meerabharathy

கலாசாரமும் கருக்கலைப்பும் – நமது அறியாமையும்

Recommended Posts

கலாசாரமும் கருக்கலைப்பும்; - நமது அறியாமையும்

இலங்கையின் ஈழத்தில் அல்லது வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காலசார சீரழிவு என பல செய்திகள் அண்மையில் இணையங்களில் காணக்கிடைத்தன. பூங்காங்களில் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்து கதைப்பதிலிருந்து கருக்கலைப்பு வரையும் மற்றும் பாலியல் தொழில் என்பனவும் கலாசரா சீரழிவு என முத்திரை குத்தப்பட்டு செய்திகளாக வெளிவருகின்றன. இதற்கான குற்றச்சாட்டை பொதுவாக இளம் சமூகத்தை நோக்கி முன்வைக்கப்ட்டாலும் பெரும்பாலும் பெண்களை நோக்கியே குறிப்பாக சுட்டப்படுகின்றன. இதனால் இவர்கள் தமிழ் கலாசரத்தின் பலிக்கடாக்களா ஒருபுறமும், குற்றவாளிகளா மறுபுறமும் இருக்கின்றனர். ஆகவே முதலில் இவ்வாறான கருத்துக்கள் எதனடிப்படையில் முன்வைக்கப்படுகின்றன? யார் முன்வைக்கின்றார்கள்? ஏன் முன்வைக்கப்படுகின்றது? போன்ற கேள்விகள் ஆய்வுக்குரியன. இரண்டாவது இவ்வாறான நிகழ்வுகளை சமூகத்தில் நடைபெறும் எதிர்மறையான பிரச்சனையாக பார்க்கப்படுவதிலிருந்து வேறு வழிகளில் பார்க்கலாமா என சிந்திப்பதும் முக்கியமானது. இது தொடர்பான இணையத்தளங்களில் தேடியபோது ஆரோக்கியமான கட்டுரைகள் இரண்டு மட்டுமே கிடைத்தன. ஒன்று தேவகௌரியின் “யாழ்ப்பாண கலாசாரம் சீரழிகின்றதா?”மற்றது தேவ அபிராவினது “ஈழத்து டொமினிக்ஸ்திரௌஸ்கான்களும் காலாசார சீர்கேடுகளும்”. மற்றவை எல்லாம் கல்தோன்றா மண்தோன்றா காலத்து முன்தோன்றிய தமிழ் கலாசராத்தை பாதுகாப்பவையா மட்டுமே இருக்கின்றன. இந்த இணை செய்திகளின் இணைப்புகள் சில இறுதியில் உள்ளன.

தமிழ் பேசும் மனிதர்களுக்கு என ஒரு பொதுவான கலாசராம் உள்ளது. அதேநேரம், இந்தியத் தமிழர்களுக்கும் ஈழத்து தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் பிற நாடுகளில் இருக்கின்ற தமிழ் பேசுகின்ற சமூகங்களுக்கும் தாம் பேசுகின்ற மொழியால் ஒரு பொதுவான கலாசராம் இருந்தபோதும் அவற்றில் பல வேறுபாடுகள் இருக்கின்றன. இவை குறிப்பிட்ட நாடுகளுக்கும், தேசங்களுக்கும், பிரதேசங்களுக்கும் அவற்றின் வரலாற்றுக்கும் ஏற்ப வேறுபடுகின்றன. பொதுவாக இந்தக் கலாசாரமானது ஒருபுறம் ஆரோக்கியமான ஆரோக்கியமற்ற பண்புகளையும், தன்மைகளையும் கொண்டுள்ளன. மறுபுறம் இது ஆண், சாதி, வர்க்கம், என பல்வேறு கருத்தாதிக்கங்களை மையமாக கொண்டிருப்பதுடன் அவற்றின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை என்றால் மிகையல்ல. இந்தக் கலாசராங்களில் இருக்கின்ற நேர்மறையான ஆரோக்கியமான பண்புகளும் பிரச்சனைக்குரியவை அல்ல. இக் கட்டுரைக்கு முக்கியமானவையுமல்ல. ஆனால் பிரச்சனைக்கும் விமர்சனத்திற்கும் உரியவை இதன் எதிர்மறையான ஆரோக்கியமற்ற பண்புகளே. இவற்றைக் களைந்து (அல்லது உதிர்ந்து (நன்றி சசீவன்) கொண்டு செல்வதே, தமிழ் சமூகங்கள் முன்னேறுவதற்கு அடிப்படையானதாகும். குறிப்பாக தமிழ் சமூகம் இன்று எதிர்நோக்கும் எதிர் பாலினர் நட்புக்கொள்ளுதல் (டேட்டிங் முறை), காதல், திருணமத்திற்கு முன்பான பாலியலுறவு, கர்ப்பம் தரித்தல், கருப்பசிதைவு அல்லது கருஅழிப்பு, பாலியல் தொழில் என்பன தமிழ் காலாசார சீரழிவாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் மேற்குறிப்பிட்ட அனைத்து தமிழ் சமூகங்களிலும் காலங்காலமாக மறைமுகமாகவேனும் இருந்து வந்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இது தொடர்பான இன்றைய அக்கறை என்பது, இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை, எவ்வாறு இல்லாமல் செய்வதும்என்பதும், அதற்காகஆரோக்கியமான வழிகளைமுன்னெடுப்பதற்கு வழிகாட்டுவதுமே. இவ்வாறான விடயங்கள்தொடர்பான கருத்துப்பரிமாற்றங்களும் மற்றும் புதிய கருத்தாதிக்கங்களும் அதற்கானதேவைகளும் உணரப்படுகின்றன.

மனிதர்களின் பாலியலுறவு மற்றும் பாலியல் தொழில் தொடர்பான நமது அறிவும் அறியாமையும் தொடர்பாக ஏற்கனவே இரு கட்டுரைகள் எழுதி எனது “பிரக்ஞை”வலைப்பதிவில்பதிவுவிட்டுள்னேன். இதேபோல் நட்புறவு கொள்ளுதல் (டேட்டிங் முறை) மற்றும் கருத்தடை சாதனங்கள், கருக் கலைப்பு தொடர்பான நமது அறிவும் அறியாமையும் தொடர்பாக விரிவான தனித்தனி கட்டுரைகள் எழுதவேண்டியது இன்றைய சுழலில் மிகவும் அவசியமானது. அதற்கான ஒரு ஆரம்பமாக இக் கட்டுரையில் எனது பொதுவானதும் மேலோட்டமானதுமான கருத்துக்களை முன்வைக்கின்றேன்.

போருக்கு பிந்திய சமூகங்களில் மனிதர்கள் வாழ்வு என்பது எப்பொழுதும் கட்டுப்பாடுகளை மீறியதாகவே இருந்து வருகின்றது. போரில் வெற்றி பெற்ற சமூகத்தில் மட்டுமல்ல தோற்ற சமூகத்திலும் இதுவே இயல்பாக இருக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இதன் விளைவாக மனிதர்கள் பொதுவாக எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி விரக்தியுடன் மனநிம்மதியற்று அலைகிறார்கள். ஈழத்து தமிழ் சமூகங்களைப் பொறுத்தவரை கடந்த மூப்பது ஆண்டுப்போரும் வன்முறையும் கலந்த வாழ்வு முறையானது பல்வேறுவகையான புதிய அனுபவங்களையும் பார்வைகளை பெற்றிருக்கின்றது. இதுவரை விடுதலைப் போராட்டம் என்ற குறிகோளுடன் இயங்கிய இந்த சமூகங்கள், இப்பொழுது வாழ்க்கை தொடர்பான நம்பிக்கையற்று கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. இருப்பினும் மனித இயல்பூக்கங்களில் ஒன்றான காதலும் காமமும் இந்த வெற்றிடத்தை குறிப்பாக இளம் சமூகங்களில் இலகுவாக நிரப்பிவிடுகின்றன. ஆனால் இவற்றுக்கு எதிராக தமிழ் சமூகங்களில் காலம் காலமாக இருக்கின்ற எதிர்மறை பார்வையானது இவற்றை ஆரோக்கியமான வழிகளில்இயல்பாக இயங்குவதற்கு ஆதரவு கொடுக்காது தடுத்து நிறுத்தவே முனைகின்றன. ஏனெனில் இந்த சமூகங்கள் காதலுக்கும் காமத்திற்கும் எதிரானவர்களாகவே அதன் (குறைந்த்து அண்மைய) வரலாறுதோறும் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் இந்த சமூகங்களில் குழந்தைகள் நாள் தோறும் பிறக்கின்றமை ஒரு முரண்நகையே. இதன் விளைவுகள், இந்த சமூகங்கள் ஆரோக்கியமற்றவையாகவும் அறியாமையிலும் தொடர்ந்தும்இருப்பதற்கே வழிசெய்கின்றன.

முதலாவது காதல் என்பது மனிதர்களிடமிருக்கின்ற சாதாரண இயல்பூக்கமான உணர்வு. ஆனால் தமிழ் சமூகமானது இலங்கியங்களிலும், திரைப்படங்களிலும், அரங்குகளிலும் காதலைப் போற்றுவதுடன் மட்டும் நின்றுவிடுகின்றன. அதேநேரம் நடைமுறை வாழ்வில் காதலுக்கு எதிரான போக்குகளே அதிகமாக இருக்கின்றன. இவ்வாறான எதிர்ப்புகளுக்கு காரணிகளாக பராம்பரியமாக இருப்பவை வர்க்க, சாதிய, மத பின்னணிகளே. அதாவது காதல் மூலம் மாறுபட்ட சாதிய, மத, வர்க்க பின்னணியிலுள்ளவர்க்ள் இணைந்து விடுவதாற்கான சாத்தியங்கள் அதிகமானது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நடைமுறை வாழ்வில் காதல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சமூகங்களான இருக்கின்றன. இதனால்தான்பெரும்பாலும் சமூக நிறுவனங்கள் இதற்கு எதிராக சிகப்பு கொடி காட்டுபவையாகவே இருக்கின்றன. ஆனால் காதலினால் உந்தப்பட்ட மனித இயல்பூக்கமானது, இவ்வாறான கட்டுப்பாடுகளையும் மீறி தமது காதல் உணர்வை வெளிப்படுத்தி எந்தவிதமான பிரச்சனைகளையும் எதிர் கொள்ள தயாராக இருக்கின்றன. சில காதல்கள் வெற்றி பெருகின்றன. பல தோல்வியடைகின்றன. ஆனால் இன்றைய நவீன தொழிற்நூட்ப தகவல் பரிமாற்ற உலகில் காதலுக்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என்றால் மிகையல்ல. இதன் ஒரு வெளிப்பாடாகவே மேற்கத்தைய காலாசாரமான டேட்டிங் முறைகள் தமிழ்சமூகத்தில் அறிமுகமாகி பிரபல்யமாகி வருவதை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.

இரண்டவாது இவ்வாறான டேட்டிங் உறவு முறைகள் தொடர்பாக தமிழ் திரைப்படங்கள் அறிமுகப்படுத்தினாலும் அவை தமிழ் காலாசார அடிப்படைகளிலையே மதிப்பிடப்பட்டு தீர்மானிக்கப்படுகின்றமை துரதிர்ஸ்டமானது. இவ்வாறன டேட்டிங் முறைகளுக்கு இன்று எதிர்ப்புகள் எழும்பினாலும் காலோட்டத்தில்அவை சமூக வழமைக்குள் வந்துவிடுவது தவிர்க்க முடியாது என்பதை புரியாதவர்களாகவே இருக்கின்றோம். புலம் பெயர்ந்த தமிழ் தேசிய வாதிகள் புலம் பெயர்ந்து வாழும் தமது குழந்தைகள் டேட்டிங் போவதை, விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்கின்றனர் அல்லது அங்கீகரிக்கின்றனர். அல்லது தடுக்க முடியாது இருக்கின்றனர். ஆனால் புலத்தில் -ஈழத்தில்- இவ்வாறன செயற்பாடுகள் நடைபெறுகின்ற பொழுது கலாசார சீரழிவு எனக் கூச்சலிடுகின்றனர். இது இவர்களது வழமையான இரட்டை வேடம் என்றால் மிகையல்ல. இவ்வாறன புதிய உறவு முறைகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, டேட்டிங் முறைகளை எவ்வாறு தமிழ் சமூகம் உள்வாங்கி ஆரோக்கியமான வழிகளில் அதனைப் பயன்படுத்தி பயன் பெறலாம் என சிந்திப்பதே நல்லது.

டேட்டிங் முறைகளில் பல வகைகள் உள்ளன. இதன் அடிப்படை நோக்கமானது, ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கு அல்லது அறிந்து கொள்வதற்கான ஒரு ஆரம்ப அறிமுக செயற்பாடு எனலாம். இவ்வாறான வழிமுறையானது, சதாரணமாக இருவர் தேநீர் அருந்துவதிலிருந்து, உணவு உண்பது, திரைப்படத்திற்கு செல்வது என ஆரம்பிக்கின்றது. சில நேரங்களில்; உடலுறவு வரை வளர்ந்து செல்கின்றது. இதில் எதை இருவரும் தேர்வு செய்கின்றார்கள் என்பதும் அவரவர் வசதிகளையும், தேவைகளையும், சுழலையும் பொறுத்து தீர்மானிக்கப்படுகின்றன. இவ்வாறான திருமணத்திற்கு முந்திய உறவுகள் பாலியலுறவில் நிறைவடைகின்றபோதே பிரச்சனைகள்அதிகம் எதிர்நோக்கப்படுகின்றன. அதேவேளை இவ்வாறு புதிதாக அறிமுகமாகின்ற இருவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வுகள் ஆழமற்றவையாக இருப்பதாலும் மற்றும் அவர்களது பொறுப்பற்றதன்மைகளாலும் மேலும் சில பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். குறிப்பாக ஆண்களின் பாலியல் விருப்பங்களுக்கான பெண்களது பதிலானது பொதுவாக “நோ”“இல்லை”“முடியாது”என்பனவாகவே இருக்கின்றன. இந்தப் பதில்களை ஆண்கள் அதற்கு எதிர்மாறான அர்த்தத்திலையே புரிந்து கொள்கின்றனர். இதன் விளைவாக ஆண்கள் தமது, அதிகாரத்துத்தை பிரயோகித்து பெண்களின் விருப்புக்கு மாறாக வன்புணர்வுகளில் ஈடுபடுகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே டேட்டிங் போன்ற புதிய முறைமைகள் தொடர்பான ஆழமான விரிவான கலந்துரையாடால்கள் அணைத்து மட்டங்களிலும் நடைபெறுவதை தமிழ் சமூக நிறுவனங்கள் ஊக்குவிக்கவேண்டும். மேலும் இவ்வாறன புதிய நட்பு அறிமுக முறைமை தொடர்பான விரிவான கட்டுரைகள் தொடர்ச்சியாக தமிழில் வெளிவரவேண்டியதும் அவசியமானதாகும்..

