Jump to content

முருகா தி ஸ் டு மச்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் கோயில் கொடியேற்றம், கொடியிறக்கம், தேர்,தீர்த்தம், பூங்காவனம் என இனிதே நடந்தேறி முடிவடைந்தது .ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடை பெறும் இத்திருவிழா இம்முறையும் மிகவும்நன்றாகவே நடை பெற்றது.

.நானும் இடைகிடையே சென்று முருகனின் அருள் என்பக்கமும் கிடைக்க ஆவனசெய்தேன்.பேன்ஸ் கார் வாங்குவதற்கு என்பெருமான் முருகனின் கடைகண் பார்வை என் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவ்வருட திருவிழாவில் கூடிய கவனம் செலுத்தினேன்.

திருவிழா தொடங்க முதல், தாயையும் மகளையும் தற்செயலாக சந்திக்க வேண்டி ஏற்பட்டது.மகள் என்னொடு சினேக பூர்வமாக பழகுவாள்.எங்கே கண்டாலும் அங்கிள் எப்படியிருக்கிறீங்கள் என்று சுகம் விசாரித்துவிட்டுத்தான் செல்வாள் இங்கு பிறந்து வாழ்ந்து வருபவள்.தாயார் ஒரு சின்ன சிரிப்புமட்டும்தான். கதைக்க மாட்டார்,என்னைவிட ஒருஇரு வயது குறைவாக இருக்கும் எனநினைக்கிறேன்.

"ஹய் அங்கிள் எப்படி இருக்கிறீங்கள்"

"நல்லாய்யிருக்கிறேன் என்ன இந்த பக்கம்"

"கோயில் கொடியேறுது தானே அதற்கு பலகாரம் சுட வேணும் என்று அம்மா கூட்டிக்கொண்டு வந்தவ ,பூங்காவனம் சிட்னி யூத்ஸ்தானே செய்யிறவையள் ,பூங்காவனத்திற்கு கட்டாயம் வாங்கோ"

"ஒம் ஒமொம் கட்டாயம் வாரன்" என்று போட்டு நான் என்ட வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டேன்.

பூங்காவனத்திருவிழா சிட்னி இளைஞர்களால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகின்றது.சிட்னி முருகனுக்கு கொடியேறினால் சில இளசுகளுக்கும் ,கிழசுகளுக்கும் கொடியேறினமாதிரி உற்சாகத்துடன் நிற்பார்கள்.இந்த இளசுகளும் கிழசுகளுடன் சேர்ந்து பலகாரம் சுட்டு பொலித்தீன் பைகளிலிட்டு அதை அழகுப் பைகளில் போட்டு பத்திரப்படுத்தி வைப்பார்கள்.சாதரண திருமண வைபவங்களில் கொடுப்பதற்கு எப்படி அழகு படுத்துவார்களோ அது போல அழகு படுத்தப்பட்டிருக்கும்...திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு அதை கொடுப்பார்கள்.

சிட்னியில் உள்ள தமிழ் வியாபார ஸ்தாபனங்களுக்கும் முருகனின் கொடியேற்றத்துடன் கொஞ்சம் வருமானமதிகமாகும்.அத்துடன் சிட்னி வாழ் முருகன் அடியார்கள் ஆண்கள் ,பெண்கள் எல்லோரும் பக்தி பரவசத்தில் இருப்பார்கள்.அநேக வீடுகளில் மரக்கறிதான் அந்த 10,12 நாட்களும்,அதிகமாக freshகாய்கறி தான் சமைப்பார்கள் ,frozen மரக்கறிகள் வாங்க மாட்டார்கள்.

அரச ஸ்தாபனங்களில் பணி புரிபவர்கள் 10 நாட்கள் லீவு போடுவார்கள் ,லீவுகள் எடுக்க முடியாதவர்கள் கொடியேற்றம்,தேர்,தீர்த்தம் போன்ற விசேட தினத்தின் பொழுது லீவு எடுப்பார்கள், லீவு எடுப்பது வேலைத்தளங்களில் கடினமாக இருந்தால் இந்த நாட்களில் முருக அடிகாளர் சிக்(sick) லீவில் நின்றாவது முருகனின் அருளை பெறுவார்கள்.பூங்காவனத்திருவிழா இரவில் நடப்பதால் லீவு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை...

கொடியேற்றுவதற்கு வழமையாக குருக்களை தாயகத்திலிருந்து அழைப்பார்கள்.இந்தமுறை எங்களுடைய லோக்கல் ஜயர் கொடியெற்றம் செய்தார்..ஏன் இந்த முறை இப்படி என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது வந்தார் எங்கன்ட சகலகலா வல்ல கந்தர்.

