Jump to content

யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கவிதை


Recommended Posts

யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கவிதை

யாழ் இணையத்தின் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் இணையம் பற்றிய உங்கள் கவிதைகளை, வாழ்த்துக்கவிதைகளை இப்பகுதியில் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

எனக்கு கவிதை எழுதவராது ஆனாலும் ஒரு வரி எழுதுகிறேன்

"தனி தமிழுக்கு ஓர் இணையம் யாழ் இணையம் "

Link to comment
Share on other sites

அறிவொடு அன்பினை எமக்களித்து

நலன் பேணும் யாழ்களமே

இன்றொடு உனக்ககவை எட்டாமே?

எம்மை அறியாமல் ஏதோ ஒரு

உணர்வு மகிழ்வினை நோக்கி

உந்துதிங்கே.

ஏனோ தெரியவில்லை உனை

வாழ்த்த வரிகள் புலிபோல்

தானாய் பாய்ந்து வருகுதிங்கே.

ஆடு மாடாய் ஓடி உழைக்கும்

அன்புக் குழந்தகள் நாங்கள்

அப்பப்போ வந்தாற நிழல் கொடுத்த

உந்தனுக்கு என்ன கொடுத்தால்

ஈடாகும்?

நாம் அன்றாடம் அறிந்திட புதினம், சங்கதிகள்

பதிவாக்கி இனியதமிழ்நாதமது

போல தருகின்றாய். பாவலர்கள்

பலர் இருக்க, பாடல் என, உணர்வினிலே

தோன்றுவதை எழுதினாலும்

நீ பொறுத்தருழுகின்றாய்.

கருத்தாடல் மூலமாக

மூடிக்கிடக்கின்ற விழிகளை

விழிக்கவைத்தாய்.

பட்டி மன்ற மேடையமைத்து

பயனுள்ள தகவல்களை

பகிருகின்றாய்.

அண்ணன், அக்காள், தம்பி, தங்கை,

அப்பு, ஆச்சி என அன்பினைக் கொட்டி

நாம் மார் தட்டி நிற்கின்றோம்.

அன்பு குழந்தை உன்னை

பல்லாண்டு வாழ வாழ்துகின்றோம்.

தமிழ் ஈழ கணவோடு

வாழுகின்ற மாந்தரை போல்

நீயும் தமிழ் ஈழத்தாகம்

சுமந்து போகையிலே.

உடன் பிறப்பினைப்போல் உன்னொடு தானே

நாமும் பின்னோடி வருவோம்.

அன்பான எம் அகமே

யாழ் களமே!

இன்று போல் நீ என்றும் ஒளி போல் இருக்க

உன்னையே பார்த்த வண்ணம் வாழ்துகின்றேம்

இருவிழிகள் நாம். பார் போற்ற பல்லாண்டு வாழ்க.

இருவிழி

Link to comment
Share on other sites

வாழ்க வாழ்க

வளர்ந்து ஓங்குக

ஓவியாமாய்

காவியமாய்

யாழ் தனிலே

இசை மீட்டும்

அனைவருக்கும்

வாழ்த்துரைத்து

விடை பெறுகின்றேன்

Link to comment
Share on other sites

இடை சங்கம்

கடைசங்கம்

தமிழ் வளர்த்தது-அறிந்துண்டு

எனக்கோ கனணியில் தமிழ் எழுத - வளர்க்க

யாழ் களமே முதற் சங்கம்

தொடரட்டும் பல்லாண்டு

Link to comment
Share on other sites

எனக்கு கவிதை எழுத வராது ஆனாலும் எனது வாழ்த்துகள் யாழ் களத்துக்கு எப்பவும் உண்டு

ஆனால் இங்கு மற்ற உறவுகளான இருவிழி மதுரன்அண்ணா சின்னக்குட்டி அங்கிள் இணைத்த கவிதைகள் அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறிவுள்ளோரின் தெரிவு

என்னை மனதில் வைத்து தானே இதைச் சொல்லுகின்றீர்கள்!? :wink:

