நிழலி

Tuna மீனை பொரிப்பது எப்படி? உதவி தேவை..

Recommended Posts

கொழும்பில் இருக்கும் போது அடிக்கடி Tuna மீன் பொரியல் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு இருக்கின்றேன். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைக்கப்படும் இந்த மீன் பொரியல் சுவையாக இருக்கும். இந்த மீனைக் கறி வைத்தால் பலருக்கு பிடிப்பதில்லை. சுனைக்கும் தன்மை இருக்கும் மீன்; ஆனால் பொரித்தால் நன்றாக இருக்கும்

யாருக்காவது இதை எப்படி பொரிப்பது என்று தெரியுமா? அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?

Share this post

Link to post
Share on other sites

Tuna மீன் பொரியல் பண்ணுவார்கள் என்று இன்றுதான் தெரியும் சம்பல் பண்ணித்தான் கேள்விபட்டு இருக்கிறேன்

Share this post

Link to post
Share on other sites

இதைப் பொரிக்காதேங்கோ. நான் என்ன செய்வது என்றால்.. மீனை வாங்கி.. (இங்கும் முழு மீன் விக்கினம்.. வெள்ளையளட்ட இருக்குது..!) வட்டம் வட்டமா வெட்டி சுத்தம் செய்யுங்கோ.

mixer_multistar_big11479093.jpg

அப்புறம்.. இஞ்சி.. பூடு.. மிளகுத் தூள் எல்லாம் சேர்த்து அரைத்த கலவை (கிரைண்டர் மிக்ஸரில போட்டு எடுக்கிறது தான்...) மற்றும் மிளகாய்த் தூள் (தேவையான அளவு).. மஞ்சள் தூள்.. உப்பு.. கொஞ்சம் எண்ணெய் (மரக்கறி எண்ணெய் நல்லது அதில் உடலுக்கு அவசியமான நிரம்பாத கொழுப்பு உண்டு).. தேவையான அளவு தண்ணி விட்டு பசை மாதிரி குழைத்து.. அதில் வெட்டிச் சுத்தம் செய்த ரியுனாவை போட்டுப் புரட்டி எடுங்கோ.

-

அப்புறம்.. ஏலவே வெப்பமாக்கிய (120 - 180 பாகை) அ(ஒ)வனில் வைத்து பேக் பண்ணியும் (30 - 20 நிமிடங்கள்) எடுக்கலாம்.. இல்லை என்றால்.. பிறையிங் பானில் அதிகம் எண்ணொய் விடாமல்.. (ஏனெனில் மீனில் உள்ள கொழுப்பும்.. உருகி.. அதனை வாட்ட உதவும்) சிறிதளவு எண்ணெய் விட்டு.. வேகும் வரை வாட்டி எடுங்கள். மிக ருசியாக இருக்கும்.

இது நான் செய்யும் முறை. எனக்கு ருசியா இருக்குது. உங்களுக்கு எப்படி என்பதை செய்து பார்த்து.. சாப்பிட்டு சொல்லுங்கோ..!

என் வழியில் செய்தால் இறுதி விளை பொருள் வயிற்றுக்குள் போக முன்.. இப்படி அழகாகத் தோன்றனும்..! இல்லையென்றால் நீங்கள் செய்முறையை சரியாக செய்யவில்லை என்று அர்த்தமாகும்.

006wtmk0000.JPG

Edited by nedukkalapoovan
  • Like 2

Share this post

Link to post
Share on other sites

இதைப் பொரிக்காதேங்கோ. நான் என்ன செய்வது என்றால்.. மீனை வாங்கி.. (இங்கும் முழு மீன் விக்கினம்.. வெள்ளையளட்ட இருக்குது..!) வட்டம் வட்டமா வெட்டி சுத்தம் செய்யுங்கோ.