மூன்றாவது தமிழ் கலாசாரமானது திருமணத்திற்கு முன்பான ஆண் பெண்களுக்கிடையிலான பாலியலுறவுகள் தொடர்பான எதிர்மறைப்பார்வையையே கொண்டுள்ளது. குறிப்பாக பெண்கள் திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வதை அனுமதிப்பதுமில்லை ஏற்றுக்கொள்வதுமில்லை. ஒரு பெண் அவ்வாறு ஈடுபட்டவர் என அறியும் பொழுது அப் பெண்ணினது திருமண வாழ்வு மட்டும் பிரச்சனைக்கு உள்ளவாதில்லை. அவரது வாழ்வே பிரச்சனைக்குறியாதாகவும் கேள்விக்குறியாகி விடுகின்றது. அதிலும் இன்னுமொரு படி மேல் சென்று திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் தரித்துவிட்டால் குறிப்பிட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இன்னும் அதிகமாகின்றது. ஆனால் இதற்கு காரணமான ஆண்கள் எந்தவிதமான தண்டனைகளுக்கும் உள்ளாவதில்லை என்பதுடன் அவர்கள் மீது எந்தவிதமான குற்றங்களும் முன்வைக்கப்படுவதில்லை. இதனால் தமது நடைத்தைகளுக்கு எந்தவிதமான பொறுப்புகளையும் எடுக்காது தப்பிவிடுகின்றனர். அதாவது ஆண்கள் தப்புவதற்கு ஏற்ற வகையிலையே சமூக கட்டுமானங்களும் கருத்தாதிக்கங்களும் நிலவுகின்றன. ஆனால் பெண்களுக்கு, “நடத்தை கெட்டவள்”, “வேசை”, “கர்ப்பத்தைக் கலைத்தவள்”, “கொலைகாரி”,; மற்றும் “குழந்தையைக் கொன்றவள்”என பல்வேறு அவப்பெயர்களை வழங்கி அவர்களிடம் குற்றவுணர்வை ஏற்படுத்துவதுடன் சாதாரண வாழ்விலிருந்து சமூகமானது அவர்களைப் புறக்கணித்துவிடுகின்றது. இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறுவதற்கு தமிழ் சமூகமானது எவ்வாறு இவ்வாறன பிரச்சனைகளை அணுகலாம் என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம். ஏனனில் குறிப்பாக பாலியலுறவினால் ஏற்படும் கர்ப்பங்களை தவிர்ப்பதற்கு கருத்தடை சாதனங்கள் தொடர்பான அறியாமை மிகவும் முக்கியமான ஒரு காரணியாக இந்த சமூகங்களில் இருக்கின்றது.

நான்காவது திருமணத்திற்கு முன்போ பின்போ பாலியலுறவில் ஈடுபடுகின்றவர்கள் அதனால் ஏற்படும் அநாவசியமான கருப்பத்தை தவிர்ப்பதற்காக கருத்தடை சாதனங்கள் தொடர்பான அறிவை பெற்றிருப்பது மிக மிக அவசியமானது. கருத்தடைக்கான வழிமுறைகள் பலவகை உள்ளன. இக் கருத்தடை சாதனங்கள் வெறுமனனே குடும்ப கட்டுப்பாடுகளுக்கு மட்டும் பயன்படுவதில்லை. மாறாக கர்ப்பமடையாது பாலியலுறவை அனுபவிப்பதற்கும், இளம் வயது கர்ப்பங்களைத் தவிர்ப்பதற்கும், பாலியலுறவினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பதற்கும் கருத்தடை சாதனங்கள் மிகவும் பயன்மிக்கவை. குறிப்பாக தமிழ் சமூகங்களில் வாழும் பெண்களின் எதிர்கால வாழ்வானது கர்ப்பங்களினால் தீர்மானிக்காமல் இருப்பதற்கும் அதேநேரம்பாலியலுறவில் ஈடுபட்டுக் கொண்டு சுந்திரமாக வாழ்வதற்கும் இவ்வாறன கருத்தடை சாதனங்கள் நேர்மறையான பங்களிப்பை செய்கின்றன. ஆகவே கருத்தடை சாதனங்கள் தொடர்பான பிரக்ஞையை மிகப் பரவலாக தமிழ் சமூகங்களில் ஏற்படுத்துவதுடன் மிக இலகுவாகவும் இலவசமாகவும் அவை கிடைக்கும் வகையிலான பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இதுவே அநாவசியமான கருக்கலைப்புகளை தவிர்க்கும்.

ஐந்தாவது கருக்கலைப்பானது பல சமூகங்களில் அங்கீகரிக்கப்படாது தடைசெய்யப்பட்டிருக்கின்றன. இருந்தபோதும் மேற்குறிப்பிட்ட பல காரணங்களினால் கருக்கலைப்பு பொதுவாக அனைத்து சமூகங்களிலும் சட்டத்திற்கும் புறம்பாக வழமையாக நடைபெறுகின்ற ஒரு விடயமாகும். இவ்வறான கருக்கலைப்புகளுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஈழத்தில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாலும் அவர்கள் போரில் வென்று இருப்பதாலும் அதிகாரம் நிறைந்தவர்களா இருக்கின்றனர். இவர்கள் தமிழ் பெண்களை வண்புணர்வதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன. அவ்வாறு நடைபெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான ஆதிகாரத்துவத்தாலும் இனவாதபோக்குகளாலும் நடைபெறுகின்ற வன்புணர்வுகளில் குறிப்பிட்ட பெண்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம் என எழுதுவது மிகவும் வேதனையானது. இது ஒரு அரசியல் பிரச்சனை. இராணுவத்தின் பிரசன்னத்தை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்து நீக்குவதே இவர்களினால் மேற்கோள்ளப்படும் வன்புணர்வுகளிலிருந்து தமிழ் பேசும் பெண்கள் தப்பிப்பதற்கு இருக்கின்ற ஒரே தீர்வு. இதேநேரம், தமிழ் சமூகத்திலுள்ள ஆணாதிக்க பார்வை கொண்ட ஆண்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண்களை வன்புணர்வு செய்வதை மறுப்பதற்கில்லை. இந்த ஆண்களிடம் இந்த பிரச்சனைகள் தொடர்பான விழிப்பையும் பிரக்ஞையையும் ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே ஒரளவாவது அவர்களால் முன்னெடுக்கப்படும் வன்புணர்வுகளை குறைக்கலாம். இவற்றைவிட சில பெண்கள் தாமே விரும்பி திருணமத்திற்கு முன்பு தமது காதலர்களுடன் உடலுறவு கொள்வதும் ஆச்சரியமான ஒரு நிகழ்வல்ல. இவ்வாறன காதல் உறவுகளின் போது தமது அறியாமையினால் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாது பாலியலுறவில் ஈடுபடுவதால்அவசியமற்ற கர்ப்பங்கள் உருவாகின்றன. இவ்வாறான பிரச்சனைகள்கருத்தடை சாதனங்கள் தொடர்பான அறியாமையை நீக்குவதன் மூலம் தடுக்கப்படக் கூடியவையே. ஆனால் இவ்வாறன அறியாமையால் உருவான கருப்பத்தைக் கலைப்பதற்கு சமூக அங்கிகாரமோ சட்ட அனுமதியயோ இல்லாமை குறிப்பிட்ட பெண்களது பிரச்சiனைகளை மேலும் சிக்கலுக்குள்ளாக்கிவிடுகின்றது. மேற்குறிப்பிட்டவாறான சந்தர்ப்பங்களில் உருவாகும் கர்ப்பங்களை குறிப்பிட்ட பெண்கள் பொதுவாக பாராமரிக்க விருப்புவதில்லை. மாறாக அதை முளையிலையே அழித்து தம்மை அதன் சுமையிலிருந்து விடுதலை செய்யவே விரும்புவர். ஆனால் (தமிழ்) சமூகங்கள்பெண்களின் இவ்வாறான உறவுகளையும் அதனால் ஏற்படும் கருப்பங்களையும் கருக்கலைப்புகளையும் ஏற்றுக்கொள்வதே இல்லை. இதற்கு பெண்ணின் மீது மட்டும் தவறு இல்லாதபோதும் அவள் மட்டுமே குற்றவாளியாக்கப்படுகின்றாள். இதற்கு காரணமான (சிங்கள,தமிழ்அல்லது பௌத்த, இந்து, முஸ்லிம்) ஆண்கள் தப்பி விடுகின்றனர். ஆகவே இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக தமிழ் சமூகமானது அன்பும் அரவணைப்பும் கரிசனையும் உள்ளவர்களாக இருந்தாலே இப் பெண்கள்நம்பிக்கை பெற்று மீண்டும் சமூகத்தில் வாழ்வதற்கு வழிவகுக்கும்.

ஆறாவது இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்தவிதமான ஆதரரவும் அன்பும் கிடைக்காத காரணங்களினால் இவர்கள் மிகவும் இலகுவாக பாலியல் தொழில்களுக்கு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். அதேவேளை பாலியல் தொழில் ஒரு சமூகத்தில் நிலவுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உதாரணமாகபொருளாதாரம்,பாலியல் அடக்குமுறைகள்,மற்றும் இவை தொடர்பான கருத்தாதிக்கங்கள். இவ்வாறான காரணங்களை தீர்காத வரை பாலியல் தொழில் எந்த ஒரு சமூகத்திலிருந்தும் மறைந்து விடாது. ஆகவே இவ்வாறன காரணங்கள் மறையும் வரை இவ்வாறான தொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு தகுந்த பாதுகாப்புகளும் உரிமைகளும் வழங்கப்படவேண்டியது அவசியமானதும் தவிர்ப்பப்படமுடியாததுமாகும். பாலியல் தொழிலாளர்களும்பெண்ணியவாதிகளும்குறிப்பிடுவதுபோல் பாலியல் தொழிலாளர்களது பிரச்சனையும் அடிப்படையில் மனித உரிமைகள் சார்ந்த ஒரு பிரச்சனையே என்றால் மிகையல்ல. இது தொடர்பாக “பிரக்ஞை”வலைப்பதிவிலுள்ள விரிவான கட்டுரை எழுதப்பட்டுள்ளது..

இறுதியாக மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் உருவாகுவதற்கு காரணம் நமது காலாசராமும் புதிய விடயங்கள் தொடர்பான அறியாமையுமே. ஆகவே இவ்வாறான பிரச்சனைகளுக்கான தீர்வானது, காதல் ,காமம், பாலியலுறவு, கருத்தடை சாதனங்கள், மற்றும் கருக்கலைப்பு தொடர்பான தமது கருத்துக்களை மீளுருவாக்கம் செய்வதும் புதிய அறிவுகளை உள்வாங்கி தம்மை விரிவாக்கம் செய்வதுமே ஆகும். முதலாவதாக இன்றைய நவீன தொடர்பூடகங்களினாலும் தகவல் பரிமாற்றங்களினாலும் மனித உடல்களிலும் பல மாற்றங்கள் விரைவாக நடைபெறுகின்றன. இதனால் கடந்த காலங்களைப் போல் அல்லாது இப்பொழுது சிறுவர்கள் சிறுவயதிலையே பாலியல் ரீதியாக முதிர்ச்சியடைந்து விடுகின்றனர். அதாவது பாலியலுறவுக்கு தயாராகி விடுகின்றனர். குறிப்பாக 14வயதில் மனிதர்கள் தமது காமசக்தியின் உச்சத்தைப் அடைகின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. ஆகவே பாலியலுறவு கொள்வதற்கான வயதாக 14வயதுக்கு மேல் என அங்கிரிப்பததே ஆரோக்கியமானது. ஆனால் (அனைத்து சமூகங்களும் உட்பட) தமிழ் சமூகமானது திருணமத்திற்கான வயதாக, அதாவது பாலியலுறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக 18வயதையே இப்பொழுதும் பின்பற்றுகின்றது. பல சமூகங்கள் பாலியலுறவையும் திருமண உறவையும் பிரித்து பால காலமாகிவிட்டது. ஆனால் தமிழ் சமூகமானது இப்பொழுதும் திருமணத்திற்கு உட்பட்ட பாலியலுறவையேஅங்கீகரிக்கின்றது. ஆகவே இது தொடர்பான கருத்துப்பரிமாற்றங்கள் தமிழ் சமூகத்தில் நடைபெறவேண்டியது அவசரமான அவசியமாகும். இளம் பருவத்தினருக்கு குறிப்பாக பதின்நான்கு வயதிலிருந்தே பொருத்தமான அறிவையும் தகவல்களையும் வழங்குவதனுடாக ஆரோக்கியமான மாற்றங்களைஏற்படுத்தலாம்.

இரண்டவாது பாலியலுறவில் பொதுவாக அனைவருமே ஈடுபடுவார்கள். இது இயற்கையான ஒன்று. ஆனால் இவ்வாறான உறவில் எவ்வாறு பாதுகாப்பாக ஈடுபடுவது அதற்கான சாதனங்கள் என்ன என்பது தொடர்பான அறிவூட்டலை பாடத்திட்டங்களில் இணைக்கவேண்டும். இவ்வாறான செயற்பாடுகளே சிறுவயது பிரசவங்கனைளயும் திருமணமத்திற்கு அப்பாற்பட்ட கருகட்டலால் ஏற்படும் கருச்சிதைவுகளையும் அல்லது பிறக்கின்ற குழந்தைகளை கொலை செய்வதையும் அநாதைகளா விட்டுவிட்டு செல்வதையும் தவிர்க்க முடியும். இதன் மூலம் குறிப்பான பெண்களை மட்டும் குற்றவாளியாக்கும் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர்கள் தமது வாழ்வை குற்ற உணர்வின்றி தொடர வழிவகுக்கலாம்.