Link to comment
Share on other sites

தமிழ் இனிச் சாகும் என்ற ஈனத்தமிழன் முன்னே

தமிழை இணையத்தில் ஏற்றிய ஈழத்தமிழனே

உன் இணையத்தில் ஏறிய தமிழ்

அகவை எட்டு மட்டுமல்ல எட்ட முடியா

அகவையைக் காண எம் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl_logo.gif

யாழ் மண்ணைப் பிரிந்து வந்தோம்

யாழ் இனணயத்தில் ஒன்று சேர்ந்தோம்

பிரிந்த எம் உறவுகளை

ஒன்று சேர்ந்தது யாழ் இனணயம்

பற்பல தகவல் தந்தது

அறிவூட்டியது யாழ் இனணயம்

ஆக்கங்கள் பல படைக்க

தட்டித் தந்தது யாழ் இனணயம்

அகவை எட்டு எட்டும் நீ

ஆயிரம் ஆயிரம் அகவை காண

அகத்தில் இருந்து வாழ்த்துகிறேன்

துளசி

Link to comment
Share on other sites

என்னை மனதில் வைத்து தானே இதைச் சொல்லுகின்றீர்கள்!? :wink:

எல்லா விதிகளுக்கும் ஒரு விதிவிலக்கு இருக்குமல்லே அது யாழை பொறுத்த வரை நீங்க தான் தூயவன் (ஜோக்குப்பா :wink: :P )

பரணி அண்ணா நீங்க கவிதை எழுதுவீங்க எண்டுபாத்தா ஒரு வரியில சுருக்கமா முடிச்சிட்டீங்க :lol:

Link to comment
Share on other sites

பரணி அண்ணா நீங்க கவிதை எழுதுவீங்க எண்டுபாத்தா ஒரு வரியில சுருக்கமா முடிச்சிட்டீங்க :lol:

ஒரு வரில முடிச்சிட்டாரா.

அது ஒரு வரிக்கவிதை :oops: :P :P

Link to comment
Share on other sites

வேலையில்லாதவர்களால் வேலையில்லாதவர்களிற்கு நடத்தப்படும் யாழ்களத்தில் உளறல்கள் குறைந்து 9ஆவது வருடத்திலாவது உருப்படியாக ஏதாவது நடக்க வாழ்த்துக்கள். :mrgreen:

Link to comment
Share on other sites

நல் வாழ்த்து நான் சொல்வேன்,............

செம்பொன் இணையத்தில் பசும் பொன் எழுத்திட்டது போல்

மண்மேல் விளக்காய் தமிழ் மணம் பரப்பும் இணையத்தளம்.

விண்ணுயர் தரமான படைப்புக்களால்

பார் புகழ உயர்ந்து வெண்டாமரை விற்றிருந்த நாமகளாய் பன்னிரு சுவை நயந்து வந்தாரை வாழவைக்கும்

நாட்டில் தமிழாய் சிறந்து ஓங்கவே.

அறிவியல், அரசியல், கணனி, இணையம், கவிதை

சிறுகதை, சினிமா, நகைச்சுவை, போட்டிகள், பாடல்

என்ற பல்சுவையான முகவரிகள் தாங்கி சிந்தனைத்துளிகளால்

இதயங்களை நிறைத்து ஒவரு நாளும் பலமுறை மலர்ந்திடும் பல்சுவை விருந்து.

புலம் பெயர் நாட்டில் தமிழன் என தலை நிமிர்ந்து

மகரந்தம் தூவும் செவ்வானில் மனச்சிறகை விரித்து

கலைஞர்கள் சங்கமித்த அழகு நிலா முற்றமதில்

கலைப்பூக்களால் யாழ் என்னும் பொன் இணையமாக

உலகை வலம் வரும் கதம்பமாய் இணையமாய்ச் சிரித்து

கற்பகதருவாய் கருவுயிர்த்த இலக்கியத்தில்

கவி மொட்டுடைத்து பூத்த குறிஞ்சித்தேன் கொண்டு

முத்தாகக் கோர்த்த சுகந்த மாலையால் உரு வாழ்த்து

உள்ளத்து உணர்வுகளை உரிமையுடன்

உயிராக்கி உறவுகளுக்குத் தரும் யாழ் அமுதே

மணி மகுடம் சூடக்காத்திருக்கும் அற்புத இணையத்தளமே

உன் பணி வளர்க. "காலத்தின் கடைசிக் கணங்கள் வரை வாழ்க."

ஆக்கம்

தாரணி - கனடா

Link to comment
Share on other sites

வரம் தா!

எங்கோ இருந்த எம்மை ஒன்றாக்கினாய்

எனை நீ எட்டி அணைக்க மறந்தாலும்- உன்

உச்சி முகர ஒரு வரம் தா!

எட்டு அகவையாச்சா உனக்கு?

எட்டு திசையும் வாழும்

இந்த குஞ்சுகளுக்காய்

எப்போதும் சிறகு விரி - அந்த

கத கதகதப்பில் நாமெல்லாம் வாழ

காலமெல்லாம் ஒரு வரம் தா!