"என்ன அண்ண இந்த முறை ஊரிலிருந்து குருக்கள் வரவில்லையோ"

அக்கம பக்கம் திரும்பி பார்த்து போட்டு சொன்னார் "உங்க பெரிய புடுங்கு பாடு நடக்குது ,அவுஸ் அரசு இனிமேல் குருக்கள் மாருக்கு விசா கொடுக்கமாட்டங்கள் என்று சொல்லி போட்டாங்கள்,கோவில் திருவிழாவுக்கு என வந்தவையள் ஒருத்தரும் திரும்பி போரதில்லையாம்,அதுதான் லோக்கல் குருக்கள் கொடியேற்றினவர்.இந்த முறையும் ஒருத்தர் வந்தார் அவரை கேட்டவையளாம் சிட்னியில் இருக்கும் குருக்கள்மாருக்கு பயிற்சி அளிக்க ,ஆனால் வந்த குருக்கள் எலாது என்று போட்டு திரும்பி போயிட்டாராம்"

பெருமூச்சவிட்டுப்போட்டு"உன்னிடம் ஒன்றையும் சொல்லகூடாது நீ போய் இணையங்களில் கிறுக்கி போடுவா" என்றபடியே மெல்ல நான் இருந்த இடத்தைவிட்டு அகன்றார்.

ஓவ்வோரு திருவிழாவும் ஒரு குறிப்பிட்ட சப்பெர்ப்புக்கு (suburb)வழங்கப்பட்டிருக்கும் .அந்த சப்பெரப்பை விட நாங்கள் சிறப்பாக செய்ய வேணும் என்ற எண்ணம் ,போட்டி எல்லா சப்பெர்ப்காரருக்கும் இருந்தது. அதை சிலர் செயலில் செய்தும் காட்டியிருந்தார்கள்

.ஒருநாள் திருவிழாவில் பல பெண்கள் கிட்டதட்ட ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தார்கள்.பிறகுதான் அறிந்தேன் அன்றைய உபயகாரர் சொல்லி வைத்து நீல நிறத்தில் சேலை அனிந்து வந்தவர்களாம் தங்களுடைய திருவிழா ஸ்பேசலிட்டியை காட்டுவதற்கு.

மதியம் சாப்பிடுவதற்கு சென்றிருந்தேன் வேஜிட்டேரியன் சிக்கன்,பன்னீர்,கயூ போன்ற விலையுயர்ந்த பொருட்களில் சமையல் செய்து அசத்தியிருந்தார்கள் ஊரிலும் இந்த மனப்பாங்கு இருந்தது. அந்த குழுவினர் எத்தனை கூட்ட மேளம் பிடிக்கிறாங்கள் அதைவிட நாங்கள் அதிகம் பிடிக்கவேண்டும்,அவர்கள் எத்தனை சப்பறம் கட்டுறாங்கள் அதைவிட அதிகம் கட்ட வேண்டும்.இப்படி பல போட்டி மனப்பான்மை திருவிழா உபயகாரிடையே இருந்தது. புலத்தில் இந்த போட்டி மனப்பான்மையை கண்டவுடன் ,சந்தனம் மின்சினால் தடவுங்கோடா...... என்ற பழ மொழிதான் எனக்கு ஞாபகத்தில் வந்தது.

தேர்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது சில பக்தர்கள்.தேங்காய் உடைத்தார்,வேறு சிலர் காவடி எடுத்தார்கள் ,இன்னும் சில பக்தர்கள் அடிகளித்தார்கள்,பிரதட்டடையும் செய்தார்கள் .நீயா நானா என்று போட்டி போட்டு ஆண்கள் ஒரு பக்கமாகவும் பெண்கள் ஒரு பக்கமாகவும் தேர் வடத்தை பிடித்து அரோகரா சொல்லி இழுத்துகொண்டிருந்தார்கள்.ஊரில் முருகனுக்கு தேர் திருவிழாவில் என்ன எல்லாம் செய்து முருக அடியார்கள் முருகனை மகிழ்வித்தார்களோ அதைவிட அதிகமாகவே சிட்னியில் முருக அடியார்கள் செய்து முருகனை மகிழ்வித்தார்கள்.

திடிர் என அறிவித்தார்கள் உங்கள் உடமைகளை கவனமாக வைத்திருங்கள் திருடர்கள் ஜாக்கிரதை........

விலையுயர்ந்த காரில், விலையுயர்பட்டுச்சேலை அணிந்து, லொக்கரில் இருந்த நகைகளை போட்டு கொண்டு உன்னை தரிசிக்க வந்தால் நீ திருடர்களுக்கு அருள் கொடுகிண்றாயே.

