Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

“அவர்கள் என்னைக் கொல்லப் போகிறார்கள் என நினைத்தேன்“ – பிபிசிக்கு குணரட்ணம் செவ்வி

Recommended Posts

gunaratnam.jpg

தன்னைக் கடத்திச் சென்றவர்கள் நன்கு பயிற்சி பெற்ற பாதுகாப்புத் துறையினரே என்று, விடுவிக்கப்பட்டு, அவுஸ்ரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறேம்குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நான் தங்கியிருந்த அறைக்குள் திடீரெனப் புகுந்த சுமார் 15 வரையிலான கடத்தல்காரர்கள், என்னை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றனர்.

துப்பாக்கிகளுடன் இருந்த அவர்கள், அதிகாரபூர்வமற்ற வகையில் செயற்படுவதற்கு பயிற்றப்பட்ட சிறிலங்கா பாதுகாப்புத்துறையினரே.

அவர்கள் என்னை இராணுவ முகாம்களிலோ, காவல் நிலையங்களிலோ தடுத்து வைத்திருக்கவில்லை.

அவர்கள் யார் என்பதை என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

ஆனால், அவர்கள் நடந்து கொண்ட கடுமையான முறைகளில் இருந்து, அரசியல் அங்கீகாரம் கொண்டவர்களின் ஆசீர்வாதத்துடன் செயற்படும் சிறிலங்கா அரச பாதுகாப்புச் சேவைகளைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

என்னைக் கடத்தியவர்கள் உடனடியாக சித்திரவதை செய்தனர். ஆனால் பின்னர் தமது உத்தியை மாற்றிக் கொண்டனர்.

இந்தக் கடத்தலை என் மீதான தெளிவானதொரு கொலை மிரட்டலாகவே நான் பார்க்கிறேன்.

இது அடிப்படை உரிமைகளை மீறும் செய்ல். அவர்கள் என்னைக் கொல்லப் போகிறார்கள் என் நினைத்தேன்.

எனது அரசியல் தொடர்பாக, கட்சி தொடர்பாக, அதன் நிகழ்ச்சிநிரல் தொடர்பாக, உதவியாளர்கள் தொடர்பாக பல கேள்விகளை அவர்கள் எழுப்பினர்.

எனது போலியான அடையாளங்கள் பற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லை. அதையெல்லாம் அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையே குணரட்ணத்தை சிறிலங்கா அரசபடைகள் கடத்தவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஆட்களைக் கடத்துவதற்காக இரகசிய காவல்துறைக் குழுக்கள் ஏதும் தம்மிடம் இல்லை என்றும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

http://www.puthinapp...?20120412105979

Share this post

Link to post
Share on other sites

சரியா தான் நினைசீங்கள். கிச்சு கிச்சு மூட்டவே கடத்தினவங்கள்?

அது சரி, உங்களை அவர்கள் கூட்டாக பாலியல் வந்புனர்ந்ததை சொல்லவில்லை? 

Share this post

Link to post
Share on other sites

"I have no doubt that if I didn't have the Australian government's support I would have been killed just like my brother and hundreds of other political activists and journalists have been killed," Mr Gunaratnam said at his Dural home at about 2.30pm.

இலங்கையில் ... கடத்தப்படும்/படுகொலை செய்யப்படும்/சித்திரவதைகளை அனுபவிக்கும் ... மாவோஸ்டுகள்/லெனினுஸ்டுகள்/கம்யூனிஸ்டுகள் ... என்று தம்மை தாமே கூறிக்கொண்டு திரிகிறதுகளையும் ... காப்பாற்ற ... ஒரு சைனாவோ/ரஷியாவோ/கியூபாவோ/வெனிசுவேலாவோ/வியட்னாமோ ... வந்ததும் இல்லை/வரப்போவதும் இல்லை!!!!!!!!! ... அதற்கும் மேற்குலகம்தான் வரவேண்டும்!!!

... ஆனால் 14ம் நூற்றாண்டுக்கும் உதவாத குப்பை கூழங்களை, எம்மவர்களும் பொறுக்கியபடி ... மேற்குலகத்திற்கு எதிரான கோசங்கள் மட்டும் ... விண்ணைப் பிளக்கும்!!!!!!!!!

இந்த கொம்யுனிச நாடுகளே தங்கள் சொந்த மக்களை அடக்கித்தான் ஆளுகிறார்கள். மனித உரிமைகளை மிகவும் மோசமாக மீறுபவர்களும் இவர்கள்தான். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த நாடுகளை விட்டு ஒடி வர பல இலட்சம் மக்கள் காத்திருக்கிறார்கள். சிறுபான்மை இனத்தின் விடுதலையை அடக்க பேரினவாதத்திற்கு தோள் கொடுத்தவர்கள்.

இந்த சோசலிசம்.. rogueஇசம் ... பூர்சுவா ...bla bla ... பற்றி வாய் கிழியப் பேசும் தமிழ்த் தோழர்கள் ஒரு கொம்யுனிச நாட்டிடம் அடைக்கலம் கோராமல், மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்வது எனக்குப் புரியாத ஒரு விடயம்.

Share this post

Link to post
Share on other sites

இந்த சோசலிசம்.. rogueஇசம் ... பூர்சுவா ...bla bla ... பற்றி வாய் கிழியப் பேசும் தமிழ்த் தோழர்கள் ஒரு கொம்யுனிச நாட்டிடம் அடைக்கலம் கோராமல், மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்வது எனக்குப் புரியாத ஒரு விடயம்.

நேற்று நெல்லையன் எழுதிய கருத்துக்கு, தப்பிலி எழுதியதை நினைத்தேன்.

இன்று அதே... கருத்தையே, தப்பிலி பதிந்துள்ளதை நினைக்க ஆச்சரியமாக உள்ளது. :)

Share this post

Link to post
Share on other sites