சுபேஸ்

அடுத்து பஞ்ச பாண்டவர்களின் மனைவியாக நயன்தாரா

Recommended Posts

ராமனின் மனைவி சீதையாக நடித்த நயன்தாரா, தற்போது பஞ்ப பாண்டவர்களின் மனைவி திரவுபதி வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்தார் நயன்தாரா.

nayanthara_008.JPGஅவர் இந்த வேடத்தில் நடிக்க வரும்போதே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒரு பெண்ணிடமிருந்து அவரது கணவரைக் கவர துடிக்கும் நயன்தாரா சீதை வேடத்தில் நடிப்பதா என்பதே பலரின் எதிர்ப்புக்கு காரணம்.

இருந்தாலும் தெலுங்குப் பட நாயகன் என்.டி.ஆர் பாலகிருஷ்ணா அதைப் பொருட்படுத்தாமல் நயன்தாராவை சீதையாக நடிக்க வைத்தார். படமும் வெளியாகி தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சீதைக்குத் தான் செம வரவேற்பு.

இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போன பாலகிருஷ்ணா மறுபடியும் நயன்தாராவை வைத்து இன்னொரு படம் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த முறை நயன்தாராவை திரவுபதியாக்கப் போகிறாராம் பாலு. பல வருடங்களுக்கு முன்பு திரவுபதி கதையை படமாக்க முடிவு செய்திருந்தார் இவர்.

அந்த வேடத்தில் மறைந்த நடிகை செளந்தர்யாவை நடிக்க முடிவு செய்து படமும் தொடங்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக செளந்தர்யா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் படத்தை கைவிட்டார் பாலகிருஷ்ணா.

தற்போது நயன்தாராவின் அபாரமான நடிப்பால் அசந்து போய் விட்ட பாலகிருஷ்ணா, அவரையே திரவுபதி வேடத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். இதுதொடர்பாக நயன்தாராவிடம் பேசியுள்ளாராம். அவரும் சம்மதிப்பார் என்று தெரிகிறது.

படத்திற்கு நர்த்தன சாலா என்று பெயரிட்டுள்ளார் பாலகிருஷ்ணா. நயன்தாரா சரி என்று சொன்னதும், படப்பிடிப்பை தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம் பாலகிருஷ்ணா.

______________________________________________________________________________

இப்பதான் நயன்தாராவுக்கு சரியான வேடம் கிடைச்சிருக்கு... :D

Share this post


Link to post
Share on other sites