சிட்னி முருகனுக்கு "திருடர்கள் ஜாக்கிரதை" என்ற அறிவிப்பு காதில் அதிக வருடங்களாக கேட்காத படியால் இந்த முறை திருட்டு பக்கதர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து ஊக்கப்டுத்தி போட்டார்...முருகா உன் விளையாட்டுக்கு ஒரு எல்லையே இல்லையா?என்னதான் இருந்தாலும் தி ஸ் டு மச்....this is too much lord murugaaaaaa........

வீதியில் கடலை விற்பவர்களும் ..திருடர்களும்தான் இல்லாத குறையாக இருந்தது.திருடர்கள் வந்துவிட்டார்கள் கடலைக்காரிதான் இல்லை அடுத்த வருடம் அதுவும் நடக்கலாம் .....

திருடர்கள் யார்? மக்கள் பலவித கருத்துக்களை வைக்கின்றனர்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா எழுதியுள்ளீர்கள், இங்கும் கிட்டத்தட்ட இப்படிதான், புத்தன்,நீங்க யாழில கொடி ஏத்திற மாதிரி இருக்கு, இனி திரி இறக்கும் வரை திருவிழாதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் பென்ஸ்கார் வாங்க, முருகப்பெருமான் அருள்பாலிக்க வேண்டும்.

அது என்ன வெஜிரேறியன் சிக்கன்?

உபயகாரர், எல்லோரையும்... நீல நிறத்தில் சீலை கட்டிக் கொண்டுவரச் சொன்னதை... வாசித்து, சிரிப்பை அடக்கமுடியவில்லை. :D

Link to comment
Share on other sites

.

நாதஸ்வரத்தை நிறுத்திப்போட்டு அவர் திடீர் அறிவுப்புக் கொடுத்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன நடந்தது என்று விசாரிக்கவேண்டும் என்று நினைச்சுப் போட்டு மறந்து போனன். ஏதும் கேள்விப்பட்டனியளே.. ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறி சூரனை வதம் செய்த திரு முருகனை,  சிறி முருகன் என்று அழப்பைதே toooo much.

Link to comment
Share on other sites

அவுசிலை வந்து குடியேறவேணும்போல ஆசையாய் இருக்கு யாழ்கள் சுண்டலிடம் சொன்னால் ஒரு கடலைக்கடை போடுறவாரே முருகன் கோயிலடியில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி புத்தன்! வழக்கம் போல அசத்தல்! வாழ்த்துக்கள்!

முருகனுக்குத் திருமணம் செய்து வைக்கேக்கையும், மகேஸ்வரன் நாமதேய புத்திரன்/ தேவேந்திரன் நாமதேய பவுத்திரி! எல்லாம் தேவை தானா, என்று யோசித்தேன்!

வாரவருசம் திருக்கல்யாணம் முடியக் 'கேக்' குடுக்கிற பிளானும், பைப் லைனில இருக்காம்! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து.. அதெப்படியோ தெரியல்ல.. எங்கட ஆக்கள்.. எங்க போனாலும்.. உதுகளில மாறவே மாட்டாங்க. பெரும்பாலான பிள்ளை குட்டிகளும் மாறாதுகள். இங்கையும் அப்படித்தான். சமர் வந்திட்டில்ல.. எனி ஒவ்வொரு வார இறுதியிலும்.. திருவிழாவிற்கும் குறைவில்லை. அதோட... கறுப்பு.. ஈஸ்ட் யூரோப்பியன்.. மற்றும் நம்ம உள்ளூர் கள்வர்களுக்கும் பஞ்சமில்ல. எல்லாம் அந்த சாமி அநுக்கிரம் தான். அவங்களுக்கு நல்ல தங்கப்பவுன் திசை அடிக்குது..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு புத்தன்........ சிட்னிமுருகனுக்கு ஏன் கோட்டுசூட்டு போட்டு அழகு பாக்கக் கூடாது? லைக் திஸ்

Link to comment
Share on other sites

அது என்ன வெஜிரேறியன் சிக்கன்?

அது வேற ஒண்டும் இல்ல. வெஜிரேறியன் மட்டும் சாப்பிட்டு வளர்ந்த கோழி! :D

சாமிக்கும் சிக்கன் ஆசை வந்திட்டு போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவு ஊரிலும் திருவிழாக்காலத்தில் மும்மரமாக நடப்பதுதானே.. இதைவிட முக்கியமானது போட்டிக்குத் திருவிழாச் செய்து suburb க்கு suburb குத்துவெட்டுப் படக்கூடிய சாத்தியங்கள் எதிர்காலத்தில் உள்ளது! அப்பத்தானே தமிழர்கள் நிரந்தரமாக தாயகத்தை புலம்பெயர்நாடுகளில் காணலாம்!

