Jump to content

மிதிவண்டி உதவி வழங்கல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த தமிழீழ பிரஜைகளுக்கும், யாழ்க்கள உறவுகளுக்கும்,

சர்வதேசநாடுகளிலிருந்து அகதிகளுக்காக இலங்கை அரசிடம் அனுப்பிவைக்கப்படும் உதவிகள், தேவையானோர் பலருக்கு சில தடவைகள் செல்லத்தவறுவதைக் கண்டு நாம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறோம். இதில் எதையாவாது நாம் நிவிர்த்தி செய்ய முடியாதா என நம்மில் பலரும் ஆதங்கப்பட்டதுண்டு. இந்த ஏக்கங்களின் பலனாக, நாம், நலிந்த அகதிகளுக்குள் நலிந்த சமூகமான, விதவைகளுக்கும், அனாதைச் சிறார்களுக்கும் உதவுமுகமாக, “காயப்பட்ட விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் புது சந்தர்ப்பம்” (NOWWOW -New opportunities for Widowed, Wounded, and Orphans of War - http://nowwow-us.org/) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறநிலையமாக பதிவுசெய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருகின்றது. முழுமையாக இந்த நிலையம் செயல்ப்படத்தொடங்கியவுடன், புனர்வாழ்வுத் திட்டங்களில் முதல் சுற்றில் தவறவிடப்பட்டோர்களை தேடி அவர்களுக்கு உதவிகளை கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், வடக்குக், கிழக்கில் கடும்சேதமடைந்த பகுதிகளை பிரதிநிதிப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நாம் அடிக்கடி உரையாடிவருகிறோம். இந்த உரையாடல்கள், அரசியல் கலப்பில்லாத, பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி வறுமையிலிருந்து விடுதலை காண்பது என்பதைப்பற்றிய பேச்சு வார்த்தைகளாகும். இந்த உரையாடல்களில் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டப்படும் ஒரு பிரதானமான விடயம், ஈழ தேசத்தின் வருங்காலம் காக்கப்படவேண்டுமாயின், சிறார்களின் பள்ளிப்படிப்பு பேணப்படவேண்டுமென்பதாகும். என்னிடம் இன்னமும் எல்லாப் புள்ளிவிபரங்களும் இல்லாவிட்டாலும், கிழக்கு மாகாணத்தில் விரைவாக முன்னேறி வரும் முஸ்லீம் சமுதாயத்துடன் பார்க்கும் பொது நம்மவர்களின் நிலை தாழ்வாக இருப்பதுடன் கிளிநொச்சியில் பள்ளிப்படிப்பு மிகவும் கவலைக்கிடமாகவும் இருக்கிறது.

ஆகவே நாங்கள் முதலில் கிளிநொச்சித் தொகுதியிலிருந்து சில நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பிக்க இருக்கிறோம். இந்தச் சிறார்களுக்கு, தற்சமயம், பலவிதமான தேவைகள் இருப்பதாக நமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. சில பிள்ளைகள் தமது கல்வித்தேவைக்கு ஒரு பள்ளியை சென்றடைய, காலையும், மாலையும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இந்த விடையத்தில் இவர்களுக்கு உதவயாரும் இல்லையானால் இவர்களால் இனிமேல் பள்ளி செல்ல முடியாத நிலையொன்றிருக்கிறது. ஆனால் நாங்கள் இவர்களுக்கு ஒவ்வொரு மிதிவண்டி கொடுத்துதவ முன்வந்தால், இவர்களால் தங்கள் படிப்புக்களைத் தொடர முடியும். மேலும் இந்தச் சிறார்கள் பலரிலேயே, அவர்களின் குடும்பங்கள், தங்கள் வாழ்வூதியத்திற்கும் தங்கியிருப்பதால், இந்த மிதிவண்டிகளைப் பயன்படுத்தி தங்கள் குடும்பங்களுக்கும் அவர்களால் உதவ முடியும்.