மூன்றாவது திருமணம் என்பது வெறுமனே இருதனிமனிதர்கள்ஒன்றாக வாழ்வது மட்டுமல்ல. இரு உலகங்கள் ஒன்றாக வாழ்தல் எனக் கூறுகின்றனர். ஆகவேஇதில் மிப் பெரிய சாவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். ஆகவே, பொறுப்புக்களை பகிர்வது,புரிந்துணர்வு, மற்றும் விட்டுக் கொடுப்பு என பல விடயங்கள் உள்ளடங்கி உள்ளன. அதிலும் குழந்தை வளர்ப்பு என்பது மேலும் பொறுப்பான ஒரு செயற்பாடு. ஆகவே குழந்தை வளர்ப்பு தொடர்பான அறிவுட்டல்களும் தேவைப்படுகின்றன. ஆகவே இருவர் திருணம் செய்வதற்கு முதல் மேற்குறிப்பிட்ட பாலியலுறவு, கர்ப்பம், கர்ப்பத்தடை, மற்றும் குழந்தை வளர்ப்பு என்பது தொடர்பான அறிவூட்டல்களையும் பயிற்சிகளையும் பெற்று அதற்கான சான்றிதழைப் பெருவதை ஒரு முன்நிபந்தனையாக வைப்பது பலவகைகளில் நன்மையானது. மேலும் திருமணத்திற்கான வயது என்பது 21வயதாக அதிகரிக்கவும் வேண்டும். அப்பொழுதுதான் 14வயிதிலிருந்து காமத்தை அனுபவித்தவர்கள் ஆழமான காதல் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான பக்குவத்தையும் ஆளுமைகளையும் அடைந்திருப்பார்கள். மேலும் இருவர் இணைந்து வாழ்வதற்காக வழியாக திருணமன உறவுமுறைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குவதற்கு பதிலாக,ஆரம்பத்தில் இருவர் குறைந்தது சில காலங்களுக்காவது இணைந்து வாழ்வதை ஊக்குவிப்பதே ஆரோக்கியமானது. ஏனெனில் பொதுவாக சமூகங்களில் குறிப்பாக தமிழ் சமூகங்களில் திருமணத்திற்கும் மற்றும் குழந்தை பெறுவதற்குமான நோக்கங்களும் காரணங்களும் பலவகையானவை. இந்த நோக்கங்களும் காரணங்களும் திருணம் செய்பவர்கள் தொடர்பாகவே அல்லது பிறக்கின்ற குழந்தை தொடர்பாகவே அக்கறை குறைந்தவையாகவே இருக்கின்றமை தூரதிர்ஸ்டமானது. இவ்வாறன கருத்து நிலைகளில் மாறுதல்கள் ஏற்படுவது அவசியமாகும்.

தமிழ் சமூகங்களானது குறிப்பாக ஈழத்து தமிழ் சமூகங்கள் கடந்த மூப்பது ஆண்டு காலமாக தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தேவையின் நிமித்தம் ஆயுத காலாசாரத்தை உருவாக்கின. இப் புதிய கலாசராமானது பாரம்பரிய தமிழ் காலாசாரத்தின் போர்முறைகளுக்குப் புதியதொன்றே. இப் புதிய கலாசாரமானது வீட்டுக்குள் அடக்கப்பட்டு அடைபட்டிருந்த பெண்களை வீட்டுக்கு வெளியே அழைத்து ஆயுதபாணிகளாக அலங்கரித்து பெருமைப்பட்டது உலகில் இருக்கின்ற தமிழ் சமூகங்கள். குறிப்பிட்ட காலம் இது ஒரு புதிய புரட்சிகரமான காலாசாரமாக தமிழ் சமூகத்தில் நிலவிவந்தது. சமூகத்தின் தேவையைப் பொருத்து இவ்வாறான கலாசார மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் இவ்வாறான புதிய கலாசாரங்கள் ஆரோக்கியமான பண்புகளுடனும் நேர்மறையான தன்மைகளுடனும் செல்கின்றனவா என்பதை ஒவ்வொரு கணமும் பிரக்ஞைபூர்வமாக உறுதிப்படுத்திக் கொண்டே முன்செல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை என்பதை இன்று முன்னால் போராளிப் பெண்கள் ஈழத்து தமிழ் சமூகத்தில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் அவர்களுக்கு வழங்குகின்ற மதிப்பையும் பார்க்கின்றபோது தெரிகின்றது. ஆகவே மாற்றங்கள் என்பது வெறும் பயன்படுத்தலாக மட்டும் குறுகிவிடக்கூடாது. இவ்வாறன மாற்றங்கள் தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் பிரக்ஞைபூர்வமான முன்நகர்வுகளும் அவசியமானவையாகும்.

போரின் பின்னான இன்றைய ஈழத்து தமிழ் சமூகமானது இன்னுமொரு புதிய காலாசரா மாற்றத்தை நோக்கி செல்கின்றது. ஆகவே இம் மாற்றமானது ஆரோக்கிமான வழியில் நேர்மறைத்தன்மையுடன் செல்வதை உறுதி செய்வது முக்கியமானது. அதற்கான பொறுப்பு சமூக அறிஞர்களுக்கும் புலமைசார்துறையினருக்கும் ஊடகங்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உண்டு. இவர்களது பிரக்ஞைபூர்வமான செயற்பாடுகளும் படைப்புகளும் ஆய்வுகளும் ஊடாக கருத்து மேலாதிக்கம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் புதிய கலாசாரத்தின் பாதையை நிர்ணையம் செய்ய முடியும். ஆனால் அவ்வாறான ஒரு செயற்பாட்டையும் படைப்புகளையும் பரவாலாக காணமுடிவதில்லை. இந்தடிப்படையில், இன்று ஈழத்தில் காலாசரா சீரழிவு எனப்படுவது என்ன? என்பது தொடர்பாகவும் இதன் விளைவாக உருவாகின்ற கருக்கலைப்பு எவ்வாறு பார்க்கப்படுகின்றது? என்பது தொடர்பாகவும் விரிவான ஆழமான கருத்துக்கள் வெளிவரவேண்டி உள்ளன. இவ்வாறான புதிய கருத்துக்கள் வராது விடுமாயின் சமூகமானது மீண்டும் வழமையான பழைய கருத்தாதிக்கதிக்கத்pற்கு உட்பட்டு புதிய கலாசராம் வெளிவராது தடுத்துவிடும். அல்லது புதிய கலாசாரமானது சிரழிவான பாதையை நோக்கி செல்லவும் வழிவகுக்கலாம்.

காதல், பாலியலுறவுகள், பாலியல் தொழில் என்பவற்றை தமிழ் சமூகம் தொடர்ந்து அடக்குமாயின் அவை அழிந்துவிடாது. மாறாக அவை இரகசியமான வழிகளில் நடந்தே தீரும். அதைத் தடுக்க முடியாது. இவ்வாறு மறுக்கப்படுவதால் அதில் ஈடுபடுகின்றவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்படுவதுடன் குற்றவுணர்வுக்கும் உள்ளாகின்றனர். இதற்காக புதிய காலாசாரம் ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதை உருவாக்குவது என்பது முடியாததோ அல்லது கஸ்டமான ஒரு காரியமோ அல்ல. ஏனெனில் மேற்குறிப்பிட்ட பல அல்லது சில விடயங்கள் மேற்குலகத்திற்கு மட்டுமே பொருத்தமானது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கலாம். இது ஒரு தவறான குற்றச்சாட்டாகவே இருக்க முடியும். ஏனெனில் கடந்த நூறாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய கலாசாரத்தில் குறிப்பாக ஆங்கில காலாசாரம் தளபடாங்களுக்கே ஆடை அணிவித்த ஒரு பிற்போக்கான சமூகம். ஆனால் இன்று பாலியலுறவு, கர்ப்பம், கருக்கலைப்பு தொடர்பாக கிரிஸ்தவ மத நிறுவனங்களின் எதிர்ப்பையும் மீறி மிகவும் அல்லது ஒரளவாவது முன்னேறியுள்ளன என்றால் மிகையல்ல. ஆனால் காலங்காலமாக தென்னாசிய சமூகங்களில் காமம், பாலியலுறவு தொடர்பான விடயங்கள் பொது வெளியில் உரையாடபட்டுவந்தமைக்கான சான்றுகள் இருக்கின்றன. ஆனால் காலனித்துவ ஆட்சிக்குப்பின் அவர்களின் கருத்தாதிக்கங்களை நன்றாக உள்வாங்கிக் கொண்டதால் அதிலிருந்து விடுபட முடியாதவர்களாக தென்னாசிய சமூகங்கள் இருக்கின்றன. இதேவேளை காலனித்துவ ஆட்சியாளர்களின் சமூகங்கள்அவ்வாறான கருத்தாதிக்கங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டன. ஆகவே இவ்வாறன கருத்தாதிக்கங்களிலிருந்து விடுபட்டு முன்னே செல்லவேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழ் சமூகமானது இருக்கின்றது. தமிழ் சமூகமானது கல்தோன்றி மண் தோன்றா முன்தோன்றிய முத்த குடியாக இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் நான் அறியேன். ஆனால் தமிழ் சமூகமானது முன்னேறி செல்லவேண்டிய ஒரு சமூகம் என்பதில் மட்டும் எனக்கு சந்தேகமில்லை. அவ்வாறு நமது தமிழ் சமூகம் முன்னேறி செல்ல, இளம் சமுதாயம் அதிகமாக காதல் செய்வதை அதிகமாக வரவேற்போம். பாதுகாப்பிற்காககையில் கருத்தடுப்பு சாதனங்களை வைத்திருப்பதை மேலும் ஊக்குவிப்போம். திருமணங்களை தள்ளிப் போடுவதை ஆதரிப்போம்…குழந்தை பெறுவதை ஆறுதலாகவும் பொறுப்புணர்வுடனும் செய்யவேண்டும் எனக் கூறுபவர்களுக்கு துணை நிற்போம். இவ்வாறான விடயங்களை திறந்த வெளிகளில் திறந்த மனதுடன் வெளிப்படையாக உரையாடுவோம்.

மீராபாரதி

19.01.12

நன்றி - ஏதுவரை - http://eathuvarai.net/?p=128

http://meerabharathy.wordpress.com/

யாழ்ப்பாண கலாசாரம் சீரழிகின்றதா?

http://www.penniyam....og-post_11.html

ஈழத்துடொமினிக்ஸ்திரௌஸ்கான்களும் (Dominique Strauss-Kahn)கலாச்சாரச்சீர்கேடுகளும்

http://www.globaltam...uss-Kahn--.aspx

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்...

http://www.globaltam...IN/article.aspx

இளவயது கர்ப்பத்திலும் யாழ் மாவட்டம் முதலிடம்!

http://www.ndpfront.com/?p=28980

ஒரு வருடத்தில் யாழில் 54பாலியல் வல்லுறவு சம்பவங்கள்இ 247முறையற்ற கர்ப்பம் தரிப்பு

www.neruppu.com/?p=34606

http://tinyurl.com/7nr7cy7

http://salasalappu.com/?p=43446

http://www.eelamdail...s/3679/57/.aspx

http://www.globaltam...IN/article.aspx

http://www.paadini.b...2011/07/24.html

http://www.penniyam....og-post_11.html

http://www.yarl.com/...showtopic=92795

தமிழ்வின் இணைப்பை நீக்கியுள்ளோம்: நிர்வாகம்

Edited by நிழலி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

நான்காவது திருமணத்திற்கு முன்போ பின்போ பாலியலுறவில் ஈடுபடுகின்றவர்கள் அதனால் ஏற்படும் அநாவசியமான கருப்பத்தை தவிர்ப்பதற்காக கருத்தடை சாதனங்கள் தொடர்பான அறிவை பெற்றிருப்பது மிக மிக அவசியமானது. கருத்தடைக்கான வழிமுறைகள் பலவகை உள்ளன. இக் கருத்தடை சாதனங்கள் வெறுமனனே குடும்ப கட்டுப்பாடுகளுக்கு மட்டும் பயன்படுவதில்லை. மாறாக கர்ப்பமடையாது பாலியலுறவை அனுபவிப்பதற்கும், இளம் வயது கர்ப்பங்களைத் தவிர்ப்பதற்கும், பாலியலுறவினால் ஏற்படும் நோய்களை தவிர்ப்பதற்கும் கருத்தடை சாதனங்கள் மிகவும் பயன்மிக்கவை. குறிப்பாக தமிழ் சமூகங்களில் வாழும் பெண்களின் எதிர்கால வாழ்வானது கர்ப்பங்களினால் தீர்மானிக்காமல் இருப்பதற்கும் அதேநேரம்பாலியலுறவில் ஈடுபட்டுக் கொண்டு சுந்திரமாக வாழ்வதற்கும் இவ்வாறன கருத்தடை சாதனங்கள் நேர்மறையான பங்களிப்பை செய்கின்றன. ஆகவே கருத்தடை சாதனங்கள் தொடர்பான பிரக்ஞையை மிகப் பரவலாக தமிழ் சமூகங்களில் ஏற்படுத்துவதுடன் மிக இலகுவாகவும் இலவசமாகவும் அவை கிடைக்கும் வகையிலான பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இதுவே அநாவசியமான கருக்கலைப்புகளை தவிர்க்கும்.

இதை தானே வருங்கால தமிழ்நாட்டு முதலமைச்சர் குஷ்புவும் சொன்னார்.

Share this post


Link to post
Share on other sites

இவ்வாறான விடயங்கள்தொடர்பான கருத்துப்பரிமாற்றங்களும் மற்றும் புதிய கருத்தாதிக்கங்களும் அதற்கானதேவைகளும் உணரப்படுகின்றன.

ஆடான ஆடலெல்லாம் குழையுக்கு அழுகுதாம்......................................

சமயம், மருத்துவம், மனோதத்துவம், அரசினால் ஆக்கபட்டுவிட்ட அபலநிலை, அரசினால் குடுக்கப்படும் வலோற்கார உதவி இவ்வளவத்தையும் பாவித்து, யாழில் ஒருமனமாக விடுதலைக்கு உழைக்க முயலும் போராட்டங்களின் திடங்களை உடைத்து, விவாதங்களை பிழையான திசைகளுக்கு இட்டு சென்று, தான தண்ட சாம பேத முறைகாளால் யாழை குழப்ப பலவிதமான குழப்பிகளை யாழுக்கு அனுப்பி வைக்கிறது அரசு. கணவனின் முன், தந்தையின் முன், சகோதரங்களின் முன் வன்முறை செய்யபட்ட அபலைகளை, உங்களின் வேதனக்கு காரணம் உங்கள் சமூகம் பாலியல் கல்வி தெரிந்திருக்காதே என்கிறார்கள். உங்களின் சமூகம் பண்பாடுடன் வாழ்கிறது அதுதான் உங்கள் வேதனைக்கு காரணம் என்கிறார்கள். இது வரையும் வன்முறைசெய்ய பட்ட பெண்களின் கதைகளை மூடிமறைக்க அது உள்ளுரில் ஏற்பட்டிருக்கும் கலாச்சார சீரழிவு என்றார்கள். அறிந்தோரும் படித்தோரும், மக்களிடம் விடுதலை வரும் வரை அதை கண்டும் காணாததுமாக போகும் படி அறிவுரை கூற, இப்போது அந்த அறிவுரையில் பற்றிக்கொண்டுவந்து யாழின் உறவுகளின்மனத்திடங்களை சோதிக்கிறார்கள்.