Link to comment
Share on other sites

சா,குருக்களின்ர அசைலம் அடிப்புக்கு ஆப்படிச்சுப்போட்டாங்கள் அவுசுக்காரன்.

கிறுகலுக்கு நன்றி புத்தன்.

பெண்கள் கிட்டதட்ட ஒரே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தார்கள்.பிறகுதான் அறிந்தேன் அன்றைய உபயகாரர் சொல்லி வைத்து நீல நிறத்தில் சேலை அனிந்து வந்தவர்களாம் தங்களுடைய திருவிழா ஸ்பேசலிட்டியை காட்டுவதற்கு.

தமிழேண்டா. :icon_mrgreen: :icon_mrgreen:

சே நான் உபயகாரனாயிருந்திருந்தால் வேறை மாதிரி யோசிச்சிருப்பன் செலவும் இருந்திருக்காது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச எங்கட கோயிலில் போன வருடத் திருவிழா அன்று ஜயர்மார் எல்லாம் ஒரே மாதிரி வேட்டி,சால்வை கட்டியிருந்தார்கள்.நான் அவர்களை பார்த்து திகைச்சுப் போய் ஏனய்யா ஒரே மாதிரி வேட்டி கட்டியிருக்கிறீங்கள் எனக் கேட்டால் உபயகாரர் வேண்டிக் கொடுத்தவையாம் :D ...அது சரி புத்தன் ஏன் உங்கட முருகன் ஏப்ரலில் கொடியேறுறவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை சுவையாக இருக்கிறது. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா எழுதியுள்ளீர்கள், இங்கும் கிட்டத்தட்ட இப்படிதான், புத்தன்,நீங்க யாழில கொடி ஏத்திற மாதிரி இருக்கு, இனி திரி இறக்கும் வரை திருவிழாதான்

நன்றிகள் உடையார் ..மீண்டும் கொடியேற்றியிருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் பென்ஸ்கார் வாங்க, முருகப்பெருமான் அருள்பாலிக்க வேண்டும்.

அது என்ன வெஜிரேறியன் சிக்கன்?

உபயகாரர், எல்லோரையும்... நீல நிறத்தில் சீலை கட்டிக் கொண்டுவரச் சொன்னதை... வாசித்து, சிரிப்பை அடக்கமுடியவில்லை. :D

நன்றிகள் சிறி...பென்ஸ் காரிலா   அன்னதானச்சோறு வாங்கி வீட்டுக்கு கொண்டுவர ஏலாது கார்  சீட் பழுதடைந்து விடும்

.

நாதஸ்வரத்தை நிறுத்திப்போட்டு அவர் திடீர் அறிவுப்புக் கொடுத்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன நடந்தது என்று விசாரிக்கவேண்டும் என்று நினைச்சுப் போட்டு மறந்து போனன். ஏதும் கேள்விப்பட்டனியளே.. ? :D

நன்றிகள் ஈசன்...பிறகு என்னநடந்தது? எங்கன்ட சனம் மீண்டும்....புது நகை செய்து போட்டினம்....

சிறி சூரனை வதம் செய்த திரு முருகனை,  சிறி முருகன் என்று அழப்பைதே toooo much.

நன்றிகள் குளவி ...சுப்பிரமணி என்று கூப்பிடவேண்டும்....

அவுசிலை வந்து குடியேறவேணும்போல ஆசையாய் இருக்கு   யாழ்கள் சுண்டலிடம் சொன்னால் ஒரு கடலைக்கடை போடுறவாரே  முருகன்  கோயிலடியில்

நன்றி சாத்திரி ...சுண்டல் குயின்ஸ்லாந்தில கடலை போடுகிறார் என்று கதை அடிபடுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து.. அதெப்படியோ தெரியல்ல.. எங்கட ஆக்கள்.. எங்க போனாலும்.. உதுகளில மாறவே மாட்டாங்க. பெரும்பாலான பிள்ளை குட்டிகளும் மாறாதுகள். இங்கையும் அப்படித்தான். சமர் வந்திட்டில்ல.. எனி ஒவ்வொரு வார இறுதியிலும்.. திருவிழாவிற்கும் குறைவில்லை. அதோட... கறுப்பு.. ஈஸ்ட் யூரோப்பியன்.. மற்றும் நம்ம உள்ளூர் கள்வர்களுக்கும் பஞ்சமில்ல. எல்லாம் அந்த சாமி அநுக்கிரம் தான். அவங்களுக்கு நல்ல தங்கப்பவுன் திசை அடிக்குது..! :lol::D

