாழ்ப்பாண இடம்பெயர்வின் பின்னரும் எமது மக்களின் பொருட்களும் தான் எமக்குக் கிடைக்கவில்லையே. எனது பள்ளிக்கால.. பரிசுப் பொருட்களில் இருந்து எதுவுமே இன்று வரை எங்கள் வீட்டில் இருந்து இடம்பெயர்வின் பின் மீட்கப்படவில்லை. எல்லாம் இராணுவத்தாலும்.. கூலிக்கும்பல்களாலும்.. கள்வர்களாலும் சூறையாடப்பட்டிருந்தனவே. அவற்றிற்காக நீங்களோ.. முஸ்லீம்களோ.. ஏன் கவலைப்படுவதில்லை..??????!

இதுவும் நிகழவில்லை என்று சொல்லவில்லையே. நாங்கள் கவலைப்படவில்லை என்று எப்படித்தெரியும்? நீங்களாக ஊகம் செய்யாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான நேரங்களில் யதார்த்தமான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் என்ற வகையில் இந்தப் பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.இதற்கான விரிவான பதிலை இன்றிரவு எழுதுகிறேன். அதுவரை ஒரேயொரு கேள்வி தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு தீவிரவாத சிங்களவர்களால் பாதுகாப்பு இல்லை. உங்கள் உடைமைகள் அனைத்தையும் விட்டு விட்டு நீங்கள் போய்விடுங்கள் என்றொரு அறிவிப்பை சிங்கள அரசு இன்றைக்கு விடுத்தால் அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்.இந்தச் சம்பவம் நடைபெற்ற போது நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்ததாகச் சொல்வதால் உங்களிடம் ஒரு கேள்வி? முஸ்லிம்களின் வீடுகளிலும் கடைகளிலிலிருந்தும் எடுக்கப்பட்ட பொருட்களை யாரும் விற்கவில்லையா? அவற்றை தமிழ் மக்கள் யாரும் வாங்கவில்லையா? ( நானும் அப்பொழுது யாழ்ப்பாணத்தில் தான் இருந்தேன்.)

தென்னிலங்கையில் இருந்து தமிழ் மக்களை அவர்களின் பாதுகாப்புக் கருதி.. வெளியேற்றக் கேட்டால் தமிழ் மக்கள் வெளியேறத்தான் வேண்டும். அதே நேரம் வெளியேறும் மக்களுக்கு ஒரு பாதுகாப்பான இடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதே நேரம் அவர்களின் சொத்துக்களுக்கு அப்படிக் கேட்டுக் கொள்ளும் அரசு பாதுகாப்பு அளிக்கவே வேண்டும். முஸ்லீம்களுக்கு அந்த நிலை இருந்தது. மேலும்.. இரண்டு சமூகங்களும் முரண்பாட்டை வளர்த்துக் கொண்டு ஒரே பிரதேசத்தில் வாழ்வது என்பதிலும்.. அவர்களை சற்று விலக்கி இருக்க வைத்து முரண்பாட்டுக்கான காரணி தணிய மீளழைப்பது பற்றியே.. முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தை விட்டு நகரக் கேட்கப்பட்டதற்கான காரணம் அமைந்திருந்தது. அதில் மக்கள் நியாயத்தையும் கண்டார்கள்.

1995 இல் தமிழ் மக்களும் அப்படித்தானே கேட்கப்பட்டார்கள். வன்னியிலும் அது தானே நிகழ்ந்தது. மக்கள் கோவித்துக் கொண்டார்களா..????! இல்லையே..??! மாறாக நிலைமையை புரிந்து தானே கொண்டார்கள்.

மேலும் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டும் பொலிஸ் பதிவு நடைமுறைகள் இருக்கவில்லையா. தமிழ் மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படவில்லையா..??! இந்த எந்த பாதிப்பும் முஸ்லீம்களுக்கு இருக்கவில்லையே..!!!