இலங்கை அரசு இளைஞர்களுக்கு வாழ்வுக்கு தேவையான பலவகைக்கல்வி முன்னேற்றங்கள் எல்லாவற்றையும் செய்துதருகிறது. அதனால் முதியோருக்கு பாலியியல் கல்வியும் படிப்பிக்க இவர்களுக்கு பணம் கொடுத்து இலவச யாழுக்கு அனுப்பி வைத்திருக்கு..

அவசியமான நித்தியானந்தா விளம்பரம். இலவச யாழ்தானே.

யாழ்ப்பாணத்திலும் ஆமிக்கரனுக்கு படவியாபாரம் குறையுது போல் இருக்கு. இதை முதலில் செய்த்து முடித்தால் அவர்கள் வருடப்பிறப்பிற்க்கு வீட்டுக்கு போகும் போது கையிலை மடியிலை ஏதாவது கொண்டு போகலாம். தமிழர் மடியை இறுக்கி கஞ்சிக்கு, படிப்புக்கு என்று ஏதோ சேர்க்க பார்க்கிறார்கள். என்ன மடமை இந்த விபரங்களை இதுவரையும் தெரிஞ்சு வைத்திருக்காததாலை தான் ஒரு காலத்தில் 65% அரச உத்தியோகத்தையும் பார்த்தவையள். இனி அது இல்லைத்தானே. நல்ல வத்வாசன, நித்தியானந்தா குருவுகளை தேடிப்போய் வாழவை அனுபவிக்கட்டும்.

மற்றவை எல்லாம் கல்தோன்றா மண்தோன்றா காலத்து முன்தோன்றிய தமிழ் கலாசராத்தை பாதுகாப்பவையா மட்டுமே இருக்கின்றன. இந்த இணை செய்திகளின் இணைப்புகள் சில இறுதியில் உள்ளன.
என்னா கவலை! ஆமிகாரனை கண்டால் இயற்கையாக இல்லாமல்பொத்தி மூடிக்கொண்டு ஒழிகிறார்களே என்று கவலை படுகிறார்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எந்தவிதமான ஆதரரவும் அன்பும் கிடைக்காத காரணங்களினால் இவர்கள் மிகவும் இலகுவாக பாலியல் தொழில்களுக்கு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள்.
இதவிட ஆமிக்கரணை நியாப்படுத்த ஒரு விவாதம் இருக்க முடியாது.

சாத்திரியாரின் எழுத்துகளை ரசிப்பதாக நடிக்கிறார்களா? இல்லை சாத்திரியார் எழுதியதாக கூறி யாழில் விவாதிக்கப்பட்ட"தம்பி கையைப் பழுதாக்காதே" என்ற வசனத்தை வைத்து சாத்திரியரை தமது இலகுவான இலக்காக பாவிக்கிறார்களா. சாத்திரியாருடன் தமக்கு ஒற்றுமை இருப்பதாக காட்டி எழுதியிருகும் இந்த கூட்டம் சாத்திரியார் கட்டி வளர்த்த நேசக்கரம் போன்றவற்றுக்கு என்ன செய்தார்கள் என்பதை கூற முடியுமா?

"துளி துளியாய்" இற்கு போய் பார்க்கட்டும், இந்த மே தாவிகள். அங்கே பள்ளி மாணவருக்கு தமிழீழத்திலிருந்து உதவி கேட்டு இரு பா.உக்கள் கோரிக்கைகள் விட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு பள்ளிப்படிபிற்கு உதவட்டும். அங்கே ஆமிகளினால்பாதுகாப்பில்லாமல் அவதிப்படும் விதவைகளுக்கு உதவி கேட்கிறார்கள். அவற்றுக்கு என்ன உதவிகள் செய்யலாம் என்று அரசு கொடுக்கும் பணத்தை பாவித்து எழுதட்டும்.

Edited by மல்லையூரான்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

.

பாரதி,

தமிழ்க்கலாச்சாரத்தின் ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடு முதிர்ச்சியடைந்த ஒரு பண்பாடு. இங்கு முதிர்ச்சி என்று சொல்லப்படுவது ஏனென்றால் ஆயிரக்கணக்கான வருடங்களினூடாக சமூகத்தோடு நின்றுபிடித்து அரசர்கள் இல்லாத காலத்திலும் கூட சமூகத்தை காப்பாற்றி இன்றும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒரு முறைமை.

இளம், நன்கு பரிசோதிக்கப்படாத ஒரு முறைக்கும் முதிர்ந்த நன்கு பரிசோதிக்கப்பட்ட ஒரு முறைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி அதிகம் பேசத்தேவையில்லை என்று நினைக்கிறேன்.

தமிழர்கள் நாங்கள் பேசித்திருமணம் செய்கிறோம்; காதல் திருமணம் செய்கிறோம். இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நடக்கிறது. காதலும், திருமணமும் எம் கலாச்சாரத்தின் அம்சங்களே.

இரண்டு சந்ததிகளுக்கு முன் பெண் 15 வயதில் திருமணம் செய்தாள். இன்று 25 வயதைதாண்டி திருமணம் செய்கிறாள். கல்வி, வேலை போன்ற காரணங்களால். வயது பிந்தினாலும் ஒருவனுக்கு ஒருத்தி பண்பாட்டை முடிந்த மட்டும் பேணுகிறாள்.

இந்த காதல், திருமணம் போன்றவற்றில் நாம் காட்டும் ஒருவனுக்கு ஒருத்தி ஒழுக்கம் அஃதாவது எம் கலாச்சாரம் -- அதில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் நாம் மாற்று வழிகள் பற்றி யோசிக்கலாம்.

பல ஆண்களுக்கு பல பெண்கள் எனபடும் டேடிங் முறையை நாடும் படியாக நம் ஒருவனுக்கு ஒருத்தி பண்பாட்டில் நீங்கள் காணும் குறைதான் என்ன ?

நம் ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடா திருமணத்திற்கு முந்தய கருத்தரிப்பின் தோற்றுவாய் ?

நம் ஒருவனுக்கு ஒருத்தி பண்பாடா இளவயது கர்ப்பங்களின் தோற்றுவாய் ?

நம் பண்பாட்டின் இறுக்கம் காரணமாக களவொழுக்கம் நாடுகிறார்கள் என்கிறீர்கள். சட்டம் இறுக்கம் அதனாற் களவில் குற்றம் செய்கிறார்கள். ஆகவே சட்டத்தையே எடுத்து விடுவோம். பொலீஸும் வேண்டாம். நீதிமன்றும் வேண்டாம். வனத்தில் எங்கே பொலீஸ் ? விலங்குகள் வாழவில்லையா ? :D

அல்லது

"

ஆனால் இன்றைய நவீன தொழிற்நூட்ப தகவல் பரிமாற்ற உலகில் காதலுக்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என்றால் மிகையல்ல. இதன் ஒரு வெளிப்பாடாகவே மேற்கத்தைய காலாசாரமான டேட்டிங் முறைகள் தமிழ்சமூகத்தில் அறிமுகமாகி பிரபல்யமாகி வருவதை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.

"

என்கிறீர்கள்.

ஒரு சந்தேகம். காதல் என்பது ஒருவன் மேல் ஒருத்தி கொள்ளும் அன்புதானே ? அல்லது பிறிதொரு வரைவிலக்கணமும் உள்ளதோ ? :D

மேற்கில் டேடிங் வந்ததிற்குக் காரணம் பேசித் திருமணம் செய்யும் முறை அவர்களிடம் இல்லாமையே. பெற்றோர் தம் வாழ்க்கையை மிகவும் சொகுசாக்கி பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பாரத்தை மெதுவாக கைகழுவி விட்டார்கள். அதன் விளைவு டேடிங்.

மேற்கின் டேடிங் முறையினால் அல்லல்படும் பெண்களைப் பற்றி நீங்கள் அறியவில்லை போலும். டேடிங் பெண்களை ஆண்கள் மேயும் விபச்சாரிகளாக்கியிருக்கிறது. காமத்திற்கு சம்மதிக்காத பெண்ணை ஆண் விட்டுவிட்டு சம்மதிக்கும் பெண்ணிடம் போய்விடுவான். இதனால் ஆணைத்தக்க வைப்பதற்கே பெண் தன்னை சகலதுமாகக் கொடுக்கவேண்டியிருக்கிறது. இவ்வளவு பெண் விட்டுக் கொடுத்தும் ஆண் அவளைத் திருமணம் செய்யாமலே அவளை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழலாம்.

மாறாக எம் கலாச்சாரம் எம் பெண்களைப் பாதுகாக்கிறது. துணை தேடுவதில் அவளுக்கிருக்கும் பாரத்தையும் துன்பங்களையும் முடிந்த மட்டும் குறைக்க முயற்சிக்கிறது. பல இடங்களில் அவளுக்கு நல்ல துணையையும் தேடிக் கொடுக்கிறது.

டேடிங்கின் விளைவுகளில் ஒன்றாக இன்று மேற்கில் பலபேர் திருமணம் செய்யாமல் தனிமனிதர்களாகவே வாழ்கிறார்கள்.

நாம் டேடிங் மற்றும் கருத்தரிப்புத் தடுக்கும் முறைகள் என்பவற்றை சொல்லிக்கொடுப்பதை‍‍‍‍ விட எம் கலாச்சாரத்தைப் பற்றியும் அதைக்கடைப்பிடிப்பதால் உள்ள நன்மைகள் பற்றியும் கற்பிப்பதே எம் அடுத்த சந்ததிக்கு நன்மை பயக்கும்.

இறுதியாக பாரதி..

ஒரு விசயத்தில் பூரணத்துவம் இல்லாமல் சொற்பொழிவு செய்ய வெளிக்கிட வேண்டாம்.

 • Like 5

Share this post


Link to post
Share on other sites

கலாசாரமும் கருக்கலைப்பும் – எனது அறியாமையும்

இப்படி அமைவதே இந்தத் தலைப்புக்கு சாலப் பொருத்தம்..!

----------------------------------------------------------

வழமை போலவே.. போரின் மீதான குற்றச்சாட்டுக்கள்... சமூகத்தின் மீதான குற்றச்சாட்டுக்கள்.. புலம்பெயர்ந்தவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்................

நான் நினைக்கிறேன்.. எமது மண்ணில் கலாசார சீரழிவிற்கு முக்கியமானவர்கள் ஒட்டுக்குழுக்கள். வவுனியாவிலும் சரி.. யாழ்ப்பாணத்திலும் சரி.. மட்டக்களப்பிலும் சரி.. கொழும்பிலும் சரி..ஒட்டுக்குழுக்களாலும் அவர்களின் ஆதரவாளர்களாலும் நிகழ்த்தப்படும் கலாசார சீரழிவும்.. பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் வன்புணர்வுகளும் தொடர்கதையாகி வருகின்றன.

அண்மையில் நெடுந்தீவில் நடந்த சம்பவம் மட்டுமல்ல.. இந்தியப் படைகளின் காலத்தில் கிரமமாக யாழ்ப்பாணத்திலும் சரி கிழக்கிலும் சரி.. இந்தியப் படைகளுக்கு தமிழ் பெண்களை பிடித்து சப்பிளை செய்தவர்களில் ஒட்டுக்குழுக்களின் பங்களிப்பு முக்கியமானது.

ஈபி ஆர் எல் எவ்.. புளொட்.. ஈ என் டி எல் எவ்.. ரெலோ..ஈரோஸ் (மாற்று அணி).. மோகன் குழு.. ராசிக் குழு.. முஸ்லீம் காடையர் குழுக்கள்.. என்று பல பெயர்களில் இவர்களின் நடவடிக்கைகள் இருந்துள்ளன. இன்றும் அவை தொடர்கின்றன. இவற்றோடு இன்று கருணா குழு.. பிள்ளையான் குழு மற்றும் சில முஸ்லீம் குழுக்களும் இணைந்து கொண்டு இயங்கி வருகின்றன. (இதில் வேடிக்கை என்னவென்றால்.. முஸ்லீம் பெண்களுக்கு பாதுகாப்பு தேடும் முஸ்லீம் குழுக்கள் தமிழ் பெண்களை கெடுத்துக் குட்டிச்சுவராக்க ஒத்துழைப்பது தான். இந்த மனப்பான்மை சாதாரண முஸ்லீம் இளைஞர்கள் மத்தியிலும் பெருகிக் காணப்படுவதை.. பல்கலைக்கழகங்களில் படிக்கும் அவர்களிடம் கூட.. நேரில் அவதானிக்க முடிகிறது.)

இவர்களின் கைகளில் இருக்கும் ஆயுதங்களே பெண்களுக்கு அதிக பாதுகாப்பில்லாத நிலையை தோற்றுவித்திருப்பதுடன் ஆக்கிரமிப்பாளன் மிக இலகுவாக எமது பெண்களை இலக்கு வைக்க முடிகிறது. அதேபோல் இளைஞர்கள் கட்டுப்பாடற்ற பாலியல் செயலில் ஈடுபட தூண்டிவிடுகிறது.

மேலும்.. இந்த ஒட்டுக்குழுக்கள் தங்களின் நிர்வாகத்தின் கீழ் அதிக சமூகச் சீரழிவை அங்கீகரித்து நிற்பதுடன்.. போதைப் பொருள் பாவனை.. பாலியல் தொழில்.. நீலப்படம்.. என்று தமது வருவாய்க்காக வியாபாரங்களாகவும் அவற்றை வளர்த்து வருகின்றனர். இது அக்குழுக்களின் தலைமையில் இருந்து கடைக்குழு உறுப்பினன் வரை பணம் பார்க்க உதவுகிறது.

1987 -90 வரை இந்திய படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் வடக்குக் கிழக்கில் நிலவிய மிக மோசமான கலாசார சீரழிவுகள்.. மீள 1995 சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்போடு மீண்டு கொண்டன. இடைப்பட்ட கால இடைவெளியில் இவை பெருமளவு அற்றுப் போயிருந்தன. காரணம்.. சமூகச் சீரழிவாளர்களுக்கு உடனடியாக வழங்கப்படுகின்ற கடுமையான தண்டனைகளும் சமூகச் சீரழிவுகள் குறித்து மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட கருத்தாடலும் தான். இன்று அந்த நிலை இல்லை. எங்கும் ஒட்டுக்குழுக்களின் ஆதிக்கம். பாடசாலை நிர்வாகமாக இருக்கட்டும்.. அரச துறை நிர்வாகமாக இருக்கட்டும்.. விளையாட்டுக் கழகங்களாக இருக்கட்டும்.. எங்கும் ஒட்டுக்குழுக்கள். ஒட்டுக்குழு ஆதரவாளர்கள். இவர்கள் தவறு செய்வதை தட்டிக்கேட்க முடியாத நிர்வாக முறைமைகள்..! ஆக்கிரமிப்பாளனின்.. அரச ஆதரவுகள்..!

