Jump to content

நான் சாலை மனிதனின் பிரதிநிதி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருபத்திரண்டு வருட சுவிசின் குளிர்கால வாழ்வின் கடினமான சூழலை அன்றுதான் உணர்ந்து கொண்டேன் .

எல்லாத்திசைகளிலும் வெள்ளாடை உடுத்திய விதவை கோலத்தில் வெண்பனி போர்த்திய மரங்கள் .

ஆட மறந்த கிளைகளில் இலைகளுக்கு பதிலாக சூரிய வரவுக்காய்த் தவம்வேண்டிப் பனிப் பறவைகள் குந்தியிருந்தன .

மிகவும் அழகானகாலம் அதையும் தாண்டி நள்ளிரவு நேரம் .குளிர்நிலை பூச்சியம் தாண்டிக் கீழ்பதினைந்தை தொட்டிருந்தது .

எட்டி நடக்கச் சொன்ன கால்களை மறந்து நின்று ரசிக்கச் சொன்னது மனது.கால்களினுடாக குளிர் நெருப்பு மூண்டு மேல் நோக்கி நகர

கால்களிலிருந்த வெயில்காலக் காலணி என் வறுமையை உணர்த்தியது .மூளையின் கட்டளைக்கேற்ப கால்கள் இயங்க மறுத்தன .

சிறு வயதில் மூக்கு வழியத்திரிந்து அம்மா துடைத்துவிட்ட ஞாபகம் .

இப்போது மூக்கால்வழிவதை உணர முடியாத குளிரும் உணரும்போது மூக்குஎங்கே இருக்கிறது எனத் தேட வேண்டிய நிலையுமாய் இருக்க உலகப் பணக்காரர்களின் சொர்க்கபூமி என் நரகபூமியாகியிருந்தது .கால்கள் எட்டி நடக்கநடக்க என் இலக்குத்தூரமாகிக்கொண்டிருப்பதுபோன்றிருந்தது .

வீதியில் வெண்மணலாய் கொட்டியிருந்தபனிவிழுகையுடன் ஓர் வாகனம்பல்லாங்குழியடிக்கொண்டிருக்க நான் தாண்டிநடக்கிறேன் இப்போதுகுளிர்உடலின்முக்கியபகுதியைதாண்டி மேல்நோக்கிநகர்கிறது.

இவ்வேளையில்நம்ஊரின்ரம்பிட்டான்பழத்தின்ஞாபகம்வரஎன்னையறியாமலே நான் சிரித்துக்கொண்டேன் .

நேற்றையவிடுமுறைநாளில் இணையத்தளத்தில் நான் கண்டகாட்சியொன்று மனதுள்வந்தது .

ஐரோப்பியநாகரிகத்தின் பிறப்பிடமாகவும் இன்றைய ஐரோப்பியபொருளாதாரத்தின் இறப்பிடமாகவும் உள்ள கிரேக்கநாட்டின் வீதியொன்றிலே ஓர் சாலைமனிதன் காலணியற்ற கால்களுக்குகழிவுக்காகிதங்களால்கவசமிட்டுபொலித்தீன்பைகளை சுற்றிக்கட்டிக்கொண்டுநடந்துபோனதனை இப்போதுமனதுஉணரும் போதுவலித்தது .

என் கால்களிலிருந்தவெய்யில்காலக் காலணி எனதுகாப்பரனாகதெரிந்தது .

அழகானகுளிர்காலம் ஏழைமக்களுக்கு எவ்வளவுகொடுந்துயரம் என்பதனை அனுபவமே உணர்த்தியது .

சற்றுத்தொலைவில் யாரோ சிரிக்கும் ஒலிகேட்க உற்றுப்பார்த்தேன் .குளிருக்குப்பிறந்த குஞ்சுகள் சிலது

குடிபானவிடுதிஒன்றிலிருந்து வெளியேவந்து பனிப்பந்து எறிந்துவிளையாடிக்கொண்டிருந்தனர் .நான்

அவர்களைத் தாண்டி சென்றாகவேண்டும் .இந்த நேரமும்பிழை' அவர்களின்கோலமும்பிழை 'என் நிறமும் இங்கு பிழை .

என்றாலும் குளிர்விரட்டஓடிக்கொண்டிருக்கும் என்னால் கால்களுக்குதடையிடமுடியவில்லை .

அவர்களை நான்தாண்டும்போது பனிப்பந்துகள்சில என்னையும்தாக்கின .எப்போதும்என்முன்னால்இருக்கும்

இருக்கும்கோபம் எங்கேஎனத்தேடினேன் .குளிருக்குமுன்னால்மண்டியிட்டு காணாமல்போயிருந்தது .

சில அடி தூரம்தாண்டும்போது குளிர்காற்றுஎன் பிடரியில்அறைந்துகாதில்நுழைந்தது அவர்களின் நிறவெறிப்பேச்சுகளை தாங்கி

குளிர்நிறைந்தஇந்தஅழகானகொடுமைக்காலத்தைவிட எங்கள்தேசத்தின் வியர்வைவழியும் கோடைகாலம்எங்கள்

மனப்பறவைக்குஅழகானசிறகுகள் தந்தகாலம்.அதுமுகவரிதொலைத்துவாழும் சாலைமனிதனின்பிரதிநிதியாய் நானும் இக்குளிரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு தமிழ்...ரசிக்க வைக்கும் எழுத்துக்கள்...தொடர்ந்து எழுதுங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னி லிங்கம்

வணக்கம் அனைவருக்கும்.நான் நீண்ட காலயாழ் இணையத்தின் வாசகன்நான் ஆனாலும்தற்போதுதான்புதிதாகஇணைந்துள்ளேன் .