நாங்கள் அளிக்க இருக்கும் முதல் தொகுதியான 50 மிதிவண்டிகளிலும், குறைந்தது 30 வண்டிகளையாவது, அமெரிக்கா வாழ் உறவுகளிடமிருந்து நன்கொடையாக எதிர்பார்க்கிறோம். இதற்கான செலவு $3000-$4000 வரையிலாகும். நாம் எல்லோரும் மனதார சிறு சிறு உதவிகள் செய்ய முன்வந்தால் இது ஒரு பெரிய சுமையாக இருக்கமுடியாது. இதில் உங்கள் பிள்ளைகளையும் இணைத்து நீங்கள் அவர்களுக்கும் இந்த தொண்டு வாழ்க்கை பயிற்றுவிக்கலாம். எப்படி நீங்கள் இந்த உதவியைச் செய்தாலும், இது வருங்கால தமிழீழத்தின் இளம் தளிர்கள் கருகிவிடாது நீர்வார்க்கும் அரிய கைங்கரியம் என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். இதில் நீங்கள் எவ்வளவு கொடுக்கலாம் என்று இல்லாவிட்டாலும், உங்கள் குடும்பத்திலிருந்து, தயவுசெய்து, ஒரு மிதிவண்டியாவது தந்துதவுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எமது இந்த மிதிவண்டி இலக்குக்கு மேலாக பணங்கொடுத்து உதவப்பட்டால் அதில், பாடப்புத்தகங்கள், எழுத்து உபகரணங்கள் போன்றவையும் அன்பளிப்பு செய்யலாமென்றிருக்கிறோம்.

சுபா சுந்தரலிங்கம்

s.suba@tgte.org

or please visit

nowwow-us.org

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் ... ஆனால் ..

... சிலவற்றை நீங்கள் புரிய வேண்டும், ஏன் அள்ளி எறிந்தவர்கள் எல்லாம் இப்போ பின் நிற்கிறார்கள் என்று??? ...

... மக்களின் அவலங்களை கூறி வாங்கியவர்களில் சிலர் சுருட்டி விட்டனர்! ,,, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட உதவிகள் போய் சேரவில்லை ,,, பாதிக்கப்பட்டதாக கொடுக்கப்படும் பல தரவுகளில் சந்தேகங்கள் ... இவைகளுக்கு மேலாக பல உதவி கோரும் அமைப்புக்கள் ... அவைகளுக்குள் எந்த வித தொடர்புகளும் இல்லை ... ஒரு அமைப்பு மூலம் உதவி பெற்றவர்கள், அடுத்த அமைப்புகளின் மூலமும் பெற வாய்ப்புகள்/பெற்றும் உள்ளனர்! ..

... இப்படியாக பல பிரட்சனைகளினால் எட்டு விலகி நிற்கிறார்கள் ...

... இப்படியான சில பிரட்சனைகளை தீர்க்கும் மட்டும் ... கிள்ளியாவது தருபவர்கள் பின்னிக்கவே செய்வார்கள் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்க்காலில் ஓடும் நீரை வரம்பு ஒருபோதும் தடுத்து நிறுத்துவதில்லை. வரம்பின் நோக்கமும் பணியும் நீர் எங்கே போய்ச்சேரவேண்டும் என்று வாய்க்காற் பள்ளத்துக்கு நினவூட்டுவது தான்.அந்த வகையில் பார்த்தால் உங்கள் கருத்துக்கள் உண்மையானவை, நிச்சயமாக வரவேற்கப்படவேண்டியவை. ஆட்சேபிக்கப்படக்கொடாதவை. மூன்றாண்டுகளாக நாங்கள் தயங்கித் தயங்கி நின்றமைக்குக்காரணமே நாங்கள் கண்ணால் கண்டவைகளும் காதால் கேட்டவைகளும் மட்டும் தான். ஆனால் இப்போது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு "நவ்வவ்" என்றொரு அறக்கட்டளை அமைப்பொன்றை உருவாக்கியுள்ளோம். நாம் செய்யும் பணிகள் பயங்கரவாதத்துக்குத் துணை போவது என்ற ஐயம் யாருக்குமே இருக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்க வருமானத் திணைக்களத்திடம் இது பற்றிய குறீப்புக்களை அனுப்பி அவர்களிடம் அவற்றுக்கான விளக்கங்களையும் கேட்டுள்ளோம். அவர்கள் சொல்வதை அப்படியே நிறைவேற்றுவோம்.

