Sign in to follow this  
nedukkalapoovan

நீங்க கன்னத்தப் பொத்தி.. பளார் விட்டிருக்கீங்களா..?!

Recommended Posts

punch_in_face.jpg

இது வன்முறையை தூண்டும் பதிவல்ல. மாறாக.. நீங்கள் கோபத்தை அடக்க முடியாது.. உங்கள் பிள்ளைகளுக்கோ.. கணவனுக்கோ.. மனைவிக்கோ.. காதலனுக்கோ.. காதலிக்கோ.. இல்ல காதல் சொன்னப் போன இடத்தில.. இல்ல ஆசிரியரிடம் அல்லது வேறு யாரிடமும்... பளார் என்று அறைஞ்சிருக்கீங்களா..??! அல்லது வாங்கி இருக்கீங்களா..??!

அப்படி அறைஞ்சிட்டு.. நீங்க என்னத்தை உணர்ந்தீர்கள்... செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டிருக்கீங்களா.. இல்ல அதை மீளச் செய்யனுமுன்னு நினைச்சீங்களா..??!

அல்லது வாங்கிய பளாருக்கு.. என்னத்தை உணர்ந்தீர்கள்.. திருப்பிக் கொடுக்கனுன்னு உணர்ந்தீர்களா.. அல்லது இயலாமையில்.. தவித்தீர்களா.. அல்லது தவறை உணர்ந்து திருத்தினீர்களா..??!

நீங்கள் கன்னத்தைப் பொத்தி பளார் விட்ட பின் எத்தனை தடவைகள்.. வருந்தி.. அதைச் செய்ய மாட்டன் என்று நினைச்சிட்டு.. மீளவும் செய்திருக்கீங்க..??!

ஏன் உங்களால அப்படி பளார் விடுவதை கட்டுப்படுத்த முடியல்ல..???!

நீங்கள் பளார் விட்டதன் மூலம் நீங்கள் எண்ணியத்தை நிறைவேற்றினீங்களா..??! அந்த நிறைவேற்றத்தில் உங்களுக்கு மனத் திருப்தி ஏற்பட்டதா..??!

நீங்கள் இதுநாள் வரை பளாரே விடல்ல.. அல்லது வாங்கல்ல என்றால்.. ஏன் என்று சொல்லுவீங்களா..???!

தமிழ் சினிமாவில அடிக்கடி பளார் விடுறாங்க. இப்ப எல்லாம் பொண்ணுங்களும் தாராளமா விடுறாங்க..! இது பற்றி என்ன நினைக்கிறீங்க..??! இப்படி சமூகத்திற்கு காட்டிறது.. தப்பா.. தப்பில்லையா..???!

இது தொடர்பா சொந்த அனுபவங்களைப்.. கண்ட கேட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டால் நல்லது.

(நான் யாருக்கும் இன்னும் அப்படி பளார் விடல்ல. ஆனால் சும்மா பகிடிக்கு ஒரு பளார் விட்டுப் பார்க்க ஆசை. வசதியான ஆள் தான் இன்னும் வாய்க்கல்ல..! ) :):lol:

Edited by nedukkalapoovan
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சும்மா படுத்திருக்கிற நாய், எதிர்பாராமல் கடிக்கிற மாதிரித் தான் இந்தப் பளார்!

இது இயலாமையின் வெளிப்பாடு!

'பளார்களினால்' ஏதும் பயன்கள் விளைந்தது கிடையாது! மாறாக 'பழி வாங்கல்' தான் தொடரும்!

இது தானே தமிழ்ப் படங்களின், மூலக் கரு!

Share this post


Link to post
Share on other sites

punch_in_face.jpg

படத்தில இருக்கிறது டிஷ்யூம் !!

பளார் அல்ல. :D :D :lol:

Share this post


Link to post
Share on other sites

ஒரு முறை... சன நடமாட்டம் உள்ள கடை ஒன்றுக்கு பொருட்கள் வாங்க,

மடிக்கும் படி ஊடாக மேல் மாடிக்கு ஏறிக் கொண்டிருந்த போது...smiley_rolltreppe.gif

பின்னுக்கு நின்ற பாடசாலை மாணவர் கூட்டம் ஒன்று, எனது பின் பக்கத்தில் நடு விரலால் குத்தி விட்டு, சிரித்த மாதிரி இருந்தது.