நான்கு மூலைக்குள் முடங்கிய வாழ்வை

நான் இருக்கிறேன் என ஒளி காட்டினாய்

விழியாய் உனை நினைத்தோம்

எமை வென்று போனாய் நீ யாழவளே

உன் இதயத்தில் இடம் தந்தாய் - இனியவளே

உனை எந்நாளும் என் நெஞ்சில்

சுமக்க கேட்கிறேன்... ஒரு வரம் தா!

காலம் ஓடி கண்டம் மாறி

நதி வற்றி போச்சு இனியென்ன

மரங்கள் சாயும் என நினைத்தோம்

மழையாய் தலையில் பொழிந்தாய்

வீணை அழகே - உன்

வேர்களில் நாம் உறங்க ஒரு வரம் தா!

நீ வாழ வரம் கேட்பேன் - நான்

உன்னோடு என்றும் இருக்க

வரம் கேட்பேன்

எட்டு ஆண்டு என்ன?

எண்பது ஆண்டுகள் ஆகட்டும்

நான் இருப்பேனோ இல்லையோ

நீ எம் சந்ததி துயரத்தை

பிறர்க்கு எடுத்து சொல்லு - உன்

தந்தி நரம்புகளை தமிழுக்காகவே

தந்து நில்லு!

இலத்திரனியல் ஊடகத்தில் - எம்

இதயத்தை இறுக்கி தைத்த தாய்

யாழ் நீ வாழியவே என்றென்றும்

வாசம் வீசுகவே!

Link to comment
Share on other sites

உன்

தந்தி நரம்புகளை தமிழுக்காகவே

தந்து நில்லு!

ரசி அக்கா உங்கட வாழத்துக்கவிதை நல்லா இருக்கு :lol:

Link to comment
Share on other sites

என்னோட உல்டா கவிதை........:lol: என்ன பாட்டு என்று சொல்றவைக்கு மோகன் அண்ணா சிறப்புப் பரிசு வழங்குவார்:lol:

தோழிக்கு அகவை எட்டாம்

யாழுக்கு வந்தால் ஆனந்தம்

அரட்டை அடித்தால் ஆனந்தம்

அப்பப்ப கருத்தெழுதினா

இன்னும் இன்னும்ஆனந்தம்

சண்டை பிடிச்சா சந்தோசம்

புடுங்குப்பட்டால் சந்தோசம்

தாமதமின்றி சமாதானமானால்

ரொம்ப ரொம்ப சந்தோசம்

கடி வாங்கினால் உல்லாசம்

கத்திரி பட்டால் உல்லாசம்

பட்டி மன்றம் வச்சால் உல்லாசம்

வாதாடினால் இன்னும் இன்னும உல்லாசம்

உல்லாசம் உல்லாசம் சம் சம் சம்

யாழே யாழே கவர்ந்தாயே எம்மைப்

பாச சிறையில் அடைத்தாயே

தனி உலகோ புது உறவோ ஹோய்

உறவே உறவே உன் சிரிப்பில் நம்

சோகம் முழுதும் கரைத்தாயே

வாழ்வின் ஓர் அங்கமும் ஆனாய்

ஓருநாள் பார்க்கின் துயர் தந்தாய்

நேர ஓழுங்கின் செல்லப் பகையானாய்

அடடா அடடா சின்னச் சுமையானாய்

இருந்தும் சாய்வோம் உன் தோழில்

சொந்தங்களே சொந்தங்களே

தோழிக்கு அகவை எட்டாம்

கவிமாலை சூடியவளின் களிப்பில்

சேர்ந்திடுவோம் வாரீர் நீவிரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டே உல்டா அதுக்குள்ள கண்டு பிடிக்க வேற வேணுமோ..

Link to comment
Share on other sites

பாட்டே உல்டா அதுக்குள்ள கண்டு பிடிக்க வேற வேணுமோ..

:evil: :evil: :evil: :twisted: :twisted: :x :oops:

Link to comment
Share on other sites

ஆஹா சிநேகிது உங்கட உல்டா கவிதை நன்றாக இருக்கு

காதலித்தால் ஆனந்தம்

கண்ணடித்தால் ஆனந்தம்

சத்தமின்றி முத்தம் தந்தால்

ரொம்ப ரொம்ப ஆனந்தம்.

என்ன சரியா? எங்க எனது பரிசு :wink:

Link to comment
Share on other sites

ஹாய் ரசிஅக்கா:lol: பரிசு தானே உங்கட றெஸ்க்கு வந்து கொண்டே இருக்கு.