mixer_multistar_big11479093.jpg

அப்புறம்.. இஞ்சி.. பூடு.. மிளகுத் தூள் எல்லாம் சேர்த்து அரைத்த கலவை (கிரைண்டர் மிக்ஸரில போட்டு எடுக்கிறது தான்...) மற்றும் மிளகாய்த் தூள் (தேவையான அளவு).. மஞ்சள் தூள்.. உப்பு.. கொஞ்சம் எண்ணெய் (மரக்கறி எண்ணெய் நல்லது அதில் உடலுக்கு அவசியமான நிரம்பாத கொழுப்பு உண்டு).. தேவையான அளவு தண்ணி விட்டு பசை மாதிரி குளைத்து.. அதில் வெட்டிச் சுத்தம் செய்த ரியுனாவை போட்டுப் புரட்டி எடுங்கோ.

-

அப்புறம்.. ஏலவே வெப்பமாக்கிய (120 - 180 பாகை) அ(ஒ)வனில் வைத்து பேக் பண்ணியும் (20 - 30 நிமிடங்கள்) எடுக்கலாம்.. இல்லை என்றால்.. பிறையிங் பாணில் அதிகம் எண்ணொய் விடாமல்.. (ஏனெனில் மீனில் உள்ள கொழுப்பும்.. உருகி.. அதனை வாட்ட உதவும்) சிறிதளவு எண்ணெய் விட்டு.. வாட்டி எடுங்கள். மிக ருசியாக இருக்கும்.

இது நான் செய்யும் முறை. எனக்கு ருசியா இருக்குது. உங்களுக்கு எப்படி என்பதை செய்து பார்த்து.. சாப்பிட்டு சொல்லுங்கோ..!

என் வழியில் செய்தால் இறுதி விளை பொருள் வயிற்றுக்குள் போக முன்.. இப்படி அழகாகத் தோன்றனும்..! இல்லையென்றால் நீங்கள் செய்முறையை சரியாக செய்யவில்லை என்று அர்த்தமாகும்.

006wtmk0000.JPG

நன்றி நெடுக்கு..... மீனை நீங்கள் சொன்ன மாதிரி கலவை செய்து பிரட்டி வைத்து இருக்கின்றன். 30 நிமிடங்களின் பின் அவனில் வைக்கப் போகின்றேன்

Tuna மீன் பொரியல் பண்ணுவார்கள் என்று இன்றுதான் தெரியும் சம்பல் பண்ணித்தான் கேள்விபட்டு இருக்கிறேன்

அது தகரத்தினுள் அடைத்து விற்கப்படும் மீனைத் தான் (tin fish) சம்பல் செய்வார்கள் பொதுவாக. Sandwich செய்யவும் பயன்படுத்துவார்கள். நான் வாங்கி வந்தது முழு மீன்..முழுசிக் கொண்டு இருந்திச்சுது

Share this post

Link to post
Share on other sites

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

அடடா நான் தப்பாகி விளங்கிவிட்டனேனா... நான் நீங்கள் ரின்னில் வாங்கி வந்துதான் பெரியல் பண்ணப்போகிறீர்களாக்கும் என்று நினைத்துவிட்டேன்...

ஆனாலும் இதில் வறை பண்ணி சாப்பிடத்தான் ரேஸ்ராக இருக்குமென்று சொல்லுவார்கள்.. சாப்பிட்டதில்லை... சொல்ல கேள்விப்பட்டென்

Edited by சுஜி

Share this post

Link to post
Share on other sites

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

இதில் இருக்கும் மெர்குரி (mercury) தற்போது பெருகிவரும் ஆடிசம் (Autism) குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு ரேசெர்ச் (Research) பேப்பரில் படித்துள்ளேன். தொடர்ந்தும் மீன்களை விரும்பி சாப்பிடுபவர்கள் சிறிய மீன்களை உண்பதே சிறந்தது. கூடிய அளவில் கால்சியமும் இவற்றுள் இருப்பது விரும்ப தக்கது.

Share this post

Link to post
Share on other sites

..

அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?

tuna மீனுக்குத் தமிழில் சூரை மீன் என்று இணையத்தில் இருக்கிறது, அது சரியா தவறா என்று தெரியவில்லை... :unsure:

tuna-at-the-fish-market-in-suv.jpg

http://en.petitchef....amil-fid-543194

Share this post

Link to post
Share on other sites

இதுதான் tuna (சூரை)மீன்

a1b51a81d8eba5c6_tuna_fish_pictures_B.jpg

Tuna_fish_loins_sashimi_tails_heads.jpg

படத்தில் உள்ளதுபோல் வெட்டிக்கொள்ளவும் பின்னர் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு போட்டு பிரட்டி சற்றுநேரம் ஊறவிடவும் பின்னர் எடுத்து பொரித்தால் சுவையான tuna (சூரை) மீன் போரியல் தயார்.

Share this post

Link to post
Share on other sites

நானும் தேடி பார்த்தேன் இணையத்தில் சூரை மீன் என்றுதானே இருக்கிது ஏன் தங்கா அக்கா சுறா மீன் என்று சொல்லுகிறா எது சரி?

http://websamayal.blogspot.co.uk/2006/08/fish-names-in-tamil.html

Edited by சுஜி

Share this post

Link to post
Share on other sites

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

சுறா மீன் என்றால் shark என்றுதான் ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

tuna என்றால் சூரை மீன், இந்த மீன்கள் இந்து சமுத்திரத்தில் நிறை பிடிக்கப்படுகின்றது ...... அதில் முக்கியபங்கு வகிப்பது சீனாக்காரர்கள்தான்.

சில ஸ்ரீலங்காவில் அதிகம் பிடிக்கப்படுவது உண்டு ......

Share this post

Link to post
Share on other sites

நன்றி நெடுக்கு..... மீனை நீங்கள் சொன்ன மாதிரி கலவை செய்து பிரட்டி வைத்து இருக்கின்றன். 30 நிமிடங்களின் பின் அவனில் வைக்கப் போகின்றேன்.

சரியான பதம் பார்த்து ஒவனில் இருந்து எடுத்து சுவைத்துவிட்டு பதில் தாங்கோ..! :):icon_idea:

Share this post

Link to post
Share on other sites

Tuna சூரை மீன்

Tuna வை விட கொஞ்சம் முற்றியது 'கிழவல்லா'. மாசிகருவாடு போட சோக்கா இருக்கும்.

இதனை மஞ்சள் உப்பு , சிறிது கறித்தூள் கலந்து அத்துடன் இரு தேக்கரண்டி அரைத்த கொருக்காய்ப் புளியும் போட்டு சிறிதாக எண்ணையில் வாட்டி (shallow fry ) கராம்பும் கருவாப்பட்டையும் போட்டு பிரட்டிஎடுக்க நன்றாக இருக்கும்.

கிரந்திக் குணம் உள்ளவர்களுக்கு இந்த மீன் ஒத்துக் கொள்ளாது.

Share this post

Link to post
Share on other sites

TUNA இதன் தமிழ் பெயர் சுறாமீண். உங்களுக்கு தெரியுமா முன்பு மீணெண்ணை அல்லது மீணெண்ணை குலிசை (SEVEN SEES) என்று சிறுவயதில் உங்களுக்கு கொடுத்திருப்பார்கள் அது இந்த சுறாமீனில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.சுறாமீன் கொழுப்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

images3-1.jpg

நீங்கள் சுறா எண்டு நினைச்சு சொன்னமீன் கரடிமாருக்கும் விருப்பமான மீன் :D

P7060052.jpg

அன்புச்சகோதரி காட்டும் மீனும் அதுதான் :wub:

images4.jpgஇதுதான் அந்தமீனிலையிருந்து தயாரிச்ச மீனெண்ணைக்குளிசை......இதை பெரியாக்களும் விழுங்கலாம்......என்ன ஒண்டு ஏவறை விடேக்கை கொஞ்சம் அவதானமாய் இருக்கோணும் :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