நான் இணைத்த சாலைமனிதனின்பிரதிநிதி க்கு பதில்தந்த அனைவருக்கும் நன்றி .

என்னை வரவேற்றுஏற்றுக்கொண்ட யாழின் உறவுகள்அனைவருக்கும்நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்னி லிங்கம் வாருங்கள்.

ஏற்கனவே இங்குள்ள ஒருவர்தான் புதிய முகமூடியுடன் வருகிறீர்களா அல்லது உண்மையிலேயே யாழில் எழுதிப் பரிச்சயம் இல்லாத புதிய முகமா?

ஏன் கேட்கிறேன் என்றால் பழைய முகங்கள் புதிய வேடம் தரித்தாலும் பற்பல முகங்களின் அலட்டல்கள் தாங்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் புதிதாய் இணைந்தவன் .பழையமுகம் அல்ல . என்னை வரவேற்றதற்கு நன்றி

வல்வை சஹாராவிற்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப மறுக்கிறது மனம், இருப்பினும் நம்ப முயற்சிக்கிறேன்

என்னுடைய பெயர் "சகாறா" அவசியமில்லாமல் வடமொழி எழுத்துக்களை பாவிப்பதைத் தவிர்ப்போமே.... :rolleyes:

திருத்தம் செய்யப்பட்ட காரணம்

எழுத்துப்பிழை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் தவறுக்கு மன்னிக்கவும் சகாறா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்னி லிங்கம் வாருங்கள்.

நான் தற்போது வருபவர்களை வரவேற்பதில்லை. காரணம் அவர்கள் பழையவரே என்பதனால் வந்த ஏமாற்றம்.

ஆனாலும் தங்களது உறுதிமொழிக்காய் வரவேற்கின்றேன்.

நல்ல எழுத்துத்திறமையுள்ளது.

தமிழுக்காய் அதன் உயர்வுக்காய் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குஇங்குயார்பழையவர்என்றோபுதியவர்என்றோதெரியாது.

ஆனால்நான்புதிதாகவந்துள்ளேன்.நீண்டநாட்களாகஅல்ல வருடங்களாக யாழ்இணையத்தினை பார்த்துவருகின்றேன்.

தமிழில்தட்டச்சுசெய்யத்தெரியாததால்காலதாமதமாகஇணைந்துள்ளேன்.எழுதவேண்டும்என்றஆசைநீண்டநாட்களாகஉள்ளதுநண்பர்களே ஆனால்இங்கே மிகச்சிறந்தகருத்தாடுபவர்கள்மத்தியில்

நான் சமுத்திரத்தில்வீழ்ந்தசிறு துளியாய்காணாமல் போய்விடுவேன்என்றபயத்தில்என் எண்ணச்சிறகுகளைகத்தரித்துவைத்திருந்தேன்.

அண்மையில்ஓர் நண்பன்மூலம்தமிழில்எழுதப் பழகினேன்.

முயற்சிக்கிறேன்உறவுகளே' என்எழுத்தின்தவறுகளையும்

கருத்தின்தவறுகளையும்சுட்டுங்கள் சொந்தங்களே.

என் கருத்தாடல்தவறாகிப்போனாலும் என் தமிழாடல் தவறிப் போய்விடக்கூடாதுஎன்ற பயத்தில் எழுதுகிறேன்

என்னைவரவேற்றஅனைவருக்கும் மீண்டுமொருமுறை நன்றி.

முகவரிதொலைத்துவாழும்சாலைமனிதன்

அன்னி லிங்கம்

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் நண்பரே.................

Link to comment
Share on other sites

அல அக்கா உன்க பெயரும் தமிழ் பெயர்இல்ல அக்கா

http://en.wikipedia.org/wiki/Magal

http://www.babynamew...pedia/boy/makal

நன்றி குண்டா :) , நான் "அலைமகள்" தமிழ் பெயர் என்று சொல்லவில்லையேபா :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரவேற்ற அனைவருக்கும் நன்றி

அன்னி லிங்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"என் கருத்தாடல்தவறாகிப்போனாலும்

என் தமிழாடல் தவறிப் போய்விடக்கூடாது".............

...இனிய நல் வரவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அத்துடன்நன்றி நிலாமதிக்கு .

எல்லோருக்கும்வேறுபட்டஆடுகளங்கள்இருக்கும்

என்னிடம்உள்ள தளத்தில்நான் தோற்றுவிட கூடாதல்லவா

ஆனந்தப்பயத்தில்தான்நீங்கள் மேற்காட்டியகருத்தை

வைத்தேன் .

Link to comment
Share on other sites

வணக்கம்! வாருங்கள் !! வாருங்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்னி லிங்கம்,

வாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.