முன்னுக்கு நின்ற பையனுக்கு, விட்டேன் ஒரு பளார். அவனுக்கு என்ன.. நடந்தது என்று தெரியவில்லை.

பின்பு, அந்த மாணவர் கூட்டத்தின் பின் என்னுடன் வேலை செய்யும்... தெரிந்தவர் குத்தி விட்டு மறைந்து நின்றிருக்கிறார்.

பிறகு அந்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு, கவலையை தெரிவிக்க வேண்டியதாய்ப் போய்விட்டது. :D

Share this post


Link to post
Share on other sites

கன்னத்தில் "பளார்" என்று வாங்கிய அனுபவம் இருக்கின்றது. விஞ்ஞானம் படிப்பித்த ஆசிரியர் வட்டவாரியை ஒழுங்காகப் பிடிக்கவில்லை என்பதற்கு ஒருமுறை அறைந்தார். பஸ்ஸுக்கு யாரோ கல்லெறிந்ததற்கு கொண்டக்டர் ஓடாமல் நின்ற என்னைப் பிடித்துப் பஸ்ஸுக்குள் ஏற்றி இன்னொருமுறை அறைந்தார்.

தமிழன் என்றபடியால் கையோங்கும் பழக்கம் இருக்கும் என்பதற்கு நான் விதிவிலக்கல்ல. எனினும் கன்னத்தில் அறைந்தது எதுவும் (சுய)நினைவில் இல்லை!

Share this post


Link to post
Share on other sites

நினைவில் உள்ளது ஒரே ஒரு தடவை மட்டும். ஏழாம் வகுப்பில் (கலவன் பாடசாலை) சக மாணவியுடன் முசுப்பாத்தியாக தொடர்புபடுத்தி கதைத்த எனது நண்பனுக்கு ஓர் அதிரடியான பளார் கொடுத்தேன், அவன் அழத்தொடங்கிவிட்டான். 

அதிகப்படியாக வீட்டில் எனது அண்ணரிடம் அநீதியான முறையில் பல வாங்கியுள்ளேன் (சேர்ந்து விளையாடும்போது அவர் தோற்க போகின்றார் என்றால் அலாப்பும்போது எனக்கு பளார் இடுவார்).

வெளியாரிடம் பளார்வாங்கி நினைவில் இல்லை.

Edited by கலைஞன்

Share this post


Link to post
Share on other sites

எல்லாற்ற அனுபவமும் சுவாரசியமா இருக்குது. பெரும்பாலும் பளார் வாங்கின ஆக்களாகவே யாழ் கள உறவுகள் உள்ளார்கள். ஆனால் இந்த பளார்.. அவசியம் தானா.. என்பது பற்றி ஒருத்தரும் வடிவாச் சொல்லேல்லையே..??! ஏன்...??!

நான் எப்பவாவது இருந்திட்டு.. கம்பால.. பிரம்பால. அடி வாங்கி இருக்கிறன்.. கையால குட்டும் வாங்கி இருக்கிறன்.. ஆனால் பளார் வாங்கல்ல...! :):icon_idea:

Share this post


Link to post
Share on other sites

ஒருவருக்கும் கொடுக்கவில்லை கன்னத்தில் ,வாங்கியிருக்கின்றேன் ஒருமுறை அதை என்னால் இன்னமும் மறக்கமுடியவில்லை .

O/L படிக்கும் போது வகுப்பிற்கு வந்த சின்னத்துரை வாத்தி படிப்பிக்காமல் கதைத்துக்கொண்டு இருந்து விட்டு, பாடம் முடிந்து மணி அடிக்கும் நேரம் அடுத்த பாட வாத்தியை கொறிடோரில் கண்டுவிட்டு அப்பத்தான் ஒருகலத்தின் படத்தை பிளாக்போட்டில் வரைந்துவிட்டு மணி அடித்ததும் கேட்காததுபோல் பத்து நிமிடங்கள் பிரித்தேறிந்தார்,பின் வெளியில் போகும் போது மற்ற வாத்திக்கு சொறி சொல்லிவிட்டு போனார் .