images3-1.jpg

நீங்கள் சுறா எண்டு நினைச்சு சொன்னமீன் கரடிமாருக்கும் விருப்பமான மீன் :D

P7060052.jpg

அன்புச்சகோதரி காட்டும் மீனும் அதுதான் :wub:

images4.jpgஇதுதான் அந்தமீனிலையிருந்து தயாரிச்ச மீனெண்ணைக்குளிசை......இதை பெரியாக்களும் விழுங்கலாம்......என்ன ஒண்டு ஏவறை விடேக்கை கொஞ்சம் அவதானமாய் இருக்கோணும் :icon_mrgreen:

குமாரசாமி அண்ணை படத்தில் காட்டியுள்ள மீனின் பெயர் Lachs

இது கறிவைக்கவும், பொரியல் செய்யவும் நன்றாக இருக்கும்.

மீன் எண்ணைக்குளுசை சாப்பிடுவதை விட... வரும் ஏவறை தான், வாழ்க்கையை... வெறுக்கப் பண்ணிப் போடும். :D

Share this post

Link to post
Share on other sites

இதைப் பொரிக்காதேங்கோ. நான் என்ன செய்வது என்றால்.. மீனை வாங்கி.. (இங்கும் முழு மீன் விக்கினம்.. வெள்ளையளட்ட இருக்குது..!) வட்டம் வட்டமா வெட்டி சுத்தம் செய்யுங்கோ.

mixer_multistar_big11479093.jpg

அப்புறம்.. இஞ்சி.. பூடு.. மிளகுத் தூள் எல்லாம் சேர்த்து அரைத்த கலவை (கிரைண்டர் மிக்ஸரில போட்டு எடுக்கிறது தான்...) மற்றும் மிளகாய்த் தூள் (தேவையான அளவு).. மஞ்சள் தூள்.. உப்பு.. கொஞ்சம் எண்ணெய் (மரக்கறி எண்ணெய் நல்லது அதில் உடலுக்கு அவசியமான நிரம்பாத கொழுப்பு உண்டு).. தேவையான அளவு தண்ணி விட்டு பசை மாதிரி குழைத்து.. அதில் வெட்டிச் சுத்தம் செய்த ரியுனாவை போட்டுப் புரட்டி எடுங்கோ.

-

அப்புறம்.. ஏலவே வெப்பமாக்கிய (120 - 180 பாகை) அ(ஒ)வனில் வைத்து பேக் பண்ணியும் (30 - 20 நிமிடங்கள்) எடுக்கலாம்.. இல்லை என்றால்.. பிறையிங் பானில் அதிகம் எண்ணொய் விடாமல்.. (ஏனெனில் மீனில் உள்ள கொழுப்பும்.. உருகி.. அதனை வாட்ட உதவும்) சிறிதளவு எண்ணெய் விட்டு.. வேகும் வரை வாட்டி எடுங்கள். மிக ருசியாக இருக்கும்.

இது நான் செய்யும் முறை. எனக்கு ருசியா இருக்குது. உங்களுக்கு எப்படி என்பதை செய்து பார்த்து.. சாப்பிட்டு சொல்லுங்கோ..!

என் வழியில் செய்தால் இறுதி விளை பொருள் வயிற்றுக்குள் போக முன்.. இப்படி அழகாகத் தோன்றனும்..! இல்லையென்றால் நீங்கள் செய்முறையை சரியாக செய்யவில்லை என்று அர்த்தமாகும்.