மறு புறத்தில், எமது உதவிகளை யாருமே "இலவசமாகக் கிடைப்பவை தாமே!" என்ற எண்ணத்தில் தப்பாகப் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். கிழக்கிலொருவரும் வடக்கிலொருவருமாக மக்கள் பிரதிநிதிகள் இருவர் எமக்கு இந்த உதவிகளைப் பகிர்வதிலும் தேவைகளை அடையாளப்படுத்துவதிலும் உதவுவார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகள் இருவரும் "ஊழிக்காலம்" என்று வருணிக்கப்படக்கூடிய, அந்தக் கொடிய நாட்களில் தம் சேவை மனப்பான்மையை நன்கு நிரூபித்தவர்கள். இதைவிடவும் கத்தோலிக்க திருச்சபையும் இதில் எங்களுடன் பங்கு கொண்டு உழைக்கும். மதபேதங்களைப்பாராது உண்மையான தேவைகளை மட்டும் கணக்கிலெடுக்கும் தகுதியும், திறமையும், கண்ணியமும், பாரதூரமான பொறுப்புக்களை சுமக்கும் தைரியமும் தனக்கு உண்டென்று கத்தோலிக்க திருச்சபை ஏற்கெனவே எமக்கு நிரூபித்துள்ளது.

இந்த ஈருருளித் திட்டம் ஒரு ஆரம்பம் மட்டும் தான், நாம் கிழக்கில் கிராமப்புறங்களில் சரிந்து விழுந்துள்ள கல்விப்பிரச்சினயை அடுத்ததாக எதிர் நோக்கவுள்ளோம். அங்கே எதிர்காலம் தெரியாது தவிக்கும் இளம் பட்டதாரிகளுக்கு ஏதாவது கஞ்சிக்கு வாய்ப்புக்கொடுப்பதன் மூலம் கல்வியில் திசை தெரியாது தவிக்கும் எமது வளர்ந்த பிள்ளைகளுக்கு உயர்தரப் பரீட்சை நிலைக்கு இலவசமாகப்படம் சொல்லித்தர இருக்கின்றோம். முடிந்தவரை அவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களையும் தர இருக்கின்றோம். அவ்வாறு எம்மிடம் உதவி பெற்றவர்கள் இளஞ்சிறார்க்குத் தம்மால் இயன்றளவு பாடம் புகட்டித்தரவேண்டுமென்று நாம் எதிர்பார்ப்போம். இதில் கிழக்கத்தைய மக்கள் பிரதிநிதியே எமக்குத் திட்டங்களை வரைந்து தந்து மேற்பார்வையும் செய்வார். இவ்வளவுக்கும் பணம் ஏதும் எம்மிடம் இல்லை. திரும்பத் திரும்ப "பணத்தைக் கொடுங்கள்" என்று கூவிக்கொண்டு உங்களிடமே வருவோம். "தந்த பணத்துக்கு என்னாச்சு" என்று கேட்கும் உரிமை உங்களுக்குண்டு. அப்படிக் கேளாத வரையில் நீங்களும் தான் கடமை தவறுபவர்கள் ஆகிறீர்கள். நாம் இதுவரை மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் அனைத்துமே தனிமனிதர்களின் பொறுப்புக்களாக எவையுமே நடை பெற்று எவருக்குமே தம்மைத் தாமே களங்கப்படுத்தும் சந்தர்ப்பங்கள் வந்தமைந்து விடக்கூடாது என்ற அடிப்படையைப் பலப்படுத்தும் நோக்கிலானவை. இதற்கு மேல் ஏதாவது நடந்துவிட்டால் அது ஆண்டவன் விட்ட வழி. அங்கே குழந்தைகளினதும் இனத்தினதும் கல்வியினதும் எதிர்காலம் தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது "முன்பு இருந்தவர்கள் ஏமாற்றிவிட்டார்களே, இதற்குள்ளே எமக்கேன் வீண் பேர்" என்ற தயக்கம் ஒரு சில நாட்கள் இருக்கலாம். ஆனால் அந்தத் தயக்கம் என்றென்றைக்குமே எம்மைஅடிமைப்படுத்திவிடுவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பது தான் எமது நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விடயம். பாராட்டுக்கள். 