நானும் இருக்கேலாமல் வாத்தி மணி அடித்தபின் தான் படிப்பிக்க தொடங்குது என்று அருகில் இருந்த பெடியனுக்கு மெதுவாகத்தான் சொன்னேன் ,

அடுத்த ஜன்னலால் வெளியில் போகும் போது வகுப்பை எட்டி பார்த்த வாத்தி என்ன நினைத்தோ தெரியாது வகுப்பிற்குள் வந்து அடுத்த பாட வாத்தியிடம் எக்சியூஸ் சொல்லி விட்டு விட்டுது ஒரு அறை ஒன்று எனது கன்னத்தில்.

மற்ற வாத்தி உட்பட எவருக்கும் தெரியாது ஏன் சின்னதுரை வாத்தி எனக்கு அடித்ததேன்று,எனக்கும் தான் .

Share this post


Link to post
Share on other sites

நான் வாங்கிய அறையை மறக்க முடியாது. யாழ் இந்து பிரேயர் ஹோலில், ஒரு நாள், பிரேயர் எல்லாம் முடிந்த பின், வகுப்புக்கு போவதற்காக வரிசையில் நின்ற போது, நானும் என் நண்பனும் கதைக்க அங்கு வந்த சந்தியாப்பிள்ளை விட்டார் இருவருக்கும் ஒவ்வொரு அறை. நாங்கள் அப்போது ஆறாம் வகுப்பு. சிறியவர்கள் என்ற ஈவு இரக்கம் கூட இல்லை. :unsure:

அறைவது என்பது தேவையற்ற ஒன்று!

தவமணிதாசனும் மாணவர்களுக்கு அறைவதில் சூரன். ஆனால் அவருக்கு நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் இருட்டடி கொடுத்ததாகவும் கேள்வி. :lol:

Share this post


Link to post
Share on other sites

ஆனால் இந்த பளார்.. அவசியம் தானா.. என்பது பற்றி ஒருத்தரும் வடிவாச் சொல்லேல்லையே..??! ஏன்...??!

"பளார்" என்று கன்னத்தில் அறையும் வன்முறை தவிர்க்கப்படவேண்டும். தங்களைவிட மெலியாருக்கு அறைபவர்கள் உண்மையிலேயே ஏதோ நோயினால் பீடிக்கப்பட்டவர்கள்!

Share this post


Link to post
Share on other sites

பளார் .. இந்த திரி சில எனது ஞாபகங்களையும் மீட்டுகின்றன.

நான் இரண்டு பேருக்கு பளார் விட்டு இருக்கிறேன். துரதிஸ்டவசமாக இரண்டுமே பெண்கள். ஒருவர் என் காதலியும் கூட. நான் அடித்தபோது எனக்குள் இருந்த காரணமும் கோபமும், அவளை அடித்த அந்த கணமே மறந்து போச்சு.

அவள் கண்களில் அழுகையும், கையினால் அவள் கன்னத்தை தடவியபடியும் இருந்தாள். அவள் சொன்ன வார்த்தைகளுக்கு அவள் அந்த பளாரை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் தான் சொன்னது தவறுதான் என்று இன்னொரு நாள் சொன்னாள். இருந்தாலும் அவளை அன்று அடித்தமைக்காக இன்றும் என் மனசில் ஒரு வருத்தம் இருந்து கொண்டுதான் இருக்கு.

அடுத்து என் நண்பிக்கு விட்ட பளார். அந்த பலாருக்கு ஒரு கணம் முன்பு வரை எனக்கு அவளை அட்டிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு கணமும் இருந்ததில்லை. அவளின் ஒரு தவாறான வார்த்தை பிரயோகம், ஒரு கணத்தில் என்னை கையோங்க வைத்துவிட்டது. அது தான் எனது கடைசி பளாராகவும் இருந்தது. அது அந்தி மாலை நேரம், அஒரு அணைக்கட்டின் விளிம்பில் அவளை அடித்தேன்.

அடுத்த நாள் தான் என் கூட பேசினாள். கன்னத்தில் விரல்கள் பதிந்த அடையாளம் காட்டினாள். வீடுக்கு பொய் சொன்னதாக சொன்னாள். முன்பை விட எங்கள் நட்பு நாராக இருந்தது.