Link to comment
Share on other sites

ஓடி வந்து பாட்டிசைத்து

ஒன்றாய் கூடும் உறவுகளே

ஒருவரியேனும் வாழ்துங்கள்

தூய தமிழ் யாழை.

எத்தனையோ கவிமணிகள்

இருந்தும், யாழ் எட்டாம் அகவை

எட்டுகையில், எட்டிநின்று

உங்கள் கண்மணிகளை

மூடுதல் முறையாகுமோ?

கருத்துக்கள் பலருக்கும்

பலதாக இருக்கட்டும்.

நாங்கள் கொண்ட எண்ண கருக்களை

இயம்பி மொழிந்திட

இடம் கொடுத்தவளை

எட்டிநின்று பார்த்திடல்

சரியாகுமோ?

யாழ் இளைஞ்ஞன்

தலைப்பினை இணைத்தமைக்காய்,

நாலுவரி எழுதிவிட்டு

நாமும் ஓடிப்போய் விடலாம்.

நிஞாயமா என மனட்சாட்சியை

தொட்டுகேட்டால் உறுத்துதிங்கே.

நாள்தோறும் நாம் வந்தாற

இடம் கொடுத்த ஆலமரம்.

ஆலமரத்தின் நிழலில்

ஆறிவிட்டு போகும் சுயனல

மானிடங்களா நாங்கள்?

நாம் ஆறுகின்ற ஆலமறத்தை

சுத்தம் தான் செய்ய முடியாது

விட்டாலும், சுத்தி திரிந்ததற்காய்

ஒருவரியேனும் வாழ்த்திவிட்டு போகலாமே...

என்பதற்காய் வந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையம்

வாழ்த்துக் கவிதை

தாயகத்தை விட்டகன்ற தமிழ் உறவுக்கெல்லாம்

தாய்போன்று வழிகாட்டும் ஓர் இணையம்

சேய்போன்று சேர்ந்துவரும் உறவுகளை எல்லாம்

வாயார வாழ்த்தி வரவேற்கும் இணையம்

ஓயாது எழுதுகின்ற உறவுகளும் உண்டு

ஓரிரு வரிகளோடு ஒழிபவரும் உண்டு

ஆய்வாளர் அறிஞர்கள் கவிஞர்கள் ஆர்வலர்கள்

ஓய்வாகி உலகெங்கும் உறவாடும் இணையம்.

களம் கவிதை கலைகள் கலைஞர்கள்

கருத்து கணனி சிறுகதை குறும்படங்கள்

தளம் முகவரிகள் தத்துவம் தமிழீழம்

தமிழ் தமிழர் தகவலோடு துயர்பகிர்தல்

புலம் பாராட்டு பிறமொழி ஆக்கங்கள்

போட்டி நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சங்கள்

நலம் விளையாட்டு விஞ்ஞானம் மருத்துவம்

இலக்கியம் சமையல் இன்னும் பலபல.

பட்டி மன்றங்கள் அடிக்கடி நடக்கும்

பட்சிகள் பாதகர் பெயர்களில் தொடரும்

வெட்டி வெட்டி வாதங்கள் வளரும்

வேடிக்கை யாகவும் வாசிக்க இனிக்கும்

கட்டி அணைத்தும் கருத்துக்கள் சொல்வார்

எட்டி உதைப்பையும் எழுத்தினில் செய்வார்

முட்டி மோதி முறைத்து வெறுத்தாலும்

குட்டிப் புூனைபோல் குழைந்து பின்மகிழ்வார்.

அகவை எட்டினை அடைந்து அன்னைக்கு

அழகு தமிழெடுத்து ஆசிகள் சொல்வேன்

உவகை கொண்டிங்கு உள்நுழைந்தோர் எல்லாம்

உனைவிட்டு அகலாது உறவாக உள்ளார்

தகமை உனக்குண்டு தரத்தில் உயர்வுண்டு

தமிழர் வளம்பேண துணையாய் பலருண்டு

மகிமை பலபெற்று மண்ணின் மரபுஏந்தி

மகுடம் தலைசுூடி மகிழ்வோடு மலர்கவே!

Link to comment
Share on other sites

யாழ் பற்றிய நினைவுக் கவிகள் அனைத்தும் நல்லா இருக்கு...கணணித் தமிழில் யாழ் மென்மேலும் மெருகேற எங்கள் வாழ்த்துக்கள் என்றும் உண்டு..! யாழில் சிலருக்கு நிகழ்ந்த கடந்த கால கசப்புகளை தவிர்க்கவும் முயல வேண்டும்..! அதுதான் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நல்லது..! :idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.