இப்போது ஒ. எல். பெயிலானவர்கள் இலஞ்சம் குடுத்து வேலை எடுத்து கல்வி தரத்தை குறைக்கிறார்கள். 

மற்றும், குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் சிறி லங்கா கல்வி முறையையும் மாற்றவேண்டும்.  பல மாணவர்கள் தற்கொலை செய்வதை எமது சமுதாயம் பெரிது படுத்துவதில்லை.

அதே நேரம் எல்லோரும் படித்து ஆறடி பெட்டிக்குள் இருக்க ஆசை படுவதால் மற்றைய தொழில் துறைகளில் ஆள் பற்றாக்குறை. 

We need more Tamil skilled labours and respect for all types of jobs. Local economy won't take off without skilled labours.

Are you partnering with any American colleges for school adoption programs?

Link to comment
Share on other sites

உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட உதவிகள் போய் சேரவில்லை ,,, பாதிக்கப்பட்டதாக கொடுக்கப்படும் பல தரவுகளில் சந்தேகங்கள் ... இவைகளுக்கு மேலாக பல உதவி கோரும் அமைப்புக்கள் ... அவைகளுக்குள் எந்த வித தொடர்புகளும் இல்லை ... ஒரு அமைப்பு மூலம் உதவி பெற்றவர்கள், அடுத்த அமைப்புகளின் மூலமும் பெற வாய்ப்புகள்/பெற்றும் உள்ளனர்! ..

மூலத்தின் ஆரம்பத்தில் இந்த பிரச்சனைகளை நீண்டகால அடிப்படையில் கவனிக்கப்போவதாகத்தானே கூறியிருக்கிறார்கள் நெல்லையான்.

சர்வதேசநாடுகளிலிருந்து அகதிகளுக்காக இலங்கை அரசிடம் அனுப்பிவைக்கப்படும் உதவிகள், தேவையானோர் பலருக்கு சில தடவைகள் செல்லத்தவறுவதைக் கண்டு நாம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறோம். இதில் எதையாவாது நாம் நிவிர்த்தி செய்ய முடியாதா என நம்மில் பலரும் ஆதங்கப்பட்டதுண்டு. இந்த ஏக்கங்களின் பலனாக, நாம், நலிந்த அகதிகளுக்குள் நலிந்த சமூகமான, விதவைகளுக்கும், அனாதைச் சிறார்களுக்கும் உதவுமுகமாக, “காயப்பட்ட விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் புது சந்தர்ப்பம்” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறநிலையமாக பதிவுசெய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருகின்றது. முழுமையாக இந்த நிலையம் செயல்ப்படத்தொடங்கியவுடன், புனர்வாழ்வுத் திட்டங்களில் முதல் சுற்றில் தவறவிடப்பட்டோர்களை தேடி அவர்களுக்கு உதவிகளை கொண்டுசெல்ல முடியும் என்ற நம்பிக்கை இதனால் நமக்கு ஏற்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

இன்றும் ... லண்டனில் இருந்து கடந்த பல வருடங்களாக தாயக மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் ஓர் முக்கிய ஆலய நிர்வாகமான ஈலிங் கனக துர்க்கை அம்மன் நிர்வாகத்திடம் இக்கேள்வியை கேட்டேன்!!! .. பதில் வந்தது ... இன்றுவரை புலத்தில் இருந்து உதவி வழங்கும் அமைப்புகளுக்குக்குள் இது தொடர்பாக எந்த தொடர்பாடல்களும் இல்லை என்று!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த நெல்லையான், நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் இதிலே எங்களுக்குப் புரிந்த வகையில் தான் நாம் தொழிற்படமுடியும்.