அடிக்கும் போது இருந்த நியாயம் இப்போது இல்லை. இப்போதும் அவற்றை நினைத்து கவலைப்படுவது தான் அதிகம். இருந்தாலும் நாங்கள் எங்களுக்குள் அடிக்கடி ஞாபகபடுத்தும் சொல்லாக, இடமாக, சம்பவமாக அந்த பளார்கள் அமைந்துவிட்டது என்னமோ உண்மைதான். என் நண்பி கூட சொல்லுவாள் அதை மறக்க முடியுமா என்று. அனால் அவற்றை நினைக்கும் போது இனிமையாக இருபதாகவும் சொல்லுவாள்.

இன்றும் கூட என்னவளிடம் , அன்றைக்கு வாங்கின அடி பத்தாதா என்று கேட்டு விட்டு தான் இந்த பதிவை பதிகிறேன் என்றால் நீங்கள் நம்பவா போகிறீகள்.? :lol: :lol:

அனேகமாக இன்று எனக்கு இரவுச்சாப்பாடு கிடைக்காது என்று தான் நினைக்கிறேன் :lol::icon_idea:

அறைவது உண்மையில் எங்களின் பலவீனத்தின் வெளிப்பாடே .

Edited by பகலவன்

Share this post


Link to post
Share on other sites

வீட்டில், பள்ளியில் கையால் பிரம்பால் அடிவாங்கியதுண்டு, சிறுவயதில் அண்ணன், தம்பி, தங்கைக்குக் கையோங்கியதும் உண்டு. ஆனால் யாரிடமும் கன்னத்தைப் பொத்தி பளார் இதுவரை வாங்கியதும் இல்லை கொடுத்ததும் இல்லை.

ஒருவர் அறிந்தே தனது செயல்களாலும், வார்த்தைகளாலும் மற்றவரை கோபத்துக்குள் தள்ளுவது (பல தரம் எச்சரிக்கை கொடுத்தபின்னும்) தொடர்ந்தால் அவர் கன்னத்தைப் பொத்தி இல்லை காதைப் பொத்தி வாங்க அருகதையுடையவர் என்பது எனது கருத்து. ^_^

Share this post


Link to post
Share on other sites

இது நான் கண்ட ஓர் நகைச்சுவை அனுபவம்.இது இந்த தலைப்பிற்கு எவ்வளவு பொருந்தம் என்று எனக்கு தெரியாது. அனாலும் கன்னத்தில் பளார் என்று வாசித்தது உடனே இந்த நினைப்பு என் கண் முன்னே வந்து என்னை அறியாமலேயே சிரித்து விட்டேன் ...................

ஆம் நான் விடுதிச்சாலையில் தங்கியிருந்து படிக்கும்போது இடைக்கிடை ரகசியமாக அரியாலை என்னும் இடத்திற்கு என் நண்பர்களுடன் செல்வதுண்டு.[கள்ளு கொப்பிரேசன் பக்கம் ]

ஒருநாள் எமக்குப்போறுப்பான பாதிரியார் விடுமுறை சென்றுவிட்டார்.வழமை போல் ஆரம்பித்தது எம் பயணம் அரியாலை சொர்க்கபுரம் நோக்கி...அங்கே வழமைக்கும் அதிகமான கூட்டம். நாமும் ஒரு கரையில் ஒதுங்கினோம்.எமக்கு பக்கத்தில் ஒரு கூட்டம் மிக மகிழ்ச்சியாக ரசித்து குடித்துக்கொண்டு மிகவும் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.திடீர் என அந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் பக்கத்தில் உள்ள தனது சகாவிற்கு குடுத்தார் கன்னத்தில் பளார் என்று....தனது முழு பலத்தையும் சேர்த்து கொடுத்த அந்த பளார் உண்மையில் கடினமானதாகவும்,கோபத்தை உடன் வரவைக்க கூடியதுமானது.நான் நினைத்தேன் அங்கே பெரிய சண்டை வரப்போகிறது என்று நானும் எனது நண்பர்களும் எஸ்கேப் ஆவதற்கு தயாரானோம்........அடி வாங்கியவர் தனது கன்னத்தை ஒரு தடவை தடவி சீ......... எனக்கு நோகேலை என்றார். அதைப்பார்த்து நானும் என் நண்பர்களும் சிரித்த சிரிப்பையும்,அந்த ஆனந்தத்தையும் இந்த தலைப்பு எனக்கு நினைவூட்டியதால் இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

இது நான் கண்ட ஓர் நகைச்சுவை அனுபவம்.இது இந்த தலைப்பிற்கு எவ்வளவு பொருந்தம் என்று எனக்கு தெரியாது. அனாலும் கன்னத்தில் பளார் என்று வாசித்தது உடனே இந்த நினைப்பு என் கண் முன்னே வந்து என்னை அறியாமலேயே சிரித்து விட்டேன் ...................