முஸ்லீம்களின் கடைகளில் இருந்த.. பாதிப்படையக் கூடிய பொருட்கள் மக்களிடம் பகிரப்பட்டன. குறிப்பாக கிழக்கில் இருந்து முஸ்லீம்களால் விரட்டப்பட்டு அகதிகளாக நிவாரணம் இன்றி இருந்த மக்களுக்கு கொடுக்கப்பட்டன. அவர்கள் அவற்றை விற்றிருக்கலாம். அது அந்த மக்களின் பிரச்சனை. பாதிக்கப்படக் கூடிய பொருட்களை கட்டிக்காப்பதிலும்.. அதனை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் என்ன குற்றம்..???! அவற்றை வீதியில் வீசி விட்டிருக்க வேண்டுமா.. அல்லது.. அப்படியே கிடந்து அழிய விட்டிருக்க வேண்டுமா..???!

மேலும் வீடுகளில் இருந்த பொருட்கள் எதனையும் விடுதலைப்புலிகள் வெளியார் யாரையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. அங்கு போராளிகளின் காவல் கடமை பிரதான வீதிகளின் சந்திகளில் அன்றைய காலத்தில் இருந்தது. எங்கள் நண்பர்களின் வீடுகள் கூட அந்தப் பகுதியில் இருந்த போது.. நாங்கள் கூட போக அனுமதி மறுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்.. வீடுகளில் இருந்த பொருட்கள் சூறையாடி விற்கப்பட்டன என்பதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நிச்சயம் அவை விடுதலைப்புலிகளால் நிகழ்ந்திருக்க முடியாது. கள்வர்கள் சிலர் செய்திருக்கலாம். அது பொதுவான சம்பவம் அல்ல. தமிழ் மக்களின் வீடுகளிலும் தான் பொருட்கள் திருடப்பட்டு கள்வர்களால் விற்கப்பட்டிருந்தன. இந்தியப் படைகள் காலத்தில் என்ன நடந்தது. அதற்காக முஸ்லீம்களை தமிழ் மக்கள் சந்தேகித்தார்களா..???! இல்லையே..??! :rolleyes::icon_idea:

இதுவும் நிகழவில்லை என்று சொல்லவில்லையே. நாங்கள் கவலைப்படவில்லை என்று எப்படித்தெரியும்? நீங்களாக ஊகம் செய்யாதீர்கள்.

நீங்கள் கிழக்கில் பாதிக்கப்பட்ட எம் மக்களுக்காக முஸ்லீம்கள் மத்தியில் சகோதரத்துவக் கருத்தைக் கொண்டு சென்று.. என்ன நன்மையை பெற்றுக் கொடுத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். அதன் பின்னர் தீர்மானிக்கலாம்.. நாம் செய்வது ஊகமா.. நியாயமா என்று.

தமிழர்களிடம் செய்தது அநியாயமா இல்லையா என்று கேள்வி கேட்கும் நீங்கள் இதே கேள்வியை முஸ்லீம்களிடம் கேட்டு தமிழர்களுக்கு அவர்கள் செய்த அநியாயங்களுக்கு ஏன் நீதி கேட்டுக் குரல் கொடுக்கவில்லை.. நீதி பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை..????!

அங்கே எங்கோ போனது உங்கள் சகோதரத்துவத்தின் ஆழம்..????! :icon_idea:

Link to comment
Share on other sites

சிங்கள இனவாதிகளால் தென்னிலங்கையிலும்: முஸ்லிம் இனவாதிகளால் கிழக்கிலும் நடத்தப்பட்ட செயல்களை எதிர்க்கின்ற கண்டிக்கின்ற நீங்கள் அதே செயல் வடபகுதியில் நிகழ்த்தப்பட்ட போது அதற்கு நியாயம் கற்பிக்க முயல்கின்றீர்கள்.

சாவகச்சேரிப் பகுதியில் சில முஸ்லிம் வீடுகளில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என வெளிப்படையாகக் கூறப்பட்ட காரணம் உண்மையாக இருக்குமிடத்து அந்த முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் விடுதலைப் போராட்டத்திற்கு சில முஸ்லிம்கள் துரோகம் செய்திருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தமிழ் விடுதலைப் போராட்டத்திற்கு தமிழர்களான ஈபிடிபியினர் துரோகம் செய்கின்றார்கள் என்பதற்காக ஒட்டுமொத்தத்த தமிழர்களையும் வடக்கை விட்டு வெளியேற்றினார்களா? இல்லையே!