இது தான் எமது வேலைத்திட்டம்: எமது விண்ணப்பப் படிவத்திலேயே எம்மிடம் உதவி கோருவோர் வேறெங்கெங்கு உதவி பெறுகிறார்கள் என்று விளக்கம் கோருவது வழக்கம். உண்மையிலயே அவ்வாறு பெறப்படும் உதவிகள் வாழ்க்கை ஆட்டம் காணாமற் தடுக்கபோதாது என்ற நிலையில் எம்மிடம் மேலதிக உதவி கோரினால் அதனைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது எமது வழக்கமல்ல.

எமது விண்ணப்பங்கள் நேரடியாக எமக்கு வருபவையல்ல. ஒன்றில் மதகுருமாருக்கூடாக அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கூடாக மட்டுமே எம்முடன் தொடர்பு கொள்ள முடியும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அவர்கள் அவதானித்துள்ள எல்லைநிலை விண்ணப்பதாரிகளிடம், எங்களைப்பற்றி அறிமுகம் செய்துவைத்து, எம்மிடம் உதவி கோரச் சொல்லி அறிவுறுத்தி விண்ணப்பங்களைச் சேர்த்து அனுப்பிவைக்கிறார்கள். தேவையற்ற வீண் விரயங்களைத் தடுப்பதற்கான எமது பாதுகாப்புக்கவசமானது மண்ணுடனான பாசத்தொடர்புகள் அறுக்கப்பட முடியாத இந்த ஆலோசகர்களுக்கும் எமக்கும் இடையிலான நன்னம்பிக்கைத் தொடர்புகள் தான்! இவை எமக்குப்போதுமானவை என்பது எமது கருத்து,

மண்ணிலேயே கண்டறியப்பட வேண்டியவையான இந்தத் தவறான வகையிலமைந்த உதவி இரட்டிப்புக்கள் ஒருபோதும் புலத்துக்கப்பால் இயங்கும் அறக்கட்டளை அமைப்புக்களிடையேயான தகவல் பரிமாறல்கள் மூலம் சரிசெய்யப்படப்போவதில்லை. அந்த முயற்சியானது இரட்டிப்பு உதவி மூலம்அங்கே விரயம் செய்யப்படும் பணத்தைவிடப் பலமடங்கான தொகையை இங்கே வேவு பார்ப்பதில் செலவிடத்தூண்டும். அன்றியும் அறக்கட்டளைகளுக்கிடையேயான இந்தவிதமான செய்திப்பரிமாறல்கள் தனிமனித கவுரவத்தையும், நாட்டுச் சட்டங்களையும் நாடுகளுக்கிடயிலான சட்டங்களையும் மீறுவதாகக் கூட அமையலாம். இதனைத் தான் சொல்வார்கள் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையென்று!

நாம் இங்கே மறக்க விரும்பாத விடயம் ஒன்று உண்டென்றால் அது இது தான்: மே 19க்கு முன்னாலேயே வன்னியில் தெருவில் கையேந்திநின்று கதறிய கவுரவமான குடும்பப்பெண்களின் வீடியோ காட்சி ஒன்றை சாமியார் ஒருவர் செல்வி ஜெயலலிதாவுக்குக் காண்பித்து "இன்றும் கூடவழிப்போக்கர்களுக்கு விருந்தளித்துக் களை தீர்க்கும் பாரம்பரியம் அகலாத வன்னிப்பெண்கள் தான் இவ்வாறு கதறுகிறார்கள்" என்று விளக்கமளித்தபோது அம்மையாரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியதாக அந்தச் சாமியார் பிற்பாடு கூறியிருந்தார். போரென்று ஒன்று வந்தால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று எம்மைப்பற்றி வெறும் புள்ளிவிவரமாகக் கருதிய செல்வி ஜெயலலிதாவுக்கே இந்தக்கதியென்றால் எமது இதயம் அதைவிடக் கொஞ்சம் வேகமாகத்தான் அடித்துக்கொள்ளவேண்டும், இல்லையா?. அந்தமக்கள் இன்றைய பொழுது இருவேறு வீடுகளில் இரந்து சாப்பிட்டார்களா என்று எல்லாம் நாம் வேவு பார்க்கப்போவதில்லை. அது எமக்கும் இழுக்கு, அவர்களுக்கும் இழுக்கு. எண்ணிப்பார்க்க முடியாத அந்தக்கொடிய இடர்களுக்கிடயில் இருந்து ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வெளியே வந்தவர்கள் தாம் அவர்கள். இப்போது ஒருவருடைய உணவை மற்றவர் பறித்துச் சாப்பிடும் எண்ணம் அவர்களுக்கு வருமா, என்ன? அவர்களுக்குப் புதிதாகப் பாடம் எதுவும் புகட்டும் எண்ணப்பாடு எதுவும் எமக்கில்லை.