ஆம் நான் விடுதிச்சாலையில் தங்கியிருந்து படிக்கும்போது இடைக்கிடை ரகசியமாக அரியாலை என்னும் இடத்திற்கு என் நண்பர்களுடன் செல்வதுண்டு.[கள்ளு கொப்பிரேசன் பக்கம் ]

ஒருநாள் எமக்குப்போறுப்பான பாதிரியார் விடுமுறை சென்றுவிட்டார்.வழமை போல் ஆரம்பித்தது எம் பயணம் அரியாலை சொர்க்கபுரம் நோக்கி...அங்கே வழமைக்கும் அதிகமான கூட்டம். நாமும் ஒரு கரையில் ஒதுங்கினோம்.எமக்கு பக்கத்தில் ஒரு கூட்டம் மிக மகிழ்ச்சியாக ரசித்து குடித்துக்கொண்டு மிகவும் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர்.திடீர் என அந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் பக்கத்தில் உள்ள தனது சகாவிற்கு குடுத்தார் கன்னத்தில் பளார் என்று....தனது முழு பலத்தையும் சேர்த்து கொடுத்த அந்த பளார் உண்மையில் கடினமானதாகவும்,கோபத்தை உடன் வரவைக்க கூடியதுமானது.நான் நினைத்தேன் அங்கே பெரிய சண்டை வரப்போகிறது என்று நானும் எனது நண்பர்களும் எஸ்கேப் ஆவதற்கு தயாரானோம்........அடி வாங்கியவர் தனது கன்னத்தை ஒரு தடவை தடவி சீ......... எனக்கு நோகேலை என்றார். அதைப்பார்த்து நானும் என் நண்பர்களும் சிரித்த சிரிப்பையும்,அந்த ஆனந்தத்தையும் இந்த தலைப்பு எனக்கு நினைவூட்டியதால் இதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

Share this post


Link to post
Share on other sites

எல்லாரும்.. உங்கள் அனுபவங்களை தெளிவாச் சொல்லி இருக்கீங்க.... அதிகம் அனுபவங்கள் பள்ளி ஆசிரியர்களிடம் பளார் வாங்கினது பற்றித்தான் இருக்குது. இந்த காணொளிகளில் தோன்றுவது போல.... தேவையில்லாமல் வாயைத் திறந்து.. பளார் வாங்கியது உண்டா..??! இப்படி பளார் வாங்க நேரிட்டால்.. உங்கள் மனநிலை எப்படி இருக்கும்...???! :):icon_idea:

http://youtu.be/13yvCHyUEn4

http://youtu.be/hWu6qj8AoqE

Share this post


Link to post
Share on other sites

வெள்ளைக் கொழும்பான் மாவின் கீழ் செங்கற்களை கவனமாக அடுக்கி வை மகன் என்று அப்பா சொன்னதும், விளையாடப்போகும் அவசரத்தில் வேண்டுமென்றே அவ்வளவையும் போட்டுடைத்தற்கு அப்பா தந்த முதலும் கடைசியுமான 'பளார்'

'நன்று, எழுத்தைத் தெளிவாக எழுதவும்' என்று கணித ஆசிரியர் போட்ட குறிப்பை அவரிடம் காட்டி, 'சேர் நீங்கள் எழுதியது விளங்கவில்லை' என்று கிண்டலாக அவரிடம் கேட்ட பொழுது விழுந்த இரண்டாவது 'பளார்'

Share this post


Link to post
Share on other sites

பளார் தேவையற்ற ஒன்று, கோப உணர்ச்சியின் ஒரு வெளிப்பாடே.

வேண்டியுள்ளேன் குண்டு சங்கீத ஆசிரியையிடம்.

நாங்கள் நண்பர்களா நின்று கதைத்துக்கொண்டிருக்கும் போது, ஒருவன் மற்றவனுக்கு சொன்னான், "மச்சான் வேண்டாம் அதைப்பற்றி கதைக்காதே என்று அடிவாங்குவாய்" என்றான்,

மற்றவன் கேட்கவில்லை அடிடா பார்ப்பம் என்றான், இவன் பளார் என்று போட, அவன் "ஆ" என்று திறந்த வாய்மூடாமல், "அட அடிச்சு போட்டானடா" என்றான்.