இந்த நிலையில் தான் எமது சமூகம் கலாசார சீரழிவை நோக்கி விரைந்து செல்கிறதே அன்றி.. மக்கள் அறிவின்றிச் செய்கின்றனர் என்ற கருத்தியல் தவறு. எமது மக்களின் அநேகருக்கு எமது பாரம்பரியம்.. பண்பாடு.. கலாசாரம் பற்றி புரிதல் உண்டு. புலம்பெயர் நாடுகளில் இருப்பதை விட தாயக மக்களிடம் இந்த சிந்தனை மிக அதிகம்..! பாலியல் சார்ந்த தவறுகள் நிகழக் கூடாது என்ற மையக் கருத்தோடு இயங்கும் குடும்பங்களே வடக்குக் கிழக்கில் அதிகம்.

ஆனால்.. அந்தக் கருத்தியலுக்கு சாவு மணி அடிப்பவர்களாக.. கொலைக்கருவி தாங்கிய ஒட்டுக்குழுக்களும்.. அவர்களுக்கு கொலைக்கருவி வழங்கி தங்கள் தேவைகளை தீர்த்துக் கொள்ளும் ஆக்கிரமிப்பாளர்களும் இயங்கி வரும் நிலையில்.. அவர்களின் ஆதரவாளர்கள்.. சமூகச் சீரழிவிற்கு.. போரின் மீது ஒரு பழியை போட்டு ஆக்கங்களை தீட்டி வருவது அண்மைக் காலமாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

1986 - 1987 அக்டோபர்.. 1990 - 95 வரைக்கும் போர் நடந்தும்.. கட்டுக்கோப்பான சமூக ஒழுங்கை காக்க முடிந்தது என்ற நிலையில் வைத்து பார்க்கின்ற போதும்.. அதை ஏன் ஆக்கிரமிப்பாளர்களின் வரவின் பின் செயற்படுத்த முடியவில்லை என்று நோக்குகின்ற போதும்.. பல உண்மைகள் அங்கிருந்து வெளிப்படுவதைக் காணலாம்...!

பாலியல் கல்வி.. பாலியல் ரீதியான பாதுகாப்பான உடலுறவு.. கருக்கலைப்பு.. இவை ஒன்றும் புதிய விடயங்கள் அல்ல. இவை பன்னெடுங்காலமாக எம் சமூகத்திலும் போதிக்கப்படும் விடயம் தான். பாலுறவு.. பால்வினை நோய்கள்.. தடுப்பு முறைகள் பற்றி ஆண்டு 9 இல் இருந்து இலங்கைப் பாடத்திட்டத்தில் போதிக்கப்பட்டே வருகின்றன. மேற்குநாடுகளிலும் அவை நடைமுறையில் உள்ளன. பாதுகாப்பான உடலுறவு பற்றிய விழிப்புணர்வுகள் எல்லா மட்டங்களிலும் செய்யப்படுகின்றன.

1990 களில் கைவிரல் விட்டு எண்ணக் கூடிய.. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் மட்டும் காணப்பட்ட எயிட்ஸ் நோய் இன்று யாழ்ப்பாணத்தில் பெருகி இருக்க என்ன காரணம்..??! எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகளை 1990 களின் நிர்வாகம் மிகவும் நேர்த்தியான முறையில் பாடசாலைகள் மட்டத்திலும் சரி பிற நிர்வாக மட்டங்களிலும் சரி செய்திருந்தது.

அதுமட்டுமன்றி.. எயிட்ஸ் பற்றி மக்கள் அறிந்து அவதானமாக செயற்பட வழிகாட்டியதோடு.. வெளிநாடுகளில் இருந்து வருவோர் குறித்த அவதானம் மற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருந்தது. ஆனால் 1995 இல் ஏற்பட்ட ஆக்கிரமிப்பின் பின்.. பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவிகளே.. எயிட்ஸ் தொற்றுக்கு இலக்காகி இருந்தனர். அதற்கு முக்கிய காரணம்.. இலங்கையில் வெளிமாவட்டங்களில் இயங்கிய ஒட்டுக்குழு உறுப்பினர்கள்.. விபச்சாரிகளுடன் கொண்டிருந்த தொடர்புகளை மறைத்து.. யாழ்ப்பாணத்திலும் பலாத்கார பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை. அதுமட்டுமன்றி வெளிநாட்டவர்களிடம் எமது பெண்களை பாலியல் தொழிலுக்கு அனுப்பியமை.

ஈபிடிபி ஒட்டுக்குழு அமைப்புக்கு என்று கொழும்பு நாரேன்பிட்டியில் ஒரு விபச்சார மையமே உள்ளது. அங்கு சிங்களப் படையினர்களும் போய் வருகின்றனர். அங்கிருந்து வரும் வருமானம் டக்கிளஸ் தேவானந்தாவின் வங்கி கணக்கிற்கு போகிறது. இன்று அந்த மையம் நெடுந்தீவு வரை பரந்து விரிந்து கிளை பரப்பியுள்ளது..! அனுராதபுரம், பொலநறுவை போன்ற பகுதிகளில் கட்டமைப்புப்படுத்திய சிங்கள அரச ஆதரவு விபச்சார மையங்கள் சிங்களப் படைகளுக்காக நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு ஒட்டுக்குழுக்களைச் சேர்ந்தவர்களும் கிரமமாக போய் வருகின்றனர். இவர்களை மக்கள் மத்தியில் படைவீரர்களாகவும்.. ஒட்டுக்குழுவினராகவும் இயங்கவிடப்படும் நிலையில் மக்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாவதோடு.. சமூகச் சீரழிவுக்கும் இவர்களே பெரிதும் காரணமாகியுள்ளனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிங்களப் படையினன் உடனான தொடர்பினால் எயிட்ஸ் நோய் தாக்கத்துக்குள்ளான யாழ்ப்பாணப் பெண் அதை மறைத்து பல சிங்களப் படையினர்களுடன் தொடர்பு கொண்டு தனக்கு கிடைத்த எயிட்ஸை பழவாங்கும் நோக்கோடு பரப்பி இருந்தமை.. இங்கு சுட்டிக்காட்டக் கூடிய ஒரு முக்கிய சம்பவம்..!

இது யாரின் அறியாமை.. மக்களின் அறியாமையா.. போரின் பின் விளைவா.. அல்லது ஒட்டுக்குழுக்களின் அறியாமையா.. அரச ஆதரவு.. ஆயுத அதிகார மையங்களின் பலப் பிரயோகமா..???!

பிரச்சனையின் தோற்றுவாய்கள்.. மக்களோ.. சமூகமோ.. கலாசாரமோ அல்ல. எமது மண்ணில் எமது சீரழிவுக்கு காரணம்.. ஆக்கிரமிப்பாளர்களும்.. ஒட்டுக்குழுக்களுமே..! இவற்றின் இருப்பை அறவோடு நீக்கின்.. எமது மக்களின் வாழ்வியல் என்பது நிச்சயம் நல்ல ஒரு வசந்த காலத்தைத் தொடும்.

போர் என்பது சமூகச் சீரழிவுகளை எல்லாம் கடந்த ஒன்றையும் எமக்கு காட்டியுள்ளது. எப்படி சமூகச் சீரழிவுகள் இருந்து நாம் மீண்டு வாழ முடியும் என்பதையும் போர் எமக்கு இனங்காட்டியுள்ள நிலையில்.. நிச்சயம்.. மக்களை சரியாக வழிநடத்தும் தலைமையும் கட்டுக்கோப்பான நிர்வாக முறைமைகளுமே இந்த சமூச் சீரழிவுக்கு முடிவு கட்ட முடியுமே தவிர கொண்டோம்.. டேற்றிங்.. தாலி கட்டாத பாதுப்பான திருமணம்... அல்லது பாலியல் தொடர்பு.. இவை எல்லாம்.. தீர்வைத் தரா. அப்படி தரும் என்றால் மேற்கு நாடுகள்.. பால்வினை நோய்களுக்காக செலவழிக்கும் பல மில்லியன் டாலர்களை அவர்கள் சேமித்திருக்க முடியுமே.. ஏன் முடியவில்லை..????!

எம்மிடம் நல்ல கலாசார.. பண்பாட்டு.. அமைப்பியல் உண்டு. அதனை பலப்படுத்துவதன் வாயிலாக பல மில்லியன் டாலர்கள் செலவில் கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு விடயத்தை மிகக் குறைந்த செலவில் செயற்படுத்திக் காட்ட முடியும். அதை செய்தும் காட்டியுள்ளார்கள். போதைப் பொருள் அற்ற.. பால்வினை தொழில் அற்ற.. எயிட்ஸ் அற்ற.. யாழ்ப்பாணம்... இருந்துள்ளது. அதற்கான காலப் பதிவாக 1990 - 1995 ஒக்டோபர் வரையான காலம் இருந்துள்ளது. அதுவும் போர்க்காலம் இருந்துள்ளது. இன்று.. போர் முடிந்தும் சமூகச் சீரழிவில் இருந்து..சமூகத்தைக் காக்க முடியவில்லை என்றால்.. அதற்குக் காரணம்.. தேசத்தை மக்களை நிர்வகிப்பவர்களே. போர் இருந்தும் மக்களை சமூகத்தை காத்தவர்கள்.. மீள நாட்டை நிர்வகிக்கும் நிலை வரின்.. எல்லாம் சுபமாக முடியும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

கருக்கலைப்பு எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கலாம்?

எனது உறவினர் ஒருவர் மூன்றாவது பிள்ளைகூடாது என்று கருக்கலைப்பு செய்து சுமார் பத்து வருடங்களின்பின் அவரது கருப்பை புற்றுநோய் காரணமாக நீக்கப்பட்டது.

கருக்கலைப்பு காரணமாக மருத்துவரீதியான ஆபத்துக்கள் எவை?

Share this post


Link to post
Share on other sites

கருக்கலைப்பு எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கலாம்?

எனது உறவினர் ஒருவர் மூன்றாவது பிள்ளைகூடாது என்று கருக்கலைப்பு செய்து சுமார் பத்து வருடங்களின்பின் அவரது கருப்பை புற்றுநோய் காரணமாக நீக்கப்பட்டது.

கருக்கலைப்பு காரணமாக மருத்துவரீதியான ஆபத்துக்கள் எவை?

கருக்கலைப்புக்கும் கர்ப்பப்பை புற்றுநோயிற்கும் தொடர்பு குறைவு போலுள்ளது.

ஆனால்...

Talcum powder

Regular use of talcum powder in the genital area may increase the risk of womb cancer. A recent study showed a 24% increase in postmenopausal women.

:rolleyes: :rolleyes: :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

கருக்கலைப்பு எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கலாம்?

எனது உறவினர் ஒருவர் மூன்றாவது பிள்ளைகூடாது என்று கருக்கலைப்பு செய்து சுமார் பத்து வருடங்களின்பின் அவரது கருப்பை புற்றுநோய் காரணமாக நீக்கப்பட்டது.

கருக்கலைப்பு காரணமாக மருத்துவரீதியான ஆபத்துக்கள் எவை?

கருப்பைப் புற்றுநோய்களில் பல வகைகள் உண்டு. பொதுவாக விபச்சாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் வைரஸ் தொற்றுக்களால் கருப்பை கழுத்து சார்ந்த புற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

கருப்பைப் புற்றுநோய் வர கருக்கலைப்பு ஒரு risk factor ஆக உள்ளதே அன்றி.. அதற்கு பாரம்பரியம்.. நோய் தொற்று என்று வேறு பல காரணங்களும் உள்ளன.

பிரச்சனை கருக்கலைப்பு அல்ல. தவறான கருவுறலை தடுப்பது எப்படி என்பது தான். அதற்கு காரணமானவர்களை இனங்கண்டு தண்டிப்பதன் வாயிலாக மட்டுமே இதனைக் குறைக்க முடியும். ஆயுததாரிகளால் ஏற்படும்.. கருவுருவாக்கமும். ஆயுததாரிகளால் ஆக்கிரமிப்பாளர்களால் இன அழிவு நோக்கி தூண்டப்படும் சமூகச் சீர்கேடுகளுமே எம் சமூக அழிவிற்கு முக்கிய காரணம்.

கோத்த பாய என்ற ஒரு ஆட்சியாளன் சொன்னது.. தமிழ் பெண்கள் எல்லாம் எமது படையினருக்கு இரையாக.. தமிழ் ஆண்கள் எல்லாம் கடலுக்குள் பாயட்டும் என்று.

இப்படிப்பட்ட மனநிலை உள்ள ஒரு ஆக்கிரமிப்பாளனிடம் இருந்தும்.. அவனுக்கு சேவகம் செய்து வாழ்க்கை ஓட்டும்.. ஒட்டுக்குழுக்களிடம் இருந்தும்.. எமது பெண்களை.. சமூகத்தை மீட்காமல்.. எந்த ஆராய்ச்சியாலும்.. எதுவும் செய்ய முடியாது..! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

மனிதர்களின் பாலியலுறவு மற்றும் பாலியல் தொழில் தொடர்பான நமது அறிவும் அறியாமையும் தொடர்பாக ஏற்கனவே இரு கட்டுரைகள் எழுதி எனது “பிரக்ஞை”வலைப்பதிவில்பதிவுவிட்டுள்னேன்.

பாலியல் தொழிலாளர்களும்பெண்ணியவாதிகளும்குறிப்பிடுவதுபோல் பாலியல் தொழிலாளர்களது பிரச்சனையும் அடிப்படையில் மனித உரிமைகள் சார்ந்த ஒரு பிரச்சனையே என்றால் மிகையல்ல. இது தொடர்பாக “பிரக்ஞை”வலைப்பதிவிலுள்ள விரிவான கட்டுரை எழுதப்பட்டுள்ளது..

இதன் மூலம் உங்கள் வலைத்தளத்திற்கான விளம்பரமாக யாழ் கருத்துக்களத்தை பயன்படுத்துகிறீர்களா?