போக்கிரிகள் இங்கேயும் இருப்பார்கள். அங்கேயும் ஓரிருவர் இருப்பார்கள். அது தான் யதார்த்தம்.

இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கே உங்களுக்குச் சொல்லலாம்: அமெரிக்கப்பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி தந்த அனைத்துலக அரசு சாரா அமைப்பொன்றின் பிரதிநிதி ஹைத்தியில் உதவி விநியோகத்டுடன் வன்னி உதவி விநியோகத்தை ஒப்பிட்டு வன்னியில்மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து தங்களுக்கான உதவிகளை தாமே விநியோகிக்க உதவுவதால், வாகனச் செலவு, எரிபொருட்செலவு, காவு கூலி, பாதுகாப்புச் செலவு எல்லாம் மிகமிகக் குறைவு, விநியோக வினைத்திறன் மிக மிக அதிகம். ஹைத்தியின் செலவினம் இதற்கு நேர்மாறு. அங்குஉதவிகள் வழங்குவதற்கான செலவினம் உதவித் தொகையை விட அதிகம் என்று தெளிவாகக் கூறியிருந்தார். இவ்வளவு கொடுமையிலும் கூட கை நீட்டிப் பிச்சை வாங்காது கைகுலுக்கி உதவி வாங்கும் எமது மக்களைப்பற்றி பெருமைப்பட்டு அவர்களுக்கு உதவ முடிந்தமை பற்றி நாமும் பெருமைப்படுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த நெல்லையான், நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால் இதிலே எங்களுக்குப் புரிந்த வகையில் தான் நாம் தொழிற்படமுடியும்.

இது தான் எமது வேலைத்திட்டம்: எமது விண்ணப்பப் படிவத்திலேயே எம்மிடம் உதவி கோருவோர் வேறெங்கெங்கு உதவி பெறுகிறார்கள் என்று விளக்கம் கோருவது வழக்கம். உண்மையிலயே அவ்வாறு பெறப்படும் உதவிகள் வாழ்க்கை ஆட்டம் காணாமற் தடுக்கபோதாது என்ற நிலையில் எம்மிடம் மேலதிக உதவி கோரினால் அதனைச் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது எமது வழக்கமல்ல.

எமது விண்ணப்பங்கள் நேரடியாக எமக்கு வருபவையல்ல. ஒன்றில் மதகுருமாருக்கூடாக அல்லது மக்கள் பிரதிநிதிகளுக்கூடாக மட்டுமே எம்முடன் தொடர்பு கொள்ள முடியும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அவர்கள் அவதானித்துள்ள எல்லைநிலை விண்ணப்பதாரிகளிடம், எங்களைப்பற்றி அறிமுகம் செய்துவைத்து, எம்மிடம் உதவி கோரச் சொல்லி அறிவுறுத்தி விண்ணப்பங்களைச் சேர்த்து அனுப்பிவைக்கிறார்கள். தேவையற்ற வீண் விரயங்களைத் தடுப்பதற்கான எமது பாதுகாப்புக்கவசமானது மண்ணுடனான பாசத்தொடர்புகள் அறுக்கப்பட முடியாத இந்த ஆலோசகர்களுக்கும் எமக்கும் இடையிலான நன்னம்பிக்கைத் தொடர்புகள் தான்! இவை எமக்குப்போதுமானவை என்பது எமது கருத்து,