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதையும் 1995இல் தமிழர்கள் வெளியேறியதையும் ஒப்பிடுகின்றீர்கள். இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதற்கு ஒப்பானது.

முஸ்லீம்களுடனான முரண்பாடு என்பது அவர்களாலேயே தான் அதிகம் வளர்க்கப்பட்டது. யாழ் சிவன் பண்ணை வீதியில்.. முஸ்லீம்கள் உள்ளூர் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி தமிழ் மக்களின் போக்குவரத்தை தடுத்தனர். இது குறித்து விளக்கம் கேட்கச் சென்ற விடுதலைப்புலிகள் மீது தாக்குதலும் நடந்த முனையப்பட்டது. அதன் பிறகு.. சாவகச்சேரி பகுதியிலும்.. இதே போன்ற ஒரு நிலை வளர்ந்திருந்ததோடு.. யாழ் வண்ணார் பண்ணை சிவன் கோவிலுக்கு அருகில்.. வேண்டும் என்றே மாட்டு இறைச்சிக் கழிவுகளைக் கொட்டி மக்களை உணர்வு பூர்வமாக சீண்டிக் கொண்டிருந்தார்கள்.

இப்படி பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்த நிலையில்.. யாழில் விமானத் தாக்குதல்களுக்கும் அதற்கு செய்தி வழங்குபவர்களுக்கும் இடையில் இனங்காணப்பட்ட தொடர்புகள் என்று பல காரணிகள்.. குற்றவாளிகளை பிடித்து தண்டிக்க முடியாத நிலையில் பல விடயங்களை ஆராய்ந்து தான் விடுதலைப்புலிகள் இந்த முடிவுக்கே வந்தார்கள்.

தமிழ் மக்களுடன் கூட வாழும் சகோதர்களாகச் சொல்லும் முஸ்லீம்கள் தமிழ் மக்களின் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாது ஏன் இப்படி எல்லாம் நடக்க முயற்சித்தார்கள்..???! இப்படி ஒரு கேள்வியை எவராவது முஸ்லீம்களை நோக்கி முன் வைத்து அவர்களிடம் இருந்து சரியான பதிலைப் பெற்றிருக்கிறீர்களா..??!

மாறாக.. வடக்கில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம் என்று பொத்தாம் பொதுவாகத்தானே இப்போ பேசிக் கொள்கிறார்கள்..! அன்றைய நிலையில்..அங்கிருந்த நுண் காரணிகளை ஏன் யாரும் ஆராய முன் வருகிறார்கள் இல்லை..??!

உண்மைச் சொல்லப் போனால்... அன்றைய சூழலில்.. முஸ்லீம்களின் வெளியேற்றம் பற்றி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்களே அன்றி.. வருந்தக் கூடிய அளவிற்கு முஸ்லீம்கள் சகோதரத்துவத்தை தமிழ் மக்களோடு கட்டிக் காக்க முயலவில்லை.. என்பதே உண்மை..!

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம்களை பாதுகாப்புக்காக நகர்ந்துவதில் உள்ள நோக்கம் குறித்து அப்போது விடுதலைப்புலிகள் மக்களுக்கு விளக்கம் அளிக்காமலும் விடவில்லை. பள்ளிகளில் இதற்கான கலந்துரையாடல்களில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டன.

எனவே இதில்.. எந்த நியாயப்படுத்தலையும் நாங்கள் செய்யவில்லை. மாறாக அந்தக் காலச் சூழலை அப்படியே உள்ளபடிக்கு முன் வைக்கிறோம். அவ்வளவே. புலிகளின் அந்தச் செயலில் நியாயம் இருப்பது.. என்பது... மட்டும் உண்மை..!