கலாசாரத்தை கடைப்பிடிக்க என்ன செய்யலாம் என்று கூறாமல் கலாசாரத்தை மாற்றும் வழிமுறைகளை ஏன் கூறுகிறீர்கள்?

இன்று எம் நாட்டில் சமூக சீரழிவு நடைபெற இராணுவத்தினரும் ஒட்டுக்குக்குழுவுமே முக்கிய காரணம். ஆயுத முனையில் நடைபெறும் பாலியல் வல்லுறவுகளால் தான் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கெதிராக நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாதுள்ளனர்.

ஆனால் காதலினால் உந்தப்பட்ட மனித இயல்பூக்கமானது, இவ்வாறான கட்டுப்பாடுகளையும் மீறி தமது காதல் உணர்வை வெளிப்படுத்தி எந்தவிதமான பிரச்சனைகளையும் எதிர் கொள்ள தயாராக இருக்கின்றன. சில காதல்கள் வெற்றி பெருகின்றன. பல தோல்வியடைகின்றன.

ஆனால் இன்றைய நவீன தொழிற்நூட்ப தகவல் பரிமாற்ற உலகில் காதலுக்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என்றால் மிகையல்ல. இதன் ஒரு வெளிப்பாடாகவே மேற்கத்தைய காலாசாரமான டேட்டிங் முறைகள் தமிழ்சமூகத்தில் அறிமுகமாகி பிரபல்யமாகி வருவதை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது.

நிச்சயம் டேடிங் முறை போன்றவை காதலுக்கான சாத்தியத்தை அதிகரிக்கவில்லை. காமத்திற்கான சாத்தியத்தை தான் அதிகரிக்கிறது. எத்தனை வீதமானோரின் காதல் டேடிங் முறையில் வெற்றி பெறுகிறது? எத்தனை வீதமானோர் திருமணம் செய்கிறார்கள்? 1% ஆனோர் கூட இல்லை.

இன்றாவது சமூகத்திற்கு பயந்து தவறான வழியில் செல்ல பெருமளவானோர்(ஆயுததாரிகள் தவிர) நினைக்க மாட்டார்கள். ஆனால் டேடிங் முறையை அறிமுகப்படுத்தினால்,

 • மாறி மாறி பெண்களை கற்பழித்து விட்டு அவளாக தான் உடலுறவுக்கு சம்மதித்தாள் என்று கூறினால் என்ன செய்வீர்கள்?
 • யாரென்றே தெரியாத வீதியில் சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்து விட்டு அவள் டேடிங் முறையில் என்னை சந்திக்க வந்தாள் என்று கூறினால் என்ன செய்வீர்கள்?

இப்படி தான் எம் நாட்டில் இடம்பெறும்.

வெளிநாட்டையும் எம் நாட்டையும் ஒப்பிடும் போது முதலில் ஒன்றை கவனிக்க வேண்டும். வெளிநாட்டில் சட்டம், ஒழுங்கு நடைமுறையில் உள்ளது, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருத்தன் கற்பழித்தால் அவனுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். காலம் சென்றாலும் அவனுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும். எம் நாட்டில் அது சாத்தியமா? எம் நாட்டில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே சமூகத்தை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் போது இது எவ்வாறு சாத்தியப்படும்.

தமிழ் சமூகங்களானது குறிப்பாக ஈழத்து தமிழ் சமூகங்கள் கடந்த மூப்பது ஆண்டு காலமாக தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தேவையின் நிமித்தம் ஆயுத காலாசாரத்தை உருவாக்கின. இப் புதிய கலாசராமானது பாரம்பரிய தமிழ் காலாசாரத்தின் போர்முறைகளுக்குப் புதியதொன்றே. இப் புதிய கலாசாரமானது வீட்டுக்குள் அடக்கப்பட்டு அடைபட்டிருந்த பெண்களை வீட்டுக்கு வெளியே அழைத்து ஆயுதபாணிகளாக அலங்கரித்து பெருமைப்பட்டது உலகில் இருக்கின்ற தமிழ் சமூகங்கள். குறிப்பிட்ட காலம் இது ஒரு புதிய புரட்சிகரமான காலாசாரமாக தமிழ் சமூகத்தில் நிலவிவந்தது. சமூகத்தின் தேவையைப் பொருத்து இவ்வாறான கலாசார மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஆனால் இவ்வாறான புதிய கலாசாரங்கள் ஆரோக்கியமான பண்புகளுடனும் நேர்மறையான தன்மைகளுடனும் செல்கின்றனவா என்பதை ஒவ்வொரு கணமும் பிரக்ஞைபூர்வமாக உறுதிப்படுத்திக் கொண்டே முன்செல்ல வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை என்பதை இன்று முன்னால் போராளிப் பெண்கள் ஈழத்து தமிழ் சமூகத்தில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் அவர்களுக்கு வழங்குகின்ற மதிப்பையும் பார்க்கின்றபோது தெரிகின்றது. ஆகவே மாற்றங்கள் என்பது வெறும் பயன்படுத்தலாக மட்டும் குறுகிவிடக்கூடாது. இவ்வாறன மாற்றங்கள் தொடர்பான தொடர்ச்சியான கலந்துரையாடல்களும் பிரக்ஞைபூர்வமான முன்நகர்வுகளும் அவசியமானவையாகும்.

நீங்கள் இங்கு குறிப்பிடும் மேலைத்தேய கலாசாரம் ஆரோக்கியமான பண்பை கொண்டுள்ளதா என்பதை பார்க்காமல் போராளிகளை பற்றி குறை கூற என்றால் மட்டும் அடித்துப்பிடித்துக்கொண்டு வந்துவிடுகிறீர்களே....... ஏன்?

தாயகத்தில் போராளிகளுக்கு இன்றுள்ள நிலைமைக்கு காரணம்,

 • சாதி பார்ப்பவர்கள் அவர்களை புறக்கணித்தல் (இது போராளிகளுக்கேன்றில்லை சாதாரண மக்களுக்கும் தான் இடம்பெறுகிறது)
 • கணவனை இழந்த போராளி பெண்களை புறக்கணித்தல் (இதுவும் சாதாரண பெண்களுக்கும் நடைபெறுவது)
 • இராணுவத்தினர் உயிருடன் பிடித்ததால் அப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம்.... அவர்களுக்கான திருமணத்தில் தடை வர காரணமாகிறது (இப்பிரச்சினை அவர்களுக்கு மட்டுமல்ல, இராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்ட சாதாரண பெண்களுக்கும் தான் இருக்கிறது)
 • போராளிகளுடன் கதைப்பவர்களுக்கு இராணுவத்தால் வரக்கூடிய நெருக்குதல்

இங்கு இடம்பெற்ற எதுவும் ஆயுத கலாசார புறக்கணிப்பல்ல. அதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தேசத்தில் ஒன்றிரண்டு பேர் தான் கூறுகிறார்களே (அதுவும் விடுதலைப்போராட்டத்தின் மீதான தனிப்பட்ட விரோதத்தால்) தவிர மற்றைய புலம்பெயர் தமிழர்கள் அவர்களை இன்றும் மதிக்கிறார்கள் என்றும் மதிப்பார்கள்.

எனவே போராளிகளை மட்டுமல்ல பாதிக்கப்பட்ட அனைவரையும் நல்ல நிலைக்கு கொண்டுவர உங்கள் மேலைத்தேய கலாசார போதிப்பை விட்டு

 • சாதி ஒழிப்பை பற்றியும்
 • விதவைகளை, தாமாக தப்பு செய்யாதவர்களையும் புறக்கணிக்காத சமூகத்தை உருவாக்கவும் போதியுங்கள்....

விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்த வரை கள்வர்களும் இல்லை. பாலியல் வல்லுறவுகளும் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம்பெற்ற ஒன்றிரண்டுக்கும் தண்டனை வழங்கப்பட்டது.

எனவே மேலைத்தேய கலாசாரத்தை எம் கலாச்சாரத்திற்குள் புகுத்துவதை விடுத்து தமிழர்களுக்கென்று ஒரு தலைமையை உருவாக்கவும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தவும், இராணுவத்தினரையும் ஒட்டுக்குழுக்களையும் வடக்கு,கிழக்கிலிருந்து அகற்றும் வழிமுறைகளுக்கும் உதவுங்கள்.

Edited by காதல்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பயிர் பாதுகாப்பாக இருக்க வேலி முக்கியம். ஈழத்தில் கலாச்சாரச் சீரழிவுக்கு இலங்கை இராணுவமும் ஒட்டுக் குழுவும்தான் காரணம். முதல் இவர்களைக் கட்டுப்படுத்துங்கள். அதன்பின் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசுங்கள். ஒரு நாட்டில் அடக்குமுறை ஆட்சியின்போது அபலைப் பெண்கள் படும்பாடு என்ற தலைப்பில் முதல் எழுதுங்கள். அதன்பின்பு தமிழ்பெண்களை பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கப் படும் பாடு என்று எழுதுங்கள் அதன்பின் வேதாந்தம் பேசலாம்.

Share this post


Link to post
Share on other sites

எனது பாலர்வகுப்பு அறிவுக்கு விளங்கினது என்ன என்றால்?

கலாச்சார என்ற மாய உறையை கழட்டிவிட்டு.பாதுகாப்பான உடலுறவுக்கு தேவையான ஆண் உறையை பாவிக்கவும் என்பது தான் கதையின் கருத்து?

Share this post


Link to post
Share on other sites

திருமணம் செய்ய இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் புரிந்துணர்வுடன் தங்கள் மனதைப் பரிமாறிக்கொள்ள,தங்களின் ஆசைகள் எதிர்பார்ப்புகள் கனவுகள் ஒத்துப்போகும் வகையில் துணையை தெரிவு செய்ய, நின்று நிதானித்து வாழ்க்கை முழுவதும் கூட வரும் அன்பை மட்டும் நேசிக்கும் புரிந்துணர்வான உறவை கண்டு பிடிக்க, வெள்ளைகளுக்கு உதவும் டேட்டிங்கைப் போல் எங்களுக்கு என்ன இருக்கிறது..? எம் சமூகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நட்பாகப் பழக முடியாது...பழகினால் அவர்களைத் தீண்டத்தகாதவ்ர்களாகப் பார்ப்பது...காதல் செய்ய முடியாது..செய்தால் அங்கும் அடக்குமுறை..சமுக விரோதி போல் காதலிப்பவர்களைப் பார்க்கும் பிற்போக்கு நோய் முற்றிய மனநிலை...பேசாமல் அம்மா,அப்பா காட்டிற மனித உருவத்தை மட்டும் கட்டிவிட்டு பொத்திக் கொண்டு எங்கடை கனவுகளைப் புதைத்து விட்டு வாறவர்களுக்கு ஏற்ற மாதிரி எங்கடை வாழ்க்கையை நாங்களே எரித்துவிட்டு சமூகத்தில் வெளிக்கு சிரித்தபடி வாழவேண்டும் என்ற ஒருவித தனிமனித அடக்குமுறைச் சிந்தனைகளே எங்கட சமூகத்தின் வேர்களில் இருத்து கொபபுக்கள் வரை விஷமாகப் பரவிக்கிடக்கின்றன..எம்முடைய வாழ்க்கையை நாம் தீர்மானிக்கும் சுதந்திரம் இல்லையென்றால் எப்படிப்பட்ட அடக்குமுறையை மேற்கொள்ளும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம்..?இந்த சமுகம் இறுக்கமாக கட்டி வைத்திருக்கும் சாதி,மத பிற்போக்குத்தனங்கள் உடைந்து விடுமே என்ற பயத்தில் இப்படி ஏதாவது பேசினாலே காட்டுக் கூச்சல் போட்டு கலாச்சாரம் அழிகிறதென்கிறது...இல்லாத கற்புக்கு காவடி எடுக்கிறது...பெண்களை சிந்திக்கவிடாமல் அடுப்படிக்குள் அடக்கிவிடுகிறது..மாற்றத்தை விரும்பும் ஆண்களை சமுகத்துரோகிகளாக முத்திரை குத்துகிறது...இவை எல்லாத்திற்கும் அடிப்படைக் காரணம் எம் பிற்போக்கு சமூகத்தின் இருப்புக்கு தூண்களாக இருக்கும் ஜாதியும் மதமும் உடைக்கப்பட்டு இனம் வேற்றுமைகள் அற்ற சமதரை ஆக்கப்பட்டுவிடுமோ என்கிற பயம்...

Edited by சுபேஸ்
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

சுபேஸ்.. இப்ப உங்களுக்கு கல்யாணம் வேணுமா வேண்டாமா? :D:lol:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சுபேஸ்.. இப்ப உங்களுக்கு கல்யாணம் வேணுமா வேண்டாமா? :D:lol:

நீங்கள் மெயின் சுவிச்சை ஆப் பண்ணப் பார்க்கிறீர்கள்.. :lol:

Share this post


Link to post
Share on other sites

நட்புடன் யாழ் கள நண்பர்களுக்கு...

உங்கள் நேர் மறை மற்றும் எதிர் மறை கருத்துக்களுக்கு நன்றிகள்....

ஒவ்வொருவருக்கும் தனிப்பட கருத்துப் பதிவு செய்ய முடியாமைக்கு வருந்துகின்றேன்....

முதலாவது இக் கட்டுரை அல்லது விவாத்திற்கான உரையடாலானது பெண்களின் நிலையிலிருந்து அவர்களின் பார்வையிலிருந்து பார்க்கும் பொழுது எங்களுக்கு இன்னுமொரு பார்வையைத் தரும்...

ஆண் பார்வை இன்னுமொரு பார்வையைத் தரும்....

ஆகவே நாம ;எந்த நிலையிலிருந்து பார்க்கின்றோம் என்பதற்கமைய இதன் மீதான நமது கருத்துக்கள் வெளிவரும் என்பதையும் கண்கில் எடுங்கள்....

இரண்டாவது கருக்கலைப்பு செயவதனால் மட்டுமல்ல கருத்தடை மாத்திரைகளும் பெண்களுக்கு பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துக் கூடியவையே...

இவை சட்ட ரீதியாக அமுலிலிருக்கும் நாடுகளிலையெ பெண்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பொழுது...

கருக்கலைப்பு சட்டரீதியாக இல்லாத் நாடுகளின் பெண்களுக்கு ஏற்படும் நிலைமையைக் கவனத்தில் எடுக்கவேண்டும்....

இது தொடர்பான புள்ளிவிபரங்களை யாரும் தேடி எடுக்கலாம்...

என்னால் முடிந்த்◌ால் அதையும் ஒரு கட்டுரையாக கொண்டுவரும் நோக்கம் உள்ளது....