மண்ணிலேயே கண்டறியப்பட வேண்டியவையான இந்தத் தவறான வகையிலமைந்த உதவி இரட்டிப்புக்கள் ஒருபோதும் புலத்துக்கப்பால் இயங்கும் அறக்கட்டளை அமைப்புக்களிடையேயான தகவல் பரிமாறல்கள் மூலம் சரிசெய்யப்படப்போவதில்லை. அந்த முயற்சியானது இரட்டிப்பு உதவி மூலம்அங்கே விரயம் செய்யப்படும் பணத்தைவிடப் பலமடங்கான தொகையை இங்கே வேவு பார்ப்பதில் செலவிடத்தூண்டும். அன்றியும் அறக்கட்டளைகளுக்கிடையேயான இந்தவிதமான செய்திப்பரிமாறல்கள் தனிமனித கவுரவத்தையும், நாட்டுச் சட்டங்களையும் நாடுகளுக்கிடயிலான சட்டங்களையும் மீறுவதாகக் கூட அமையலாம். இதனைத் தான் சொல்வார்கள் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையென்று!

நாம் இங்கே மறக்க விரும்பாத விடயம் ஒன்று உண்டென்றால் அது இது தான்: மே 19க்கு முன்னாலேயே வன்னியில் தெருவில் கையேந்திநின்று கதறிய கவுரவமான குடும்பப்பெண்களின் வீடியோ காட்சி ஒன்றை சாமியார் ஒருவர் செல்வி ஜெயலலிதாவுக்குக் காண்பித்து "இன்றும் கூடவழிப்போக்கர்களுக்கு விருந்தளித்துக் களை தீர்க்கும் பாரம்பரியம் அகலாத வன்னிப்பெண்கள் தான் இவ்வாறு கதறுகிறார்கள்" என்று விளக்கமளித்தபோது அம்மையாரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியதாக அந்தச் சாமியார் பிற்பாடு கூறியிருந்தார். போரென்று ஒன்று வந்தால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று எம்மைப்பற்றி வெறும் புள்ளிவிவரமாகக் கருதிய செல்வி ஜெயலலிதாவுக்கே இந்தக்கதியென்றால் எமது இதயம் அதைவிடக் கொஞ்சம் வேகமாகத்தான் அடித்துக்கொள்ளவேண்டும், இல்லையா?. அந்தமக்கள் இன்றைய பொழுது இருவேறு வீடுகளில் இரந்து சாப்பிட்டார்களா என்று எல்லாம் நாம் வேவு பார்க்கப்போவதில்லை. அது எமக்கும் இழுக்கு, அவர்களுக்கும் இழுக்கு. எண்ணிப்பார்க்க முடியாத அந்தக்கொடிய இடர்களுக்கிடயில் இருந்து ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு வெளியே வந்தவர்கள் தாம் அவர்கள். இப்போது ஒருவருடைய உணவை மற்றவர் பறித்துச் சாப்பிடும் எண்ணம் அவர்களுக்கு வருமா, என்ன? அவர்களுக்குப் புதிதாகப் பாடம் எதுவும் புகட்டும் எண்ணப்பாடு எதுவும் எமக்கில்லை.

போக்கிரிகள் இங்கேயும் இருப்பார்கள். அங்கேயும் ஓரிருவர் இருப்பார்கள். அது தான் யதார்த்தம்.

இன்னுமொரு விடயத்தையும் நான் இங்கே உங்களுக்குச் சொல்லலாம்: அமெரிக்கப்பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி தந்த அனைத்துலக அரசு சாரா அமைப்பொன்றின் பிரதிநிதி ஹைத்தியில் உதவி விநியோகத்டுடன் வன்னி உதவி விநியோகத்தை ஒப்பிட்டு வன்னியில்மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து தங்களுக்கான உதவிகளை தாமே விநியோகிக்க உதவுவதால், வாகனச் செலவு, எரிபொருட்செலவு, காவு கூலி, பாதுகாப்புச் செலவு எல்லாம் மிகமிகக் குறைவு, விநியோக வினைத்திறன் மிக மிக அதிகம். ஹைத்தியின் செலவினம் இதற்கு நேர்மாறு. அங்குஉதவிகள் வழங்குவதற்கான செலவினம் உதவித் தொகையை விட அதிகம் என்று தெளிவாகக் கூறியிருந்தார். இவ்வளவு கொடுமையிலும் கூட கை நீட்டிப் பிச்சை வாங்காது கைகுலுக்கி உதவி வாங்கும் எமது மக்களைப்பற்றி பெருமைப்பட்டு அவர்களுக்கு உதவ முடிந்தமை பற்றி நாமும் பெருமைப்படுவோம்.