நன்றி நெடுக்ஸ் ..மாற்றங்கள் இந்த யென்மத்தில் நடக்காது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு புத்தன்........  சிட்னிமுருகனுக்கு ஏன் கோட்டுசூட்டு போட்டு அழகு பாக்கக் கூடாது? லைக் திஸ்

வெகுவிரைவில் சிட்னி யூத்ஸ் அதையும் செய்து காட்டுவார்கள்.. Wedding Reception அப்படி ஒரு திருவிழாவை அறிமுகப்படுத்தி

அது வேற ஒண்டும் இல்ல. வெஜிரேறியன் மட்டும் சாப்பிட்டு வளர்ந்த கோழி! :D

சாமிக்கும் சிக்கன் ஆசை வந்திட்டு போல...

தமிழ் கடைகளில் விற்பனைக்குண்டு...சோயாவில் செய்தது என்று நினைக்கிறேன் ஆசை யாரைத்தான் விட்டு வைச்சுது ...நன்றிகள் க.கந்தசாமி

களவு ஊரிலும் திருவிழாக்காலத்தில் மும்மரமாக நடப்பதுதானே.. இதைவிட முக்கியமானது போட்டிக்குத் திருவிழாச் செய்து suburb க்கு suburb குத்துவெட்டுப் படக்கூடிய சாத்தியங்கள் எதிர்காலத்தில் உள்ளது! அப்பத்தானே தமிழர்கள் நிரந்தரமாக தாயகத்தை புலம்பெயர்நாடுகளில் காணலாம்!

போர போக்கை பார்த்தால் வெகுவிரைவில் அதுவும் நடக்கும் ..நன்றிகள் கிருபன்

மறுபடியும் ஒரு அழகான கிறுக்கல். நன்றி புத்தன் உங்கள் பதிவிற்கு.

நன்றிகள் அபிராம்...

Kandathukal ellam boat eduthu Australia ku vara velikida ithu thaan nadakkum...., ivlavu naalum illatha kalavu.....ippa eppidi?

நன்றிகள் சுண்டல் ...இப்படி பல கருத்துகள் உலாவுகின்றது அதை வைத்தே ஒரு கிறுக்கள் கிறுக்கலாம்

சா,குருக்களின்ர அசைலம் அடிப்புக்கு ஆப்படிச்சுப்போட்டாங்கள் அவுசுக்காரன்.

கிறுகலுக்கு நன்றி புத்தன்.

தமிழேண்டா. :icon_mrgreen: :icon_mrgreen:

நன்றிகள் நுனாவிலன்....

.அது சரி புத்தன் ஏன் உங்கட முருகன் ஏப்ரலில் கொடியேறுறவர்?

அந்த முருகனுக்குத்தான் வெளிச்சம்.... பிறகு குளிர் தொடங்கிவிடும் ஐயர்மாருக்கு கஸ்டமாய்யிருக்கும்.....என்றபடியால் இருக்கும் என நினைக்கிறேன்...

கதை சுவையாக  இருக்கிறது. பாராட்டுக்கள்

நன்றிகள் நிலாமதி

Link to comment
Share on other sites

நன்றாக எழுதியுள்ளீர்கள். உண்மையிலேயே ஒரு திருவிழா பார்த்த மாதிரி இருக்கு.

தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் திருடர்களும் இருப்பார்கள். இவ்வளவு நாள் இல்லாதது தான் ஆச்சர்யம்..... :D

பெருமூச்சவிட்டுப்போட்டு"உன்னிடம் ஒன்றையும் சொல்லகூடாது நீ போய் இணையங்களில் கிறுக்கி போடுவா" என்றபடியே மெல்ல நான் இருந்த இடத்தைவிட்டு அகன்றார்.

:lol::D

Link to comment
Share on other sites

புத்தன் கதை நல்லாக இருக்கு. எல்லாவற்றையும் தொகுத்து வையுங்கோ

இங்கும் சந்திக்கு சந்தி எக்கச்சக்கமான கோயில்கள். திருவிழாக்கள் போட்டிகள் என்று மலிந்து கிடக்கு..ஒருக்கால் இங்கு வந்து பார்த்து விட்டு இன்னும் கிறுக்குங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதியுள்ளீர்கள். உண்மையிலேயே ஒரு திருவிழா பார்த்த மாதிரி இருக்கு.

தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் திருடர்களும் இருப்பார்கள். இவ்வளவு நாள் இல்லாதது தான் ஆச்சர்யம்..... :D

:lol::D

நன்றிகள் காதல் கருத்து பகிர்ந்தமைக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.