காமத்தை நாம் ஒருவருமே அடக்கமுடியாது...ஏதொ ஒரு வழியில் அதை வெளியேற்றத்தான் வேண்டும்...மீறி அடக்கினால் மனநோய் ஏற்படுவதை தவிர்கக முடியாது....ஆகவோ காமத்தை ஆரோக்கியமான வழிகளில் பயன்டுத்து வேண்டும்.....

வெறுமனே பிறர் மீது மட்டும் இதற்கான காரணங்களை சுமத்தி விட்டு இருப்பதால் இவ்வாறன பிரச்சனைகள் நமது சமூகத்தில் தீர்ந்து விடப்போவதில்லை....

கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்ட படி நமது கலாசரம் பண்பாடு என்பவற்றில் நேர் மற்றும் எதிர் மறை பண்புகள் இருக்கின்றன..

ஆண்களினது மட்டுமள்ள பெண்களினதும் வளமான சுதந்திரமான வாழ்வுிற்கு எவ்வாறு இந்த எதிர் மறைப் பண்புகளை எதிர் கொண்டு நேர் மறை பண்புகளை வளர்த்துச செல்வது என்பது தொடர்பாக நாம் சிந்திக்கவேண்டும் கலந்துரையாட வேண்டும் ...அதன் வழி செயற்படவேண்டும்....

நன்றி மீண்டும ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கும் வரை....

நட்புடன் மீராபாரதி

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படியான ஆராச்சிகளில் ஈடுபட பலதுறை நிபுணத்துவம் வேண்டும். தனது அந்த துறை படிப்பு, அனுபவம் இரண்டையும் காட்டி எழுதாத கட்டுரைகள் அதிகார பூர்வமானதாக கவனிக்கப்படமாட்டா. பல்லின பண்பாட்டு மக்கள் வாழும் சமுதாயம் என்பதால் பாலியல் என்பது ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பு. தொழிழ்த்துறை ரீதியாக தெரிவு செய்யப்படுவோர் பண்பாடுகள் தொடர்பில் ஆழமான உணர்வுகளை வெளிக்காடவேண்டும். சர்ச்சையை தூண்டும் விதத்தில் தலைப்புகள் தொழில்துறைரீதியாக பாவிக்க முடியாது. உள்ளடக்கம் இடத்துக்கிடம் வாழும் மக்களைப் பொறுத்து மாறுபடும்; அதோடு எப்போதும் அந்த பகுதி மக்கள் வாழும் பண்பாட்டுடன் கைகோத்து அதற்கு துணையாக போகுமே தவிர பண்பாட்டை தாக்க முயலாது.

நமது மக்களுக்கு இப்படி ஒரு உபதேசம் தேவையா என்பது கேள்வியே. காட்டுரையே கூறுகிறது, புலம் பெயர் மக்கள் தங்கள் பிள்ளைகள் விடையத்தில் மிரண்டு பிடிப்பதில்லை என்று. இது புலம் பெயர் இடங்களுக்கான கட்டுரையாயின் அதுவே போதும் பிரச்சனை எழாத ஒரு விடயத்திற்கு போட்ட உழைப்பை, தீர்க்க முடியாமல் அல்லல் படும் எத்தனையோ பிரச்சனைகளில் ஒன்றில் போட்டிருக்கலாமே என்று கூற.

மேலைநாட்டவரின் இத்தகைய கல்வி ஒரு பரிணாம வளர்ச்சியானல் அவர்கள் அடைந்ததொன்று. அவர்களின் பெண்களின் அரசியல் சுதத்திரத்தை காப்பாற்றும் அத்திவாரம். உற்றுப்பார்த்தால் தெரியும் நம் தேசங்கள் பெண்கள் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதில்லை. அமெரிக்கா 50 வருடங்களுக்கு முன் சந்திரனுக்கு போயிருக்கலாம், ஆனால் நம் நாட்டுப்பெண்தான் சந்திரனில் போய் அரி கொண்டுவருவதாக கூறி பிரதமர் பதவிகள் பெற்ற முதல் பெண் பிரதமர். அமெரிக்காவால் இதை எப்போ செய்ய முடியும் என்பது தெரியாது. மேலும் பார்த்தால் பாலியல் கல்வி சம்பந்தமாக புத்தம் எழுதி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முனிவர் நிலையை அடைந்தவர் நம் சமூகத்திய வத்வாசனர். சயங்கொண்டார் கலிகத்துபரணியை சபையோர் முன் படித்துக்காட்டி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் விளக்கமும் கொடுத்து கவிச்சக்கரவர்த்தி பட்டம் பெற்றுக்கொண்டவர். இவர்களில் ஒருவரும் நம் பண்பாட்டை பார்த்து பல்லைக்காட்டவில்லை. நாமும் அவர்களை ஒதுக்க்காததால் அவர்களின் புத்தகங்கள் இப்போதும் நம்மிடம் உண்டு. கண்ணன் கூறியதாக பகவத்கீதையை பாடிய திராவிட புலவன் வியாசர், எமது மன நிலையை நன்கு சித்தரிக்கிறார். அதாவது வாழ்நாள் முழுவதும் தனது எதிரிகளாக நினத்து வளந்தவர்கள், போர்களத்தில் வந்து நிற்க, அரிச்சுனன் அவர்களை தன் உறவினர்களாக கூறி கொலை செய்ய மறுக்கிறான். உண்மைகளை உணர்த்த கடமையாக கொலை செய்கிறான். இப்படி பல கதைகளை நான் காட்ட முடியும். இது சரியுடன் ஒத்துபோகும் பண்பாடு. ஆனால் தாயாயினும் தவறு செய்தால் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது இயேசு கிறிஸ்த்து காலம் தொடக்கம் இருக்கும் மேலைய நாட்டைய வழமை. கலிலியோ விஞ்ஞானத்தை சொன்னதிற்கு கொலை தண்டனை பெற்றவர். இவர்கள் ஜனநாயக வளர்ச்சி காணும் போது பெண்விடுதலைக்கு பாலியல் கல்வி அவசியம். நமக்கும் அதுவேதான் மருந்தா என்பதை, உண்மை அறிவின்றி, மேலை நாட்டு எழுத்துக்களை வெட்டி ஒட்ட முயலும் விற்பணர்கள் சிந்திக்க வேண்டும். நாம் மனு நீதியாலும், சிபியாலும், மெய்பொருள் நாயனாராலும் ஆளப்பட்டவர்கள். நமக்கு ஜனநாயகம் புரட்சியாலும் வரவில்லை, பரிணாம வளர்ச்சியாலும் வரவில்லை. அது நம்முடன் கூடப்பிறந்ததொன்று.

தாயகத்தில் கதையே வேறு. அவர்களிடம் மானத்தை இலகுவாக விட்டுவிடுங்கள். அல்லது உறையை போட்டுக்கொள்ளுங்கள் என்பதை கூறலாம். ஆனால் அவர்களால் உயிரை இலகுவாக விட்டு விட முடியுதில்லையே. உடல் கிடந்து தவிக்கும் வேதனைக்கு போட்டுகொள்ள உறை ஒன்றை தேடிக்கொள்ள முடியுதில்லையே. பின்னர் யாரை நோக்கி இந்த போதனை எல்லாம்.

நமது நிபுணத்துவங்கள் வேறேதோவாகிலும் இவர்களுக்கு பாலியல் கல்வி தெரியாது என்பதை காட்ட எங்களுக்கு ஒரு கட்டுரை மட்டும் போதும். ஆனால் இவர்கள் அப்படி இலகுவாக ஓட்டிக்கலைத்துவிட ஒடவென்று யாழ் வந்தவர்கள் அல்ல. இவர்களுக்கு இந்த கட்டுரையை யாழில் பதிய முதலே தெரியும் யாழில் இருந்து கிடைக்க போகும் பதில்களை. அதற்கு ஏற்ற ஆயத்தங்களை செய்துகொண்டுதான் இவர்கள் யாழில் வந்து புகுந்தவர்கள். அதாவது தங்கள் வெட்டி ஒட்டுதலில் ஒரு பகுதியை மட்டுமேதான் இங்கே காட்டியிருக்கிறார்கள். மேலும் தங்கள் குழப்பல் நிபுணத்துவத்தின் ஒரு தலையை மட்டும் தான் இப்போ காட்டியிருக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும், சமயம், கல்வி, பண்பாடு, தத்துவம், அரசியல், போராட்ட மன உறுதி என்று பலவற்றை சிதைக்க நீண்ட நாளைய திட்டத்துடன் தான் இவர்கள் இங்கே அனுப்பட்டிருக்கிறார்கள். நிர்வாகத்திற்கு இதில் ஒருவித ஆயுதமும் கையில் இல்லை. ஆனால் உறவுகள் ஒருவரை ஒருவர் பச்சைகுத்தி குழப்புவதை நேரத்திற்கு எடுத்துவிட்டார்கள். அதாவது உறவுகள் பச்சை சிறையில் இப்போது இல்லை. தெளிந்த மனத்துடன் தங்கள் கருத்துகளை எழுத்தி தங்களைத்தாங்கள் மூளை சலவைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளட்டும்.

Edited by மல்லையூரான்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கனடாவில் நடந்த விவாதம் ஒன்று டேற்றிங் அவசியமா -சொல் அரங்கம்

இதில் அந்த காலத்து பிரபல விலங்கியல் ஆசிரியரும் முன்னாள் மகாஜனா கல்லூரி அதிபருமான கனகசபாபதியும் இவ்விவாதத்தில் பங்கு கொள்ளுகிறார்

Edited by stalin

Share this post


Link to post
Share on other sites

நமது நிபுணத்துவங்கள் வேறேதோவாகிலும் இவர்களுக்கு பாலியல் கல்வி தெரியாது என்பதை காட்ட எங்களுக்கு ஒரு கட்டுரை மட்டும் போதும். ஆனால் இவர்கள் அப்படி இலகுவாக ஓட்டிக்கலைத்துவிட ஒடவென்று யாழ் வந்தவர்கள் அல்ல. இவர்களுக்கு இந்த கட்டுரையை யாழில் பதிய முதலே தெரியும் யாழில் இருந்து கிடைக்க போகும் பதில்களை. அதற்கு ஏற்ற ஆயத்தங்களை செய்துகொண்டுதான் இவர்கள் யாழில் வந்து புகுந்தவர்கள். அதாவது தங்கள் வெட்டி ஒட்டுதலில் ஒரு பகுதியை மட்டுமேதான் இங்கே காட்டியிருக்கிறார்கள். மேலும் தங்கள் குழப்பல் நிபுணத்துவத்தின் ஒரு தலையை மட்டும் தான் இப்போ காட்டியிருக்கிறார்கள் என்றும் எடுத்துக்கொள்ள வேண்டும், சமயம், கல்வி, பண்பாடு, தத்துவம், அரசியல், போராட்ட மன உறுதி என்று பலவற்றை சிதைக்க நீண்ட நாலைய திட்டத்துடன் தான் இவர்கள் இங்கே அனுப்பட்டிருக்கிறார்கள்.

.

இதுதான் நோக்கம்.

ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படும் மக்களுக்கு தேவை பாலியல் கல்வி அல்ல, ஒரு கப் பால்

Share this post


Link to post
Share on other sites

திருமணம் செய்ய இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் புரிந்துணர்வுடன் தங்கள் மனதைப் பரிமாறிக்கொள்ள,தங்களின் ஆசைகள் எதிர்பார்ப்புகள் கனவுகள் ஒத்துப்போகும் வகையில் துணையை தெரிவு செய்ய, நின்று நிதானித்து வாழ்க்கை முழுவதும் கூட வரும் அன்பை மட்டும் நேசிக்கும் புரிந்துணர்வான உறவை கண்டு பிடிக்க, வெள்ளைகளுக்கு உதவும் டேட்டிங்கைப் போல் எங்களுக்கு என்ன இருக்கிறது..? எம் சமூகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நட்பாகப் பழக முடியாது...பழகினால் அவர்களைத் தீண்டத்தகாதவ்ர்களாகப் பார்ப்பது...காதல் செய்ய முடியாது..செய்தால் அங்கும் அடக்குமுறை..சமுக விரோதி போல் காதலிப்பவர்களைப் பார்க்கும் பிற்போக்கு நோய் முற்றிய மனநிலை...பேசாமல் அம்மா,அப்பா காட்டிற மனித உருவத்தை மட்டும் கட்டிவிட்டு பொத்திக் கொண்டு எங்கடை கனவுகளைப் புதைத்து விட்டு வாறவர்களுக்கு ஏற்ற மாதிரி எங்கடை வாழ்க்கையை நாங்களே எரித்துவிட்டு சமூகத்தில் வெளிக்கு சிரித்தபடி வாழவேண்டும் என்ற ஒருவித தனிமனித அடக்குமுறைச் சிந்தனைகளே எங்கட சமூகத்தின் வேர்களில் இருத்து கொபபுக்கள் வரை விஷமாகப் பரவிக்கிடக்கின்றன..எம்முடைய வாழ்க்கையை நாம் தீர்மானிக்கும் சுதந்திரம் இல்லையென்றால் எப்படிப்பட்ட அடக்குமுறையை மேற்கொள்ளும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம்..?இந்த சமுகம் இறுக்கமாக கட்டி வைத்திருக்கும் சாதி,மத பிற்போக்குத்தனங்கள் உடைந்து விடுமே என்ற பயத்தில் இப்படி ஏதாவது பேசினாலே காட்டுக் கூச்சல் போட்டு கலாச்சாரம் அழிகிறதென்கிறது...இல்லாத கற்புக்கு காவடி எடுக்கிறது...பெண்களை சிந்திக்கவிடாமல் அடுப்படிக்குள் அடக்கிவிடுகிறது..மாற்றத்தை விரும்பும் ஆண்களை சமுகத்துரோகிகளாக முத்திரை குத்துகிறது...இவை எல்லாத்திற்கும் அடிப்படைக் காரணம் எம் பிற்போக்கு சமூகத்தின் இருப்புக்கு தூண்களாக இருக்கும் ஜாதியும் மதமும் உடைக்கப்பட்டு இனம் வேற்றுமைகள் அற்ற சமதரை ஆக்கப்பட்டுவிடுமோ என்கிற பயம்...

உங்கள் கருத்துப்படி டேடிங் வேலை செய்யுது என்றால் ஏன் மேற்கத்தவரிடையே மிக அதிகளவில் விவாகரத்து இருக்கின்றது ? டேடிங் மூலம் சரியான துணையை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியாதுள்ளது என்றல்லவா ஆகின்றது.