அக்கா, எனது இருபது வருட ஈழ அரசியல் போராட்டத்தில் கண்டுபிடித்தது, எம்மக்களுக்கு உதவுவது மிகவும் கடினம். 

இங்கேயே மலையாள மாந்திரி நாளை கேரளா காடுக்கு செல்கிறார் கையின் படத்தை அனுப்பினால் போதும் என்று திரி தொடங்கியிருந்தால் நூறு ஈருருளிகள் தேறி இருக்கும். 

Link to comment
Share on other sites

நன்றிகள், ... சில தீர்க்கப்பட வேண்டிய பிரட்சனைகளை கூறினேன் உங்களுக்கு, மற்றும்படி உங்கள் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கவல்ல! உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் ... என் கணக்கிலும் ஒரு சைக்கிளை சேருங்கள் .. தொடர்பு கொள்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள், ... சில தீர்க்கப்பட வேண்டிய பிரட்சனைகளை கூறினேன் உங்களுக்கு, மற்றும்படி உங்கள் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கவல்ல! உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும் ... என் கணக்கிலும் ஒரு சைக்கிளை சேருங்கள் .. தொடர்பு கொள்கிறேன்!

நெல்லையர்,  நான் கேட்க இருந்த கேள்விகள் பல கேட்டு உதவியதற்கு நன்றி.  தீர விசாரித்து குடுப்பது தான் சரி. 

மற்றும், சைக்கிள் உதவிக்கும் நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மீண்டும் கூறிகொள்ள விரும்புவது "தந்த பணத்துக்கு என்னாச்சு" என்று கேட்கும் உரிமை உங்களுக்குண்டு. அப்படிக் கேளாத வரையில் நீங்களும் தான் கடமை தவறுபவர்கள் ஆகிறீர்கள். உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி. இன்னும் 12 மிதிவண்டிக்கான கொடையாளிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உதவி செய்ய விரும்புபவர்கள் தயவு செய்து என்னுடன் தொடர்பு கொள்ளவும்.

சுபா சுந்தரலிங்கம்

s.suba@tgte.org

nowwow-us.org

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் 6 மிதிவண்டிகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. விரைவில் இந்தத் திட்டம் உங்கள் ஆசியுடன் பூர்த்தியடையும் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிதிவண்டி வழங்குவதற்கு உதவி செய்த அனைவருக்கும் NOWWOW என்ற அமைப்பின் சார்பில் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மேலதிக விபரங்களுக்கு,

http://tamilwin.com/show-RUmqyGTZOWis3.html

அத்துடன் எமது சேவை முடிந்து விடவில்லை.

அடுத்தபடியாக கடந்த 2009 ம் ஆண்டு யுத்த சூழலினால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடியேறியுள்ள மிகவும் வறிய குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மிகவும் கஷ்டப்பிரதேசமான வாகரை, கிரான், வாழைச்சேனை, செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி ஆகிய பிரதேசங்களிலுள்ள 3300 வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு சுமார் 10,000.00 USD உடனடியாகத் தேவைப்படுகிறது. மேலதிக விபரம் தேவைப்படின் அதனை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம். இப்பண உதவியை நீங்கள் வங்கிக் காசோலை மூலமாகவோ அல்லது பின்வரும் இணையதளத்தினுடாகவோ அனுப்பலாம்.

http://nowwow-us.org/

பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளுக்கு கைகொடுப்போம்.

தாழ்மையுடன் உங்கள் மக்கள் பிரதிநிதி,

சுபா சுந்தரலிங்கம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையிலேயே அந்த மக்களுக்கு

சேவை செய்பவர்கள் போற்றுதலுக்கு

உரியவர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.