006wtmk0000.JPG

நான் அதிகம் சின்ன மீன்கள்தான் சமைப்பது, வாங்கி இந்த முறையில் செய்து பார்ப்பம், நன்றி பகிர்வுக்கு நெடுக்கு

Share this post

Link to post
Share on other sites

Tuna மீன் எனது விருப்பத்துக்கு உரிய உணவு. ஆனால் அதை பொரிக்க முடியும் என்று இன்று தான் தெரியும். நிழலியின் சமையல் முடிவை பார்த்துகொண்டு இருக்கிறேன். நானும் இந்த கிழமை செய்யவேண்டும். நிழலியின் பதிலை காணவில்லை ஒரே வயிற்ரோட்டமோ தெரியவில்லை? :D :D :D

Share this post

Link to post
Share on other sites

இந்த மீன் கறுவல்கள் விரும்பி பெருமளவில் வாங்குவார்கள்.இது பொரிப்பதை விட போறனையில் சுடவும் நெருப்பில் சுடவும் அந்த மாதிரி இருக்குமாம்.நான் இது வரைக்கும் ருசித்துப்பாக்கவில்லை.

Share this post

Link to post
Share on other sites

நேற்று நெடுக்கு சொன்ன மாதிரி செய்து சாப்பிட்டு பார்க்க நன்றாக இருந்தது. கொஞ்சம் அதிக நேரம் ஒவனில் வைக்க வேண்டி இருந்தது (கிட்டத்தட்ட 1 மணி நேரம்). பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பிடிக்கவில்லை. பொரிச்ச மீன் அப்பா தரமால் வேற ஒன்றைத் தந்து விட்டார் என்று மகனுக்கு கோபம் என்னில். எனக்கும் மனைவிக்கும் பிடிந்து இருந்தது

செய்து பார்த்து சாப்பிட்டு.. கருத்துச் சொன்னதற்கு நன்றி. :)

உங்கள் வீட்டு.. அந்தச் சின்னக் குட்டிக்களை ஏமாற்றியது கொஞ்சம் மனதுக்கு கஸ்டமாக உள்ளது. :(

மீன் துண்டுகளை மொத்தமாக வெட்டினால்.. கொஞ்சம் கூட நேரம் எடுக்கும். ஒவனை ஒரு 5 - 10 நிமிடம் சூடாக்கிய பின் மீனை வைத்தெடுத்தால் நன்று. எதற்கும்.. பதம் பார்த்து எடுக்கத் தக்க வகையில்.. சரியான நேர அளவை நீங்கள் தீர்மானிப்பதே நன்று. நான் ஒரு சராசரி நேரம் தான் குறிப்பிட்டுள்ளேன். :)

Share this post

Link to post
Share on other sites

நெடுக்ஸ்க்கும் செய்து பார்த்து சொன்ன நிழலிக்கும் எனது நன்றிகள். நான் இதுவரை டின் tuna தான் சாப்பிட்டு இருக்கிறன். நானும் ஒருக்கா செய்து பார்க்க வேண்டும்.

Share this post

Link to post
Share on other sites

இதில் இருக்கும் மெர்குரி (mercury) தற்போது பெருகிவரும் ஆடிசம் (Autism) குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஒரு ரேசெர்ச் (Research) பேப்பரில் படித்துள்ளேன். தொடர்ந்தும் மீன்களை விரும்பி சாப்பிடுபவர்கள் சிறிய மீன்களை உண்பதே சிறந்தது. கூடிய அளவில் கால்சியமும் இவற்றுள் இருப்பது விரும்ப தக்கது.

MMR தடுப்பூசியில் உள்ள மேர்குரியே குழந்தைகளுக்கு 'ஒட்டிசம்' ஏற்படக் காரணம் என்று சர்ச்சைகள் எழுந்து வழக்கு நடந்து, (ரோனி பிளேயரின் ஆட்சிக் காலத்தில், அரசியல் காரணங்களும் இருந்ததால்) அது பிழையென நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தார்கள்.