கலப்புத் திருமணங்கள் (சாதி , மத) நம்மவரிடையே நெடுங்காலமாகவே நடக்கிறது. அவர்கள் இதை டேடிங் செய்தா நடத்துகிறார்கள் / நடத்தினார்கள் ? :D

ஒருவனை ஒருத்தி புரிந்து கொள்வதென்பது நீண்டகாலம் எடுக்கிற விசயம். ஏன் ஒரு வாழ்க்கைக் காலமே எடுக்கலாம். ஒரு குட்டி / மீடியம் டேடிங்க செய்து போட்டு களத்தில இறங்கினா... :huh:

இதுக்குத்தான் எங்கட ஆக்கள் சம்பந்தி, சகலை என்று உறவுப்பட்டாளத்தையும் சடங்கு சம்பிரதாயம் என்று முறைகளையும் உருவாக்கி தம்பதிகளை சமுதாயத்தோட செர்த்து இழுத்துக் கொண்டு போகிறார்கள். புலத்தில் இது இல்லையாகையால் நம் தம்பதிகளிடேயும் விரிசல் ஏற்படுகிறது.

அப்பா, அம்மா சொல்லும் பையனைக் கண்ணைமூடிக் கொண்டு கல்யாணம் செய்து சட்டி கழுவ வேண்டும் என்ற காலம் மலையேறிவிட்டது. பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளை மாரில் தனக்குப் பொறுத்தமானவரை பெண் தெரிவு செய்கிறாள். பையனும் அதையே செய்கிறான். அவர்கள் கதைத்துப் பார்க்கிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites

திருமணம் செய்ய இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் புரிந்துணர்வுடன் தங்கள் மனதைப் பரிமாறிக்கொள்ள,தங்களின் ஆசைகள் எதிர்பார்ப்புகள் கனவுகள் ஒத்துப்போகும் வகையில் துணையை தெரிவு செய்ய, நின்று நிதானித்து வாழ்க்கை முழுவதும் கூட வரும் அன்பை மட்டும் நேசிக்கும் புரிந்துணர்வான உறவை கண்டு பிடிக்க, வெள்ளைகளுக்கு உதவும் டேட்டிங்கைப் போல் எங்களுக்கு என்ன இருக்கிறது..? எம் சமூகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நட்பாகப் பழக முடியாது...பழகினால் அவர்களைத் தீண்டத்தகாதவ்ர்களாகப் பார்ப்பது...காதல் செய்ய முடியாது..செய்தால் அங்கும் அடக்குமுறை..சமுக விரோதி போல் காதலிப்பவர்களைப் பார்க்கும் பிற்போக்கு நோய் முற்றிய மனநிலை...பேசாமல் அம்மா,அப்பா காட்டிற மனித உருவத்தை மட்டும் கட்டிவிட்டு பொத்திக் கொண்டு எங்கடை கனவுகளைப் புதைத்து விட்டு வாறவர்களுக்கு ஏற்ற மாதிரி எங்கடை வாழ்க்கையை நாங்களே எரித்துவிட்டு சமூகத்தில் வெளிக்கு சிரித்தபடி வாழவேண்டும்

இதுதான் எனது கேள்வியே ஈசன்...டேட்டிங்கின் சரி பிழைகளுக்கு அப்பால் வெள்ளைகளுக்கு உதவும் டேட்டிங்கைப் போல் எங்களுக்கு என்ன இருக்கிறது என்பதுதான் எனது கேள்வியே...நல்ல துணையைத் தேர்ந்தெடுக்க சமுகம் ஏதாவது ஒரு வழியில் நமக்கு சந்தர்ப்பம் தந்திருக்கிறதா...? அம்மா அப்பா காட்டுற அந்த வட்டத்துக்குள்ள இருக்கிற பத்துப் பதினைஞ்சு போட்டோவிலை ஒண்டை பாத்து பேசாமல் கட்டிட்டு பொத்திக் கொண்டு பிள்ளைகள் போகவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது உங்கள் கதை...ஆகா...நல்ல அடக்கு முறையான சமூகம்...இவையும் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் இந்த பிற்போக்கு சமுகத்தின் இன்னொரு வித தனி நபர் சுதந்திரத்தை அடக்கும் வடிவமே...

அப்பா, அம்மா சொல்லும் பையனைக் கண்ணைமூடிக் கொண்டு கல்யாணம் செய்து சட்டி கழுவ வேண்டும் என்ற காலம் மலையேறிவிட்டது. பெற்றோர் சொல்லும் மாப்பிள்ளை மாரில் தனக்குப் பொறுத்தமானவரை பெண் தெரிவு செய்கிறாள். பையனும் அதையே செய்கிறான். அவர்கள் கதைத்துப் பார்க்கிறார்கள்.

இதை வாசிக்க நல்லா இருக்கு...ஆனால் நடைமுறைக்கு...? ஜயா...!கலியாணம் முடியும் வரைக்கும் பொண்ணு வீட்டு ரோட்டுப்ப் பக்கம் போனாலே ஒரு மாதிரிப் பார்க்கிறார்கள் :blink: ...இதுக்குள்ள எங்கை பொண்ணும் பையனும் கதைச்சுப் பேசி காமடி எல்லாம் பண்ணுறதாம்...? :D நீங்க வேற வயித்தெரிச்சலைக் கிளப்பிக்கொண்டு.... :D

கலப்புத் திருமணங்கள் (சாதி , மத) நம்மவரிடையே நெடுங்காலமாகவே நடக்கிறது. அவர்கள் இதை டேடிங் செய்தா நடத்துகிறார்கள் / நடத்தினார்கள் ?

அடிபட்டு,பலி கொடுத்து,ஊரால் ஒதுக்கப்பட்டு,எவ்வளவு போராடி அவர்கள் வீதியில் மனிதர்களாக உலாவ வேண்டி இருக்கிறது...அப்படியானால் நாகரீகத்தில் வெள்ளைகளுடன் நாங்கள் எங்கே நிற்கிறோம்..? :(

இதுக்குத்தான் எங்கட ஆக்கள் சம்பந்தி, சகலை என்று உறவுப்பட்டாளத்தையும் சடங்கு சம்பிரதாயம் என்று முறைகளையும் உருவாக்கி தம்பதிகளை சமுதாயத்தோட செர்த்து இழுத்துக் கொண்டு போகிறார்கள். புலத்தில் இது இல்லையாகையால் நம் தம்பதிகளிடேயும் விரிசல் ஏற்படுகிறது.

ஓமோம்...பிடிச்சுதோ பிடிக்கேல்லையோ,அல்லது வேறை யாரையும் மனதார விரும்பினால் கூட பிரித்துக் கொண்டு வந்து ஒருத்தனை/ஒருத்தியை சாதி,சமய வட்டத்துக்குள்ள திருமணம் செய்துவைத்து முட்டாள் தனங்களையும் சேர்த்து சீதனங்களுடன் கட்டி சமுதாயம் இருக்கும் அதே சாக்கடைக்குள் திரும்பவும் தள்ளிவிடுகிறார்கள்...

ஒருவனை ஒருத்தி புரிந்து கொள்வதென்பது நீண்டகாலம் எடுக்கிற விசயம். ஏன் ஒரு வாழ்க்கைக் காலமே எடுக்கலாம். ஒரு குட்டி / மீடியம் டேடிங்க செய்து போட்டு களத்தில இறங்கினா...

அதைத்தானே நானும் சொல்லுகிறான்...அம்மா அப்பா காட்டுறவனை/வளை கட்டினால் மட்டும் எப்படி நீண்டகாலம் எடுக்காமல் புரிந்துணர்வு வருமாம்...? டேட்டிங்கில் நீண்டகாலம் எடுத்து பேசிப் பழகி பிடித்தால் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது விலகிக் கொள்ளலாம்...அம்மா அப்பா காட்டுறவர்களைக் கலியாணம் செய்து விட்டு பிடிக்கவில்லையெனில் கோட்டுப் படிகளில்தான் காலத்தை ஓட்டவேண்டும்...எனவேதான் மீராபாரதி சொன்னதுபோல் டேட்டிங் செய்வதையும் நாங்கள் தப்பாகப் பார்க்கும் பார்வையை விலத்திக் கொள்ளவேண்டும்..சமுகத்திற்கு ஆகாதது என்ற கற்பனைக் கதைகளை விடுத்து மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்...பெற்றோரின் விருப்பத்துக்கு பேசித் திருமணம் செய்யும் முறையைப் போல் பிள்ளைகளின் விருப்பத்துக்கு திருமணம் செய்யும் டேட்டிங்கையும் அங்கீகரித்து எமது சமூகத்துள் உள்வாங்கிக் கொள்வோம்...எதைத் தேர்ந்தெடுப்பது என்பது தனிப்பட்டவர்களின் முடிவு...ஆனால் எமது சமுகத்தில் ஒருவர்(பிள்ளையாக இருந்தாலும்) இந்த வளியில் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்தால் அங்கீகரிப்போம்..அதிலிருந்தே சமூக மாற்றம் ஆரம்பிக்கும்..

Edited by சுபேஸ்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இதை தொடங்கும்போதே எதிர்பார்த்தேன்.

எழுதியவர் காணாமல் போக நாம் நின்று அடிபடுவோம் என.... :(

Share this post


Link to post
Share on other sites

இதை தொடங்கும்போதே எதிர்பார்த்தேன்.

எழுதியவர் காணாமல் போக நாம் நின்று அடிபடுவோம் என.... :(

:rolleyes: திரி போட்டு பற்ற வைத்துவிட்டு நித்தா கொள்ளப் போயிட்டார் :rolleyes:

பெறுங்க இன்னுமெருக்கா வந்து தூசி தட்டுவார், அல்லது வேற இடத்தில் பற்ற வைக்கலாம்

நேற்று வந்தவர்

Share this post


Link to post
Share on other sites

.

மேற்கொண்டு விவாதிக்கமுன்.. ஒரு கேள்வி சுபேஸ்.

உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சா இல்லையா ? :D

ஏன் கேக்கிறேன் என்றால், பதில்களைப் பார்க்கும்போது கல்யாண பேசும் போதுள்ள நிகழ்வுகளில் அனுபவம் இல்லாத மாதிரிப்படுகிறது. கல்யாணத்திற்குப் பின்னான வாழ்க்கையிலும் அனுபவம் இல்லாத மாதிரிப் படுகிறது. ஒரு விசயத்தை இலகுவாக விளங்கிக் கொள்வதற்கு அனுபவம் கைகொடுக்கும். :icon_idea:

ஒரு விசயத்தை நாமே ஆசிரியர் துணையின்றிப் படிக்கலாம். அல்லது நன்கு அனுபவம் மிக்க ஆசிரியரிடமும் படிக்கலாம்.

முதலாவது முறையில் நாம் நிறைய அடி வாங்க வேண்டி வரும். இரண்டாம் முறையில் ஃபெயில் ஆகுவதைக் குறைக்கலாம்.

நம்முடைய பெரிசுகள் திருமண வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அதில் உள்ள இடக்கு முடக்குகளை நன்கு அறிந்தவர்கள். அனுபவம் மிக்கவர்கள். இவர்களிடம் திருமணப் பொறுப்பை ஒப்படைக்கலாம். அல்லது நாங்களே அனுபவமிக்க ஆசிரியர் துணையின்றி முயற்சித்தும் பார்க்கலாம்.

ஆண் பெண் உறவுகளில் ஒரு சமச்சீர் அற்ற‌ தன்மை இருக்கிறது. இது நாகரீகத்தில் முன்னேறிய மேற்கிலும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இயற்கை. உதாரணமாக ஆண் கருத்தரிப்பதில்லை. இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம். இங்கு கவனிக்க வேண்டிய விசயம், இந்த சமச்சீர் அற்ற‌ தன்மை காரணமாக பலவீனமான பகுதியாக‌ பெண் இருக்கிறாள். சமுதாயத்தில் பலவீனர்கள் பாதுகாக்கப் பட வேண்டியவர்கள்.

டேடிங்கில் உள்ள குறைகளை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். பேச்சுத் திருமணத்தில் உள்ள நன்மைகளையும் சுட்டிக் காட்டியுள்ளேன். இதில் பெண் எப்படிப் பாதுகாக்கப் படுகிறாள், அவளின் கௌரவமான நிலை எப்படிப் பேணப்படுகிறது என்பதையும் சொல்லியிருக்கிறேன்.

ஒரு தீர்மானம் ஒன்றை எடுக்கும் போது அதில் உள்ள நன்மைகளையும் அதனால் ஏற்பட கூடிய இழப்புகளையும் ஒப்பிடுவார்கள். டேடிங் இல் பெண் பலவற்றை இழக்க வேண்டி வரும். அவளால் நன்மை என்று சொல்லக் கூடியது தனது துணையை தானே தெடிக்கொள்ளும் சுதந்திரம் என்ற ஒன்றுதான். ஆனால் டேடிங் நடைமுறையில் உள்ள மேற்கில் உண்மையில் தனக்குப் பொறுத்தமான துணையை பெண் தேடிக் கொள்கிறாளா என்றால்..தகவல்களும், விவாக‌ரத்துப் புள்ளி விபரங்களும் இல்லையேன்றே சொல்கின்றன. மேற்கின் பெண்கள் தமது இளமையின் கடைசிப் பகுதியில் வேறு வழியின்றியும், ஒரு துணை வேண்டுமே என்றும் இணைகிறார்கள். ஆகவே பல மினுக்கங்களைக் காட்டிய டேடிங் உண்மையில் செய்வது என்ன ?

மேற்கின் டேடிங் உண்மையில் திருமணத்தை மாத்திரம் நோக்கியது அல்ல. அதில் பல பேருடன் உடல் உறவு வைத்துக் கொள்ளும் நோக்கம் கணிசமான அளவு இருக்கிறது. "திருமணம் செய்யப் போகிறீர்களா ? " என்றால் இலையென்பார்கள். சோடிகளை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள்.

கௌரவமான, பாதுகாப்பான நிலையில் இருக்கும் நம் பெண்கள் இப்படியான ஒரு நிலைக்கு இறங்கி வரத்தான் வேண்டுமா ?

நான் காதலை எதிர்க்க வில்லை.

Share this post


Link to post
Share on other sites

.

மேற்கொண்டு விவாதிக்கமுன்.. ஒரு கேள்வி சுபேஸ்.

உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சா இல்லையா ? :D

திருமணம் முடித்தவர் என்றால் தப்பினார்.

அல்லது இனி பெடியனுக்கு கலியாணம் பேசுபவர்கள் கொஞ்சம் யோசிப்பார்கள். :D

Share this post


Link to post
Share on other sites