எல்லோருக்கும் சிரிப்பு அடக்க முடியவில்லை

Share this post


Link to post
Share on other sites

எத்தனை அனுபவங்கள்.. எத்தனை சூழ்நிலைகள்.. "பளார்" களை வைச்சே ஒரு தொடர் கதை எழுதலாம் போல இருக்கே. இன்னும் சொல்லுங்க.. அறிவம்.. அறிஞ்சதை வைச்சு.. . நீங்க சொல்லுற அனுபவ அறிவுரைகளை வைச்சு.. மற்றவங்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கவும்.... திருந்தத் தூண்டவும் செய்யுமில்ல..! :):icon_idea:

Share this post


Link to post
Share on other sites

பைபிள் - ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு?

Share this post


Link to post
Share on other sites

எத்தனை அனுபவங்கள்.. எத்தனை சூழ்நிலைகள்.. "பளார்" களை வைச்சே ஒரு தொடர் கதை எழுதலாம் போல இருக்கே. இன்னும் சொல்லுங்க.. அறிவம்.. அறிஞ்சதை வைச்சு.. . நீங்க சொல்லுற அனுபவ அறிவுரைகளை வைச்சு.. மற்றவங்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கவும்.... திருந்தத் தூண்டவும் செய்யுமில்ல..! :):icon_idea:

சந்தியாப்பிள்ளை போன்ற மனிதர்கள் திருந்துவதில்லை.

எங்களுக்குப் பின்னும், நிறைய பேர் அடி வாங்கியதுண்டு !

Share this post


Link to post
Share on other sites

நான் தாராளமாக வாங்கியிருகிறேன்.கொடுக்கதான் ஒருத்தரும் மாட்டீனம் இல்லை :lol: .

Share this post


Link to post
Share on other sites

பல முறை வாங்கியிருக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது.

 நாலாம் வகுப்பில் எனது தத்துவ நண்பன் இதையெல்லாம் கணக்கில் வைத்திருக்க கூடாது என்று கூறினான்.  

எனது துணைவியார் பிள்ளைதாச்சியாக இருக்கும்போது குண்டு ஜோக் சொல்லி ஒருக்கால் வாங்கி இருக்கிறேன். 

இப்போது யார் குண்டு ஜோக் சொன்னாலும் கண்ணில் பயம். 

பெண்ணின் கை பூ போன்றது,  இட்லி போன்றது என்று பொய் எழுதும் கவிகளை பிடிக்காது. 

Share this post


Link to post
Share on other sites

பைபிள் - ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறுகன்னத்தையும் காட்டு?

இரண்டு கன்னத்திலும் அறைந்தவனுக்கு எதை காட்டுவது?

Share this post


Link to post
Share on other sites

முதல் முதல் கன்னத்தை பொத்தி வாங்கின அனுபவம். பாடசாலையில வெள்ளிக்கிழமை பிரேயர் நடக்கும்போது கீழ செருப்பை போட்டுட்டு இருந்தனான் அதை ஒரு முரட்டு வாத்தி கண்டிட்டுது வந்து விட்டிச்சே ஒண்டு கன்னத்தை பொத்தி, ஒருகிழமைக்கு காதில சிவபுராணம் கேட்டுக்கொண்டே இருந்திச்சுது :( . அதுக்குபிறகு ஒருக்கா ஆமி கன்னத்தை பொத்தி அடிச்சவன். வாங்கினது நிறைய ஆனால் குடுத்ததுதான் இல்லை

Share this post


Link to post
Share on other sites

சந்தியாப்பிள்ளை போன்ற மனிதர்கள் திருந்துவதில்லை.

எங்களுக்குப் பின்னும், நிறைய பேர் அடி வாங்கியதுண்டு !

405090_10150805895740376_620340375_11684052_1208040876_n.jpg

இவர் தான்(நடுவில் ) ஈஸ் கன்னத்தில் அறைந்த சந்தியாப்பிள்ளை ஆசிரியர்.இடதில் ராதாவின் (ஹரிசந்திரா )தம்பி,வலது பக்கம் சாரங்கன் எனது நண்பர் .

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this