குழந்தை பிறந்தவுடன், மழலைக்கு பாலூட்டும் தமிழ்த் தாய்மார்களுக்கு தினமும் சுறாமீன் சரக்குக் குழம்பு கொடுப்பார்கள். இது புலத்திலும் அதிகளவில் நடக்கின்றது. இதனால் ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றதா என கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

Edited by தப்பிலி

Share this post

Link to post
Share on other sites

துண்டுகளாக வெட்டிய ரூனா மீனைச் சமைக்கும் பாத்திரத்தினுள் போட்டு அதற்குள் தேவையான அளவு உப்பு,மிளகாய்தூள், சிறிதளவு தேசிக்காய் புளி, (விரும்பினால் வெங்காயம். சிறிதளவு சரக்குத்தூள் போடலாம்) மீன் அவியத்தேவையான அளவு தண்ணீர், 2 மேசைக் கரண்டி சமையல் எண்ணை விட்டு மூடி அவிய வையுங்கோ. அவியும் பொழுது கரண்டி வைத்துக் கிளறாமல் சட்டியை சேக் பண்ணுங்கோ ( ரிவியில் குக்மார் செய்வினம்) தண்ணி வத்தியதும் மீன் எண்ணையில் ( முதலே 2 மேசைக் கரண்டி விட்டது) சிறிது நேரம் பொரிய விடவும் ( கவனம் மீனை எரித்து விடாதீர்கள்) செய்து பாருங்கோ!

Share this post

Link to post
Share on other sites

MMR தடுப்பூசியில் உள்ள மேர்குரியே குழந்தைகளுக்கு 'ஒட்டிசம்' ஏற்படக் காரணம் என்று சர்ச்சைகள் எழுந்து வழக்கு நடந்து, (ரோனி பிளேயரின் ஆட்சிக் காலத்தில், அரசியல் காரணங்களும் இருந்ததால்) அது பிழையென நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தார்கள்.

குழந்தை பிறந்தவுடன், மழலைக்கு பாலூட்டும் தமிழ்த் தாய்மார்களுக்கு தினமும் சுறாமீன் சரக்குக் குழம்பு கொடுப்பார்கள். இது புலத்திலும் அதிகளவில் நடக்கின்றது. இதனால் ஏதும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றதா என கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

தப்பிலி, இலங்கையில் காணப்படும் சுறாக்கள், 'பால் சுறா' எனும் வகையைச் சேர்ந்தவை!

இவை உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருப்பவை இல்லாதபடியால், மெர்குரி இவற்றின் உடலில் சேர்வதில்லை!

ஆனால், புலத்தில் விற்கும் சுறாக்கள், பெரியவை. இவற்றைத் துண்டுகளாக வெட்டி விற்கின்றார்கள்! இவற்றில் மெர்க்குரி, அதிகம் உண்டு!

இதனை இலங்கையர் மட்டுமே வாங்குவதனால், சிட்னி மீன் சந்தையில், வெள்ளை தமிழிலேயே 'சுறா' என்று கத்திக்கத்தி விற்பதைக் காணலாம்!

இதே போல பொன்னாங்காணியைப் போல வளரும், ஒரு நஞ்சுச் செடியை,(இதிலும் மெர்க்குரி அதிகம்) வீட்டில் வளர்த்து எமது மக்கள், சாப்பிடுவதைத் தற்செயலாகக் கண்டுபிடித்து, இவற்றை அழிக்க, அரசாங்கம் பெரும் பணம் செலவு செய்த சம்பவமும், சில வருடங்களின் முன்பு, இங்கு நடந்தது!

Share this post

Link to post
Share on other sites

இதே போல பொன்னாங்காணியைப் போல வளரும், ஒரு நஞ்சுச் செடியை,(இதிலும் மெர்க்குரி அதிகம்) வீட்டில் வளர்த்து எமது மக்கள், சாப்பிடுவதைத் தற்செயலாகக் கண்டுபிடித்து, இவற்றை அழிக்க, அரசாங்கம் பெரும் பணம் செலவு செய்த சம்பவமும், சில வருடங்களின் முன்பு, இங்கு நடந்தது!

எனக்கும் ஈமெயிலில் இந்த விபரங்கள் முன்னம் வந்தது, இருந்தால் இதில் இணைத்துவிடுவீர்களா, பலருக்கு உபயோகமாக இருக்கும். இலைகளில் வித்தியாசம் இருக்கனும்

Share this post

Link to post
Share on other sites