Jump to content

100,000 மணித்தியாலங்கள் ஒளிரக்கூடிய மின்குமிழ்


Recommended Posts

மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி [LED] மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம் மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான 'பிலிப்ஸ்' இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

அண்மையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் மின்குமிழுக்கான 10மில்லியன் டொலர் பரிசினையும் இது வென்றது.

சுமார் 18 மாதங்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இப்பரிசு வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இதன்விலை 60 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

விலை சற்று அதிகம்தான் என்ற போதிலும் அதன் பாவனைக்காலத்தின் போது சுமார் 165 அமெரிக்க டொலர்கள் வரையான மின்சக்திச் செலவினை மீதப்படுத்தமுடியுமென பிலிப்ஸ் தெரிவிக்கின்றது.

எனினும் சில இடங்களில் இதனை 25 அமெரிக்கடொலர்களுக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக பிலிப்ஸ் குறிப்பிட்டுள்ளது. ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37794

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பல்ப் வேண்டினால்.... பிள்ளை, பேரப்பிள்ளை, பூட்டப்பிள்ளை என்று பாவிக்கலாம் :D .

சின்னனுகள் பல்பை உடைக்காமல், பாதுகாக்குறது பெரிய வேலை. :lol:

இணைப்பிற்கு நன்றி அகூதா. :)

Link to comment
Share on other sites

மிழக மக்களைக் கொலவெறிக்கு ஆளாக்கி​யிருக்கும் மின்சாரத் தடங்கலுக்கு, எளிய தீர்வு இருப்​பதாகச் சொல்கிறார், கோ.சுந்தர்ராஜன். இவர், 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த பொறியாளர்.

''குண்டு பல்புகள் மிக அதிகமான மின்சாரத்தை உறிஞ்சுவதை, பல ஆண்டு​களுக்கு முன்பே உலகநாடுகள் உணர்ந்து

நடவடிக்கையைத் தொடங்கி விட்டன. 2010-ம் ஆண்டில் நமது அண்டை மாநிலமான கேரளா, குண்டு பல்பு​களுக்குப் பதிலாக சி.எஃப்.எல். பல்புகள் கொடுக்கத் தொடங்கியது. மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் இரண்டு குண்டு பல்புகளையும் 30 ரூபாயும் கொடுத்துவிட்டு இரண்டு சி.எஃப்.எல். பல்புகளை இலவசமாகப் பெற்றுக் கொண்டார்கள். அதனால் 1.30 கோடி சி.எஃப்.எல். பல்புகள் மாநிலம் முழுக்க மாற்றப்பட்டதும், கேரளாவின் மின் தேவையில் 300 மெகாவாட் உடனடியாகக் குறைந்தது.

'’சி.எஃப்.எல். பல்புகளில் பாதரசம் இருப்பதும், அது சுற்றுச்சூழலுக்கு ஊறு உண்டாக்கலாம் என்பதும் உண்மைதான். அதனால் நாங்கள் எல்.ஈ.டி. பல்புகளைப் பயன்படுத்தச் சொல்கிறோம். 60 வாட்ஸ் குண்டு பல்பில் கிடைக்கும் வெளிச்சத்தை 15 வாட்ஸ் சி.எஃப்.எல். பல்பில் பெறலாம் என்றால், இதே அளவு வெளிச்சத்தை 7 வாட்ஸ் எல்.ஈ.டி. பல்பிலேயே பெற முடியும். இதன் ஆயுட்காலமும் அதிகம். தற்போது ஏழு வாட்ஸ் எல்.ஈ.டி. பல்பின் சந்தை விலை சுமார் 200 ரூபாய். இதற்கான வரியை நீக்கினால் விலை இன்னும் குறையும்.'' என்று சொல்லும் சுந்தர்ராஜன், ''உற்பத்திக்கும், பயன்படுத்தும் இடத்துக்கும் இடையில் 32 சதவிகிதம் மின்சார இழப்பு ஏற்படுகிறது. பல மின்னணுப் பொருட்கள் அதிக மின்சாரத்தை உறிஞ்சுகின்றன. உதாரணமாக, இந்தியாவின் மின்சாரத் தேவையில் விவசாய மோட்டார்கள் சுமார் 30 சதவிகிதத்தை இழுக்கின்றன. ஆனால் இந்த மோட்டார்களின் இயங்குதிறன் 45 சதவிகிதம் குறைவாக இருக்கிறது. இவற்றை மேம்படுத்தினாலே சுமார் 14,000 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும். இது ஓர் ஓட்டை வாளி என்பதால், எவ்வளவு ஊற்றினாலும் வெளியில்தான் போகும். குண்டு பல்புக்களை மாற்றும் அதேசமயம், இதுபோன்ற பிரச்னைகளையும் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் எத்தனைத் திட்டங்கள் போட்டாலும், விழலுக்கு இரைத்த நீர்தான்!'' என்கிறார்.

http://news.vikatan.com/index.php?nid=7586#cmt241

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.