1995 இடம்பெயர்வும்.. 1990 முஸ்லீம்களின் இடம்பெயர்வும் போர்க்கால சூழலில்.. மக்களின் பாதுகாப்புக் கருதி எடுக்கப்பட்ட முடிவுகள். ஒன்று தமிழ் மக்களை சிங்களப்படைகளிடம் இருந்து காக்க எடுக்கப்பட்ட முடிவு. மற்றது சகோதரத்துவம் பேண வேண்டிய சமூகங்கள் மூன்றாம் தரப்பால் மோதவிடப்பட்டு.. அந்த சகோதரத்துவம் சிதைக்கப்படுவதை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.

அதை அன்றைய.. முஸ்லீம்.. சிங்கள.. மற்றும் ஒட்டுக்குழுத் தலைமைகள்.. புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தி வெற்றி கண்டமை என்பது.. புலிகள் எதிர்பார்க்காத.. தமிழ் மக்கள் எதிர்பார்க்காத ஒன்று..! காரணம்.. முஸ்லீம்களைப் பொறுத்தவரை தமிழ் மக்களுடன் சகோதரத்துவம் என்பது நிலங்களைப் பகிர்ந்து கொள்வதில் மட்டுமே அன்றி.. உளப்பூர்வமான ஒன்றல்ல என்பதே இன்றும் உண்மை..! இந்த நிலை மாற வேண்டும். முஸ்லீம்கள் தங்களின் மதவாத வெறித்தனங்களைக் கைவிட்டு.. உண்மையான சமூக ஒருமைப்பாட்டைப் பேணவல்ல சகோதரத்துவம் வேண்டி.. இதய சுத்தியோடு.. செயற்பட்டிருந்தால்.. நிச்சயம்.. 1990 இல் முஸ்லீம்கள் வெளியேறக் கேட்கப்பட்டிருக்க வேண்டிய சூழலே வந்திருக்காது. இதே தவறை முஸ்லீம்கள் எனியும் செய்யக் கூடாது.

ஆனால்... ஜெனிவாவில் வைத்து என்ன செய்தார்கள். மனிதாபிமானமே இன்றி அல்லவா நடந்து கொண்டிருக்கிறார்கள்..????! இப்படியான நிலையில்.. இவர்களுடனான உண்மையான சகோதரத்துவத்திற்கு வழி பிறக்கும்....???????! :o:icon_idea:

Link to comment
Share on other sites

நான் இந்தப் பதிவை மட்டுப்படுத்தப்பட்ட சுய தணிக்கையுடனேயே எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் இன்றைய அரசியல் சூழல். இதன் காரணமாகவே இசைக் கலைஞனால் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு தனிமடலில் பதிலளித்திருந்தேன். அவரும்; ஏன் கருத்துக் களத்தில் பதிலளிக்கவில்லை என்று எதிர்க் கேள்வி கேட்காமல் என்னைப் புரிந்து கொண்டார்.

சிங்கள இனவெறி அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தாயகத் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்வதற்குமு; அவர்களுக்கு இழைக்க்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியாக நியாயம் கிடைப்பதற்குமான ஒரு போராட்டத்தை முன்னெடுக்கின்ற நிலையில் சில விடயங்களை வெளிப்படையாகப் பேசுவதற்கான காலம் கனிந்து விடவில்லை என நினைக்கிறேன்.

ஆனாலும் தமிழர் விடுதலைப் போராட்டாத்தின் போது தொடர்ச்சியாக நான் வெளிப்படையாக முன்வைக்கின்ற விமர்சனங்களாக இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம்.

1. 1986இல் ரெலோ இயக்கத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்

2. முஸ்லிம் மக்கள் முழுமையாக தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டமை

இந்த விடயங்களை நான் பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறேன். போராட்டக் களத்திலிருந்த பலரிடம் கூட வெளிப்படையாக முன்வைத்திருக்கிறேன்.

இன்றைய சூழலில் இந்த விடயம் குறித்து மேலதிகமாக அலச விரும்பவில்லை.

ஆனாலும் மனச்சாட்சியுள்ள தமிழர்கள் அனைவர் மனதிலும் இந்த விடயங்கள் குறித்த சரியான ஒரு பார்வை இருக்கும் என்பதே என்னுடைய நம்பிக்கை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈவிம் மிசின் குள‌று ப‌டிக‌ள்🤔.............................
    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.